காதல்போதை20?

காதல்போதை20?

காதல்போதை 20?

மாயா ஜன்னல் வழியாக வானத்தை வெறித்தவாறு நின்றிருக்க அவள் தோளில் கை போட்ட கீர்த்தி,
       “என்னாச்சுடி இதுக்கே இப்படி டவுன் ஆகிட்டன்னா எப்படி..” என்று கேட்க,

அவளை பார்த்தவள்,
      “போன்டா உனக்கு தருண் மேல இருக்க காதல வச்சி அவன மாத்தலாம்ல..” என்று கேட்டதில் அதிர்ந்துவிட்டாள் கீர்த்தி.

ஆனால் அடுத்தநொடி தன் முகபாவனையை மாற்றியவள் புன்னகைத்தவாறு,
       “அதானே பார்த்தேன் என் ஜிலேபி என்ன முட்டாளா.. அன்னைக்கு சஞ்சய் அண்ணா தருவ பத்தி சொல்லும் போதே உனக்கு தெரிஞ்சிருக்கும்னு எனக்கு தெரியும்.. ஆனா நீயாவே இதைப்பத்தி என்கிட்ட  கேப்பன்னு நினைச்சேன்..”  என்று கீர்த்தி சொல்ல,

“நீயா என்கிட்ட இதைபத்தி சொல்வன்னு நா நினைச்சேன்..” என்று சொன்ன மாயா,
      “ஏன் போன்டா தருகிட்ட உன் லவ்வ சொல்லாம இருக்க.. அவன் பொண்ணுங்க கிட்ட கொஞ்சம் அப்படி இப்படின்னு தான் பழகுவான் ஆனா நல்லவன் தான்.. என் ரூஹியோட பெஸ்ட் ஃப்ரென்டா இருந்தவன் தப்பானவனா இருக்க மாட்டான்..” என்று மாயா உறுதியாக சொல்ல,

    “எனக்கு என் தருவ பத்தி தெரியும் ஜிலேபி ஆனா..” என்று கீர்த்தி நிறுத்த மாயாவோ அவளை கேள்வியாக பார்த்தாள்.

     “நா அப்பாவோட சின்னவயசுல அவங்க வீட்டுக்கு போவேன்.. அப்போ தரு என்கூட விளையாடுவான்.. சொல்லப்போனா எங்களுக்கு ஒருத்தருக்கொருத்தர் பெயர் கூட தெரியாது.. ஆனா அவன் மேல அந்த வயசுலயே ஒருவித ஈர்ப்பு உருவாகிறுச்சி.. அப்றம் நா ஹோஸ்டலுக்கு போனதுக்கு அப்றம் கொஞ்ச வருஷமா அவன பார்க்க கூட முடியல.. அப்பப்போ நினைச்சிப்பேன்..   சில வருஷம் கழிச்சு மறுபடியும் ஒருதடவை அவங்க வீட்டுக்கு போனேன்.. அப்போ தரு கொலேஜ் ஃபர்ஸ் இயர்..

   நா தோட்டத்த சுத்தி பார்த்துகிட்டு இருக்கும் போது தடுமாறி விழுந்துட்டேன் என் தரு தான் தூக்கிவிட்டான்.. அப்போ தான் அவன் பெயர்கூட எனக்கு தெரிஞ்சிச்சு.. என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு..  ஆனா அதுக்கப்றம் அவன பார்க்க முடியாம ரொம்ப ஏங்கினேன்.. தருவ நினைச்சாலே உடம்பெல்லாம் ஒருமாதிரி புல்லரிக்கும்.. ஈர்ப்பு எப்போ காதலா மாறிச்சுன்னு தெரியல.. செகன்ட் இயர் படிக்க இந்த கொலேஜ்க்கு வந்தப்போ என் தருவ பார்க்க போறேன்னு ஆர்வமா இருந்தேன்..

ஆனா கொலேஜ்ல அவன பார்த்ததுக்கு அப்றம் இவன் தான் என் தருன்னு என்னால ஏத்துக்கவே முடியல.. அவன் ரோஷினின லவ் பன்னது கூட எனக்கு தெரியும் ஜிலேபி.. நா எவ்வளோ அழுதேன் தெரியுமா.. சஞ்சய் அண்ணா ரோஷினி கூட இருக்கும் போது இவன் கோபமா அவங்கள பார்த்துட்டு இருப்பான் ஆனா இவன ஏக்கமா நா பார்த்துட்டு இருப்பேன்..

ஆனா என்னால என் காதல தான் சொல்ல முடியல.. அவங்க வீட்டு ட்ரைவரோட பொண்ணு நான்.. என்னைப்போய் எப்படி..” என்று தழுதழுத்த குரலில் கீர்த்தி நிறுத்த,

     “சின்னவயசுலயிருந்து தருண லவ் பன்றியா வாவ்வ் போன்டா.. நீ போய் முதல்ல சொல்லு கண்டிப்பா ஏத்துப்பான்.. காதல்ல இந்த அந்தஸ்த்து பணம் எல்லாம் தேவையே இல்லைடி..” மாயா உற்சாகமாக சொல்ல,

     “அதெல்லாம் பேசுறதுக்கு நல்லா இருக்கும்.. பட் ரியலிட்டீல வாய்ப்பேயில்லை.. எங்க அப்பாவ அவங்க சம்மதின்னு சொல்றதை அவங்க அவமானமா தான் நினைப்பாங்க.. உனக்கு தெரியும்ல ஜிலேபி தருக்கு அம்மா இல்லை.. அவன் அம்மா பாசத்துக்கு எவ்வளவு ஏங்குவான்னு எனக்கு தெரியும்டி.. ஒரு அம்மாவோட பாசத்தை யாராலையும் பூர்த்தி செய்ய முடியாது ஆனா நமக்கு கிடைக்கலையேன்னு ஏங்காத அளவுக்கு பாசத்தை கொடுக்கலாம்.. நா கொடுக்க தயாரா இருக்கேன் போன்டா ஆனா என் காதல் கானல்நீர் தான்..” கீர்த்தி சொல்லிமுடிக்க அவளை கலங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மாயா.

மாயாவின் கலங்கிய விழிகளை பார்த்தவள் அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு,
     “அதைவிடு ஜிலேபி ப்ளான் எல்லாம் ஃப்ளோப்(flop) ஆகிறுச்சே.. இனிமே என்ன..” என்று கிண்டலாக கேட்க,

லேசாக புன்னகைத்த மாயா ஏதோ யோசிக்க, கீர்த்தியோ,
     “ஜிலேபி உனக்கு ரோக்கியண்ணா மேல கோபமே இல்லையா.. ஆரம்பத்துல உன்ன பொய்யா காதலிச்சாரு.. இப்போவும் உன் காதல புரிஞ்சிக்காம நடந்துக்குறாரு..  உனக்கு கஷ்டமா இல்லையா..” என்று கேட்க,

   “எனக்கு என்ன கஷ்டம் போன்டா எதிர்ப்பார்ப்புக்கள் பொய்யாகும் போதுதான் கஷ்டம் எல்லாம்.. எனக்கு என் ரூஹியோட காதல் தேவையில்ல என் லல்ல அவனுக்கு மொத்தமா கொடுக்கனும் அதை அவன் ஏத்துக்கிட்டாலே போதும்.. அவனுக்கும் சேர்த்து நானே காதலிப்பேன்டி..” என்று மாயா சொல்ல கீர்த்தி வியந்து தான் போனாள்.

     “என்னால உன்னை புரிஞ்சிக்கவே முடியல..” என்று கீர்த்தி சலிப்பாக சொல்ல,
      “என்னை புரிஞ்சிக்க ட்ரை பன்னாத போன்டா..” என்று சொன்ன மாயாவை பார்த்தவள் இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவாறு,
    “அடுத்து என்ன..” என்று கீர்த்தி கேட்க,

  “ஆப்ரேஷன் சீ(C)..” என்று சொன்ன மாயா தன் திட்டத்தை சொல்ல அதைக்கேட்ட கீர்த்தியோ ‘அடிப்பாவி..’ என்று வாயிலே கை வைக்க ‘ஹிஹிஹி..’ என்று அசடுவழிந்தாள் நம் நாயகி.

ரோஹன் வீட்டில்,

மொத்த குடும்பமும் ஹோலில் கூட பேசிக் கொண்டிருக்க அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த ரோஹன் அறைக்கு செல்ல போக சரியாக “கண்ணா..” என்ற தன் தந்தையின் அழைப்பில் நின்று கேள்வியாக திரும்பி பார்த்தான்..

     “மிஸ்டர். சரண் அவங்க மூத்த பையன் அமெரிக்கால இருந்து வந்ததும் நிச்சயதார்த்தத்த வச்சிக்கலாம்னு சொல்லியிருக்காரு.. கொலேஜ் முடிய போகுது  சோ, இனிமேலாச்சும் டான்ஸ் காம்படீஷன்னு அதெல்லாம் விட்டுட்டு முழுசா பிஸ்னஸ் அ பொறுப்பேத்துக்குறது பத்தி யோசி..” என்று மானவ் சொல்ல,

அவரை அழுத்தமாக பார்த்தவன்,
       “டாட் டான்ஸ் தான் எனக்கு எல்லாமே.. சொல்றது புரியும்னு நினைக்கிறேன் எல்லாமே…” என்று அழுத்தி சொன்னவன்,
     “அதை யாருக்காகவும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது இது தான் என் கனவே..”என்று ரோஹன் சொல்ல,

      “சில கனவுகள் கனவுகளா மட்டும் தான் இருக்கும் ரோஹன்.. இதெல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டு பொறுப்பா நடந்துக்க ட்ரை பன்னு..” என்று மானவ் கண்டிப்பாக சொல்ல, அவரை முறைத்தவன்,
      “ஐ அம் சாரி உங்களுக்காகவே இருந்தாலும் டான்ஸ் அ விட முடியாது..” என்று தன் அறைக்குள் நுழைய போக,

ரவீந்திரனோ,
      “ரோஹன் இந்த கல்யாணத்துல உனக்கு நிஜமாவே சம்மதம் தானா..” என்று கேட்க, சட்டென்று திரும்பியவன் அவரை கூர்மையாக பார்த்தவாறு பெருமூச்சுவிட்டு,
      “அதான் சம்மதம்னு முன்னாடியே சொல்லிட்டேனே.. நா கொடுத்த வாக்கை எப்போவுமே மீற மாட்டேன்..” என்றுவிட்டு தன் அறைக்குள் புகுந்தவனுக்கோ தன்னை நினைத்தே சந்தேகம் தான்.. அவன் மனதில் என்ன ஓடுகின்றது என்பது அவனுக்கே தெரியவில்லை.

அடுத்த இரண்டுநாட்கள் கழித்து,
மாலில்,

      “டேய்ய் இப்போ எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்த..” என்று ரோஹன் கடுப்பாக கேட்க,

   “எப்பப்பரு கால்ல சுடுதண்ணிய கொட்டின மாதிரி சிடுசிடுன்னு தான் இருப்பியா.. ரோஷினியோட பர்த்டே வருது அதான் கிஃப்ட் வாங்கலாமேன்னு..” என்ற சஞ்சய் ரோஹனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு,
    “டேய் ரோக்கி உனக்கு ஒன்னு நியாபகம் இருக்கா.. நாம கொலேஜ் சேர்ந்த ஆரம்பத்துல தான் இந்த மால்ல திறந்தாங்க.. அப்போ நா, நீ, பாபி மூனு பேருமே இங்க வந்தோம்.. அப்போன்னு பார்த்து வேற கொலேஜ் பசங்க கூட பிரச்சினையாகி அந்த பசங்க உன் மேல கை வச்சி உன்ன அடிச்சதுல பாபி அவங்கள போட்டு புரட்டி எடுத்து களவரமாகி.. அதெல்லாம் ஸ்வீட் மெமரீஸ்ல ஹிஹிஹி..” என்று சொல்லி சிரிக்க,

“எது நா அடி வாங்கினது உனக்கு ஸ்வீட் மெமரியா..” என்று சஞ்சயை உக்கிரமாக முறைத்தவாறு கேட்டு சுற்றி முற்றி யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்த ரோஹன் சஞ்சய்யின் விரலை பிடித்து,
     “ஏன்டா நீ கிறுக்குத்தனமா உளறி வச்சதுல அந்த டெவில் லூசுத்தனமா ஏதேதோ பன்னிகிட்டு இருக்காளேன்னு செம காண்டுல இருக்கேன் இதுல நீயும் அந்த சைக்கோவ பத்தி என்கிட்ட பேசுறியா..” என்று பல்லைகடித்துக்கொண்டு அவன் விரலை மடக்கி முறுக்க,

    “டேய்ய் டேய்ய் விடுடா வலிக்குதுடா பக்கி..” என்று சஞ்சய் அலறவும் அவனை விட்டவன் முன்னே நடக்க சரியாக
     “என்ன செல்லக்குட்டி இந்த பக்கம்..” என்ற மாயாவின் குரலில் சட்டென்று திரும்பி பார்த்தான்.

மாயாவோ ஐஸ்க்ரீமை சாப்பிட்டவாறு தன்னவனை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டி சிரிக்க சஞ்சய்யோ ‘ஹப்பாடா வந்துட்டா..’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டான்.

ரோஹனோ அவளை கண்டுக்காதது போல் முன்னே செல்ல அவளோ எப்போதும் போல் “ரூஹி.. ரூஹி பேபி..” என்று அவன் பின்னாலே வால் போல் ஓடினாள்.

ஒரு துணிக்கடைக்குள் ரோஹன் நுழைய சஞ்சய்யோ பெண்களின் ஆடைகள் இருக்கும் பகுதிக்கு செல்ல மாயாவோ வெகு தீவிரமாக அங்கு ஆண்களுக்கான பகுதியில் ஆடைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்றை எடுத்தவள் குடுகுடுவென ஓடிவந்து ரோஹனின் மேல் வைத்து பார்த்து,
     “ரூஹி உனக்கு இது ஓகேவா.. பிடிச்சிருக்கா..” என்று ஆர்வமாக கேட்க,

அவளை நக்கலாக பார்த்தவன்,
      “பிடிச்சிருக்குன்னு சொன்னா மேடம் என்ன பன்றதா உத்தேசம்..” என்று கேட்க,
      “வாங்குறதா உத்தேசம்.. ஏன் பேபி கேக்குற..” என்று மாயா புரியாமல் கேட்டாள்.

வாய்விட்டு சிரித்த ரோஹன்,
     “நீ போட்டிருக்க சாதாரண சுடியோட விலைல பத்து மடங்கு விலை அதிகம் இந்த ஷர்ட்.. உன் பாட்டுக்கு வாங்க போறேன்னு தூக்கிகிட்டு வந்துட்ட..” என்று கேலியாக சொல்ல மாயாவிற்கு முகமே வாடிவிட்டது.

அப்போது தான் இவர்கள் அருகில் வந்த சஞ்சய்யும் இதை கேட்டுவிட,
  “டேய்ய்..” என்று அதட்டியவன், “இப்படியா ரோக்கி பேசுவ..பாவம்டா அவ இடியட்..” என்று திட்ட மாயாவோ அங்கிருந்து நகர்ந்தே விட்டாள்.

ரோஹனோ அசால்ட்டாக ‘எனக்கென்ன..’ என்ற ரீதியில் தோளை குலுக்க அவனை முறைத்த சஞ்சய் “முதல்ல வந்து அவக்கிட்ட மன்னிப்பு கேளு..’ என்று ரோஹனை தரதரவென்று கையை பிடித்து இழுத்து செல்ல மாயாவோ மாலிலிருந்து வெளியேறியே இருந்தாள்.

வெளியே வந்தவள் ஆட்டோ பிடிக்க பாதை நோக்கி செல்ல திடீரென கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பியவள் பின்னால் பார்த்த காட்டிசியில் அதிர்ந்தே விட்டாள். அவளை வெட்ட ஒருவன் அறுவாளை ஓங்கியிருக்க சஞ்சய்யொ அவன் கையை பிடித்திருக்க மாயாவுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.

சற்று நேரத்திற்கு முன் ரோஹனை மன்னிப்பு கேட்க சொல்லி சஞ்சய் இழுத்து வர அவனோ சஞ்சய்யின் கையை உதறிவிட்டு,
     “மன்னிப்பெல்லாம் கேக்க முடியாது..” என்று வீராப்பாக நின்றிருக்க சன்ஞய்யோ கோபமாக “எக்கேடோ கெட்டு போ..” என்று திட்டுவிட்டு மாயாவை தேடி வந்தான்.

அப்போது தான் சரியாக பின்னால் கத்தியை மறைத்தவாறு ஒருவன் மாயாவை நோக்கி வருவதை கண்டவன் அடுத்தநொடி அங்கு விரைந்து அவன் ஓங்கவும் கையை பிடித்திருந்தான்.. ரோஹனோ இதைக்கண்டு ஓடிவர தான் பிடித்திருந்த கையை முறிக்கிய சன்ஜய் அவனை உதைத்து தள்ள அந்த அடியாளோ சுருண்டு விழுந்திருந்தான். அடுத்தகணம் இன்னும் சிலர் அவர்களை சுற்றி வளைக்க ஒவ்வொருவரின் பார்வையும் மாயாவின் மேல் இருப்பதை கவனித்த ரோஹன்,
     “அம்மு பக்கத்துல இரு சஞ்சய்.. இவனுங்கள நா பார்த்துக்குறேன்..” என்றவாறு தன் வலது கைக்காப்பை ஏற்றிவிட்டவன் அந்த ரௌடிகளை பந்தாட சஞ்சய்யோ மாயாவை யாரும் நெருங்காதவாறு பார்த்துக்கொண்டான்.

ஆனால் அதேநேரம் தன் மொத்த கோபத்தையும் சேர்த்து வைத்து ஒருவன் முகத்தில் ஓங்கி குத்திக்கொண்டிருந்த ரோஹன் தன் பின்னால் தன்னை கத்தியால் குத்த வந்தவனை கவனிக்கவில்லை. அந்த அடியாளோ நெருங்கி ரோஹனை நோக்கி கத்தியை குத்த வர இதை கண்ட மாயாவோ “ரூஹி..” என்று கத்தியவாறு அவனை நோக்கி ஓடி வர அந்த ரௌடியின் கைகளோ அந்தரத்தில் தொங்கியது.

மாயாவின் கத்தலில் திரும்பிய ரோஹன் அவள் பார்வை செல்லும் திசையை திரும்பி பார்த்ததில் தன் பின்னால் நின்றிருந்தவனை பார்த்து விழிவிரிக்க,  அங்கே ரோஹனின் எதிரே  கண்கள் சிவந்து நெற்றி நரம்புகள் புடைத்து ரோஹனை கொல்ல வந்தவனின் கையை,
       “என் ரோக்கி மேலயே கை வைக்கிறியாடா..” என்று கேட்டவாறு முறுக்கி அவன் உடைக்க, அந்த ரௌடியோ அலற, மாயாவின் இதழ்களோ  “தருண்..”  என்று புன்னகையுடன் விரிந்து கொண்டது.

அந்த ரௌடியின் கையை உடைத்தவன் அவனை உதைத்து தள்ள அடுத்தகணம் பாபியை பாய்ந்து ரோஹன் கட்டியணைக்க இப்போது அதிர்வது பாபியின் முறையானது.

பாபியின் இதழ்கள் அழகாக விரிய அதேநேரம் ரோஹனின் பின்னால் அடிக்க ஓடிக்கொண்டு வந்தவனை பார்த்தவன்,
     “என்றை அப்றம் கட்டிபிடிச்சி கொஞ்சுக்கலாம்.. இப்போ ப்ளீஸ்..” என்று சொல்ல சிரித்தவாறு அவனிடமிருந்து ரோஹன் விலக, அடிக்க ஓடி வந்த ரௌடியின் கையை தடுத்து பாபி பிடிக்க ரோஹனோ அவன் முகத்திலே ஓங்கி குத்தினான். 

மாயாவோ முகம் முழுக்க சந்ததோஷத்துடன் அவர்களை பார்த்திருக்க சஞ்சய்க்கு கூட அந்த களவரத்திலும் ரோஹனும் பாபியும் சேர்ந்தது உச்ச கட்ட சந்தோஷத்தில் போனது. ஆனால் அடுத்தநொடி பாபியை அடிக்க வந்த ஒருத்தனை கண்ட சஞ்சய் அதை தடுக்க நடுவில் போக அந்த அடி சஞ்சய் மேலே விழுந்துவிட்டது.

பாபிக்கும் ரோஹனுக்கும் கோபம் கட்டுங்கடங்காமல் வர சஞ்சய்யை அடித்தவனை இருவரும் வெளுத்து எடுக்க
அதேநேரம் அங்கிருந்தவர்கள் பொலிஸுக்கு தகவலை சொல்லியிருந்ததில் பொலிஸ் வண்டியும் வந்து நின்றது.  வந்த பொலிஸ் அதிகாரிகள் ரோஹனிடம் நடந்ததை விசாரித்து அந்த ரௌடிகளை பிடித்து கொண்டு செல்ல பாபியும் ரோஹனும் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டனர்.

      “சோரிடா பாபி.. நிஜமாவே உன்னை ரொம்ப மிஸ் பன்னேன்..” ரோஹன் வருத்தமாக சொல்ல,
      “நாதான்டா மன்னிப்பு கேக்கனும்.. என்ட் ஐ டூ மிஸ் யூ ரோக்கி..” என்றவாறு அவனை இறுக அணைத்துக்கொண்டான் பாபி.

சஞ்சய்யோ அவர்களை ஓரமாக இருந்து புன்னகையுடன் பார்த்திருக்க ரோஹனை அணைத்தவாறு சஞ்சய்புறம் திரும்பிய பாபி ஒற்றை கையை நீட்டி “வாடா இடியட்..” என்று அழைக்க ஓடி சென்று சஞ்சய்யும் இருவரையும் அணைத்துக்கொள்ள முவருக்கும் நெட்டி முறித்து “ச்சோ ஸ்வீட்..” என்று பார்த்துக் கொண்டிருந்தாள் மாயா.

சரியாக அவர்கள் முன் ஒரு வேன் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியவர்களை பார்த்த மாயாவோ அதிர்ந்து சஞ்சய்யை பார்க்க அவனுக்கும் அதே அதிர்ச்சி தான்.. எச்சிலை விழுங்கியவாறு சஞ்சய் மாயாவை மிரண்டு போய் பார்க்க மாயாவோ கண்களாலே சொன்ன மிரட்டல் செய்தியில் அந்த அடியாட்கள் தங்களை நெருங்கும் முன்னே ஓடி சென்று அவர்களை தடுத்த சஞ்சய்,
       “அண்ணே அண்ணே பிரச்சினை சரியாகிறுச்சிண்ணே.. நீங்க போயிறுங்கோ ப்ளீஸ்..” என்று கெஞ்ச,

அவர்களை ரோஹன் புரியாமல் பார்க்க அந்த அடியாட்களை அடையாளம் கண்டு கொண்ட பாபியோ,
      “நீங்க என்னடா இங்க..” என்று அதட்டலாக கேட்க,

    ” பாபி அண்ணா நீங்களா.. இங்க ஒரு முக்கியமான வேலை அதான் வந்தோம்.. அன்னைக்கு இந்த பையனும்..” என்று சஞ்சய்யை காட்டி,
     “ஒரு பொண்ணும் வந்திச்சு.. இந்த பையன அடிக்கிற மாதிரி நடிச்சு மிரட்டனும்னு..” என்று ரோஹனை காட்டி வந்தவர்களில் ஒருவன் சொல்ல,

இன்னொருவனோ,
      “ஆனா அந்த பொண்ணு..” என்றவாறு கண்களை சுழலவிட்டு தேட அங்கு பெக்கபெக்கவென விழித்துக்கொண்டு நின்றிருந்த மாயா சரியாக சிக்கினாள்.

அவளை பார்த்தவன்,
       “ஏம்மா பொண்ணு அன்னைக்கு கேட்ட காசுக்கு பேரம் பேசுறேன்னு எம்புட்டு நேரம் பேசி உசுர வாங்கின.. இப்போ என்னடான்னா ஒன்னுமே சொல்லாம பெக்கபெக்கன்னு முழிச்சிகிட்டு நிக்கிற…” என்றவன் பாபியிடம் திரும்பி,
      “சரியான லூசுப்பொண்ணுணா இது.. காசு கூட தரல.. ” என்று புலம்ப,

ரோஹனோ “மாயாஆஆஆ…”  என்று பல்லைகடித்துக் கொண்டு உக்கிரமாக அவளை முறைக்க, அதில் ஜெர்க்கானவள்,
      “பேபி.. அது.. அது வந்து.. நீயும் தருணும் சண்டையா.. அதான் உன்ன.. உன்ன அடிச்சா அவன் வருவான்னு.. அவன வர வச்சு.. உன்னை வர வச்சு.. பிரச்சினையாகி.. ப்ளான் சொதப்பி.. நானு மாட்டிகிட்டு.. திருதிருன்னு முழிச்சிகிட்டு.. ஹிஹிஹி…” என்று திக்கித்திணறி சொல்லி அசடுவழிய ரோஹனோ “பெருமாளே..” என்றவாறு நெற்றியை நீவிவிட்டுக்கொள்ள பாபியோ வாய்விட்டே சிரித்து விட்டான்.

     ” தங்கச்சிமா இது நாம ரெடி பன்ன ஆளுங்கன்னா அப்போ அவனுங்க யாரு.. அதுவும் அவனுங்க ஏன் உன்னை கொல்ல ட்ரை பன்னாங்க.. என்ட் இது மூனாவது தடவை..” என்று சஞ்சய் சொல்ல, ரோஹனோ ஆராய்ச்சியாக மாயாவை பார்க்க பாபியும் அவளை கேள்வியாக பார்த்தான்.

ஆனா நம் நாயகியோ அசால்ட்டாக உதட்டை பிதுக்கி தோளை குலுக்க இவர்கள் தான் ‘ஙே’ என்று பார்த்தனர்.

காதல்போதை?
—————————————————————–

   எனக்கு கருத்துக்கள் வழங்கி ஊக்குவிக்கும் என் நட்பூஸ்க்கு ரொம்ப நன்றி..?

-ZAKI?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!