சக்கரவியூகம் 4

4

சத்திரியனின் மகன் போர்புரிய மறுத்தால், அவன் பெயரளவு சத்திரியனே. பிராமணனின் மகன் கெட்ட வழியில் நடந்தால், அவன் பெயரளவு பிராமணனே. இத்தகு சத்திரியர்களும் பிராமணர்களும், தமது தந்தையரின் உபயோகமற்ற மக்களே. எனவே, அர்ஜுனன் சத்திரியரின் உபயோகமற்ற மகனாக ஆவதை கிருஷ்ணர் விரும்பவில்லை. அர்ஜுனன் கிருஷ்ணரின் மிக நெங்கிய நண்பன். மேலும், கிருஷ்ணரே தேரில் நேரடியாக அவனுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார். இதுபோன்ற வாய்ப்புகளுக்கிடையே அர்ஜுனன் போரைத் துறந்தால், அச்செயல் அவனது புகழைக் கெடுத்துவிடும். எனவே, அர்ஜுனனிடம் உள்ள இத்தகைய மனப்பான்மை, அவனுக்குப் பொறுத்தமானதல்ல என்று கிருஷ்ணர் கூறுகின்றார். பெரு மதிப்பிற்குரிய பீஷ்மரிடமும் உறவினர்களிடமும் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்ற மனப்பான்மையில், தான் போரைத் துறப்பதாக அர்ஜுனன் வாதிடலாம். ஆனால் அத்தகைய பெருந்தன்மையினை இதய பலவீனமாக கிருஷ்ணர் கருதுகிறார். இத்தகைய பொய்யான பெருந்தன்மை எவ்வித அதிகாரிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எனவே, ஸ்ரீ கிருஷ்ணரின் வழிகாட்டுதலின்கீழ், இது போன்ற பெருந்தன்மை அல்லது பெயரளவிலான அகிம்சையை அர்ஜுனன் துறந்தாக வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ஹோட்டலிலிருந்து பத்தே நிமிடத்தில் வந்தவனது கையில் பார்சல்! எதுவும் பேசாமல் பார்சலையும் இட்லிக்கான பணம் போக மீதி சில்லறையையும் தமிழிடம் கொடுத்து விட்டுக் காரை ஸ்டார்ட் செய்ய.

“நீங்கச் சாப்பிடலையா?” மீண்டும் தமிழ் கேட்ட கேள்வியில் அவனது முகம் மென்மையுற்றது! ஆனாலும் பதில் கூறவில்லை.

பதில் கூறுவது தேவையற்றது என்று அவனுக்குத் தோன்றியது.

அவனிடமிருந்து பதில் வராததில் தோளைக் குலுக்கிக் கொண்டவள், பார்சலை பிரித்துத் தன்னிடமிருந்த ஸ்பூனால் அந்த மினி இட்லியைச் சாப்பிட துவங்கினாள்.

ஸ்ரீதரனும் காரை ஆப் செய்திருந்தான்.

கையில் கைப்பேசியுடன், அவள் உண்ணட்டும் என்று தனிமை கொடுத்து லைட்டையும் ஏசியையும் மட்டும் ஆன் செய்து விட்டுக் கீழே இறங்கி புதிய ரூட்டை நேவிகேஷனில் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.

இரவு நேரப் பயணங்களில் அவன் பெரும்பாலும் உண்பதில்லை. தூக்கம் வந்து விடும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வலிந்து அவனை உண்ண வைக்க அவனது தாய் அருகில் இல்லையென்பதே காரணம்.

அவள் உண்டாயா என்று கேட்ட போதும் அவனுக்குத் தன் தாய் கேட்பதுதான் நினைவுக்கு வந்தது. அவர் எப்போதுமே அவனை இரவில் வெறும் வயிற்றோடு படுக்க விடமாட்டார்.

அவனுடைய விருப்பமான புட்டும் கடலைக்கறியும் நெய்மீனையும் அவனை வேண்டி உண்ணச் செய்ததெல்லாம் அவனது நினைவில் வந்து போனது.

தினம் ஏதாவது அசைவம் வேண்டும் அவனுக்கு… கூடவே வறுத்த மீனும்!

எப்படியாவது அவனைச் சாப்பிட வைத்து ஏலக்காய் கல்கண்டு கலந்த பாலை கொடுக்காமல் விடவும் மாட்டார்.

அவனது ப்ரியங்களை மொத்தமாக அறிந்தவர் அவனது அன்னை மட்டுமே… மூன்று வருடங்கள் முன்பு மொத்தமாகக் கேரளத்தை விட்டு, அவனுடைய பிரியத்துக்குரிய ஆலப்புழையை விட்டுச் சென்னை வந்தபோது அவனிடமிருந்தது அவனது அன்னை ஊட்டி வளர்த்த நம்பிக்கையும் துணிச்சலும் மட்டுமே!

அவையெல்லாம் ஒரு காலம்!

இப்போது அவனது நினைவில் இருப்பது தன் தாயும் அவரது கைமணமும்! எத்தனை கடமைகள் இருந்தபோதிலும் தன்னை அவர் விட்டுக்கொடுத்ததே இல்லை.

மீண்டும் அவரது மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு கோவிலில் நடக்கும் சாக்கியர்கூத்து கதைகளைக் கேட்க முடியுமா என்று அவனுக்குள்ளாகக் கேட்டுக் கொண்டான். முன்னர் எல்லாம் சாக்கியர் கூத்தும் கூடச் சாதி ஹிந்துக்களுக்கு மட்டும் தான் என்றிருந்ததாம்.

மணி மாதவ சாக்கியர் போன்றோர்களுக்குப் பின் அது சாக்கியர் அல்லாதவர்களுக்குமான கலையாகத் துவங்கியிருந்தது.

கூத்தம்பலத்தில் அம்பலவாசி நம்பியார்கள் வாசிக்கும் மிழவினூடே சாக்கியர் கூறும் சம்பு பிரபந்தங்கள், மகாபாரத கதைகள், இராமாயண கதைகள் எல்லாம் அவனது நினைவு பெட்டகத்தின் ஓரம்… மிக மெல்லிய படலமாய்!

தன் ஈடு பையன்களை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றியதும், தாங்களே படகை வலித்துக் கொண்டு ஆளில்லாத தோப்புக்களில் கள் இறக்கிப் பருகி ஆட்டம் போட்ட நினைவுகளனைத்தும் இப்போது உதடுகளின் புன்னகையின் ஓரம் வழிந்தது!

சாத்தியமற்றவற்றை நினைக்காதே என்று மனம் கூறியது!

காலம் அனாதியானது. யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நேரமும் காலமும் ஒரே இடத்தில் நிற்பதில்லை!

“ஸ்ஸ்ஸ்…” கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட் சுட… கீழே போட்டு மிதித்தான்.

இன்று ஏனோ பழைய நினைவுகளின் தாக்கம் மிக அதிகமாய்! ஏன் என்று புரியவில்லை.

ஒரு வேளை அன்னையை இன்று அதிகமாய் நினைக்கிறேனோ?

வேண்டாம்… மனதைச் சுடும் நினைவுகளின் மீதங்கள் எதுவுமே வேண்டாம்… எதுவுமே வேண்டாமென்று தானே அனைத்தையும் விட்டுச் சென்னை வந்தது.

அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும்.

ராஜீவ் கூறிய ரூட் அவனுக்குப் புதியது. அவன் எப்போதும் போகும் ரூட் என்றால் அவனுக்குச் சற்றும் பிரச்சனை இல்லை. ஆனால் புதிய ரூட்டில் விழுப்புரம் செல்வது உள்ளுக்குள் நெருடியது.

அந்தப் பெண்ணுக்கு ரூட் நன்றாகத் தெரிந்து, தான் வேறு ரூட்டில் செல்கிறோம் என்பது தெரிந்தால் அது வேறு பிரச்சனை.

இது தேவையா என்று யோசித்தான்.

பலத்த யோசனைக்குப் பின்னர் திண்டிவனம் காவல் நிலையத்திற்கு அழைத்துக் கேட்டான். வழியில் பிரச்சனையா என்று?

“கலவரம் செய்தவங்களை அடக்கியாச்சு தம்பி… ஆனா நீங்கச் செஞ்சி ரூட்லையே போங்க… இப்பவே வாலஜா வழியாத்தான் ட்ராபிக் மாத்தி விட்டுட்டு இருக்காங்க…” என்று தெளிவாகக் கூறிவிட.

கையில் இருந்த கைப்பேசியால் தலையில் தட்டி கொண்டு யோசித்தான்.

வேறு வழியில்லை. மதுரையில் வேறு காத்திருப்பார்கள்! வெகுநாட்களாகத் தவணை வைத்த சந்திப்பு… போயாக வேண்டும். மிகவும் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறான்…

அவ்வளவு அவசரம் இல்லையென்றால் தானும் இப்போது கிளம்பியிருக்க போவதில்லை.

ஜன்னலைத் தட்டும் ஓசை கேட்டது.

திரும்பிப் பார்த்துக் கண்களால் என்னவென்று கேட்டான்.

அவள் டிபனை முடித்து விட்டு, “கிளம்பலாமா?” என்று கேட்டாள்.

எதுவும் பேசாமல் உள்ளே அமர்ந்து கொண்டு ஜன்னலைத் திறந்து விட்டு ஏசியை ஆப் செய்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான், சிகரெட் வாடையைத் தவிர்க்க!

அப்படியும் வாடை பரவியிருக்கும் போல… தமிழ்நதி முகம் சுளித்தாள்!

“எனக்கு சிகரெட் ஸ்மெல்ன்னா அலர்ஜி…” எரிச்சலாக அவள் கூறியதை கண்ணாடியின் வழியாகப் பார்த்தான்.

பதில் எதுவும் கூறவில்லை.

எப்போதுமே ஸ்ரீதரனிடம் இது ஒரு பழக்கம்… பெண்களென்றால் பேசுவதற்கு ரொம்பவுமே யோசிப்பான்.

அவ்வளவு எளிதில் பேசிவிட மாட்டான். அதிலும் தனியாக தமிழ்நதியை அழைத்துப் போவதென்பதால் பேச்சை முற்றிலுமாகத் தவிர்த்தான்.

அவள் கேட்பதற்கு மட்டுமே பதில்… அந்தப் பதிலும் பெரும்பாலும் செயலாக மட்டுமே இருந்தது.

முன் பக்கத்தில் இருந்த இரண்டு ஜன்னல்களையும் நன்றாகத் திறந்து விட்டபடியால் சிகரெட் வாசனை முற்றிலுமாக வெளியேறியது. ஆனால் தமிழ்நதியின் எரிச்சல் குறைந்தபாடில்லை.

உடன் அமர்ந்து வருபவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும் சிகரெட் பிடிப்பது எவ்வளவு தவறான செயல் என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை என்று மனதுக்குள் வாதிட்டாள். இன்னொரு மனமோ அவன் எதைப் பிடித்தால் என்ன பிடிக்காவிட்டால் என்ன? உனது வேலையைப் பார் என்று இடித்தது!

ச்சே… என்று தலையைச் சிலுப்பி கொண்டாள்.

ப்ளேயரில் இளையராஜா வழிந்து கொண்டிருக்க, அந்த இதத்தைக் கிழித்தது ஸ்ரீதரனின் கைப்பேசி.

“ஹலோ… சொல்லுங்கம்மா…” மலையாளத் தமிழில் பேசியவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் தமிழ்நதி.

“…”

“சென்னையிலிருந்து புறப்பட்டுட்டேன்ம்மா. ஞான் நாளே காலையிலே வராம்.”

மலையாளம் கலந்த தமிழில் கூறிக்கொண்டிருந்தவனை முறைத்துப் பார்த்தாள். இப்போது மட்டும் எப்படி வருகிறதாம் தமிழ்?

“இல்லம்மா… லேட்டாகாது. எத்ர சீக்கிரம் வரனுமோ அத்ரே சீக்கிரம் வந்துடறேன்.”

வாக்குறுதியை அள்ளி வீசிக்கொண்டிருந்தவனை எரிச்சலாகப் பார்க்கத்தான் முடிந்தது.

கைப்பேசியை வைத்து விட்டுச் சாலையைப் பார்த்து வாகனத்தை ஓட்டியவனைக் கலைத்தது தமிழின் கனைப்பு… லேசாகக் கனைத்தவளை கண்ணாடியின் வழியே பார்த்துவிட்டு அவனது வேலையைத் தொடர்ந்தான்.

“உங்களுக்குத் தமிழ் தெரியும் தானே…” சற்று கோபமாகக் கேட்டவளை கேள்வியாகப் பார்த்தான் ஸ்ரீதரன்.

“கேள்வி கேட்டா பதில் சொல்ல வேண்டும்…” வெளிப்படையாகவே அவளது கோபத்தை காட்ட.

“ஆவஷியன்னா பறைய போறேன்.” சேர்ந்தார் போல மூன்று வார்த்தைகளைப் பேசிவிட்டானே என்று எண்ணத் தோன்றியது.

“ஏன்? என்கிட்டே மட்டும் தமிழே தெரியாத மாதிரி காட்டிட்டு…”

“தமிழே தெரியாதுன்னு சொல்லலையே… ஆவஷியம் உண்டாகலை. சம்ஷாரிக்களை…” அவனது தமிழில் மலையாள வாடையே அதிகம் வீச… அந்தத் தொனியை பார்க்கும் போதும் அவளுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. ஆனால் அதில் தலையிடுவது. இதற்கும் மேல் கேள்வி கேட்பது தேவையற்றது என்று அவளுக்கே தோன்றியது.

அவளது எரிச்சலைக் கண்டுகொண்டானோ என்னவோ.

“உங்களுக்குச் சட்டுன்னு உங்க தாய்மொழில தானே பேச வரும்… அது மாதிரிதான் எனிக்கும்…” என்று முடித்தான். அவளால் அதற்குப் பதில் பேச முடியவில்லை.

நியாயம் தானே…?

“ஆனா ப்ளீஸ்… என்கிட்டே பேசும்போது தயவு செஞ்சு தமிழ்ல பேசுங்க… நீங்க மலையாளத்துல பேசறது எனக்குக் கொஞ்சம் சிரமமா இருக்கு…” அவளது நிலையிலிருந்து இறங்கி வந்து அவனிடம் வேண்டுகோள் விடுக்க.

“நாளே ராவிலே வரே அல்லே?”

“ராவா?”

“ஐ மீன் மார்னிங்…”

“ராவுன்னா இங்க நைட்…” கடுப்பாக கூறியவள், “இதுதான் பிரச்சனை. தமிழ் ஓரளவு தெரியும்ல. அப்புறம் ஏன் மலையாளம்? எனக்கு கன்வீனியன்ட்டா இல்ல.”

“என்னோடு சம்ஷாரிச்சால் நிங்களும் பாதி மலையாளியாயிட்டு மாறிடும்…” என்று அவன் புன்னகையோடு கூறினான்.

“சான்ஸே இல்ல… எனக்கு என்னோட தமிழ் உசத்தி… மற்ற மொழிக்கு நான் எதிரி கிடையாது. கத்துக்கறதோ பேசறதோ கூடத் தப்பா எனக்குத் தோணலை… ஆனா இன்னொரு மொழிக்காரியா மாறுவது. சான்ஸ் இல்ல… ஏன்னா எனக்கு அவ்வளவு இஷ்டம் என்னோட தமிழ் எனக்கு…” அவனது புன்னகையை மறுக்காமல் அதே சமயத்தில் தன்னுடைய புன்னகை இதுதான் என்று வரையறுத்துக் கூறிய தமிழ்நதியை ஸ்ரீதரன் ரசித்தான்.

“இது எண்டே பீமேல் வெர்ஷன் போலே தோன்னு… இப்போதைக்கு நம்ம மொழி பிரச்சினையைத் தள்ளி வெச்சுக்களாம்… ஜஸ்ட் நாளைக் காலை வரைக்கும் தான் நாம பார்த்துக்க போறது! ரயில் சிநேகம் மாதிரி இது கார் சிநேகம்… அல்லே…” என்று இயல்பாகக் கேட்டான். அவள் ஒப்புதலாகத் தலையாட்டினாள்.

“ஆமா… நாளைக்கு காலையில் என்னைக் கொண்டு போய் விட்டுட்டா அப்புறம் நாம பார்க்கக் கூட மாட்டோம்… அதுக்குள்ளே நமக்குள்ள எதற்குப் பிரச்சனை…” என்று சிரிக்க, அவனும் தலையாட்டினான்.

“சரி… உங்க பேர் என்ன?” சமாதான தூதுவனாக ஸ்ரீதரன் கேட்டான்.

“தமிழ்நதி…” சிரிக்காமல் அவள் கூற, கேட்டவனுக்கு அவனையும் மீறிச் சிரிப்பு மலர்ந்தது. அதைக் கண்டவளுக்கு உள்ளுக்குள் எரிச்சல்.

“ஹல்லோ என்ன சிரிப்பு வேண்டியிருக்கு?… கிண்டலா?”

“கிண்டலோ… ஞானோ? அய்யடா… எனிக்கு நின்னினே கலியாக்காம்? அதும் நிங்களுடே பேரே கலியாக்காம்?” என்று தமியாளத்தில் கிண்டலடித்துக் கொண்டே போக, தமிழ்நதி கையைக் காட்டி நிறுத்தினாள்.

“ஹலோ… ஸ்டாப்… ஸ்டாப்… எதுவா இருந்தாலும்… தமிழ்… தமிழ்… எனக்குப் புரிய வேண்டாமா?”

கடுகடுவென்ற முகத்தோடு அவள் கூற, நிதானமாகச் சிரித்து முடித்து விட்டு.

“உங்க பேரைக் கேட்டவுடனே எனக்குச் சிரிப்பு வந்துட்டது. ஷமிச்சு… தமிழ்நதிங்கற பேரை இங்கிலீஷ் ரிவர்ன்னு ட்ரான்ஸ்லேட் பண்ணிப் பார்த்தேன்…” என்று அடக்க முடியாமல் சிரித்தான்.

“சாரி… ஷமிச்சு… இட் இஸ் பெட்டர் டூ கால் யூ ஆஸ் அ ரிவர்… ஆர் யூ ஓகே வித் இட்?” சிரிப்பை அடக்க முடியாமல் ஸ்ரீதரன் கேட்டான். தமிழ்நதியின் முகம் சிவந்தது. கோபத்தில்!

“வேண்டாம்… பிச்சு பிச்சு… எவ்வளவு அழகான பேரை இப்படியா கொலை பண்ணுவீங்க?”

தமிழ்நதிக்கு அவளுடைய பெயரைச் சுருக்கி அழைத்தாலே பிடிக்காது. அப்படிப்பட்டவளை இங்கிலீஷ் ரிவர் என்று கேவலமாக மொழிமாற்றம் செய்தவனை என்ன செய்வது என்று தெரியாமல் குமுறினாள்.

“டேய்… வீட்டுக்குப் போறதுக்குள்ள உனக்கு இருக்குடா… எப்படியாவது என்கிட்டே வாங்கிக் கட்டத்தான் போற…” தனக்குள்ளாகக் கறுவி கொண்டிருந்ததை அவனும் ஊகித்துத் தான் இருந்தான்.

அவளது கோபமெல்லாம் சிறுபிள்ளையின் கோபமாகவே அவனுக்குத் தோன்றியது.

“சரி உங்க பேர் என்ன?” கடுகடுவென அவள் கேட்ட கேள்வியிலேயே அவளது சிறுபிள்ளை கோபத்தை உணர்ந்தவன்,

“ஞான் ஸ்ரீதரன்… ஸ்ரீதரன் வெர்மா…”

கூறும்போதே அவனது பெயருக்குண்டான பெருமை அவனது முகத்தில் ஜ்வலித்தது. ஆனால் அவனது அந்தப் பெருமைபற்றி அறியாதவளுக்கு அவன் எப்படியாகினும் ஒன்றே அல்லவா.

“அது வெர்மாவா? இங்க வர்மா தான்…” அவனது மலையாள உச்சரிப்பைச் சரி செய்வதாகக் கூறிக்கொண்டு அவள் கூற, அவனுக்குத் தான் மேலும் சிரிப்பாக இருந்தது.

“அது வர்மையல்ல… வெர்மானு…” புன்னகையோடு கூறிவிட்டு, “டீ குடிக்கலாமா?” என்று கேட்டான். கார் வாலஜாவிற்கு அருகில் நெருங்கிக் கொண்டிருப்பதை கவனித்தாள்.

“இது என்ன புது ரூட் மாதிரி இருக்கே…” கண்களில் சற்று எச்சரிக்கை பாவனையோடு!

“ம்ம்ம் அதே… திண்டிவனம் தாண்டி ஏதோ கலவரமாம்… அதான் போலீஸ் ரூட் மாற்றி விட்ருக்காங்க…”

“என்ன சொல்றீங்க? காலைலகுள்ள நான் ஊருக்குப் போய்ட முடியும் தானே? ஐயோ இல்லைனா எங்க வீட்டு கிழவிங்க எல்லாம் சேர்ந்துட்டு என்னை ஒருவழி பண்ணிடுங்க…” அவள் தாமதமாகச் செல்வதற்கு பயப்படுவதை விட லோகாவுக்கும் மற்ற கிழவிகளுக்குமே பயந்தாள். ஆரம்பித்து விட்டால் நிறுத்தமாட்டார்களே!

“அதெல்லாம் நத்திங் டூ வொர்ரி… ஐ ல் டேக் கேர்…” என்று அலட்டிக்கொள்ளாமல் கூறிவிட்டு காரை அந்த டீ க்கடையின் முன் ஓரமாக நிறுத்தினான்.

“டீ?” இறங்கியவன் அவளைப் பார்த்துக் கேட்டான்.

“இந்த நேரத்துலையா?” தமிழ் தயங்கினாள்.

“ஜஸ்ட் அ சிப் மாத்ரம்…”

“ம்ம்ம் சரி… ஆனா எனக்குக் காபி…” என்றவள் அவனைத் தொடர்ந்து இறங்கினாள்.

காற்று முகத்தில் அறைந்தது. வாகனங்கள் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தன… பெரும்பாலும் மணல் லாரிகள்! மணலை ஏற்றிக் கொண்டு நீர் ஒழுக அந்த லாரிகள் போகும் அதிவேகத்தை பார்த்துப் படபடத்தது மனம்… இவ்வளவு வேகம் இத்தனை சுமையை வைத்துக் கொண்டு தேவையா என்று தோன்றியது. அந்த வாகனங்கள் போகும் வேகத்தில் குப்பையோடு கூடிய காற்று முகத்தில் அறைந்தது.

சமீபத்தில் இணையத்தில் கண்ட சட்டையர் ஒன்று நினைவுக்கு வந்தது.

கர்நாடகாக்காரன் டேம் கட்டுகிறான். தண்ணீரைச் சேமிக்கிறான்.

கேரளாக்காரன் டேம் கட்டுகிறான். தண்ணீரை சேமிக்கிறான்.

ஆந்தராக்காரனும் டேம் கட்டுகிறான். தண்ணீரை சேமிக்கிறான்.

ஆனா தமிழ்நாட்டுக்காரன் இவர்களுக்கு மணல் சப்ளை செய்கிறான். என்று போனது அந்தக் கசப்பான நகைச்சுவை… இது உண்மைதானே? பல ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆறுகளில் சேர்ந்திருக்கும் மணலை அள்ளிவிட்டால் பின் தண்ணீர் எப்படித் தேங்கும்? கடலில் இருக்கும் உப்பு நீர் நிலத்தில் புகுந்து விடாதா? தமிழகமே பாலைவனமாக மாறிவிடாதா?

ஒரு சிலரின் சுயநலத்தால் மொத்த நிலமுமே நஞ்சாக வேண்டியதுதானா? நிலத்தை மலடாக்கும் மீத்தேன் எரிவாயு திட்டங்களும், காற்றை விஷமாக்கும் அணுமின்சார திட்டங்களும் மிச்சமிருக்கும் நீரையும் அழித்தொழிக்கும் மணல் திருட்டுகளும் தமிழகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருப்பதை மக்களே உணராமல் இருப்பதுதான் வேதனை!

“தமிழ்… தமிழ்…” கையில் காபியோடு ஸ்ரீதரன் அழைக்க, அது காதில் விழாமல் தமிழ்நதி இந்த நினைவுகளில் மூழ்கி இருந்தாள்.

“தமிழ்…” சற்று சப்தமாக அழைத்தான்.

“ஹான்… என்ன?” ஸ்ரீதரனை பார்த்துக் கேட்டாள்.

“காபி…” அவளது கையில் காபி கப்பை கொடுத்தான்.

மெலிதாகத் தூறல் ஆரம்பித்து இருக்க, அந்த நேரத்தில் அந்தக் காபி தேவாமிர்தமாகத் தொண்டையில் இறங்கியது. ஸ்ரீதரன் அந்த டீக்கடைக்காரருடன் மலையாளத்தில் என்னவோ பேசிக்கொண்டு இருந்தான். அவளுக்குத்தான் புரிந்தபாடில்லை.

குடித்து முடித்தவுடன் அந்தக் கப்பை வாங்கி அங்கிருந்த குப்பைத்தொட்டியில் போட்டவன். அந்தக் கடைக்காரரைப் பார்த்து,

“ஓகே சேட்டா… பை…” என்று கூறிவிட்டு வந்தான்.

“அந்த டீக்கடைகாரர் உங்க ஆளுங்களா?” லேசான புன்னகையோடு அவள் கேட்டாள்.

“எங்க ஆளுங்கன்னா?”

“மலையாளம்…”

“ம்ம்ம்… ஏன் கேட்கறீங்க?”

“இல்ல… நிலாவுக்கு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் போனப்போ… அதுக்கு முன்னாடியே ஒரு மலையாளி அங்க ஒரு டீக்கடை போட்டுட்டதா ஜோக் சொல்லுவாங்க… அதை நினைச்சேன்… சிரிப்பு வந்துட்டது…” என்று அவள் சிரிக்க, அவளைக் கூர்மையாகப் பார்த்தவன்.

“அதில் தப்பென்ன இருக்கு? மலையாளிகள் உழைப்பாளிகள். எங்க வாய்ப்பு கிடைக்குதோ அதைக் கெட்டியா பிடிச்சுக்கறோம். எங்க போனாலும் ஒற்றுமையா இருக்கோம்… அதனால் முன்னேறிக்கறோம்…” இயல்புபோலக் கூறியவனை பார்த்துச் சிரித்தாள்.

“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் மலையாளிங்க லாபி பண்றதுல கெட்டி… மத்தவங்க வாய்ப்பைத் தட்டி பறிக்கறதுன்னா அவங்களுக்கு அது கை வந்த கலை… அதுவும் இல்லாம மலையாளியான்னா கொலையாளின்னு தான் கேள்வி…” என்றவள் ஓரக்கண்ணில் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

நேரடியாக அவளது குற்றசாட்டு இருந்தாலும் அசரவில்லை அவன். அலட்டிக்கொள்ளவும் இல்லை. கோபப்படவும் இல்லை. தோளைக் குலுக்கி விட்டுக் காரை நோக்கிப் போனான்.

ஷாலை இழுத்துப் போர்த்தி கொண்டு அவளும் காரை நோக்கிப் போனாள்.

இந்த நினைவுகளை அசைப்போட்டு கொண்டு வந்தவள் எதிரில் வந்த மணல் லாரியைக் கவனிக்கவில்லை. தமிழ்நதியை நோக்கி அதி வேகமாக வந்து கொண்டிருந்தது அந்த வாகனம்.