காதல்போதை 46💙

“சர்வா…” என்று மாயாவின் இதழ்கள் முணுமுணுக்க, “வாவ்! நான் கூட என்னை நீ மறந்திருப்பன்னு நினைச்சேன். பட், யூ ரிமெம்பர் மீ ஸ்வீட் ஹார்ட்” என்று சர்வேந்திரன் ஏளனமாக சொல்ல, பல்லைகடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தாள் மாயா.

“இப்போ நீ என்ன பண்ற, நேரா நான் சொல்ற இடத்துக்கு வர்ற” என்று சர்வேந்திரன் சொல்ல, அவளோ அமைதியாக இருக்க, மறுமுனையில் சர்வேந்திரனோ அவளின் அமைதியை தப்பாக கணக்கு போட்டு, “இப்போ நீ வந்து தான் ஆகனும். ஏன்னா, உன் ரூஹியோட உயிர் என் கையில. இப்போவும் எனக்கு விசுவாசமான ஆளுங்க இருக்க தான் செய்றாங்க மாயூ. அங்க என் ஆளு என்னோட ஆர்டர்க்கு காத்துகிட்டு இருக்கான். சோ, யூ ஹேவ் நோ ச்சொய்ஸ்” என்று அழுத்தமாக சொன்னான்.

“எங்க வரனும்” என்று மாயா அழுத்தமாக கேட்க, அவனும் வன்மமாக புன்னகைத்தவாறு ஒரு இடத்தை கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க, மாயாவின் கண்களோ பளபளத்தது. விஷமமாக சிரித்தவாறு யாரும் பார்க்காதவாறு ரகசிய வழியாக வெளியேறியவள், வரிசையாக நிற்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கார்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற, நீண்ட நாட்கள் கழித்து நண்பர்களுடன் கொண்டாட்டத்திலிருந்த ரோஹன் கூட கவனிக்கவில்லை.

அதேசமயம் தன் தொலைப்பேசியிலிருந்த ஏகப்பட்ட தவறவிடப்பட்ட அழைப்புக்களை புரியாது பார்த்த அலைஸ், உடனே அந்த எண்ணிற்கு அழைப்பை எடுக்க, மறுமுனையில் சொன்ன செய்தியில் ஆடிப் போய்விட்டாள் அவள்.

திடீரென, வந்த விருந்தினர்களுக்கு மத்தியில் சலசலப்பு உண்டாக, அங்கு ரோஹனோ ஒருவனை புரட்டி போட்டு, அவனின் கையிலிருந்த துப்பாக்கியை அவனுக்கு நேராக திருப்பி, அவன் நெஞ்சில் மிதித்த வண்ணம் நின்றிருந்தான்.

“வூ ஆர் யூ?” என்று ரோஹன் கர்ஜிக்க, அந்த நபரோ எதுவும் சொல்லாது ரோஹனின் அழுத்தத்தினால் வலியில் அலற, அவன் பதில் பேசாததில் கடுப்பாகி துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தப் போனான் ரோஹன்.

“ரோஹன், சர்வா தப்பிச்சிட்டான்” என்ற அலைஸ்ஸின் குரலில் அதிர்ந்தவன், “வாட்?!” என்று கத்தியே விட, ‘அவன் தான் ஏற்கனவே தப்பிச்சிட்டானே… ஏதோ புதுசா கேக்குற மாதிரி ரியாக்ட் பண்றான்?’ என்று நினைத்தவாறு புரியாமல் பார்த்தான் பாபி. ரோஹனின் கண்களோ அங்கு பதட்டமாக நின்றிருந்த ரவீந்திரனை பார்த்துவிட்டு, அடுத்து மாயாவை தான் தேடியது.

“மாயா எங்க?” என்று பதட்டமாக கேட்டவாறு ரோஹன் தன்னவளை தேட, அவளோ அங்கு இருப்பதற்கான அடையாளமே இல்லை. “ச்சே… எப்படி… எப்படி மிஸ் ஆனான்? மாயாவுக்கு ஏதாச்சும்…? ஓ ஷீட்!” என்று புலம்பியவன், இயலாமையில் காலை தரையில் உதைக்க, சுற்றி இருந்தவர்களுக்கும் அதே பதட்டம் தொற்றிக் கொண்டது.

“ரோஹன், இதெல்லாம் என் தப்பு தான். நான் தான் என் மகளையே…” என்று ரவீந்திரன் பதட்டப்பட, “மாமா, ரிலாக்ஸ். என் அம்முவ நான் கண்டுபிடிப்பேன்” என்ற ரோஹனின் வார்த்தைகளில் அத்தனை உறுதி. அலைஸ்ஸின் புறம் திரும்பியவன், “நான் பெங்ளூர்ல இருக்கும் போது சர்வேந்திரனால மாயாவுக்கு எப்போவும் ஆபத்து வரலாம்னு அவளுக்கு நான் கொடுத்த ப்ரேஸ்லெட்ல ட்ரேக்கிங் டிவைஸ் ஃபிக்ஸ் பண்ணியிருந்தேன். இப்போ அதுக்கான வேலை வந்திருக்கு” என்று சொல்ல, அவனை மெச்சுதலாக பார்த்தாள் அலைஸ்.

அடுத்தநொடி மாயா இருக்கும் இடத்தை கண்டறிவதற்கான வேலையில் அவள் இறங்க, இங்கு பாபியோ ரோஹனின் முன் வந்து, “ரோக்கி, இங்க என்ன நடக்குது? முதல்ல அதை சொல்லு. சர்வேந்திரன் தான் நேத்து ராத்திரியே ஜெயில்ல இருந்து தப்பிச்சிட்டான்ல? இப்போ, நீ ஏதேதோ பேசிக்கிட்டு இருக்க?” என்று முறைப்பாக கேட்டான்.

“ஒருவேள, சர்வேந்திரன் தப்பிச்சதுக்கு நீ தான் காரணமா ரோக்கி?” என்று சஞ்சய் தன் நண்பனை கூர்மையாக பார்த்தவாறு கேட்க, அவனோ ரவீந்திரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பக்கத்தில் யாரும் இல்லாததை உறுதி செய்துக் கொண்டு, “சர்வேந்திரன் ப்ரிசன்ல இருந்து தப்பிக்க எல்லா ஏற்பாடும் பண்ணதே நாங்க தான்” என்று சொன்னதும் தான் தாமதம், அதிர்ந்து விட்டனர் இருவரும்.

“மாமா சர்வேந்திரனுக்கு அவரோட கையால தண்டனை கொடுக்கனும்னு என்கிட்ட கேட்டப்போ, என்னால மறுக்க முடியல. அதான், அலைஸ்கிட்ட இதை பத்தி பேசி, சர்வேந்திரன ஜெயில்ல இருந்து தப்பிக்க வைக்க சொன்னேன். முதல்ல முடியாதுன்னு தான் சொன்னா. பட், அதுக்கப்றம் சம்மதிச்சா. அவன் அங்கிருந்து தப்பிச்ச அடுத்த வன் அவர்ல எங்க திட்டப்படி அவன எங்க கஸ்டடிக்கு கொண்டு வந்தோம். ஆனா, எங்க ஆளுங்கள மீறி அவன் எப்படி தப்பிச்சான்னு தான் தெரியல, ச்சே…” என்று ரோஹன் சொல்லி முடிக்க,

“ரவீந்திரன் அங்கிள்க்கு அவன் மேல அப்படி என்ன கோபம்?” என்று புரியாமல் கேட்டான் சஞ்சய். “மாயாவோட அப்பா தான் ரவீந்திரன் மாமா” என்று ரோஹன் சொன்னதில் அவர்களுக்கோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகிப் போனது.

“ரோஹன், மாயா இருக்குற இடத்தை கண்டுபிடிச்சாச்சு” என்று அலைஸ் சொல்ல, தனியாக செல்ல போனவனுடன் அடம்பிடித்து பாபியும் அவனுடன் செல்ல, சஞ்சய்யோ ‘என்ன வேலை எல்லாம் பார்த்திருக்குதுங்க’ என்ற ரீதியில் தன்னவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

அதேசமயம்,

பாதி இடிந்தும் இடியாததுமாக இருந்த அந்த பழைய குடோனில் சர்வேந்திரன் கையில் மதுபோத்தலை குடித்தவாறு தன் எதிரே நின்றிருந்த மாயாவை அழுத்தமாக பார்க்க, அவளோ அவரின் கையிலிருந்த போத்தலையும், அவரையும் மாறி மாறி பார்த்திருந்தாள்.

அவளின் பார்வையை உணர்ந்தவர், “ஜெயில்ல இருந்து தப்பிச்சதும் மூச்ச பிடிச்சிக்கிட்டு ஓடி, அதுக்கப்றம் யாருன்னே தெரியாத சில ஆளுங்ககிட்ட மாட்டிகிட்டு, அவனுங்ககிட்டயிருந்தும் சாமர்த்தியமா தப்பிச்சு, அதுக்கப்றம் என் ஆளு ஒருத்தனுக்கு கோல் பண்ணி, நாக்கு தள்ள என் திட்டத்தை அவனுக்கு புரிய வச்சி, உன் இடத்துக்குள்ள அவன அனுப்பி வைக்கிறதுகுள்ள போதும் போதும்னு ஆகிறுச்சி. ரொம்ப டயர்ட் ஸ்வீட்ஹார்ட், அதான்…” என்று சொல்ல, “ஹாஹாஹா…” என்று கத்தி சிரித்தாள் மாயா.

“வாட்? நீ தப்பிச்சியா…? அதுவும், சாமர்த்தியமா…?”  என்று கேட்டு சிரித்தவள், “உன்னை ஜெயில்ல இருந்து தப்பிக்க வச்சது என் ஆளு, என் ஆளுக்கிட்டயிருந்து உன்னை தப்பிக்க வச்சது அவன் ஆளு” என்று சொல்ல, சர்வேந்திரனுக்கு சுத்தமாக அவள் சொன்னது புரியவில்லை.

மாயாவோ கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு, “அவங்க ஏன் உன்னை தப்பிக்க விட்டாங்கன்னு எனக்கு தெரியல. ஆனா, அன்னைக்கு ரூஹி அலைஸ்க்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது, உன்னை தப்பிக்க வைக்க அவங்க ஏதோ ப்ளான் பண்றாங்கன்னு மட்டும் புரிஞ்சது. ஆனா, எனக்கு உன் கூட பேச வேண்டியது நிறையவே இருக்கு.

அதான், ரூஹி எந்த ஆளுங்கள வச்சி உன்னை கடத்தினானோ, அதே ஆளுங்கள நான் விலைக்கு வாங்கிட்டேன். நானே தான் உன்னை என் ரூஹிக்கிட்டயிருந்து தப்பிக்க விட்டேன். நீ தப்பிச்சதும் கண்டிப்பா என்னை தான் கான்டேக்ட் பண்ணுவன்னு தெரியும். அதான், உனக்காகவே வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்” என்று சொல்லி முடித்தாள் மாயா.

ஏளனமாக சிரித்த சர்வேந்திரன், “உனக்கு அசட்டு தைரியம் ரொம்பவே ஜாஸ்தி மாயா. ஆனா, எல்லா விஷயத்துலயும் அது உனக்கு சாதகமா இருக்காது. இப்போ மாதிரி…” என்று சொல்லி சிரிக்க, அவளோ அவன் பேசுவதை கண்டுக்காது, “நட்பு, அது ரொம்பவே புனிதமானது. நீ அதுக்கு ரொம்ப பெரிய துரோகம் பண்ணியிருக்க. அவங்கள காதலிச்சேன்னு சொல்ற உன்னால எப்படி அவங்கள கொல்ல முடிஞ்சது” என்று காட்டமாக கேட்டாள்.

“ஷட் அப்” என்று கத்தியவன், “ஆமா, நான் காதலிச்சேன் தான். ஆனா, அவ என்னை ஏமாத்திட்டா. அவளுக்காக நான் காத்துகிட்டு இருந்தா, அவ… ச்சே… அவள வோட்ச் பண்ண சில ஆளுங்கள வச்சிருந்தேன். அவங்க மூலமா தான் அவ காதலிக்கிறது தெரிஞ்சது. அதுவும், தகுதியே இல்லாத ஒருத்தனை. அப்போ நான் இட்டாலில கூட இல்லை.

திரும்ப இட்டாலிக்கு வந்தேன். ஐரா கம்பனீஸ்ல பிரச்சினைய உண்டுபண்ணி அவள திரும்பவும் இட்டாலிக்கு வர வைச்சேன். ஆனா, வந்த மூனு நாள்ல அவ ப்ரெக்னன்ட்னு தெரிஞ்சது. என்னால டோலரேட் பண்ணவே முடியல. அந்த சனியன கலைச்சிடுன்னு சொன்னதுக்கு உன் அம்மா என்னையே அறைஞ்சிட்டா” என்று சர்வேந்திரன் சொல்ல, மாயா அவனை ஏகத்துக்கும் முறைத்து பார்த்தாள்.

அவள் பார்வையை உணர்ந்தவர், “அச்சோ! ஸ்வீட்ஹார்ட், உன்னை போய் சனியன்னு சொல்லிட்டேன். சோரி…” எனறு ஏளனமாக சொல்ல, “அப்போ, காதல் தோல்வியில தான் இதேல்லாம் பண்ணியா?” என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டாள் மாயா.

“அதுமட்டுமில்ல, ஐராவோட வளர்ச்சி. அதை என்னால ஏத்துக்கவே முடியல. உன் கம்பனியோட ஒப்பிட்டு என்னோட கம்பனிய எத்தனை பேரு தரக்குறைவா பேசியிருக்காங்கன்னு தெரியுமா? எல்லாத்தையும் சேர்த்து வச்சி தான் உன் அம்மாவ கொன்னேன். ஆனா, உன் விஷயத்துல என்னால எதுவுமே பண்ண முடியல. பட், என்ன ஒரு ஆக்டிங்?! வாவ்…!” என்று சர்வேந்திரன் அடக்கப்பட்ட கோபத்துடன் சொல்ல,

அவரை நிதானமாக ஏறிட்டவள், “தப்பான வழிய தேர்ந்தெடுக்குற ஒவ்வொருத்தருக்கும் பின்னாடி இப்படி ஏதாச்சும் ஒரு இழப்பு, அந்த இழப்பால உருவான கோபம் தான் இருக்கும்ல?” என்று மாயா கேட்க, சர்வேந்திரனோ அமைதியாக அவளை பார்த்திருந்தார்.

“ஆனா, உன் கோபம், அதுக்கு காரணமானவங்களோட சேர்த்து தப்பே பண்ணாத சில அப்பாவிங்களோட சாவுக்கும் காரணமா இருக்கு. அக்வா டொஃபேனா ஒரு பெஸ்ட் கோஸ்மெடிக் கூடவே ரொம்ப டேன்ஜரான பொய்ஸன். விட்டா அது உன் உயிரையே கொன்னிருக்கும்” என்று மாயா சொல்ல,

அவளை கேலியாக பார்த்தவர், “நான் துரோகம் பண்ணிட்டேன்னு சொல்றியே… அப்போ நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க ஸ்வீட்ஹார்ட்? உன் ப்ரான்ட்(brand) அ நம்பி உன் பொருள வாங்குற மக்களுக்கு நீ விஷத்தை தானே கொடுத்துகிட்டு இருக்க? அப்போ அது என்ன?” என்று கேட்க, சற்று திணறியவள், “ஒவ்வொரு விஷயத்துலையும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அக்வா டொஃபேனா விஷமா இருந்ததுக்கு அது ஒரு பெஸ்ட் மேக்அப், மக்கள் விரும்புறது போல இருக்கு. என்ட், இதுவரைக்கும் எங்க ப்ரோடெக்ட் ஆல யாரோட உயிருக்கும் ஆபத்து வந்தது கிடையாது” என்று அழுத்தமாக சொன்னாள்.

“ஆஹான்! அப்போ உங்க ப்ரொடெக்ட்க்கு யூஸ் பண்ற சில மூலப்பொருள் எப்படி ஸ்வீட்ஹார்ட் மக்களுக்கு நல்லதா இருக்கும். இந்த மாதிரி தப்பான மூலப்பொரூளால உருவாக்கப்பட்டு விஷமா இருக்குற சில கோஸ்மெடிக் ப்ரோடெக்ட் ஆல அதை யூஸ் பண்றவங்களுக்கு ஸ்கின் ப்ரோப்ளம் கூட வரலாம். அப்போ அதுக்கு பேர் துரோகம் தானே?” என்று சர்வேந்திரன் கேட்டதில், மாயா அதிர்ந்து போய் அவனை பார்த்தாள். இந்த மாதிரியான வார்த்தைகளை அவரிடமிருந்து அவள்  எதிர்ப்பார்க்கவேயில்லை என்பது அவளுடைய அதிர்ந்த முகமே அப்பட்டமாக காட்டியது.

பின் தன்னை சுதாகரித்தவள், “நல்லா தான் பேசுற, ஆனா, இதுவே நீ என் அம்மாவோட மனசு விட்டு பேசியிருந்தா, நட்புக்காக அவங்க உன் பேருல கம்பனிய விட்டுத் தந்திருப்பாங்களோ, என்னவோ?” என்று அழுத்தமாக சொல்ல,  “யாருக்குடி வேணும் உங்க பிச்சை? எனக்கு வேணுங்கிறதை நானே எடுத்துப்பேன். அது முடியலன்னா அதை அழிக்க கூட தயங்க மாட்டேன்” என்று கூறிய சர்வேந்திரன் துப்பாக்கியை அவளை நோக்கி நீட்டி விஷமமாக சிரித்தவாறு ட்ரிகரை அழுத்த போனார்.

அடுத்தநொடி, வீசப்பட்டு வந்த கட்டையொன்று அவர் கையில் விழ, வலியில் அலறியவாறு சர்வேந்திரன் துப்பாக்கியை நழுவ விட்டார். கட்டை வந்த திசையை நோக்கிய மாயாவின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.

அடுத்த கொஞ்ச நேரத்தில், அந்த இடத்துக்கு வந்த ரோஹன், காரை நிறுத்தியதும் காரிலிருந்து பாய்ந்து இறங்கி, தன்னவளை தேடி அந்த குடோனுக்குள் ஓட, பாபியும் அவன் பின்னாலே ஓடினான்.

ரோஹன் அந்த குடோனுக்குள் நுழையும் முன்னே தன் முன் வந்து நின்றவனை பார்த்த ரோஹனின் விழிகள் யோசனையில் சுருங்கி பின் அதிர்ச்சியில் விரிய, அவன் இதழ்களோ, “நீங்களா…?” என்று அதிர்ச்சியில் கேட்டன. “ஹெலோ மிஸ்டர், ஐ அம் ஹர்ஷா. ஹர்ஷமித்ரன்” என்று புன்னகைத்தவாறு தன்னை அறிமுகப்படுத்தினான் நம் முன்னாள் நாயகன் மித்து.

ஹர்ஷாவின் பின்னாலிருந்து மாயா வெளியே வர, ‘உஃப்ப்ப்…’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்ட ரோஹன், அடுத்தகணம் தன்னவளை நெருங்கி அவளை இறுக அணைத்திருந்தான். அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த ஹர்ஷா, தன்னை அதிர்ச்சியாக பார்த்திருந்த பாபியை பார்த்து, “என்னப்பா ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல்ல?” என்று உதட்டை சுழித்தவாறு கேட்க, அதிர்ச்சியிலிருந்தீ மீண்ட பாபி, “வாவ்! மிஸ்டர்.ஹர்ஷா, உங்கள நேர்ல பார்ப்பேன்னு நான் நினைச்சி கூட பார்க்கல” என்று குதூகலமாக அவனுடன் கை குலுக்கினான்.

“அம்மு, உனக்கு எதுவும் ஆகலல்ல? செத்தே போயிட்டேன்டி” என்று பதட்டமாக ரோஹன் பேச, “எனக்கு ஒன்னும் இல்லை ரூஹி” என்று மாயா முடிக்கவில்லை, “யோவ்! என்னை இவன்கிட்ட அம்போன்னு விட்டுட்டு போயிட்டியே, வயசானாலும் ரொம்ப ஸ்ட்ரோங்கா இருக்கான்யா. என் பொண்டாட்டிய விட வாய் ஓயாம பேசுறான்” என்று சர்வேந்திரனின் வாயையும், கையையும் கட்டி இழுத்துக் கொண்டு வந்தான் ஒருவன்.

அவனை பார்த்து வாய்விட்டு சிரித்த ஹர்ஷா, “அனாவையே ஹேன்டல் பண்ற உன்னால, இவன ஹேன்டல் பண்ண முடியாதா தேவ்தாஸ்?” என்று கேலியாக கேட்க, சர்வேந்திரனை பார்த்த ரோஹனுக்கொ கொலைவெறி தான் வந்தது.

வலது சட்டை கையை மடித்துவிட்டவாறு ரோஹன் அவரை நோக்கி கோபமாக போக, அவனை பிடித்துக் கொண்ட ஹர்ஷா, “ஏன் வந்த உடனே இத்தனை வயலன்ஸ் ப்ரோ? அதெல்லாம் நாங்களே பார்த்துகிட்டோம்” என்று சொல்ல, “பேபி, இவங்க எப்படி இங்க…?” என்று புரியாமல் கேட்டான் பாபி.

“கூல் மிஸ்டர்…” என்று தேவ் ரோஹனை பார்த்து புருவத்தை சுருக்கியவாறு இழுக்க, “ரோஹன் சைதன்யா” என்று தன் பெயரை ரோஹன் அழுத்தமாக சொன்னதும், “ஓகே மிஸ்டர்.ரோஹன், இவங்க ஏன் இங்க வந்தாங்கன்னு தெரியல. நாங்க எங்க பொண்டாட்டிங்களுக்கு தெரியாம பப்புக்கு போய் வர்ற வழியில தான் இவங்க இந்த குடோனுக்குள்ள போறதை பார்த்தோம். அதுமட்டுமில்ல, எங்களுக்கு இந்த மாதிரி விஷயத்துல ரொம்பவே அனுபவம் ஜாஸ்தி தான்” என்று சொல்லி சிரித்தான் ஹர்ஷா.

“அதே அதே… அதான், நாங்களும் பின்னாடியே வந்தோம். சரி ஏதாச்சும் ஆபத்துன்னா எங்க வீரத்தை காட்டலாம்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்தா, உங்க ஆளு என்னன்னா, இவன் கூடவே பேச்சு வார்த்தை நடத்திகிட்டு இருக்காங்க. எங்களுக்கும் வெயிட் பண்ணி அலுத்து போச்சு. அப்றம் பார்த்தா, பொசுக்குன்னு துப்பாக்கிய நீட்டிட்டான்” என்று தேவ் சொல்ல,

“ஒரு சம்பவத்துல இருந்து எனக்கும் பிஸ்டலுக்கும் ஆகவே ஆகாது. அதான், பார்த்ததும் ஒரு கட்டைய எடுத்து அவன் கைய உடைச்சிட்டேன். அப்றம் என்ன? நாங்க இரண்டு பேரும் இடையில புகுந்து டிஷூம் டிஷூம் தான். ஆனா என்ன? உங்க ஆளு மூஞ்சுல தான் இப்போ வரைக்கும் ஒரு ரியாக்ஷனும் இல்லை” என்று சலித்தவாறு சொன்னான் ஹர்ஷா.

இருவரையும் மாறி மாறி பார்த்த ரோஹன், “இவன்கிட்டயிருந்து இவள நீங்க தான் காப்பாத்தினீங்க. அதானே மேட்டரு?” என்று கேட்க, “ஈஷ்வரா…” என்று ஹர்ஷாவும், தேவ்வும் ஒருசேர நெஞ்சில் கை வைத்து பின்னாடி இரண்டடி நகர்ந்தனர்.  ரோஹனோ இருவரையும் கண்டுக்காது தன்னவளை ஆராய்ந்துக் கொண்டிருந்தான் என்றால், பாபி தான் அவர்களின் முகபாவனையில் வாய்விட்டு சிரித்தான்.

சரியாக தேவ்வின் எண்ணிற்கு ஒரு அழைப்பு வர, திரையை பார்த்தவன் சர்வேந்திரனை பாபியின் கையில் கொடுத்து விட்டு, “ப்ரோ, ஆபத்து அழைக்கிறது” என்றவாறு அழைப்பை ஏற்க, மறுமுனையில் மித்ராவோ, “டேய் கருவாப்பயலே! என் புருஷன்கிட்ட ஃபோன கொடுடா” என்று கத்தினாள்.

“யோவ்! கொஞ்சமாச்சும் உன் பொண்டாட்டிக்கு மரியாதைன்னா என்னன்னு சொல்லிக் கொடுயா” என்று சலித்தவாறு தேவ் தொலைப்பேசியை ஹர்ஷாவிடம் நீட்ட, “போடா! தாஸு பயலே” என்று திட்டியவாறு தொலைப்பேசியை பிடுங்கி காதில் வைத்த ஹர்ஷா, “மது… மதுபேபி, சோரி… சோரிபேபி. இப்போ வந்துருவேன். ஒன் த வேய் தான்” என்று தன்னவளை பேசவிடாது பேசிக் கொண்டே போனான்.

“மித்து, உன் பொண்ணு என் சாக்லெட்ட எடுத்துகிட்டு தர மாட்டேன்னு அலுச்சாட்டியம் பண்றா” என்று சிறுகுழந்தை போல் மித்ரா குற்றப் பத்திரிகை வாசிக்க, அவளிடமிருந்து தொலைப்பேசியை பிடுங்கிய குட்டி ஆருத்ரா, “மித்து, மது தான் என் சாக்லெட்ட திருடி சாப்பிடுறா. ரொம்ப பேட்” என்று புகார் சொல்ல, “அய்யோ…!” என்று அலறிய ஹர்ஷாவுக்கு இருவரையும் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

ரோஹனும் மாயாவும் அவனை விழிவிரித்து பார்க்க, “ஹிஹிஹி… குடும்பஸ்தனானா இதெல்லாம் சகஜம் தானே?” என்று அசடுவழிந்தவாறு அழைப்பை துண்டித்த ஹர்ஷா, “ஓகே மிஸ்.மாயா இனி நீங்க சேஃப்” என்று புன்னகையுடன் சொன்னான். 

“என்னை எப்படி உங்களுக்கு…?” என்று மாயா புரியாது கேட்க, “சோஷியல் மீடியாவுல ட்ரென்டிங்கே நீங்க தானே மாயா? அதுவும் உங்கள பத்தி தெரியாம இருக்குமா? அமெரிக்காவுல இருக்க உங்க ஐரா கோஸ்மெடிக்ஸ்ஸோட ஸ்ட்ரக்ச்சர் டிஸைன் பண்ணதே எங்க ஆர்.டீ கன்ஸ்ட்ரக்ஷன் தான்” என்று சிரித்தவாறு சொன்னான் ஹர்ஷா.

மென்மையாக சிரித்தவள், “தேங்க்ஸ்” என்று ஹர்ஷாவையும் தேவ்வையும் பார்த்து சொல்ல, புன்னகையுடன் அவர்களிடமிருந்து விடைபெற்று சென்றனர் நம் முன்னாள் நாயகர்கள் இருவரும்.

சட்டென ரோஹனின் புறம் திரும்பிய மாயா, “எதுக்கு சர்வாவ ஜெயில்ல இருந்து தப்பிக்க விட்ட?” என்று அழுத்தமாக கேட்க, “அது வந்து… அம்மு… நான்…” என்று தடுமாறினான் அவன்.  “அதை அப்றம் சொல்லு, மொதல்ல இவன போலிஸ்ல ஒப்படைச்சிரலாம்” என்றவாறு அவள் போலிஸிற்கு அழைப்பை எடுக்க, “இல்லை மாயா, அது…” என்று ரோஹன் ஏதோ சொல்ல வர, அவளவனோ எதையும் கண்டுக்காது போலிஸிற்கு தகவலை தெரிவித்திருந்தாள்.

“டேய் ரோக்கி! பேபி சொன்னதை பண்ணிரு. இல்லை… சேதாரம் உனக்கு தான்” என்று பாபி சொல்ல, ‘என்ன நடக்க போகுதோ…?’ என்று மானசீகமாக புலம்பித் தள்ளிவிட்டான் ரோஹன். அடுத்த பத்து நிமிடங்களிலே போலிஸ் அதிகாரிகள் அங்கு ஆஜராக, ஏற்கனவே வாங்கிய அடியில் சோர்ந்து போய் இருந்த சர்வேந்திரனை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் நன்றி தெரிவித்துவிட்டு அவரை இழுத்துக் கொண்டு செல்ல,  சர்வேந்திரனை உக்கிரமாக பார்த்தவாறு விஷமமாக சிரித்த மாயா, தன் மனதுக்குள் ஒரு திட்டத்தை தீட்டிக் கொண்டாள். அதன்பிறகு மூவருமே இரு போலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் வீட்டுக்கு செல்ல, போகும் வழியில் மூவரும் எதுவுமே பேசவில்லை.

இவர்கள் வீட்டுக்கு வர, ஏற்கனவே காவலர்கள் வந்தவர்களை அப்புறப்படுத்தியிருந்ததால், இவர்களின் குடும்பம் மட்டுமே இருக்க, மூவரும் நுழைந்ததும் பதட்டமாக நோக்கினர் அனைவரும்.

மாயா உள்ளே வர, அப்போது தான் நிம்மதி பெருமூச்சுவிட்ட ரவீந்திரன் தன்னை மறந்து ஓடி வந்து, “மாயூமா உனக்கு எதுவும் ஆகலல்ல? நான் ரொம்ப துடிச்சி போயிட்டேன். என்னால தான்மா எல்லாமே. கண்ணா மேல எந்த தப்பும் இல்லை. அவன என் கையால கொல்லனும்னு நான் தான் அவன தப்பிக்க விட்டேன். ஆனா, இப்போ அதுவே உனக்கு ஆபத்தாகிறுச்சி” என்று பதட்டமாக பேசினார்.

அவரை இறுகிய முகத்துடன் பார்த்த மாயா, “மிஸ்டர்.ரவீந்திரன், பெத்த பொண்ணு மேல இத்தனை வருஷம் வராத பாசம், இப்போ என்ன புதுசா, ஹான்…? என்று கோபமாக கேட்க, ரவீந்திரன் உட்பட மொத்த பேருமே அதிர்ந்து பார்த்தனர்.

காதல்போதை💙
****************************

-ZAKI💙