காதல் 17

காதல் 17

 

சிரித்து கொண்டு இருந்த சித்துவின் மனதில் தோன்றிய சந்தேகம் அவனை இறுக்க செய்ய, தன் சந்தேகத்தை சற்று தள்ளி வைத்து விட்டு மேலும் படிக்க சென்றான்.

ஆதி மதியை கல்யாணம் செய்வதில் உறுதியாக இருக்கஅவனது நண்பர்கள் மதியின் நிலையை நினைத்து இந்த கல்யாணத்தில் சந்தோஷமாக இருக்க விஷ்ணுவோ,

மச்சான் நீ ரொம்ப அவசரப்பட்டு இந்த முடிவை எடுக்கிற டா. வேண்டாம் டா நான் அந்த பையன் கிட்ட பேசியது வைத்து சொல்றேன். அவன் நல்லவன் தான் அவனுக்கே மதியை கல்யாணம் பண்ணி வைக்கலாம் டா” என்று ஆதியிடம்  சொல்ல,

 “சாரி டா. இதை தவிர வேற எது கேட்டாலும் நான் உனக்காக பண்றேன் பட் யாருக்காகவும் என்னால மதியை விட்டு தர முடியாது” என சென்றுவிட்டான்.

இந்த பேச்சில் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ள, மதனும்  கௌரியும் அவர்கள் சண்டையின் காரணமே தெரியாமல் சமாதானம் செய்தனர்.

ஒரு நாள் ஆதியும் விஷ்ணுவும் தங்கள் வாக்குவாத்தை மறந்து மதியின் பிரச்சனையை பற்றி பேசும் சமயம் அந்த பக்கம் எதர்ச்சியாக வந்த கௌரி அவர்கள் பேசியதை கேட்டு வந்த சுவடே தெரியாமல் திரும்பி சென்றாள். இப்படியே செல்ல, ஒரு நாள் விஷ்ணுவிடம் ஆதி,

மச்சி நாளைக்கு நான் மதி கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்க போறேன்” என

“டேய் உனக்கு நான் சொல்றது புரியலை டா. மதிக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் தான் ஆனால் அது காதலா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது. இது உனக்கும் தான். உனக்கு அவ  உன் வாழ்க்கை முழுக்க உன்னுடன் இருக்கனும். அதற்கு அவளை கல்யாணம் பண்றது தான் தீர்வு இல்லை டா. ஒரு நல்ல நண்பனா  உன்னால கடைசி வரைக்கும் அவளை சந்தோஷமாக பார்த்துக்க முடியும்” என பொறுமையாக சொல்ல,

ஆதியோ”நான் அவளை காதலிக்கிறேன் டா.  என் உயிரை விட மேலாக அவளை நினைக்கிறேன். அன்றைக்கு மதியை வேற ஒருத்தன் கூட பார்க்கும் போது எவ்வளவு வலித்ததோ  அதை விட அதிகமாக வலிக்கிறது டா நீ சொல்றது. மதனை விட நீ தான் டா என்னை சரியாக புரிந்து கொள்வ என்று நான் நினைத்தேன். ஆனா நீ என் மனதில் என்ன இருக்கு என்று தெரிந்தும் அந்த பொறுக்கிக்கு என் மதியை கட்டி தர தயாராக இருக்க” என கோபத்தில் சத்தமாக கேட்க,

ஆதி…. நான் தானே உன் கிட்ட பேசிட்டு இருக்கேன் நீ சும்மா அவனை பொறுக்கி எல்லாம் சொல்லாத. உனக்கு என்ன தெரியும் அவனை பற்றி” என விஷ்ணு ஆதியின் சட்டையை பிடித்து கேட்க,

சபாஷ் மச்சான்…. இத்தனை நாளா இருந்த என்னை விட உனக்கு அவன் தான் முக்கியமாக போய்டான் இல்ல. ரொம்ப நல்லா இருக்கு டா” என்று விட்டு பின் அவன் கண்ணை பார்த்து  “எனக்கு ஒரு உதவி பண்றியாடா” என

விஷ்ணு “என்ன மச்சான்” என்று கேட்க” தயவு செய்து உன் மாமா வேலையை விட்டு எங்க வாழ்க்கையே விட்டு தூரமாய் போய்டு. திரும்ப வராமல் இருந்த போது எனக்கு ” என தன் நண்பன் தானாக இல்லாமல் யாரென்று தெரியாதவனுக்காக பேசிய கோபத்தில் வார்த்தையை விட,

 “உன் வாழ்க்கையா….. நீ என்னை மாமா என்று சொன்னதை விட இதை தான் என்னால தாங்க முடியவில்லை. என் அப்பா அம்மா எவ்வளவு சொல்லியும் உனக்காக உனக்காக மட்டும் தான் நான் இவ்வளவு தூரம் வந்து படிக்கிறேன். நீ இப்படி சொல்லுவ  என்று நான் கனவில் கூட நினைக்கலை டா. இத்தோடு உன் முகத்தில் விழிக்கவே  மாட்டேன் டா குட் பாய்” என யாரையும் நினைக்காமல் தன் செல்ல தங்கை ஆபத்தில் இருப்பது தெரிந்தும் அவர்களை விட்டு தூர யாரும்  நெருங்காத தூரத்திற்கு சென்றான்.

விஷ்ணு சொல்லாமல் சென்றது அனைவருக்கும் வலியை கொடுத்தாலும் மதிக்கும் ஆதிக்கும்  கூடுதல் வேதனையை தந்தது. விஷ்ணு சென்ற பின் ஆதியால்  தனியாக தன் தேடலை தொடர முடியவில்லை. மதியை கவனமாக அவளுக்கே தெரியாமல் பார்த்து கொண்டும் தனக்கு தேவையான ஆதாரத்தை தேடவும் முடியாமல் இதை யாரிடமும் சொல்லவும் முடியாமல் தவிர்த்தான்.விஷ்ணுவிடம் மட்டுமே பகிர்ந்தவன் இப்போது யாரிடம் சொல்வது, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் யோசிக்கும் போது,

கௌரி, “அண்ணா” என்று அழைக்க, அதுவரை தன் சிந்தனையில் முழுக்கி   இருந்த ஆதி அவள் புறம் திரும்பி,

என்ன மா இந்த நேரத்தில் இங்க இருக்க. பாரு மணி இப்பவே ஒன்பது ஆகப் போகிறது. கிளம்பு” என

“இப்ப கூட  என் கிட்ட சொல்ல கூடாதுல. அவ்வளவு அழுத்தம் உங்களுக்கு. என்ன அண்ணா இப்படி பார்க்கிறிங்க எனக்கு எப்படி தெரியுமா…… அன்றைக்கு” என

அன்றைய நாள் ஆதி விஷ்ணு மாடியில், “மச்சி நான் விசாரித்த வரைக்கும் மதி குடும்பத்திற்கு எந்த எதிரில் இல்ல குடும்ப பகையோ இல்லடா. நீ நினைத்த மாதிரி இதற்கு வருண்  தான் காரணமாக இருக்கும் டா. ஆனா எதற்கு என்ற காரணம் தான் தெரியலைஎன்று தான் விசாரித்த விசயங்களை விஷ்ணு கூற,

 ” அவன் எதோ பெரிய தப்பு பண்றதா மகேஷ் அண்ணா சொன்னாங்க டா ஆனா என்ன என்று சொல்லலை. நானும் பெருசா கேட்கலை. அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா பட்ட பகலில் கொலை அதுவும் மூன்று கொலை பண்ணிட்டு பணத்தால் இதை கார் விபத்தில் இறந்தா  மாதிரி பண்ணிருப்பான். பாவம் டா அவங்க எதோ தப்பா நடக்க போது என்று தான் மதியை பாதிலே இறக்கி  விட்டாங்க போல”என

“ஆமா டா. கொடுரமா வெட்டி இருக்காங்க. அவங்க பண்ற தப்பை கண்டு பிடிக்கனும். நீ மதி கூடவே இரு நான் ஆதாரத்தை தேடிப் பார்க்கிறேன்” என்றான் விஷ்ணு. 

ஆனால் அதன் பின் நடந்த பிரச்சனையால் அவனின் தேடல் முடக்கியது. இப்பொழுது கௌரி, “நான் அந்த வருண் பற்றிய ஆதாரம் அவன் பண்ற தப்பை நான் கண்டு பிடிக்கிறேன் அண்ணா” என அவனுக்கு உதவ தானாக முன் வந்தாள்.

ஆதி, “அவன் என்ன தப்பு பண்றானே  தெரியலை கௌரி. இதில் அவன் பொண்ணுங்க விசயத்தில் கொஞ்ச அப்படி இப்படி என்று நாங்க விசாரித்த வரைக்கும் தெரிந்தது. அப்படி இருக்கும் போது உன்னை எப்படி மா” என

“அண்ணா அவன் மூச்சு காற்று கூட என் மேல படாது. நீங்க கவலை படாதிங்க. நான் பார்த்திக்கிறேன். நீங்க மதியை பத்திரமாக பார்த்துக்கோங்க” என ஆதி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தன் முடிவை நோக்கி சென்றாள் கௌரி.  

கௌரி வருணுக்கு எதிராக ஆதாரம் திரட்டுவதாக சொல்லி சென்று ஒரு வாரம் ஆனது. 

இரவு மதியின் வீட்டில், ஆதி “மதிக்குட்டி ஒழுங்காக இதை சாப்பிடு   இந்த அர்த்த ராத்திரியில் நான் பரோட்டா க்கு எங்க போவேன்” என கையில் சாப்பாட்டு தட்டும் தலையில் சமையல்காரனை  போல ஒரு துண்டை கட்டிக் கொண்டு பார்பதற்கே பரிதாபமாக இருந்தான். 

ப்ச்…. ஆதி எனக்கு இப்பெல்லாம் நிறைய சாப்பிடனும் போல இருக்கு. இதுக்கு முன்னாடி பிடிக்காதது  எல்லாம் இப்ப ரொம்ப பிடிக்கிறது. எனக்கு பரோட்டாவே பிடிக்காது ஆனால் இப்ப பரோட்டா சாப்பிடனும் போல இருக்கு நான் என்ன பண்றது” என பாவமாக முகத்தை சுருக்கி கேட்பவளை திட்ட மனம் வராமல் கேட்டதை வாங்க பைக்கில் சென்றான். பாதி வழியில் போன் வர அதில் இருந்த கௌரியின்  பெயரை பார்த்து வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு பேச தொடங்கினான். 

சொல்லுமா கௌரி இந்த நேரத்தில் போன் பண்ணிருக்க எதாவது பிரச்சனையா” என்றதுக்கு

அதெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. நான் நிறைய விசயத்தை உங்க கிட்ட நேரில் தான் சொல்ல முடியும். நீங்க நாளைக்கு ஹைவேயில் இருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிற காஃபி டே யில் வெயிட் பண்ணுங்க எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு அதை முடிச்சிட்டு நான் அங்கு வரேன்” என்றவளுக்கு தெரியாதே அதன் வில்லங்கம். 

அவளிடம் பேசிவிட்டு மதி கேட்ட பரோட்டாவை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தான். மறுநாள் காலை, கௌரி ஹைவேயில் இருக்கும் பழைய இரும்பு குடோனில் நேற்று இரவு தவற விட்ட பென் டிரைவை தேடி வந்தாள். 

நேற்று இரவு ஆதிக்கு  கால் செய்யும் முன்சில சட்ட விரோதமான செயல்கள் இங்கு நடைபெறுவதாக தெரிந்து கொண்டு தனியாக வரும் போது பல ஆதாரங்கள் கொண்ட சிறிய பென் டிரைவை தொலைத்து விட்டாள். அதை தேடிய தற்போது இங்கு வந்துள்ளாள். அவள் செய்த தவறு இதை பற்றியும், இங்கு வருவதை பற்றியும் ஆதியிடம் சொல்லாததே.

காலையில் எழுந்ததும் என்றும் இல்லாத ஒரு தவிப்பும் படபடப்பையும் உணர்ந்த கௌரி காரணம் அறிய முற்படாமல்  தன் வேலையை கவனிக்க தொடங்கினாள்.

ஆள் நடமாட்டம் இல்லாத அந்த குடோனை நெருங்கும் சமயம் ஆதி போன் செய்தான். 

ஆதி, “கௌரி நான் காஃபி டே ரிச்  ஆகிட்டேன். நீ எங்கமா  இருக்க” என

அண்ணா நான் பக்கத்தில் தான் இருக்கேன் கொஞ்ச நேரத்தில் அங்க இருப்பேன்” என்று கூறி விட்டு பென் டிரைவை தேடும் சமயம் தன் அருகே நிழல் ஆடுவதைப் பார்த்து திரும்பியவள் அதிர்ந்தாள்.

அவளின் வெகு அருகில் வருண் நின்று கொண்டு அவளை அளந்து கொண்டு இருந்தான். நொடியில் தன்னை சுதாரித்துக் கொண்டு

ஹாய்… வருண் சார் நீங்க இங்க என்ன பண்றீங்க” என இயல்பாக கேட்பதை போல் கேட்க

நீ இங்க என்ன பண்ற பேபி….. நேற்று நைட் மீட் பண்ணலாம் என்று சொல்லிட்டு என்னை ஏமாத்திறீயே பேபி” என்று அவளை நெருங்கிய படியே சற்று குரலை உயர்த்தி கேட்க

தன்னை கண்டுக் கொண்டானே என நினைத்தவளுக்கு இதயம் வேகமாக துடித்து படபடப்பில் வியர்வை வழிய, மூச்சுக்கு திணறியதும் வருண் தந்த தண்ணீரை யோசிக்காமல் குடித்தாள்.

வருண், “எதுக்கு பேபி இவ்வளவு டென்ஷன்… பீ ஃப்ரீ சரி வந்த வேலை முடிந்ததா….. ” என கேள்வியாக அவளை பார்க்க

அதிர்ந்து அவனை பார்த்து, “எந்த வேலை சார்” என எதுவும் தெரியாதது போல் கேட்டுக் கொண்டே எதோ சரி இல்லை என்று உணர்ந்து ஆதியின் அலைபேசிக்கு  வருண் அறியாமல் அழைக்க

எதுக்கா…. மேடம் தான் பெரிய சிபிஐ மாதிரி என்னை பற்றி எல்லாமே கண்டு பிடிக்க என்னை இருபத்தி நான்கு மணி நேரமும் பின் தொடர்ந்ததை தான் சொல்றேன்……. ஆனா மேடம் அழகு மட்டும் இல்ல அறிவும் இருக்கே. மலையோட அடிவாரத்தில் இருந்து நோண்டி எடுத்திருக்க…. நாட் பேட் பட் முதல் நாளே உன்னை பார்த்துட்டேன். அப்புறம் ஏன் சும்மா இருந்தேன் என்று தானே பார்க்கிற….. என்ன செய்ய நீ பார்க்க செமையா இருந்தியா எதற்கு வேஸ்ட் பண்ணணும் என்று தான் சும்மா விட்டேன். இப்படி தனியா வந்து மாட்டிக் கொண்டாயே” என வில்லங்கமாக சிரிக்க

அவன் பேசிய அனைத்தையும் ஆதி பேசி வழியாக கேட்டுக் கொண்டே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து குடோனை நோக்கி தன் வண்டியில் வந்து கொண்டிருந்தான். 

டேய் பொறுக்கி பணம் சம்பாதிக்க எவ்வளவு வழி இருக்கு ஆனா நீ பண்றது பாவம் டா மிக பெரிய பாவம் அது உன்னை சும்மா விடாது நீ அதற்கான தண்டனையை அனுபவிப்பது உறுதி டா” என்றவளின்  குரலில் கோபத்திற்கு பதிலாக வழ வழவென இருக்க

அவளின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்த ஆதி எதோ தப்பாக நடக்க போவதை உணர்ந்து கொள்ள முடிந்தது. நினைத்தவுடன் அங்கே செல்ல அவன் என்ன சூப்பர் மேன்னா இல்லை ஸ்பைடர் மேன்னா… 

தன்னை பார்த்து கேவலமாக சிரிக்கும் அவனிடம், “என்னடா பண்ண என்னை” என்று நேரடியாக கேட்க

பரவாயில்லை…. எதோ நினைத்தேன் பட் மேடம் ரொம்ப ஸ்மார்ட் தான். இவ்வளவு அறிவு இருந்தும் என்ன பயன் நான் கொடுத்த தண்ணீரை எந்த தைரியத்தில் குடிச்ச” என அவளை பார்வையால் அளந்து கொண்டு கேட்க

கௌரிக்கு புரிந்தது எதனால் என்று இருந்தும், “டேய் நீ நி.. நினைச்சா நான் கிடைப்பேனா ?? நான் கௌரி டா…. கௌரி எப்பவும் மதனுக்கு மட்டும் தான் சொந்தம். உன்னை மாதிரி ஒருத்தனோட மூச்சு காற்று கூட என் மேல  படாது.. பெண்ணை போக பொருளாக மட்டும் பார்கிற உனக்கு எங்கடா தெரிய போகிறது… பெண் என்றால் நெருப்பு டா….. மொத்தமாக அழிச்சிடும்” என்று மேலே பேச முடியாமல் இருக்க

ஐய்யோ பேபி நீ பேசறது எல்லாமே வேஸ்ட் உனக்கே இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் தேவைப்படுவேன்” என விஷம புன்னகையுடன் கூற

அவன் கூறியதின் பொருளும், தன் உடலின் மாற்றத்தை உணர்ந்த கௌரி உயிரை விட மானமே முக்கியம் என்று நொடியும் தாமதிக்காமல் பக்கத்தில் இருந்த கூர்மையான இரும்பு கம்பியால் தன்னை குத்திக் கொண்டாள். இதை சற்றும் எதிர்பார்க்காத வருண் வடை போச்சேஎன்று சலித்து கொண்டே அந்த இடத்தில் இருந்து கிளம்பினான்.

அவன் கிளம்பிய அடுத்த நிமிடம் அங்கே வந்த ஆதி கௌரியின் நிலை கண்டு துடித்து போனான். 

கௌரிமா நான் அப்பவே சொன்னேன் வேண்டாம் என்று நீ கேட்காமல் இப்ப பாரு… வா மா சீக்கிரம் ஹாஸ்பிடல் போகலாம்” என அவளை தூக்க முயல

அண்ணா…… நான் பிழை… பிழைக்க மாட்டேன்….. இந்தாங்க” என்று பென் டிரைவை அவனிடம் தந்து விட்டு மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றது அவளின் ஆன்மா.  இதை கண்டு உறைந்து நின்றான் ஆதி. 

சில நாட்கள் பிறகு, பென் டிரைவில் உள்ளதை கண்டு கடும் கோபத்தில் இருந்தான் ஆதிரன். 

அதில், பல உயிர்களை காக்கும் மருந்துகளில் அதுவும் சாதாரண தலை வலி மாத்திரையில் கூட நடைபெறும் போதைப்பொருள் வியாபாரம்…….. 

ஆதி அவனால் முடிந்த அளவு வேகமாக சென்றும் கௌரியை அவனால் காப்பாற்ற முடியவில்லை. கௌரி இப்படி ஒரு முடிவை எடுப்பாள் என்று நினைக்காததால் வருண் ஒரு நிமிடம் திகைத்து பின் வடை போச்சேஎன்று அந்த இடத்தை விட்டு ஒரு நிமிடமும் தாமதிக்காமல் சென்றான்.

ஆதி தன் வண்டியை நிறுத்தி விட்டு கௌரியை தேடி கண்களை நான்கு பக்கமும் சுழல விட்டு கொண்டே வர, ஒரு இடத்தில அவனின் பார்வை அதிர்ந்து நின்றது.

கௌரிமா” என வேகமாக தரையில் ரத்த வெள்ளத்தில் இருந்த கௌரியிடம் சென்றான். “நான் தான் சொன்னேன், நீ வராத இதை நான் மட்டுமே பார்த்திக்கிறேன் என்று நீ தான் நான் சொல்ல சொல்ல கேட்காமல் வந்த இப்ப பார் மதன் கேட்டால் நான் என்ன சொல்வேன் மா. அவன் உடைந்து போயிடுவான். எல்லாத்துக்கும் நான் தான் காரணம்” என்று தன் முன் புலம்பும் உடன்பிறவா சகோதரனை பார்த்து,

அண்ணா ந…. நான் தான் சொன்னேன் ல அவன் மூச்சு காற்று கூட என் மேல படாது என்று. பாருங்க அவனால் என்னை தொடக்கூட முடியவில்லை. நீங்க ஏன் அண்ணா கவலை படுறிங்க. மதியை பத்திரமா பார்த்துக்கோங்க. மதன் கிட்ட சொல்லுங்க நான் அவன் கூட தான் இருப்பேன் என்று. எதாவது ஒரு ரூபத்தில் அவன் கிட்ட வந்து சேருவேன் என்றும் மாலதி…… அண்ணா மாலதி மதனை விரும்புற. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லமால் அவள் மதனை விரும்பறாள் அண்ணா. அவங்களை மட்டும் சேர்த்து வைங்க அண்ணா. அது தான் என்னோட கடைசி ஆசை” என பேச முடியாமல் பேச,

ப்ச்…. வாமா ஹாஸ்பிடல் போகலாம்” என அவளை தூக்க முயல 

அண்ணா…… நான் பிழை… பிழைக்க மாட்டேன்…… இந்தாங்க மதி ஜாக்கிரதை” என்று பென் டிரைவை அவனிடம் தந்து விட்டு மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றது அவளின் ஆன்மா. இதை கண்டு உறைத்து நின்றான் ஆதி.

கௌரியின் இறப்பு அனைவரையும் கலங்க வைக்க, மதன் பித்து பிடித்தவன் போல் தன் நிலை மறைத்து எந்நேரமும் குடியே கதி  என இருந்தான். சில நாள் கழித்து,

மதி, “ஆதி மதன் அண்ணா பாவம் டா. கௌரி என்ன டா தப்பு பண்ணா அவளுக்கு ஏன் டா இந்த தண்டனை. நல்லவங்க யாரையும் இந்த கடவுளுக்கு பிடிக்காத இல்ல பிடிச்சவங்க எல்லாரையும் முதலில் அவர் கூட கூப்பிடுகிறார். போ டா போய் அண்ணா கிட்ட பேசு டா. அவங்களை எப்படி டா இதில் இருந்து மீட்கிறது” என சற்று பயந்தவளாக கேட்க,

எனக்கும் நீ சொல்றது புரியுது மா. இருந்தாலும் நான் பேச போகும் போது எல்லாம் அவன் நிதானத்தில் இருந்தால் தானே நான் சொல்றது அவனுக்கு புரியும். சரி மாலதி…. மாலதியை உடனே அவங்க அக்கா கல்யாணம் முடிந்த உடன் வர சொல்லு. அவளால் மட்டும் தான் மதனை மாற்ற முடியும்” என மதியும் மாலதியை தொடர்பு கொண்டு நடந்ததை சுருக்கமாக சொல்லி அவளை உடனே கிளம்பி வர சொன்னாள். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அக்கா கல்யாணம் முடிந்த மறுநாள் அவள் மதனின் முன் இருந்தாள். 

மதனின் இல்லம், அதிகாலை 3 மணி அளவில் கோயம்புத்தூர் வந்த மாலதி நேராக மதனின் இல்லத்திற்கு செல்ல நினைத்தாள். ஆதி அவளுக்காக பேருந்து நிலையத்தின் வெளியே காத்திருக்க

அண்ணா….. நீங்க எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்து வந்தீங்க… எனக்கு மதன் வீடு தெரியாதா” என கோபமாக இருப்பதை போல் முகத்தை திருப்பி கொள்ள

எனக்கு உன்னையும் இழந்திருவேனோ பயமாக இருக்குமா என்று மனதில் நினைத்து கொண்டு, “மதனோட வீட்டு சாவி. எப்பமே என் கிட்ட ஒரு எக்ஸ்ட்ரா சாவி இருக்கும். உனக்கு யூஸ் ஆகும் என்று தான் கொடுக்க வந்தேன். மதனோட நிலைமை நீயே போய் பார்” என்று அவளை மதனின் வீட்டின் முன்
விட்டு சென்றான். குற்றவுணர்ச்சியில் தவித்து கொண்டு இருந்தான் ஆதி. தன்னால் தானே தன் நண்பன் இவ்வாறு இருப்பது என்று அவனை பார்பதையும் தவிர்த்தான். 

மாலதி இனி மதனை பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கையில் வீடு திரும்பியவனுக்கு கௌரி அன்று தந்த பென் டிரைவ் நியாபகம் வர, அதில் உள்ளதை அறிய வேண்டும் என வீட்டுக்கு வந்தான். 

மதி இன்னும் உறங்கிக் கொண்டு இருப்பதால் அவளை தொல்லை செய்யாமல் தனது மடி கணினியுடன் தனது அறைக்கு வந்தான். 

அதில், VJS பாராமெடிக்கல் இன்டஸ்டிஸ் பணத்திற்காக மக்களின் வாழ்க்கையில் விளையாட்டும் பண பேய்களை பற்றிய அறிக்கை மற்றும் சில வீடியோக்கள் இருந்தது. 

வருண், ஆளும் கட்சி மந்திரி சுதாகரனின் மகன். அரசியலில் இருக்கும் பல சுயநலவாதிகள் மத்தியில் சுய அறிவே இல்லாத ஒரு அரசியல் உறுப்பினர். அடிப்படை உறுப்பினராக இருந்தவரை மந்திரியாக மாற்றியது வரை வருண் தான். தந்தையை கைநாட்டாக  கொண்டு பல குற்றங்களை புரிந்து வந்தான். 

பணம் சம்பாதிக்கும் பேராசையில் நேர்மையாக போட்டி கம்பெனியுடன் போட்டி போடாமல் குறுக்கு வழியில் செல்ல தொடங்கினான். 

சாதாரண தலைவலி மாத்திரை முதல் உயிர் கொல்லி நோயான புற்று நோய் மருந்து வரை கலப்படம் இருப்பது வரை அந்த ரிப்போர்டில் இருந்து புரிய ஆனால் அந்த வேதியல் ஃபார்முலாக்களை கொண்டு தெளிவாக அவனால் என்ன அதில் கலந்து உள்ளது என கண்டறிய முடியவில்லை. 

பத்தாவது வரை தான் அறிவியல் படித்தவனுக்கு பேசிக் தாண்டி தெரிய வாய்ப்பு இல்லை தானே. 

கூகுள் ஜூ உதவியுடன் அதில் எதோ போதை மருந்து கலப்பது தெரிய வர முகம் சிவக்க கோபத்துடன் கையை இறுக்க முடி தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான். 

இங்கு மதன் விழிகள் சிவந்து கோபத்துடன் தன்னை அடித்த மாலதியை, கன்னத்தில் கையை வைத்து கொண்டு பாவமாக பார்த்தான். 

ஆதி மாலதியை வெளியே விட்டு சென்ற பின், தன்னிடம் உள்ள சாவியை கொண்டு உள்ளே சென்றவள் அதிர்ந்து சிலையானாள். 

மதன் தாடியுடன் பல பீர் பாட்டில்கள் சுற்றி இருக்க தன்னிலை மறந்து ஹாலிலே வெறும் தரையில் படுத்து உறங்கி கொண்டு இருந்தான். 

மதன் கண் முழித்ததும், “மாலதி! நீ இங்க என்ன பண்ற” என்று கேட்க

மதன் என்ன இது” என பக்கத்தில் இருந்த பாட்டிலை காட்டி கேட்க

இனிமேல் நான் வாழ்ந்து என்ன பண்ண போறேன் அதான் சாகலாம் என்று முடிவு பண்ணிட்டேன். சாக தானே போறேன்” என்று கூறி முடிப்பதற்குள் மாலதி அவனை தன் பலம் கொண்டு அறைந்து இருந்தாள். 

இதை சற்றும் எதிர்பார்க்காததால் பாவமாக மாலதியை பார்க்க

அவளோ கோபத்தில் காளியாக அவன் முன் நின்று, “என்ன சொன்ன சாகப்போறியா….. ஏன்டா ஒரு உயிரோட மதிப்பு என்னன்னு தெரியுமா உனக்கு நான் பிறந்த நான்கு மணி நேரத்தில் என் அம்மாவை இழந்தேன். அது எனக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா…. இருந்தாலும் இது வரைக்கும் இதை நான் யாரிடமும் சொல்லி ஆறுதல் தேடியது இல்லை”

நமக்கு பிடிச்சவங்க நம்மை விட்டு போயிட்டா எவ்வளவு வேதனை தரும் என்று எனக்கு புரியுது. அதுக்காக உன்னை அழிச்சிப்பியா…… லவ் பண்றவன்  எல்லாம் இப்படி ஆகிடுச்சுனா சாவது தான் தீர்வு என்றால் இந்நேரம் என்னை புதைத்த இடத்தில் புல் முளைத்து இருக்கும் ” என விரக்தியில் மெலிதாக புன்னகைத்து சொல்ல பின் அவளே

பார் மதன் இது தான் சந்தர்ப்பம் என்று உன் கிட்ட என் லவ்வை பற்றி பேச வரவில்லை. எனக்கு தெரியும் லவ் பண்றவங்க நமக்கு கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு மனவருத்தம் தரும் ஆனால் அதற்கு இறப்பு தான் தீர்வு கிடையாது. உனக்கு உன் கிட்ட பிடித்த விசயமே உன்னோட பொறுமை, எது நடந்தாலும் எதார்த்தமாக அதை எடுத்துகிற   உன்னோட குணம் தான். வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நமக்கு வாழ்வே பிடிக்காத மாதிரி ஒரு சூழ்நிலை எல்லாருக்கும் வரும் அதை தாண்டி வருகிறவன் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். எனக்கு வேற  என்ன சொல்றது என்று தெரியவில்லை. பட் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த கட்டத்தை நீ தாண்டி வந்திட்ட என்றால் நீ ஜெயிச்சிட்ட டா” என்று சொல்லி விட்டு வெளியே வந்தவள் அதுவரை கட்டுபடுத்திய கண்ணீர் கரை புரண்டு வந்தது மதனின் நிலையை நினைத்து. 

வீட்டில் ஆதி வருணை பற்றி அறிய, பென் டிரைவில் உள்ளதை பார்த்தான். 
சில மாதங்களுக்கு முன்பு

போதை மருந்து….. 

போதைப்பொருள்கள் போதை ஏற்றிக்கொள்வதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் மக்களால் உட்கொள்ளப்படுகின்றன. போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெறும் ஊறு விளைவிக்கும் பிரச்சனையாகும். இதனால் தனிமனிதன், சமுதாயம் என பல வகைகளிலும் பாதிப்புகள் ஏற்படும்” என்று பல தரப்பட்ட மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தாலும் போதைப்பொருள் நம் சமூகத்தில் ஒரு அங்கமாக மாறி விட்டது. 

போதைப்பொருட்களில் மதுபானம்,புகையிலை​, அபின், ஹெராயின்கஞ்சா, பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள் என பல வகைகள் அடங்கும்.

ஆனால் இன்னும் பெயர் வைக்காத பல போதை வஸ்துக்கள் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. 

ஒரு முறை அதற்கு அடிமையாகி விட்டால் அதில் இருந்து மீள்வது மிகவும் கடினமான ஒரு விஷயம். 

அதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்தான் வருண். போதை மருந்தை தான் தயாரிக்கும் மற்ற மருந்துகளில் கலந்தால் அனைவரும் தன் மருந்துக்கு அடிமை ஆவார் என எண்ணி அதை செயல்படுத்த தொடங்கினான். 

இதை அறிந்த சுதாகரன், “தம்பி நம் மருந்தில் எதோ தப்பா இருக்கிறது பா. நீ எதாவது பண்ணியா பா” என

ஐய்யோ…. என்ன ப்பா நான் உங்களை என்னவோ நினைத்தேன் ஆனா இவ்வளவு மூளை உங்களுக்கு எப்படி” என யோசிப்பது போல நக்கல் செய்ய

தம்பி முதலில் நம்ம தயாரித்த மருந்து மார்கெட்டில் நான்காம் இடத்தில் இருந்தது. ஆனா ஒரே மாதத்தில் நம்ம மருந்து மார்கெட்டில் முதலிடத்தில் உள்ளது. நான்கு வருடத்தில் இல்லாததை எப்படி ஒரே மாதத்தில் வர முடியும்” என்று கேள்வி கேட்க

அப்பா எனக்கு என்னை எதிர்த்து கேள்வி கேட்டால் பிடிக்காது. சரி அப்பாவாக போய்டீங்க அதனால் ஒரு ரகசியம் சொல்றேன்” என்றவனை  புரியாமல் பார்த்தார். 

என்னோட மருந்துக்கு எல்லோரையும் அடிமையாகி வைத்திருக்கேன். என்ன புரியவில்லையா. நான் ஒரு புது விதமான போதைப்பொருள் காமினேசனை தயாரித்தேன். அதற்கு முன்னாடி சும்மா ட்ரையல் பண்ணிருக்கேன். என்ன தெரியுமா phencyclidine மற்றும்  ecstasy என்ற போதை மருந்துகளை அதில் கலந்திருக்கேன். இன்னும் சிலதை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன். நான் ரொம்ப நாளா ஒன்றை தேடிட்டு இருக்கேன் அது மட்டும் கிடைச்சது என்றால் நம்ம மருந்தை அடிச்சிக்க யாராலும் முடியாது” என

அதில் பதறி ” அந்த இரண்டும் என்னடா பண்ணும் ” என்று பீதியுடன் கேட்க

ஒன்று மாய தோற்றத்தை உருவாக்கும் அவங்களோட வலி கவலை இதையெல்லாம் மறந்து புது உலகத்தில் இருப்பாங்க.  தன்னோட கவலையை மறக்க அவங்க கண்டிப்பாக இதை தொடர்ந்து சாப்பிடுவாங்க இல்ல இந்த மருந்தே அவங்களை சாப்பிட வைக்கும்”

அடுத்த மருந்து ecstasy இது ஒரு அருமையான மருந்து. இதை க்ளப் டிரக்ஸ் என்று சொல்வாங்க. இதனால் அதிக உணர்ச்சிகளை தூண்டப்பட்டு. சந்தோசம், அழுகை, கவலை, காமம் என எதிலும் அதிகம் தான்”  என சொல்லி சிரித்தவனை கவலையோடு பார்த்தார் சுதாகரன். 

சுதாகரன், “அதெல்லாம் சின்னவனை  கூட்டு சேர்க்க வேண்டாம். நீ மட்டும் பார்த்துக்கோ. இதுவே உன்னை அழிச்சிடுமோ என்று பயமா இருக்குபா. நீ பண்றது தப்பு. அது ஒரு நாள் உனக்கு புரியனும் என்று நான் வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று தனக்கு சட்ட சபை கூட்டம் உள்ளதாக சென்னை சென்றார். 

வருணுக்கு எந்த தடையும் இல்லாமல் இருந்த போது தான் அவனின் அழிவாக மதி அவன் வாழ்வில் நுழைந்தாள். நேரடியாக அல்ல மறைமுகமாக பாவம் அது அவனுக்கே தெரியவில்லை. 

வருண் ஒரு பெண்ணை தீவிரமாக தேடிக்கொண்டு இருந்தான். எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் ஒரே ஒரு சிறு மச்சத்தை வைத்து கொண்டு எவ்வாறு அவனால் தேட முடியும். ஆனால் காலம் அவனுக்கு சாதகமாக இருந்தது. 

ஒரு நாள் அவனின் தம்பி, “அண்ணா நான் ஒரு பெண்ணை லவ் பண்றேன் எனக்கு அவ வேண்டும். சோ எதாவது பண்ணி எனக்கு அவளை கலியாணம் பண்ணி வைய்ங்க” என

டேய் உனக்கு என்ன வயது ஆகிடுச்சுனு இப்போவே கல்யாணம் பண்ணி வைக்க சொல்ற” என கோபமாக கேட்க

எனக்கு அவ வேண்டும் அவ்வளவு தான். இந்தாங்க அவளோட ஃபோட்டோ பார்த்துட்டு சொல்லுங்க” என மதியின் புகைபடத்தை அவனிடம் கொடுத்தான். 

மதியின் முகத்தில் தெரிந்த குழந்தைத்தனமான சிரிப்பில் ஒரு நிமிடம் தடுமாறிய இதயத்தை அடுத்த நொடியே கட்டுப்படுத்தி பின் அவளை பற்றிய விவரங்களை சேகரிக்க சொன்னான். 

ஒரு நாள் ஒருவன் வருணுக்கு கால் செய்து, “தல நீங்க ஒரு பெண்ணை பற்றி விசாரிக்க சொன்னங்கல ஒரு நல்ல சேதி சொல்லவா” என

என்ன விசயம் முருகா எனக்கு நிறைய வேலை இருக்கு சீக்கிரம் சொல்லு” என

தல ஒரு பெண்ணை தேட சொன்னிங்களே அவ யாருனு கண்டுபிடிச்சிட்டேன். அவ போட்டோவை உங்களுக்கு அனுப்பியிருக்கேன் பாருங்க” என

கைபேசியை அனைத்து விட்டு போட்டோவை பார்க்க, அதில் தெரிந்த பிம்பத்தை கண்டு அதிர்ந்தான். தன் தம்பி விரும்பும் பெண்ணை தான் அவன் ஒரு ஆண்டாக தேடிக் கொண்டு இருந்தான். மேலும் அவளின் தகவலை படிக்க தொடங்கினான். 

இளமதியை பற்றி தம்பி சொல்லியது போல் அவள் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி. மீண்டும் முருகனுக்கு கால் செய்து

முருகா அந்த பொண்ணோட குடும்பத்தை பற்றி எல்லா டிட்டையில்ஸ் வும் எனக்கு வேண்டும். ஒரு சின்ன விசயத்தை கூட விடாமல் விசாரித்து சொல்லு” என்ற வருணிடம்

கண்டிப்பா தல ஆனால் தல அவ கூட படிக்கிற ஒரு பையன் மட்டும் தினமும் அவ நைட் கிளாஸ் முடித்து வரும் போது கூடவே பார்டிகாடு மாதிரி போறான். இது அந்த பெண்ணை பத்தி தெரிஞ்சுக்க நான் பாலோ பண்ணும் போது பார்த்தேன்” என

ஒ…. சரி நான் பார்த்திக்கிறேன் நீ நான் சொன்னதை மட்டும் செய்” என்று விட்டு பல நாள் தேடியவள் கிடைத்த சந்தோசத்தில் “எஸ்…. நீ கிடைச்சிட்ட இனி உன்னை மிஸ் பண்ண மாட்டேன்” என்று கூச்சலிட்டான் சந்தோசத்தில். 


வருண் மதியை நேரடியாக நெருங்க முடியாததால், ஒரு நாள் மகேஷ் மற்றும் மதியின் தந்தை அலுவலகத்தில் இருக்கும் போது அங்கு வந்து

ஹலோ நீங்க தானே மதியோட அப்பா” என

ஆமா நீங்க யாரு” என்ற கேள்வியோடு இருவரும் அவனை பார்க்க

உங்கள் வருங்கால மாப்பிள்ளை” என்றதும் இருவரும் “என்ன” என்று அதிர்ச்சியாக 

ஓ…. இருங்க முழுசா சொல்ல விடுங்க. நான் உங்கள் வருங்கால மாப்பிள்ளையோட அண்ணா. என்ன பார்க்கிறிங்க ஒழுங்கா உங்க மதியை என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் எல்லாருக்கும் நல்லது” என 

மகேஷ் “இங்க பாருங்க நாங்க இப்ப எங்க பாப்பாக்கு கல்யாணம் பண்ற ஐடியா வில் இல்லை. அதுவும் இல்லமால் நீங்க யாரு என்றே தெரியாது அப்படி இருக்க எப்படி நாங்க எதையும் யோசிக்காமல் மதியை உங்க தம்பிக்கு கட்டி கொடுப்போம். இது சரி வராது நீங்க வேற இடம் பாருங்க” என்று பொறுமையாக சொல்ல,

ஹ்ம்ம் நீங்க சொல்றது கரெக்ட் தான் என்னை பற்றி உங்களுக்கு தெரியாது தான் பட் நீங்க இருந்தால் தான் கல்யாணம் நடக்கணும் இல்ல பொண்ணு இருந்தால் போதும். நான் சொல்றது புரியும் நினைக்கிறன். ஏன் என்றால் உங்க பொண்ணு கூடவே உங்களால் எப்பவும் இருக்க முடியாது. படிக்கிற பொண்ணு தனியா தான் வெளியே போற வரால் நம்ம தானே பார்த்து இருக்கனும்” என நக்கலாக கூறுவது போல் மிரட்டினான்.

அதுவரை சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பிரபு “தம்பி நாங்க எல்லாரும் இருக்கிற வரை மதிக்கு எதுவும் ஆகாது ஆகவும் விட மாட்டோம்” என அவனை பற்றி தெரியாமல் வாயை விட

மனதில் இருந்தால் தானே என நினைத்து கொண்டு அவர்களிடம் “யோசிச்சு சொல்லுங்க ஆனால் பதில் எனக்கு சாதகமாக தான் இருக்கனும்” என்று கிளம்பிவிட்டான்.

மதியின் பிறந்தநாள் நெருக்கும் சமயம், ஒரு நாள் ஆதி மகேஷ்யை பார்க்க செல்லும் போது போனில் வருணிடம் கத்திக்கொண்டு இருக்க ஆதி கேட்கவும் அவனிடம் அனைத்தையும் கூறினான் மகேஷ். ஆனால் ஆதிக்கு அப்பொழுது அது ஒன்றும் பெரிய பிரச்சனை போல் தெரியவில்லை அதனால் மதியிடம் தன் காதலை அனைவரது சம்மதத்துடன் கூறினான்.

மதியின் பிறந்தநாள் அன்று அனைவரும் கோவிலுக்கு செல்வதாக சொல்ல சில வேலை காரணமாக ஆதி போக முடியவில்லை. தன் வேளையில் முழுக்கி இருந்த ஆதிக்கு மகேஷ் போன் செய்து,

ஆதி ஒரு சின்ன உதவி மட்டும் செய்ய முடியுமா” என்று தயக்கமாக கேட்க,

அண்ணா என்ன ஆச்சு எதாவது பிரச்சனையா” என 

ஆமாம் பா ஆனால் என்ன பிரச்சனை என்று தான் தெரியவில்லை. அன்றைக்கு நான் சொன்னேன்ல நம்ம சரக்கு வண்டியில் எதோ தப்பான பொருள் இருந்தது என்று அதுக்கும் வருணுக்கும் எதோ சம்மந்தம் இருக்கும் போல. எனக்கு போன் பண்ணி அதை பற்றி காம்பிளான்ட் பண்ண வேண்டாம் என்று மிரட்டினான். நான் அது எல்லாம் முடியாது கண்டிப்பா காம்பிளான்ட் பண்ணுவேன் என்று சொல்லிட்டேன். அவன் சரி இருந்தால் பண்ணுங்க என்று சொல்லிட்டு கடைசியா எனக்கு மதி கண்டிப்பா வேண்டும் அவ உயிரோட இருந்தாலும் சரி இல்லனாலும் சரி என்று சொல்லிட்டு போன் வைச்சிட்டான்” என 

என்ன அண்ணா சொல்றிங்க இது எதோ பெரிய பிரச்சனையா இருக்கும் போல நீங்க இப்ப எங்க இருக்கீங்க என்று சொல்லுங்க நான் அங்க வரேன்” என 

நான் உனக்கு ஒரு லொகேஷன் ஷேர் பண்றேன் அங்க மதியை இருக்க சொல்றேன் நீ அவளை மட்டும் கூப்பிட்டு கொண்டு போ. எனக்கு யாரோ பாலோவ் பண்ற மாதிரியே இருக்கு. நாங்க மட்டும் காரில் வரோம்” என்றவனுக்கு தெரியவில்லை இனி அவனால் வர முடியாது என்று.

எதுக்கு அண்ணா மதியை மட்டும் தனியா கூப்பிட்டு போக சொல்றிங்க. சரி நான் பார்த்துகிறேன். நீங்களும் பார்த்து வாங்க” என்றவனுக்கும் விதியின் விளையாட்டு தெரியாதே.

காரில் சென்று கொண்டு இருந்த அவர்களை கூலியால்  வைத்து வெட்டி விட்டு அதை அச்சிடேன்ட் ஆகவும் மாற்றி விட்டான் வருண்.

மதியை யாரும் இல்லாத அனாதையாக மாற்றினால் தன் வேலை சுலபமாக இருக்கும் என்று நினைக்க அதற்கு நேர்மாறாக அவளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டு இருந்த அவளின் நண்பர்கள் மேல் கொலை வெறியே வந்தது. 

ஆதி அவளின் காதலன் என்ற தகவல் அவனை வெறியை தர, “முருகா அந்த ஆதியை பற்றி தகவல் எனக்கு வேண்டும் டா. பின்னாடி அவன் பிரச்சனையாக வர கூடாது” என்று விட்டு தக்க சமயத்திற்கு காத்திருந்தான். 
அந்த சமயமும் வந்தது, மதி தனியாக அவளின் தோழியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்வது தெரிய முருகன் மூலம் பின் தொடர சொன்னான். 

முருகன் வருணுக்கு கால் செய்து, “தல நீங்க சொன்ன மாதிரியே நான் பார்ட்டியில் தான் இருக்கேன் ஆனால் ஒரு சின்ன பிரச்சனை” என

என்னடா பிரச்சனை” என்று சலிப்பான குரலில் கேட்க

இங்க வேற யாரோ நம்மை மாதிரியே அவளை தூக்க பார்க்கிறான். ஒரு குளிர்பானத்தில் எதோ மயக்க மருந்து போல அதை போட்டு அவ கிட்ட வெயிட்டர் முலமாக கொடுக்க சொல்லி இருக்கான். இப்ப என்ன செய்ய” என்று கேட்க

அவனை அப்பறம் பார்த்துக்கலாம்  நீ அந்த ஜூஸை மாற்றி அதற்கு பதிலாக வேற ஜூஸில் நம்ம மாத்திரையை போட்டு கொடு.  மாத்திரை கையில் இருக்கா” என்று கேள்வியுடன் முடிக்க

இருக்கு தல நான் பொண்ணை தூக்கிட்டு கூப்பிடுறேன்” என்று சத்யா கொடுத்த ஜூஸை மாற்றி மதியிடம் கொடுத்தான். 

அவள் சிறிது நேரத்தில் தோழியிடம் விடை பெற்று செல்ல சத்யா அவள் பின்னே செல்ல, இருவரையும் பின் தொடர்ந்தான் முருகன். 

சத்யா அவளை காரின் பின்னர் படுக்க வைத்து போன் பேச செல்ல அவன் அசந்த  நேரம் பார்த்து முருகன் அவளை அங்கு இருந்து சற்று தள்ளி அழைத்து வந்தான். தன் ஆட்களுக்கு கால் செய்து இருக்கும் இடம் கூற நினைக்க அந்தோ பரிதாபம். அவன் போன் உயிரற்று கிடந்தது.  இது தான் விதியின் விளையாட்டு போல். 

மதி மயக்கத்தில் இருப்பதாக நினைத்து யாரிடமாவது போன் கேட்க செல்ல, அதுவரை போதையில் கண் முடி கிடந்தவள்

நான் யாரு….. எங்க இருக்கேன்” என யோசித்தவளை பின்னிருந்து ஒருவன் அனைத்து

பேபி டால் வந்திட்டியா… எவ்வளவு நாள் உனக்காக வெயிட் பண்றது. மீ பாவம் தானே” என்றவனின் குரலில் பல நாள் தேடியது கிடைத்த சந்தோஷம். 

யார் நீ. இங்க என்ன பண்ற முதலில் நான் யாரு” என முகத்தை சுருக்கி கேட்டவளின் கன்னத்தில் முத்தத்தை வைத்து

லட்டு மாதிரி இருக்கிறியே மாமாவை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட. புருஷனை பார்த்து கேட்கிற கேள்வியா இது” என 

புருஷனா…. இரு எனக்கு கல்யாணம் ஆகிடுச்சா நான் தான் மறந்திட்டேனா ஆமா என் தாலி எங்க” என கழுத்தை தொட்டு பார்த்து கேட்க

தாலியா” என்று யோசித்து தன் கழுத்தில் இருந்த சங்கிலியை எடுத்து அவள் கழுத்தில் போட்டு “இதை எப்பவும் எடுக்காதே. இது தான் தாலி” என்றவன் அவளை அழைத்து செல்ல

திரும்பி வந்த முருகன் மதியை காணாமல் திகைத்து நிற்க, பின் சுதாரித்து அவளை தேட விதி அவளை ஒளித்து வைத்து விளையாடியது. 

பின் வருணுக்கு தெரிந்து தேட பலனோ பூஜ்ஜியம் தான். பின் சத்யாவை ஆள் வைத்து அடி பின்னி விட்டான் வருண். 

வருணை பற்றி அறியாத சத்யா ஆதி தான் அடித்ததாக நினைத்து இருந்தான். 

அதன் பின் மதியை இன்னும் கவனமாக ஆதி பார்த்து கொண்டதால் வருணால்  அவளிடம் நெருங்க முடியாமல் போனது. 

மதி அனைவரையும் இழந்து, இப்போ நடந்த நிகழ்வால் கௌரியையும் இழந்து உள்ளனர்.

####

ஆதி இதுவரை கௌரி அவனுக்காக விசாரித்து வைத்துள்ள விவரங்களை பார்த்து கொண்டு இருந்தவனுக்கு வருணை நேரடியாக சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

வருணுக்கு எதற்காக மதி வேண்டும், எதற்காக அவன் எது எல்லாம் செய்கிறான் இதற்கு ஆதாரம் இருந்தால் அவனை போலீஸ் ல மாட்டி விடலாம் என்று அவன் ஒரு வாரமாக யோசித்து ஆதாரத்தை அவனே தேடி எடுக்கலாம் என்று அவனிடம் செல்ல நினைத்தான்.மாலதியை  மதிக்கு துணையாக இருக்க சொல்லிவிட்டு அவன் கிளம்பி சென்றான் அவனின் இறப்பை தேடி.

@@@@@

அதுவரை தான் இருந்தது அந்த டைரியில். படித்த சித்தார்த் கௌரியையும் ஆதியையும் நினைத்து ஆச்சரியம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. தோழிகாக கௌரியும் காதலிகாக ஆதியும் அவர்கள் உயிரை துச்சமென நினைத்து காப்பாற்றயதை நினைக்க உடல் சிலிர்த்தது. 

வருண் இந்த பெயரை அவன் வாழ்வில் எங்கோ கேட்டது போல் இருக்க, கதிரிடம் கேட்கலாம் என நேரத்தை பார்த்தால் அது மணி இரண்டு என்று காட்ட

பரவாயில்லை எனக்கு தெரிந்ததால் தான் நிம்மதிஎன கதிரை அழைக்க

ஹலோ யார் வேண்டும்” தூக்க கலக்கத்தில் வந்தது கதிரின் குரல். 

சாரி கதிர் தொல்லை பண்றதுக்கு” என

பாஸ் நீங்களா நான் போனை பார்க்கலை சொல்லுங்க என்ன விசயம் இந்த நேரத்தில் கால் பண்ணிருக்கிங்க”

ஒரு டவுட் டா ஒரு வருஷம் முன்னாடி நம்ம ஒருத்தனை இரண்டு நாள் குடோனில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து கொன்றோமே அவன் பெயர் என்ன” என்று தன் சந்தேகம் உண்மையா என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்க

நல்லா வருவீங்க பாஸ் பெயர் கூட தெரியாமல் தான் அவனை கொன்னிங்களா…. இதில அவார்டு வாங்கினால் மாதிரி பில்டப் வேற” என வார

கதிர்” என்று ஹை பிச்சில்  கத்த

கோபப்படாதீங்க அந்த நாயீ பெயர் வருண் நினைக்கிறேன்” என்றதும் கால் கட் ஆகியிருந்தது. விட்ட தூக்கத்தை தொடங்கினான் கதிர். 

வருண்…. விதி என்னை வெச்சி நல்லா விளையாடி இருக்கு. பார்த்தியா ஆதி நம்ம முன்று பேரையும் விதி ஒன்று சேர்த்து அப்படி விளையாட்டி இருக்கு. நம்மை இனைத்து வைத்திருக்கு. கண்டுபிடிச்சிட்டேன் இதையெல்லாம் யார் பண்றாங்கனு. ஆனால் இன்னும் புரியாத ஒன்று மதியை எதற்காக கொல்ல நினைக்கிறாங்க. இதற்கு நீ மட்டும் தான் விடை சொல்ல முடியும் என்னவென்றால் வருண் இப்ப உயிரோடு இல்லை. நீயும் உயிரோடு இல்ல தான் ஆனால் எனக்கு கண்டிப்பாக தெரியும் நீ இதை சேர்ப்ப என்று. வெயிட்டிங் ஃபார் தட் மும்மென்ட்” என்று தனது பையில் ஆதியின் டைரியும் அவனை கவர்ந்த மதியின் ஒரு புகைப்படத்தையும் போட்டுக்கொண்டு காரில் சிங்கார சென்னை நோக்கி வந்தான். 

அங்கு அவனுக்கு இதை விட மிக பெரிய அதிர்ச்சி காத்திருப்பதை அறியாமல். 

அன்புள்ள
நிலா