காதல்போதை PRE FINAL💙

காதல்போதை PRE FINAL💙

அந்த திருமண மண்டபமே சொந்தபந்தங்களால் நிறைந்திருக்க, பாபியும் சஞ்சய்யும் தம் துணைவிகளின் வருகையை எதிர்ப்பார்த்து மணவறையில் வீற்றிருந்தனர்.

மாயாவோ தன் நண்பிகள் இருவரையும் அலங்கரிக்க, அப்போது வந்த சிறுகுழந்தை ஒன்று, “ஆன்ட்டி, உங்கள அந்த அம்மா கூப்பிடுறாங்க” என்று சொல்லிவிட்டு ஓடியது. ‘ஒருவேள, அத்தையா இருக்குமோ?’ என்று யோசித்த வண்ணம் அறையிலிருந்து வெளியேறிய மாயா, தன் அத்தையை தேடி செல்ல, சட்டென ஒரு வலிய கரம் அவளை பிடித்து இழுத்தது.

அந்த வலிய கரம் ஒரு அறையினுள் அவளை இழுத்திருக்க, மாயாவோ அந்த கரத்திற்கு சொந்தமானவனின் மார்பிலே மோதி நின்றாள். “அய்யோ! என் மூக்கு…” என்று மூக்கை தடவியவாறு அலறியவள், தன்முன் குறும்பு பார்வையுடன் நின்றிருந்த தன்னவனை பார்த்து, “ரூஹி, என்ன இது? எவ்வளவு வேலை இருக்கு, நீ என்னடான்னா… மொதல்ல நகரு” என்றவாறு அவனை தாண்டி செல்ல போனாள்.

அவளை பிடித்து தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன், கொஞ்சமும் தாமதிக்காது அவளிள் இதழை சிறை செய்திருக்க, மாயாவோ அதிர்ந்து விழித்தாள். ஆனால், அடுத்தகணமே கண்களை மூடி, அவன் கேசத்துக்குள் கை நுழைத்து, தன்னவனுக்கு அவள் இசைந்து கொடுக்க, அவனும் அவள் இடையை வருடியவாறு அவளுள் மேலும் மேலும் மூழ்கினான்.

நெடுநேரம் நீண்ட அந்த முத்தத்தால் ஒரு கட்டத்தில் ரோஹன் மூச்சுக்காக திணறவும், அவளிடமிருந்து அவன் விலக, அவளோ தன்னவனின் விழிகளை காண முடியாது வெட்கத்தில் தலை குனிந்துக் கொண்டாள்.  அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன், “டெவில், என்னை  பாரு” என்று கிசுகிசுப்பாக சொல்ல, அவளும் விழி உயர்த்தி தன்னவனை பார்த்தாள்.

“ஐ லவ் யூ அம்மு” என்று ரோஹன் அவள் இதழோடு தன் இதழ் உரச சொல்ல, “நானும் தான்” என்றவாறு அவள் அவனின் கன்னத்தில் அழுந்த முத்தம் பதிக்க, ‘ஹ்ர்ம்… ஹ்ர்ம்…’ என்ற செறுமல் சத்தத்தில் இருவருமே பதறிக் கொண்டு விலகி நின்றனர். வாசலில் லலிதா திரும்பி நின்றிருக்க, தன் அம்மாவை பார்த்து பதறிய ரோஹன், “அம்மா இவ தான்மா” என்று சிறுகுழந்தை போல் அவளை மாட்டிவிட்டு ஓடிவிட, மாயாவோ தன்னவனை ஏகத்துக்கும் முறைத்து பார்த்தாள்.

லலிதாவோ அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றிருக்க, அவரை பார்த்து சங்கடப்பட்டவள், “அத்தைமா…” என்று தயக்கமாக அழைக்க, “இரண்டு பொண்ணுங்களையும் அழைச்சிட்டு வா மா” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு அவளின் கன்னத்தை தட்டிவிட்டு அவர் சென்றதும், மாயாவுக்கு தான் ‘அய்யோ’ என்றிருந்தது.

மணப்பெண்களும் மணவறைக்கு அழைத்து வரப்பட, சஞ்சய்யின் பக்கத்தில் அமர்ந்த அலைஸ்ஸிற்கு இதெல்லாம் பழக்கமில்லாததால் இத்தனை நகைகளை போட்டு ஹோம குடண்டத்தின் முன் இருப்பதே திண்டாட்டமாக இருந்தது. சஞ்சய்க்கு அவளின் திணறல் புரிந்ததோ என்னவோ? தன் கைகுட்டையை எடுத்து அவளின் முகத்தில் பூத்திருந்த வியர்வையை துடைத்து விட்டவாறு, “ரொம்ப கஷ்டமா இருக்கா?” என்று அக்கறையாக கேட்டான்.

அவனின் அக்கறையில் நெகிழ்ந்தவள், ‘இல்லை’ என்று தலையாட்ட, புன்னகையுடன் அவளை பார்த்த சஞ்சய், “ரொம்ப அழகா இருக்க மெழுகு பொம்மை” என்று காதலாக சொல்லிவிட்டு நிமிர, அவன் கண்களில் சிக்கினாள் அவள்.

கல்யாணத்துக்கு அவர்களின் கல்லூரி நண்பர்களை அழைத்திருக்க, அங்கு வந்திருந்த ரோஷினியை பார்த்தவன் உற்சாகமாக, “ஹாய் ரோஷினி” என்று சொன்னான். அலைஸ்ஸோ அவனை உக்கிரமாக முறைக்க, “ஹிஹிஹி சும்மா…” என்று அசடுவழிய சிரித்து வைத்தான் சஞ்சய்.

கீர்த்தியோ பூமிக்குள் தலையை புதைத்துவிடுமளவிற்கு வெட்கத்தில் குனிந்திருக்க, அவளை மேலிருந்து கீழ் விசித்திரமாக பார்த்த பாபி பின்னால் நின்றிருந்த மாயாவை பார்த்து, “பேபி, பயிற்சிகள் பத்தவில்லையோ…?” என்று கேட்டான். மாயாவோ புரியாமல் இருவரையும் மாறி மாறி கேட்க, “நிமிர்ந்து கூட பார்க்குறா இல்லைடி” என்று பாபி பாவமாக சொன்னதில், மாயா சிரித்தாளோ இல்லையோ? கீர்த்தி கிளுக்கி சிரித்தாள்.

அவளின் காதருகே குனிந்தவன், “ஸ்வீட்டி, இன்னைக்கு என்கிட்ட மாட்டுவல்ல? அப்போ கவனிச்சிக்கிறேன்” என்று மிரட்டலாக சொல்ல, விலுக்கென நிமிர்ந்த கீர்த்தி கண்களை அகலவிரித்து அவனை பார்க்க, ஒற்றை கண்ணை சிமிட்டி பாபி புன்னகைக்கவும், வெட்கத்தில் முகம் குப்பென்று சிவந்து விட்டது கீர்த்திக்கு.

அடுத்த கொஞ்சநேரத்தில் மங்கள வாத்தியங்கள், மந்திரங்களின் உச்சரிப்புக்கு மத்தியில் தம் துணைவிகளின் கழுத்தில் மங்கள நாணை பூட்டி தன்னவளாக்கிக் கொண்டு இரு ஆண்களும் அவர்களை காதலாக நோக்க, ரோஹனோ தன் கையிலிருந்த அர்ச்சதையை தன்னவளின் மேல் தூவி அவளையே அப்பட்டமாக சைட் அடித்தான்.

அன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெற, மூன்று காளைகளும் கோட் சூட்டில் தயாராகி மேடையில் தம் காதல் மனைவிக்காக காத்திருக்க, அவர்கள் தான் வந்தபாடில்லை.

“டேய்! என்னடா என் பொண்டாட்டிய காணோம்? என்னை இப்படி தவிக்க விடுறதுல அவளுக்கு அப்படி என்ன தான் சந்தோஷமோ…?” என்று ரோஹன் கண்களை சுழலவிட்டு தன்னவளை தேடியவாறு சொல்ல, “அட போடா! என் பொண்டாட்டி ரொம்ப மோசம். இப்போ வரைக்கும் ஒரு ‘லவ் யூ’ கூட சொல்லல்ல” என்று உதட்டை பிதுக்கினான் சஞ்சய்.

“என்னடா என்ன? அப்போ, என் ஆளு என்னை ஏறெடுத்தே பார்க்க மாட்டேங்குறா. இதுங்கள வச்சிகிட்டு… அய்யோ! அய்யோ!” என்று பாபி சொல்ல, சரியாக பாடல் ஒலிக்க, கூட்டத்தில் இருந்த சில பேர் இவர்களின் முன் வந்து நடனமாட, முன்று ஆண்கள் தான் அவர்களை புரியாமல் பார்த்தனர்.

அடுத்த சில நொடியில்,

    என் பாட்ட கேக்கும் அம்மாச்சி அம்மாச்சியோ…
     புது பொண்ணு வெட்கம் சும்மாச்சி சும்மாச்சியோ…
     அடி நாளை முதல் உம்மாச்சி உம்மாச்சியோ…
      வீட்டில் ஆச்சி மீனாட்சி மீனாட்சியோ….

பாடல் வரிகள் ஆரம்பமாக, நடு நாயகமாக வந்து அவர்களுடன் இணைந்து நடனமாடிய மாயாவை பார்த்த ரோஹன் அப்படியே உறைந்து விட்டான். அரக்குநிற கற்கள் பதிக்கப்பட்ட லெஹெங்காவில் அவள் ஆட, கீர்த்தியும், அலைஸும் கூட அவளுடன் இணைந்து நடனமாடினர்.

பெரியவர்கள் புன்னகையுடன் இவர்களை பார்த்திருக்க, வந்திருந்த விருந்தினர்களோ கத்தி கரகோஷம் எழுப்பினர். சரியாக அங்கிருந்தவர்கள் தம் நாயகிகளின் கையில் பூங்கொத்தை கொடுக்க,  ஆடியவாறே வந்து மூன்று பேரும் தம் நாயகர்களின் முன் வந்து, மண்டியிட்டு அமர்ந்து பூங்கொத்தை நீட்டினர்.

அன்று, ரோஹன் முதன் முதலாக காதலை சொன்னது போல் இன்று மாயாவும் செய்து, “லவ் யூ ரூஹி” என்று பூங்கொத்தை நீட்ட, அவனுக்கோ அவளின் காதலின் உச்சத்தில் கண்களே கலங்கிவிட்டது. அவளுக்கு நேராக மண்டியிட்டு அமர்ந்து தன்னவளை தாவி அணைத்தவன், அவளின் இதழில் அழுந்த முத்தமிட, பெரியவர்களோ சங்கடமாக திரும்பிக் கொள்ள, இளசுகள் கரகோஷம் எழுப்பியே மாயாவின் கன்னத்தை சிவக்க வைத்து விட்டனர்.

கீர்த்தியோ தன் காதல் கணவனிடம் பூங்கொத்தை நீட்டி, “லவ் யூ தரு” என்று தலையை சரித்து சொல்ல, ஒற்றை கையால் முகத்தை மூடி கொண்ட பாபி, “அச்சோ! ஸ்வீட்டி, என்னையும் உன்னை மாதிரியே வெட்கப்பட வச்சிட்டியே…” என்று சொன்னவாறு அவளை அணைத்துக் கொள்ள, அவளும் அவனின் மார்பில் புதைந்துக் கொண்டாள்.

அலைஸ்ஸோ தன்னவனிடம் பூங்கொத்தை நீட்டி, “அன்னைக்கு சொன்னேன், கல்யாணத்துக்கு அப்றம் கண்டிப்பா உன்னை காதலிப்பேன்னு. உன்னை மாதிரி என்னால காதலிக்க முடியுமான்னு தெரியல. பட், டீ ஆமோ” என்று மொத்தத்தையும் இத்தாலியின் மொழியில் பேசி தன் காதலை சொல்ல, “ரியலி? வாவ்! தேங்க் யூ… தேங்க் யூ சோ மச் செல்லம்” என்றவாறு அவளை தூக்கி சுற்றினான் சஞ்சய்.

தன்னவனை ஒரு மார்கமாக பார்த்தவள், “லவ் யூக்கு பதிலா ‘தேங்க் யூ’ ன்னு ஆன்சர் இப்போ தான் கேக்குறேன்” என்று சொன்னதில், அவளின் கன்னத்தில் முத்தமிட்டவன், “ஹிஹிஹி… லவ் யூ” என்று சொல்ல, அவளோ கடந்த காலத்தை மறந்து, இனி தன் வாழ்வை தன்னவனுக்காகவே சமர்ப்பித்தாள்.

அடுத்து பல விருந்தினர்கள் மேடையேறி மூன்று ஜோடிகளையும் வாழ்த்த, திடீரென “ஹாய் ப்ரீத்தி” என்று மாயா ஒரு திசையை பார்த்து கையசைத்ததில், அங்கு வந்தவளை பார்த்த ரோஹனுக்கோ விழிகள் விரிந்துக் கொண்டது. ரோஹனின் முன்னால் காதலி ப்ரீத்தியே அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருக்க, ரோஹனோ மாயாவின் கைகளை மேலும் இறுகப்பற்றி அவளை கர்வமாக பார்த்து வைத்தான்.

ப்ரீத்தி அவர்களின் அருகில் வர, அவளை அணைத்து விடுவித்த மாயா,  “ரூஹி, இது என் ஃப்ரென்ட் ப்ரீத்தி. இட்டாலில தான் இவங்க ஹஸ்பன்ட் கூட செட்ல் ஆகி இருக்காங்க” என்று சொல்ல, “ஓஹோ!” என்று ரோஹன் ப்ரீத்தியை நக்கலாக பார்த்து வைத்தான். மாயாவோ கீர்த்தியின் அருகில் ஏதோ பேச செல்லவும், ப்ரீத்தியோ அந்த கணத்தை பயன்படுத்தி, “சோரி ரோஹன், நான் உங்கள ஏமாத்தியிருக்க கூடாது… ஆனா, நான்…” என்று தன் நியாயத்தை பேச வர, அவளை குறுக்கிட்டான் ரோஹன்.

“நோ ப்ரீத்தி, உன்னோட காரணம் எனக்கு தேவையே இல்லை. பட், ஐ ஹேவ் டூ தேங்க் யூ. நீ தான் எனக்கு மாயாவ கொடுத்திருக்க. நீ கொடுத்த வலியால தான் நான் மாயாவோட ஆழமான காதலை புரிஞ்சிக்கிட்டேன். தேங்க் யூ” என்று ரோஹன்  சொல்ல, அவளும் மேலும் எதுவும் பேசாது புன்னகையுடன் தலையசைத்துவிட்டு  அங்கிருந்து நகர்ந்தாள்.

ப்ரீத்தி நகர்ந்ததும் தன்னவனின் அருகில் வந்த மாயா, “உன் எக்ஸ் கேர்ள் ஃப்ரென்ட் என்ன சொன்னா செல்லகுட்டி?” என்று கேலியாக கேட்க, அவளை விழிவிரித்து பார்த்தவன், “யூ க்னோ ஹெர் ரைட்? அப்போ, ஏன்டி எதுவுமே தெரியாத மாதிரி ஆக்ட் பண்ண? சரியான கேடி டி நீ…” என்று பொய்யான முறைப்புடன் சொன்னான்.

“ஹிஹிஹி… என் செல்ல காரமுறுக்கு” என்று அசடுவழிந்தவாறு தன்னவனின் கன்னத்தை கிள்ளி மாயா கொஞ்ச, அவனோ வலிக்க வலிக்க அவளின் மூக்கை கிள்ளிவிட்டான்.

இவ்வாறு வரவேற்பு நிகழ்ச்சி ஆடல், பாடல் என்று கொண்டாட்டங்களுடனும், காதல் பார்வை சீண்டல்களிலும் நிறைவடைய, அன்றிரவு அதே ஹோட்டலில் மூன்று ஜோடிகளுக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. மாயாவோ இரவு உடையை மாற்றி விட்டு தன்னவனை தேடி வர, ரோஹனோ பால்கெனியில் வானத்தை வெறித்தவாறு நின்றிருந்தான்.

அவளோ ஓடிச் சென்று தன்னவனை பின்னாலிருந்து அணைத்துக் கொள்ள, “சர்வா இறந்துட்டான் மாயா” என்ற ரோஹனின் குரலில் அவனிடமிருந்து விலகியவள், ரோஹனின் தோளில் சாய்ந்தவாறு “ஓஹோ!” என்று சாதாரணமாக சொன்னாள்.

பக்கவாட்டாக அவளை திரும்பி பார்த்தவன், “சோ, இது உன் வேலை தான். அதுவும், அந்த பொய்ஸன வச்சி இதை பண்ணியிருக்க” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க, “அவன உங்ககிட்டயிருந்து நான் தப்பிக்க விட்டதே, அவன் சாவு இப்படி அமையனும்னு தான். அவனுக்கான சரியான தண்டனை” என்று அழுத்தமாக சொன்னாள் அவள்.

“வாட்? நீதான் அவன என்கிட்டயிருந்து தப்பிக்க விட்டியா?” என்று அதிர்ந்த குரலில் ரோஹன் கேட்க, ‘ஆம்’ என்ற ரீதியில் தலையசைத்தவள், “எத்தனை பேரோட வாழ்க்கைய அந்த விஷத்தால அழிச்சிருப்பான். இப்போ அதே வலிய அவனும் அனுபவிச்சி செத்திருக்கான். தட் வோஸ் ஐ வோன்ட்” என்று சொல்ல, அவளையே அழுத்தமாக பார்த்திருந்தான் அவன்.

“என்ட், ரூஹி நான் உன்கிட்ட ஐரா கோஸ்மெடிக் பத்தின ஒரு சீக்ரெட் சொல்லனும்” என்று மாயா தயங்கியவாறு ஏதோ சொல்ல வர, “அக்வா டொஃபேனா தான் உங்க ஐராவோட சீக்ரெட், ரைட்?” என்று ரோஹன் பட்டென்று கேட்டதில், விழிபிதுங்க அவனை அதிர்ந்து பார்த்தாள் மாயா.

அவளின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவன், “உங்க ஃபேக்டரிக்கு வந்தப்போவே நான் அதை தெரிஞ்சிக்கிட்டேன். ஒருவேள, இதுக்காக தான் ரொம்ப நெருக்கமானவங்கள தவிர உள்ள யாரையும் அனுமதிக்கிறீங்க இல்லையோ என்னவோ?” என்று சொல்ல, அவளோ தயக்கமாக தலையாட்டினாள்.

“நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காத அம்மு. நீங்க பண்றது பொய்ஸன், அதுவே உங்க கஸ்டமர்ஸ்க்கு ஆபத்தாகினா என்ன பண்ணுவ? இது தப்பில்லையா?” என்று ரோஹன் காட்டமாக கேட்க,

“என் தாத்தா என்கிட்ட இதை பத்தி சொல்லும் போது ஒன்னு சொன்னாரு. எந்த ஒரு விஷயத்துலயும் நல்லதும், கெட்டதும் இருக்கும், அதை பிரித்தறிஞ்சி எடுத்துக்குறது தான் நம்ம சாமர்த்தியம். இந்த விஷம் எங்க உடலுக்குள்ள போனா மட்டும் தான் அது ஆபத்து. மத்தபடி அது ஒரு பெஸ்ட் கோஸ்மெடிக். அதனால தான் உடலுக்குள்ள போற ஒரே கோஸ்மெடிக் லிப்ஸ்டிக் அ எங்க கம்பனில உற்பத்தி பண்ணல.

ஆனா, இப்போ எனக்கே பயமா இருக்கு. நான் மக்களுக்கு துரோகம் பண்றேனோன்னு தோணுது. இன்பேக்ட், சர்வா கூட இதே தான் என்கிட்ட சொன்னான். கொடுக்குற பொருளோட  தரத்தை மட்டுமே பார்த்தேனே தவிர அது மக்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்புன்னு நான் யோசிக்காம போயிட்டேன். சில மூலப் பொருட்கள் உடலுக்கு போகாம இருந்தாலும் தோல் நோய்கள  உண்டாக்கும்.

அதான் ரூஹி, எங்க ஐரா கோஸ்மெடிக் இனி அந்த ஃபோர்மியூலாவ உற்பத்தி பண்ணாது. முடிஞ்ச அளவு மக்களுக்கு பாதுக்காப்பான மூலப்பொருட்கள் அதாவது அதிகமான இயற்கை பொருட்கள வச்சே எங்க உற்பத்திய பண்ண புது ஃபோர்மியூலாவ தயாரிக்கிறோம். உன் அம்மு தப்பான விஷயத்துக்கு துணை போக மாட்டா” என்று மாயா உறுதியான குரலில் சொல்ல, அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தான் ரோஹன்.

“இப்போவெல்லாம் நீதான்டி ஸ்பீச் பண்ற, காது கொய்யுன்னு இருக்கு” என்று கேலியாக அவன் சொல்ல, அவனை ஏகத்துக்கும் முறைத்தவளுக்கோ கோபத்தில் மூக்கு சிவந்தது. அதில் மயங்கியவன் அவள் மூக்கை கடித்துவிட்டு ஓட, ‘ஆஆ…’ என்று அலறியவள், “ரூஹி, உன்னை விட மாட்டேன்டா… டேய்…” என்று கத்திக் கொண்டு அவனை துரத்திச் சென்றாள்.

ரோஹன் கட்டிலின் மேல் ஏற, ‘நானும் ஏறுகிறேன்’ பேர்வழியென்று மாயா கட்டிலில் விழ, ரோஹனோ அவள் மேலே விழுந்தான். அவளின் அருகாமையில் அவன் அவளை கிறக்கமாக நோக்கியவாறு தன் ஒற்றை விரலால் அவளின் முக வடிவை அளக்க, அவளோ மயக்கமாக அவனை பார்த்தாள்.

நெற்றி, கண்கள், கன்னம் என முத்த அச்சாரங்களை பதித்துக் கொண்டு வந்தவன் அவளின் இதழில் அழுந்த முத்தமிட்டு, ‘சம்மதமா?’ என்று கண்களாலே கேட்க, அதை உணர்ந்தவள் கண்களை மூடி தன் சம்மதத்தை தெரிவிக்க, அடுத்தநொடி அவளின் கழுத்தில் முகத்தை புதைத்து தன்னவளை முழுமையாக ஆட்கொண்டான் அந்த காதலன்.

பாபியோ கீர்த்தியின் வெட்கத்தையும், சிணுங்கல்களையும் ரசித்து ரசித்தே அவளை மேலும் சிவக்க வைக்க, சஞ்சய் தான், “கொஞ்சமாவது வெட்கப்படு டி” என்று அலைஸ்ஸிடம் கெஞ்சியே விட்டான்.  இவ்வாறு மூன்று ஜோடிகளும் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைத்து, தம் இத்தனை வருட பிரம்மச்சாரிய விரத்தத்தை முடித்துக் கொண்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து,

ரோஹன் தன் தந்தையுடன் வேலை தொடர்பாக பேசிக் கொண்டிருக்க, அவன் முன் வந்து நின்ற அவன் மனையாள் ஒரு கவரை நீட்டினாள். புருவ முடிச்சுகளுடன் அதை வாங்கி பார்த்தவனது விழிகளோ விரிந்து கொண்டது.

சட்டென எழுந்து நின்றவன், “அம்மு…” என்று தழுதழுத்த குரலில் அழைக்க, “இன்னும் வன் மன்த்ல டான்ஸ் செலக்ஷன் இருக்கு ரூஹி. சோ, பிஸ்னஸ் அ நான் பார்த்துக்குறேன். நீ உன் கனவுக்காக தயாராகு” என்றாள் மாயா.

அதை அவளிடம் நீட்டிய ரோஹன், “இல்லை அம்மு, இதெல்லாம் முடிஞ்சி போச்சி. இப்போ போய் நான்…” என்று அவன் சங்கடமாக இழுக்க, அவனை முறைத்தவள், “உன்னை விட்டு நான் போனதால தான் நீ கம்படீஷன் போகலன்னு ஊரெல்லாம் சொல்லிகிட்டு திரிஞ்சிருக்க. சோ, நீ போய் தான் ஆகனும். உனக்கு பிடிச்சதை செய் பேபி” என்று சொல்ல, அவளை தாவி அணைத்தவனின் கண்களோ கலங்கி போயிருந்தது.

வீட்டிலே தன் கனவை பெரிதாக எடுத்துக்கொள்ளாத போது தன்னவள் தனது கனவை நனவாக்க செய்யும் காரியங்களில் அவள் மீதான காதல் அவனுக்கு பல்கி பெருகியது.

“ஆனா,  இதுக்கான லாஸ்ட் டேட் இரண்டு நாளைக்கு முன்னாடியே முடிஞ்சதே அம்மு. அப்றம் எப்படி…?” என்று ரோஹன் குழப்பமாக கேட்க, “இந்த கம்படீஷன நடத்துறவங்கள மாயூமா மிரட்டுன மிரட்டல் அப்படி மாப்பிள்ளை” என்று சொல்லிக் கொண்டு வந்தார் ரவீந்திரன். “அடிப்பாவி…!” என்று ரோஹன் சொல்லி சிரிக்க, லலிதாவும் மானவ்வும் கூட தம் மருமகளை மெச்சுதலாக பார்த்து வைத்தனர்.

அடுத்த கொஞ்சநாட்ககளிலே மாயா பெங்ளூரில் ஆரம்பித்த கிளையின் கட்டுமான வேலைகள் முடிந்திருக்க, அதை பொறுப்பேற்றவள், இட்டாலியில் இருக்கும் தலைமையகத்தையும் மற்ற நாடுகளிலுள்ள முக்கிய கிளைகளையும் நிர்வகிக்க, நம்பகத்தகுந்த ஆட்களை நியமித்திருந்தாள்.

கம்பனியின் திறப்பு விழா முடிந்ததும் அதை தன் தந்தையின் பொறுப்பில் விட்டவள், ஏதோ தானே போட்டியில் பங்கேற்பது போல் ரோஹனின் பின்னாடியே திரிந்துக் கொண்டிருந்தாள்.  ரோஹனின் சார்பாக அவனின் அலுவலகத்திற்கு அடிக்கடி செல்பவள், கீர்த்தியையும் அலைஸ்ஸையும் கூட்டு சேர்த்து அங்கு செய்யும் அட்டூழியத்தில் ‘ரோஹன் வர்றானோ, இல்லையோ? நீ மட்டும் எங்க கம்பனி பக்கம் வந்துராதமா’ என்று கையெடுத்து கும்பிடாத குறையாக சொல்லிவிட்டனர் பாபியும், சஞ்சய்யும்.

இவ்வாறு ரோஹன் அடுத்தடுத்தென்று நடந்த ஒவ்வொரு சுற்றிலும் தெரிவு செய்யப்பட்டு வெற்றியை தட்டிச் செல்ல, சரியாக ஆறு மாதம் கழித்து பெங்ளூரில் நடைபெற்றது இறுதிப்போட்டி. ரோஹனின் கனவான லண்டனில் நடைபெறும் நடனப்போட்டிக்கு நடனக் கலைஞர்களை தெரிவு செய்வதற்கான போட்டி.

ரோஹனின் ஆட்டத்தை மறந்திருந்தவர்களுக்கு அவனின் வருகை மீண்டும் உற்சாகத்தை எழுப்பியிருக்க, எப்போதும் போல் நம் நாயகியோ ‘லவ் யூ ரூஹி’ என்று எழுதியிருந்த போஸ்டரை தாங்கியவாறு கத்தி கூச்சலிட்டாள். கீர்த்தியும் அலைஸ்ஸும் வெளிப்படையாக தலையிலடித்துக் கொள்ள, பாபியும் சஞ்சய்யும் தான் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தனர்.

இதில் ரோஹனை சொல்லவா வேண்டும்? ஆடி முடித்தவன் மேடையில் வைத்தே தன்னவளுக்கு பறக்கும் முத்தத்தை கொடுத்துவிட்டே செல்ல, அவளோ வெட்கத்தில் பக்கத்தில் நின்றிருந்த கீர்த்தியின் தோளில் புதைந்துக் கொண்டாள். அடுத்து பல ஆட்டங்களுக்கு பிறகு முடிவு சொல்லப்பட, அதில் ரோஹன் தெரிவு செய்யப்பட்டதை அறிந்து மாயா உற்சாக மிகுதியில் கத்திய கத்தலில் அங்கிருந்தவர்களே மிரண்டு விட்டனர்.

அவனோ அன்று போல் இன்றும் ஓடி வந்து, தன்னவளை அணைத்து, “அம்மு, நான் ஜெயிச்சிட்டேன் டி” என்று சொல்ல, அவளுக்கோ சந்தோஷம் தாளவில்லை. இந்த சந்தோஷத்தோடு சேர்த்து அடுத்த வந்த நாட்களில் கீர்த்தியும் அலைஸ்ஸும் குழந்தை உண்டாகிய சந்தோஷமும் சேர்ந்துக் கொள்ள, மொத்த குடும்பத்திற்கும் கொண்டாட்டம் தான்.

ஒரு மாதம் கழித்து, ரோஹனின் மொத்த குடும்பமுமே அவனின் போட்டிக்காக லண்டனுக்கு புறப்பட்டிருக்க, அங்கு சென்ற மூன்று நாட்களில் மாயாவின் உற்சாகம் குறைந்து, அவளுக்கோ என்றும் இல்லாது உடல் சோர்வாக இருந்தது. ஆனாலும், தன் சோர்வை முகத்தில் காட்டாது அவள் தன்னவனுக்காக சகஜமாக இருப்பது போலிருக்க, தன்னவளின் மாற்றத்தை அறியாதவனா அவன்!

“அம்மு, ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று ரோஹன் அவளின் நெற்றி, கழுத்தை தொட்டு பார்த்தவாறு கேட்க, “ஒன்னுஇல்லை ரூஹி, டயர்டா இருக்கு, அதான்…” என்று சமாளித்தவள் அவன் தோளிலே சாய்ந்துக் கொள்ள, அவனோ அவளின் தலையை லேசாக வருடிவிட, அதுவே அவளுக்கு அத்தனை இதமாக இருந்தது.

அடுத்த இரண்டு நாட்களில் போட்டிக்கான நாளும் வந்தது. பல நாடுகளிலிருந்தும் பல போட்டியாளர்கள் பங்கு பெற்றிருக்க, ரோஹனுக்கோ அந்த மேடையை பார்க்கும் போதே கண்கள் கலங்கிவிட்டது. எத்தனை வருட கனவு அது?

கனவு நினைவாக போகும் பரவசத்தில் இருந்தவன், தன் கைகளில் உணர்ந்த அழுத்தத்தில் திரும்பி பார்க்க, அவன் மனையாள் தான் அவன் கையோடு கை கோர்த்து புன்னகையுடன் நின்றிருந்தாள். அவளை பார்த்தவனுக்கு கண்ணீரே வந்துவிட்டது. போட்டியாளர்கள் தயாராகும் இடத்தில் வெளியாட்களுக்கு இடம் இல்லாததால் ரோஹனின் மொத்த குடும்பமும் பார்வையாளர்களுக்கான இருக்கையில் அமர்ந்திருக்க, ஐரா கம்பனீஸ் இந்த போட்டிக்காக ஸ்பான்சர் செய்திருந்ததால், மாயா ரோஹனுடன் இருப்பதை எதிர்த்து யாருமே கேள்வி கேக்கவில்லை.

“ரொம்ப ஹேப்பியா இருக்கு அம்மு, நான் நினைச்சி கூட பார்க்கல. இந்த ஸ்டேஜ்…” என்று ரோஹன் உணர்வு பெருக்கில் பேச முடியாது நிறுத்தி புன்னகைக்க, அவன் முன் வந்து நின்றவள், “பெஸ்ட் ஆஃப் லக் ரூஹி, என்ட், இன்னொரு முக்கியமான பர்சனோட விஷ்ஷும் உனக்கு இருக்கு” என்று புன்னகையுடன் சொன்னாள்.

அவனோ புரியாமல், “யாரு அம்மு?” என்று கேட்க, அவனை நெருங்கியவள் அவனுடன் கை கோர்த்திருந்த கையை உயர்த்தி, தன் வயிற்றில் வைத்து, “நீ அப்பாவாக போற ரூஹி” என்று சொல்ல, ரோஹனுக்கோ அதிர்ச்சி கலந்த சந்தோஷம்.

ஏற்கனவே கனவு நினைவான சந்தோஷத்தில் இருந்தவனுக்கு, அதே கனவு மேடையில் தன் உயிர் நீரில் உதித்த ஜீவனை பற்றி கேட்டதும் உலகத்தையே வென்று விட்ட உணர்வு . உதடுகள் துடிக்க, தழுதழுத்த குரலில், “நிஜமாவா அம்மு?” என்று ரோஹன் கேட்க, அவளோ சிரிப்புடன் தலையசைத்து, “அழாத பேபி” என்றவாறு அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளை இறுக அணைத்துக் கொண்டவன், “தேங்க் யூ பேபி… தேங்க் யூ” என்று அதையே பிதற்றிய வண்ணம் இருக்க, அவனிடமிருந்து விலகி அவனிதழில் அழுந்த முத்தமிட்டவளால் அதன்பிறகு அவனை விட்டு விலக முடிந்தால் தானே! அந்த கள்வன் தான் அவள் இதழை விடாது சிறைப்படுத்தியிருந்தானே…

மெதுவாக அவளை விட்டு விலகி அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன், “என் கனவ நினைவாக்கின தேவதை டி நீ, லவ் யூ சோ மச் அம்மு” என்ற ஒரு கையால் அவனின் சிசுவை வருடியவாறு, அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட, சுற்றியிருந்த வெளிநாட்டவர்களோ அவர்களின் அன்னியொன்னியத்தை ரசனையாக பார்த்து வைத்தனர்.

இவர்களுக்கான அழைப்பு வரவும், உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் விலைக்கு வாங்கியது போல் அத்தனை துள்ளலோடு நடனமாடினான் ரோஹன் தன் குழுவுடன். அவனுடைய ஒவ்வொரு அசைவுகளுமே அங்கிருந்தவர்களை கவர, அவனுக்கு ஒரு ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது எனலாம். மாயாவுக்கொ தன்னவனின் கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் கன்னத்தினூடாக கண்ணீர் வழிய, அதை துடைத்தவள் கண் சிமிட்டாது அவனின் நடனத்தையே பார்த்திருந்தாள்.

கீர்த்தியும் அலைஸ்ஸும் விமான பயணத்தை மேற்கொள்ள முடியாததால் லண்டனுக்கு அவர்களால் வர முடியாது போக, தம் துணைவிகளுக்கு துணையாக வீட்டிலிருந்தே தன் நண்பனின் ஆட்டத்தை பார்த்த பாபியும் சஞ்சய்யும், போட்ட கூச்சலில் பெண்கள் இருவருக்கும் தான் ‘அய்யோ’ என்றிருந்தது.

ஆடி முடித்து நன்றி சொன்ன அடுத்தகணம், தன்னவளின் அருகே ஓடி வந்த ரோஹன் அவளை தூக்கி தட்டமாலை சுற்ற, அங்கு இருப்பவர்களுக்கோ அது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அடுத்து முடிவுகளும் அறிவிக்கப்பட, வேறு நாட்டை சேர்ந்த நடனக்குழு வெற்றி பெற்றது என்று அறிவித்தாலும், ரோஹனின் முகத்தில் புன்னகைக்கு பஞ்சமே இல்லை.

அவனின் முகம் அத்தனை பிரகாசமாக இருக்க, மாயாவை சொல்லவா வேண்டும்? அவனின் அருகிலிருந்தே அவனை அப்பட்டமாக சைட் அடிக்க, அவளை ஒரு கையால் அணைத்து தன்னுடன் நெருக்கியவன், “எதுக்கு இரண்டு ஸ்டெப் தள்ளியிருந்து சைட் அடிக்கிற? இப்படி கட்டிபிடிச்சிக்கிட்டே சைட் அடிக்கலாம், தப்பில்லை” என்று குறும்பாக சொன்னான்.

அவனை பொய்யாக முறைத்தவளுக்கு தன் கன்னச்சிவப்பை தான் மறைக்க முடியவில்லை. அதை ரசித்தவன் அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட, வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டாள் மாயா.

காதல்போதை💙
****************************

-ZAKI💙

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!