காதல்..நரகமா?சுகமா?

காதல்..நரகமா?சுகமா?

           

 

வாழை மரத்தோரணத்துடன் அலங்கார விளக்குகள் ஜொலிக்க, ப்ளக்ஸ் போர்டுடன் கல்யாணம் பெண், மாப்பிள்ளையின் புகைப்படத்துடன் அந்த பெரிய மண்டபம் அடுத்த நாள் கல்யாணத்திற்க்கு தாயாராக இருந்தது. ஆனால் கல்யாணப்பெண்ணோ இன்னொருவளின் கையை பிடித்துகொண்டு அந்த இருட்டு நேரத்தில் மண்டபத்தை விட்டு வெளியில் வந்துகொண்டு இருந்தாள்.

 

“என்ன மச்சான் சேஃப்பா இரண்டு பேரும் வந்துருவாங்களா?. எனக்கு பயமா இருக்கு மச்சி, மாட்டிகிட்டா பெரிய பிரச்சனை ஆகிரும்.” கோபி பயத்தில் புலம்ப.

 

”வாய மூடுடா… போனது யாரு என்னோட தோழியாக்கும். அதெல்லாம் பாதுகாப்பா கூட்டிட்டு வந்துருவா.” அபினவ் தன் தோழியின் மீது வைத்த நம்பிக்கையில் பேசினான்.

 

“உன் தோழிய நினைச்சு தான் அதிகமா பயமா இருக்கு மச்சி. அவள் வாய் கூட சும்மா இருக்காது, இதுல உன் ஆளா கூப்பிட்டு வர அவளை அனுப்பியிருக்க. பேசமா நீயே போய் சிஸ்டர கூப்பிட்டு வந்திருக்காளாம்.”  

 

“டேய் புலம்பாம இருடா.. இருட்டு நேரத்துல சத்தம் கேட்டு  யாரவது வந்திர போறாங்க.”

 

“பேய் உலா வர்ர நேரத்துல யாருடா வரப்போறா?” கோபி சொல்லிக்கொண்டே இருக்க, கோபியின் தோள் மீது ஒரு கரம் சட்டென்று விழுந்தது.

 

“அம்மா, பேய்…” அவன் கத்திக்கொண்டே அலற, கோபியின் அலறலில் அபி திரும்பி பார்க்க, அங்கு டார்ச் லைட்டை முகத்தில் காட்டியபடி அபியின் தோழியும், அவள் பின் அவனின் காதலியுமான சுரேகா நின்றிருந்தாள்.

 

“ரேகா, ஹரி..” அபி அழைக்க.

 

சுரேகா, அபியை பார்த்த மகிழ்ச்சியில் அவன் பக்கம் சென்று அணைத்துகொண்டு இருக்கா, கீழே விழுந்த கோபியோ ஹரிணியை பேய் என்று நினைத்து இன்னும் அலறிக்கொண்டிருந்தான்.

 

‘என்ன கோபி பயந்துட்டியா?.’

 

‘பாவி இப்படியா பயமுறுத்துவ… கொஞ்ச நேரத்துல என்னை நடுங்க வச்சுட்ட. எப்படி தான் உன்னையெல்லாம் பெத்தங்களோ.’

 

‘ஹாஹாஹா… பொண்ணு நானே தைரியமா போய் ரேகாவ கூப்பிட்டு, சார்ட் கட் ரூட்ல சீக்கிரம் வந்துட்டேன். நீ ஆண்பிள்ளை தான.. இப்படி பயப்படலாமா?’

 

“எந்த ரூட்ல வந்த நீ..”

 

“சுடுகாட்டு இருக்குற பக்கம் வந்தேன். இவ்வளவு ஏன் நீங்க நிக்குற இடம் கூட இடுகாடுனு ரேகா சொல்லிட்டே வந்தா இல்ல ரேகா.” கோபியை இன்னும் அலற வைக்க, அவர்கள் இருந்த இடத்தையே அவனுக்கு பயம் காட்டினாள்.

 

‘ஹரிணி  நீ பண்ணுறது சரியில்ல சொல்லிட்டேன். டேய் அபி வாங்க போகலாம்.’

 

”ஆமா, ஹரிணி சீக்கிரம் போகலாம் நாமா இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்து தான்.” அபி மூவரையும் அழைத்துகொண்டு சென்றான். அடுத்த நாள் காலையில் முருகன் கோவிலில் அபிக்கும், சுரேக்காவுக்கும் கல்யாணம்.

 

திருமணமும் அவர்கள் தோழர்கள், தோழியர் புடைசூழ இனிதே நடந்து முடிந்தது. ஆனால் எம்.பி சத்யமூர்த்தி வீட்டின் திருமணம் தான் நின்று போனது. ஆம், ஹரிணி அழைத்து வந்தது எம்.பி மகள் சுரேகா.

 

மகள் ஓடி போனதைவிட, அவளை அழைத்துகொண்டு போன ஹரிணியை தேடி எம்.பி சத்ய மூர்த்தி வீட்டினர் மொத்தமும் சோம சுந்தரத்தின் வீட்டை சூழந்துகொண்டனர்.

 

அனைவரும் வந்த கூட்டத்தை பார்த்து மலைத்து நிற்க. ஆனால் சத்யமூர்த்தியோ அந்த வீட்டின் பெரியவர் சோம சுந்தரத்தை பார்த்து நடந்ததை கூறினார். அப்போதே அபினவின் தந்தை அங்கு வந்தார், சத்யமூர்த்தியிடம் தன் மகன் செய்தது தவறு தான் என மன்னிப்பு கேட்டுவிட்டு நிற்க.

 

“உங்க பக்கமும் தவறு இருக்கு மூர்த்தி, பொண்ணு வேர ஒரு பையனை விரும்புறானு தெரிஞ்சு ஏன் கல்யாணம் ஏற்ப்பாடு செய்தீங்க. அபினவ் ஒன்னுமில்லாதவன் இல்லை. உங்க அளவுக்கு அவனும் பணக்காரன் தான். அதனால சின்னஞ் சிறுசுங்களை வாழவிடுங்க. உங்க பொண்ணை மன்னிச்சு ஏத்துக்கோங்க.”

 

”என் பேத்தி செய்தது மிகப்பெரிய தவறு தான். ஆனா, அவளோட நண்பனுக்காக ஒரு உதவி செய்தது தவறில்லையே. என் பேத்திமேல உங்களுக்கு கோவம் இருந்தா அதை என்மேலகூட காட்டிட்டு போங்க. ஆனா என் பேத்திய பழிக்காதீங்க மூர்த்தி. உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுகிறேன் மூர்த்தி, இனிமே ஆச்சும், கல்யாணம் செய்தவங்களை ஏத்துகிட்டு அடுத்து நடக்க வேண்டிய காரியத்தை பாருங்க.” வந்தவர்களை வழியனுப்பி வைத்ததையும், சோம சுந்தரத்தை கோவத்துடன் பார்த்தான் ஹரிஹரன்.

 

அவனுக்கு தான் ஹரிணி என்றாளே பிடிக்காது. இதில் அவனின் தாத்தா அவளுக்காக மன்னிப்பு கேட்டதது மட்டும் பிடிக்குமா?. இப்போது மட்டுமல்ல, ஹரிஹரனுக்கு விபரம் தெரிந்த நாள் முதல் ஹரிணியை பிடிக்காது.

 

கல்யாணிக்கு பிரசவம் நேரம் என்பதால், எப்போது வேண்டுமென்றாலும் வலி வரலாம் என்று மருத்துவர் கூறியிருந்தார். அதனால் தந்தை வீட்டிலே இருந்தாள் கல்யாணி. நடு ஜாமத்தில் வலி வந்ததில் கல்யாணியின் அண்ணன் தேவராஜன் காரை எடுக்க செல்ல, அவரின் மனைவி தேவிகா, கல்யாணியை அழைத்து செல்லும் போது, அப்போது தான் ஹரிஹரனுக்கு விபரம் தெரியும் வயது தானும் வருவேன் என்று அடம்பிடித்தான்.

 

மருத்துவமனை என்றால் ஹரிக்கு பயம் வந்துவிடும் என்பதால் தான் எழிலிடம் அவனை விட்டு செல்ல, ஹரி, தேவிகாவை கட்டியணைத்து அழுதான். அதை பார்த்த தேவராஜன் ஹரியை அடித்து எழில் வசம் ஒப்படைத்து சென்றார். அதனால் ஹரிக்கு பிறக்காத அந்த ஹரிணியின் மீது ஒரு கோவம். தன் மீது பாசமாக இருந்த தந்தையிடமே அடிவாங்க வைத்துவிட்டாளே. அதனாலோ என்னவோ, பிறந்த குழந்தையுடன் வீட்டிர்க்கு வந்த கல்யாணி ஹரிஹரனிடம்,

 

“ஹரி குட்டியோட முறைப்பொண்ணு வந்தாச்சு.” தன் மகளை ஹரியிடம் காட்ட அவனோ,

 

‘இல்லை இவளை எனக்கு பிடிக்காது.. இவ என் முறை பொண்ணு இல்லை.. நான் இவளை கல்யாணம் செய்யமாட்டேன்.’ குழந்தை ஹரிணியின் முகத்தை பார்க்காமல் உள்ளே ஓடி சென்றான்.

 

அவனின் பேச்சை சாதாரணமாக எடுத்துகொண்டனர் அந்த குடும்பத்தார்கள். வள்ளியும், சுந்தரமும், பேத்தியை இந்த வீட்டிலே தக்க வைத்துகொள்ள வேண்டும் என்பதற்கா, ஹரிக்கு, ஹரிணி என்று அவர்கள் முடிவே செய்துவிட்டனர். முகிலனும், தேவராஜூம், தங்கை மகளை தாங்கு தாங்கென்று தாங்கி வளர்த்தனர். சரண், புவன், இருவருமே ஹரிணியை பாசமாக பார்க்க, பார்க்கவேண்டியவன், உடமை உள்ளவனோ அவள் மீது வெறுப்பை வளர்த்தான்.

****

சுந்தரம் வீட்டின் வரவேற்பரையில் நின்றிருந்த அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர். சோபாவில் வள்ளியும், சுந்தரமும் அமர்ந்திருக்க.

 

“ஹரிணி எங்க கல்யாணி.” மகளை பார்த்து கேட்க.

 

”ப்ரண்டோட கல்யாணம் சொல்லிட்டு இரண்டு நாள் முன்னாடியே செங்கல்பட்டு போயிட்டா ப்பா. ஆனா, ப்ரண்டுக்கே இவ தான் கல்யாணம் செய்து வைக்க போறானு  நான் நினைக்கலை ப்பா.”

 

‘அவளை வெளிய விட்டதே தப்பு, இதுல ப்ரண்டுக்கு கல்யாணம்னு சொன்னதும் நீ நம்பி விட்டுருக்க. செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுருக்கீங்க.’ வள்ளி, மகளின் மீது கோவப்பட.

 

”நீ மட்டும் இல்ல… இதோ நிக்குராங்களே தேவி, எழில் இரண்டும் அதுக்கு மேல செல்லம் கொடுக்குரீங்க.” மருமகள்களையும் சேர்த்தே திட்டினார்.

 

 

‘மிச்சம் இருக்குற இவங்களை மட்டும் ஏன் விட்டேங்க பாட்டி. சரண், அவனோட கார் கொடுத்து வழியனுப்பி வச்சான், புவன் அவ கொண்டு போன பணம் பத்தாதுனு பேங்க்ல இருந்து பணம் எடுத்துகொடுத்துருக்கான்.’ தன் அண்ணன்களையும் ஹரி போட்டு கொடுத்தான்.

 

“டேய் நல்லவனே, அமைதியா இருடா..” சரணும் புவனும் சைகையில் சொல்ல. அவர்களை கண்டுகொள்ளாமல்,

 

‘இதையெல்லாம் விட, அவளுக்கு கோவில் செலக்ட் பண்ணி கொடுத்ததே உங்க மூத்த பையன் தான் பாட்டி. அந்த கோவில்ல எல்லாம் ஏற்பாடும் செய்து கொடுத்தது முகில் சித்தப்பா தான். திட்டுனா என்னையும், உங்களையும் தவிர, எல்லாரையும் திட்டுங்க. சும்மா அத்தையும், அம்மா, சித்தியை மட்டும் திட்டாதீங்க. செல்லாம் கொடுத்து வளர்த்துவிட்டேங்கள.. இப்ப அவளை விட்டுட்டு பேசுனா எல்லாம் சரியாகுமா?’ சகோதரன் உதவி செய்ததே அவனுக்கு பிடிக்கவில்லை, இதில் அப்பாவும், சித்தாப்பாவும் சேர்ந்து செய்தால் மட்டும் பிடித்துவிடுமா?. மொத்தமாக அனைவரையும் கோர்த்துவிட்டான்.

 

“பாட்டி முதல்ல அவ எப்போ வீட்டுக்கு வர்ரானு கேட்டு அப்புறம் பஞ்சாயத்து வையுங்க. நான் ஹோட்டல் கிளம்புரேன்.’’

 

அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைப்பக்கம் சென்றுவிட்டார் சோம சுந்தரம்.

 

தனது அறையில் புத்தகத்துடன் அமர்ந்திருந்த கணவரை பார்த்தார் வள்ளி. கையில் புத்தகம் இருந்தாலும், சிந்தனை வேறு இடத்தில் இருந்தது. அதை கவனித்துகொண்டே வந்த வள்ளி.

 

“சிந்தனை எல்லாம் பலமா இருக்கு…” கணவரிடம் பழச்சாறை கொடுத்தபடி கேட்க.

 

‘எல்லாம் ஹரிணியை பற்றி தான் வள்ளி. இன்னைக்கு நடந்தது எல்லாம் நினைச்சு பார்த்தேன். அவள் அந்த அளவுக்கு ரிஸ்க்கெடுத்து யாருக்கு தெரியாம கல்யாணம் செய்து வைப்பானு நினைச்சு பார்க்கமுடியலை.’

 

“சின்ன பொண்ணு, ப்ரண்டுக்காக உதவி செய்திருக்க. அதை ஏன் நீங்க நினைச்சு கவலைப்படுறீங்க.’’

 

‘நீ சரியா கவனிச்சியா வள்ளி?.. ஹரிய.’

 

“என்னங்க?”

 

‘ஹரிணிக்காக எல்லாரும் உதவி செய்தாங்கங்கனு எனக்கு  தெரியும். ஆனா யாரும் வாய திறக்கவேயில்ல. ஆனா ஹரி மட்டும் யார், யார் என்ன உதவி செய்தாங்கனு வெளிப்படையா சொல்லிட்டு போய்ட்டான். இதுல இருந்து என்ன தெரியுது, ஹரிக்கு, ஹரிணிய பிடிக்கலைனு.’

 

“அப்படி இல்லங்க.. ஹரிணிக்காக நீங்க மன்னிப்பு கேட்டதுக்கூட பிடிக்காம இருந்திருக்கலாம் இல்லையா ஹரிக்கு.”

 

‘ஹ்ம்ம்… பார்க்கலாம்… ஹரிக்கும், ஹரிணிக்கு கல்யாண பேச்சு எடுக்கும் போது ஹரியோட பிடித்தம் என்னனு?.’ கணவரின் பேச்சு, வள்ளிக்கு அப்போது புரியவில்லை.

****

அலுவலக அறையில் வேலையில் மூழ்கியிருந்த ஹரியை கலைத்தது, அவனின் அலைப்பேசி. எடுத்து காதில் வைத்தவன், “சொல்லுங்கடா… கூடப்பிறக்காத உங்க தங்கச்சிக்கு உதவி செய்து முடிச்சிட்டேங்களா?.” தனது நணபர்களை கேட்டான். கான்ப்ரன்ஸ் காலில் இருந்த அவனது நண்பர்களான, நந்தன், கோகுல், வெற்றி.

 

”டேய் உனக்கு எப்படி டா தெரியும், நாங்க ஹரிணிக்கு ஹெல்ப் பண்ணது.”

 

‘டேய் மச்சான், உங்களை பற்றி எனக்கு தெரியும், என்னை பற்றி உங்களுக்கு தெரியும். அப்புறம் எப்படி எனக்கு தெரியுமானு ஒரு கேள்வி?’

 

“ப்ரண்டுக்கு கல்யாணம்னு தான் சொன்னா? சரி நாங்களும் உதவி செய்தோம். கடைசில பார்த்தா, அவ கூப்பிட்டு வந்தது எம்.பி பொண்ணுனு. எப்படியோ கல்யாணம் முடிஞ்சது, அப்படியே பொண்ணு , மாப்பிள்ளைக்கு..” நந்தன் சொல்லிக்கொண்டு வந்ததை பாதியில் நிறுத்தி,

 

‘என்ன ஹனிமூன் டிக்கெட் சேர்த்து எடுத்து, ஃப்ளைட் ஏத்திவிட்டு வந்தீங்களா?” ஹரி இடையில் கேட்க.

 

“மச்சான் எப்படி டா சரியா சொன்ன… ஆனா, டிக்கெட் எடுத்தது மட்டும் தான் நான். ஃப்ளைட் ஏத்திவிட போனது, கோகுல்.” நந்தன் போட்டுகொடுக்க.

 

”ஃபிளேஸ் செலக்ட் பண்ணது வெற்றி மச்சி… எல்லா செலவையும் ஏத்துகிட்டது ஹரிணிடா.” கோகுல், ஹரிக்கு தெரியாததையும் சேர்த்தே கூறினான்.

 

’ஹரிணி… ஹரிணி… ஹரிணி.. உங்களுக்கு கூட அவ தான் முக்கியமா தெரியுறாளா. இனிமே ஹோட்டல், ஆபீஸ் இரண்டு பக்கமும் என்னை தேடி வந்தீங்க மூஞ்சில சுடு தண்ணீர் ஊத்திவிட்டுருவேன் உங்க மூனு பேருக்கும்.’ கோவமாக திட்டிவிட்டு வைத்தவன் மனம், மூன்று நாட்களாக கண்ணில் படாத ஹரிணியின் மீது கோவம் ஏறிக்கொண்டே போனது.

 

ஃபைலை மூடி வைத்துவிட்டு எழுந்தவன் கண்ணில் அங்கிருந்த குடும்ப புகை படத்தில் தாத்தா பாட்டியின் நடுவில் அமர்ந்து சிரித்துகொண்டிருந்தவள் மீது எரிச்சல் வந்தது. அங்கு மட்டுமல்ல.. அவர்களின் எல்லா ஹோட்டல் அலுவலங்களின் ஹரிணியின் புகைப்படம் இருக்கும்.

 

ஹரிணி பிறந்ததில் இருந்து தான் குடும்ப தொழில் கூட முன்னேற தொடங்கியது. அதனால் தான் ஹரிணியின் புகைப்படத்தை ஒவ்வொரு ப்ராஞ்சிலும் மாட்ட வேண்டும் என்று, தேவா, முகில் முடிவு செய்தனர். அதைகூட விட்டுவிடுவான். ஆனால் அவன் அறையிலே அவன் புகைப்படத்தை விட ஹரிணியின் புகைப்படமே அதிகமாக இருக்கும். அதை தான் அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை.

 

இப்படி ஒவ்வொன்றிலும் ஹரிக்கு, ஹரிணியை தாங்குவது அவனால் தான் தாங்கிகொள்ள முடியவில்லை.

 

இவன் மனதிலே ஹரிணியை பற்றி இப்படி நினைக்க. ஆனால் ஹரிணியோ, ஹரியை வெறுப்பேற்றி பார்ப்பதில் தான் அவளின் மகிழ்ச்சியே இருக்கு. அதனால் அவன் சம்ந்தபட்ட பொருளோ, நட்புகளோ, இவ்வளவு ஏன் அவன் வளர்க்கும் செல்ல ப்ரானி வரை அவள் பக்கம் இழுத்து வைத்து இருக்கிறாள்.

 

அவன் அலுவலக வேலை முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தவனின் பார்வை அவர்கள் வீட்டு சுவரின் மீது ஏறிக்கொண்டியிருந்த ஹரிணியின் மீது பதிந்தது.

 

                                         தொடரும்……

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!