காதல் 19

13-1507896922-dulquersalmaanandnazriyanazim2

காதல் 19

பௌர்ணமி இரவை தனியாக மாடியில் இருந்து ரசித்துக் கொண்டு இருந்தால் இளமதி. 

“சரியா தப்பானு தெரியலை ஆனால் இப்ப என் மனதில் என்ன ஓடுகிறது தெரியுமா இந்த பௌர்ணமி நிலவை சித்து கூட நின்று ரசிக்கனும், அவன் கூட பைகில் வேகமாக இந்த மாதிரி ராத்திரி நேரத்தில் போகனும் போல இருக்கு. அவனை கட்டி பிடித்து வாழ்க்கை பூல்லா என் கூடவே இருக்க சொல்லனும் போல இருக்கு. 

எனக்கு இப்படி ஒரு பீல் ஆதி கிட்ட கூட வரலை. இது தான் காதலா….. தெரியலையே லட்சுமா உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். எனக்கு வர சந்தேகத்தை எப்போதுமே நீங்க தான் சால்வ் பண்ணுவிங்க. இப்ப என் மனதில் பல கேள்விகள் இருக்கு லட்சுமா ஆனால் தீர்க்க தான் நீங்க இல்ல” என்று கண்ணில் வரும் கண்ணீரை துடைத்து கொண்டு, 

“எனக்கு சித்துவை ரொம்ப பிடித்து இருக்கு லட்சுமா. என் ஒரு மனசு சொல்லுது நான் அவனை லவ் பண்றேன்னு. ஆனா இன்னொரு மனசு சொல்லுது இது ஆதிக்கு நான் பண்ற துரோகம் என்று. நான் என்ன பண்வேன் லட்சுமா. 

நீங்க தான் சொன்னிங்க நாம எவ்வளவு தான் நாகரிகத்தில் முன்னேறினாலும், ஒருத்தர் மேல உண்மையான அன்பு வைத்தால் அவங்க இல்லைனாலும்  நம்ம அவங்க நியாபகங்கள் கூடவே வாழ்க்கை முழுவதும் வாழ்ந்திருவோம். ஆனால் நான் ஆதியை மறந்திட்டேனே. நான் இங்க வருவதற்கு முன்னாடி எப்போதும் என்று பொய் சொல்ல மாட்டேன் ஆனால் அப்ப  அப்ப ஆதியை பற்றி நினைப்பேன்.

ஆனால் இப்போது எல்லாம் சித்து தான் என் நியாபகத்தில் இருக்கான். இது சரியா இல்ல தப்பா” என்று நட்சத்திரத்தை பார்த்து கேட்டவளின் தோளில் யாரோ கை வைக்க அதிர்ந்து திரும்பினாள்.

மாலதி தான் அவள் அறையில் இல்லாமல் இருப்பதை பார்த்து பதறி தேடி கடைசியாக மாடிக்கு வர மதி பேசியதை கேட்டு அவளை அணைக்க சென்றாள். 

அணைத்து கொண்டு, “மனதை போட்டு குழப்பிக்காத மதி. கௌரி இல்லாமல் அவ நியாபகத்தோடு மதன் வாழ்வதாக சொல்லும் போது நீ கூட என்ன சொன்ன,

‘இல்லாதவர்களை நினைத்து கவலைப்படாதிங்க அவங்க எங்க இருந்தாலும் உங்க சந்தோசத்தை தான் பார்க்க நினைப்பாங்க. நீங்க மாலதியை கௌரியா  பார்க்காதீங்க. கௌரியோட இடத்தை கண்டிப்பாக மாலதி கேட்க மாட்டாள். மாலதிக்கு என்று சின்னதாக ஒரு இடம் தாங்க. ஆனால் கௌரியை நினைத்து கொண்டு மாலதி கூட வாழாதிங்க. அது தான் நீங்க இரண்டு பேருக்கும் பண்ற துரோகம். அதுக்காக கௌரியை மறக்க சொல்லலை’ 
அப்படி தெளிவாக பேசிய நீயே ஏன் இப்ப இப்படி குழப்பிக்கிற. பொறுமையா யோசி. சித்து அண்ணா ரொம்ப நல்லவங்க. உனக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணுவாங்க” என்ற மாலதியை பார்த்து சிரித்தால் மதி. தன் அறைக்கு வர அங்கு சித்தார்த் அபியை தன் நெஞ்சில் சுமந்து தூங்கி கொண்டு இருந்தான். சிறிது நேரம் அவனை ரசித்து விட்டு உறங்க தொடங்கினாள். 

சென்னையின் மத்திய பகுதி, பெரும்பாலான பணக்காரர்கள், முக்கியமான அரசியல் தலைவர்கள் வசிக்கும் பகுதி.  ஒரு வீட்டிலில் மட்டும் பரபரப்பு இந்த இரவு வேலையிலும் அதிகமாகவே இருந்தது. காரணம் அந்த வீட்டின் முதலாளி வெளிநாட்டில் இருந்து வருகிறார். 

கார் வந்ததும் அதில் இருந்து இறங்கிய ஜெய் பிரகாஷ் அவனின் பிஏ விடம், 
“டேவிட் உன் கிட்ட சொன்ன வேலை முடிந்ததா” என்ற கேள்வியோடு உள்ளே செல்ல, 

“எஸ் சார் நீங்க சொன்ன மாதிரியே இளமதியை உங்கள் என்கேஜ்மென்ட்க்கு இன்வைட் பண்ணிட்டேன். அவங்களும் வருவதாக சொல்லிட்டாங்க” என்று கூற 

“குட்…..  நாளைக்கு மார்னிங் கிருத்திகா வீட்டிற்கு போகனும். ஸோ நாளைக்கு எந்த அப்பாய்மென்டும் வேண்டாம். தேன் சித்தார்த்தை வாச் பண்ணிட்டே இருக்க சொல்லுங்க” என்று அவனிடம் கூறிவிட்டு மனதில்  ‘மதி அட் லாஸ்ட் நீ கிடைக்க போகிற. வெயிட்டிங் ஃபார் மன்டே பேப்’ என்று சந்தோசமாக தன் அறைக்கு சென்றான் ஒய்வு எடுக்க. 

அதிசயமாக பறவைகள் சத்தம் கேட்க கண் விழித்தால் மதி. பக்கத்தில் அபி மட்டும் இருக்க அவனின் தலையை கோதி நெற்றியில் இதழ் பதித்து,  ஜன்னல் பக்கத்தில் இருக்கும் குருவியை பார்த்து சிரித்து விட்டு பார்த்ரூம் சென்றாள். 

‘இன்றைக்கு என்னோட லவ்வை சித்து கிட்ட சொல்லனும். எப்பவும் பையன் தான் முதலில் சொல்லனுமா கொஞ்ச சேஞ்ச் க்கு நாம சொல்லுவோம்’ என்று  முகத்தில் என்றும் இல்லாத சந்தோஷத்துடன் தயாராகி அபியையும் எழுப்பி கொண்டு கீழே சென்றாள். சந்தோசமாக வருபவருக்கு தெரியாதே கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய இடி தலையில் இறங்க போவது. 

அபியை ஹாலில் பொம்மையுடன் விளையாட விட்டு பின்  ‘எங்க போனாங்க யாரையும் காணோம்’ என அனைவரையும் ஒவ்வொரு அறையாக சென்று தேட, ஒரு ரூமில் பேசும் சத்தம் கேட்க அங்கே சென்றவள் உள்ளே செல்ல நினைக்கும் போது சித்து “அபி என் பையன் ம்மா. என் ரத்தம் உங்க பேரன்” என்று சொன்னதை கேட்டு அதிர்ந்தாள். வந்த சுவடே தெரியாமல் அபியின் அருகில் அமர்ந்தாள். 

காலை எழுந்த சித்தார்த் மதியை தவிர அனைவரையும் பவாணி அறைக்கு வர சொன்னவன் அன்று ஹோட்டலில் நடந்ததை மட்டும் சொல்ல தொடங்கினான். 

“அபி என் பையன் ம்மா என் ரத்தம் உங்க பேரன். எனக்கே நேற்று தான் தெரியும்” என்க, 

இதை கேட்டதும் மாலதி அதிர பவாணி இடிந்து போய் தொப் என்று அமர்ந்தார். 

அவரிடம் சென்று நடந்ததை கூறினான். முதலில் தன் வளர்ப்பு தவறி விட்டதே என்று வருந்தியவர் பின் நடந்தது முழுவதும் சதி என்று அறிந்த பின் மனம் சற்று மட்டுப்பட்டது. 

முதல் பாதி மட்டுமே கேட்ட மதி, தான் எவ்வாறு உணர்கிறேன் என்றே புரியாமல் இறுகிய முகத்தோடு அமர்ந்து இருக்க பக்கத்தில் யாரோ அமர்வது தெரியும் திரும்பி பார்க்க அங்கே சிரித்த முகத்துடன் சித்து அமர்வது தெரியவும், சற்றென்று எழுந்து அவள் அறைக்கு சென்றாள். 

‘என்ன ஆச்சு இவளுக்கு’ என்ற கேள்வியுடன் புரியாமல் அவள் செல்லும் திசையை நொக்கினான். 

இருவரையும் அழிக்க நினைக்கும் ஜெய், ஆவலோடு காத்திருக்கும் அந்த திங்கள் இருவரது வாழ்விலும் மறக்க முடியாத மாற்றத்தை கொண்டு வருமா? அல்ல பெறும் அழிவை சந்திக்குமா? 

அனைவரும் சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்து இருக்க மாலதி, 

“என்ன ஆச்சு மதி முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு” என்று இறுகிய முகத்தோடு இருக்கும் மதியை பார்த்து கேட்டதும், 

“மதி உடம்பு எதாவது பண்ணுதா இல்ல தையில் போட்ட இடத்தில் பெயின் இருக்கா” என்று பதட்டத்துடன் கேட்க, 

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. தலை வலி அதான். நான் ரூமிற்கு போறேன் மாலதி அபியை பார்த்துக்கோ” என்று யாரிட பதிலையும் எதிர் பார்க்காமல் சென்றான். 

கதிர் “இவளுக்கு என்ன ஆச்சுடா இப்படி எதையோ இழந்த மாதிரி இருக்காள்” என

அதை பற்றி யோசித்து கொண்டு இருந்தவனை அபியின் “ப்பா” என்ற அழைப்பில் அவனை அள்ளி கொண்டு கொஞ்ச தொடங்கினான். 

தன் மகன் தன் ரத்தம் என தெரிந்த பின் ஒருவிதமான சந்தோஷமான உணர்வை உணர்ந்தாலும் அவன் உருவானது துரோகத்தில் தானே என்று நினைக்கும் போது அணு அணுவாக சாவதை போல் உணர்ந்தான். ஆம் துரோகம் தான் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் காதலியாகவோ அல்ல கட்டன மனைவியாகவே இருந்தாலும் பலவந்தமாக நடப்பது குற்றம் என்றிருக்க சுயநினைவு இல்லாமல் இருந்தவளிடம் அத்துமீறி நடந்தது துரோகம் தான் மன்னிக்க முடியாத குற்றம். 

அபியிடம் சற்று நேரம் விளையாடி விட்டு பின் தாயிடம், 

“மா… நான் ஹரி மாமா கிட்ட லக்கி கதிர் லவ்வை பற்றி பேசினேன். மனுசன் முதலில் ஒத்துக்கலை. பேசி பேசியே கடைசியாக ஒத்துக்கொள்ள வைச்சிருக்கேன். அவர் முழு மனதோடு சம்மதிக்கலை. ஸோ அவர் மனசு மாறுவதற்குள் அவங்களோட கல்யாணத்தை முடிக்கனும்” என்றவனை அதிர்ச்சியாக பார்த்த கதிர் பின் அவனை வேகமாக நெருங்கி அணைத்து,  “தேங்ஸ் பாஸ். நான் உங்களுக்கு எப்படி” என்று சந்தோசத்தில் பேச முடியாமல் தடுமாறியவனை தட்டி கொடுத்து, 

“நீ எனக்கு தம்பி மாதிரி டா. எங்க வீட்டு பையனோட ஆசையை நிறைவேற்ற எனக்கு உரிமை கடமை எல்லாம் இருக்கு. வாடா போகலாம் நிறைய வேலை இருக்கு” என்றவனை ஏறிட்ட பவாணி, 

“தம்பி கதிரோட சேர்ந்து உனக்கும் மதிக்கும் கல்யாணம்” எனும் போதே

“மாம் ப்ளீஸ் இப்ப எதுவும் வேண்டாம். நான் சொல்லுற வரை இதை பற்றி நினைக்காதிங்க” என்று சொல்லிவிட்டு சென்றவனை வெறுமையாக பார்க்க “எல்லாம் சரியாகிடும் மா” என்று சமாதானம் சொல்லி அழைத்து சென்றாள் மாலதி. 

அறைக்கு வந்த மதி, குழம்பி புலம்புவதற்கு தூங்குவதே மேல் என எதை பற்றியும் யோசிக்காமல் தூங்க தொடங்கினாள். 

தனது அறையில் கதிருடன் வேலை செய்து கொண்டு இருந்தான் சித்தார்த். அப்பொழுது விஷ்ணு வர, 

“என்ன டிசி சார் வேலை எதுவும் இல்லையா ஃபீரியா சுற்றி கொண்டு இருக்க” என்று சித்து கூற

“அட போங்க டா எனக்கே கேஸ் இல்லாமல் வேறும் மீட்டிங் மட்டும் அட்டன் பண்ணி போர் அடிக்கிறது நீ வேற கிண்டல் பண்ணாத மேன்” என்று மூவரும் சிரித்து பேசிக்கொண்டு இருக்கும் போது ஜெய் சித்துவிற்கு போனில் அழைத்தான். 

அதை பார்த்து, “மச்சி அவன் தான் எனக்கு கால் பண்றான் டா” என்பவனிடம் விஷ்ணு

“ஸ்பீக்கரில் போட்டு பேசுடா” என அவனும் காலை ஸ்பீக்கரில் போட்டு அமைதியாக இருந்தான். 

இரு பக்கமும் மையான அமைதியாக இருக்க முதலில் மௌனத்தை கலைத்தது ஜெய் தான். 

ஜெய், “என்ன சித்தார்த் கிருஷ்ணா உன்னோட ப்ரெண்ட் விஷ்ணுவை சென்னைக்கு மாற்றிட்ட போல ம்ம்… அவ்வளவு பயம் உயிர் மேல” என்றான் நக்கலாக

“கரெக்டா சொன்ன ஜெய் உயிர் மேல இருக்கிற பயம் தான். பட் என் உயிர் மேல இல்லை என் மதியோட உயிரை காப்பாற்றனும் என்ற பயம்” என்றான். 

“பாருடா நான் யார் என்று கண்டுபிடுச்சிடுயா குட். அப்புறம் யார் கொன்னா என்று தெரியாமலே சாக கூடாது இல்லையா” என்பவனிடம் 

“உனக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும் நான் ஏன் அவனை கொன்றேன்னு. எனக்கும் கதிருக்கு இப்ப எங்க கூட தங்கை இருந்து இருக்கனும். அவள் இல்லாததுக்கு காரணம் உன் அண்ணா. அப்படிப்பட்ட ஒருவனை கொல்லாமல் கொஞ்ச சொல்றியா” என்றான் கோபமாக, 

“என் அண்ணா தப்பு பண்ணானா இல்லையா என்று எல்லாம் எனக்கு வேண்டாம். அவனை கொன்ற உன்னை சும்மா விட மாட்டேன். துடிக்க துடிக்க கொல்லுவேன்” என்றான் 

“சரி உனக்கு நான் தானே வேண்டும் என்னை என்ன வேண்டுமானாலும் செய். எதுக்கு மதியை கொல்ல நினைக்கிற” என்ற சித்துவிடம், 

“கொல்லவா ஹா.. ஹா… ” என்று சிரித்தவன் பின் அவனே “எனக்கு அவ வேண்டும் டா. எனக்கு மட்டும் இல்ல டா உனக்கு நெருங்கிய ஒருத்தருக்கு கூட அவ வேண்டும். அவளை குத்தனதும் அவங்க ஆளுங்க தான்” என்றான் ஜெய்.. 
“என்னடா விளையாடுறீங்களா… எதுக்கு டா அவ வேண்டும். யாருடா அவன் புதுசா” என்று கோபத்தில் கத்தினான்.

“ப்ச் கத்தாத சித்தார்த். மதி கிட்ட பல கோடி மதிப்பிலான ஒரு பொருள் இருக்கு. அது எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சால் அவ உயிரை காப்பாற்றலாம்” என்று பேசிக்கொண்டே போனை கட் செய்தான். 

அதுவரை அமைதியாக இருந்த விஷ்ணுவும் கதிரும் சித்துவிடம், 

“பொறுமையாக யோசிப்போம் டா நமக்கு க்ளூ  கிடைக்கும். கண்டிப்பாக மதிக்கு அதை பற்றி தெரிய வாய்ப்பு இல்லை” என்று விஷ்ணு கூற கதிரும் அதை ஆமோதித்தான். 

“எனக்கு மட்டும் ஏன்டா இப்படி எல்லாம் நடக்கிறது. பிடித்த பெண்ணை தொலைச்சிட்டு பல நாள் தேடி நானே எதிர்பாராத ஒரு நாள் எனக்கு கிடைச்சா. கூடவே கியூட்டா ஒரு பாப்பா. ஆனால் நான் நினைக்காத பல விசயம் நடந்து என் குழந்தையை சுமக்கிறது கூட தெரியாமல் இருந்து இருக்கேன். சரி எல்லாம் முடிந்து சந்தோசமாக வாழலாம் என்று நினைக்கும் போது புதுசா ஒரு பிரச்சனை. நான் என்னடா தப்பு பண்னேன்” என்று கண் கலங்க பேசியவனை இருவரும் அணைத்து கொண்டு, 

“சரியாகிடும் டா எல்லாமே சரியாகிடும்” என ஆறுதல் கூறினார்கள். 
அதே நேரம் தூங்கி கொண்டு இருந்த மதி “சித்தூ.. ” என்று அலறிக் கொண்டு எழுந்தாள்.

அவளின் குரலை கேட்டு பதறிக் கொண்டு வந்த மாலதியும் பவாணியும் மதியின் வியர்வை வழியும் முகத்தையும் பதட்டத்தில் நடுங்கும் உடலையும் கண்டு குழம்பி அவளை சமாதானம் செய்தனர். 

மதியின் ‘சித்தூ’ என்ற அழைப்பில் பதறிக் கொண்டு அவர்கள் அறைக்கு சென்று பார்க்க, வியர்த்து பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தால் மதி. 

“ஏய் மதி இங்க பார்” என மாலதி அவளை உலுக்கி சுய நினைவுக்கு கொண்டு வந்து, 

“என்ன ஆச்சு மா ஏன் கத்தின எதாவது கனவு கண்டியா” என அவள் தலையை ஆதரவாக வருடி கொண்டே கேட்டார் பவாணி.

“ஒன்றுமில்லை அத்தம்மா எதோ கெட்ட கனவு” என அவரிடம் பொய்யாய் தன் பயத்தை மறைத்து கொண்டு கூறினாள். 

“சரி வா நம்ம வெளியே உட்கார்ந்து பேசலாம்” என அவளை அழைக்கும் போதே கோமதி அவருக்கு போன் செய்தார். 

“அண்ணி நாங்க சென்னை வரோம். சித்து நேத்து அவருக்கு கால் பண்ணி லக்கி கல்யாணத்தை பத்தி பேசியிருக்கான். அவரும் வருகிறார் அண்ணி” என வரும் தகவலை சொல்லி விட்டு அனைத்தார்.

“மதிம்மா லக்கி வரா டா. அண்ணா அண்ணி கூட வராங்க. நான் போய் அவங்களுக்கு ரூம் ரெடி பண்றேன்” என்று கூறி சிட்டாக பறந்தவரை மலர்ந்த முகத்தோடு பார்த்தால் மதி. 

விஷ்ணு, “சித்து இப்ப போனில் எதோ தங்கை எப்படி சொன்னியே. என்னடா அது” என்று கேள்வியாக கேட்க, 

சித்து, “கதிரோட தங்கை அனு. எனக்கு தங்கை தான் டா. ஒரு வருடம் முன்னாடி கொடைக்கானலுக்கு ப்ரெண்ட்ஸ் கூட டூர் போனவள் எப்படி திரும்ப வந்தா தெரியுமா” என கண்ணில் வலியுடன் கோபத்தில் இறுகிய கரத்துடன் கூற, கதிர் மௌனமாக கண்ணீர் வடித்து கொண்டு இருந்தான். 

“பாதி உயிரோட உடம்பெல்லாம் காயத்தோடு ச்…. அவ நிலமையை இப்ப நினைச்சாலும் கொலை வெறி வருது. யாரோ அவளை ரோட்டில் பார்த்து போலீஸ் கிட்ட சொல்லி இருக்காங்க. தகவல் கிடைத்து நாங்க போய் பார்த்தா ஆக்ஸிடன்ட்னு தான் சொன்னாங்க. பட் அது ஆக்ஸிடன்ட் இல்லடா. அவளை யாரோ கற்பழித்து…. ” என சொல்ல முடியாமல் கையை மேசையில் குத்த, 

“ரிலாக்ஸ் சித்து இப்ப அனு எங்க இருக்காங்க” என்றான் தவிப்பாக. தன் தவிப்பை அவன் உணர வில்லை. 

“இருக்க கூடாத இடத்தில்” என்றான் கதிர் வருத்தமாக. 

“புரியலை” என்ற விஷ்ணுவிடம் “மன நல காப்பகம்” என எங்கோ பார்த்து கொண்டு சொல்ல, 

“வருணை என்ன பண்ணிங்க”  என்றான் கோபத்தோடு, 

“அவனை பத்தி தெரிந்ததும் அவனை கொன்றுவிட்டேன்” என்று கூற

கதிர் தான் அந்த பேச்சை மாற்றி வேற பேச வைத்தான். பின் இரவு மூவரும் வீட்டுக்கு வர, 

பவாணி, “டேய் பசங்களா  வாங்க சாப்பிட” என்று கூறியதை கேட்டும் யாருக்கும் சாப்பிட மனம் இல்லாததால் வேண்டாம் என அவரவர் அறைக்கு சென்று விட்டனர். 

ஞாயிற்றுக்கிழமை பல மக்கள் விரும்பும் நாள். வாரத்தின் சோர்வை போக்கும் உற்சாகமாக நாள். ஏனோ சித்தார்த் வீட்டில் மாறாக விடிந்தது. 

தூக்கத்தில் இருந்து எழுந்த சித்து வழக்கமாக பக்கத்தில் இருக்கும் அபியையும் மதியையும் காண, அபி மட்டும் துயில் கொண்டு இருக்க மதியை காணவில்லை. 

எதோ தவறாக நடப்பது போலவே இருக்க அபியை தலையணையால் பத்திர படுத்தி விட்டு, கீழே வர ஹரி அவன் தாயிடம் பேசியது தெரிந்தது. இவனை பார்த்ததும் மெலிதாக சிரித்து விட்டு அவர் வெளியே செல்ல, 

“ம்மா… மாமா என்ன சொன்னார். என்னை பார்த்ததும் வெளியே போய்டார்” என கேள்வியாக கேட்க, 

“ஒன்றும் பெரிசா இல்லடா. நான் எழுந்ததும் மதியோட பழைய ரூமில் சத்தம் கேட்டது. என்ன சத்தம்னு பார்க்க போனா உன் மாமா அந்த ரூமில் எதையோ தேடிட்டு இருந்தார். என்ன பண்றாங்கனு கேட்டேன். மோதிரம் கீழே போட்டாராம். கிடைக்கலை போல நான் தான் அப்புறம் தேடி தருவதாக சொன்ன. யாரையோ முக்கியமானவங்களை பார்க்க போறதா கிளம்பிடார்” என சொல்லி விட்டு செல்ல, 

‘மாமாக்கு மதி ரூமில் என்ன வேலை. மோதிரம் காணோம்னு அம்மா வேணா நம்பலாம். பட் எப்பவும் வராதவர் இந்த முறை வந்து இருக்கார். தப்பா இருக்கே’ என எதையோ யோசித்தவன் விஷ்ணுவிற்கு போன் செய்தான். 

“ஹலோ” என தூக்கத்தில் விஷ்ணு கூற, 

“மச்சான் உடனே கிளம்பிற. நான் என் மாமா நம்பர் தரேன். எனக்கு அவங்க மேல சந்தேகமா இருக்கு. நீ என்ன பண்ற அவங்களை பாலோ பண்ணி யாரை மீட் பண்றாங்கனு பாரு. நான் மதி கிட்ட எதாவது சந்தேகம் படும் படி இருக்கானு பார்க்கிறேன்”  என

“போறேன்…. உன்னை எல்லாம்” என திட்ட முடியாமல் அவன் சொன்னதை செய்ய தயாரானான்.

மதி… மதி எங்க என தேடி பார்க்க அவளோ மாலதியுடன் துயில் கொண்டு இருந்தாள். ‘இவ ஏன் இங்க தூங்கிறா’ என்று யோசித்தாலும் மதி இருந்த பழைய அறைக்கு சென்று எதாவது கிடைக்குமா என தேட தொடங்கினான். 

இங்கு விஷ்ணுவோ ஹரியை கண்டு பிடித்து அவனை பின் தொடர்ந்தான்.

தேடி தேடி களைத்து அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் சித்தார்த். மனதில் ‘இந்த பொருளை தான் தேடனும்னு சொன்னாலே கண்டுபிடிக்கிறது கஷ்டம். இதில் நான் எதை தேடுறேன்னு தெரியாமலே தேடுறேன். ஸோ பாவம்’ என அவனே அவன் மேல் பச்சாதாபம் கொள்ள, திரும்பும் சமயம் அவன் சட்டை பக்கத்தில் இருந்த பீரோவில் மாட்டி, அந்த பீரோ ஆட, 

‘நான் ஸ்டாங்கா இல்ல இந்த பீரோ வீக்கா’ என மாட்டிய சட்டையை விடுவித்து மேலே பார்க்க அங்க ஒரு சிறிய பை இருந்தது. 

இது என்னடா என எடுத்து பார்க்க அதில் ஆதியின் இரத்த கறை படிந்த சட்டை, மற்றும் அன்று ஆக்ஸிடன்ட் நடக்கும் போது அவனிடம் இருந்த பொருட்கள் இருக்க, அந்த பையை தன் அறைக்கு எடுத்து சென்றான். 

அங்கு ஹரியோ எதோ ஒரு அடர்ந்த காடு போன்ற இடத்தில் யாருக்கோ காத்திருக்க,  அவர் பின்னே வந்த விஷ்ணு மறைவாக தன் வாகனத்தை மறைத்து விட்டு அவர் அருகே இருக்கும் புதர் அருகே மறைந்து நின்றான். 

தன் அறைக்கு வந்த சித்து அந்த பையை திறந்து, அனைத்தையும் மேசையில் கொட்டினான். 

வெள்ளை நிற முழுக்கை சட்டை அவன் ரத்ததால் சிவப்பாக மாறி இருந்தது. அடுத்து ‘எம்’ என்ற இனிசியல் கொண்ட செயின்,  வாட்ச், மோதிரம் என்று இருக்க அவனுக்கு தேவையானது போல் எதுவும் இல்லை என்று நோந்தே போனான். 

அவன் எதிர்ப்பாரா நேரத்தில் மதி அறையில் நுழைய பரப்பி வைத்த பொருளை வேகமாக மறைத்தான்.

“வா மதி என்ன அபியை எழுப்ப வந்தியா நல்லா தூங்கிறான் மா தூக்கட்டும். எழுந்த பின் நான் கூப்பிட்டு வரேன்” என அவன் மட்டுமே பேச மதி அமைதியாக தூங்கும் அவள் மகளையே பார்க்க

அவள் பதில் பேசாததை புரிந்து கொள்ளாமல் அவன் மட்டும் பேச, ரொம்ப நேரமாக பதில் வராததால் என்ன என்று பார்க்கும் நேரம் லக்கி அந்த ரூமிற்குள் நுழைந்தாள்.

“ஏய் லக்கி வா வா நைட் நீங்க லேட்டா வந்ததால் பார்க்க முடியலை. ஹாப்பியா மேரேஜ் அதுவும் உனக்கு பிடித்த கதிர் கூட” என

“ஹாப்பியா….. அட என் சந்தோசத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. உனக்கு தான் நன்றி சொல்லனும். ஆனா அது கூட சின்ன வார்த்தை தான் நீ பண்ண உதவிக்கு முன்னாடி” என அவள் மேலே பேசும் முன், 

சித்து, “அட போதும் மா ரொம்ப தான் சீரியஸா பேசற. மதி நீங்க இரண்டு பேரும் போய் வேலையை பாருங்க” என இருவரையும் அனுப்பி விட்டு ஆதியின் பொருளை மீண்டும் பையில் திணிக்கும் போது சட்டை காலரில் உள் எதோ இருப்பதை போல் இருக்க, 

பக்கத்தில் இருந்த கத்திரி கோல் கொண்டு இருந்த சிறிய ஓட்டையை பெரிதாக கிழிக்க, உள்ளிருந்து வந்து விழுந்ததை பார்த்து அதிர்ந்தான். 

இங்கு விஷ்ணுவோ ஹரிவுடன் இருந்த நபரை பார்த்து அதிர, அவர்கள் பேசுவதை தன் போனில் பதிவு செய்ய தொடங்கினான். 

வானத்தை இலக்கிலாமல் வெறித்து கொண்டு இருந்த மதி தன் மன பாரத்தை போக்க ஒரு முடிவு எடுத்தாள். அவள் எடுத்த முடிவு என்ன?  அந்த முடிவால் யாருக்கு நன்மை? யாரை காயப்படுத்த போகுதோ?

அன்புடன்
நிலா