காத்திருத்தேனடி உனது காதலுக்காக!!- 2

என்னமா என் திறமை மேல உனக்கு அவ்வளவு சந்தேகமா என் திறமையை குறைச்சி எடைபோடாத என இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொள்ள அதைபார்த்து சிரித்தார் அருணா..
சைதன்யாவிற்கு சிறுவயது முதலே இதுபோல வேலைகளில் ஆர்வம் அதிகம் படித்து முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தபோது மும்பையில் என்பதால் வேண்டாம் என சொல்லிவிட்டாள்..

அருணா அதுபற்றி கேட்டதற்கு உன்னையும் அப்பாவையும் விட்டு எங்கும் செல்ல மாட்டேன் நான் இங்கேயே ஏதாவது வேலைக்கு செல்கிறேன் என மறுத்து விட்டாள்..

கதிரேசனுடன் வேலை செய்யும் நண்பர் கூட,,  “மும்பையில் இது மிக அருமையான கம்பெனி அதில் வேலை பார்த்தவர்கள் மிகப்பெரிய நிலையை அடைந்திருக்கிறார்கள் அதைப்போய் வேணாம் என சொல்லி இருக்கிறாளேடா  இப்படியே உங்கள் கூடவே கடைசிவரை இருக்க முடியுமா அவளிடம் நீ சொல்லி புரியவைடா” என ஆதங்கப்பட்டாராம்..

ஆனால் சைதன்யா பிடிவாதமாக மறுத்துவிட்டாள் கல்யாணம் ஆகும்வரை உங்கள் கூடவே சந்தோஷமாக இருக்கணும் அதுற்குமுன் மற்றதெல்லாம் ஒன்றுமேயில்லை என்று விட்டாள்.. கதிரேசனுக்கு மகளை நினைத்து பெருமிதம் அவருக்கும் அவளை பிரியமனம் இல்லை அதனால் உடனே சரியென்று விட்டார்..
சின்ன வயதிலிருந்தே அவள் அப்பா செல்லம் அதிலேயே அவளுக்கு நினைத்ததை செய்யும் பிடிவாதமும் உண்டு..

ஹூம் என பெருமூச்சு விட்டார் அருணா..
என்னம்மா பெருமூச்சு பலமாக இருக்கிறது..
ஒன்னும் இல்லைடி சும்மா தான்..

அப்பா எங்கேம்மா..
அவர் காலையிலேயே வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட்டார் நீ எழுந்ததும் சொல்ல சொன்னார்..

அப்படியா ஓகேமா நான் மாலை வந்ததும் பார்த்துக்கொள்கிறேன்.. சரி கிளம்புறேன்மா என லஞ்ச்பாக்ஸை  எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பினாள்..

பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிப்பாட்டிவிட்டு லிப்டில் ஏறி இரண்டாவது தளத்தை தேர்வு செய்தாள்..
அந்த அடுக்குமாடி கட்டிடம் ஐந்து தளங்களைக் கொண்டது இவர்களுடைய பொட்டிக் இரண்டாவது தளத்தில் இயங்குகிறது..
அவளுக்கு முன்னாலேயே கடைப்பையன் வந்து அமர்ந்திருந்தான்..
அவன் அந்த 5 தளங்களுக்கும் டீ,  காப்பி எடுத்து செல்பவன் அவனை அவ்வப்பொழுது சிறுசிறு வேலைகளுக்கு அழைத்துக்கொள்வார்கள்.. இருவரும் ஷாப்பை திறந்து எல்லாவற்றையும் பார்வைக்கு அடுக்கிவைத்து ஒவ்வொரு வேலையாக ஒன்றன்பின் ஒன்றாக  செய்து கொண்டிருக்கும்போதே மற்ற வேலையாட்கள் வரத்துவங்கினார்கள்..

சுந்தரி, செல்வி இருவரும் இவளுக்கு உதவியாக வேலைசெய்ய எம்ராய்டரி, ஜமிக்கி வேலைசெய்ய ஒரு தடுப்பு ஏற்படுத்தி அதையொரு பகுதியாக்கி இருந்தனர் அங்கு இரு ஆண்கள் வேலை செய்தனர்..
பெண்கள் இருவரும் வரும்போதே  ஆச்சரியமாக அவளை பார்த்து என்ன அக்கா இன்று சீக்கிரம் வந்துவிட்டாய் மழை வரப்போகுது என கிண்டல் செய்ய,” ஏன்டி நான் சீக்கிரம் வந்ததே இல்லையா” என சைதன்யா முறைக்க.. வந்திருக்கிறாயே ஆடிக்கும் அமாவாசைக்கும் என சொல்லி சிரிக்க அவர்களை முறைக்க முயன்று தோற்று அவர்களுடன் சேர்ந்து தானும் சிரித்தாள்..
சுந்தரி செல்வி இருவரும் கலகலப்பானவர்கள் அதிலும் சுந்தரி ரொம்பவும் குறும்புத்தனம் செய்வாள் சைதன்யாவும் அவர்களோடு  வேலையாட்களுடன் பழகுவது போல் பழகியதே இல்லை என்பதால் அவர்களும் அவளிடம் உரிமையோடு பழகுவார்கள்..
ஆனால் வேலை என்று வரும்போது மட்டும் சைதன்யா கொஞ்சம் கண்டிப்பு காட்டுவாள் அவர்களும் வேலையை திறம்பட செய்பவர்கள் என்பதால் இதுவரை எந்த பிரச்சினையும் வந்ததில்லை.. இன்றைக்கு சந்தோஷ் கொஞ்சம் லேட்டாக வருவேன் என்று சொன்னான் அதனால் தான் எனச்சொல்ல,  அதானே பார்த்தேன் என்றனர் இருவரும் கோரசாக..

அதற்குள் கஸ்டமர் வர அவர்கள் ஆர்டரை சரிபார்த்து கொடுத்து புது ஆர்டர் வாங்குவது என வேலை  சிறிது நேரம் சரியாக இருந்தது..
அவர்கள் சென்றதும் அக்கா உனக்கு விஷயம் தெரியுமா மாடியில் மூன்றாவது தளத்தில் சிலநாட்களாக வேலை நடந்துகொண்டிருந்தது இல்லையா அங்கே அந்த தளம் முழுவதுமாக ஒரு கம்பெனி வர போகிறதாம் என பேச்சை ஆரம்பித்தாள் செல்வி..
யார் வருகிறார்கள் என்ன கம்பெனி ஏதாவது தெரிந்ததா டி என சுந்தரி கேட்க.,
அதைத்தானே சொல்ல வந்தேன் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே  சக்கரவர்த்தி குரூப் ஆஃப் கம்பெனிஸ் அவர்கள் புதிதாக இந்த தொழிலை தொடங்கி இருக்கிறார்கள்..

ஏற்கனவே வேலை நடந்து கொண்டிருக்கிறது ஏதோ கம்பெனி வரப்போகிறது என்பது வரை இருவருக்கும் தெரிந்தாலும் இந்த செய்தி அவர்களுக்கு புதிது..
சக்கரவர்த்தி குரூப் ஆஃப் கம்பெனிஸ் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம் ஏற்கனவே கட்டிடக்கலை,  ஏற்றுமதி-இறக்குமதி,  வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பது என நிறைய தொழில்களை வெற்றிகரமாக நடத்திக்  கொண்டிருந்தார்கள்..
அவரது மகன் லண்டனில் படித்துவிட்டு அங்கே ஏற்கனவே ஐடிகம்பெனி வைத்திருந்தாராம் அதை அவரது நண்பர் பொறுப்பில் விட்டுவிட்டு அதேபோல இங்கே துவங்கப்போகிறாராம் ஆனால் அதோடு சேர்த்து புதிய தொழிலாக கார்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ் ஷாப் துவங்கபோகிறார்களாம்..
ஒரு பகுதியில் ஐடிகம்பெனியும் ஒரு பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் ஷாப்பின் டிசைனிங் பிரிவும் துவங்க போகிறார்களாம் நகரின் மையப்பகுதியில் இவர்கள் சொந்தமாக ஒரு 5 மாடிகள் கொண்ட  கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்களாம்..

அந்த வேலை முடிந்தவுடன் அங்கே கார்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல் ஷாப்பை ஆரம்பித்துவிடுவார்களாம் அதுவரை இங்கே டிசைனிங் வேலைகள் மட்டும் நடக்குமாம் இது அவருக்கு கொஞ்சமும் அறிமுகமில்லாத தொழிலாம் புது முயற்சியாக இதை துவங்குகிறாராம்.. 

 

On Fri, 1 May 2020, 12:24 am Surya G, <surya.1690@gmail.com> wrote:
அதிகாலை பொழுது வீடு முழுவதும் சாம்பிராணி புகை மணமணக்க அந்த வீட்டில் சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தது.. அந்த வீட்டின் குடும்பத் தலைவி அருணா நம் நாயகிக்கு சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தார் “ஏய் தனு எழுந்திருடி மணி 7 ஆவுது அப்புறம் மணி ஆயிடுச்சு என்று சரியாக சாப்பிடாம அவசரஅவசரமாக கிளம்புவ”..
தனியா நான் மட்டும் வேலை செஞ்சிட்டு இருக்கேன் கொஞ்சம் கூடமாட ஒத்தாசை செய்வோம்னு இருக்காளா பாரு சாப்பிடும்போது அது குறை இது குறைனு  ஆயிரம் குறை சொல்ல வேண்டியது இவ்வளவு தூரம் சொல்லிட்டுருக்கேன் எப்படி இழுத்து போத்திகிட்டு தூங்குறா பாரு..
ஏய் தனு எழுந்திருடி சந்தோஷ் வர லேட் ஆகும் அதனால இன்னைக்கு நீ சீக்கிரம் போகணும்னு சொன்னியேடி..
இந்த ஆயுதம் உடனே வேலை செய்தது தலை உயர்த்தி மணியை பார்த்து அடக்கடவுளே மணி 7.30 ஆகுதா அம்மா நான் நேத்தே சொன்னேன்ல இன்னைக்கு சீக்கிரம் போகணும்னு ஏன்மா என்ன காலையிலேயே எழுப்பல..
சொல்வேடி ஏன்டி சொல்ல மாட்ட காலையிலிருந்து கரடியாக் கத்துறேன் திரும்பித் திரும்பிப் படுத்துக்கிட்டு இப்ப என்ன கொற சொல்றியா இனிமே என்னை எழுப்பிவிடுன்னு நீ சொல்லு அப்புறம் நான் பேசுக்கிறேன் அவர் திட்டி கொண்டிருக்க கரடி மாதிரி கத்தினா எனக்கு எப்படி காதுல விழும் என முனு முனுத்துவிட்டு நைஸாக குளியலறைக்கு நழுவினாள்..
குளித்து முடித்து ஆடை அணிந்துகொண்டு அம்மா டிபன் சீக்கிரம் எடுத்துவை லேட் ஆகுது என கத்திக்கொண்டே டைனிங்டேபிள்  வந்தாள்..
இருடி எடுத்து வைக்கிறேன் டெய்லி உனக்கு இதே வேலையா போகுது சீக்கிரம் எழுந்து கிளம்பாம அந்த நேரத்திக்கு கிடந்து ஆடுறது உன்ன நம்பி எப்படித்தான் பொட்டிக்கை  நடத்துறானோ  சந்தோஷ்..
அருணா கதிரேசன் தம்பதிக்கு ஒரே செல்ல பெண் சைதன்யா..
சந்தோஷும் சைதன்யாவும் சிறுவயது முதலே நண்பர்கள் உடன்பிறந்தவர்கள் யாருமின்றி வளர்ந்ததால் இருவருக்கும் ஒரு சகோதர பாசமும் உண்டு.. அவனும் இவளை எப்போதும் எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டான் ஆடை வடிவமைப்பு தொடர்பான படிப்பை முடித்துவிட்டு பெரிய கம்பெனியில் வந்த வாய்ப்பை வேண்டாம் என தட்டிக் கழித்துவிட்டு இந்த பொட்டிக்கை கொஞ்சம் பணம் முதலாக போட்டு கொஞ்சம் லோன் போட்டு எனத் துவங்கினார்கள்..
காலேஜ் படிக்கும்போதே சந்தோஷ் ஈவன்ட் ஆர்கனைஸ் செய்யும் ஒரு கம்பெனியில் பார்ட் டைமாக வேலை செய்தான் அது அவனுக்கு பிடித்துப்போகவே பொட்டிக் வேலையோடு சேர்த்து அதனையும் செய்தார்கள்..
வந்த வருமானத்தை நாலு பங்காக பிரித்துக் கொண்டார்கள்.. ஒரு பங்கு அவளுக்கு ஒரு பங்கு அவனுக்கு ஒரு பங்கு தொழில் முன்னேற்றத்திற்கு ஒரு பங்கு புதிய கிளை துவங்குவதற்கு என முடிவு செய்து கொண்டார்கள்..
இவர்களது ஆர்டர் பிடித்துப்போக மேலும் ஆர்டர்கள் குவிந்தது முதலில் தேடி ஆர்டர் பிடித்தது போல இல்லாமல் தானாகவே வர ஆரம்பித்தது..
சந்தோஷுடன் கூடவே அவன் எடுத்து செய்யும் விழா நிகழ்ச்சிகளில் சைதன்யாவும் கலந்து கொள்வாள்.. அப்படி கலந்து கொள்ளும் போது அவளுக்கு தோன்றும் புது முயற்சிகள் ஒன்றிரண்டை சொல்வாள் அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது..
இப்போது இருவரும் இன்னும் சில ஆட்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் பெரியஅளவில் செய்ய தொடங்கியிருந்தார்கள்..
இரண்டு மாதம் முன்பு DIG வீட்டு கல்யாணத்தில்  குடும்பத்தினர் அனைவருக்கும் சைதன்யா ஆடைகளை ரெடி செய்து கொடுக்க சந்தோஷ் அந்த கல்யாண வேலைகளை எடுத்து திறம்பட செய்தான்..

அந்தத் திருமணத்தில் எல்லாம் நல்லபடியாக அமைய இவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதனால் அதற்குப் பிறகு நிறைய ஆர்டர்கள் வரத் துவங்கியது.. இடம் தான் கொஞ்சம் சிரமமாக இருந்த போதும் சமாளித்துக்கொண்டு செய்தார்கள்.. இப்போதும் கூட சந்தோஷ் ஆர்டர் விஷயமாக கொஞ்சம் பெரிய கம்பெனியில் இருந்து அழைப்பு வந்திருப்பதாக சொல்லி மீட்டிங்கிற்கு போயிருக்கிறான்.. அதனால்தான் இன்று அவள் சென்று சீக்கிரமாக ஷாப்பை ஓப்பன் செய்ய வேண்டுமென்று கிளம்பிக் கொண்டிருக்கிறாள்..