காதல்போதை25?

காதல்போதை25?

   “ரூஹி..” என்ற மாயாவின் குரலில் சட்டென கண் திறந்தவன் அவளை ஏறெடுத்தும் பார்க்காது,
     “மாயா இங்கிருந்து போ..” என்று இறுகிய குரலில் சொல்ல அந்த குரலே மாயாவிற்கு வித்தியாசமாக  தோன்றியது.

ஆனாலும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் மறுபடியும் சந்தர்ப்பம் கிடைக்காதோ என பயந்தவள் உள்ளுக்குள் பதறினாலும் அதை வெளிக்காட்டாது,
     “ரூஹி நா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.. நா..” என்று அவள் சொல்லும் போதே,

     “உன்ன இங்கிருந்து போக சொன்னேன் மாயா..” பல்லைகடித்துக் கொண்டு ரோஹன் சொல்ல மாயாவோ விடுவதாக இல்லை.

    ” இல்ல ரூஹி நா பேசியே ஆகனும்.. நீ கேட்டு தான் ஆகனும்.. நா சொல்றதை கொஞ்சம் கேளு.. நா வந்து..” என்று அவள் சொல்லிமுடிக்கவில்லை “ஏய்..” என்ற கர்ஜனையுடன் எழுந்து நின்றவன் அடுத்தநொடி அவளை அறைந்தே இருந்தான்.

கலங்கிய கண்களுடன் கன்னத்தை பொத்தியவாறு மாயா அதிர்ச்சியாக ரோஹனை நோக்க அவள் இதழ்களோ “ரூஹி..” என்று முணுமுணுத்தது.

    “வில் யூ ஷட் அப்.. நானும் பார்த்துகிட்டே இருக்கேன் ஓவரா தான் போற.. அதான் சொல்றேன்ல வேணாம்னு.. அட ஆமால்ல இத்தனைநாள் என் கூடவே இருந்து என்னை டோர்ச்சர் பன்றவ போன்னு சொன்னா போயிருவியா.. ஜஸ்ட் பணத்துக்கும் இதோ என் முகத்துக்கும் என் பின்னாடி அலையிறவ தானே நீ.. இது இல்லைன்னா என்னை கண்டுக்க கூட மாட்ட..

    சத்தியமா சொல்றேன்டி எனக்கு உன்மேல சின்னதா கூட ஃபீலிங்க்ஸ் கிடையாது.. ச்சே எல்லாமே என் தப்பு தான்.. நீ என் வாழ்க்கைகுள்ள வர நானே காரணமாயிட்டேன்.. ஒருத்தருக்கு பிடிக்கலையா அப்போவே அவங்களை விட்டு விலகி போயிறனும் அதுக்கு பேரு தான் சுயமரியாதை.. ஆனா நீ ச்சே.. இப்படியெல்லாம் பன்னா நா காதலிப்பேன்னு எப்படி நீ நினைக்கலாம்.. வெறுப்பா இருக்கு.. இட்ஸ் இர்ரிடேட்டிங்..

எனக்கு இன்னொருத்தி கூட கல்யாணம் ஆக போகுது.. இன்னொருத்திக்கு சொந்தமானவன் மேல ஆசைப்படுறது ரொம்ப கேவலமான விஷயம்.. ஒன்னு மட்டும் சொல்றேன் கேட்டுக்க ரூஹி ரூஹின்னு உருகிகிட்டு இருக்கியே உன் ரூஹிய உண்மையா காதலிக்கிறேன்னா தயவு செஞ்சி என் முன்னாடி வராத இங்கிருந்து போயிறு..” என்று ரோஹன் மேலும் பேச வர,

கன்னங்களில் கண்ணீர் ஓட கைநீட்டி தடுத்தவள் கீழ் உதட்டை  கடித்து அழுகையை கட்டுப்படுத்தி அவனை நேருக்கு நேராக பார்த்து வேதனை நிறைந்த விழிகளுடன்,
      “ஐ அம் சோரி..” என்று மட்டும் கூறிவிட்டு சென்ற மாயாவும் சரி போகும் அவளையே வெறித்தவாறு நின்றிருந்த ரோஹனும் சரி அறியவில்லை இதுவே இவர்களின் கடைசி சந்திப்பு என்று..

தனது வகுப்புக்கு வந்தவள் கீர்த்தியிடம்,
      “ஹோஸ்ட்டலுக்கு போகலாமா கீர்த்தி.. என்னால இங்க இருக்க முடியல.. ஒரு மாதிரி மூச்சு முட்டுது..” என்று தழுதழுத்த குரலில் சொல்ல,

அவள் சிவந்த விழிகளும் தழுதழுத்த குரலுமே கீர்த்தியை பதற வைக்க அதுவும் இத்தனை நாட்கள் இல்லாத தன்னை நோக்கிய அவள் அழைப்பு வேறு கீர்த்தியை குழப்ப,
      “என்னாச்சுடி ஜிலேபி.. அண்ணாவ பார்க்க தானே போன.. ஏதாச்சும் பிரச்சினையா..” என்று பதட்டமாக கேட்டாள்.

    “எனக்கு ஹோஸ்ட்டலுக்கு போகனும் என்கூட வர முடியுமா முடியாதா..” மாயா அழுத்தமாக கேட்க, கீர்த்திக்கு தலை தானாகவே சரி என்று ஆடியது.

ஹோஸ்ட்டலுக்குள் நுழைந்த உடனே,
     “நீ ரூம்க்கு போ நா வார்டன பார்த்துட்டு வரேன்..” என்ற மாயா மல்லிகாவின் அறையை நோக்கி செல்ல ‘என்னாச்சு இவளுக்கு..’ என்று யோசித்தவாறு அவள் வரும் வரை அதே இடத்தில் நின்றிருந்தாள் கீர்த்தி.

உள்ளே சென்ற அடுத்த பத்து நிமிடத்தில் வெளியே வந்த மாயா கீர்த்தியை கூட கண்டுக்காது ஏதோ யோசனையில் அறையை நோக்கி செல்ல, “ஜிலேபி.. ஜிலேபி..” என்று கத்தியவாறு அவள் பின்னால் ஓடிய கீர்த்தி அவளை உலுக்கவுமே சுயவுணர்வுக்கு வந்தாள்.

    “நா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன் போன்டா.. ஐ அம் கன்ஃப்யூஸ்ட்..” என்றவள் உடையை கூட மாற்றாது அப்படியே கட்டிலில் விழுந்து ஒருக்களித்து படுத்துவிட கீர்த்திக்கோ ஒன்றுமே புரியவில்லை.

சில மணிநேரம் கழித்து விழித்த மாயா அணைத்து வைத்திருந்த தன் தொலைப்பேசியை உயிர்ப்பிக்க எப்போதும் போல் ஏகப்பட்ட தவறவிடப்பட்ட அழைப்புக்கள் இருக்க அந்த எண்ணிற்கு அழைத்தாள்.

மறுமுனையில் அழைப்பை ஏற்றதும்,
     “நவ் ஐ அம் ரெடி.. வித் இன் டூ டேய்ஸ்ல நா அங்க இருப்பேன்..” என்றவள் அழைப்பை துண்டித்த அடுத்தநொடி ஃபோனையும் அணைத்திருந்தாள்.

அன்றைய நாள் முழுக்க ஏதோ கட்டாயத்திற்கு கீர்த்திக்கு சந்தேகக் ஏற்பட கூடாதென சாப்பிட்டவள் இரவு பத்து மணி போல்,

கீர்த்தி மாயா பற்றிய சிந்தனையில் துக்கம் வராது கன்னத்தில் கை வைத்தவாறு அமர்ந்திருக்க அவளின் புரியாத நடவடிக்கைகள் நினைத்து தலைவலியே வந்துவிட்டது அவளுக்கு.
நெற்றியை நீவி விட்டவாறு கீர்த்தி இருக்க அதை கவனித்த மாயா,
     “போன்டா தலைவலிக்குதா டேப்லெட் சாப்பிடுறியா..” என்று கேட்க,

     “வேணாம் ஜிலேபி டேப்லெட் பிடிக்காது.. தூங்கி எழுந்தா சரியாகிறும்..” என்றவளை கண்டுக்காதது போல் அறையிலிருந்து வெளியேறிய மாயா வரும் போது கையில் பால் க்ளாசுடன் வர அவளை கேள்வியாக பார்த்தாள் கீர்த்தி.

   “சின்னவயசுல நா மருந்து சாப்பிட அடம்பிடிச்சா அம்மா இப்படி பால்ல மிக்ஸ் பன்னி கொடுத்துறுவாங்க.. கசப்பு தெரியாதுல அதான்.. இதை குடிச்சிட்டு தூங்கு சரியாகிறும்..” என்ற மாயாவை கண்கலங்க பார்த்த கீர்த்தி,
    “எப்போவும் என்கூடவே இருப்பல்ல ஜிலேபி..” என்று கேட்க, ஒருநொடி என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தவள் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் தலையசைத்து அவளிடம் க்ளாசை நீட்ட,

புன்னகையுடன் அதை குடித்து முடித்தவள்,
     “ஆமா ஜிலேபி கசப்பு தெரியல ஆனா மில்க் டேஸ்ட் வேற மாதிரி இருக்கு.. பட் தட்ஸ் ஓகே..” என்று சொல்ல,

    “என் மடியில படுத்துக்கோ போன்டா..” என்ற மாயாவை விசித்திரமாக பார்த்தவள்,
     “எப்போவும் நீதானே என் மடியில படுத்துக்குவ இன்னைக்கு என்ன புதுசா..” என்று புரியாமல் கேட்டாள்.

    “எப்போ பாரு சந்தேகம் தானா.. பாவம் தருணு..” என்றவாறு கீர்த்தியை இழுத்து வலுக்கட்டாயமாக தன் மடியில் படுக்க வைத்தவள் அவள் தலைமுடியை கோதியவாறு,
     “போன்டா நீ உன் தருவ ரொம்ப மிஸ் பன்றியா.. அவன் கூட இருக்கனும் அவன் தோள்ல சாஞ்சிக்கனும்னு ஏங்கியிருக்கியா..” என்று மாயா கேட்க,

    “இல்லையா பின்ன.. ரொம்ப ஏங்கியிருக்கேன்.. உனக்கு ஒன்னு தெரியுமா ஜிலேபி என் மனசுல அவன் மேல காதல் இருக்குன்னு நா உணர்ந்த சந்தர்ப்பம் அவன் என்னை தொட்டு தூக்கினது தான்.. அவனோட ஸ்பரிசத்தை நா இன்னும் ஃபீல் பன்றேன்.. ஆனா என்ன.. நா பாட்டுக்கு சிவனேன்னு தூரத்திலிந்து அவன சைட் அடிச்சிகிட்டு இருந்தேன்.. நானு ஒருத்தி இருக்குறதே அவன் கண்ணுக்கு தெரியல.. பட் இப்போ என்னை பார்த்தாலே முறைச்சிக்கிட்டு போறான் என் தரு.. எல்லாம் உன்னால தான்..” என்று கீர்த்தி மாயாவை திட்ட,

வாய்விட்டு சிரித்தவள்,
      “எத்தனை நாளைக்கு இப்படியே தூரத்திலிருந்து பார்த்துகிட்டு இருக்க போற.. இந்த கேள்விய நா கேக்கல நீதான் என் ரூஹி விஷயத்துல என்கிட்ட கேட்ட.. நியாபகம் இருக்குல்ல..” என்றவளுக்கு தன்னவன் பெயரை சொல்லும் போதே கண்கலங்கி விட்டது.

     “அது என்னவோ உண்மை தான் போன்டா.. காதல சொல்ற தைரியம் இங்க யாருக்குமே இல்லை.. நம்மள ஏத்துக்காம போயிறுவாங்களோன்னு பயமே நம்மள தடுக்கும்..” என்றவள் மாயாவின் முக மாற்றத்தை   கவனிக்காது ஏதேதோ பேசியவாறு தூங்கிவிட,

அவள் தூங்கியதும் அவள் முகத்தை பார்த்த மாயா கண்களை அழுந்த மூடி திறந்து தன்னை நிலைப்படுத்தி கீர்த்தியை கட்டிலில் படுக்க வைத்து போர்த்தி விட்டவள்,
     “ஐ அம் சோரி போன்டா எனக்கு வேற வழி தெரியல.. உனக்கு தெரிஞ்சா என்னை போக விடமாட்ட.. அதான் உனக்கு ஸ்லீபிங் டேப்லெட்ஸ் கொடுக்க வேண்டியதா போச்சு.. என்னை மன்னிச்சிறுடி..” என்று கலங்கிய கண்களுடன் சொன்னவள் அதற்கு மேல் தாமதிக்காது தேவையான உடைகளையும் பொருட்களையும் எடுத்து வைத்து செல்வதற்காக தயாரானாள்.

தன்னவனை விட்டுச் செல்ல போகிறோம் என்ற நினைப்பே அவளை ரணமாய் கொல்ல முயன்றவர வேகமாக தயாராகியவள் லக்கேஜ்ஜை எடுத்துக்கொண்டு அறை வாசல் வரை சென்று திரும்பி கீர்த்தியை பார்க்க அவளுக்கோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

அடுத்தகணம் அவள் அருகில் சென்றவள் ஒரு பேப்பரில் ஒன்றை எழுதி அவள் பக்கத்தில் வைத்துவிட்டு,
     “உன்னை நா ஏமாத்திட்டேன் போன்டா.. என்னை மன்னிச்சிறுடி.. உன்கூடவே இருப்பேன்னு ப்ரோமிஸ் பன்னேன்.. ஆனா என்னால அதை காப்பாத்த கூட முடியல.. இப்போ நா போறேன்.. பட் கூடிய சீக்கிரமே உன் ஜிலேபியா உன் முன்னாடி வருவேன். அதுவரைக்கும் என்னை மறந்துடாத.. எப்போவுமே நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் போன்டா..” என்று அழுதவாறு சொன்னவள் அவள் நெற்றியில் முத்தமிட்டு திரும்பி கூட பார்க்காது அறையை விட்டு வெளியேறினாள்.

     “இந்த ராத்திரியில இப்படி யாருக்குமே சொல்லாம நீ போயே ஆகனுமா மாயா.. நா ஒன்னு கேப்பேன் தப்பா எடுத்துக்காத நீ எங்க போற அதை மட்டும் சொல்லு..” என்று வார்டன் மல்லிகா கேட்க,

     “ஐ அம் சோரி..” என்ற அவள் அழுத்தமான வார்த்தைகளிலே புரிந்து போனது அவள் சொல்ல போவதில்லையென்று..

மாயா புக் செய்த கேப் வர அதில் லக்கேஜ்ஜை ஏற்றி தானும் ஏற சென்றவள்  முக்கிய கேள்வியாக,
      “இந்த ஏரியால சிசிடீவி கேமரா இருக்கா..” என்று கேட்டதில், ‘இவ எதுக்கு இதேல்லாம் கேக்குறா..’ என புரியாது பார்த்த மல்லிகா,
      “இருக்கு பட் கொஞ்சநாள் ரிப்பேயரா இருக்கு.. ” என்று சொல்ல, ‘உஃப்ப்’ என்று பெருமூச்சுவிட்டவள் மல்லிகாவிற்கு நன்றி சொல்லிவிட்டு காரில் ஏறிக் கொண்டாள்.

சில நினைவுகளுடன் அவள் பயணம் தொடர சரியாக அவள் கல்லூரி தாண்டி கார் செல்ல அதைப்பார்த்தவள் தன்னை மீறி வெடித்து அழ ஆரம்பித்துவிட்டாள். சட்டென காரை நிறுத்திய ட்ரைவர்,
     “என்னாச்சுமா.. ஏதாச்சும் பிரச்சினையா..” என்று பதறியபடி கேட்க,

    “எதுவும் பேசாதீங்கண்ணா ப்ளீஸ் வண்டியை எடுங்க..” என்றவள் தன் கல்லூரியை பார்த்தவாறே,
     “என்னை மன்னிச்சிறு ரூஹி எனக்கு வேற வழி தெரியலடா.. சத்தியமா உன்னை விட்டு போறதுக்கு சாகலாம்னு தோணுது.. என்னால முடியல.. நா உன்னை பார்த்திருக்க கூடாது காதலிச்சிருக்க கூடாது.. அதான் இப்போ உன்னை விட்டு விலக முடியாம செத்துகிட்டு இருக்கேன்டா.. என் வாழ்க்கைல ஒரு காதல் தான் அது எப்போவும் நீ மட்டும் தான்.. உனக்கு என்மேல காதல் இல்லைன்னு சொல்றதை என்னால ஏத்துக்கவே முடியாது.. மறுபடியும் நா உன்னை எப்போ பார்ப்பேன்னு தெரியல.. ஆனா நீ எந்த மூலைக்கு போனாலும் உன் டெவில் உன்னை தேடி வருவா.. என்னைக்கும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன் ஐ ப்ரோமிஸ் பேபி..” என்றவாறு மாயா வாய்விட்டே கதறி அழ மாயாவை பார்த்த ட்ரைவருக்கு அவளை பார்க்கவே பாவமாகிப் போனது.

அவள் சொன்ன இடத்தில் வண்டியை நிறுத்தவும் கண்களிலிருந்து கண்ணீர் வழிய மனது முழுக்க தன்னவனின் நினைவுகளுடன் சில நினைவுகளையும் தனக்குள்ளே புதைத்துக்கொண்டு தனக்கான இடத்தை நோக்கி மாயா செல்ல அவள் தங்களை விட்டு சென்றதை கூட அறியவில்லை அவளுடன் நெருக்கமான அந்த மூன்று உறவுகளும்..

இரண்டுநாட்கள் கழித்து,

     “டேய்ய் நா பேபி மேல செம காண்டுல இருக்கேன்.. என்னடா நினைச்சிகிட்டு இருக்கா அவ.. நா கோல் பன்னா நொட் ரீச்சபள்னு வருது அவளும் என்னை ஒருதடவை கூட கூப்பிடல.. இன்னைக்கு அவள என்ன பன்றேன்னு பாரு..” என்ற பாபி மாயாவின் வகுப்பை நோக்கி செல்ல சஞ்சய்யும் அதே கோபத்துடன் அவன் பின்னாலே சென்றான்..  அன்று தான் பாஸ்கெட்போல் மேட்ச் முடிந்து இருவருமே கல்லூரிக்கு வந்திருந்தனர்.

அங்கு பாடம் நடந்துக் கொண்டிருக்க வகுப்பறைக்குள் எட்டிப்பார்த்த பாபி அங்கு சோகமே உருவமாய் இருந்ந கீர்த்தியை மட்டும் கண்டவன் அவள் பார்வை தன் மீது எதேர்ச்சையாக படிந்ததும் மாயாவை தேடியவாறு அவளை வெளியே வர சொல்ல அவளோ உணர்ச்சியற்ற பார்வையை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.

அதில் புருவத்தை நெறித்த பாபி வகுப்பு முடியும் வரை அங்கேயே வாசலில் காத்திருக்க ஒருவாறு வகுப்பு முடிந்து எல்லா மாணவர்களும் வெளியேற தங்களை கண்டுக்காதது போல் சென்ற கீர்த்தியை “ஏய்ய்..” என்று அழைத்தவாறு வழிமறித்து நின்றவன் அவளை முறைத்தவாறு,
      “பேபி எங்க..” என்று கேட்டான்.

அவன் கேட்டதும் தான் தாமதம் முட்டிக்கொண்டு வந்த அழுகையை கீழுதட்டை கடித்து அடக்கியவள் தன் பையிலிருந்த காகிதத்தை அவனிடம் நீட்ட புரியாமல் அதை வாங்கிய பாபி அதில் “ஐ அம் சோரி காய்ஸ்..” என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்து கீர்த்தியை கேள்வியாக பார்த்தான் என்றால் சஞ்சய்க்கோ ஒன்றுமே புரியவில்லை.

     “ஏய்ய் மாயா எங்கேன்னு கேட்டா இதை நீட்டுற.. ஆம அவ எங்க கொலேஜ் வரலையா.. ஒருவேள உடம்புக்கு ஏதாச்சும்..” என்று பாபி பதட்டமாக கேட்க,
அடுத்தநொடி கதறியழுதவளை பார்த்த இருவருமே பதறிவிட்டனர்.
    “என்னாச்சு கீர்த்தி..” என்று சஞ்சய் பதட்டமாக கேட்க,

     “என் ஜிலேபி என்னை விட்டு போயிட்டா..  ஷீ இஸ் ச்சீட்டர்.. என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்லி இப்போ அவ இடத்துக்கே திரும்ப போயிட்டா.. அவ இல்லாம என்னால முடியல..” என்று கீர்த்தி அழ,

அவளை அழுத்தமாக பார்த்த பாபி,
      “அவ இடத்துக்குன்னா.. எங்க போயிட்டா அந்த இடியட்.. அதுவும் அவகூடவே இருக்க உனக்கு தெரியாமலா..” என்று இறுகிய குரலில் கேட்க,

      “இரண்டுநாள் முன்னாடி நைட்டே கிளம்பி போயிட்டா.. வார்டனுக்கு கூட அவ எங்க போனான்னு தெரியல.. கேட்டதுக்கு சொல்லல்லன்னு சொன்னாங்க.. இப்போ.. இப்போ அவ இல்லை..” என்று கீர்த்தி சொல்ல,

அடுத்தநொடி அவள் முழங்கையை பிடித்து இழுத்த பாபி உச்சகட்ட கோபத்தில்,
      “என்னடி விளையாடுறியா.. உனக்கென்ன எங்களை பார்க்க கேனையன் மாதிரி தெரியுதா.. அவ கூடவே இருக்க.. அவ ரூம்ல இருந்து வெளில போனது கூட தெரியாம அப்படி என்னடி பன்னிகிட்டு இருந்த.. அவ எங்க போனான்னு கூட தெரியலன்னு சொல்ற.. வட் த ஹெல்.. ஹான்..” என்று பாபி கத்த, கீர்த்திக்கோ அவன் கையில் கொடுத்த அழுத்தத்தினால் உண்டான காயத்தை விட அவன் வார்த்தைகளே காயத்தை கொடுக்க சஞ்சய் தான்,
      “பாபி விடுடா மாயா போனா அவ என்னடா பன்னுவா.. நாம தங்கச்சிமாவ கண்டுபிடிக்கலாம்டா..” என்று சமாதானப்படுத்தினான்.

பாபிக்கோ அப்போதும் கோபம் அடங்வில்லை.. மாயா சென்றுவிட்டதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சுவற்றில் கை குத்தி தன் கோபத்தை அடக்க அவன் முயல, 
       “என்ன நடக்குது இங்க..” என்ற ரோஹனின் குரலில் ஆக்ரோஷமாக அவன்புறம் திரும்பினான் பாபி..

      “ஓஹோ வாங்க சார் இப்போ ஹேப்பியா இருப்பீங்களே.. ஏன்னா உங்கள பிடிச்ச சனியன் தான் உங்கள விட்டு ஒழிஞ்சிட்டே.. ” என்று பாபி அடக்கப்பட்ட கோபத்தில் பேச அவனை கூர்மையாக பார்த்தான் ரோஹன்.

     “இந்த இரண்டு நாளா கொலேஜ்க்கு வராம என்ன பன்னிகிட்டு இருந்த ரோக்கி..” சஞ்சய் கேட்க,
      “இன்னும் வன் மன்த்ல ஃபைனல் கம்படீஷன்.. லண்டன் கிளம்புறதுக்கான அர்ரேன்ஜ்மென்ட்ஸ் பன்றதுல பிஸியா இருந்தேன்.. ஏன் என்னாச்சு..” ரோஹன் புரியாமல் கேட்க,

சஞ்சய் அந்த காகிதத்தை ரோஹனிடம் நீட்ட அதை வாங்கி பார்த்தவனோ அது மாயாவின் கையெழுத்து என்று சரியாக யூகித்து கொண்டான். அவன் புருவங்கள் யோசனையில் சுருங்க,
     “அண்ணா மாயா போயிட்டா.. அன்னைக்கு அவ உங்ககூட பேசினதுக்கு அப்றம் தான் அன்னைக்கு நைட் அவ கிளம்பி போயிட்டா.. ஏன் அண்ணா அவள நீங்க புரிஞ்சிக்கல.. அவ அளவுக்கு யாராலையும் காதலிக்க முடியாது.. ஆனா இப்போ..” என்று அந்த இடத்திலே கீர்த்தி மண்டியிட்டு அழ,

     “கீர்த்தி ப்ளீஸ் அழாத அவள நாங்க கண்டுபிடிக்கலாம்.. தயவு செஞ்சி நீ நிதானமா இரு பாபி..” என்று சஞ்சய் அதட்ட, பாபியோ கூர்மையாக ரோஹனின் முகபாவனைகளை தான் பார்த்திருந்தான்.

அவனோ அந்த காகிதத்தையே சிறிது நேரம் பார்த்தவன் நிதானமாக நிமிர்ந்து பார்த்து,
     “சோ வட்.. அவ எங்க இருக்கனும் எங்க போகனும்னு முடிவு பன்ன வேண்டியது அவ தான்.. அதுல நாம தலையிட முடியாதே.. அவ போகனும்னு நினைச்சா போயிட்டா.. தட்ஸ் ஆல். அது அவளோட விஷ்.. என்ட் அவ போனதும் நல்லது தான்.. நடக்காத ஒரு விஷயத்தை நினைச்சிகிட்டு அவ வாழ்க்கையையே தொலைச்சிறுவா.. மோர்ஓவர் போனவள எதுக்கு தேடி அலையனும் போன அவளுக்கு திரும்ப வர தெரியாதா என்ன.. சோ சில்லிதனமா பேசிக்கிட்டு இருக்காம உங்க வேலைய பாருங்க..”  என்று ரோஹன் சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு அவர்களை கடந்து போக,

பாபியோ தன் தலைமுடியை பிய்த்துக்கொண்டு, “எங்க போன பேபி..” என்று கேட்டவாறு சுவறில் சாய்ந்து நிற்க, கீர்த்தியோ, “ஏன் ஜிலேபி என்னைவிட்டு போன..” என்று கேட்டவாறு முகத்தை மூடி அழ சஞ்சய்யோ போகும் ரோஹனின் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையில் நாட்களை கடத்த நேரமோ யாருக்கும் நில்லாமல் வேகமாக சென்றது. மாயா பற்றி சிறு துரும்பு கூட பாபியினாலும் சஞ்சய்யினாலும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கிடையில் பல சம்பவங்கள் வேறு நடந்து முடிந்திருக்க,

ஐந்து வருடங்கள் கழித்து……

காதல்போதை?
——————————————————————-

ரோஹன் மேல செம காண்டுல இருப்பீங்கன்னு புரியுது.. பட் திட்டிறாதீங்க நம்ம ஹீரோவ.. அவன் ரொம்ப பாவம் அதுவும் போக போக ஏன்னு தெரிய வரும் நட்பூஸ்..

-ZAKI?    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!