சமர்ப்பணம் 12

(இந்திய சட்டத்தின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 53, குற்றம் சாட்டப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனைக்கு சில விதிகளை வகுக்கிறது. பிரிவு 164 ஏ பாதிக்கப்பட்டவரின் மருத்துவ பரிசோதனையைப் பற்றியது. குற்றவாளி பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், இது பாதிக்கப்பட்டவரின் மருத்துவ செலவுகள் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை பூர்த்தி செய்ய நியாயமானதாக இருக்கும், மேலும் குற்றவியல் நடைமுறை விதிமுறைகளில் பிரிவு 357 பி படி. மிகவும் தீவிரமான கற்பழிப்பு வழக்குகளுக்கு மரண தண்டனை குறிப்பிடப்பட்டுள்ளது.)

(2013 ஆண்டு சட்டமானது 18 வயதிற்கு குறைவான எவருடனும், எந்தவொரு பாலியல் செயலும் சட்டரீதியான கற்பழிப்பாக பார்க்கப்படுகிறது. பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சையை வழங்க புதிய சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கட்டாயமாக்கியுள்ளது. மருத்துவ மற்றும் சட்ட வல்லுநர்களுக்கான முக்கிய குறிப்பு கருவியான மோடியின் மருத்துவ நீதித்துறை 2015/Modi’s Medical Jurisprudence’)பதிப்பானது, கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடத்தப்படும் ரெண்டு விரல்” சோதனையை விஞ்ஞானபூர்வமற்றது என்கிறது. )

modi's medical jurisprudence and toxicologyக்கான பட முடிவுகள்

mehreen prizda sleepingக்கான பட முடிவுகள்

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு
முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவை என்று ஒன்று.
யாரென்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டுத் திரை போட்டு
விளையாடி நாம் காணும் உலகொன்று ஒன்று
தூங்காத கண்ணென்று ஒன்று.

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று

டிவியில் பழைய பாடல்கள் ஓடிக் கொண்டிருக்க, இதுவரை பாடலாய் மட்டுமே கேட்டவை எல்லாம், புது அர்த்தம் கொடுத்துக் கொண்டு இருந்தது கௌதமிற்கும், அஞ்சலிக்கும்.

அவர்கள் இருவரின் கண்களும் தூக்கத்தை தொலைத்து தான் இருந்தன

ஒரு  ஜீவன் இன்னொன்றை  தன் ஆத்ம பந்தமாய் இனம் கண்டு அதற்காகத் துடிக்க ஆரம்பித்து இருந்தது

உற்றார், பெற்றோர், நண்பர்கள் கூட அறியாமல் தான் அந்த உயிர்கள் ரெண்டும் இடம் மாறிப் போய் இருந்தது.

கௌதமும் அஞ்சலியும் காதலை பகிர்ந்து கொள்ளவேயில்லை. ஆனால் காதலில் விழுந்து இருந்தார்கள்.

முதல் பார்வை காதல் எல்லாம் உண்மை அல்ல என்று பலர் சொன்னாலும், சில காதல்கள் அப்படி தான் உருவாகின்றன.

நிறைய திருமணங்களில்  திரை போட்டு மறைத்து இருப்பார்கள். அது விளக்கப்படும்போது மணமக்கள் முன்னரே அறிமுகம் ஆகி இருந்தாலும் அந்த முதல் பார்வைக்கு  அத்தனை சக்தி உள்ளது.

ஒரு சில திருமணங்களில் வெல்லத்துடன், சீரகம் சேர்த்து அதை வெற்றிலையில் வைத்து மணமக்கள் தங்கள் துணையின் தலையில் வைப்பார்கள். இதற்கு, ‘ஜில்லாக்கார பெல்லம்’ என்று பெயர்.

வெல்லம், சீரகம், வெற்றிலை மூன்று சேர்ந்து உச்சந்தலையில் வைக்கும்போது, அது தலையில் உள்ள, ‘அகநயத்த சக்கரத்தை’ தூண்டி விடுவதாகவும், அதுவே தம்பதிகளின் ஒருவர் மீது ஒருவர் பிடித்தம் வரக் காரணம் என்று சம்பிரதாயங்கள் சொல்கின்றன.

தலையில் நடக்கும் கெமிக்கல் ரியாக்ஷன் இதயத்தைத் தூண்டுவதாகச் சொல்வார்கள்.

நிறைய திருமணங்களில்  திரை போட்டு மறைத்து இருப்பார்கள். அது விளக்கப்படும்போது மணமக்கள் முன்னரே அறிமுகம் ஆகி இருந்தாலும், ‘ஜில்லாக்கார பெல்லம்’ நடந்து முடிந்த பிறகு, அந்த முதல் பார்வைக்கு அத்தனை சக்தி.

வெல்லம், சீரகம், வெற்றிலை மூன்றும் சேர்ந்து உருவாக்கும் கெமிக்கல் ரியாக்ஷன்னுக்கு ஈடு காதலர்களின் முதல் பார்வை.

அந்தக் கண நேர   ஒற்றை பார்வைக்கு  தான் எத்தனை சக்தி.

இது எல்லோருக்கும் எல்லாரிடமும் உருவாகி விடாது.

சாம்ராஜ்யங்களை மண்ணோடு மண்ணாக்குவதும், இன்னொரு உயிருக்காக இந்த இதயம் துடிக்க ஆரம்பிப்பதும் இந்த ஒற்றை பார்வையால் தான்.

சரியாகப் பயன்படுத்தினால், சரியான துணையை சேரும்போது  அதி உன்னத ஆக்கச் சக்தியும்  காதல்தான்.

தவறி போகும்போது அதி பயங்கர அழிவு சக்தியும் இது தான்.

அந்த இரவு தூங்கா இரவாய் கழிந்தது காதலில் விழுந்த அந்த ரெண்டு நெஞ்சங்களுக்கும். கண் விழித்தே இருந்தாலும் மனதில் இனம் புரியாத நிம்மதி.

விழித்தே கிடந்தவர்கள், ஒருவரை பற்றி ஒருவர் யோசித்து கொண்டு இருந்தவர்கள், தங்கள் வீட்டினரை பற்றி நினைக்காமல் போனார்கள்.

விஷ்ணு ஆபரேஷன் முடிந்து வந்தவுடன் இவளுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு உறங்கச் சென்று இருந்தான்.

ஆனால் ராம்சந்தரிடம் இருந்தோ, தனுவிடம் இருந்தோ அவர்கள் குடும்பத்தாருக்கு அப்படி எந்தத் தகவலும் வரவேயில்லை.

அஞ்சலியும், கௌதமும் தங்கள் இணையை பற்றி மட்டுமே எண்ணினார்களே ஒழிய, அவர்கள் அண்ணன், தங்கையிடமிருந்து எந்தவொரு மெசேஜ் வரவில்லை, ஒரு அழைப்பில்லை என்பதை கவனிக்க தவறினார்கள்.

அஞ்சலி, கௌதமின் நினைவில் இருந்திருக்கவில்லை என்றால்  விஷ்ணு அனுப்பும் மெசேஜுக்கு பதில் அளித்திருப்பாள், பெற்றோர் அத்தையுடன் மருத்துவமனையில் இருக்கிறார் என்ற தகவல் தெரிந்து இருக்கும்.

‘இத்தனை நேரம் தங்கை தனியாகவா இருந்தாள்! அதுவும் ஹோட்டல் அறையில்…. துணை இல்லாமல்’ என்ற கேள்வி நிச்சயம் விஷ்ணு எழுப்பி இருப்பான்,

‘நான் தான் எமெர்ஜென்சி கேஸ் என்று போய் இருந்தேன்.இந்த ராமிற்கு தான் அப்படி எதுவும் அழைப்பு வரவில்லையே. ஹோட்டல் அறையில் தங்கையைத் தனியே விட்டு எங்கே போய்த் தொலைந்தான் இந்த ராம்.’ என்று விஷ்ணு ருத்ரதாண்டவமே ஆடி இருப்பான்.

இருபத்தி நான்கு மணி நேரமும் தங்கையைப் பற்றி மட்டுமே எண்ணி கொண்டிருக்கும் கெளதம் எண்ணத்தில், அப்பொழுது நிறைந்திருந்தது அஞ்சலி மட்டுமே.

அஞ்சலி கௌதமின் மனம், எண்ணம் எல்லாவற்றையும் ஆக்கிரமித்து இருக்காவிட்டால், தங்கை, ‘தன்னிடம் சொல்லாமல் எப்படி டூர் போனாள்?’ என்று கோபித்து, சண்டை போடவாது கெளதம் அழைத்துப் பேசி இருப்பான்.

இவன் வெளிநாடுகளுக்கு செல்லும்போது உறங்கச் செல்வதற்கு முன் அன்று நடந்த அனைத்தையும் தன்னிடம், ஒப்பிக்காமல் தூங்காத தங்கை அன்று தன்னை அழைக்கவேயில்லை என்பது மனதில் பதிவாகி இருக்கும்.

சில தவறுகள் நடக்கும்போது அது நடக்காமல் தடுக்க தேவை ஒரு சின்ன இடையூறு தான்.

‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று நாம் தள்ளிப் போடும் சில விஷயங்கள், செயின் ரியாக்ஷன் மாதிரி எங்கோ, இவருக்கோ நிச்சயம் பாதிப்பைக் கொண்டு வரும் என்பதற்கான சான்று இதோ இவர்கள் வாழ்வே.

யோசித்தார்கள்… உறங்காமல் யோசித்தார்கள். ஆனால் அவை எல்லாம் ஸ்வீட் நத்திங்ஸ் மட்டுமே.

உணர்ச்சிகளின் பிடியில் சிக்கியிருக்கவில்லை என்றால் கிளாரிட்டி கிடைத்து இருக்கும்.

கௌதமின் மூன்று முத்தங்களையும், அணைப்புகளையும் எப்படி எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்க முடிந்தது என்று யோசித்து இருந்தால், சில முடிவுகளை அஞ்சலி எடுக்க நேர்ந்திராது.

எப்படி அஞ்சலி அருகில் யோசிக்கும் திறன் அற்றவனாய், ‘அவளே கதி, அவளே அனைத்தும்’ என்று பித்தாய், அஞ்சலி அருகில் மாறுகிறான் என்பதை பற்றி, கெளதம் யோசித்து இருந்தால், அல்டிமேட்டம் கொடுத்து அவர்கள் காதலை பணயமாய் வைத்திருக்கமாட்டான்.

அஞ்சலியும் அதே நிலையில் தான் இருக்கிறாள்.

முற்றும், ‘அவனாகி, அவன் தான் சகலமும்’ என்று மனம் ஏற்று கொண்ட பிறகு தான் அவன் தொடுதல் இவளைக் கலவரப்படுத்தவில்லை.

பதறும் பெண்ணை உண்மையில் அவனிடம் பாதுகாப்பை தான் உணர்கிறது என்பது புரிந்து இருக்கும்.

‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ என்பது குடிமக்களுக்கு மட்டும் இல்லை காதலர்களுக்கும் பொருந்தும்.

இரவு முழுதும் விழித்து ஒருவரை பற்றி ஒருவர் நினைத்துக் கொண்டிருந்தவர்கள் தங்களையும் அறியாமல் பொழுது விடியும் வேலையில் கண்ணயர்ந்திருந்தார்கள்.

இவர்கள் உறங்கலாம், ஊர், உலகம் அதற்காக உறங்க முடியுமா!

இருவரின் மொபைல் அலற, அறை கதவும் பலமாய் தட்ட பட்டது அவர்களின் பெற்றோர்களால்.

படுக்கையில் புரண்டவாறே, “ஹலோ!” என்று தூக்க கலக்கத்தில் அஞ்சலி ராகம் இழுக்க, அந்தப் பக்கம் டென்ஷன் ஆனார் ஹேமா.

“அடியேய்!…இன்னும் தூங்கிட்டா இருக்கே!… சோம்பேறி கழுதை… ஒரு நாளாவது சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டும் என்று இருக்கா!

முகுர்த்த நேரம் ஆகுது. எங்கே எல்லோரும் எங்கே உன் பொண்ணுன்னு கேட்டு, உன்னைக் காணோம் என்று பதறியடித்து ஓடி வந்தால் இன்னும் தூங்கிட்டா இருக்கே!” என்று அறையின் வாயிலிலிருந்து ஹேமா பொரிந்து தள்ளினார்.

‘தூக்கமாவது ஒன்றாவது’ அலறி அடித்துக் கதவைத் திறந்தாள் அஞ்சலி.

ராம்சந்தரை தவிர மற்ற அனைவரும் ரெடியாகி இருந்தனர் அங்கு. அவன் தான் அங்கு வரவேயில்லையே!

“எல்லாம் உங்களைச் சொல்லணும்… நீங்கக் கொடுக்கும் இடம் தான், இவ தலைமேல் ஏறி உட்கார்ந்துட்டு ஆடிட்டு இருக்கா. பையன், அவனே நைட் டூட்டி பார்த்துட்டு ரெடியாகி வந்துட்டான்.

அல்லி ராணிக்கு இன்னும் பொழுதே விடியலை… வந்தவுடனே சொன்னேன் தானே!… உங்க ஆசை மகளை எழுப்பங்கன்னு, என்ன சொன்னீங்க,

‘அவ ரெடியாகி இருப்பா. குழந்தையை எப்போ பார்த்தாலும் திட்டிட்டே இருக்கேன்’ என்று என்னைக் குறை சொன்னீர்களே!… இப்போ பாருங்க….

உங்களுக்கு எல்லாம் ஏன் புரிய மாட்டேங்குது….இவ செய்யும் ஒவ்வொரு செயலும் என்மேல் தான் பிரதிபலிக்கும் என்று. நீங்க அப்பா. நீங்களும் தான் அவளுக்கு எது நல்லது, கெட்டது என்று சொல்லி வளர்க்கறீங்க.

ஆனா உலகம், ‘ஹேமா என்ன பொண்ணை வளர்த்து வச்சி இருக்கான்னு’ என்னவோ நான் மட்டுமே இவளை வளர்ப்பது போல் என்மேல் மட்டும் பழி போடும். அவ கெடுவதே உங்களால் தான். பெருசா எதையாது செய்யப் போறா அப்போ தெரியும் உங்களுக்கு.

அவனை ஏண்டீ முறைச்சிட்டு நிக்கிறே… ஓடு பொய் ரெடி யாகு.”  என்று ஹேமா வேப்பிலை அடிக்க, அஞ்சலி பாத்ரூமிற்குள் ஓடி மறைந்தாள்.

அவரும் தான் என்ன செய்வார்.

மகள் மகனாகவும், மகன் மகளாகவும் நடக்கும் போது.

விஷ்ணு பொறுப்பானவன், ஐடியல் மகன். அதிர்ந்து கூட பேச மாட்டான்.

அதற்கு எதிர்மறை அஞ்சலியும், ராமும்.

வெண்கல கடைக்குள் ஒரு யானை இல்லை, யானை கூட்டமே நுழைந்தது போல் அஞ்சலியும், ராம்மும் இருக்கும் இடம்.

அமைதி என்றால் அது என்ன, அது எங்கு கிடைக்கும் என்று கேட்கும் ரகம். ஹேமாவின் பிபியை எகிற வைத்து விட்டு ஹாயாக இருக்கும் சின்சான் பெண் பால்.

ராம் திமிர் பிடித்தவன் என்று சொல்ல முடியாவிட்டாலும், தான் செய்வது மட்டுமே சரி என்பவன். அது தவறாகவே இருந்தாலும், ‘நான் இப்படி தான்…உனக்குப் பிடிக்கவில்லையா போய் எங்கேயாவது முட்டிக் கொள். நீ என்னை பற்றி என்ன நினைக்கறே…உன் மனம் புண் படுமா என்றெல்லாம் யோசித்து உனக்காக என்னால் எதையும் செய்ய முடியாது.’   என்று வாழ்பவன்.

நிறைய தடுமாற்றம் அவன் எடுக்கும் முடிவுகளில் இருக்கும். இதுவா அதுவா என்று பலமுறை குழம்பி நின்றாலும் தன் எண்ணத்தை மாற்றி கொள்ள மாட்டான்.

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் ராமச்சந்தர், ‘யாருக்கும் புரியாத புதிர்.அவனுக்கு மட்டுமே விளங்கும் புதிர்’ அவன்.

ராம் செய்யும் சில செயல்களால், நேற்று திருமண மண்டபத்தில் நடந்த சில வேண்டாத சம்பவங்களால், திருமணம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற பதட்டத்தில், ஹேமா சொல்கிறார் என்று அனைவருக்குமே புரிந்து தான் இருந்தது.

ஆனால் அவர் சொன்னதில் சில அப்படியே பலிக்க போகிறது என்று அந்த அன்னை அப்பொழுது உணரவில்லை.

“சரி… சரி… நீங்க ரெண்டு பேரும் கீழே போய் ஏதாவது வேலை இருந்தா பாருங்க… அவளை நான் ரெடி செயது கூட்டி வரேன்.” என்று கணவனையும் மகனையும் வெளியே அனுப்பினார்.

“ஹேமு!..” என்று இழுத்தார் பாண்டியன்.

“இப்போ ஹேமுக்கு என்ன வைத்து இருக்கீங்க?” என்றார் ஹேமா.

“ரொம்ப திட்டாதேடீ… குழந்தை முகம் அப்படியே வாடி போச்சு. எதுவாய் இருந்தாலும் பதமாய் சொல்லு. கேட்டுப்பா… அவளை திட்டுவதாய் இருந்தால் வீட்டில் வைத்து கொள்…இங்கே வேண்டாம்.” என்றார் பாண்டியன்.

“ஆமாமா… அப்புறம் கோச்சிட்டு கிளம்பிட போறா.” என்றான் விஷ்ணுவும்.

“யப்பா!… சாமி!… உங்க ஆசை இளவரசியை நான் எதுவும் சொல்லலை… கிளம்புங்க.” என்றவர் அவர்கள் சென்றதும் காத்திருந்தார்.

இருபது நிமிடம் ஆகியும் மகள் வெளியே வரவில்லை என்றதும், அவருக்கு டென்ஷன் ஏறி போனது.

“திட்டினால் மட்டும் உங்க அப்பா, அண்ணன் எல்லோரும் சண்டைக்கு வராங்க. நீ செய்யும் வேலை மட்டும் அவங்க கண்ணுக்கு தெரியாது.

புடவை கட்டணும் கதவை திறடி… ஏதாவது கோணி பையை போட்டுட்டு வந்தே!…” என்று புலம்பியவாறே நின்றவர், கதவை திறந்து கொண்டு வெளியே வந்த மகளை கண்டு,திறந்த வாயை மூட மறந்து போனார்.

சிகப்பும், தங்கமும் கலந்த நிறத்தில் பட்டு புடவை உடுத்தி, முடியை தளரவிட்டு,  கழுத்தில் சிகப்பும், வெள்ளையும் கலந்த அட்டிகை அணிந்து, கையில் வெண் தந்த வளையல் என்று சர்வாலங்காரா பூஷிதையாய் ஜொலித்து கொண்டிருந்தாள் அஞ்சலி.

“அஞ்சு!… என் கண்ணே பட்டுடும் போலிருக்கே!… என் பெண்ணா இது!.. திருமணம் தர்சினிக்கா உனக்கானே தெரியலையே!” என்றவர் திருஷ்டி கழித்தார்.

‘அம்மா இது உன் பெண் இல்லைம்மா… ஏலியன், க்ளோனிங்’ என்று ஏதாவது ஒரு குறும்பான கமெண்ட் அவர் எதிர்பார்க்க, அவர் மகளோ, வெட்கத்துடன் தலை கவிழ்ந்து நின்று அவருக்கு ஷாக் கொடுத்தாள்.

திருமணம் என்றதும் அஞ்சலி மன கண்ணில் கெளதம் வந்து திருமாங்கல்யத்துடன் நிற்க, அஞ்சலியை நாணம் சூழ்ந்து கொண்டது.

தூது!
செல்வதாரடி உருகிடும்
போது செய்வதென்னடி!
ஓ வான் மதி மதி மதி மதி
அவர் என் பாதி பாதி என்
தேன் மதி மதி மதி கேள்
என் சகி சகி

 உடன் வர தூது செல்வதாரடி
உருகிடும் போது
செய்வதென்னடி!

பெண்ணழகு பூச்சூடி, பொட்டு வைத்தது
மன்னவனின் சீர்

பாடி மெட்டு போடுது

சென்ற சில நாளாக
நெஞ்சம் மாறுதேன்

செல்வன் அவன் தோள் சேர

கண்கள் தேடுதே

நிலை பாரடி கண்ணம்மா

பதில்கூறடி பொன்னம்மா என்
காதல் வேலன் உடன் வர”

என்று கீழ் மண்டபத்தில் இருந்து பாடல் ஒலிக்க, அஞ்சலி தானாக தலை கவிழ்ந்தாள்.

திருமணம் என்றதும் மகள் வெட்கப்படுவதை கண்ட, அந்த தாயின் மனம் நிறைந்தது.

கையால் திருஷ்டி கழித்தவர், “வீட்டுக்கு போனதும் நியாபக படுத்து அஞ்சுமா… உனக்கு சுத்தி போடணும்….” என்றவர் மகளின் கன்னத்தில் முத்தம் இட்டு அவளை வெளியே அழைத்து வந்தார்.

ஹேமா கீழே போக சொன்னாலும் அதே தளத்தில் காத்து நின்றனர் பாண்டியனும், விஷ்ணுவும், ஹேமா அஞ்சலியை திட்டி விட கூடாது என்று.

அவர்களும் ஹேமாவுடன் வந்த அஞ்சலியை கண்டு விழி விரித்தனர்.

“அம்மா!… இங்கே வால்லிலதா குரங்கு ஒன்று சுத்திட்டு இருந்தது எங்கேம்மா மா அது?” என்றான் விஷ்ணு.

“ச்சூ!.. போ அண்ணா.” என்று அஞ்சலி சிணுங்க,

“என்னது… அண்ணனா!” என்று ஏக காலத்தில் ஒலித்தது அவர்கள் மூவரின் குரல்.

“அம்மா!… நீ புடவை தானே கட்ட கொடுத்தே…இல்லை கட்டையால் ஒன்று நடு மண்டையில் போட்டுட்டியா! அஞ்சலி பாத்ரூமில் கால் வழுக்கி தலையில் அடிபட்டு, ‘நடுவுல கொஞ்சம் பக்கம் காணோமா?’ என்றான் விஷ்ணு.

“அம்மா!… அண்ணனை பாரும்மா… கிண்டல் பண்ணிட்டே இருக்காங்க.” என்று தாயின் தோளில் சலுகையாய் சாய்ந்தாள் மகள்.

“அம்மாவா!” மீண்டும் மூவருக்கும் பலத்த அதிர்ச்சி.

அஞ்சலி என்றுமே விஷ்ணுவையும், ராமையும், ‘அண்ணா!’ என்று அழைத்ததே இல்லை,’

‘பெரியவனே!, சின்னவனே!’ என்று ஏக போக மரியாதை தான் வரும்.

ஹேமாவை வெறுப்பேற்ற என்றே, ‘கோமா, ஹிட்லர்’ என்று அழைப்பவள், பாண்டியனை, ‘சேரர் பாண்டியன்’ என்று தான் கூப்பிடுவாள்.

தாயிடம் அஞ்சலி சலுகை கொஞ்சி கொண்டிருக்க, சட்டென்று விஷ்ணுவும், அஞ்சலியும் மட்டும் கடுப்பானார்கள்.

அண்டா கூட இல்லை, சென்ட் கடலுக்குள்  விழுந்ததை போன்று, மேல் ஸ்பிரே செய்து கொள்வதற்கு பதில் அதில் குளித்ததை போல் வந்த இருவரின் சென்ட் வாசம்,  அவர்கள் வரும் முன்னே வருவது யார் என்று உணர்த்தி விட, அண்ணனும் தங்கையும் பார்வையை பறி மாரி கொண்டார்கள்.

“அஞ்சு!… காலையில் நீ காபி குடிக்கலைன்னா உனக்கு தலைவலி வந்துடும் தானே!… டிபன் போட இன்னும் நேரம் இருக்கு. நீ பசி தாங்க மாட்டே…என் கூட வா போய் காபி குடித்து விட்டு வரலாம்.” என்று தங்கையை காபந்து செய்பவன் போல், அஞ்சலியை இழுக்காத குறையாய், அங்கிருந்து அகல முயன்றான் விஷ்ணு.

விஷ்ணுவால் முயல மட்டும் தான் முடிந்தது.

அஞ்சலியும், விஷ்ணுவும் கிளம்புதற்குள் சென்ட் கடலுக்குள் குளித்த ஒருவனும், அரபு குதிரை மாதிரி ஒரு பெண்ணும் அவர்களை நெருங்கி இருந்தார்கள் .

இன்னும் சொல்ல போனால் அஞ்சலி, விஷ்ணு பாதையை மறைத்த படி நின்றார்கள் வந்தவர்கள்.

“அடேடே!… இது நம்ம அஞ்சு குட்டியா!… யப்பா!…அப்படியே கடிச்சி சாப்பிட தோன்றும் காஷ்மீர் ஆப்பிள் போல அல்லவா இருக்கா!காஷ்மீர் ஆப்பிள் தோத்துடும்… நீ ஆப்பிள் பார்த்திருக்கியா அஞ்சலி. அப்படியே தொட்டால் மெழுகாய் வழுக்கும்.”   என்றபடி வந்தான் ரூபேஷ்.

ராம்சந்தரின் நண்பன் என்ற பெயரில் இருக்கும் விஷ நாகம்.

ராம் உடன் டாக்டருக்கு படிப்பவன்.

அவன் உடன் அவன் தங்கை பிங்கி.

விஷ்ணு இவர்களுக்கு சீனியர். பிங்கி இவர்களுடன் சதா சுத்தி கொண்டிருப்பவள்.

ஹேமாவிற்கும், பாண்டியனுக்கும் ரூபேஷ் பேசியதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.  அவர்கள் பார்த்து வளர்ந்த பிள்ளை.

ஐவரும் ஒன்றாய் வளர்ந்தவர்கள் என்பதால் ஹேமா, பாண்டியனுக்கு, ரூபேஷ் பேச்சு விகல்பமாய் படவில்லை.

ஆனால், ‘அந்த பச்சையான பேச்சை’ கேட்டு விஷ்ணுவும், அஞ்சலியும் பல்லை கடித்தனர்.

அஞ்சலியை முழுதாய் மறைத்தது போல் முன்னே வந்து நின்றிருந்த விஷ்ணு, அவன் பேச்சை கேட்டு, ரூபேஷ் மேல் பாய முயன்றவனை  தடுத்து நிறுத்தினாள் அஞ்சலி.

“ஏய்!… விடுடீ… அந்த நாயின் குரல்வளையில் நாலு மிதி மிதிச்சா தான் என் ஆத்திரம் அடங்கும். விடு… விடுன்னு சொல்றேன்” என்று கோபத்தில் கொதித்தான் விஷ்ணு.

“விஷ்ணு! அப்பா, அம்மா இருக்காங்க. கண்ட்ரோல் யூர்செல்ப்.” என்று விஷ்ணு காதை கடித்தாள் அஞ்சலி.

ஹேமாவும், பாண்டியனும் பிங்கியிடம் பேசி கொண்டிருக்க, அவர்கள் முதுகின் பின்னால் விஷ்ணுவை இழுத்து பிடித்து கொண்டிருந்தாள் அஞ்சலி.

“எருமை!… மத்த நேரம் எல்லாம் வாய் கிழிய பேசு… அவன் எவ்வளவு பச்சையாய் பேசுகிறான்… அவன் பேசியதற்கு நீ தான் இவ்வளவு கோபபடணும். அவன் கன்னத்தை பழுக்க வைப்பதை விட்டு என்னை பிடித்து இழுத்துட்டு இருக்கே… விடு அஞ்சலி சொல்றேன் இல்லை” என்றான் விஷ்ணு.

“எனக்கு மட்டும் இளித்து கொண்டிருக்கும் அந்த கோணை வாயை கிழித்து, கொள்ளி கண்ணை நோண்டும் அளவிற்கு கோபம் இல்லை என்றா நினைக்கிறே!

அதுக்கான நேரம், காலம், இடம் இது இல்லை விஷ்ணு. நேத்து இந்த சனியனால் அத்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.” என்றாள் அஞ்சலி .

“என்னடி சொல்றே! பிபின்னு அம்மா சொன்னாங்க. நீ ஹார்ட் அட்டாக்ன்னு சொல்றே!” என்றான் விஷ்ணு திகைப்புடன்.

“வெளியே விஷயம் தெரிய கூடாதுன்னு அம்மா, அப்பா மாத்திட்டாங்க.  அத்தையை ஹாஸ்பிடல் கூட்டி போன பிறகு உமா தான் ஓடி வந்து நடந்த விஷயத்தை என் கிட்டே சொன்னா.

இந்த நாய்  மாப்பிள்ளை வீட்டு தூரத்து சொந்தமாம்… அந்த பெண்ணிடம் இருட்டில்  சிலுமிசம் செய்து இருக்கான். அதுவும் அந்த பொண்ணு இயற்கை உபாதைன்னு, ‘ரெஸ்ட் ரூம்’ போய் இருக்கு. அங்கே உள்ளே போய் ஒளிஞ்சிட்டு அந்த பெண்ணை…” என்று நடந்த கேவலத்தை அண்ணனிடம் சொல்ல முடியாமல் அஞ்சலி சங்கடத்துடன் நிறுத்த, விஷ்ணு தன் நெஞ்சின் மேல் கை வைத்து கொண்டு ஸ்தம்பித்தவனாய் நின்றான்.

“என்ன அஞ்சு சொல்ற…இவனா இப்படி… அந்த பெண்ணிற்கு எதுவும்….”என்று மேலே கேட்க முடியாதவனாய், தன் காதில் விழுந்த செய்தி அவனை இன்னும் திகைப்பில் இருந்து மீள விடாமல் செய்து கொண்டு இருந்தது.

“இல்லை அண்ணா… அந்த பெண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படும் முன்,  எதுவும் விபரீதமாய் ஆகும் முன், அந்த பக்கம் வந்த உமா, அந்த பெண்ணின் அலறல் கேட்டு,  ‘திருடன், திருடன்’என்று கத்தியிருக்கா.

அந்த பெண்ணின் புருஷன்  கத்தியை எடுத்து துரத்தி இருக்கான். இந்த நாய் சுவர் எகிறி குதித்து எஸ்கேப் ஆகிடுச்சு. இந்த விஷயம் எனக்கு, உமாக்கு மட்டும் தெரியும். இவன் தான் அதை செய்தான் என்று அத்தைக்கு கூட தெரியாது.

ஏற்கனவே பிபி பார்ட்டி அவங்க. பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கணும் என்று ஓவர் டென்ஷனில் இருந்தாங்க.

‘திருடன் வந்தான்’ என்று சொன்னதற்கே நெஞ்சை கையில் பிடிச்சுட்டு உட்கார்ந்துட்டாங்க.‘மாப்பிளை வீட்டில் தப்பாய் நினைச்சுப்பாங்க’ என்று புலம்பல். இதில் இவன் இப்படி ஒரு கேவலத்தை செய்ய முயன்றான் என்று தெரிந்தது உயிரே போய்யிருக்கும்.” என்றாள் அஞ்சலி.

“பைத்தியமாடி உனக்கு? போலீஸ் ஸ்டேஷன் போவதை விடுத்து, இங்கே நின்னு பேசிட்டு இருக்கே…. தூக்கி உள்ளே போட்டு இருந்தா இந்த நாய்க்கு இப்படி வந்து பேச தைரியம் வருமா! எவ்வளவு திணக்கம், கொழுப்பு இருந்தால் ராத்திரி ஒரு பெண்ணிடம் அப்படி நடந்து சுவர் எகிறி குதித்து போய்ட்டு ஒன்றுமே நடக்காதது போல் திரும்ப வந்து இப்போ உன்னிடம் அத்தனை பச்சையாய் பேசுவான்….விடு அஞ்சலி…விடு என்னை”   என்றான் விஷ்ணு

“என்னன்னு கம்பளைண்ட் கொடுக்க சொல்றே!” என்றாள் அஞ்சலி.

” இந்த சதை வெறி பிடிச்ச நாய் செய்ததை தான்…  வேறு என்ன?” என்றான் விஷ்ணு.

“யார் அதை கொடுக்கணும்?” என்றாள் அஞ்சலி.

“இவனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணோடு சென்று நாம் தான்.” என்றான் விஷ்ணு கேள்வி என்று புரியாமல்.

“அந்த பெண் யார் விஷ்ணு ?” என்றாள் அஞ்சலி.

“அது… அது… இங்கே…” என்று விழித்தான் விஷ்ணு.

“நீ விட்ட இதை டயலாக் நானும் விட்டு, பிபி ஓவர் ரா கொதிச்சு, பக்கம் பக்கமாய் டயலாக் விட்டேன்.

அந்த பெண்ணும், அவர் வீட்டுக்காரரும் கையெடுத்து கும்பிட்டு, ‘இங்கே நாலு பேருக்கு தெரிந்தது,நாலு லட்சம் பேருக்கு தெரிவதில் உடன்பாடில்லை. இவ என்ன டிரஸ் போட்டு இருந்தா, அந்த நேரத்தில் அங்கே என்ன செய்தா, ஊசி இடம் கொடாமல் நூல் நுழையாது என்றெல்லாம் பேச்சு வரும்.

இயற்கை உபாதைக்கு, ‘லேடீஸ் டாய்லெட் போன பெண்ணிடம் இப்படி நடந்தான்’ ன்று விளக்கம் கொடுத்துட்டு இருக்க முடியாது.

இதை விட அந்த நாய்க்கும் இவளுக்கும் கள்ள தொடர்பு இருந்திருக்கும், முன்னால் காதலன் என்றெல்லாம் வரும். இத்தனை அவமானம் படுவதற்கு தலைக்கு வந்தது அப்படியே போச்சுன்னு விட்டுடுங்க…

நாங்க கிளம்புறோம்…இந்த விஷயம் வேறு யாருக்கும் நாங்க சொல்ல மாட்டோம்… நீங்களும் சொல்ல வேண்டாம்’ என்று சொல்லிட்டு போய்ட்டாங்க.

பஸ்களிலும், வெளியிடங்களிலும் இப்படி வக்கிரம் பிடித்த மிருங்கங்களில் கையில் சிக்கி, இடுப்பில், மார்பில், அந்தரங்க பகுதிகளில் தொடபட்டு, இத்தோடு போனதே என்று மனசுக்குள் புழுங்கும் பெண்கள் தான் அதிகம்.

இதை செய்யும் அந்த மிருகம் தான் வெட்க பட தலை குனிய வேண்டும்.

ஆனால் பாதிக்கபட்ட பெண்கள் தான் தலை குனிந்து போகிறார்கள் விஷ்ணு. என்னவோ இந்த பாலியல் தொந்தரவுகள் எல்லாம் அவர்கள் குற்றம் போல்.

தப்பே செய்யாதவ நடு இரவில் தலைகுனிந்து அப்படி கூனிக்குறுகி போறதை பார்க்க எனக்கு அப்படியே இவன் கழுத்தை நெறிக்கணும் என்று வெறியே வந்தது.

இந்த தசைவெறி பிடித்த மிருகம் நெஞ்சை நிமிர்த்திட்டு வந்து நிக்குது பாரு. இதை எங்கே சொல்லி நியாயம் கேட்க முடியும்?” என்றாள் அஞ்சலி .

 

விஷ்ணு ஏதோ சொல்வதற்குள், “என்ன மருமகளே! ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டே…” என்று அழைத்தபடி வந்தார் வேதநாயகம்.

ரூபேஷ், பிங்கியின் அப்பா.சட்டென்று பார்க்க கோட்டா ஸ்ரீனிவாச ராவ் என்ற தெலுங்கு பட நடிகர் போலவே இருப்பார்.

அஞ்சலியின் குடும்ப நண்பர். சென்னையின் மிக பிரபலமான லாயர். மிகவும் நேர்மையானவர். நல்லவர். அள்ளி அள்ளி கொடுப்பதில் கர்ணன்.

telugu villan oldக்கான பட முடிவுகள்

அஞ்சலியின் குடும்ப நண்பர். இவரின் முகத்துக்காக தான் பலர் ரூபேஷை பொறுத்து கொள்வது. அது எப்படி தான் இப்படி மிகவும் நல்ல பெற்றோர்களுக்கு தறுதலை எல்லாம் பிள்ளையாய் இருக்கிறதோ!

நாயகத்திற்கு அஞ்சலி, விஷ்ணு என்றால் உயிர். அஞ்சலியை ரூபேஷ்ஸுக்கும், பிங்கியை விஷ்ணுவிற்கும் கொடுக்க வேண்டும் என்பது அவர் விருப்பம்.

அந்த எண்ணத்துடன் அஞ்சலியை, ‘மருமகளே!’ என்பார், விஷ்ணுவை, ‘மாப்பிள்ளை!’ என்று தான் அழைப்பார்.

ரூபேஷ்க்கு அஞ்சலி என்றால் ஒரு கண்.

அவனும் தன்னால் முடிந்த விதத்தில் எல்லாம் ட்ரை செய்து பார்த்து கொண்டு தான் இருக்கிறான்.ஆனால் அஞ்சலி என்ற எரிமலையின் முன்னே அவன் தகிடுதத்தம் எல்லாம் ஒன்றுமே பலன் அளிக்கவில்லை.

ஒரு தடவை உரச போனதற்கே, கையில் வைத்திருந்த பென்சில் எடுத்து அவன் கையில் சொருகி விட்டு ஒன்றும் தெரியாதவள் மாதிரி போனவள் இந்த அஞ்சலி.

ராம் கூட இவன் நண்பன் உயிர் நண்பன் தான் என்றாலும், என்றுமே வீட்டிற்குள் எல்லாம் இவனை அழைத்ததே இல்லை.

தேவநாயகம் வரும் போது அவருடன் தொத்தி கொண்டு வந்து விடுவான்.அஞ்சலியிடம் சில்மிஷம் செய்யும் ஒவ்வொரு முறையும் அஞ்சலியிடம்  ஏதாவது ஒருவகையில் சேதாரம் ஆகி திரும்புவதே இவன் பிழைப்பாகி போனது.

‘நீ வந்து உரச நான் என்ன போஸ்ட் கம்பமா…நீ செய்யும் ஈன செயல் எல்லாம் என்னை குனி குறுக செய்ய….வாடா பார்த்து விடலாம்…”என்று சொல்லால் எதையும் சொல்லாமல், செயலால் அவனை டேமேஜ் செய்து கொண்டு இருப்பவள் அஞ்சலி.

சில பெண்கள் வீட்டில் இப்படி தான். உறவு, நண்பர்கள் என்று சொல்லி கொண்டு உள்ளே நுழையும் மனித மிருகங்களின் கையில் சிக்கி, வெளியே சொல்ல முடியாத பல வித பாலியல் வன்கொடுமை, வக்கிர பேச்சுகளால் சிக்கி தவிப்பது எல்லாம் வெகு சாதாரணம்.

வீட்டில் உள்ளோர்களே இப்படி எல்லாம் நடப்பதை சொன்னாலும் நம்புவதில்லை. விரல் நீட்டல் பல சமயம் பாதிக்கப்பட்டவரின் மீதே திரும்பியும் விடும்.

அஞ்சலி போன்றோர் தேவநாயகம் போன்ற மனிதரின் முகத்திற்கு பார்த்து, அவர் கவனத்திற்கு இதை கொண்டு செல்லவில்லை என்றாலும், ரூபேஷ் போன்ற கயவனுக்கு கொடுக்க வேண்டிய தண்டனையை கொடுத்து கொண்டு தான் இருந்தாள்.

ஆனால் பிங்கிக்கு வேலைக்காரியின் மகனான விஷ்ணுவை விட, ராம் மேல் தான் அப்படி ஒரு விருப்பம். விருப்பம்,காதல் என்று சொல்வதை விட வெறி,பொஸசிவ்நெஸ்.

அவளுக்கு எதற்கெடுத்தாலும் ராம் தான். விஷ்ணுவை பிச்சைக்காரனை விட மிக இளப்பமாய் பார்ப்பாள். அண்ணன் தங்கை இருவரின் பொழுபோக்கே விஷ்ணுவை மட்டம் தட்டி கொண்டு இருப்பது தான் .

“வாங்க… முகுர்த்தத்திற்கு டைம் ஆகுதில்லை.” என்று அவர் அழைக்க, ஹேமா, பாண்டியன் அவரோடு முன் செல்ல, அவர்கள் பின்னால் மிகவும் நல்ல பிள்ளைகள் போல் பவ்யமாய் ரூபேஷ், பிங்கி செல்ல, அவர்கள் பின்னே அஞ்சலியை மறைத்த வண்ணம் அவளுக்கு பாடிகார்ட் போல் விஷ்ணு முன்னே நடக்க, அவன் பின்னால் அஞ்சலி வந்தாள்.

லிப்ட் வரும் வரை எல்லாம் நன்றாகவே நடந்தது.

திடீர் என்று ஹாஸ்பிடல் அழைப்பு வர, ஒரு கணம் அதை பேச விஷ்ணு நடை தயங்கி நின்றது.

விஷ்ணு பின்னால் வருகிறான் என்று நினைத்து கொண்டு அஞ்சலி லிப்ட்ட்டிற்குள் நுழைந்து விட, அதன் பிறகு தான் தெரிந்தது லிப்ட் நிறைந்து விட்டது என்பது.

அழைப்பை துண்டித்த விஷ்ணு, “அஞ்சலி!… வெளியே வா. நாம அடுத்த லிப்ட்டில் வருவோம்.” என்று அவளை வெளியே அழைத்தான்.

லிஃப்டை விட்டு வெளியேற முயன்றவளை கை பிடித்து நிறுத்திய ஹேமா,

“டேய்!… நீ அடுத்த லிப்ட்டில் வா… நீ தான் ஏற முடியாது. அஞ்சலிக்கு இடம் இருக்கு” என்று அவளை நிறுத்தி வைத்து கொண்டார்.

“இல்லைம்மா… அஞ்சலி, என் கூடவே வரட்டும்…வா அஞ்சலி.” என்றான் விஷ்ணு விடாமல்.

“அடேய்!… அங்கே உள்ளே அவ நிற்க இடம் இருக்கு. எத்தனை பேர் வெயிட் செய்யறாங்க. நீ  பின்னால் வா.” என்றார் ஹேமா

“அம்மா!… அம்மா!…” என்று விஷ்ணு அழைப்பதற்குள் லிப்ட் கதவு மூடி கொண்டது.

அஞ்சலியும், விஷ்ணுவும் தங்கள் மறுப்பை சொல்வதற்குள் லிப்ட் கதவு மூடி விட்டது.

ஹேமாவுக்கு மகளை கண் பார்வையில் வைத்து கொள்ள வேண்டும் என்ற அவரின் எண்ணம் விஷ்ணுவுக்கும், அஞ்சலிக்கும் புரிந்தாலும், அவர் ‘பூனையை வயற்றில் கட்டி கொண்டு இல்லை, கொள்ளிவாய் பிசாசு ஒன்றை அருகில் வைத்து கொண்டு சகுனம்’ பார்த்து கொண்டு இருக்கிறார் என்பதை அவரிடம் சொல்ல முடியாமல் தவித்தார்கள்.

வேதநாயகம் சற்று அதிகமாகவே உடல் பருமன் உடையவர்.

அவருக்கு முன் ஹேமாவும், பாண்டியனும் நின்றிருக்க, அவரின் அருகே பிங்கி நின்று இருக்க, லிப்ட்டில் வந்தவர்கள் நால்வர் ஏற்கனவே உள்ளே இருக்க, லிப்ட்டின் உள்ளே ரூபேஷ்சுடன் நிற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள் அஞ்சலி.

ஹேமாவும், “அஞ்சலி…நல்லா உள்ளே போய் ரூபேஷ் தம்பி நிக்கறாங்க பாரு. அங்கே நில்லு.” என்று சொல்ல.

அவன் வாய் எல்லாம் பல்லாக, ஒருவிதமாய் கண்கள் மின்ன, “வா அஞ்சலி. இங்கே உனக்காக இருக்கு.” என்றான் ஒருவிதமான குரலில்.

அவன் எது அவளுக்காக இருக்கு என்று சொன்னான் என்பது அவனுக்கு தான் வெளிச்சம்.

அவன் கண்கள் அஞ்சலியை வகை வகையாய் வெறித்து, துகில் உறிந்து கொண்டிருந்தது அத்தனை பேருக்கும் நடுவே.

அஞ்சலி அருகே வர வர வேட்டை நாயின் வெறித்தனம் அவன் கண்களில் வந்தது.

‘இன்று இவள் என்னை மறக்கவே முடியாத படி ஏதாவது செய்தால் தான் மீண்டும் என்னை தேடி நாளை ஓடி வருவா’ என்று அஞ்சலி அவனுக்காகவே அங்கு இருப்பது போல் எண்ணி கொண்டு முன்னேறினான்.

இடம் வேறு நெருக்கமாய் இருக்க, ரூபேஷ் மேல் பட்டு விடாதபடி தள்ளி நிற்க அஞ்சலி முயன்றாலும், இந்த சந்தர்ப்பத்தை தவற விடாதவனாய் அஞ்சலி நகர, நகர ரூபேஷ் அவள் மேல் இடிப்பது போல் அவளை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்தான்.

திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட லிப்ட் அப்படியே தளங்களுக்கு இடையே நின்றது.

மற்றவர்கள் கவனம் நின்று போன லிப்ட் மேல் இருக்க, ரூபேஷ் கை உயர்ந்தது அஞ்சலியை நோக்கி.

ஒரு கணம் அஞ்சலியும் லிப்ட் என்ன ஆனதோ என்று கவனம் சிதற, அதை பயன்படுத்தி கொண்டான் ரூபேஷ்.

கடைசி நிமிடத்தில் அவன் எண்ணம் புரிந்து விட, அவனை அறைய அஞ்சலி கையை உயர்த்த அப்பொழுது தான் அது நடந்தது.

ஒரு கரம் அவளை அப்படியே பின் இருந்து அணைத்து, தன் புறமாய் இழுத்து, இடையில் கை கொடுத்து அவளை தூக்கி தன் முதுகுக்கு பின்னால் இறக்கி விட்டது.

அந்த கை இடையில் பதிந்த உடன் அஞ்சலிக்கு தெரிந்து போனது அது கெளதம் கை என்று.

சீன பெருஞ்சுவர் போல் அவளை பாதுகாத்த கெளதம் முதுகின் மேல் தலை சாய்த்து தன்னை நிலைப்படுத்தி கொண்டாள் அஞ்சலி.

அஞ்சலி கைகள் தானாய் கெளதம்  இடையை சுற்றி பிடித்து கொண்டது.

ஒரு நொடியில் கெளதம் மட்டும் வந்திருக்காவிட்டால் அந்த மிருகம் அவளை மிக அந்தரங்கமாய் தொட்டிருக்கும்.

அந்த நினைவே அஞ்சலிக்கு அருவெறுப்பாக இருக்க, அவளுக்கு குமட்டியது.

கை, கால் நடுங்க அவள் நின்ற நிலை, அவளுக்கு முன் அரனாய் நின்ற கௌதமிற்கு புரிந்தே இருந்தது.

அவனை அணைத்து கொண்டிருந்த பூவுடல் நடுக்கத்தை அவன் தேகம் உணர்ந்தது.

அஞ்சலியின் நிலை கௌதமிற்கு மனதில் அப்படியொரு ரௌத்திரத்தை ஏற்படுத்தியது.

சாதாரணமாய் எங்கு பெண்களுக்கு தவறு நடந்தாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல், யார் எவர் என்று கூட பார்க்காமல் கை நீட்டி விடுவான் கெளதம்.

தவறு செய்பவனை தவறு செய்யும் இடத்தில நிற்க வைத்து ஸ்பாட் பனிஷ்மென்ட் கொடுப்பது தான் அவன் ஸ்டைல்.

மற்றவர்களுக்கே இப்படி என்றால் அஞ்சலி அவனில் சரி பாதி.அவனின் பெட்டெர் ஹாப்..அவளை ஒருவன் தவறான எண்ணத்துடன் நெருங்கினால் சும்மா விடுவானா!

தன் மொபைல்லில் ஆபீஸ் பைல் ஒன்றை பார்த்து கொண்டு இருந்தவன், தன் இதயம் வெகு வேகமாய் திடீர் என்று துடிக்க ஆரம்பிக்க, ‘என்னடா இது!’ என்று தான் குழப்பத்துடன் நிமிர்த்து பார்த்தான்.

பார்த்தவன், ‘இமைப்பதும் ஒரு குற்றம்.’ என்று அறிவித்து விடலாமா என்று யோசிக்கும் நிலையில் இருந்தான்.

அஞ்சலியின் வருகையை அவன் கண்கள் அறிவதற்கு முன்பே அவனின் மற்ற புலன்கள் எப்படி அறிந்து கொண்டது என்பது அவனுக்கு விளங்கவேயில்லை.

பட்டு புடவையில் தேவதையாய் நின்ற அவளை விட்டு அவன் பார்வை அகலவேயில்லை.

ஆனால் அவள் முகம் கோபத்தில் இருப்பதை உடனே அவன் இனம் கண்டு கொண்டான்.

என்ன என்று புரியவில்லை என்றாலும் வெளியே நின்ற அவன், இவளுக்கு உறவாய் இருக்க வேண்டும். அவன் முகத்தில் இருந்த பதற்றம், பயம், அஞ்சலியை வெளியே அழைத்தது எல்லாம் கௌதமிற்கு சரியாய் படவில்லை.

அஞ்சலியின் முகமும் ஏதோ, ‘இருக்க கூடாத இடத்தில்’ இருப்பதை போல் ஒரு விலகல், ஒதுக்கம் காட்டியது.

ஒருவேளை இரவு தான் நடந்து கொண்டது தான் அஞ்சலிக்கு பிடிக்கவில்லையோ என்று ஒரு கணம் அவன் மனதில் பயப்பந்து உருள, அஞ்சலி தான் லிபிட்டிற்குள் இருப்பதை முதலில் கவனிக்கவேயில்லை என்பதை பிறகு தான் கவனித்தான்.

அஞ்சலியின் கண்கள் அந்த லிபிட்டிற்குள் இருந்த இன்னொருவனை எரித்து கொண்டு இருப்பதையும் தான்.

அப்பொழுது தான் கெளதம் முழு கவனம் அவர்கள் மேல் படிந்தது.

அஞ்சலியின் முக சாயலில் உள்ளே பெண்மணி அவள் அன்னையாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டவன், சொன்னதை கேட்டு அஞ்சலியும், லிபிட்டிற்கு வெளியே நிற்பவனும் திகைப்பதை கண்டான்.

அஞ்சலி வேறு வழியில்லாமல் உள்ளே வந்து நிற்பதையும், அவன் மேல் படாமல் நிற்க நகருவதையும், அவன் அஞ்சலி பக்கமே நகர்ந்து கொண்டிருப்பதையும் கண்ட கெளதம் ரத்தம் கொதித்தது.

அஞ்சலி முகம் போகும் போக்கும், அவனின் விகார இளிப்பும் அங்கு நடப்பதை கௌதமிற்கு சொல்லாமல் சொல்லி விட, அவன் உடல் விரைத்து கண்கள் சிவந்தது.

அதே சமயம் மின்சாரத்தால் லிப்ட் நிற்க, அஞ்சலி கவனம் சிதறுவதும், அதை அவன் பயன்படுத்த முன்னேறுவதும் கண்ட கெளதம் உடனே செயல்பட்டான்.

அந்த நாயின் கை அஞ்சலி மேல் படுவதற்குள் அஞ்சலியை பின்னால் இழுத்து, தன்னோடு அணைத்தவன், அவள் இடையில்  கொடுத்து தூக்கி, அவளை தனக்கு பின்னால் விட்டான்.

அவளுக்கு முன் அரணாய், பாதுகாவலனாய், கருப்பு சாமியின் உக்கிரத்தோடு நின்றான்.

லிப்ட் என்ன ஆனதோ என்று மற்றவர்கள் சிறிது முண்டியடித்து முன்னால் நகந்திருக்க, அஞ்சலிக்கு பின்புறம் சென்று அவளை பின்னால் இழுப்பதும், தூக்கி அவனுக்கு பின் வைப்பதும் கௌதமிற்கு சுலபமாய் இருந்தது.

ஒரு கணம் தான் மட்டும் அங்கில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்று ஒரு கணம் நினைத்த கெளதம் இறுகி போய் நின்றான்.

அவனையும் அறியாமல் அவன் கரம் எழுந்து தன்னை அணைத்து கொண்டிருந்த அஞ்சலி கையை, ‘நான் இருக்கேன்’ என்று தட்டி கொடுத்தது.

இதயம் சமர்ப்பிக்கப்படும்.

 

 

 

error: Content is protected !!