காதல் 18

IMG-20200525-WA0002-1

காதல் 18

புலர்ந்தும் புலராத காலை வேலை, இதமான காலை தென்றல் சித்தார்த்தின் கேசத்தை கலைத்து விட அதனை சரி செய்து கொண்டே, 

“லட்டுமா உன்னை பார்க்கனும்…. உன்னோட வாழ்க்கையில் உனக்கு கிடைக்காமல் பாதிலே நின்ற பாசத்தை காதலை உனக்கு நிறைய கொடுக்கனும். தொலைந்த உன்னோட சிரிப்பை நிம்மதியை சந்தோசத்தை திருப்பி கொண்டு வரனும். உன் கிட்ட என் காதலை சொல்லனும். நீ நான் அபி…. ” என்று தன் மனம் போன போக்கில் பேசிக் கொண்டு வந்தவன் அபியை பற்றி என்னியதும் திகைத்தான். 

இப்ப அபியை பற்றி யோசிப்பதா  இல்லை மதியை சூழ்ந்து உள்ள ஆபத்தை பற்றி சிந்திப்பதா என்று யோசித்து பின் தற்போது மதியை காப்பதே முக்கியம். அதை முடிந்த பின் அபியை பற்றி அப்புறம் பேசிக்கலாம்  என்று நினைத்தவனுக்கு  தெரியவில்லை அபியை பற்றி உண்மை அவன் எதிர்பாராத நபரிடம் இருந்து எதிர்பாராத உண்மை வர போகிறது. 

சென்னையை நெருங்கும் சமயம் சத்யாவிற்கு  போன் செய்து, 
“ஹலோ சத்யா… திஸ் இஸ் சித்தார்த் கிருஷ்ணா” என கம்பீரமான குரலில் சொல்ல

“சொல்லுங்க சித்தார்த் இவ்வளவு காலையில் போன் பண்றிங்க எதாவது பிரச்சனையா” என்று கேட்க

“சாரி சத்யா இவ்வளவு சீக்கிரம் கால் பண்ணி டிஸ்டர்ப் பண்றதுக்கு. எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா” என்று தயக்கத்துடன் கேட்டான் சித்தார்த். 

“தயங்காமல் கேளுங்கள் சித்தார்த். என்னால் முடிந்த உதவியை செய்றேன்” என்றவுடன் அவனிடம் வருணை பற்றி  சொல்லி, 

“வருணுக்கு ஒரு தம்பி இருக்கான் சத்யா. எனக்கு தெரிந்த வரை அவன் தான் மதியை கொல்ல நினைத்து இருக்கலாம். சோ நீங்க எனக்கு வருணின் தம்பி யார் இப்ப என்ன செய்றான்  என்பதை கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியுமா” என்று கேள்வியாக முடிக்க, 

“கண்டிப்பாக விசாரித்து சொல்றேன் சித்தார்த். மதியை பத்திரமாக பார்த்துக் கொள்” என்று போனை வைத்தான். 

சத்யாவிடம் பேசிக்கொண்டே மதி தங்கியிருந்த மருத்துவமனைக்கு வந்தான் சித்து. 

இரு தினங்களாக காணாத தன் உயிரை காண அவள் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்தான். 

“நர்ஸ் என்ன பண்றீங்க” என்று உள்ளே நுழைந்ததும் சித்து கேட்க, அவனின் சத்தத்தில் ஓரமாக தூங்கி கொண்டிருந்த கதிர் அடித்து கொண்டு எழுந்தான். 

நர்ஸ், “ஒன்றுமில்லை சார் மேடமிற்கு மாத்திரை தரனும் அதான் எழுப்பலாம்னு வந்தேன்” பதட்டத்தில் நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்து கொண்டே சொல்ல, 

“என்னை எழுப்பி இருக்கலாமே சிஸ்டர். நான் அவங்களுக்கு மாத்திரை தர மாட்டேனா” என்று கதிர் கேட்க, 

நர்ஸ் பேசும் முன் சித்து, “நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன். சீஃப் டாக்டர் வந்தால் சொல்லுங்க” என்று நர்ஸை பார்க்க வேகமாக தலையை ஆட்டி விட்டு தப்பித்தால் போதும் என்று வெளியேறினார். 

‘என்ன ஆச்சு இந்த சிஸ்டருக்கு’ என்று யோசித்த கதிரின் முதுகில் சுர் என்ற வலியால் திரும்பி பார்க்க, சித்து கோபத்துடன் முறைத்துக் கொண்டு இருந்தான். 

“ஐய்யோ பாஸ்….. எதுக்கு இப்ப அடிச்சிங்க போங்க பாஸ்” என்று திரும்பி கொள்ள

“கொன்னுடுவேன் உன்னை….. அந்த நர்ஸ் எதோ தப்பான எண்ணத்துடன் தான் மதி கிட்ட போயிருப்பா என்னை பார்த்ததும் எவ்வளவு படபடப்பு அவளுக்கு” என்று கோபத்தில் கையை முறுக்கி கொண்டு சொல்ல

“அப்புறம் ஏன் பாஸ் எதுவும் கேட்காமல் விட்டிங்க” என்றான் ஆதங்கத்துடன்

“பொறுத்தார் பூமி ஆள்வார் கதிர். பாரு இவ்வளவு சத்ததிலும் கும்பகர்ணன் தங்கச்சி மாதிரி தூங்கிறாள்” என்று தன்னை சுற்றி நடக்கும் எதுவும் நமக்கு முக்கியம் இல்லை என்பதை போல் தூங்கும் மதியை நெருங்கி கொண்டே கேட்க, 

வாடிய கொடியாய் படுத்திருந்த போதும் உதட்டில் எப்பொழுதும் இருக்கும் புன்சிரிப்பு அவளை அழகியாய் மேலும் காட்ட, மெதுவாய் அவளை நோக்கி குனிய அவனின் செயலில் பதறிய கதிர் “பாஸ்” என்று அழைக்க, 

அதுவரை இருந்த மோன நிலை கலைந்து “அடங்கு… என்ன வேண்டும் டா முதல வெளியே போ. நான் சொல்லும் போது வா” என்று கடுப்பாக கூற

‘முதலே போய் இருக்கலாம் கூப்பிட்டு இந்த அசிங்கம் தேவையா’ என்று தன்னையே கடிந்து கொண்டு வெளியேறினான். 

மதியின் தலையை கோதிக் கொண்டே நெற்றியில் முத்தம் வைக்க, அவன் அருகாமையை உணர்ந்து, 

“உன் பேச்சு கா சித்து…. என் கிட்ட இரண்டு நாளால நீ பேசவே இல்லடா. நான் உன் மேல கோபமாக இருக்கேன். பேசாத போ” என்று தூக்கத்தில் புலம்ப

“சரி சாரி டி உன் புருஷன் தானே மன்னிக்க மாட்டியா” என்று மென்மையான குரலில் கேட்க, 

“யோசிக்கிறேன்” என்றவளின் அருகே தானும் அதே மெத்தையில் அவளை அணைத்தவாரு படுத்து கொண்டான். 

சிறிது நேரத்தில் களைப்பின் காரணமாகவும் தன்னவளின் அருகாமை தந்த நிம்மதியிலும் தூங்கி போனான். 

வெளியே இருந்த கதிர், “இவ்வளவு நேரமாச்சு கொஞ்ச நேரத்தில் சித்து அம்மா மார்னிங் டிஃபன் எடுத்துட்டு வருவாங்க” என நினைக்கும் போதே அவர் அபியுடன் அங்கு வந்தார். 

“டேய் கதிர் மதியை தனியா விட்டு இங்க என்ன கனவு கண்டுட்டு இருக்க” அவனின் தலையில் கொட்ட அவனோ “ஆன்ட்டி” என்று சினுங்கி  கொண்டே அவரிடம் இருந்த அபியை வாங்கி கொண்டான். 

இருவரும் உள்ளே சென்று அவர்களின் நிலையை பார்த்து அதிர்ந்தனர். கதிரை பார்த்து முறைக்க பதறிக் கொண்டு சித்துவிடம் சென்று, 

“பாஸ்” என்று சுரண்ட,  அவனோ “ப்ச்…. லட்டு சும்மா இருடி” என, 

அதற்குள் சித்துவை பார்த்த அபி, “ப்பா” என்று கத்த அவனின் ஒரு சொல் சித்திவின் காது வழியாக இதயத்திற்கு சென்றது. அடுத்த நிமிடம் எழுந்து அவன் முன் இருந்த அபியை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தான். 

இருவரும் தனி உலகில் இருக்க எதிரே தீடிரென வந்த தாயை பார்த்து அதிர்ந்தான் என்றால் அவர் அடுத்து கேட்ட கேள்வியில் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தான். 

சித்தார்த் வந்ததை அறிந்து அவன் சொன்ன பெண்ணை காண வந்த அவனின் நண்பன் அவரின் கேள்வியில் சிலையாகி அறையின் வாயில் நின்று விட்டான். 

சித்து அபியுடன் விளையாடிக் கொண்டே திரும்ப அங்கே கோபத்துடன் அவனை முறைத்த வண்ணம் இருந்த தாயை பார்த்து, 

“அம்மா…. எப்ப வந்தீங்க” என்று திகைப்புடன் கேட்க

அவரோ, “நான் வந்தது இருக்கட்டும் அபி உன் பையனா சித்து” என அழுத்தமாக கேட்க, 

தாயின் எதிர்பாராத கேள்வியில் அதிர்ந்து தாயையும் அபியையும் மாறி மாறி பார்க்க, அறையில் நுழைய வந்த சித்து வின் நண்பன் சிலையானான். 

“சொல்லு சித்து” என்று திரும்பவும் கேட்க

ஐய்யோ என் லட்டு கிட்ட லவ்வை சொல்லாமலே ஹாஸ்பிடலில் நான் தான் புருஷன்னு சொல்லிட்டேன் இப்ப அம்மா வேற அபியை பத்தி கேக்கிறாங்க கடவுளே என மனதில் புலம்பிக் கொண்டே “ம்மா  அபி…… நானும்….. நான்.. அபி.. லட்.. ப்ச் மதி.. ” என கோர்வையாக பேச முடியாமல் தவிக்க வாசலில் எதோ நிழலாடுவது போல் இருக்க திரும்பி பார்த்தான். 

“மச்சான்… வாடா எப்ப வர சொன்னால் இப்ப வர.. வா அம்மா யார் வந்திருக்கானு பாருங்க” என தெய்வமாய் வந்த நண்பனை கட்டி கொள்ள, 

பவாணியும் அவனை வரவேற்க, இதுவரை மருந்தின் வீரியத்தால் உறங்கி கொண்டு இருந்த மதி, சத்தம் கேட்டு கண் விழிக்க அவள் கண்டது உண்மையா என மீண்டும் கண்ணை கசக்கி கொண்டு பார்க்க, 

“அண்ணா.. ”  என அழைக்க திரும்பியவன் மதியை கண்டு “பாப்பா” என அவளிடம் சென்று அவளை அணைத்து கொண்டான். 

“போடா நான் உன் மேல கோபமா இருக்கேன். எதுக்கு யார் கிட்டவும் சொல்லாமல் எங்கடா போன” என்றவளை சித்தார்த் கேள்வியாக பார்க்க, 

“சித்து விஷ்ணு டா….. இவனை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா… நான் ஆதியை விட இவனை தான் ரொம்ப மிஸ் பண்ணேன்” கண் கலங்கி சொன்னால் மதி. 

“என்ன பாப்பா சொல்ற… ஆதி… ஆதி நீ இங்க எப்படி அதுவும் சித்தார்த் கூட” கேட்டவனிடம் ஆதி, 

“மச்சான் நான் அப்புறம் சொல்றேன் டா. இப்ப லட்… மதியை இன்றைககு வீட்டுக்கு கொண்டு போகலாம்னு டாக்டர் கிட்ட கேட்கனும். கதிர் நீ இங்கே இரு. மா மதிக்கு சாப்பிட கொடுங்கள்” என்று அபியிடம் திரும்பி “பாப்புகுட்டி நீங்க அப்பா கூட வரிங்களா இல்ல ம்மா கூட இருக்கீங்களா” என்று கேட்க, 

என்ன புரிந்ததோ “ப்பா” என கைகளை தூக்க சித்து அவனை தூக்கி கொண்டு விஷ்ணுவையும் உடன் அழைத்து ச்சீப்  டாக்டரை பார்க்க சென்றான். 

மதிய வேலை கடற்கரை பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருக்க, ஒரு மூலையில் கொளுத்தும் வெயிலையும் புலப்படுத்தாமல் கடலை வெறித்து கொண்டு இருந்தான் விஷ்ணு. அவன் அருகில் சித்து மற்றும் கதிர் நின்றிருந்தனர். 

“மச்சான் எவ்வளவு நேரம் இப்படியே இருப்ப டா. நடந்தது க்கு நீ என்ன பண்ண முடியும்” என்று சித்து கேட்க

“இல்லடா எனக்கு நல்லா தெரியும் மதியை எவ்வளவு ஆபத்து சுற்றி இருக்குனு. இருந்தும் என் கோபத்தால் அவங்களை விட்டு விலகி வந்தேன். என்னால தானே டா கௌரி இறந்தா என்னால தானே டா ஆதியும் இறந்தான்” என்று அவன் சென்ற பின் நடந்ததை சொன்னதில் இருந்து தேய்ந்த டெக்காடர் மாதிரி சொன்னதே சொல்ல, 

“எவ்வளவு பிரச்சனை இருக்கும் போது நீ ஏன்டா ஆதி கூட சண்டை போட்ட அதுவும் கல்யாணம் பண்ண கூடாதுனு” என்று கேட்கும் சித்துவிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க, 

“ப்ச்…. முழிக்காத மச்சான் உண்மையை சொல்லு…. ஒரு வேலை அந்த ஹோட்டலில் நடந்த நிகழ்வால் அப்படி சொன்னியாடா” என்றவனை ஆச்சரியமாக பார்த்தான் விஷ்ணு. 

“என்ன ஆச்சரியமா பார்க்கிற நான் என்னடா செய்யறது உண்மையா யார் மதியை கொல்ல நினைக்கிறாங்கனு தெரிந்துக்க கோவையில் இருக்கிற ஆதி வீட்டுக்கு போனேன். அங்க தான் அவன் டைரி கிடைத்தது” என்று மௌனமாக விஷ்ணுவை பார்க்க

“நான் அவனை கல்யாணம் பண்ண கூடாதுனு சொன்னதுக்கு காரணம் மதிகுட்டி அவனை லவ் பண்ணலை டா. வீட்டில் எல்லோரும் சொன்னாங்க என்று மதி ஆதிக்கு ஓகே சொன்னாள். 

ஆனால் அங்க கண்டிப்பாக லவ் இல்லைடா. இன்னும் சொல்லபோனால் ஆதி கூட அவளை லவ் பண்ணலை. அவனுக்கு அவளை ரொம்ப பிடிக்கும். வாழ்க்கை முழுக்க அவன் கூட அவ இருக்கனும் என்ற அந்த பாசத்தை அவன் லவ்வுனு தப்பா புரிந்து கொண்டான். 

நான் நிறைய முறை இன்டாரக்கடா சொல்லி பார்தேன் அவன் கேட்கவே இல்லை. ஹோட்டலில் பார்த்த பையன் மதியை நல்லா காலம் முழுவதும் காதலோடு பார்த்துப்பான்னு தோன்றியது அதான் கேட்டேன். அவன் முடியாது என்று சொல்லிடான். நாங்க அதுக்கு தான் சண்டை போட்டு பிரிந்தோம். இப்ப பார்க்க முடியாத தூரத்தில் இருக்கான்” கவலையோடு சொன்னவருக்கு கதிர் ஆறுதல் கூறு, 

சித்து, “எப்படி மச்சான் உன் ப்ரெண்ட் மேல வராத நம்பிக்கை அந்த பையன் மேல வந்தது. அதுவும் கொஞ்ச நேரத்தில்” என்று கத்தாமல் அதே சமயம் அழுத்தமாக கேட்க, 

பெருமூச்சு விட்டு சித்துவின் கண்களை பார்த்து, “அது நீ என்று சொன்னால் என்ன பண்ணுவ சித்தார்த்” என்ற விஷ்ணுவை அதிர்ச்சியுடன் பார்த்தனர் சித்தார்த் மற்றும் கதிர். 

விஷ்ணு சொன்னது பொய்யாக இருக்க கூடாதா என்று நினைத்த கதிர் பாவமாக சித்துவை பார்க்க, சித்துவோ

“என்ன சொன்ன மச்சி” என்று தான் கேட்டது உண்மையா என்ற பயத்தில் குரல் நடுங்க கேட்டான்.

அவனின் நிலை புரிந்தாலும் உண்மை எந்த நாள் தான் மறைக்க முடியும் என்று “அன்று மதி கூட ஹோட்டல் ரூமில் இருந்தது நீ தான் சித்தார்த்” என்றான் அழுத்தமாக

“நா.. நானே மதிய அதுவும் அவளுக்கு தெரியாமல் ப்ச்…. நான் எல்லாம் மனிதனே இல்ல டா எது தெரிந்தால் மதி என் முகத்தை கூட பார்க்க மாட்டாள்” என்று கண்களில் கண்ணீரோடு சொன்னவனின் போன் அலற, அதை கட் செய்து பாக்கெட்டில் வைத்து பின், 

“அப்ப அபி… அபி என் பையனா டா” என்று கேட்டவனிடம்,  விஷ்ணு “ஆமாம் டா அபி உன்னோட பையன் தான். எனக்கு ஆதியை பற்றி நல்லா தெரியும் அவன் மதியை அது மாதிரி எல்லாம் நினைத்ததே இல்ல. அவனை பொறுத்த வரை மதி அவனோட பேபி” என்றான்.

“என்னடா நடந்தது எனக்கு எதுமே தெரியாதே” என்று பாவமாக கூறியவனிடம், 

கதிர் “பாஸ் நான் உங்க கூட வராதது தான் தப்பு. நான் வந்து இருந்தால் இது மாதிரி ஒரு நிலை வந்து இருக்காது”  என்றான் கவலையாக.

சித்து “என்ன நடந்தது விஷ்ணு” என்றவனிடம்,

அன்று சித்து மற்றும் அவனின் வேலையாட்கள் கொஞ்சம் பேருடன் கோவையில் நடைபெரும் சர்வதேச முதலீட்டுயாளர் கூட்டம் என்றதிற்கு வந்தான். 

மாலை, “வெங்கட் எனக்கு கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு நான் ஹோட்டேல்க்கு கிளம்புறேன்” என 

“சார் இந்தாங்க சார் டேப்லெட் நேத்து எனக்கும் தலை வலி அப்ப தான் இந்த டேப்லெட்டை மெடிக்கல் ஷாப்பில் வாங்கினேன். சீக்கிரமா சரியாகிடுச்சு” என்றான்.

“அப்படியா அப்ப இரெண்டா தாடா. கொஞ்சம் ப்ராஜெக்ட் ஒர்க் இருக்கு” என்று மாத்திரையை போட்டு கொண்டு காரில் ஹோட்டல் நோக்கி கிளம்பினான்.

பாதி வழியில் “ச்சை… தெரியாமல் ரெண்டா போட்டேன் ஒரு மாதிரி இருக்கே” என்று எண்ணி கொண்டே காரை பார்க் செய்து திரும்பி பார்க்க இத்தனை நாள் கனவில் வந்த அவனின் தேவதை அவன் கண் முன்னாள் இருப்பதை பார்த்து அவளிடம் சென்றான்.

“நான் யாரு….. எங்க இருக்கேன்” என யோசித்தவளை பின்னிருந்து ஒருவன் அனைத்து, 

“பேபி டால் வந்திட்டியா… எவ்வளவு நாள் உனக்காக வெயிட் பண்றது. மீ பாவம் தானே” என்றவனின் குரலில் பல நாள் தேடியது கிடைத்த சந்தோஷம். 

“யார் நீ. இங்க என்ன பண்ற முதலில் நான் யாரு” என முகத்தை சுருக்கி கேட்டவளின் கன்னத்தில் முத்தத்தை வைத்து, 

“லட்டு மாதிரி இருக்கிறியே மாமாவை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட. புருஷனை பார்த்து கேட்கிற கேள்வியா இது” என 

“புருஷனா…. இரு எனக்கு கல்யாணம் ஆகிடுச்சா நான் தான் மறந்திட்டேனா ஆமா என் தாலி எங்க” என கழுத்தை தொட்டு பார்த்து கேட்க, 

“தாலியா” என்று யோசித்து தன் கழுத்தில் இருந்த சங்கிலியை எடுத்து அவள் கழுத்தில் போட்டு “இதை எப்பவும் எடுக்காதே. இது தான் தாலி” என்றவன் அவளை அழைத்து சென்றான்.

அதன் பின் நடந்தது அனைத்தும் விதியின் விளையாட்டு. அமைதியாக இருந்த சித்துவிடம்,  

“உன்னை நான் மதி கூட தான் பார்த்தேன். ஆதி மதியை கூப்பிட்டு போய்ட்டான். ஆனால் எனக்கு உன் மேல செம கோபம். அதான் உன்னை அந்த ரூமில் இருந்து நான் அவசரமா ஒரு ரூமை புக் பண்ணி அங்க தூக்கிட்டு போனேன். உனக்கு நடந்தது எதுமே தெரியலை. உன் கிட்ட பேசும் போது தெரிந்து கிட்டேன்.  அதுக்கு அப்புறம் உங்க கூட எல்லாம் பேசி ரொம்ப கிளோஸ் ஆகிட்டேன். ஆதி கூட சண்டை போட்டு எங்க சென்னை வரும் போது நீ தான் டா எனக்கு ஹெல்ப் பண்ண. என்னோட போஸ்டிங் மும்பை ல போடவும் நீ தான் ஹெல்ப் பண்ண.  எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் சித்து என்னோட மதிக்குட்டிக்கு எப்படி ஒரு துணை வேண்டும் என்று நான் நினைத்தேனோ அப்படியே நீ இருந்த” என்று கூறியவனை ஆச்சிரியமாக பார்த்தான் சித்தார்த்.  

“அப்படி மச்சி எனக்காக ஆதி கூட சண்டை போட்ட”  என்று சித்து கேட்க,

“எனக்கே தெரியாது டா. ஆனால் ஆதி கிட்ட நான் பார்க்காத ஒன்றை உன் கிட்ட பார்த்தேன். என்ன தெரியுமா காதல். அன்றைக்கு நீ நிதானத்தில் இல்லாத போதே சொன்ன வார்த்தை என்ன தெரியமா ‘லவ் யு லட்டு இந்த உலகத்தில் நீ எங்க இருந்தாலும் உன்னை தேடி வருவேன். எந்த ஜென்மத்தில் மட்டும் இல்ல ஏழு ஜென்மத்திற்கும் நீ தான் என்னோட மனைவி. லவ் யூ’ என்று போதையில் உளறி விட்டு தூங்கியதை கூறிய விஷ்ணு பின்,

“இந்த விஷயத்தை எப்படி மதி கிட்ட சொல்ல போகிற” எண்றதுக்கு 

“தெரியலை டா” என்று பேசிக்கொண்டு இருக்கும் போது கதிர்க்கு போன் வர,

மதி என்று இருக்க எடுத்து ஸ்பீக்கரில் போட்டான், “டேய் மூன்று பேரும்  கொஞ்ச நேரத்தில் வீட்டில் இருக்கணும். காலையில் என்ன வீட்டில் விட்டு அப்படி என்ன தல போற வேலையை பார்க்க போனீங்க” என்று அவள் கேட்ட உடன் விஷ்ணு கதிரை பார்த்து சத்தமே இல்லமால் சிரிக்க,

“எங்க அந்த தண்ட சோறு” என்றவளிடம், “யாரு மதி” சிரித்து கொண்டே கேட்டான் கதிர்.

“அதான் டா என் உடன்பிறவா சகோதரன்” எண்றதுக்கு வாய் விட்டே சிரித்தான்.

  விஷ்ணு தான் இங்க இல்லைனு சொல்லு என்று சைகை செய்ய “அவங்க எதோ வேலைய கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் கிளம்பினாங்க”

“சித்து… சித்து எங்க டா” என்றவள் குரலில் என்ன இருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

“இங்க தான் இருக்காங்க தரவ” எண்றதுக்கு  “ம்ம்ம்ம்” என்றால் பொறுமையாக.

“சொல்லு மதி” என்றவனின் குரலில் கவலை தெரிய,

“என்ன சித்து வாய்ஸ் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு விஷ்ணு எதாவது சொன்னானா” என்று சட்டென்று கேட்க,

“இல்..இல்லையே எதுமே சொல்லலையே” என்று தடுமாறி சொன்னன்.

“சரி உன் மகன் உன்னை தேடிட்டு இருக்கான். எங்க இருந்தாலும் சீக்கிரம் வீட்டுக்கு வா அப்புறம் மதன் அண்ணா போன் பண்ணாங்க அப்ப சொன்னாங்க நீ அவங்க கிட்ட பேசியதை. அப்புறம் முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன் என்னோட காலேஜ் சீனியர் ஆதியோட கிளாஸ்மேட்  ஜெய் பிரகாஷ் கால் பண்ணான். நெஸ்ட் திங்கள் அவனுக்கு எங்கேஜ்மெண்ட் சோ வர சொல்லிருக்கான். நீயும் கூட வரணும் சொல்லிட்டேன்” என்று அவன் பதில் கூறும் முன் போனை வைத்து விட்டாள்.    

விஷ்ணுவும் கதிரும் சிரித்து கொண்டே சித்துவை பார்க்க, “எப்படி  மச்சான் உன் தங்கை நான் சொல்றதுக்கு முன்னைடியே பேசிட்டு நான் வரனா கூட கேட்காமல் போனை கட் பண்ணிட்டா”  என்று சிரித்தவனிடம் 

கதிர் “பாஸ் நீங்க பேசினால் வர மாட்டேன் என்று தான் சொல்லுவீங்க அதான் பேசறதுக்கு முன்னாடியே கால் கட்  பண்ணிட்டா”

“ஒரு விஷயம் கவனிச்சியா அவ அபியை உன் மகன் என்று தான் சொல்ற டா” என்ற விஷ்ணுவை பார்த்து சிரிக்க,

“சரி கிளம்பலாமா” என்று மூவரும் கிளம்பும் போது சத்யா போன் செய்தான்.

“ஹலோ சித்தார்த் நான் சத்யா பேசுறேன்” என்றதும் 

“ம்ம்ம் சொல்லுங்க சத்யா” என்ற போனை ஸ்பீக்கரில்  போட்டான்.

“நீங்க சொன்ன மாதிரியே விசாரித்ததில் எனக்கு கிடைத்த விஷயம். வருணோட தம்பி  பெயர் ஜெய் பிரகாஷ். அவளோட காலேஜ் சீனியர் தான். இப்ப அவனோட அண்ணாவோட எல்லா தொழிலையும் அவன் தான் பார்க்கிறான். முக்கியமான ஒரு மேட்டர் அவனுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் பொண்ணுக்கும் வரும் திங்கள் நிச்சயதார்த்தம்” என்று என்னும் சில தகவலை சொல்லி விட்டு வைத்தான்.

“பைனலி அவனை கண்டு பிடிச்சிட்டோம். ஜெய் வரேன் உன்னோட சாவு என் கையில் தான்” என்றான் சித்தார்த். அவனுக்கு தெரியாதே அவனிடமே தான் கெஞ்சும் நாள் தொலைவில் இல்லை என்று. 

 -நிலா