கிட்காட்-5

IMG-20210429-WA0013-8c0db3ae

கிட்காட்-5

உதகையிலுள்ள அந்த இரட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர் சொர்ணாம்பாளும் ரேணுகாவும். குலதெய்வத்திற்கு குடும்பத்தோடு வந்திருந்தனர் அனைவரும். கூடவே தேவி, சின்மயி, சித்தாராவை
அழைத்துக்கொண்டு. சின்மயி பெரியவர்களுக்கு உதவியை செய்து கொண்டிருக்க, சித்தாராவோ அங்கிருந்த தூணில் சாய்ந்து நடப்பனவற்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.

பெரியவர்களுக்குச் சிறுசிறு உதவிகள் செய்துவிட்டு தங்கையருகில் நின்றாள்
சின்மயி. ரமணாவின் கண்களோ இருவரையும் அளந்துகொண்டிருந்தது.
சின்மயி மெல்லிய அரக்குக் பாடர் வைத்த பட்டுசேலையில், முதுகு வரை இருந்த
கூந்தலை ஃபிஷ் ப்ரெய்ட்டிட்டு பெண்ணிற்கே உண்டான ஒப்பனைகளோடு அமைதியாக நிற்க, சித்தாராவோ குங்குமநிற சுடிதாரிலும் சந்தனநிற பாண்ட் துப்பட்டாவில் இடை வரை இருந்து கூந்தலிற்கு ஒரு க்ளிப் குத்தி கொஞ்சம் ஈரமாக இருந்த கூந்தலை முதுகில் படரவிட்டு எந்த ஒப்பனையும் இல்லாமல் நின்றிருந்தாள். அவள் எதையோ தீவரமாக யோசித்துக் கொண்டிருப்பதை அவள் புருவமுடிச்சே நன்றாக விளக்கியது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் சித்தார்த் அவனிற்கும் சித்தாராவிற்கும்,
சிலவருடங்களுக்கு முன் நடந்ததை சொன்னது நினைவு வந்தது ரமணாவிற்கு.

சித்தாராவிடம் ‘கிட்காட் கஸாட்டா’ வாங்கி சின்மயிக்கு சித்தார்த் குடுத்துவிட்ட கதை. அதாவது பத்தாவது விடுமுறையில் சின்மயை மீண்டும் சந்தித்தக் கதை.
சின்மயி அவனைப் பார்த்துக்கொண்டே சென்றுவிட அவனுக்கோ வருத்தம்தான்
அவள் பேசவில்லையென்று.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த வழியில் யாரோ வரும் சத்தம் கேட்க சித்தார்த் திரும்பினான். சின்மயின் பண்ணிரெண்டு வயதுத் தங்கை சித்தாரா தன்னுடைய நண்பன் ஒருவனுடன் வந்து கொண்டிருந்தாள்.

அவ்வழியில் யாரும் அவ்வளவாக இல்லை. தன் காதலுக்கு அவள் தங்கையையே தூது அனுப்ப எண்ணினான். தன் நண்பனுடன் கதை பேசியபடியே வந்த அம்மு இவனை கவனிக்காமல் சென்றாள். அவனுக்கு அவளது பெயர் கூட அவ்வளவாக
நியாபகமில்லை. சின்மயி அவளை, ‘அம்மு’ என்றழைத்தது நினைவு வந்தது.

“அம்மு நில்லு” அதிகாரமாய் சித்தார்த் அழைக்க, திரும்பிப் பார்த்தவள் மீண்டும்
நடக்க ஆரம்பித்தாள்.

“ஏய்! அம்மு” என்று அருகில் சென்றவன்,

“சொன்னா நிக்கமாட்டியா?” குரலை உயர்த்தினான்.

“நிக்க மாட்டேன்” என்றவளிடம் சிறிதும் பயமில்லை. சித்தார்த்திற்குப் புரிந்தது.
சிறிய வயதில், சிலசமயம் மிரட்டும்போது தன்னைக் கண்டு பயந்த அம்மு இது
இல்லையென்று.

ஒரு முடிவெடுத்தவனாக அருகில் நின்றிருந்த அம்முவின் நண்பனைப் பார்த்து, “டேய் கிளம்புடா” என்றான்.

அவன் அப்படியே நிற்க அவன் தலையில் ‘நறுக்’கென்று கொட்டி வைத்தவன்,
“போகலைன்னா என்கிட்ட வாங்குவே” சித்தார்த் மிரட்ட தலையைத்
தேய்த்துக்கொண்டு கண்களைக் கசக்கியபடியே அம்முவைப் பாவமாகப்
பார்த்தபடி சென்றுவிட்டான் சிறுவன்.

நண்பன் சென்றபின் நகர்ந்த அம்முவின் குதிரைவாலைப் பிடித்திழுத்தவன், “எங்க போற?” என்று தன்முன்னால் நிற்க வைத்தான்.

“முடியை விடுடா” சித்தாரா கத்த,

“டா வா?” அவளைக் கொட்டிய சித்தார்த், “வாயை தச்சு விட்டுருவேன்” என்று மிரட்ட,

அவனை அன்னார்ந்து பார்த்த சித்தாராவின் கண்களில் அவன் தலையில் கொட்டிய வலி தாளமுடியாமல் கண்ணீர் கரை புரண்டது. அந்த நிலையிலும் அவனை முறைத்துக்கொண்டு நின்றாளே தவிர அவனை சிறிதும் பயப்படவில்லை.

“என்கூட வா… நான் வாங்கித்தர ஐஸ்கிரீமை உன் அக்காகிட்டத் தந்திடு”
அவனழைக்க,

“வர முடியாது போ” நகரப்பார்த்தவளை, முதுகில் மாட்டிய பேக்கைப் பிடித்து
அப்படியே ஒல்லிக்குச்சியாக இருந்தவளை அவன் தூக்க,

“ஆஅ… அம்மா… விடுடா… விடு” சித்தாரா கால்களை உதறியபடி கத்த,

“இப்ப நீ வரல அப்படியே தூக்கி வீசிடுவேன் பள்ளத்துல” அவன் மிரட்ட
அவளது முகத்தில் சிறிதாக பயம் எட்டிப் பார்த்தது.

“அம்மா தேடுவாங்க… நான் போகணும்”, “அதெல்லாம் கேக்கமாட்டாங்க… என்
பாட்டிக்கூட கோயிலுக்கு போயிருக்காங்க”, “இப்ப நீ வர்றியா? இல்ல உன்னை தூக்கி வீசட்டா?” மீண்டும் அவன் மிரட்ட,

“வரேன்… என்னை விடு” சித்தாரா கெஞ்ச அவளை இறக்கிவிட்டான்.

அவன் முன்னே நடக்க அவன் பின்னாலேயே சித்தாரா தொடர்ந்தாள்
முணுமுணுத்துக் கொண்டே. அவள் முணுமுணுத்தது கேட்டாலும் எதுவுமே
கேட்காததுபோல் தன் காரியமே ஆகவேண்டும் என்று நடந்தான். அந்த ஆங்கிலோ இந்தியர் ரிக்கியைப் பார்த்தவன், “ஹாய் அங்கிள்!” என்றழைக்க,

“ஹே சித்தார்த்! யூ பிக்கம் ஸோ டால்” என்று சித்தார்த்தைப் பார்த்து அவர் வாய் பிளக்க, “விச் ப்ளேவர்?” என்று கேட்டார் ரிக்கி.

“அங்கிள் வாட் இஸ் ஸ்பெஷல் நௌ இன் யுவர் பார்லர்” சித்தார்த் கேட்க,

“கிட்காட் கஸாட்டா,,, யங் பாய்” அவர் சொல்ல,

“அது என்ன அங்கிள்? எந்த கம்பெனி ப்ளேவர்?”,

“திஸ் இஸ் மை பார்லர் ஸ்பெஷல் சித்தார்த்” என்றவர், “வித் த்ரீ ஸ்கூப்ஸ் ஆப் வெண்ணிலா, பிஸ்தா, ஸ்டராபெர்ரி ஐஸ்கிரீம்ஸ்… ஆடட் கிட்காட் க்ரஷஸ் வித்
கிட்காட் ஸ்டிக்” அவர் சொல்ல அந்த பெயரிலேயே அட்ராக்ட் ஆகியிருந்தவன்
அவர் விவரித்த விதத்தில் நாவில் அதன் சுவையை நினைத்து ஊற, அதையே
வாங்க நினைத்தான்.

“ஹூ இஸ் திஸ் லிட்டில் குயின்?” ரிக்கி விசாரிக்க அப்போதுதான் சித்தார்த்திற்கு
சித்தாராவின் நினைவு வந்தது.

“பக்கத்து வீட்டுப்பொண்ணு அங்கிள்” என்றான்.

“உனக்கு என்ன ஐஸ்கிரீம்?” சித்தார்த் கேட்க அவளோ அப்படியே நின்றிருந்தாள்
கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி. அவன் கேட்டதுகூட அவளது
காதில் விழாதவள் போல நின்றாள்.

பாட்மிட்டன் டீ சர்ட், முட்டி வரை இருந்த லூசான சார்ட்ஸ் குட்டி போனிடெயில்
மற்றும் முதுகில் மாட்டியிருந்த ஒரு பேக். அவள் நின்றிருந்த தோரணையைப்
பார்த்தவன், ‘இதுகூட எல்லாம் நம்ம ஆளு எப்படி பிறந்துச்சு’ மனதிற்குள்
நினைத்தவனுக்கு கடுப்பானது.

ஒரு அகலமான ஓவல் வடிவ கப்பில் மூன்று ஸ்கூப்பை எடுத்து அழகழகாக அவர் வைக்க, அந்த மூன்று ப்ளேபவரின் வெள்ளை, பிஸ்தா பச்சை, பிங்க் நிறங்கள் கண்களை பறிக்க, அருகிலிருந்த கிட்காட் க்ரஷ் ஜாரை எடுத்தவர் அதன் மேல் க்ரஷைத் தூவ அது சாரலாய் அந்த மூன்று மலைகளின் மேல் விழந்தது. அடுத்து ஒரு கிட்காட் பாக்கெட்டை பிரித்தவர் அதில் இரண்டு ஸ்டிக்கை ‘டிக்’ என்ற ஒலியோடு உடைத்து அந்த கப்பின் ஓரத்தில் நிற்க வைத்தார். மலைகளின் மேல் விழுந்த பனிச்சாரலாய் கிட்காட் க்ரஷஸ் இருக்க அதை பார்க்கவே

“அங்கிள், இத அப்படியே பார்சல் பண்ணிடுங்க… இதோட பொஷிசன் மாறாது தானே?” ஐஸ்கிரீம் இருந்த அழகைப் பார்த்தபடி சித்தார்த் கேட்க,

“நோ சித்தார்த்… இட் வில் ரிமெயின் தி ஸேம்… ஐ வில் பேக் இட் டோன்ட் வொர்ரி”
சொன்ன ரிக்கி, சொன்னது போலவே அழகாய் பேக் செய்து தந்தார்.

பணத்தை அவரிடம் தந்து, “தாங்க்ஸ் அங்கிள்… பை” என்று ரிக்கிக்கு கையை
ஆட்டிவிட்டு நகர்ந்தான். கடையை விட்டு கொஞ்ச தூரம் வர சித்தாராவிடம்
திரும்பியவன், “இதை உன் அக்கா கிட்ட குடுத்துடு” பார்சலை அவள் கையில்
வைக்க அவளோ எதுவும் பேசாமல் நகர்ந்தாள். அவளது கோபம் அவள்
காலை ‘டாங்’, ‘டாங்’ என்று காலை பூமியில் உதைத்து நடந்து செல்வதிலேயே தெரிந்தது.

சிறிய வயதில் விளையாடும்போது அவனும் சின்மயும் மாலையை மாற்றிக் கொண்ட போது வீட்டிற்கு பின் வந்த சித்தாரா அதைப் பார்த்துவிட்டாள்.
மூன்றாவது படிக்கும் போதே சித்தாராவைப் பிடித்து, “வீட்டுல சொன்னே… அப்புறம் உன்னோட ஸ்கூல் பேக் எல்லாம் ஒளிச்சு வச்சிடுவேன்… தரமாட்டேன்” சித்தார்த் மிரட்ட யூகேஜியில் இருந்த சித்தாராவோ அவனிடம் பயந்து யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.

அதைப் நினைத்துப் பார்த்தவன், “பயந்தாங்கொளி” என்று சொல்லிக்கொண்டு சித்தாரா சென்று ஐந்து நிமிடம் ஆனபிறகு சென்றான்.

இருவருக்கும் நடந்த ஒன்றை அவன் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
சின்மயின் நினைப்பும் ஃபோட்டோவுமே அவனை வேறு எதையும் சிந்திக்க
வைக்கவில்லை.

சித்தார்த் சொன்ன அனைத்தையும் நினைத்துக்கொண்டிருந்த ரமணாவை
ராஜகோபலன் தாத்தாவின் குரல் கலைத்தது. “என்னப்பா நின்னுகிட்டே கனவு கண்டுட்டு இருக்கா?” அவர் கேட்க,

“இல்ல தாத்தா வேற நியாபகம்” என்று சமாளித்து வைத்தான்.

“சித்து பையன் எங்க காணோம்?” அவர் கேட்க அப்போதுதான் அருகில் நண்பன்
நின்றிருந்த இடத்தைக் கண்டான். அங்கு அவன் இல்லை. எதேச்சையாக அவன்
கண்கள் எதிரில் போக அங்கு சின்மயும் காணவில்லை.

‘ரைட்டுடுடுடு… இவன் எங்கையோ ஸ்கோர் போட்டுட்டு இருக்கான்’ என்று
மனதில் நினைத்தவன், “தாத்தா சின்மயி எங்க?” அவர் காதின் அருகே குனிந்து
கேட்க,

“நான் என்ன கேட்கிறேன்… நீ…” பேசிக்கொண்டே போனவர் நிறுத்தி சுற்றியும் முற்றியும் பார்த்தார். சித்தார்த் சின்மயி இருவரும் அங்கிருக்கும் சுவடே
தெரியவில்லை.

“அய்யோயோ” என்று பதறினார் நெஞ்சில் கையை வைத்து. நல்லவேளை பொங்கல் வைத்துக் கொண்டிருந்ததில் மும்முரமாக இருந்ததால் இவர்களை யாரும் கவனிக்கவில்லை.

“என்ன தாத்தா… என்னாச்சு?” ரமணா கேட்க,

“என் பேரன் தனியா….” என்றிழுத்தவர், “சீக்கிரம் காப்பாத்தி கூட்டிட்டுவா ரமணா” என்று அவர் சொல்ல ரமணாவிற்கு கடுப்பானது.

“தாத்தா! இதெல்லாம் ஓவராமா சொல்லிட்டேன்… அந்தப் பெண்ணை அவன் கிட்ட இருந்து மொதல்ல காப்பாத்தணும்… அவன்தான் ஒரு மார்க்கமா சுத்தீட்டு இருக்கான்” என்று அவன் சொல்ல,

“டேய் என் பேரனை அப்படி எல்லாம் சொல்லாதே” அவர் எச்சரிக்க,

“உங்க பேரன்ல அதான் சொல்றேன்” என்று சிரிப்பை அடக்கியவன், “ஆமா,
சில்க் படம் ஃபேனாமா நீங்க… பாட்டிக்குத் தெரியாம நிறைய டைம் ஒரே
படத்துக்கு போயிருக்கீங்களாமா?” ரமணா சிரித்துக்கொண்டே வினவ,

“ஆமா, சில்க்கோட ஃபேன், லைட், டி.வி எல்லாம் நான்தான்… ஆனா பாத்துக்க
என் சில்க் அளவுக்கு அழகான ஹீரோயின் இன்னும் வரல” அவன் தோள்தட்டிச் சொன்னவர், “எங்களோட கனவுக்கன்னிடா” என்றார் கண்கள் மின்ன.

“மீசை நரைச்சும் இந்த வேலைதானே வேணாங்கறது” ரமணா கேட்க,

“அழகை ரசிக்கிறதுல தப்பில்லை பேரான்டி” அவர் வேண்டுமென்றே நரைத்த மீசையை முறுக்கிவிட,

“பாட்டி…” ரமணா அழைக்க பொங்கல் வைத்துக் கொண்டிருந்தவரோ, “என்னப்பா?” என்று நிமிர்ந்தார்.

“டேய் பேரா… நிறுத்துடா… கிழவிக்கு தெரிஞ்சா என்னை ஊறுகாய் போட்டிருவா” என்று அவன் விளாவில் அவர் இடிக்க,

“அந்த பயமிருக்குல?” சிரித்தபடியே மிரட்டியவன், “ஒண்ணுமில்லை பாட்டி”
என்றான் சொர்ணத்தைப் பார்த்து. இருவரும் ஏதோ விளையாடுவது புரிய
தொலைவிலிருந்தே ஒற்றை விரலைக் காண்பித்து எச்சரித்தவரை இருவரும்
கண்டு சிரித்தனர்.

“சித்தார்த் எங்கன்னு பாத்து கூட்டிட்டுவா ரமணா… பொங்கல் பொங்கும்போது
இருக்கணும்” கறாராக சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.

‘போனவனை விட்டுட்டு… என்னை வந்து மிரட்டுறாராமா’ மனதிற்குள் நினைத்து
புருவத்தைத் தூக்கி சிரிப்பை மறைத்தவன் நண்பனைத் தேடிச் சென்றான்.

“என்ன ஏதோ பேசணும்னு சொல்லிக் கூப்பிட்ட… இப்போ எதுவும் பேச மாட்டிறே”
வந்ததிலிருந்து அவன் முகம் பார்க்காமல் நின்றிருந்த சின்மயிடம் கேட்டான்
சித்தார்த். அம்மனிற்கு அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்து ஐயரிடம் தந்து
கொண்டிருந்தவனிடம் சென்ற சின்மயி “உன்கிட்ட பேசணும் சித்து” என்று
தைரியமாக சொல்லிவிட்டாள்.

ஏற்கனவே அவளை இன்று சேலையில் கண்டவன் அவளிடம் பேசவேண்டும்
என்று துடித்துக்கொண்டிருந்தான். ஆனால், அத்தனை பேர் இருக்கையில்
பேசினால் தப்பாகிவிடும் என்று அவனே தனிமையில் வாய்ப்பு அமையுமா என்று
காத்திருக்க சின்மயே வந்து அவனிடம் பேசியது அவனுக்கு ஆச்சிரயத்தில்
ஆழ்த்தியது. அதுவும், “உன்கிட்ட பேசணும் சித்து” என்று அவள் சொன்னது அவனை வானத்தில் பறக்க வைத்தது.

“சரி. இரு வரேன்” அவன் சொல்ல,

“நீ வா சித்து… எனக்கு தனியா பேசணும்… நீ முன்னாடி போ நான் பின்னாடி வரேன்” சின்மயி சொல்லச் சொல்ல நமது பையனின் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது.

“ம்ம்” என்றவனது உதட்டில் புன்னகை வர அவளோ புன்னகைத்தபடியே திரும்பி
நடந்தாள்.

ஐயருக்கு தண்ணீரை முழுதாக எடுத்துத் தந்தவன் யாரும் அறியாமல் அவளிற்கு
சைகை காட்டிவிட்டு நகர சின்மயி அவன் பின்னோடே சென்றாள். சிறிது தூரம்
சென்றபின் யாரும் வரமாட்டார்கள் என்று முடிவு செய்தவன் நின்றான்.

“சொல்லு சின்மயி என்ன பேசணும்?” சித்தார்த் கேட்க அவளோ மௌனமாய்
தலை குனிந்தாள். “எப்படி இருக்க சித்து?” அவள் கேட்க அவனுக்கோ சிரிப்பு வந்தது.

“இதைக் கேட்கத்தான் தனியா கூப்பிட்டியா?” கண்களை கூர்மையாக்கி
அவன் கேட்க தலை கவிழ்ந்தாள். அவள் ஏதோ சொல்லத் துடிப்பதை அவன்
உணர்ந்தான். ஆனால், அவளே சொல்லட்டும் என்று அவன் வாயைத்
திறக்கவில்லை. அவளும் வாயைத் திறக்கவில்லை. ஐந்து நிமிடம் இப்படியே
கழிய,

“என்ன ஏதோ பேசணும்னு சொல்லிக் கூப்பிட்ட… இப்போ எதுவும் பேச மாட்டிறே”
சித்து கேட்க நிமிர்ந்தவள், “அது வந்து சித்து… தப்பா நினைப்பயோன்னு பயமா
இருக்குடா” என்றாள் தயக்கமாக. அவளது கண்ணீரைக் கண்டவன், “நான்
எதுக்கு தப்பா நினைப்பேன்”, “சரி நானும் நீயும் மாலை எல்லாம் மாத்திக்கிட்டோம் நியாபகம் இருக்கா?” சிரிப்பை அடிக்கியபடி அவன் வினவ,

“அதெல்லாம் நீ இன்னும் நியாபகம் வச்சிருக்கியா?” என்று கேட்டவள் வாய்விட்டே சிரித்தாள். சிறிது வெட்கமும் அவள் முகத்தில் தெரிந்தது.

“ம்ம், ஆமா… பர்ஸ்ட் பர்ஸ்ட் மாலை போட்ட பொண்ணை மறக்க முடியுமா?” சித்தார்த் உல்லாசமாய் கேட்க,

“அய்யோ அதையெல்லாம் நியாபகப்படுத்தாதே சித்து… ஷைய்யா இருக்கு” என்றவளின் கன்னங்கள் சிவந்தது.

“ஹாஹா சொல்லுவேன்… நீதான் என்னோட பர்ஸ்ட் கேர்ள் ப்ர்ண்ட்” சித்தார்த் இருமுறை விடாமல் சொல்ல,

“டேய், சித்து” விரலைத் தூக்கி அவனை எச்சரித்தாள்.

“முடியாது” என்று அவன் மீண்டும் சொல்ல, கீழே கிடந்த குச்சியை எடுத்து அவனை அவள் துரத்த சித்தார்த் கோயிலை நோக்கி ஓடினான்.

ரமணாவும் தேடித்தேடிப் பார்த்துவிட்டு கடைசியாக கோவிலுற்கு பின்னால்
இருந்த ஒற்றை அடிப்பாதையில் நடந்து சென்றான். ஒரு 100 மீட்டர் சென்றவன்
மேல் வந்து, பின்னால் திரும்பி சின்மயைப் பார்த்துக்கொண்டே வந்த சித்தார்த் மோத, அவன் மோதிய வேகத்தில், “யம்மாமாம….” என்று பின்னால் சாய்ந்து மரத்தில் அடித்து நின்றான் ரமணா.

“டேய் 90’ஸ் ஹீரோ ஹீரோயினை மோதர மாதிரி வரே…” நெஞ்சைத் தேய்த்தபடி
சொன்னவன் பின்னால் நின்றிருந்த சின்மயைக் கண்டு வாயைப்பிளந்து
நண்பனைப் பார்த்தான். அவள் கையில் குச்சியோடு நிற்பதும் நண்பன் ஓடி
வந்ததையும் கணக்கிட்டவன், ஏதோ வாயைத் திறக்க வர அவசரமாக, ‘எதுவும்
பேசாதே’ என்று கண்களால் அடக்கினான் சித்தார்த்.

“சித்து உன் நம்பர் தா” உரிமையாக அவனிடம் சின்மயி கேட்க,

‘கதை அந்தளவுக்கு போயிடுச்சா?’ மனதிற்குள் நினைத்த ரமணா அமைதியாக நின்றான். சித்தார்த்திடம் அவனது எண்ணை வாங்கிக்கொண்டவள், “பை, சித்து”
என்றுவிட்டு ரமணாவிடமும் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுக் கிளம்பினாள்.

அவள் போகும்வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தை “ம்ம்ம்… ம்கூம்… ” ரமணாவின் குரல் கலைத்தது.

“அங்க எல்லாரும் சாமிக்கு பொங்கல் வச்சா… நீ இங்க உன் லவ்வுக்கு பிரியாணியே பண்ணிட்டிருக்க போலையே மச்சி” ரமணா கலாய்க்க அவனின் கழுத்தை சுற்றிப் பிடித்தவன்,

“மச்சி… அவ என்னை ‘சித்து’, ‘சித்து’ன்னு கூப்பிட்டா டா” பல்லைக் காட்டி சித்தார்த் சொல்ல,

“பின்ன உன் பேரு அதானே?” ரமணா காலை வார,

“அவ கூப்பிடறது ஸ்பெஷல் தான்டா” என்று சொன்னவனின் கண்கள் ஏதோ
சொல்ல,

“ஷைய்யா இருக்குன்னு என்கிட்ட சொன்னாடா” சித்தார்த் தலையைக் கோதியபடி பல்லைக் காட்ட,

“மச்சா தயவு செஞ்சு நார்மலா இருடா… இப்படியெல்லாம் பாக்க சகிக்கலை”
வயிற்றில் கையை வைத்து முகத்தை சுளித்தபடி ரமணா கலாய்க்க,

“உனக்குப் பொறாமைடா”.

“சரிப்பா சாமி… எங்களுக்கு பொறாமையாவே இருக்கட்டும். உன்னை பொங்கல் பொங்கறதுக்குள்ள கூப்பிடறாங்க. வா” என்றழைக்க இருவரும் கோயிலை நோக்கி நடந்தனர்.

“மச்சா இந்த தண்ணி குடிச்சுப்பாரு… செம டேஸ்டா இருக்கும்…” என்று எங்கோ
அருவியிலிருந்து இந்தப்பக்கம் வரும் கொப்பு அருவியைப் போலிருப்பதை
சித்தார்த் காண்பித்துச் சொல்ல, ரமணா அதை தன் கரங்களால் பிடித்து
அருந்தினான்.

“மச்சி! நம்ம சிருவாணி தண்ணியைவிட டேஸ்ட் டா” தண்ணீரை அருந்தியபடி
பாராட்டினான்.

“மச்சி உனக்கு சித்தாராவைப் பிடிக்காதா?” ரமணா.

“அது யாரு?” இடுப்பில் கேசுவலாக இருகையை வைத்தபடி சித்தார்த் கேட்க,

“என்னது யாரா? நல்லா இருக்குடா… அதுதான் சின்மயோட சிஸ்டர்” ரமணா
குட்டி வெண்புகை போல அருவியில் இருந்து வந்த நீரில் முகத்தைக் கழுவியபடி சொன்னான்.

“அவளா…?” கேட்கும்போதே சித்தார்த்தின் முகம் சுளித்தது. “மச்சி அவ எல்லாம் ஒரு ஆளாடா… அந்த மொக்கை பிகர் நேம் கூட எனக்குத் தெரியல பாரு…” என்றவனிடம் ஏதோ சொல்ல ரமணா நிமிர அதிர்ந்தான்.

இவர்களின் பின்னால் கையை கட்டியபடி நின்றிருந்தாள் சித்தாரா. நண்பன்
முகத்தைக் கண்டு திரும்பிய சித்தார்த், சித்தாரா அவனை வெற்றுப் பார்வையை
வீசியபடி நிற்பதைக்கண்டு சற்று அதிர்ந்தான். அதிர்ந்ததை வெளியே காட்டாமல் சமாளித்தவன், “மச்சா… வாடா போலாம்” ரமணாவின் தோளில் அவன் கையைப் போட்டபடி நகரப்பார்க்க சித்தாராவின் சொடக்கு சத்தம் இருவரையும் நிறுத்தியது.