காதல்போதை23?

காதல்போதை23?

காதல்போதை 23?

 

தன் பைக்கை நிறுத்துவிட்டு அந்த கடற்கரை மணலில் இறங்கியவன் கண்களை அங்குமிங்கும் சுழலவிட்டு தேட அவன் விழிச்சிறைக்குள் சரியாக சிக்கினாள் அவன் டெவில். வெள்ளை நிற சுடிதாரில் மணலில் அமர்ந்து கடலை வெறித்துக்கொண்டு மாயா இருக்க இங்கு ரோஹனுக்கோ மாயா அன்று சொன்ன ‘என் அம்மா ரொம்ப சோகமா இருக்கும் போது பீச்க்கு தான் வருவாங்களாம்.. இந்த அலைகள் என் அம்மா மனசுல இருக்க கவலையையும் அது போகும் போது எடுத்துட்டு போயிரும்னு அம்மா சொல்வாங்க..’ என்ற வசனம் தான் நினைவு வந்தது. எப்படியும் தன் தாத்தாவின் நினைவு நாளில் ஏற்பட்ட கவலையை போக்க மாயா இங்கு தான் வந்திருப்பாள் என்று யூகித்த தன்னை நினைத்து பெருமிதமாக கோலரை தூக்கி விட்டுக் கொண்டான் ரோஹன்.

அவளோ அலைகளையே பார்த்தவாறு இருக்க சட்டென தன் பக்கத்தில் அரவம் உணர்ந்து திரும்பி பார்த்தவளது விழிகளோ தன்னவனை கண்டதும் விரிந்து கொள்ள ஆனாலும் எதுவும் பேசாது மீண்டும் அலைகளை வெறிக்க தொடங்கினாள்.

    “ஒருவார்த்தை சொல்லிட்டு வந்தா என்ன.. என்னமோ நாதான் உன்ன கிட்னேப் பன்ன மாதிரி என்னை அந்த முறை முறைக்கிறான் உன் தருணு..” என்று ரோஹன் சொல்ல, அவளோ கால்களை கட்டிக்கொண்டு முட்டியில் தலையை சாய்த்து தன்னவனையே அமைதியாக பார்த்திருந்தாள்.

    “ஆமா உன் மனசுல இருக்க சோகத்தை போக்க தானே இங்க வந்த.. சோகம் போச்சா என்ன..” என்று ரோஹன் கேட்டதில் ஒரு பெருமூச்சுவிட்டவள்,
     “நோ.. இந்த வேவ்ஸ்ஸால கூட என் மனசுல இருக்க கஷ்டத்தை குறைக்க முடியல..” என்று மாயா சொல்ல,

     “யாஹ் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி.. உன் அம்மாவுக்கு இந்த வேவ்ஸ் அவங்க கஷ்டத்தை போக்குற மருந்தா இருந்திருக்கு.. எனக்கு எப்போவுமே டான்ஸ் தான்.. ரொம்ப கவலையா இருக்கும் போது டான்ஸ் பன்னுவேன்.. நமக்கு பிடிச்ச விஷயங்களை நாம பன்னும் போதே நம்ம மனசுல இருக்க பாரம் தானாவே நீங்கிறும்..” என்று ரோஹன் சொல்ல லேசாக புன்னகைத்தாள் மாயா.

    “அது என்னவோ உண்மை தான்.. இத்தனை மணி நேரமா அடங்காத என் மனப்போராட்டம் நீ என் பக்கத்துல வந்ததும் தானாவே அடங்கிறுச்சி.. என் காயத்துக்கான மருந்து நீதான்னு புரிஞ்சிக்கிட்டேன்.. ” என்று மாயா சொல்ல அவனோ எதுவும் பேசாது முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டான்.

     “நீ நிஜமாவே என்னை தேடி தான் இங்க வந்தியா ரூஹி..” என்று மாயா ஒருவித எதிர்ப்பார்ப்பில் கேட்க,

     “இல்லைன்னு சொன்னா நம்பவா போற.. என்ட் இன்னைக்கு உன் தாத்தாவோட நினைவு நாள்னு கீர்த்தி சொன்னா ஆனா நீ இப்படி தனியா வந்து சோகமா உட்கார்ந்துகிட்டு இருக்குறதை உன் தாத்தா ஆசைப்படுவாறா என்ன.. இழப்புக்கள் வாழ்க்கைல சகஜம் அதை நினைச்சி ஃபீல் பன்ன கூடாதுன்னு நா சொல்லல்ல.. உன் உணர்வுகள் உன்ன சுத்தி இருக்குறவங்கள பாதிக்க கூடாது அதைதான் சொல்ல வரேன்.. நீ காணோம்னு பாபியும் சஞ்சய்யும் பதறி போயிட்டாங்க உன் ஃப்ரென்டு அழுதுட்டா..” என்று ரோஹன் சற்று கண்டிப்பாக சொல்ல,

வலி நிறைந்த பார்வையுடன் அவனை ஏறிட்டவள் உரிமையாகவே தன்னவனை நெருங்கி அவன் மார்பில் சாய்ந்து அவனை அணைத்துக்கொள்ள ரோஹன் தான் அதிர்ந்து அவளை பார்த்தான்.

    “உனக்கு ஒன்னு தெரியுமா ரூஹி அம்மா அப்பா சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா தாத்தா பாட்டிங்கன்னு நிறைய சொந்தங்களோட என் வாழ்க்கை இல்ல.. அம்மா தாத்தாவோட பாசத்தை தவிர வேற எந்த பாசமும் எனக்கு எப்படி இருக்கும்னு கூட தெரியாது.. ஆனா எனக்கு அதெல்லாம் கிடைக்கலன்னு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வரை நா நினைச்சி கவலை பட்டது கூட கிடையாது.. ஏனா என் தாத்தா என் மேல வச்ச பாசம் அப்படி.. யூ க்னோ வட் அவருக்கு அவ்வளவு வேலை இருக்கும் ஆனாலும் எனக்காக நேரம் ஒதுக்கி என் கூட இருப்பாரு.. சில சமயம் ஃபுல்டேய் தாத்தா கூட தான்.. அவர் என்னை விட்டு போனதை என்னால ஏத்துக்கவே முடியல அந்த இழப்புல இருந்து வர்றதுக்குள்ள அதுக்குள்ள இன்னொரு இழப்பு..” என்று மாயா சொல்ல அவள் கடைசியாக சொன்ன வசனத்தில் புருவத்தை நெறித்து ரோஹன் அவளை நோக்க, அவளோ எதுவும் பேசாது கண்களை மூடி அவன் மார்பில் புதைந்துக் கொண்டாள்.

ரோஹனுக்கோ தலைமுடியை பிய்த்துக்கொள்வது போலிருக்க மாயாவிடமே,
      “நீ சொல்றது எனக்கு புரியல.. இன்னொரு இழப்புன்னா.. ” என்று புரியாமல் ரோஹன் கேட்க, அவனிடமிருந்து விலகி அவனை அழுத்தமாக பார்த்தவள் இருபக்கமும் ‘இல்லை’ என்ற ரீதியில் தலையாட்டி,
     “தேங்க்ஸ் ரூஹி..” என்று சொல்ல,

நெற்றியை விரலால் நீவிவிட்டவன்,
     “எதையும் புரியுற மாதிரி பேசவே மாட்டியா.. ரொம்பவே மிஸ்ட்ரியா இருக்க நீ..” என்று சொல்ல,

     “என்னை புரிஞ்சிக்க ட்ரை பன்னாத ரூஹி..” என்றவள் அடுத்து கேட்ட கேள்வியில் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது போல் அவளை மூக்குவிடைக்க முறைத்தான் ரோஹன்.

   “எனக்கு எப்போ ஓகே சொல்லுவ ரூஹி..” மாயா குறும்பாக கேட்க அவளை முறைத்தவன் எழுந்து நின்று கையில் தூசி தட்டியவாறு,
    “அடங்க மாட்டியா நீனு..” என்று கோபமாக கேட்க,

வாய்விட்டு சிரித்தவள் உதட்டை பிதுக்கி ‘இல்லை’ என்ற தோரணையில் தலையாட்ட இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவன் அவன் பாட்டுக்கு முன்னே நடக்க “வெயிட் பேபி..” என்று அவன் பின்னாலே ஓடினாள் மாயா.

சரியாக அவர்கள் முன் வந்து மாயாவை முறைத்தவாறு பாபி நிற்க,
    “தருணு நீ இங்க என்னடா பன்ற..” என்று மாயா அசால்ட்டாக கேட்க,
    “ஆங் பல்லாங்குழி விளையாட வந்தேன்..” என்று கடுப்பாக சொல்லியவாறு “சொல்லிட்டு போனா அம்மணியோட ப்ரெஸ்டிஜ்(prestige) குறைஞ்சிறுமோ..” என்று முறைப்பாக பாபி கேட்க,

    “சோரி.. என்ட் ஐ ப்ரோமிஸ் இனிமே உங்ககிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டேன்..” என்று இருகாது மடல்களையும் பிடித்து மாயா மன்னிப்பு கேட்ட விதத்தில் பாபியின் கோபம் கொஞ்சம் மட்டுப்பட தான் செய்தது. ஆனால் இன்னும் சிலநாளிலே அவள் செய்த சத்தியத்தையும் மீறி அவர்களை விட்டு அவள் விலக போவதை அவர்கள் அறியாமல் போய்விட்டார்கள்.

ரோஹன் தன் பைக்கில் ஏறிக்கொண்டு மாயாவை பார்க்க பாபியும் தன் ஜீப் கதவை திறந்துவிட்டு மாயாவை நோக்க இருவரையும் மாறி மாறி பார்த்தவள் எதிரே வந்த ஒரு ஆட்டோவை பிடித்து இருவருக்கும் பழிப்பு காட்டிவிட்டு ஏறிச்செல்ல பாபியோ ‘உடம்பு பூரா கொழுப்பு ஏறிப்போய் கிடக்குது..’ என்று முணுமுணுத்தான் என்றால் ‘எனக்கென்ன..’ என்ற ரீதியில் தோளை குலுக்கிக்கொண்டான் ரோஹன்.

அடுத்தநாள்,
      கல்லூரியில்,

     “யாரக்கேட்டு டா நீ இப்படி பன்னிகிட்டு இருக்க சைக்கோ பாபி..” என்று மாயா கத்த,

     “யாரக் கேக்கனும் எனக்கு பிடிச்சிருக்கு ஓகே சொல்லிட்டேன்.. பேபி ப்ளீஸ் நீயும் பேசிப்பாரு உனக்கு கூட பிடிக்கும்..” என்று பாபி ஆர்வமாக சொல்ல ரோஹனும் சஞ்சய்யும் இவர்களின் சம்பாஷனைகளை கண்டுக்காதது போல் ஃபோனில் முகத்தை புதைத்திருந்தனர்.

   “யூ.. யூ.. உன்னையெல்லாம்..” என்று பாபியின் கழுத்தை நெறிப்பது போல் வந்தவள் தனக்குத்தானே ‘கூல் டவுன் மாயா.. கூல் டவுன்..’ என்று சொன்னவாறு,
    “ஆமா அப்படி அவக்கிட்ட என்ன இருக்குன்னு உனக்கு அவள பிடிச்சிருக்கு..” என்று கோபமாக கேட்க,

    “அவக்கிட்ட என்னதான் இல்ல.. எனக்கு நிஜமாவே அவ எப்படி இருப்பான்னு தெரியல ஆனா அவளுக்கு என்மேல ரொம்ப பாசம்.. என்னை என் அம்மா போல பார்த்துக்குறா.. என்ட் பக்கத்துல இருந்து காட்டுற பாசம் மட்டும் தான் பாசமா என்ன முகம் பார்க்கலன்னாலும் எனக்கு அவ என்மேல வச்சிருக்க காதல் தெரியுது..” என்று பாபி தன்னவளை நினைத்து காதல் பொங்க சொல்ல மாயாவுக்கு தான் அய்யோ என்றிருந்தது.

     “டேய்ய் தருணு சோஷியல் மீடியா ரிலேஷன்ஷிப்ப நம்ப முடியாதுடா.. ஃபேக் லவ் அதிகமா இருக்கும்.. இன்ஃபேக்ட் உன் கூட பேசுறது ஒரு பையனா கூட இருக்கலாம்..” என்று மாயா புரிய வைக்க,

    “நோ பேபி எனக்கு நம்பிக்கை இருக்கு.. அவ நிஜம் தான் என்னை ஏமாத்தல்ல.. என்ட் ஷீ இஸ் மை ஏன்ஜல்..” என்று அவன்பாட்டுக்கு பேச ‘ச்சே’ என்று சலித்தவாறு மாயா திரும்ப கீர்த்தியோ கண்கலங்க பாபியை பார்த்துக்கொண்டிருந்தாள்.

கீர்த்தியை பார்த்ததும் மாயாவின் கோபம் ஏகத்துக்குக் எகிற பாபியின் புறம் திரும்பியவள்,
     “ஆமாடா உன் பக்கத்துலயே இருந்துகிட்டு உன்ன ஒருத்தி உருகி உருகி லவ் பன்றா அவள எல்லாம் கண்டுக்காத.. ஏதோ முகம் பார்க்காத குரல் கேக்காத கொஞ்சம் அன்பா எவளோ ஒருத்தி பேச அதை லவ்வுன்னு சொல்லிகிட்டு திரி..” என்று மாயா பல்லைகடிக்க பாபியோ புருவத்தை நெறித்து “புரியல..” என்று சொல்ல, ரோஹனும் சஞ்சய்யும் கூட இப்போது அவர்களை கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தனர்.

கீர்த்தியை நக்கலாக பார்த்த மாயா,
        “பார்த்தியா போன்டா சின்னவயசுல இருந்து இவனையே தரு தருன்னு நினைச்சிகிட்டு உருகிகிட்டு இருக்க.. இவன்கிட்ட காதல சொல்லாம கனவுலேயே இவன்கூட வாழ்ந்துட்டு இருக்க.. ஆனா சாருக்கு எதுவுமே புரியல.. தினமும் நீ அவன ஏக்கமா பார்க்குற பார்வை கூட அவனுக்கு தெரியல.. காலக்கொடுமை..  யூ டோன்ட் வொர்ரி போன்டா இவன விட சூப்பரா ஸ்மார்ட்டான பையனா பார்த்து நா உனக்கு கரெக்ட் பன்னி கொடுக்குறேன்.. இவன் எல்லாம் உனக்கு செட்டே ஆக மாட்டான்..” என்று படபடவென்று பேசிவிட்டு முன்னே சென்ற மாயாவின் இதழ்களோ புன்னகையில் விரிந்து கொள்ள,

கீர்த்தியோ ‘போட்டு கொடுத்துட்டியே பரட்ட..’ என்ற லுக்குடன் மாயாவை பார்க்க, சஞ்சய்யோ ரோஹன் காதில் “சேம் டயலாக்.. தங்கச்சிமா இதையே பொழப்பா வச்சி சுத்திகிட்டு இருக்கா போல டா.. அதுவும் அவ வாழ்க்கைலயே யாராச்சும் மாமா வேலை பார்க்க வேண்டி நிலைமை.. இதுல இவ எங்களுக்கு கரெக்ட் பன்னி கொடுக்க போறாளாம் அய்யோ அய்யோ..” என்று கிசுகிசுக்க ரோஹனுக்கு கூட சிரிப்பு தான் வந்தது.

கீர்த்தியோ மாயா மொத்தமாக போட்டு உடைத்தததில் திருதிருவென விழித்தவாறு தயக்கமாக பாபிபை பார்க்க அவளை முறைத்து பார்த்தவன் எதுவும் பேசாது விறுவிறுவென கீர்த்தியை கடந்து செல்ல கீர்த்திக்கு தான் ஆயாசமாக போய்விட்டது.

இப்படியே நாட்கள் நகர,
    
   மாயாவுக்கோ பல அழைப்புக்களும் குறுஞ்செய்திகளும் தொடர்ந்து வர அவளும் எதற்கும் பதலளிக்காது வரும் அழைப்புக்களை துண்டிப்பதிலும் கண்டும் காணாததும் போலிருக்க கீர்த்திக்கு கூட மாயாவின் நடவடிக்க வித்தியாசமாக தான் தோன்றியது.. அதுவும் ஒருவித யோசனையிலும் பதட்டத்திலும் மாயா இருப்பதை பார்த்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அன்றும் ஹோஸ்ட்டல் எண்ணிற்கே மாயாவுக்கு அழைப்பு வர ரிசீவரை காதில் வைத்தவள் மறுமுனையில் கேட்ட குரலில் அடுத்தநொடி அந்த அழைப்பை துண்டித்து,
     “என்னை கேட்டு யாராச்சும் கோல் பன்னாங்கன்னா நா இல்லைன்னு சொல்லிறுங்க.. கொட் இட்..” என்று கோபமாக உரைத்துவிட்டு செல்ல பக்கத்திலிருந்த கீர்த்தி தான் அதிர்ந்து போனாள்.

இதில் சிலசமயம் மாயா தொலைப்பேசியை அணைத்தே வைக்க ஒரு கட்டத்தில் கீர்த்தியே,
     “என்னாச்சு ஜிலேபி.. ஏதாச்சும் பிரச்சினையா..” என்று கேட்டே விட்டாள். அவளோ எப்போதும் போல் எதுவும் சொல்லாது அழுத்தமாக இருக்க.. கீர்த்தி தான் அவளிடமிருந்து பதிலை பெற முடியாது தவித்து போனாள்.

அன்று,

    “ஹேய் ஜிலேபி இங்க பாருடி நியூஸ்ஸ.. ரொம்ப ஷாக்கிங் ஆ இருக்கு..” என்று கீர்த்தி லேப்டாப்பில் எதையோ பார்த்து அதிர்ச்சியில் சொல்ல, மாயாவும் என்ன ஏதோவென்று வந்து பார்க்க அவள் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்துக்கொண்டது.

      “இட்டாலில ரொம்ப பெரிய அதிகாரத்துல இருக்குறவங்க மர்மமான முறையில இறந்து போறாங்க.. அதுவும் ஏன் இறந்தாங்க எப்படி இறந்தாங்கன்னு எதுவுமே தெரிஞ்சிக்க முடியல.. ரொம்ப ஆச்சரியமா இருக்குல்ல..” என்று கீர்த்தி சொல்ல,

யோசனையில் புருவத்தை சுருக்கியவள்,
     “அது எப்படி.. ஒருவேள..” என்று மாயா இழுக்க,

    “ஐ கொட் இட்.. நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு தெரியும்.. இந்த செய்தியை பாரு..” என்று கீர்த்தி இன்னொரு செய்தியை அவளிடம் காட்ட மாயாவோ அதை பார்த்து,
     “வட் ரப்பிஷ்..” என்று பல்லைகடித்தாள்.

    “எனக்கும் இது எப்படி சாத்தியம்னு தோணல்ல.. நிறைய பேரு அக்வா டொஃபேனாவா இருக்குமோன்னு சந்தேகப்படுறாங்க.. பிகாஸ் இறந்தவங்க எல்லாருமே அவங்களோட லாஸ்ட் நாலு நாள் ரொம்ப சிவியரான ஃபீவர்ல இருந்திருக்காங்க.. எப்படின்னா..” என்று கீர்த்தி சொல்ல வர,

அதை குறுக்கிட்ட மாயா,
     “முதல்நாள் இருமல்ல ஆரம்பிச்சி அடுத்த நாள் ஃபீவர் மயக்கம்னு அடுத்த நாலாவது நாள்ளே இறந்துருவாங்க.. ரைட்..” என்று மாயா அழுத்தமாக சொன்னவாறு எதையோ தீவிரமாக யோசிக்க,

     “கரெக்ட் ஜிலேபி அதேதான்.. இப்போ இறந்திருக்குறவங்க எல்லாருமே சொஸ்ஸைட்டில பெரிய புள்ளிங்க.. எல்லாரும் இறக்கும் போதும் ஒரே சிம்ப்டம்ஸ்(Symptoms) தான்.. ” என்று கீர்த்தி சொல்ல,

     “என்ட் இன்னொரு மேட்டர் தெரியுமா  இதுல ஐரா கம்பனீஸ்க்கும் சம்மதம் இருக்கும்னு ஒரு வதந்தி வேற இருக்கு..” என்று கீர்த்தி சொல்லியதில் “புரியல..” என்று விழித்தாள் மாயா.

    “அக்வா டொஃபேனாவோட சீக்ரெட்க்கும் ஐரா கோஸ்மெடிக்ஸ்ஸோட சீக்ரெட்டும் ஏதோ சம்மதம் இருக்கும்னு ரொம்ப காலமா நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கு.. அப்படி இருக்கப்போ இப்படி ஒன்னு நடக்கும் போது அந்த கம்பனி மேல சந்தேகம் வர்றது சகஜம் தானே..” என்று சொன்ன கீர்த்தி,
    “யூ க்னோ வட் ஜிலேபி அக்வா டொஃபேனா பொய்ஸன் டேஸ்ட்லெஸ் என்ட் கலர்லெஸ்.. ஒருத்தரோட உடம்புக்குள்ள போனாலும் போஸ்மாட்டம் ரிபோர்ட்ல அது இருக்குறதுக்கான தடையமே இருக்காதாம்..நிஜமாவே இது இட்டாலி பொலிஸ் டிபார்ட்மென்ட்க்கு கம்ப்ளீகேடட் ஆன கேஸ் தான்.. என்ட் எப்போ ரிசேர்ச்சர் மெட்ரிசன் அ கொன்னு அந்த சீக்ரெட் அ திருடினாங்களோ அப்போ ஆரம்பிச்சது இந்த கொலை.. எல்லா மிஸ்ட்ரியான விஷயத்துலையும் ஏதாவது ஒரு ஆபத்து இருக்குல்ல..” என்று சொன்னவாறு கீர்த்தி நகர,

  “ம்ம்..” என்று மட்டும் சொன்ன மாயாவின் மூளையில் ஒரு போராட்டமே நடந்தது. ‘என்ன நடக்குது இங்க..’ என்று அவள் மூளை கேள்வி கேட்க அவளிடம் தான் பதிலே இல்லை..
   
ஒருகட்டத்தில் மாயாவுக்கோ தனக்கு மன அழுத்தமே வந்துவிடுமோ என்று நினைக்குமளவிற்கு அவள் மனதின் போராட்டங்கள் அதிகரிக்க தன்னவனின் அருகாமையே தன் காயத்துக்கான மருந்து என உணர்ந்தவள் ரோஹனையே நாடினாள்.

அன்று,

கல்லூரி பார்க்கிங் ஏரியாவில் ரோஹன் வண்டியை நிறுத்த “ரூஹி..” என்ற மாயாவின் குரலில் ‘ஆண்டவா கொலேஜ்ல காலடி வைக்குறதுக்குள்ளயேவா..’ என்று வாய்விட்டே முணங்கினான் அவன்.

பைக்கை நிறுத்துவிட்டு அவளை நெருங்கியவன்,
       “லுக் அன்னைக்கு என் ஃப்ரென்ட்ஸ் ரொம்ப டென்ஷன்ல இருந்தாங்க.. அதுவும் உன்னால.. அதான் உன்னை தேடி வந்தேன்.. சோ, அதை வச்சி என்கிட்ட அட்வான்ட்டேஜ் எடுத்துக்க நினைக்காத..” என்றவன் அவன்பாட்டுக்கு முன்னே செல்ல,

“ரூஹி ப்ளீஸ்..” என்று அவன் பின்னே சென்ற மாயா,
      “இன்னைக்கு கொலேஜ் பன்க் பன்னிட்டு நாம இரண்டும் எங்கேயாச்சும் வெளில போகலாமா..” என்று கேட்க,

சட்டென அவள்புறம் திரும்பியவன்,
     “வட் த ஹெல் யு திங் யூ ஆர்.. நீ என்ன அன்னைக்கு ஒருதடவை உனக்கு நா ப்ரோபோஸ் பன்னதுல இருந்து கோமாவுக்கு போயிட்டியா..  இப்போ தான் நினைவு திரும்பின மாதிரி பேசிகிட்டு இருக்க..” என்று ரோஹன் முறைத்தவாறு கேட்க,

      “ப்ளீஸ் ரூஹி இன்னைக்கு மட்டும் தான்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா.. நீதான் அன்னைக்கு சொன்னல்ல நாம சோகமா இருக்கும் போது பிடிச்ச விஷயங்களை செஞ்சா நம்ம சோகம் போயிரும்னு.. ப்ளீஸ் செல்லகுட்டி இதுக்கப்றம் நா இப்படி கேக்க மாட்டேன்.. இன்னைக்கு மட்டும் உன்கூடவே இருக்கேனே.. ப்ளீஸ்..” மாயா கெஞ்சுதலாக கேட்க,

     “உன்கிட்ட பேசி புரிய வைக்க முடியாது.. ச்சே..” என்றவாறு ரோஹன் அவளை தள்ளிவிட்டு செல்ல அப்போதும் அவன் முன்னே சென்று அவனை வழிமறைத்து நின்றவள்,
     “ப்ளீஸ் ரூஹி.. ப்ளீஸ்..” என்று தழுதழுத்த குரலில் மாயா கேட்டதில் ரோஹன் தான் அதிர்ந்தான்.

ஏனோ மாயாவின் இந்த செய்கை அவனுக்கே வித்தியாசமாக தோன்றியது. இதுவரை தான் எத்தனை முறை திட்டினாலும் மெல்லிய சிரிப்போடு கடந்து சென்றவள் தான் பொய்யாக காதலிப்பதாக தெரிந்த போது கூட கலங்காதவள் இன்று ஏன் இப்படி நடந்துக்கொள்கிறாள் என்று அவனுக்கே புரியவில்லை.

காதல்போதை?
—————————————————————

-ZAKI?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!