சங்கமம்
சங்கமம் -எவ்வளவு உன்னதமான, ஆழ்ந்த பொருள் தரும் வார்த்தை.
வான காதலன் பூமி பெண்ணுடன் மழையாகச் சங்கமிப்பதும், ஆறுகள் கடலுடன் சங்கமிப்பதும், படைப்பாளர்களின் படைப்பு மக்களின் மனதில் சங்கமிப்பதும் ஒரு அழகான கவிதை. இது பிரிக்க முடியாத உன்னத பந்தம்.
அதே போல் இரு மனம், ‘காதல்’ என்னும் ஆத்ம பந்தத்தில், ஒன்றாய் இணைவதே இந்த, ‘சங்கமம்.’
சங்கமிக்க காத்து இருக்கும் நெஞ்சங்கள் – தனஞ்செயன், மஞ்சரி.
தனஞ்செயன்
காதல் ஒன்றையே ஆயுதமாய் கொண்டு, காதலிக்காகவே சுவாசித்து, வாழ்ந்து, தன்னை தானே அவள் ஒருத்திக்காகச் செதுக்கி கொண்ட சுயம்பு. இவன் இதயம் துடிப்பதே மஞ்சரி என்னும் பெண்ணுக்காக மட்டுமே.இவன் வாழ்வதே அவள் ஒருத்தியாக மட்டுமே.
காதலால், ‘அவளாகி’ நின்றவன் தனா. மஞ்சரியின் ஜெய்.
காதல் தன்னை மட்டுமல்ல, தன்னை சார்ந்தவர்களையும் வாழ வைக்கும் என்று வாழ்ந்து காட்டியவன்.
மஞ்சரி.
தனக்கான ஒரு இதயம் துடிப்பதை அறியாத பேதை. தோழியாய், வழிகாட்டியாய், இருந்தவள் தனக்காகத் துடித்த இதயத்தை அறியாமல் போனது காலத்தின் சூழ்ச்சியே!. காலத்தால் ஆழி பேரலையில் சிக்கி, வாழ்க்கை துளைத்த காரிகை.கடலை விட மிக ஆழம், இவள் வாழ்வு.வாழ்க்கை எத்தனை போராட்டம் கொடுத்தாலும், அதள பாதாளத்தில் தள்ளினாலும் மீண்டும் மீளும் பினிக்ஸ் பறவை போன்றவள்.
வாழ்வே மாயமா
வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
நடந்தவை எல்லாம் வேஷங்களா?
நடப்பவை எல்லாம் மோசங்களா ?
நிலவுக்குப் பின்னால்
நிழல் இருக்கும்.
நிழலுக்கும் ஒருநாள்
ஒளி கிடைக்கும்.
மலரில் நாகம்
மறைந்திருக்கும்
மனதுக்குள் மிருகம்
ஒளிந்திருக்கும்.
திரைப்போட்டு நீ
மறைத்தால் என்ன
தெரியாமல் போகுமா.?‘என்ற நிலைமையில் மஞ்சரி.
காதலுடன் இவளை வாழ்விக்க தவமிருக்கும் ஒருவன்.
காமத்துடன் இவளை மீண்டும் பலி வாங்க ஒருவன்.
இவர்கள் இருவரில் யாரிடம் சங்கமிக்கும் மஞ்சரியின் நெஞ்சம்?
எந்த இதயம் எதனுடன் சங்கமிக்கும்?
தனஞ்செயன்
மஞ்சரி.
THANK YOU SO MUCH TO DEAR “SHANTINI DOSS” FOR HER OUTSTANDING WORK FOR THIS COVER.WITHOUT HER THESE MAGIC WILL NOT BE POSSIBLE.