காதல் 15
சித்து கோவை நோக்கி தனது காரில் செல்ல அவனது மனமோ மதி பேசிய வார்த்தையில் தான் சூழன்றது. ஆதியின் அட்ரஸ் மற்றும் மதியை பற்றிய விவரங்கள் இருந்த பைலை எடுக்க தனது வீட்டுக்கு வந்தான். கிளம்பும் முன் மதியிடம் பேச வேண்டும் போல இருக்க அவளுக்கு அலைபேசி மூலம் அழைத்தான்.
“ஹலோ சித்து எங்க போன கதிர் ப்ரோ கிட்ட கேட்டா என்னமோ சொல்லுறாங்க பட் ஒழுங்கா சொல்லல. அபி கூட உன்னை தேடிட்டு இருக்கான்” என
“மதி எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு. ஜஸ்ட் டூ டயஸ் போயிடு வந்துறேன். அது வரைக்கும் கொஞ்சம் பத்திரமா இரு. நான் சீக்கிரம் வந்துறேன்” என்று சித்தார்த் கூறினான்.
‘ஓகே எங்க போற’ என்றால் மதி, “அடியே போகும் போதே நல்லா கேக்குற டீ. முக்கியமா விஷயமா கோவை வரைக்கும் போறேன்”
பதறிய மதி “டேய் என்னடா போறேன் சொல்லுற போயிடு வரேன்னு சொல்லு. அங்க தான் டா நான் எனக்கு வேண்டிய எல்லாரையும் இழுத்தேன். நீயும் லூசு மாதிரி சொல்லுற. உன்னையும் என்னால இழக்க முடியாதுடா”
‘இவ எங்க போறேன்னு கேட்பாளாம் ஆனா நான் மட்டும் போறேன் சொல்ல கூடாதாம் என்ன கொடுமை சார் இதுயெல்லாம்’ என மனதில் நினைத்து கொண்டு, “நீ பதறாத நான் என்னை பத்திரமா பாத்துக்கிறேன். நீயும் பத்திரமா இரு” என போனினை அணைத்தான். யோசனை எங்கோ இருக்க கைகளோ அதன் வேலை செய்தது.
கோவையில் இருக்கும் அவர்களது கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்து சேர்த்தான். சிறிது ஓய்வுக்கு பின் ஆதியின் வீட்டுக்கு சென்றான். அந்த தெருவே மக்கள் கூட்டத்தில் நிறைத்து இருந்தது. ஆனால் ஒரு வீடு மட்டும் இதற்கு நேர்மாறாக அமைதியாக இருந்தது. அது தான் ஆதியின் வீடாக இருக்க வேண்டும் என எண்ணி அதன் அருகே சென்றான்.
பூட்டி இருந்த வீட்டை பார்த்து, சுற்றி பார்த்தான். யாரும் தன்னை கவனிக்காமல் இருப்பதை பார்த்து பூட்டை உடைதான். உள்ளே சென்றவன் அதிர்ச்சியில் விழி விரித்து பார்த்தான். காரணம், சுற்றிலும் மதியின் போட்டோ தான் இருந்தது. ஒரு இடத்தையும் விடாமல் அவளின் பல வித புகைப்படம். ஆனால் அனைத்திலும் அவள் மட்டுமே ‘எல்லா போட்டோளையும் இவளோ அழகா இருக்க மதிகுட்டி நீ. இதுல இருக்கிற சிரிப்பை கண்டிப்பா திருப்பி கொண்டு வரத்து என் பொறுப்பு’ என பக்கத்தில் உள்ள இரு ரூமை பார்த்தான் ‘எந்த ரூம்க்கு போகலாம் ரைட் போகலாமா இல்ல லேபிட் போகலாமா’ என சிந்திக்கும் போது அவன் கைபேசி அலறியது.
“ஹலோ சொல்லுடா சென்னை வந்திட்டியா” என தன் போலீஸ் நம்பனிடம் கேட்டான்.
“என்ன மச்சி என்னை வர சொல்லிட்டு நீ எங்க போன. எதோ பிரச்சனை என்று சொன்னியே இப்ப பிரீயா இருந்த சொல்லுடா..” என்ற நம்பனிடம், “இல்ல மச்சி நேர்ல சொல்றேன். இப்ப கொஞ்சம் வேலைய இருக்கேன். ரெண்டே நாள் தான் வந்துடுவேன். நீ கதிர்க்கு கால் பண்ணி என் பேபிடால்லை போய் பாரு” என பேசி கொண்டே பக்கத்தில் உள்ள அறைக்கு வந்தான்.
“மச்சி நீயும் வாடா அப்புறம் பார்த்துக்கலாம். அதுக்குள்ள நான் ஜாயின் பன்னிட்டு கொஞ்சம் பிரீயாக்குறேன்” என பேசி விட்டு அணைத்தான்.
சுவற்றில் புகைப்படமாக இருந்த ஆதியை பார்த்து “இவங்க தான் ஆதி போல பட் இவங்களை எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கே” என யோசித்து கொண்டே அறையை பார்வையால் ஆராய்ந்தான்.
மதி சொன்னது போல் பெட் மேலே லேப்டாப் இருந்தது. அதை முதலில் பார்க்க, அதில் அவனுக்கு கிளு ஒன்றும் கிடைக்கவில்லை. ‘சே… எதுமே கிடைக்கலையே” என சலிப்புடன் திரும்பும் போது பல டைரி அவன் கண்ணில் பட்டது.
ஆவலோடு எடுத்து பார்த்தான். முதல் பக்கம் மட்டுமே எழுதி இருக்க, அடுத்த வருடத்தை எடுத்தான். அதிலும் முதல் பக்கம் மட்டுமே எழுதி இருந்தது. கடுப்புடன் சில பக்கங்களை திருப்ப அதில் இரு பக்கம் எழுதி இருந்தான்.
‘என்னடா இவன் எல்லாம் டைரிளையும் முதல் பக்கம் மட்டும் எழுதிட்டு மத்ததை பில் பண்ணலை என்று பாக்கறீங்களா. என்ன செய்ய நம்ப லைப் அந்த அளவு போரா போகுது. பாக்கலாம் இந்த வருஷம் எப்படி இருக்கிறது’ படித்தவன் அடுத்த பக்கங்களை ஆராய்ந்தான்.
மார்ச் 17,
‘இன்னிக்கு என்னால மறைக்க முடியாத நாள். எனக்கு இருந்த ஒரே உறவு என் அப்பா அவரோட நினைவு நாள். அவர் என்னை விட்டு போய் ஒரு வருஷம் ஆகப்போகுது. லவ் யு அப்பா அண்ட் மிஸ் யு’ என சில கண்ணீர் துளி சிந்த எழுதி இருந்தது.
ஜூன் 17,
‘வாவ்… என் லைப்ல மறக்கமுடியாத நாள் இது தான். என்னோட தேவதை என் வாழ்க்கையில் வந்துட்டா. எவளோ சந்தோசம்மா இருக்கு தெரியுமா. அழகா குட்டியா கியூட்ட இருந்தால். பாஸ்ட் இயர் போல இது வரைக்கும் யாரை பார்த்தும் வராத ஒரு பீல் அவளை பார்த்ததும் வந்துச்சு. ஐ திங்க் இது தான் லவ் அட் பிரஸ்ட் சைட் போல’ என அவனின் சந்தோசம் அவனின் கையெழுத்தில் பிரதிபலித்தது.
அதன் பின் படித்தது அவனுக்கு தெரிந்ததாக தான் பலதும் இருந்தது.
மதியின் பிறந்த நாளிற்கு முன்,
‘இன்னும் ரெண்டு நாளில் மதிக்குட்டிக்கு பிறந்த நாள் வருது. அன்னிக்கு தான் அவளுக்கு ப்ரொபோஸ் பண்ண போறேன். அதுக்கு முன்னாடி மகேஷ் அண்ணா கிட்ட இதை பத்தி பேசணும். நாளைக்கு அவங்களை போய் பார்க்கணும்’ என யோசித்து கொண்டே தூங்க சென்றான்.
மறுநாள், ‘அயோ எதோ சொல்லணும் னு வந்துட்டேன் பட் இப்படி சொல்றது. உங்க பாப்பாவை லவ் பண்றேன் சொன்ன கட்டையால் அடிக்க மாட்டாங்களா’ என தயங்கி தயங்கி மகேஷ் இருக்கும் அறைக்கு செல்ல அங்கே அவன் கேட்டதோ,
‘டேய்… உனக்கு ஒரு முறை சொன்ன புரியாத. நீ எவளோ பெரிய ஆளாவென இரு. எனக்கு அதை பத்தி கவலை இல்ல. இன்னொரு முறை எங்க விஷயத்தில் தலையிடாதா’ என கோபமாக போனில் கத்தி விட்டு அவன் இருக்கையில் அமர்ந்தான்.
தப்பான நேரத்தில் வந்துடோமோ என நினைத்து கொண்டே ‘அண்ணா’ என அழைக்க மகேஷ் அவனை பார்த்து ‘வாப்பா ஆதி இப்படி இருக்க வீட்டுக்கு வந்தும் ரொம்ப நாள் ஆகுது. லச்சு கூட உன்னை கேட்ட’ என சற்று முன் இருந்த மனநிலையில் இல்லாமல் சந்தோஷமாக கேட்க
‘நான் வரும் போது டென்ஷனா இருந்திங்க என்ன ஆச்சு’ என கேட்க ‘அவனிடம் சொல்லலாமா வேண்டாமா’ என யோசிக்க , ஆதியே ‘பர்சனல் என்றால் ஓகே அண்ணா. விடுங்க நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசலாம் தான் வந்தேன்’ என
‘என விஷயம் சொல்லு பா’ என “அண்ணா… உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்த உங்க மதியை எனக்கு கல்யாணம் பண்ணி தரீங்களா” என பதட்டமாக கேட்க,
முதலில் அதிர்ந்தாலும் பின் “எனக்கு உன் மேல நிறைய நம்பிக்கை இருக்க ஆதி. ஆனா பாப்பா வளர்ந்து இருக்காளே தவிர இன்னும் குழந்தை தான்பா. இப்ப அது மட்டும் பிரச்சனை இல்ல நீ வரும் போது நான் போனில் கத்தி கொண்டு இருந்தேனே ஏன் தெரியுமா’ என ஏன் என்று ஆதி பார்க்க,
“VJS கெமிக்கல் பேக்டரி தெரியுமா… அதோட எம்.டி வருண் கால் பண்ணி மிரட்டினான். எதுக்கு தெரியுமா அவனோட தம்பிக்கு நம்ப மதியை கல்யாணம் பண்ணி கொடுக்கணுமாம். அதுவும் ஆர்டரா தான் சொன்னான். நானும் மாமாவும் அவனை பத்தி விசாரிச்சதுல நல்ல மாதிரி சொல்லல. வேண்டாம்னு ஒதுங்கி போன மதியை தூக்கிடுவோம்னு சொன்னான். அதான் அவனை திட்டிட்டு போனினை வெச்சிட்டேன்” என அந்த வருணை பற்றி தெரியாமல் பேசி கொண்டு இருந்தான் மகேஷ்.
“பாத்துக்கலாம் விடுங்க அண்ணா. நான் பார்த்துகிறேன்” என்றவனை பார்த்து “உன்னை மாதிரி ஒருத்தனை தேடினாலும் எங்க பாப்பாவுக்கு கிடைக்க மாட்டாங்க” என தன் சம்மதத்தை சொல்ல பின் அவளின் அப்பா அக்கா என அனைவரின் சம்மதமும் பெற்று அவளின் பிறந்தநாளில் ப்ரொபோஸ் செய்தான்.
அனைவரும் கோவிலுக்கு புது காரில் செல்ல ஆதியால் வர இயலவில்லை. வீட்டில் இருந்த ஆதிக்கு மகேஷ் கால் செய்து,
“ஆதி எங்களை சுற்றி எதோ தப்ப இருக்கு. நேத்து நம்ப கூட்ஸ் போன லாரியில் எதோ தப்பான பொருள் இருக்கிறதா எனக்கு தகவல் வந்துச்சு. அதை அப்பவே போலீஸ் கிட்ட சொல்லிட்டு நாளைக்கு வந்து ரிட்டன் காம்ப்லின்ட் தரேன் சொன்னேன். பட் இப்ப எதோ பெரிய பிரச்சனையா தெரியுது. நான் பாப்பாவை இங்க பக்கத்தில் இருக்கிற கோவிலில் விட்டு போறேன் அவளை பிக் பண்ணிக்கோ. லொகேஷன் உனக்கு சென்ட் பண்றேன். அவளை பத்திரமா பார்த்துக்கோ” என தன் உள்ளுணர்வு எதோ தப்பாக நடக்க போவதை சொல்ல அதை சமாளிக்க தைரியமாக காரில் சென்றவன் பிணமாக தான் வந்தனர்.
மதியுடன் ஹாஸ்பிடல் சென்றவன் மூவரின் நிலை கண்டு பதறி போனான். மதியின் நிலை இதை விட மோசமாக இருந்தது. போஸ்ட் மார்ட்டம் முடிந்து அதில் அச்சிடேன்டில் இறந்தனர் என்று இருக்க அதில் கையெழுத்து போட்டு கிளம்ப செல்லும் போது அங்கு வேலை செய்யும் ஒருவன் அவனை கூப்பிட்டு,
‘சார் இது அச்சிடேன்ட் இல்ல கொல்லை. நானே பார்த்தேன் சார் அந்த அம்மா மட்டும் தான் அச்சிடேன்டில் செத்து இருப்பாங்க. ஆனா மத்த ரெண்டு பேர் உடம்பில் கத்தி குத்து இருந்தது சார். இவங்க எல்லாம் காசுக்கு ஆசை பட்டு இதை மறச்சிட்டாங்க. இதுனால உங்களுக்கும் கூட பின்னாடி பிரச்சனை வரும். மனசு கேக்கல சார் அதன் சொல்லிட்டேன். பார்த்து இருந்துக்கோங்க’ என்று சொல்லி விட்டு சென்றான்.
இந்த விஷயத்தை அவன் மதியிடம் சொல்லவில்லை. விஷ்னுவிடம் மட்டும் சொல்லிவிட்டு இதன் காரணத்தை கண்டு பிடிக்க முயன்றான். ஆனால் இருவருக்கும் பலன் முட்டையை தான் இருந்தது. ஆதிக்கு வருண் மேல் சந்தேகமாக இருந்தது. ஆனால் இப்பொழுது மதி தான் முக்கியம் என அவளை கவனிப்பதில் அனைவரும் முனைப்பாக இருந்தனர்.
அவளை சிரிக்க வைப்பதில் விஷ்ணுவும் கௌரியும் (மதனின் காதலி) போட்டி போட்டு கவலையை மறந்து சிரிக்க வைத்தனர். மதனும் விஷ்ணுவும் அவளை உடன்பிறந்த தங்கையாக பார்த்து கொண்டனர். மதனை விட விஷ்ணு அவள் தும்மினால் கூட துடித்து விடுவான். அவள் எங்கே சென்றாலும் நிழல் போல் ஒருவர் கூடவே வருவார். அது தான் அவளை சத்யா மற்றும் அவளை அடைய துடிக்கும் மற்றொரு ஜீவனையும் வெறி பிடிக்க வைத்தது. சரியான சந்தர்ப்பத்துக்கு இருவரும் காத்து இருந்தனர். அதுவும் வந்தது.
மதி “ப்ளீஸ் பா நான் பத்திரமா போயிட்டு வந்துருவேன். மாலதிக்கு உடம்பு சரி இல்ல இல்லனா அவ கூட போவேன். உனக்கு தான் வேலை இருக்கு நான் ஏன் போக கூடாது. உனக்கு ஏன் மேல பாசமே இல்ல” என அவனை பாவமாக பார்த்தால்.
ஆதி “நானும் விஷ்ணுவும் ப்ராஜெக்ட் விஷயமா வெளிய போகிற வேலை இல்லைனா நானே உன்னை கூப்பிட்டு போயிருப்பேன். சரி ஆறு மணிக்கு நீ வீட்டுல இருக்கணும். மதனும் கௌரியும் அவங்க ஒரு ரேசெப்டின் போறாங்க இல்லனா அவங்க கூட அனுப்பிருப்பேன். நானும் விஷ்ணுவும் பத்து மணிக்குள் வர பார்க்கிறோம். நீ வந்துட்டு மெசேஜ் பண்ணனும். அப்புறம் டோர்லாம் லாக் பண்ணிட்டு பத்திரமா இருக்கணும்” என குழந்தைக்கு சொல்லவது போல் சொன்னான். அவனுக்கு தெரியவில்லை இந்த ஒரு இரவு மதியை அவனிடம் இருந்து நிரந்தரமாக பிரிக்க போகிறது. தெரிந்து இருந்தால் அந்த ப்ராஜெக்ட் விஷயமாக போய் இருக்க மாட்டானோ என்னவோ. விதி யாரை விட்டது.
அடுத்த விஷயத்தை படித்த சித்து அதிர்ச்சியின் உச்சத்தி சிலையாக நின்றான். அவன் சிலையாகும் அளவுக்கு அன்று இரவு நடந்தது என்ன? அதில் சித்தார்த்தின் வாழ்க்கை கேள்விகுறி ஆகுமா?
அன்புடன்
நிலா…