காதல்..நரகமா?சுகமா?

காதல்..நரகமா?சுகமா?

 

“பாட்டி போதும் நடிச்சது… எல்லாரும் உன்னை நம்பலாம் ஆனா நான் உன் பேரன். என்கிட்டயே உன் வேலைய காட்டதீங்க. நீங்க என்ன நடிச்சு நாடகம் போட்டாலும் உன் பேத்தி அந்த அழகிய நான் கல்யாணம் பண்ணமாட்டேன்.” ஐசியு வில் உடல்நிலை சரியில்லாதது போல் நடித்துகொண்டிருக்கும் நாகவள்ளி பேரனின் பேச்சைகேட்டதும் தனது ஆக்ஸிஜன் மாஸ்க்கை வேகமாய் எடுத்தார்.

 

”அப்படி சொல்லாத கண்ணா, நீங்க ரெண்டு பேரும் என்னோட உயிர். அப்படி இருக்க வாழ்க்கையில உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்கனும் அதுவும் கல்யாண கோலத்துல பார்க்கனும் கண்ணா. இந்த பாட்டிக்காக செய்யமாட்டியா?”

 

‘நீ ஐசியு என்ன, மார்ச்சுவரில போய் தர்ணா பண்ணாலும் நான் உன் பேத்திய கல்யாணம் செய்யமாட்டேன். அவளுக்கு எல்லாமே திமிரு, அதை நான் சின்ன வயசுல இருந்து பார்க்குரேன். உடம்பு முழுக்க திமிரு தான் இருக்கு. என்ன என்ன செய்தானு உனக்கே தெரியுமே பாட்டி அப்படி இருந்து ஏன் அவளை கல்யாணம் பண்ணிக்கோனு மொத்த குடும்பமும் இப்படி டார்ச்சர் செய்றீங்க.” கோவத்தில் பற்களை நறநறவென கடித்துகொண்டு, பாட்டியின் ஆசை பேத்தியை நினைத்து இன்னும் கோவம் கொண்டான் ஹரிஹரன்.

 

’அப்போ நீ அம்முவ கல்யாணம் செய்துக்கமாட்ட?’ ஹரியிடம் கேள்வியாக நிறுத்த. பாட்டியின் பார்வையில் அவன் பழைய நினைவுகளை நினைத்து பார்த்தான்.

*******

”மாட்டேன்… மாட்டேன்.. மாட்டேன்… அந்த கொம்பேறி மூக்கன நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன். யாரை கேட்டு இந்த கல்யாணத்து முடிவு செய்தீங்க.”

 

“யாரைடி கேக்கனும்… தாத்தா, பாட்டியோட ஆசை. அதுவும் சின்ன வயசுல இருந்து ஹரிக்கு, உனக்கும் கல்யாணம் செய்யனும் முடிவு பண்ணது தான். இப்போ என்ன இத்தன பிடிவாதம்.”

 

’என்னை கேக்கனும் திருமதி. கல்யாணி கனகராஜ். தாத்தா , பாட்டி ஆசைனா, அவனுக்கு வேர பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணுங்க. எதுக்கு என்னை இழுக்குரீங்க.’

 

“அப்படியே அரைஞ்சேனு வைச்சுக்கோ கன்னம் இரண்டும் வீங்கிரும்.” மகளை அரைவது போல கையை கொண்டு சென்ற கல்யாணியை தடுத்து நிறுத்தினார் தாத்தா.

 

‘என்ன செய்யுற நீ.. என் பேத்திக்கிட்ட நான் பேசிக்கிரேன் நீ போ கல்யாணி.’ ஆரம்பம் முதல் இப்போது வரை பேத்தியின் பேச்சை கேட்டுகொண்டு வந்த சோமசுந்தரம் பேத்தியை அடிக்க பாய்ந்த மகளை தடுத்து நிறுத்தினார்.

பேத்தியின் பக்கம் திரும்பிய தாத்தா “உனக்கு, ஹரிக்கும் அடுத்த வாரம் நிச்சியம், அதுகடுத்த வாரம் கல்யாணம். உன்னை நீயே இப்போ இருந்து தயார்படுத்திக்கோ அம்மு.” தாத்தாவின் பேச்சை கேட்ட அம்மு என்கிற ஹரிணிக்கு அந்த கொம்பேறி என்று அழைக்கப்படும் ஹரியின் மீது கோவம் அதிகமாகியது.

***

சுபயோக சுபதினத்தில் ஹரிணி, திருமதி. ஹரிஹரன் ஹரிணியாக மாறினாள். இருவரின் ஜோடி பொருத்தத்தை பார்த்து மொத்த குடும்பமும் மகிழ்சியில் இருக்க. மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய ஜோடியோ கோவத்தில் முறைத்துக்கொண்டு இருந்தது.

 

நெடுங்கால பந்தத்தில் இணைந்த இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்வார்களா? இல்லை எலியும், பூனையாக இருப்பார்களா?

 

விரைவில் முதல் அத்தியாயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!