கிட்காட் கஸாட்டா முடிவுரை

IMG-20210429-WA0013-2e56ac7f

ஹாய் ஆல்❤️! குட் ஈவ்னிங்🌝!

“கிட்காட் கஸாட்டா”க்கு என்னை ஊக்கப்படுத்தி எனது ஒவ்வொரு பதிவிற்கும் கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் நன்றி😁. என்னுடைய முதல் நாவல்ல இருந்து இப்பவரைக்கும் சப்போர்ட் பண்ற ஒவ்வொருவக்கும் நன்றி😇. சிலர் எல்லாம் சான்ஸே இல்லை😌.

நான் கதைக்கு வரேன்😂. நம்ம ‘மெல்ல யாழ் மீட்டுதே’ல கிடைச்ச ரெஸ்பான்ஸ் இதுக்கு கிடைக்குமானு பயத்துல ஆரம்பிச்ச நாவல் தான் நம்ம, “கிட்காட் கஸாட்டா”. நான் காமெடியா குடுத்ததுக்கு இரண்டு காரணம். பர்ஸ்ட் “இந்த ஊரடங்கு சமயத்துல சோகத்தைத் தந்து யாரையும் அழ வைக்க வேணாம்னு நினைச்சேன்”🙈. இரண்டு ரொம்ப முக்கியமானது “•நீ முதல்ல நாவல் எழுதறத நிறுத்து, •சோகமா எழுத மட்டும் தான் வருமா?, •இப்படி எழுதறதுல உனக்கு எதாவது யூஸ் இருக்கா” அப்படிங்கற சில பேச்சுக்கள்னாலனு வச்சிக்கலாம்.

அதாவது “மெல்ல யாழ் மீட்டுதே” எழுதும் போதே இதை சந்திச்சேன். பைத்தியம் புடிக்காத குறைதான், “மெல்ல யாழ் மீட்டுதே”வை எழுதி முடிக்கிறதுக்குள்ள. சொல்லப்போனா எழுதி முடிக்க முடியுமானு ஆகிடுச்சு. “மெல்ல யாழ் மீட்டுதே” அழுத்தமா எழுதனும்னு நினைச்சிருந்த எனக்கே அழுத்தம் ஆகிடுச்சு. அந்தக் கஷ்டத்துல எழுதி முடிச்சனாலதான் அது செமயா வந்துச்சுன்னு இப்பத் தோணுது.

(பின் குறிப்பு : இது நம்ம சைட் ரீடர்ஸோ முகப்புத்தகம் ரீடர்ஸோ சொன்னது இல்ல மக்களே). பட் பேசுனவங்களுக்குத் தெரியல போல, எனக்கும் என்னோட நாவலிற்கும் இருக்க உறவு அம்மா குழந்தை மாதிரி ஆகிடுச்சுனு.

அதுனால தான் எனக்குள்ள, “ஒரு சூறாவளி கிளம்பியதே” அப்படிங்கற மாதிரி ஆகி😂 “கிட்காட் கஸாட்டா”வை எப்படியாவது குடுக்கணும். அதுவும் நான் நினைச்ச மாதிரி காமெடியா… ரொமான்டிக்கா அப்படின்னு பிக்ஸ் ஆகி எழுதுனேன். டைமும் ரொம்பவே எடுத்தேன். பட் இவ்வளவு நல்ல ரெஸ்பான்ஸ் எதிர்பாக்கவே இல்லை நான்.

சித்தார்த் சித்தாராவை ரொம்ப மிஸ் பண்ணுவேன் நானும். இரண்டுமே என் கற்பனைல இருந்து வந்த கேரக்டர். ஸோ மறக்கறது கஷ்டம் தான் எனக்கும்.😋

என்னோட ரீடர் அக்காஸ் அன்ட் பிரண்ட்ஸுக்கு ரொம்ப நன்றி. பிக்காஸ் “கிட்காட் கஸாட்டா”வோட கமெண்ட்ஸ் பாத்து ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேனு வையுங்களேன். என்னோட முயற்சிகள் இதுல பாதினா, இதை அடுத்த லெவலுக்கு எடுத்திட்டு போன என்னோட ரீடர்ஸுக்கு நான் என்ன சொல்றதுனே தெரியல.

நன்றிக்கு மேல வார்த்தை கிடைச்சா, அதை தான் சொல்ல விரும்பறேன். அடுத்த கதையும் இன்னும் நல்லா குடுக்க ட்ரை பண்றேன். லவ் யூ ஆல்!❤️

-யாழினி மதுமிதா💙