காதல் 20

காதல் 20

ஆதியின் சட்டை காலரில் இருந்து விழுந்ததை பார்த்து அதிர்ந்து, அதை எடுத்து பார்க்க அது ஒரு சிறிய அளவில் உள்ள பென் டிரைவ். 

மதியின் உயிரை எடுக்க நினைக்கும் கும்பலுக்கு தேவையான பென் டிரைவ். ஆதி தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய தகவல். 

அதில் என்ன உள்ளது என பார்க்க தனது லேப்டாப்பை எடுத்து அதில் பொருத்தி பார்க்க, 

அதே சமயம் மதி தனது லேப்டாப்பில் அவள் முடிவின் முதல் படியாக வேறு வேலையை தேடிக் கொண்டு இருந்தாள்.

இங்கு காட்டில் விஷ்ணுவோ அவர்கள் பேசுவதை கேட்டு அதிர்ந்து,  அதை அவர்களுக்கு தெரியாமல் ரெக்கார்ட் செய்து விட்டு அவர்கள் கிளம்பியதும் அவனின் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பினான்.

நான்கு வருடங்களுக்கு முன், 

இயற்கை வளங்கள் மிக்க நம் இந்தியா நாட்டில் பெயர் தெரியாத பல தாவரங்கள் பரவி கிடக்கிறது. இதை போன்ற ஒரு தாவரம் கொங்கு மண்டலம் முழுவதும் பரவி கிடக்க, அது என்ன என்றே தெரியாமல் மக்கள் இருக்கும் போது தான் ஒரு நாள், 

வருண் பெரிய தொழிலதிபராக இருப்பதற்கு முன் அவன் ஒரு தாவரவியலாளர். புதிய தாவரங்களை தேடி அதன் தன்மையை கண்டறிந்து அதில் மருத்துவ குணம் இருந்தால் இதை தன் மருந்து கம்பெனியில் பயன்படுத்தி இருந்தான். 

வேலை விசயமாக நீலகிரி பக்கம் வர, அங்கு பரவி கிடந்த செடியை தன் ஆய்வு கூடத்திற்கு எடுத்து சென்று அதை ஆராய்ந்ததில் அது ஒரு போதை செடி என தெரிய வந்தது. ஆனால் நேரடியாக அதில் இருந்து போதையை பெற முடியாது. 

நம் நாட்டில் படையெடுப்புகளால் பல குறிப்பேடுகள் அழிந்து விட்டன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் போதை வஸ்துவாக இருந்ததை பிற்காலத்தில் தோன்றிய நாகரிக வளர்ச்சியால் மறைந்து விட்டன. 

இதை கண்டறிந்த வருண் தன் நண்பனிடம் இதை போதைப்பொருளாக மாற்றும் வழியை ஆராய சொன்னான். அவனும் தன் திறமை முழுவதையும் கொண்டு செயல்பட தொடங்கினான். ஒரு நாள், 

“வருண் நீ கொடுத்தியே ஒரு செடி அதை வைத்து உலகத்தில் இப்ப இருக்கிற போதை மருந்தை விட பல மடங்கு வீரியமான போதை மருந்தை உருவாக்கலாம் டா” என

“இல்லடா எனக்கு போதை மருந்தில் எல்லாம் ஆர்வம் இல்லை. பட் எனக்கு என்னோட கம்பெனி மருந்துகள் தான் மார்கெட்டில் முதலாவதாக இருக்கனும். இதை வெச்சு எதாவது செய்ய முடியுமா” என்று கேட்க

“கண்டிப்பாக இதை உன்னோட மருந்துகளில் கொஞ்ச கலந்தா போதும்டா. உன் மருந்து தான் மார்கெட்டில் முதல் இடத்தில் இருக்கும். அதுக்கு முன்னாடி வேற சில போதை மருந்தை கலக்கி அதோட ரிசல்டை பார்க்கலாம். டீரக்ஸை ஒரு முறை யூஸ் பண்ணா கண்டிப்பாக அதில் இருந்து வெளியே வர முடியாது. இதை நமக்கு சாதகமா பயன்படுத்தி கொள்ளலாம். 

நான் அதுக்குள்ள இந்த செடியில் இருந்து எடுக்கும் பார்முலாவை கண்டுபிடிக்கிறேன்” என்றான் வருணின் நண்பன் ஆகாஷ். 

அவன் சொன்னதை போல் சில போதை மருந்துகளை தான் தயாரிக்கும் மருந்தில் கலந்தான். சாதாரண தலைவலி மாத்திரையில் தொடங்கி உயிர்கொல்லி நோய் மாத்திரை வரை அனைத்திலும் சிறு அளவு கலந்தான். சில மாதங்களில் அவனே எதிர் பார்க்காத அளவு அவன் மாத்திரைகள் மார்கெட்டில் முதலிடம் வர, அன்று தன் நண்பனுக்கு போன் செய்தான். 

“ஆகாஷ்… நம்ம கம்பெனி தான் டா முதலில் இருக்கு. நீ பார்முலாவை கண்டுப்பிடிச்சியா அடுத்து என்ன பண்ணலாம்” என உதவி கேட்

“மச்சான் ஒரு குட் நியூஸ் டா நானே உனக்கு போன் பண்ணனும் தான் இருந்தேன். எந்த செடியை பற்றி நான் எனக்கு தெரிந்த ஒரு பார்ட்டி கிட்ட சொன்னேன் அவன் எதை வைத்து பெருசா சம்பாதிக்கலாம் னு சொன்னாங்க டா நீ என்னடா சொல்ற இதை பற்றி” என்று அவனிடம் கேட்க 

“கேக்க நல்ல தான் இருக்கு மச்சி பட் இதில் ரிஸ்க் அதிகம் இருக்குமே. நமக்கு முன்ன பின்ன பண்ண எஸ்பிரின்ஸ் கூட இல்ல டா. அதான் யோசனையா இருக்கு” என்று தன் மனதில் இருப்பதை கூற,

“நோ டென்ஷன் மச்சி அது எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க சரி நீ இப்ப கேட்டியே நான் போர்முலாவை பென் டிரைவில் காப்பி பண்ணி ****  ஸ்கூல் பக்கத்தில் இருக்கிற பார்க் கிட்ட வரேன் நீயும் வாடா” என்று கண்டு பிடித்த போர்முலாவை காப்பி செய்து விட்டு லேப்பில் இருந்து கிளம்ப, கிளம்பும் அவசரத்தில் எதையோ தள்ளி கொண்டு ஓடினான்.

பார்க்கில் வருண் வருவதற்காக காத்திருக்கும் நேரத்தில் அவனுக்கு போன் வர கையில் பென் டிரைவை வைத்து கொண்டே பேச பேசும் ஆர்வத்தில்  எதிரில் வருவதை பார்க்காமல் போக,

“அண்ணா பார்த்து வாங்க” என்று ஒரு பெண் அவனை இழுக்க எதிரில் வந்த வண்டியை பார்த்து சற்று அதிர பின்,

“தேங்க்ஸ் மா உன் பெயர் என்ன மா” என்று கேட்க  “பெயர் எதுக்கு அண்ணா என்னை உங்க சிஸ்டர் ஆ நினைச்சுக்கோங்க” என்று கூறி விட்டு அங்கு இருந்த பசங்க கூட விளையாட சென்றாள். 

வருண் வந்ததும் “மச்சி சிப் கொடுடா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் அப்புறமா அந்த பார்ட்டி கிட்ட பேசிக்கிறேன்” என 

எவனோ பாக்கெட்டில் சிப்பை தேட அது அங்க இல்லை பதறி “மச்சான் இங்க தான் இருந்தது டா ஆனால் இப்ப என் கிட்ட இல்லடா எங்க” என்று யோசித்தவன், 

வருண் அவனை முறைக்க “மச்சி ஒரு வேல என்னை இழுக்கும் போது அந்த பொண்ணோட பையில் விழுந்து இருக்குமோ” என நடந்ததை சொல்ல 

“டேய் உன்னை எல்லாம்… சரி விடு அந்த பொண்ண பார்க்க எப்படி இருப்பாள்” என்று கேட்க 

“சின்ன பொண்ணு டா அவளோட கழுத்தில் காதுக்கு கீழ ஒரு மச்சம் இருக்கும் டா” என்று கூற,

“ச்சை…. எது எல்லாம் ஒரு அடையாளம். சரி நீ மறுபடியும் லேப் போய் போர்முலாவை கொண்டு வா டா. எனக்கு அது உடனே வேண்டும்” என்றதும் அவன் லேப்க்கு போக அவனின் நேரம் உள்ளே சென்று லைட் போட அந்த கட்டிடமே வெடித்தது.

அவனோட தவறு அவனின் உயிரையே எடுத்து விடாது. கிளம்பும் அவசரத்தில் எதையோ இடித்து விட்டு சென்றானே அது சக்தி வாய்ந்த காஸ். அது அந்த கட்டிடம் முழுதும் பரவி  தற்பொழுது வெடித்து அவனின் உயிரையும் எடுத்து விட்டது.

அதன் பின் வருண் தனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அந்த சிப் மட்டும் தான் என அதை தீவிரமாக தேடினான். ஆனால் அவனுக்கு அது கிடைக்க வில்லை.

கடைசியாக அது மதியிடம் தான் உள்ளது என்ன அறிந்து அவளை பின் தொடர்ந்து அவளை தனி மரமாகி தன் திட்டம் வெற்றி பெரும் சமயத்தில் ஆதி உள்ளே வந்து அவனின் திட்டத்தை பொடியாகி கடைசியில் அவனின் உயிரையே கொடுத்து அந்த சீப்பை மதியிடம் சேர்த்தான்.

அந்த பென் டிரைவ் ஆதியின் கையில் மாட்டி அதை பற்றி கேட்க மதியை மாலதியிடம் விட்டு வருணை பார்க்க சென்றான்.

அன்று ஆதி வருணை சந்திக்க அவனின் குடோன் இருக்கும் பகுதிக்கு செல்ல “ஹலோ வருண் நீ எதுக்கு மதியை டார்கெட் பண்ற” என்று அந்த சிப் பற்றி கேட்கலாம் மதியை பற்றி கேட்க 

“ஓஓஓ….. ஆதி சார் நீங்க அதுவும் என்னை தேடி என்ன விஷயம் ஆதி சார்” என நக்கலாக கேட்க

 “எங்க பாரு வருண் எனக்கு நீ என்ன பண்ற எது பண்ற எதுமே எனக்கு வேண்டாம் எனக்கு  தெரிந்தது மதி மட்டும் தான் அவளுக்கு நான் இருக்கிற வரை ஒண்ணுமே நடக்காது” என்று சொல்லி முடிக்கதற்குள் பின் இருந்து ஒருவன் அவனின் கழுத்தில் போதை ஊசியை குத்த,

“ஆ..” என்ன கத்த வருண் “ஓஹ்.. அப்ப நீ சாவு ஆதி உன்னை இத்தனை நாள் சும்மா விட்டதுக்கு காரணம் நீ என் விஷயத்தில் மறைமுகமா நுழைந்த அதான் நான் சும்மா இருந்தேன் ஆனால் இப்ப என்னை நேரா கேள்வி கேக்க வந்த பின் நீ உயிரோட இருந்த ஆபத்து எனக்கு தான்” என்று அவனை கத்தியால் குத்த வரும் போது ஆதி  தப்பித்து போனில் மதிக்கு வீடியோ அனுப்ப நினைத்தவன் அவசரத்தில் டாட்டா ஆன் பண்ண மறந்துட்டான். 

பின் வண்டியை எடுத்து கொண்டு வர போதையின் தாக்கத்தில் எதிரே வந்த வண்டியை கவனிக்காமல் அவனின் இறப்பை தேடி கொண்டான். கையில் இருந்த சிப்பை தன் சட்டை காலரில் வைத்து விட்டான். அந்த சிப் தான் எப்பொழுது சித்து கையில் இருப்பது.

மறுநாள் பொழுது விடிந்ததும் எழும்பும் பழக்கம் கொண்ட சித்தார்த் எதோ எழ தோன்றாமல் படுத்து கொண்டு இருக்க நேரத்தை பார்த்து பின் மதியை பார்க்க அவள் இருக்கும் அறைக்கு செல்ல அவனை வரவேற்றது காலி அறை தான்.

‘இந்த மதி எங்க போனாள்’ என்ன திரும்பும் போது அவன் கண்ணில் பட்டது. அதில் 

எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை நான் கிளம்புறேன் என்னை யாரும் தேட வேண்டாம்” என்று இருக்க அதை பார்த்து அதிர்ந்தே விட்டான் சித்தார்த்.

 உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

கனவே கனவே
கலையாதே கண்ணீா்
துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே
விடியாதே ஓ ஹோ ஓ

பெண்ணே நீ வரும்
முன்னே ஒரு பொம்மை
போலே இருந்தேன்
புன்னகையாலே முகவாி
தந்தாயே ஓ ஓ ஓ

ஆயுள் முழுதும்
அன்பே உன் அருகில்
வாழ்ந்திட நினைத்தேன்
அரை நொடி மின்னல்
போலே சென்றாயே

உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

 

சித்தார்த் மதியை காண அவள் இருந்த பழைய அறைக்கு செல்ல அவனை வரவேற்றது காலியான அறை தான்.

‘என்ன எது காலையே எங்க போய் இருப்பா’ என்று யோசனையோடு திரும்ப அவன் கண்ணில் பட்டது மேஜையின் மீது இருந்த காகிதம். ‘இது என்ன’ என்று எடுத்து பார்த்தவன் அதிர்ந்தே விட்டான்.

என்னை யாரும் தேட வேண்டாம் எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை இப்படிக்கு மதி”  என்று எழுதி இருக்க அதை பார்த்த பின் என்ன செய்ய வேண்டும் என்று கூட தோன்றாமல் நின்று விட்டான்.

சற்று நேரத்தில் தன்னை மீட்டு எடுத்தவன் வீடு முழுவதும் தேடி பார்க்க அவனை தவிர வீட்டில் யாருமே இருப்பதற்கு ஒரு அறிகுறியும் இல்லை. கதிரிடம் சில வேலையை கொடுத்தாதலால் அதை முடிக்க அவன் நேற்றே சென்று விட்டான். இப்பொழுது அவனும் வீட்டில் இல்லை.

மதிக்கு முதலில் போன் செய்ய அது அணைத்து வைத்து இருப்பதாக வர பின் தன் அன்னைக்கு போன் செய்தான். அது முழு ரிங் சென்று எடுக்கப்பட வில்லை. லக்கிக்கு கால் செய்ய அதுவும் முழு ரிங் சென்று கட் ஆகியது.

திரும்பவும் தன் அம்மாவிற்கே கால் செய்தான். அது கடைசி ரிங்கில் எடுக்க பட்டது.

“அம்மா எங்க இருக்கீங்க மதி இருக்க கூட” என ஒரே மூச்சில் கேட்க,

“டேய் நாங்க எல்லாரும் கோவிலில் இருக்கோம். என்ன கேட்ட மதியா அவ வீட்டில் தான் இருப்பா” என்று அவர் மேலும் பேசும் முன் சித்து வின் போன் கீழே விழுந்தது. 

வெறி பிடித்தவன் போல் மேல் இருந்து ஓடி வந்தான் வாசலில் இருக்கும் தன் காரை எடுத்து கொண்டு மதியை தேடி சென்றான்.  எங்கே தேடுவது எப்படி தேடுவது என்று எதுவும் புரியாமல் காரை வேகமாக ஓட்டி செல்ல, 

அவன் செல்லும் பக்கமாக ரௌண்ட்ஸ்ல் இருந்த விஷ்ணு அவன் செல்லும் வேகத்தை பார்த்து அவனுக்கு கால் செய்ய அதில் சுவிட்ச் ஆப் என்று வர குழப்பத்துடன் சித்து வின் வண்டியை பின் தொடர்ந்து ஒரு வளைவில் மடக்கினான்.

வேகமாக இறங்கி சித்து கார் கதவை திறந்து “டேய் பைத்தியம் எதாவது பிடிச்சு இருக்கா எதுக்கு எவ்வளவு வேகமா போற”

“போய்ட்டா மச்சான் அவ என்னை விட்டு போய்ட்டா என்னை வேண்டாம் சொல்லிட்டு போய்ட்டா” என வேதனையாக சொல்ல 

“என்ன மச்சான் சொல்ற எனக்கு புரியலை” என்றதும் காலையில் இருந்து நடந்ததை சொல்ல, 

விஷ்ணு “அந்த லெட்டர் எங்க மச்சான்”

“அது…… வீட்டில் இருக்குடா” என்றதும் 

“சரி வா வீட்டுக்கு போய் பாப்போம் ஏதாவது க்ளூ கிடைக்கும். கதிர் வந்துட்டானா”

“இல்ல மச்சான் அவன் வர நேரம் ஆகும். வா வீட்டுக்கு போகலாம்” என்ற இருபதாவது நிமிசத்தில் இருவரும் மதியின் அறையில் இருக்க,

இப்போ தான் சித்து அந்த டேபிள் ஓரத்தில் இருந்த ஆதியின் டைரியை பார்த்தான்.  உடனே “டேய் இது ஆதி யோட டைரி டா அப்ப அவளுக்கு எல்லாமே தெரிந்து போச்சுடா என்னை விட்டு போய்ட்டா டா. அவ குழந்தைக்கு ஆதி அப்பா இல்லனு தெரிந்து இருக்கும் ல என்னை பற்றி எவ்வளவு கேவலமா நினைச்சு இருந்தால் என் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் போய்ட்டா” என்று கண்ணில் கண்ணீருடன் சொல்ல 

“டேய் லூசு உனக்கே நான் சொல்லி தான் தெரியும். அப்படி இருக்கும் போது அவளுக்கு எப்படிடா தெரியும். மே பி ஆதி அப்பா இல்லனு மட்டும் தெரிந்து இருக்கலாம்” என்று அவனுடன் சொல்லி கொண்டே லெட்டரை பார்த்தும் பின் அறையை பார்ப்பதுமாக இருக்க,

இதனை புரியாமல் பார்த்த சித்து அவனிடம் “என்னடா பார்க்கிற” என்றதும் 

“மதியோட பொருள் எல்லாமே இங்க தான் இருக்கு அங்க பாரு அவளோட டிரஸ் சப்பல் என்னும் சொல்ல போன தூங்கும் போது  கூட அவள் கூடவே இருக்கிற அவளோட வாட்ச் எல்லாமே இங்க தான் இருக்கு” என்று கூறிய பின்னே சித்து அவற்றை பார்க்க 

“ஆமாடா எல்லாமே இங்க தான் இருக்கு அப்ப மதி எங்க, இந்த லெட்டர் இதில் இருக்கிற விஷயம் உண்மையா பொய்யா” என 

“பொய் மச்சான் இந்த லெட்டர் பொய், இதில் இருக்கிற விஷயம் பொய் டா” என்று உறுதியாக கூற 

“எப்படி டா சொல்ற” என்ற சித்து விடம் “இதோ பார் இந்த லெட்டர் ஓரத்தில்” என்று காட்ட அங்கே பல புள்ளிகள் இருந்தது.

“என்னடா இது” என 

“கோட் டா இதில் இதோ சொல்லி இருக்க. இந்த கோட் நானும் ஆதியும் காலேஜ் படிக்கும் போது சும்மா எங்களுக்குள்ள சிக்கிரட் பேச நாங்களே கண்டு பிடிச்சோம் டா. இவளுக்கு ஆதி தான் சொல்லி கொடுத்து இருப்பான் போல” என 

“சூப்பர் டா அப்ப என்ன எழுதி இருக்குனு பார்த்து சொல்லு” என 

“இதை எல்லாம் யூஸ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சுடா லைட்டா  தான் நியாபகம் இருக்கு. நம்ப லக் ட்ரை பண்ணுவோம்” என பக்கத்தில் இருந்த நோட்பாடில் A  முதல் Z வரை போட்டு எது எதுக்கு எப்படி புள்ளி வைக்க வேண்டும் என யோசித்து வைத்தான். பின் மதி எழுதிய கடிதத்தை வாங்கி பார்த்தான். ஏழு புள்ளி அதை டீகோட்  செய்ய அவனுக்கு கிடைத்தை தகவல் “save abi” என்று இருந்தது.

விஷ்ணு “மச்சி இதில் இருக்கிறதை பார்த்தால் அவளை அபியை வைத்து தான் பிளாக் மெயில் பண்ணி இருக்கணும் டா. இப்ப அபி எங்க இருக்கான் டா” என 

“தெரியல மச்சி” என்னும் போதே வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்க “மச்சி எல்லாரும் வந்துட்டாங்க போல இப்ப என்ன டா சொல்றது” என்று அவனிடம் யோசனை கேட்க 

“எனக்கு ஒரு டவுட் இருக்கு டா அது சரியான்னு தெரியலை நான் அப்புறமா உன் கிட்ட ஒரு விஷயம் சொல்றேன் இப்ப என்ன செய்ற” என்று சில விஷயங்களை அவனிடம் கூறி விட்டு தன் யூனிபோர்மை மாற்றி கொண்டான்.

பவானி “சித்து என்னடா கோவிலில் இருக்கும் போது சும்மா சும்மா கால் பண்ணிட்டே இருந்த எதாவது முக்கியமான விஷயமா” என 

“அப்படி எல்லாம் இல்லாமா எழுந்ததும் பார்த்த வீட்டில் யாரும் இல்ல எல்லாரும் எங்க போய் இருக்கீங்கனு தெரியாமல் இருக்கு முடியல அதான்” என 

லக்கி “தனியாவா மதி வீட்டில் தானே இருந்தால் அவ சொல்லலையா” என 

“என்ன மதி வீட்டில் இருந்தாலே இல்லையே நான் வீடு முழுக்க பார்த்துட்டேன் யாருமே இல்லாததை பார்த்து தான் உங்களுக்கு கால் பண்ணேன் உங்க கூட அவ வரலையா” என்று சித்து சொல்ல 

மாலதி “இல்ல அண்ணா அவ எங்க கூட வரலை. அவ தான் அண்ணா பார்த்தசாரதி கோவிலுக்கு போகணும் எல்லார் கிட்டவும் சொன்ன நாங்க எல்லாரும் கிளம்பி தயாரான பிறகு அவ வரலைன்னு சொல்லிட சரி கோவிலுக்கு போகறோம்னு சொல்லிட்டு போகாமல் இருக்க கூடாது ல அதன் நாங்க மட்டும் போயிட்டு வந்தோம்” என 

சித்து “அப்படியா அப்ப அபி எங்க” என லக்கி “அவன் வெளிய இருக்கான் அம்மா கூட தான் இருக்காங்க” என்னும் போதே ஹரி கோமதி மற்றும் அபி உள்ளே வந்தனர்.

“ஒ.. சரி மதி வீட்டில் இல்ல எங்காவது பக்கத்தில் போய் இருப்ப உங்க யார் கிட்ட யாவது சொன்னாலா” என்று பொறுமையாக கேட்க ஹரியோ இவனின் பொறுமையை பார்த்து குழம்பி போனான்.

பவானி “என்னடா சொல்ற பிள்ளை வீட்டில் இல்லையா எதாவது பொறுப்பு இருக்க” என்று திட்ட 

ஹரி “அவ ரூமில் எதாவது இருக்கானு பாருங்க பா” என்று ஆடு தானாக தலையை கொடுக்க,

அது வரை அனைவரது முக பாவங்களை பார்த்து கொண்டு இருந்த விஷ்ணு “என்ன இருக்கணும் அங்கிள்” என்று நக்கலாக கேட்க 

என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தார். அவரை அனைவரும் கேள்வியுடன் பார்க்க என்ன சொல்லி தப்பிப்பது என்று நின்றார்.

பகலா இரவா என்று அறிய முடியாத நிலையில் இருந்த இருட்டு அறையில் கை கால்கள் கட்டப்பட்டு கண்களை திறக்க முடியாமல் சிரமப்பட்டு திறந்த மதி, தன்னை எதற்காக கடத்தினார்கள் என்று யோசிக்கும் வேளையில் ஒருவர் கதவை திறந்து கொண்டு உள்ளே வர அவரை பார்த்து அதிர்ந்தாள் மதி. 

 

அனைவரும் தன்னை கேள்வியாக பார்ப்பதை உணர்ந்தும் சாதாரணமாக பேசுவது போல் “சரி நீங்க எல்லாம் பேசிட்டு இருங்க எனக்கு முக்கியமான கால் ஒன்று வரணும் நான் அதை போய் பார்க்கிறேன்” என்று யாரின் பதிலையும் எதிர் பார்க்காமல் தன் அறைக்கு செல்லும் ஹரியை அனைவரும் வினோதமாக பார்க்க விஷ்ணு சித்துவிடம்,

“மச்சான் இந்த ஆளு சரி இல்லடா. எதோ தப்பு இருக்குடா அவர் கிட்ட” என்று மெதுவாக அவன் காதில் சொல்ல சித்துவும் தலை அசைத்தது விட்டு

“அம்மா லக்கி கதிர் கல்யாணத்திற்கு நாள் பார்க்க சொன்னேன் ல என்ன ஆச்சு அதை போய் பாருங்க முதலில் வர முகூர்த்தமே பார்க்கலாம் நீங்களும் அதையும் அதை போய் பாருங்க” என்று பாவனியையும் கோமதியையும் அங்கிருந்து அனுப்பி விட்டு மீதி இருக்கும் லக்கி மாலதி மற்றும் விஷ்ணு புறம் திரும்பி,

“ஒகே இப்ப உங்க இரண்டு பேருக்கும் ஒரு விஷத்தை சொல்ல போறேன் பொறுமையா கேளுங்க” என்றதும் இருவரும் என்ன என்று பார்க்க சித்து “மதியை கடத்திட்டாங்க” என்றதும் இருவரும் பேசமுடியா அதிர்ச்சியில் இருக்க, முதலில் சுதாரித்த லக்கி,

“என்ன சொல்ற சித்து இப்படி எதுக்கு. இப்ப என்ன செய்யறது” என்று கேட்க

விஷ்ணு “இதை விட முக்கியமான விஷயம்” என்று அவள் எழுதிய கடிதம் அதில் இருந்த ரகசிய வார்த்தை பின் தங்களின் சந்தேகம் என்று அனைத்தையும் கூற, 

“நீ சொல்றது எல்லாமே எனக்கு புரியுது பட் அதுக்காக என்னோட அப்பா மேல எல்லாம் என்னால சந்தேகம் பட முடியாது. ஒத்துக்கிறேன் அவர் பணத்துக்கு பின்னாடி போகிறவர் தான். அதுக்காக இவ்வளவு பெரிய தப்பு எல்லாம் பண்ண மாட்டார்” என்று உறுதியாக சொல்ல 

மாலதி “சித்து அந்த ஜெய் பற்றி சொன்னிங்க ல அவனை விசாரித்து பார்க்கலாம் ல அவன் மதியை கடத்தி இருந்தா” என்று தன் சந்தேகத்தை கேட்க 

சித்து “இதை நான் யோசித்து இருக்க மாட்டேனா மாலதி. எனக்கு எப்ப அவன் மேல டவுட் வந்ததோ அப்போல இருந்து அவனோட ஒரு ஒரு மூவும் எனக்கு நிமிடம் மாறாமல் வந்துட்டே இருக்கும். அவன் கண்டிப்பா இல்ல ஏன் என்று கேட்கலாம் அதுக்கு காரணம் அவனின் கல்யாணம் அவன் இப்ப ரொம்ப பண பிரச்சனையில் இருக்கான். அவனுக்கு தேவை பணம் ஒன்று தான் அதுக்கு தான் சிஎம் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க பார்க்கிறான். அவனுக்கு தேவை என்னோட உயிர் அப்புறம் மதி கிட்ட இருக்கிற ஒரு பொருள்” என்று கூற 

விஷ்ணு “டேய் அவன் எல்லாம் ஒரு ஆளே கிடையாது டா கதிர் போன வேலை மட்டும் முடிஞ்சிது அவனுக்கு சங்கு தான்.அவனை அப்புறம் பார்த்துக்கலாம் இப்ப மதியை கண்டு பிடிக்கணும் டா” என்ன கேலியாக ஆரம்பித்து கவலையாக முடிக்க,

சித்து லக்கி மற்றும் மாலதியிடம், “கவலை படாமல் இருங்க மதியை நான் பத்திரமா கூப்பிட்டு வரேன். அது வரை நீங்க பத்திரமா இருக்கணும். மாலதி நீ அபியை உன்னோட பார்வையிலே வைத்துக்கோ யார் கிட்டவும் கொடுக்காத. லக்கி சாரி டு சே திஸ் நீ உங்க அப்பாவை கண்காணிக்கணும். எனக்கு தெரியும் உன்னால அவரை சந்தேக பட முடியலைன்னு பட் என்னால மதி விஷயத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது அவர் உன் கண்காணிப்பிலே வெச்சிக்கோ அவரை வெளியே ஏங்கவும் போக விடாதே. முக்கியமா போன் பேச விடாதே” என்று இவன் இங்கே  பல கட்டளைகள் விதிக்க அதே சமயம் அந்த இருட்டு அறையில்,

ஒருவர் உள்ளே வந்து “என்ன மிஸஸ். சித்தார்த் ரொம்ப பயத்தில் இருக்கீங்க போல ஓ பேபிக்கு இருட்டு என்றால் பயமா” என்று நக்கலாக கேட்க 

‘ம்ம்ம்ம்…. ம்க்கும்….’ வாயில் இருக்கும் துணியை மீறி அவள் சத்தம் கேட்க அதை எடுத்தான் அந்த புதியவன்.

“டேய் லூசு முட்டைகோஸ் மட்டையை என் பையனை வைத்து மிரட்டி என்னை கடத்திட்டு வசனம் பேசுற. எனக்கு நீ யார் எல்லாம் தெரியாது ஆனால் உன் சாவு எப்படி இருக்கும் மட்டும் நல்லா தெரியுது. என்னும் கொஞ்ச நேரம் தான் உன் டைம்” என்று பயம் சிறிதும் இல்லாமல் சொல்ல,

“ஓ.. அவ்வளவு நம்பிக்கை உன் புருஷன் மேல” என மதி மைண்டு வொய்ஸ் ‘கொய்யா மண்டையன் அப்ப இருந்து புருஷன் புருஷன் னு’ என்று வறுத்து எடுக்க அவனே “அவன் உன்னை தேடுவான் என்ற நம்பிக்கை வேற நீ தான் நான் சொன்ன மாதிரியே எழுதி வைத்திய சரி அவன் உன்னை தேடினாலும் நீ அவனுக்கு கிடைக்க மாட்ட. அவன் இந்த உலகத்தில் உள்ள மூளை முடுக்கைல எல்லாம் தேடலாம் ஆனால் இங்க அவன் கண்டிப்பா தேட மாட்டான்” என்று திமிராக செல்ல 

உள்ளுக்குள் பயம் இருந்தாலும் அதை மறைத்து கொண்டு “கண்டு பிடிப்பான் செல்லம் சரி அதை விடுங்க நீங்க எடுத்து என்னை கடத்தி இருக்கீங்கன்னு காரணத்தை இன்னும் சொல்ல சொன்ன நல்ல இருக்கும்” என்று அவளும் திமிராக கேட்க,

“அவனோட பொண்டாட்டி இல்ல இப்படி தான் இருப்ப. உன் கிட்ட ஒரு பென் டிரைவ் இருக்கே அது எங்க” என்று இது வரை பொறுமையாக இருந்தவன் இப்பொழுது சற்று மிரட்டலாவே கேட்க,

“பென் டிரைவ்…. என்னை வெளியே வீடுங்க நான் போய் வாங்கிட்டு வரேன் பட் அதுக்கு நீங்க தான் பே பண்ணனும்” என்றதும் அவளை புரியாமல் பார்த்தவன்

“என்ன சார் முழிக்கிறிங்க நீங்க தானே பென் டிரைவ் கேட்டீங்க அதுக்கு கடைக்கு போனால் தானே வாங்க முடியும்” என்று சொன்னவளுக்கு உண்மையிலே இவன் எந்த பென் டிரைவ் பற்றி பேசுகிறான் என்பதே தெரியாது என்பது தான் உண்மை.

அவள் பதிலில் கோபம் கொண்டு “ஏய் என்ன விளையாடுறியா உன் பையன் பத்திரமா இருக்கானு திமிரு அவனை என்ன பண்றேன் பார்” என்று கோவத்தில் அவன் கத்த அவனை விட பல மடங்கு சத்தத்துடன்,

“என் பையனை தொட கூட நினைக்காத மிஸ்டர் அவனை நீ தொடணும் நினைக்கிற ஒரு நிமிசத்துக்கு முன்னாடியே நீ செத்து போய் இருப்ப. இவ ஒரு பொண்ணு தானே இவளா என்ன பண்ண முடியும்னு நினைக்கிற என் பையனுக்காக உன்னை கொலை செய்யவும் தயங்க மாட்டேன்” அது வரை அமைதியாக இருந்த மதி மகனை பற்றி கூறிய அடுத்த நொடியே பெண் சிங்கமாக அவனிடமே கத்த ஒரு நிமிடம் அவனே ஆடி தான் போய்விட்டான்.

அவளின் வாயை மீண்டும் அடைத்து விட்டு அந்த அறையை பூட்டி விட்டு வெளியேறினான் அந்த புதியவன்.

விஷ்ணுவும் சித்துவும் மதியை தேடி ஒவ்வொரு பக்கமாக செல்ல, சந்தேகம் பட்டும் படி இருக்கும் அனைத்தும் இடங்களிலும் தேடியும் கிடைக்காமல் போனதால் ஒரு இடத்தில் சித்து நிற்க அவன் வண்டி நிற்பதை பார்த்து விஷ்ணுவும் என்ன என்று கேட்க,

“மச்சான் என் மனசு சொல்லுது டா எங்க தான் எங்கையோ மதி இருக்காள் எனக்கு தெரியும்” என்று கண்களை சுழல விட அவனை சமாளிக்க தெரியாமல் முழித்தான் விஷ்ணு.  சித்து சொல்வதை போல் அங்கு தான் இருக்கிறாள் பக்கத்தில் தான் இருக்கிறாள் ஆனால் அவள் இருப்பது அவனுக்கு தெரியாது. அவள் இருக்கும் இடம் கூட யாருக்கும் தெரியாது. அப்படி என்ன இடம்?

 

அன்புள்ள 

#நிலா .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!