காலம் யாவும் அன்பே 16

காலம் யாவும் அன்பே 16

                       காலம் யாவும் அன்பே 16

 

ஆகாஷ் காலையில் எழுந்ததிலிருந்து நூறாவது முறையாகப்  புலம்பிக் கொண்டிருந்தான்.

“ ச்ச! ஐ மிச்ஸ்ட் எவரிதிங். இது கொஞ்சம் கூட நியாயமே இல்ல ஹெட்.. என்னை எழுப்பி இருக்கலாம்ல” சலித்துக்கொண்டே வாகீசன் கொடுத்த நீரையும் கற்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அவனுக்கு இயல் உதவி புரிய , வந்தனாவோ அதன் தன்மையைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தாள்.

வாகீசன் “ ச்சில் மேன்” என்றுவிட்டு அங்கே செல்லத் தேவையானவைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

“இந்தத் தண்ணீர் பாரு கலர் மாறுது” இயல் கையில் இருந்த கனாடி பாட்டிலின் வழியாக நேற்று எடுத்து வந்த நீரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எடுத்து வைத்துக் கொண்டிருந்த பொருட்களை அப்படியே விட்டு விட்டு வந்தான் வாகீசன்.“ எஸ்… இது பச்சை நிறமா இருக்கு. சோ இது கண்டிப்பா மூலிகை , நிலத்தில் கிடைக்கும் அரிய தாதுக்களால் உருவாக்கப்பட்டது தான்..” அதை அவள்  கையிலிருந்து வாங்கிப் பார்த்தான்.

அவனைப் பார்க்காமலேயே அவனிடம் கொடுத்தாள் இயல். நேற்று இரவு அவன் முதுகில் சாய்ந்தபடி உறங்கியதை வீட்டிற்கு வந்த பிறகு தான் உணர்ந்தாள். அதிலிருந்து அவன் முகத்தைப் பார்த்துப் பேச தயக்கமாகவே இருந்தது.

அவனது பார்வையும் அவ்வப் போது அவளைத் தொட்டு மீண்டு கொண்டிருந்தது. புது வித அவஸ்தையை இருவருமே அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

“ அப்போ அதுனால தான் இயலோட கைல இருந்த காயம் ஆரியிருக்கா? இத வெச்சு அப்போ நிறைய பேருக்கு ட்ரீட்மென்ட் பண்ணலாமே!” வந்தனா ஆர்வமாக அருகில் வர,

தன்னுணர்விலிருந்து மீண்டனர் இருவரும்.

“ பண்ணலாம் , ஆனா நமக்கு இதைப் பத்தி முழுசா தெரியாது. அதுவுமில்லாம இப்போ இதை வெளில லீக் பண்றது அவ்வளவு நல்லதில்ல” மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தான் வாகீ.

“ ஹெட், எனக்கும் ஸ்விம்மிங் தெரியும், நானும் உங்க கூட சேர்ந்து அந்தத் தண்ணீருக்குள்ள வரட்டுமா..” முகத்தைப் பாவாமாக வைத்துக் கொண்டு ஆகாஷ் கேட்க,

“ இல்ல ஆகாஷ். நீ வெளில இருக்கணும். அப்போ தான் எனக்கு ஹெல்ப் பண்ண முடியும். ஏன்னா உள்ள என்ன இருக்குன்னு சொல்ல முடியாது. பிகாஸ் யூ நோ மீ வெல். ஒரு வேளை உள்ளிருந்து நான் வராமலே இருந்துவிட்டால் இவங்க ரெண்டு பேரும் தனியா என்ன செய்வாங்க, சோ நீ இங்க இருக்கறது தான் பெட்டர்.” தெளிவாகக் கூறிவிட்டான் வாகீ.

அவன் கூறிய வார்த்தைகள் இயலுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

‘ திரும்பி வராமலே இருந்துட்டாவா..! ச்சே.. என்ன பேசறாரு.. அப்படி நடந்துட்டா…’ அவள் மனதில் பாரம் அழுத்தியது.

சட்டென அங்கிருந்து தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அனைவரும் ‘ என்ன ஆச்சு ?‘என்று யோசிக்க, வாகீயும் தன் சொல்லால் அவள் வருந்துகிறாள் என்று உணரவில்லை.

இயல் தான் வணங்கும்  பிரகதீஸ்வரரின் படத்தை வைத்துக் கொண்டு வாகீசனுக்கு அப்படி எதுவும் நடந்து விடக் கூடாது என்று மனதார இறைவனிடம் அழுது கொண்டிருந்தாள்.

அவனுக்காக தான் ஏன் வருந்துகிறோம்…., இயல்பாக இருக்க நினைத்தும் அவனது அருகாமை தன்னை சுகமாய் இம்சிப்பது எதனால்… இவைகளுக்கு அவள் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்த போதே விடை கிடைத்துக் கொண்டிருந்தது.

அவனது ஒற்றை வார்த்தை… ‘ திரும்பி வரலைனா’ அந்த வார்த்தை அவளின் உள்ளத்தை உலுக்கியது.

அவ்வளவு சீக்கிரம் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இதையே ஆகாஷோ அல்லது வந்தனாவோ கூறியிருந்தால் ஜாலியாக எடுத்துக் கொண்டு சென்றிருப்பாள். இத்தனை வேதனை உள்ளத்தை கீறாது.

ஆனால் வாகீசன்…, சண்டை போட, திட்ட, முறைக்க, இதைத் தாண்டி அவனுக்குத் தன் மேல் இருக்கும் அக்கறை, வெளியில் சொல்லாத அன்பு,அவனது  பார்வையின் தீண்டல் இவை அனைத்துமே அவளுக்குத் தேவையாக இருந்தது.

நேற்று இரவு அவன் முதுகில் சாய்ந்து வந்தது , நினைத்தாலே .. அதை உரிமையுடன் அனுபவிக்கும் பேராசை கடல் போலப் பொங்கியது.

அவனை விட்டுவிட அத்தனை எளிதாகத் தன்னால் முடியுமா..  இதை அவனிடம் சொல்லத் தான் முடியுமா… சொன்னாலும் அவன் உடனே ஏற்றுக் கொள்பவனா…. அவன் எங்கே தான் எங்கே!

அடைய முடியாத ஒன்றின் மீது ஏற்படும் ஆசை , திரிசங்குவின் சொர்க்கம் போலத் தான். நினைக்க நினைக்க நெஞ்சுக் குழிக்குள் துக்கத்தை அள்ளி அடைப்பது போல ஆனது.

ஆனால் தன் மனதை இன்று முழுமையாக உணர்ந்தாள்.

தான் எந்தவித சம்மந்தமும் இல்லாத சைடு கேரெக்டராக இருந்தாலும், அவன் தான் தனது ஹீரோ… என்ற முடிவிற்கு வந்தாள்.

அனைவரும்  அவர்களது ஜீப்பில் தேவையானப் பொருட்களுடன் கோயிலை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

திடீரென ஒரு தாடி வைத்தக் கிழவன் கையில் ஒரு கம்புடன் முன்னே தோன்றினான். எங்கிருந்து வந்தான், எப்படி வந்தான்… யாருக்கும் புரியவில்லை.

வண்டியை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான் வாகீசன்.

ஆகாஷ் தலையை வெளியே நீட்டி கத்தினான்.

“ஐயா! கொஞ்சம் வழி விடுங்க..வண்டி போகனும்”

அந்தக் கிழவன் அசையவில்லை. வாகீசனையே உருத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனே நேற்று அவர்களைக் கண்டவன்.

அங்கே செல்ல பரபரப்பாக இருந்த வாகீக்கு , ‘இது என்ன தொல்லை’ என்றே நினைக்கத் தோன்றியது.

“ஆகாஷ் கொஞ்சம் இறங்கிப் பாரு!” எனவும், ஆகாஷும் வெளியே இறங்கி வந்தான்.

பக்கத்தில் சென்று “இந்தப் பக்கம் வாங்க ஐயா, எங்களுக்கு வேலை இருக்கு” எனப் பொறுமையாக எடுத்துச் சொல்ல,

அவனை கோபமாக முறைத்தார். ஆகாஷ் பின் வாங்க,

அங்கிருந்து வேகமாக வண்டியை நோக்கி வந்தார் அந்தப் பெரியவர். வாகீசனைப் பார்த்து சிரித்தார்.

“ உன்னோட வேலை இன்னிக்கு நடக்குமா…. ! ஈசன் விடமாட்டான்… ! இன்னும் நிறைய இருக்கு… அவசரப் படாதே”

வாகீ க்கு ஒன்றும் புரியவில்லை. ‘இவர் யார்? என்ன சொல்கிறார்’ என்று குழம்ப,  

அந்த இடமே அதிரும்படி சிரித்துவிட்டு அங்கிருந்து செல்ல நினைத்த அந்தப் பெரியவர், பின்னால் இருந்த இயலைப் பார்த்ததும் அவர் கண்களில் ஒரு மரியாதை தோன்றியது.

“நீ போட்ட முடிச்சு தான் இத்தனைக்கும் காரணம், உனக்கு இன்னும் முடிச்சு விழலையா…. சீக்கிரம்…. ரொமப் சீக்கிரம் நடக்கும்” அவளைப் பார்த்து உள்ளங்கையை உயர்த்திக் காட்டி ஆசீர்வாதம் செய்துவிட்டு வேக எட்டுக்கள் வைத்து அங்கிருந்து மறைந்தார்.

கொஞ்ச நேரம் அங்கு என்ன நடக்கிறது என ஒன்றும் விளங்கவில்லை, எங்கிருந்து வந்தார்…என்ன சொல்கிறார்..எங்கு சென்றார்… ஒன்றும் புரியவில்லை..

‘நான் போட்ட முடிச்சா..’ இயலுக்கு எதையும் சிந்திக்கும் மனநிலை இப்போது இல்லை.

‘போற காரியம் நடக்காதுன்னு ஏன் சொல்லணும்’ வாகீக்கு கோபம் வந்தது.

அதை தற்காலிகமாகத் தவிர்த்து விட்டு கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

அனைவரும் இப்போது சிவனின் முன்பு நிற்க, இயல் மனது சரில்லாமல் முதலில் விளக்கை ஏற்றினாள்.

வந்தானா அவளது வாட்டத்தை அறிந்து, “என்ன ஆச்சு இயல். எப்பவும் போல நீ இல்லையே, காலைல கூட நல்லா தான இருந்த, திடீர்னு என்ன வந்துச்சு?” தோண்டித் துருவ,

“ஒண்ணுமில்ல வந்தனா…” பதில் சொல்லும் மனநிலையில் அவள் இல்லை.

ஆகாஷ் பேசாமல் இரு என சைகை செய்ய, அவளும் அதோடு அவளை தொல்லை செய்யாமல் விட்டாள்.

 

வாகீயும் அவளது முகத்தைப் பார்க்க, அவளின் மன ஓட்டம் என்ன என்பதை அறியாமுடியாமல் தவித்தான்.

‘ஒரு வேளை நேத்து நம்ம மேல சாஞ்சதுக்கு வருத்தப் படறாளோ? காலைல இருந்து அவள அடிக்கடி கொஞ்சம் பார்த்தது தப்பா போச்சு… அவள நமக்கு பிடிச்சா போதுமா..அவளுக்கும் பிடிக்காம என்ன செய்ய….’ நீரில் குதிக்க ஆயத்தமானான்.

தலையில் ஹெட் லைட் , தன் இடுப்பைச் சுற்றி கயிறு , ஸ்விம் சூட், வாட்டர் ப்ரூஃப் வாட்ச் சகிதம் தயாரானான்.

“ஹெட், ஆக்சிஜென் மாஸ்க் வேண்டாமா?” ஆகாஷ் அதைக் கையில் எடுக்க,

“இப்போ வேண்டாம் . இது பத்தடி தான் இருக்கும் . அதுனால தேவைப் படாது. அதோட இந்த சுற்றளவும் கம்மியாதான் இருக்கு.. தேவைனா நான் வந்து எடுத்துக்கறேன். நான் நல்லாவே ஸ்விம்பண்ணுவேன்” லேசான புன்னகையுடன் கூறினான்.

ஆகாஷும் சரியென தலையாட்ட, அடுத்த வேலையாக, வாகியின் இடுப்பைச் சுற்றி கையிற்றை இறுக்கமாகக் கட்டினான்.

“ இந்த கயிறு எமெர்ஜென்சிக்கு மட்டும் தான். உள்ள சப்போஸ் மாட்டிக்கிட்டா, இந்தக் கயிறை பிடிச்சு என்னை வெளிய எடுக்க மட்டும் தான். புரியுதா!” வாகீ சொல்லிவிட்டு, முதலில் அந்த நீரில் காலைவைத்து அமர்ந்தான்.

இயலை ஒரு முறை பார்க்க, அவளது கண்கள் ஏதோ சொல்ல வருவது போல இருந்தது.

அவளும் அவன் நல்ல படியாக உள்ளே சென்று திரும்ப வேண்டும் என்று தான் வேண்டிக்கொண்டாள்.

நீருக்குள் இறங்கினான் வாகீ. தண்ணீர் ஐஸ் போல இருந்தது. லேசாக உடம்பை உள்ளே நுழைக்க பின் அவனது தலையும் மறைந்தது.

 இயலின் கண்கள் குளமாக, அவன் திரும்பி வரும் நேரத்தை இப்போதே எதிர்ப்பார்த்தாள்.

ஆகாஷ் வந்தனா என அனைவரும் காத்திருக்கத் தொடங்கினர். இயலைப் பார்த்த இருவரும் புரிந்துகொண்டனர். அவளுக்கு வாகீயின் மேல் காதல் வந்ததை உணர்த்தியது அவள் முகம்.

இயலும் அவன் சென்ற இடத்திலேயே சென்று அமர்ந்து கொண்டாள்.

வெளியில் இருந்த கயிற்றின் நீளம் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சென்று கொண்டிருந்தது.

“ ஆகாஷ் இந்தக் கயிறை நாம வேற எங்கயாவது கட்டலாமா?”பயத்தில் அவள் கேட்க,

“இல்ல இயல், அப்புறம் உள்ளே ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மேல அவரால போக முடியலனா கஷ்டம். திரும்ப வந்து நம்மள நல்லா திட்டுவாரு” வாகீயின் குணம் அறிந்து அவன் சொல்ல,

மீண்டும் அமைதியானாள்.

“உன் கவலை எனக்குப் புரியுது இயல்.. நீ அவர காதலிக்கரியா?” வந்தனா அருகில் வந்தமர்ந்து அவளின் தோளைப் பற்ற,

உடனே உடைந்தாள் இயல்..  

உள்ளே வாகீ சென்ற இடம் கிட்டத்தட்டப் பெரிதாகவே இருந்தது. முதலில் கிணற்றின் அகலம் போல சிறிதாக இருந்தது இப்போது ஒரு சிறு குட்டை அளவு பெரிதானது. அவன் நினைத்தது போல அது பத்தடி இல்லை. அதற்கும் மேல் இருந்தது.

ஹெட் லைட்டின் உதவியால் நீருக்குள் இருப்பவற்றை அவனால் பார்க்க முடிந்தது.

பக்கச் சுவர்கள் அனைத்தும் மூலிகைச் செடிகள் படர்ந்து, ஒரு வித வாசனையை பரப்பியது.  ஒரு வழியாக உள் நீச்சல் அடித்துத் தரையைத் தொட்டான் வாகீசன்.

செடிகள் இப்போது சுத்தமாக அங்கே இல்லை. அந்தத் தரைப் பகுதி வெறும் மண் மேடுகள் தான். ஆனால் அவனால் அதை உணர முடியவில்லை.

தரையை அவன் கால்கள் உணரும் போது அந்த மண் அவனை உள்ளே இழுத்தது. புதை மணலோ என்ற அச்சம் அப்போது தான் அவன் மூலையில் உரைத்தது.

இதைப் பற்றி அவன் சிந்திக்கவே இல்லை. புதை மணலில் சிக்கினால் வெளியே வருவது கஷ்டம் தான் என்பது அவனுக்குத் தெரியும். முன்னை விட வேகமாக அவன் கால்கள் உள்ளே இழுக்கப் பட்டன.

இடுப்பில் இருந்த கயிற்றைக் கட்டாமல் இருந்ததால் அதைப் பற்றிக் கொண்டு வெளியே வரவும் , அவனால் முடியவில்லை.

அந்த நேரம் மேலே இருந்தவர்கள் கயிறு மொத்தமாக உள்ளே செலவதைப் பார்க்க,

“ஏதோ சரியில்ல… இதுக்கு மேல உள்ள போனா நல்லா இருக்காது , கயிறை இழுக்கலாம்” என்று சமயோஜிதமாக சிந்தித்தான் ஆகாஷ்.

 வேகமாக கயிறைப் பற்றிக் கொண்டான். அவனையும் மீறி கயிறு உள்ளே செல்ல, இப்போது இயல் வந்தனா என மூவரும் சேர்ந்து தங்கள் பலத்தைக் காட்டினர்.

அனைவரும் அவனை பிடித்து இழுப்பதை உள்ளே இருந்த வாகீசன் உணர்ந்தான்.

அவனது கையும் அந்தக் கயிறைப் பற்றிக் கொண்டது. வெளியே கால்களை எடுக்கப் போராடினான். அவனது கால்களை வலுவாகப் பற்றியிருந்தது அந்த மணல்.

தன் சக்தி அனைத்தையும் கொடுத்து மேலே மூவரும் இழுக்க , வாகீயின் கால்கள் கொஞ்சம் மேலே வந்தது.

அப்போது அங்கே இருந்த சுவரில் ஏதோ மினுமினுத்தது. அதைப் பார்க்க நினைத்தவன், வேகமாக சக்தியைப் பயன்படுத்தி கால்களை வெளியே எடுத்தான். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கால்கள் வெளியே வந்தது.

இவர்கள் அவனை மேலே இழுக்க, வாகீயோ அந்த சுவரை நோக்கி நீந்தினான். அந்த மினுமினுப்பு வந்த இடம் வெற்றிடமாக இருந்தது. ஐந்து குழிகள் அந்தச் சுவரில். அது என்னவென்று பார்க்க அதன் மீது கை வைக்கச் சென்றான். அவனது ஒரு விரல் அதன் மீது பட்டதும், எப்போதும் போல ஷாக் அடித்த உணர்வு!

ஏற்கனவே மூச்சைப் பிடித்து இது வரை நீந்தியவன், கால்களை எடுக்கப் போராடியததில்  பாதி சத்தை இழந்திருந்தான்.

இந்த ஷாக் வேறு அடித்ததில் முழு சக்தியும் அவனை விட்டுப் போனது.

அதற்குள் இவர்கள் மேலே இழுக்க, மூர்ச்சையானான்..!

வெளியே வந்தவனைப் பார்த்து இயல் துடித்துப் போனாள். ஓடிப்போய் அவனை வெளியே இழுத்து,

“ வாகீ….!” கதறினாள்.

திருவாசகம்:

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள்:
நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணிய மூர்த்தியே !
என்னைக் காக்கின்ற காவல் தெய்வமே ! காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே !
தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே ! தந்தையே ! மிகுதியாக நின்ற
ஒளி வீசும் சுடரான தோற்றத்தினனாய், சொல்லப்படாத பூடகமான நுண் உணர்வாக இருந்து

 

 

error: Content is protected !!