(பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளம் (NDSO)-பாலியல் குற்றவாளிகள் குறித்த தேசிய தரவுத்தளத்தை (என்.டி.எஸ்.ஓ) 2018 செப்டம்பர் 20 அன்று அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. கற்பழிப்பு, GANG RAPE , போக்ஸோ மற்றும் ஈவ் டீசிங் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் உள்ளீடுகள் தரவுத்தளத்தில் உள்ளன. தற்போதுள்ள போர்ட்டலில் 2008 முதல் 440,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தேசிய குற்ற பதிவு பணியகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.)
(‘இரண்டு விரல் சோதனை/2 finger testing’ பரிசோதனை மருத்துவர் ஹைமனின் இருப்பு அல்லது இல்லாமை சோதனையை பாதிக்கப்பட்டவரிடம் செய்வது இழிவான, அவமானகரமான, மனிதாபிமானமற்ற செயல் என்று அழைக்கப்படுகிறது. பரிசோதனையின் செயல்முறை அல்லது நோக்கத்தை விளக்க மருத்துவர்கள் தவறிவிடுகிறார்கள்.2013 மே மாதம், இந்திய உச்சநீதிமன்றம் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவருக்கு இரண்டு விரல் சோதனை, ‘தனியுரிமைக்கான உரிமையை மீறுவதாகக்‘ கூறியதுடன், பாலியல் வன்கொடுமையை உறுதிப்படுத்த சிறந்த மருத்துவ நடைமுறைகளை வழங்குமாறு தில்லி அரசாங்கத்திடம் கட்டளையிட்டு இருக்கிறது.)
சில சமயங்களில் நாம் துவளும்போது, ஆபத்தில் சிக்கி மீளும்போது, ஆபத்திலிருந்தே காப்பதற்கும் தேவை ஒரு அன்பான தோள், ‘நான் இருக்கிறேன் என்று ஆதரவு தரும் ஒற்றை பார்வை’ தான்.
அது அஞ்சலிக்குக் கெளதம் மூலம் கிடைக்க, தன்னை மெள்ள மீட்டு கொண்டவள் அவன் முதுகின் மேலேயே தலை வைத்து நின்றாள்.
கௌதமிற்கு அஞ்சலியின் நிலை புரிந்தது. அவளை அணைத்து ஆறுதல் தர வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கான சூழல் அது அல்ல என்று உணர்ந்தவன், தன் இடையை சுற்றி இருந்த அவள் கரத்தை மெல்ல தட்டி கொடுத்தான்.
‘பல பெண்கள் சரியான நேரத்தில் தகுந்த உதவி கிடைக்காமல் பாதிக்கப்படுவதும் உண்டு.
வெளியே செல்லும்போது பார்க்கும் எந்தப் பெண்ணும் நம் வீட்டு பெண்ணாய் நினைத்து, அவளுக்கு அரணாய் நிற்பது என்பது கூடச் சிலரால் மட்டுமே செய்யக்கூடிய செயலாகி இருப்பது வருந்தக்கூடிய விஷயமே.
ஒவ்வொரு பள்ளி, கல்லூரி அருகே பைக்கோடு நிற்கும் ரோடு சைட் ரோமியோகள் மட்டும் அல்ல, ரூபேஷ் போன்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பொது இடங்களில், பேருந்துகளில், ஏன் வீட்டின் உள்ளேயே தங்கள் இச்சையை தீர்த்துக் கொள்ள முயலும் இது போன்ற ஈன பிறவிகளை ஆரம்பத்திலேயே தட்டி வைக்கவில்லை என்றால் நேற்று அந்தப் பெண், இன்று அஞ்சலிபோல் நாளை யாரோ!
நாம் பெற்றால், கூட வளர்ந்தால், நம் ரத்தமாய் இருந்தால் மட்டும் இல்லை…. பாதிக்கப்படும் எல்லா பெண்களும் நம் மகள்களே!…. நம் சகோதரிகளே!….நம் வீட்டு பெண்களே!
இந்த எண்ணம் ஏன் எல்லோருக்கும் வருவதில்லை. சுயநல பேய்களாய் மக்களில் சிலர் ஏன் மாறிப் போனார்கள்… யாருக்கு எது நடந்தால் தனக்கு என்ன, எனக்கோ, என் வீட்டினருக்கோ எதுவும் நடக்கவில்லை தானே!… அப்பா சாமி தப்பிச்சோம்.’என்ற மைண்ட் செட் ஏன் வருகிறது’ என்று சமூகத்தை நினைத்து மனதிற்குள் நொந்து கொண்டு இருந்தான்.
காலையிலேயே அவன் ரவுண்ட்ஸ் போகும் பொது மனோஜ் அவனிடம் தயங்கி தயங்கி பேச வந்தான்.
“என்ன மனோஜ்… முகம் ஒரு மாதிரி இருக்கு… தங்கச்சி காலையில் பூரி கட்டையால் அடிச்சுட்டாங்களா என்ன?”என்றான்.
“இல்லை பிரபா…” என்றவன் மென்று விழுங்கினான்.
“என்னடா சொல்லு…” என்றவன் தான் மொபைல் பார்க்க, மனோஜ் வாயைத் திறக்கவேயில்லை என்றதும் கெளதம் புருவங்கள் சுருங்க, “கம் டு மை ரூம்.” என்றவன் முன்னே செல்ல ஊரில் உலகத்தில் உள்ள எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டே பின் சென்றான் அவன் நண்பன்.
அறைக்குள் வந்ததும், தன் நாற்காலியில் அமர்ந்த மனோஜ் மேலும் தயங்க, “மனோ… எனக்குத் தலைக்கு மேல் வேலை இருக்குயா… ஸ்பீக் அவுட் மேன்.”என்றான்.
“நேத்து… நேத்து… நம் ஹோட்டல்ல திருடன் ஒருத்தன் வந்திருக்கான்.” என்றான் மனோஜ் தயக்கத்துடன்.
“ஓஹ்ஹோ…” என்று தன் மொபைல்லில் கவனமாய் இருந்தவன், “வாட்… இப்போ என்ன சொன்னே மனோ. கம் அகைன்.” என்றான் திகைப்புடன்.
“அங்கே பக்கத்துல திருமண மண்டபம் இருக்குலே… அங்கே திருடன் வந்திருக்கான்…. அப்படி தான் சொல்லியிருக்காங்க…” என்று இழுத்தான் மனோஜ்.
“சொல்லியிருக்காங்க என்றால்… என்ன சொல்ல வரே…” என்றான் கெளதம்.
பெருமூச்சு எடுத்த மனோஜ், “நேத்து ஒரு லேடி… மாப்பிள்ளை வீட்டு சைட்… அவங்க ரெஸ்ட் ரூம் போய் இருக்காங்க.அங்கே எவனோ ஒருத்தன் ஒளிஞ்சி இருந்து அவங்களை, மொலஸ்ட்/molest செய்ய ட்ரை செய்து இருக்கான்.
அந்தச் சமயம் அங்கே வந்த பெண் ஒருத்தங்க, திருடன், திருடன் என்று கத்த நம்ம செக்யூரிட்டி ஆட்கள் அந்தப் பெண்ணின் கணவனுடன் தொறத்தி சென்று இருக்காங்க. பிடிக்க முடியவில்லை….
சிசிடிவி எதிலும் அவன் முகம் பதிவு ஆகவில்லை. திருடன் என்று கத்தின பெண்ணைக் கூப்பிட்டு விசாரித்தோம். அவங்க தான் அவன் திருட வரவில்லை என்றும், பெண்கள் ரெஸ்ட் ரூமில் ஒளிந்து இருந்து உள்ளே வரும் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றான் என்று சொன்னாங்க….
உள்ளே நம்ம லேடி ஸ்டாப் விட்டுச் செக் செய்தோம்…பெண்கள் உடை மாற்றும் அறையில் ஒரு போன் கிடைச்சது.
வெண்டிலேட்டர் ஷாப்ட்டில் போனை ஒளித்து வைத்து, உள்ளே பெண்கள் உடை மாற்றுவதை எல்லாம் அந்த நாய் லைவ் வீடியோ எடுத்து இருக்கான் கெளதம். இது எத்தனை நாளாய் இது நடக்குதுன்னு தெரிலை.” என்று மனோஜ் சொல்லி முடிக்கக் கூடயில்லை அவன் கன்னத்தைப் பதம் பார்த்தது கெளதம் கை.
“நைட் என்னிடம் சொல்வதற்கு என்ன…. ஹோட்டல் என்றால் பெண்கள் வந்து தயங்கும் நிலை இருக்க கூடாது என்றுட தானே செக்யூரிட்டி கூடப் பெண்களை இங்கே அதிகமாய் போட்டு இருக்கோம்…
இதுக்கு தானேடா லட்சம் லட்சமாய் கொட்டி கொடுத்து, செக்யூரிட்டி ஏற்பாடு செய்து இருக்கேன்… நீ சொன்னது என்னன்னு அதன் வீரியம் என்னன்னு தெரியுதா? இது என்ன சின்ன விஷயமா…
நம்மை நம்பி தானேடா இங்கே வந்து தங்கறாங்க, தங்கள் வீட்டு விழாவை இங்கே வந்து பெட்டி பெட்டியாய் கொட்டி கொடுத்துக் கொண்டாடுறானுங்க…. அவங்க பாதுக்காப்பு நம் பொறுப்பு தானேடா!…. இப்படி இவ்வளவு கேர்ல்ஸ்சா இருந்தே!….
இப்பவே நம்ம ஷாப்பிங் மால், ஸ்கூல், காலேஜ், ரிசார்ட், பாக்டரி, மற்ற பொது மக்கள் குறிப்பாய் பெண்கள் கூடும் இடத்தை எல்லாம் செக் செய்யச் சொல்லு.
செக்கிங் ரெண்டு நாளைக்கு ஒரு முறை நிச்சயம் இனி இருக்கணும். ஒரு லேடி ஸ்டாப், ஒரு ஜென்ட்ஸ் ஸ்டாப். ஒன்றாய் வேலை செய்தவர்களாய் இருக்க கூடாது. ஆள் மாற்றிட்டே இருக்கணும்….
ஜோடியா சேர்த்து கூட இதைச் சில வக்கிர ஜென்மங்கள் செய்யும்… இங்கே நடந்தது இனி நம் எந்த இடத்திலேயும் எங்கேயும் நடக்க கூடாது…. கூப்பிடு நேத்து நைட் டூட்டியில் இருந்தவனுங்களை…
அந்தப் பெண் எங்கே… மன்னிப்பு கேட்கணும்.” என்றவன் மனோஜ் தலை குனிய கடுப்பானான்.
“இன்னும் என்னடா…” என்றான் பொத்தென்று தன் நாற்காலியில் அமர்ந்து.
“அந்தப் பெண் அவங்க… நைட் அவங்க கணவனோடு இங்கிருந்து போய்ட்டாங்க டா.” என்றான் மனோஜ்.
“சரி அட்ரஸ் சொல்லு… நேர போய் மன்னிப்பு கேட்டுட்டு வரேன்…” என்றான் கெளதம்.
“இல்லை… இல்லை டா அட்ரஸ் வாங்கி வைக்கலை…. நாளைக்கு இது பெரிய இஸ்ஸு ஆச்சுன்னா நம்ம பெயர் கேட்டுடும்…. அதான் அவங்க கூடக் காண்டாக்ட் எதுவும் வேண்டாம் என்று ….” என்று இழுத்தான் மனோஜ்.
“போடா…. வாயில் பச்சையா வந்துட போகுது…. ஒரு பெண்ணின் மானத்தை விட உனக்கு நம்ம பெயர் தான் முக்கியமா போச்சா… உன்னை எல்லாம்….
இப்படியொரு பிரச்சனை வந்தே இருக்க கூடாது.வந்து விட்டது…அதற்கு முழு காரணம் நம்ம கவன குறைவு ஒன்று தான்…. போடா….” என்றவன் அங்குகூடியிருந்த தன் தொழிலாளர்களுக்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்து விட்டு.
“இப்படி ஒருத்தனுக்கு நீங்க உதவி செய்தீங்க என்றோ, இதே மாதிரி ஈன வேலையை உங்களில் யாராவது செய்வதாய் எனக்கு நியூஸ் வந்தது, சாவே மேல் என்று நினைக்கும் படி வைத்து விடுவேன்…
என்னைப் பற்றி உங்களுக்கே தெரியும்…. சொல்லிட்டு எல்லாம் இருக்க மாட்டேன்.நேரே பனிஷ்மென்ட் தான். தப்பு செய்யறவனை மட்டும் இல்லை, இப்படி தருதலையாய் வளர்த்து இருக்கும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்து விடுவேன்…” என்று ஒரு மணி நேரத்திற்கும் மேல் அவர்களைக் கடித்து குதறி எடுத்தபிறகு விட்டிருந்தான்.
அவன் கோபத்தை கண்டவர்கள், வீட்டிற்கு சென்றதும் தங்கள் மனைவிகள் பக்கத்திலேயே செல்ல அனுமதி நிச்சயம் கேட்பார்கள் போலிருந்தது.
இப்படி தான் பலர் ஷாப்பிங் மால், ஹோட்டல், ரிசார்ட், சினிமா தியேட்டர் கட்டினோமா, நான்கு செக்யூரிட்டி அரேஞ் செய்தோமா, அதிலிருந்து லட்சம் லட்சமாய் வாடகை வந்துச்சா, பெருசா எதுவும் பாதிப்பு இல்லையா அப்போ நான் ரவுண்ட்ஸ், திடீர் செக்கின் எல்லாம் செய்யவே மாட்டேன் என்று அமர்ந்து இருப்பார்கள்.
வரும் முன் காப்போம் என்ற மைண்ட் செட் எல்லாம் மக்களிடம் மட்டும் அல்ல, மக்களை வைத்துத் தொழில் செய்யும் யாரிடமும் இருப்பதில்லை.நடக்ககூடாதது ஒன்று நடந்த பின் ஒரு மணி நேரம் மீட்டிங் போட்டு என்ன பயன்.
‘உடையவன் பார்க்காவிட்டால்…’ என்று பழமொழியே ஒன்று உண்டு.
சில இடங்களில், ‘யுத்தம் செய்’ படத்தில் காட்டுவது போல் சில பெரிய மனிதர்களே இப்படியெல்லாம் நடப்பதும் உண்டு தங்களுக்கு சொந்தமான இடங்களில்.
மனித வக்கிரத்தின் அளவுக்குக் கோல் யாருக்கு தான் தெரியும்?
கெளதம் மாதிரி தங்களை திருத்திக் கொள்ள, இப்படி மீண்டும் நடக்காமல் ஸ்டெப் எடுப்பது வெகுசிலர் தான்.
எப்படி அவர்கள் பாதுகாப்பையும் மீறி இது நடந்தது என்று ஹோட்டலிலும், செக்யூரிட்டி ஆட்களையும் கெளதம் ஒரு வழியாக்கி விட்டுத் தான் லிப்ட் ஏறி இருந்தான்.
அங்கே லிப்ட்டில் தன் கண் முன்னே தன்னின் சரி பாதியான அஞ்சலிக்கே இப்படி ஒரு நிலைமை, அதுவும் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹோட்டல் லிப்ட் என்றவுடன் அவன் கோபம் எல்லை கடந்தது.
அடுத்த நொடி கண்களில் எரிமலை வெடிக்க அவன் முழு கவனம் ரூபேஷ் மேல் திரும்பியது.
‘இவன் யாரு பூஜை வேளை கரடி’ என்று முறைத்து கொண்டிருந்த ரூபேஷ்க்கு, அவன் கோபத்தை பார்த்து உள்ளுக்குள் குளிர் காய்ச்சலே வந்தது என்றாலும்,
‘ஆங்!… இது போல் எத்தனை பேரை பார்த்திருப்பேன். சும்மா முதலில் இப்படி தான் துள்ளுவாளுங்க…. எல்லாம் முடிந்த பின்னால் என்னை விட்டு அகல முடியாது இருந்த எத்தனை பேரை பார்த்திருக்கேன்…’ என்று தெனாவெட்டாக நின்றவன், சட்டென்று கண்ணை இருட்டி கொண்டு வர, எந்த கை கொண்டு அஞ்சலியை தொட முயன்றானோ, அதில் மரணவலி ஏற்பட, அதை தாங்க முடியாதவனாய் அலறிக்கொண்டே கீழே விழுந்தான்.
அவன் கீழே விழுவதற்கு, லிப்ட் நகர்வதற்கு மிக சரியாய் இருக்க, “சார்! பார்த்து நிற்க் கூடாதா சார், பாருங்க தரையில் இத்தனை போர்சாவாய் விழுவீங்க. கை வீக்கத்தை பார்த்தால் கை உடைந்து இருக்கு போல் இருக்கே! முதலில் டாக்டர் கிட்டே போங்க சார்” என்று அவனை கை கொடுத்து கெளதம் தூக்கினான்.
“என்ன ஆச்சு?” என்று மற்றவர் பதற,
“சார், கால் ஸ்லிப்பாகி கீழே விழுந்துட்டார். அடி படாமல் இருக்க கையை எக்கு தப்பாய் ஊன்றியத்தில் கை எலும்பு முறிந்து போய் இருக்கு. டாக்டர் கிட்டே அழைத்து போங்க.” என்றான் கெளதம் சற்றும் அலட்டிக்கொள்ளாமல்.
வேதநாயகம், பிங்கி அவனுடன் கிளம்ப, “அய்யோ! என்ன ஆச்சோ” என்று எண்ணத்துடன் மற்றவர்கள் வெளியேற, எல்லோரும் வெளியேறியதும்,
லிப்ட் கதவை மீண்டும் மூடிய கெளதம், உள்ளே லிப்ட்டில் மேல் தலை வைத்து சாய்ந்து நின்றவளை நோக்கி இரு கைகளையும் அகல விரித்து, ‘வா’ என தலையசைக்க, “கெளதம்!” என்ற கேவலுடன் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் அஞ்சலி.
அழுகையில் அஞ்சலி உடல் குலுங்க, அவளை அணைத்தவாறு அவள் முதுகை தட்டி கொடுத்தவன், உச்சந்தலையில் தன் இதழ் பதித்தான்.
“ஏய் பேபி!… சாரீல பார்க்க அப்படியே தங்கசிலையாட்டம் இருக்கே!
வாடி என் தங்கசிலை…
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல ஆஹா” என்று பாடி வைக்க அழுகையுடன் நிமிர்ந்து கௌதமை பார்த்து முறைத்தாள் அஞ்சலி.
“கோபக்கார கிளியே! கோவக்காரக் கிளியே!
எனைக் கொத்தி விட்டுப் போகாதே..
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…ஏ” என்று அவன் மீண்டும் சீண்டி பாட, அவன் தன் கவனத்தை திசை திருப்ப தான் அப்படி செய்கிறான் என்பது புரிந்த அஞ்சலியின் முகத்தில் புன்னகை வந்தது.
அஞ்சலி முகத்தை பிடித்து, கைக்குட்டை எடுத்து கண்ணில் கலைந்திருந்த மை எல்லாம் நிதானமாய் துடைத்து எடுத்தான்.
“ஆர் யு ஒகே பேபி?” என்றவன் அஞ்சலி தலை அசைக்க,
“இப்போ எதுக்கு நீ அழுதே சொல்லு?” என்றான் கைகளை மார்பின் குறுக்கே கட்டி, கால்களை அகல விரித்து.
“அவன்… அவன்… அந்த நாய்….” என்று அஞ்சலி சொல்ல வந்ததை சொல்ல முடியாமல், கௌதமை பார்க்க முடியாமல் தலையை வேறு புறம் திருப்பி கொண்டாள்.
அவன் கன்னத்தை பிடித்து தன் புறமாய் திருப்பியவன்,
“பேபி! அந்த சதை வெறி பிடிச்ச பிண்டம் உன்னை தொட வந்தான்… ஒரு பெண்ணை அவள் சம்மதம் இல்லாமல் தொடும் அவன் தான் தலைகுனிய வேண்டும், அழ வேண்டும்…
குற்றம் புரிந்த அவனே, ‘ஆமா நான் தான் செய்தேன்’ என்று அப்படி நிக்கிறான், நீ எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்கே….
தூக்கி போட்டு அவனை நாலு மிதி மிதிப்பதை விட்டு?” என்றான் கெளதம்
“இதே டயலாக் தான் நேத்து இரவு ஒரு பெண்ணிடம் சொன்னேன்…. வாய் வார்த்தையா சொல்லும் போது நல்லா தான் இருக்கு. ஆனால் நமக்கே என்று நடக்கும் போது தான்..” என்றாள் அஞ்சலி ஒரு அருவெறுப்புடன்.
“சரி அவன் அப்படியே தொட்டால் தான் என்ன?” என்றான் கெளதம்
“கெளதம்!…” திகைப்புடன் வெளிவந்தது அஞ்சலியின் குரல்.
“நான் சரியாய் தான் கேட்கிறேன் அஞ்சலி. ஒரு ஆண் உன்னை தொட்டு இருந்தால் கூட, நீ குனி குறுகி நின்றிருக்க வேண்டியதில்லை என்னும் போது, உன்னை தொட வந்த இந்த xxx ஆணே இல்லையே!
ஒரு பெண்ணிற்கு குழந்தை கொடுத்து விட்டாளோ, Ability to rock a bed என்று இருப்பவன் எல்லாம் ஆணாகி விட முடியாது அஞ்சலி.
இந்த மாதிரி ஈன பபுத்தி உள்ள நாய்களுக்கு செக்குனு தெரியுமா இல்லை, சிவலிங்கம் என்று தான் தெரியுமா…. நிக்க வச்சு இவனுங்க தோலை எல்லாம் அப்படியே உரிக்கணும்.
இப்படி ஒரு சாக்கடை மேல் பட்டால் போய் டெட்டோல் போட்டு குளி. அவன் தொட்டு விட்டால் உடனே நீ தவறானவள் என்றாகி விடுமா என்ன!
கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்டது இல்லை என்பது தெரியும் தானே! உன் உள்ளம் தூய்மையாய் இருக்கும் போது இதற்கெல்லாம் நிலைகுலைந்து போய் நிற்பாயா?
இன்னொரு உயிரையே உலகிற்கு கொண்டு வரும் அமிர்த கலசமடீ பெண் இனம். இறைவனின் உன்னத படைப்பு. அதனை சிறுமை படுத்த எந்த நாயால் முடியும் சொல்லு?
அவன் குரல்வளையை கடிச்சு துப்பி இருக்க வேண்டியவ இப்படி தான் குனிகுறுகி நிற்பாயா?” என்றான் கெளதம் ரௌத்திரமாக.
“பேச இதெல்லாம் நல்லா தான் இருக்கு…. நானும் மேடையேறி இதை எல்லாம் பேசியவள் தான்.” என்றாள் அஞ்சலி எங்கோ பார்த்து கொண்டு.
“பேசி என்ன பயன்!… படித்த நீயே உன் உடம்பின் மேல் மரியாதை இல்லாமல் தானே இருக்கிறாய்… மரியாதை இருந்தால் இப்படி குனி குறுகி நிற்க மாட்டாய் அஞ்சலி.
உன் உடலின் ஒரு அங்கம் இது, கை கால் போல். குழந்தை பசியாற என்று அதற்கு ஏற்றவிதமாய் இறைவன் படைத்தது இருப்பது. கர்வ பட வேண்டிய விஷயம். பூமிக்கு வரும் சிசு பசியாற இறைவன் கொடுத்த வரம் அது. அது காம பொருள் அல்ல. தாய் மண்ணும் விளை நிலமும் எந்த அளவு உயர்ந்ததோ அதை விட உயர்ந்தது ஒரு பெண்ணின் உடல் உறுப்பு…. நிமிர்ந்து நில்லுடீ .
கோயில் கருவறை தெரு நாய் தீண்டுவதால் அதன் புனிதத்தை இழந்து விடுமா என்ன! உன் கை, காலை யாராவது மிதித்தால் இப்படி தான் ரியாக்ட் ஆவாயா
‘அவன் தொட வந்தான், அப்படியே ஷாக் ஆகிட்டேன்’ என்று டயலாக் விட்டுட்டு இரு.” என்று அவன் மேலும் ஏதோ சொல்வதற்குள் லிப்ட் கதவு திறக்க அங்கு பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தான் விஷ்ணு.
தங்கையை முழுதாய் பார்த்த உடன் தான் விஷ்ணுக்கு நிம்மதியே வந்தது.
ரூபேஷ் அலறியபடியே வலி தாங்க முடியாதவனாய் மயங்கி இருக்க, ரெண்டு பேர் தூக்கி போய் தான அவனை தேவநாயகம் காரில் ஏற்றி விட்டு வந்தார்கள்.
இதையெல்லாம் படிகளில் வெகு வேகமாய் ஓடி வந்து, அஞ்சலி வர காத்து நின்ற விஷ்ணு பார்த்து, என்ன ஆனது என்று புரியாமல், குழம்பி போய் ரூபேஷ்சை தூக்கி கொண்டு போனவர்களுடன் சென்றவன் தன் அன்னை தந்தையிடம் கேட்க,
“சடன் ஜெர்க் லிப்ட்…. எங்களுக்கே ஒரு மாதிரி தான் இருந்தது. ரூபேஷ் தம்பி ஒற்றை காலில் நின்று இருந்தார் போலிருக்கு. பாலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்துட்டார். விழுந்த வேகத்தில் கையை கீழே ஊனி இருக்கார்… எலும்பு முறிந்து விட்டது போலிருக்கு.” என்றவர்கள் உறவினர் யாரோ வர அவர்களை கவனிக்க சென்றனர்.
‘அது எலும்பு முறிவு இல்லை… எலும்பு உடைப்பு’ என்று அவன் கையை விட்டு எலும்பு துருத்தி கொண்டு வெளியே தெரிந்த விதத்திலேயே விஷ்ணுவுக்கு புரிந்து போனது.
பலம் கொண்ட மட்டும் கையை பிடித்து திருப்பவில்லை என்றால் ஒழிய, சும்மா கீழே விழுவதற்கெல்லாம் அப்படி எலும்பு உடைய வாய்ப்பேயில்லை என்பதை புரிந்தவன் திருமண மண்டபம் முழுவதும் கண்ணை ஓட்ட, அஞ்சலி அங்கு எங்குமே இல்லை என்றதும் மீண்டும் லிப்ட் அருகே ஓடி பட்டன் அழுத்தினான்.
லிப்ட் திறந்தால் தானே!
சில பல வினாடிகள் கழித்து தான் லிப்ட் ஓபன்ஆனது .
“என்னடீ ஆச்சு? ஏதாவது சிலுமிஷம் செய்தான் என்று கையை உடைச்சுட்டியா என்ன?” என்றான் விஷ்ணு.
அவன் தங்கை செய்ய கூடியவள் தான் என்பதால் திகைப்புடன்.
ஏற்கனவே ஒரு முறை பென்சிலை ரூபேஷ் கையில் சொருகி விட்டு, ‘இப்படியா கவன குறைவாய் இருப்பீங்க….நாளைக்கு இது கழுத்தில் சொருகி கொண்டால் என்ன ஆவது…ரொம்பவும் ஆக்சிடெண்ட் ஆகுது உங்களுக்கு….கவனமாய், பார்த்து பதமாய் இருந்துக்கோங்க.”என்று ரூபேஷ்சுக்கு வார்னிங் கொடுத்தவள் தான் அஞ்சலி.
மற்ற சமயங்களில் ரூபேஷ் ஏதாவது செய்வான் என்று விழிப்பாய் இருப்பவள், லிப்ட் தானே, இத்தனை பேர் மத்தியில் என்ன செய்து விடும் அந்த நாய் என்று சற்று அஜாக்கிரதையாக இருந்து இருக்க, லிப்ட் நின்றதால் கவனமும் சிதற எப்பொழுது எந்த பெண்ணை என்ன செய்யலாம் என்று வெறி பிடித்து அலையும் ரூபேஷ் அந்த சமயத்தை தனக்கு சாதகமாய் பயன்படுத்தி கொள்ள முயன்றான்.
அஞ்சலி எதுவும் செய்யும் முன், ரூபேஷ் எண்ணம் ஈடு ஏறி இருக்கும் தான் ஆனால் அங்கே கெளதம் தக்க சமயத்தில் ரூபேஷ் கை மேலே படும் முன் அஞ்சலியை காத்து விட்டான்.
இருந்தாலும் அங்கே கெளதம் வந்திருக்கவில்லை என்றால் …என்ன நடந்து இருக்கும் என்ற எண்ணமே அஞ்சலி போன்ற துணிச்சலான பெண்ணையும் சற்று புரட்டி போட்டு இருந்தது.
“அதை தான் செய்ய வேண்டும் என்று இவ கிட்டே சொல்லிட்டு இருந்தேன். அதை செய்வதை விட்டு, அவன் தொட வந்தான் என்று மூக்கை சிந்திட்டு இருக்கா பைத்தியக்காரி.
இன்னொரு தடவை இப்படி ஒன்றும் இல்லாத விசயத்திற்கு எல்லாம் உன் கண்ணில் கண்ணீர் வந்துச்சு ஓங்கி ஒன்று கொடுத்து விடுவேன்…. உன் பெண்மை என்பது தலைகுனிய வேண்டிய விஷயம் இல்லை. நிமிர்ந்து நில் அஞ்சலி.” என்றான் கெளதம்.
அவன் பேசுவதை கேட்டு அதிர்ந்த விஷ்ணு கண்களில் பட்டது அது மட்டும் இல்லை, கெளதம் வெள்ளை சட்டையில் இருந்த குங்கும கரையும், கண்ணீர் கரையும் தான்.
“அவனை அப்படியேவா விட்டிங்க….”என்றான் விஷ்ணு கோபத்துடன்.
“தனியா மாட்டி இருந்தான் என்றால் வச்சி செஞ்சி இருப்பேன்…. என்னை இதற்கு கொன்றே விடுங்கள் என்று கதறும் வகை செய்து இருப்பேன்…அவன் குடும்பம் வேறு இருந்தது.எங்களுக்கும் தெரிந்தவராய் போய் விட்டார் தேவா அங்கிள்.அவர் முகத்திற்காக தான் அவனை கை உடைப்புடன் விட்டேன்.இனி ஆறு மாதத்திற்கு ஒரு கை அவனுக்கு யூஸ் இல்லை…ஒவ்வொரு கணமும் உயிர் போகும் அந்த வலி அவனுக்கு தான் செய்த தவறை இனி செய்ய கூடாது என்று நினைவு படுத்திட்டே இருக்கும்….
நாலு பேர் இதை மாதிரி செய்தால் அடுத்தவன் தவறு செய்யணும் என்ற நினைப்பே கூட எழாமல் இருக்கும்…xxx.”என்று கெளதம் பச்சையாய் இறங்க அண்ணனும் தங்கையும் ஹை சொசைட்டி ஆளான கௌதமிற்குள் பக்கா லோக்கல் முனியப்பன் இருப்பதை கண்டு பபுன்னைகைத்தார்கள்.
கெளதம் யார் என்று சட்டென்று நினைவுக்கு வர, “ஹாய் நீங்க கெளதம் பிரபாகர் தானே!. ஐ ஆம் விஷ்ணுசந்தர். அஞ்சலி அண்ணா.” என்றான் என்று கை நீட்டினான்.
‘யப்பா! வயத்தில் பாலை வார்த்தே மச்சான்.’ என்று வையை காது வரை விரித்து இளித்த கெளதம், அவன் கையை பிடித்து குலுக்கோ குலுக்குன்னு குலுக்க, அஞ்சலிக்கு புன்னகை வந்தது.
‘இவன் எதுக்கு இப்போ நம்ம கையை உடைக்க ட்ரை செய்யறான்…”என்று பேய் விழி விழித்தான் விஷ்ணு.
விஷ்ணு அஞ்சலிக்கு யார் என்று அதுவரை குழம்பி, திணறி கொண்டு இருந்தான் கெளதம் என்று யார் சொல்வது.
இவர்கள் பேசி கொண்டே தங்கள் பெற்றோர்களை நெருங்க, அங்கே அவர்கள் ஏற்கனவே குடும்ப நண்பர்களாய் இருந்தனர்.வெகு நாளைய நட்பு என்று தெரிந்தது.தொடர்பு இல்லாமல் இருந்தவர்கள் தங்கள் நட்பை, உறவை மீண்டும் புதுப்பித்து கொண்டார்கள்.
‘பால் கிடங்கையே பார்த்து விட்ட பூனை’ போல் இருந்த கௌதமை கண்டு அஞ்சலிக்கு சிரிப்பு தான் வந்தது.
அதன் பிறகு ஒன்றாகவே அமர்ந்து, பேசி, சிரித்து, சாப்பிட்டு, கண்டிப்பாக அடிக்கடி வீட்டிற்கு வந்து போக வேண்டும் என்று அன்பு கட்டளைகள் பரிமாறி கொண்டார்கள்.
கெளதம் குடும்பத்தை வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டு பாண்டியன், ஹேமா, விஷ்ணு உள்ளே சென்று விட, வாயிலை பார்த்தவாறே நின்றாள் அஞ்சலி.
தன்னுயிர் பிரிவதை
பார்த்தவர் இல்லை என்னுயிர்
பிரிவதை பார்த்து நின்றேன்
நான் என்னுயிர் பிரிவதை
பார்த்து நின்றேன்
என்னுடனே எந்தன்
பூ உடல் வாழும் உன்னுடனே
எந்தன் பொன்னுயிர் போகும்
தெய்வத்தை
நினைத்தேன் தேரென்று
வளர்ந்தேன் தென்றலை
நினைத்தே பூவென்று
மலர்ந்தேன்
தேரென்றும்
இல்லை பூவென்றும்
இல்லை கண்ணீரில்
காலம் செல்ல வேறென்ன
வேண்டும் கண்ணீரில் காலம்
செல்ல வேறென்ன வேண்டும்
மன்னனை
நினைத்தே மாளிகை
அமைத்தேன் வள்ளலை
நினைத்தே மையலை
வளர்த்தேன்
மாளிகை இல்லை
மன்னனும் இல்லை
கண்ணீரில் காலம் செல்ல
வேறென்ன வேண்டும்
கண்ணீரில் காலம் செல்ல
வேறென்ன வேண்டும் ‘
‘என்று கெளதம் பிரிவை தாங்க முடியாதவளாய் தவித்து போய் நின்று இருந்தாள் அஞ்சலி.
அது நிரந்தர பிரிவு இல்லையென்றாலும் எதிர்காலத்தில் நடக்க போவதை அஞ்சலி மனம் அப்பொழுதே உணர்ந்ததோ என்னவோ, கலக்கத்துடன் நின்றாள்.
காரில் ஏற போகும் கடைசி நிமிடம் திரும்பி பார்த்த கெளதம் கண்களில் இவள் நிற்கும் நிலை தெரிய, அதே நிலையில் இருந்த அவனும் தன் கண்களை அழுந்த மூடி, ‘வேண்டாம் வருத்த படாதே!’ என்று என்று தலை ஆட்டினான்.
அஞ்சலி கண்கள், ‘கங்கையாய் பெருக்கெடுக்கவா?’ என்று கேட்டு நிற்க, அவளை சமாதானம் செய்ய சட்டென்று கண் அடித்தவன், உதடு குவித்து அங்கிருந்தே ஒரு முத்தத்தை அனுப்பி வைக்க, அஞ்சலிக்கு மூச்சடைத்து.
‘திருடு! என்ன வேலை செய்யறான் பாரு… சுத்தி ஆளுங்க இருக்காங்களே என்று விவஸ்தை இருக்கா பாரு.’ என்று அஞ்சலி அவனை முறைக்க, புன்னகையுடன் தலை அசைத்து விடை பெற்றான், அவள் உயிரோடு தன் உயிரை அஞ்சலியிடம் கொடுத்து
சொன்னால் தான் காதலா!
அங்கு காதல் சொல்ல படாமலே இதயங்கள் பறி மாறி கொள்ள பட்டு இருந்தது.
புத்தம் புது காதல் மலர் அங்கே பூத்து இருந்தது.
ஆனால் எதிர்காலத்தில் வீச போகும் சூறாவளியை அந்த மலர் எதிர்த்து நின்று உதிராமல் இருக்குமா?
‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே
என் நெஞ்சில் ‘-காரில் பிளேயர் பாட அதனுடன் சேர்ந்து பாடி கொண்டே வண்டி ஓட்டி கொண்டிருந்த மகனை கண்ட பெற்றோர் சத்தமாய் சிரித்தனர்.
“யப்பா!… நல்லவேளை காவ்யா புண்ணியம் கட்டிக்கிட்டா. எங்கே அந்த பிள்ளையார், ‘எங்க அம்மா மாதிரி ஒரு பெண் கிடைக்கட்டும்’ என்று அறுபதாம் வயதில் கூட திருமணமே ஆகாமல் இருந்து விடுவியோன்னு ரொம்ப கவலை பட்டேன்.” என்றார் முரளி நக்கலாக.
தந்தை அப்படி சொன்னதும் சட்டென்று காரை ஓரம் கட்டிய கெளதம் அவர்களை திரும்பி பார்த்தான்.
“அப்பா!…” என்ற மகனின் திகைப்பு, அவர்களுக்கு மேலும் சிரிப்பை தான் வரவழைத்தது.
“அப்போ அந்த பெண்ணை உனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு தானே கெளதம்!” என்றார் ரேணுகா.
“அடி எவடீ நீ… அதான் சார் கை உடைப்பு எல்லாம் ஹீரோயினிக்காக செய்ததை பார்த்தே தானே!… சென்னையின் தண்ணீர் பஞ்சத்திற்கு, உன் மவன் நயகராவை இங்கேயே கொண்டு வந்துட்டான்.
நான் கூட இவன் விட்ட ஜொள்ளுக்கு, கப்பலையே ஆர்டர் கொடுக்க வேண்டி இருக்குமோன்னு யோசித்தேன்.” என்றார் முரளி.
மகன் அசடு வழிந்து முகம் சிவந்து வெட்கப்பட, “ஐயோ! இவன் வெட்கப்படறான் முரளி… அய்யோ! எப்படி இருந்தவன் இப்படி ஆகிட்டானே.” என்றார் வைரவேல்.
“வாங்க போய் அண்ணா கிட்டே பேசிட்டு வருவோம். இத்தனை நாள் தான் இவன் ரொம்ப பிகு பண்ணிட்டு ஷோ காட்டிட்டு இருந்தான். திரும்பவும் முருங்கை மரம் ஏறினாலும் ஏறும் இந்த வேதாளம். அதற்குள் நிச்சயம் திருமணம் முடித்து விடலாம்.” என்றார் ரேணுகா.
“ஏன் யா…உங்களுக்கு ஓட்ட நான் தான் கிடைச்சேனா! இப்போ தான் லவ் வந்திருக்கு. இதுவும் ரொம்ப நல்லா தான் இருக்கு. லெட் மீ என்ஜோய் திஸ் பீலிங்.
அதற்குள் ஏன் மேரேஜ் என்று ரஷ் அப் செய்யறீங்க? இன்னும் நான் அவ கிட்டே என் லவ்வை சொல்லவேயில்லை. அதற்குள் பிள்ளைக்கு lkg அட்மிஷன் வரை போவீங்க போல் இருக்கே.” என்றான் கெளதம்.
அது தான் அவன் செய்த மிக பெரிய தவறு. அவன் எடுத்த அந்த முடிவு, அஞ்சலியை அவனுக்கு இல்லாமல் செய்து விட்டது.
‘அப்பொழுதே பெற்றோர் பேச்சை கேட்டு இருந்தால் விபரீதம் நடப்பதற்குள் அஞ்சலி என் மனைவி ஆகி இருப்பாளே.’ என்று பலமுறை எண்ணி வருத்தியதை அன்றும் ராகேஷ் வீட்டில் வருந்தியவாறு நின்றான்.
“இல்லை கண்ணா… சொல்வதை கேளு. வேதநாயகம் அய்யா அவர்களுக்கு அஞ்சலியை அந்த ரூபேஷ்க்கு கேட்கும் எண்ணம் இருப்பது ஊர் அறிந்த விஷயம்.
இன்னும் சில நாளில் அதை பற்றி பேச இருப்பதாய் கேள்வி. அட்லீஸ்ட் நிச்சயம் செய்துடலாம்.” என்றார் வைரவேல்.
ரூபேஷ் என்ற பெயரே கெளதம் கோபத்தை கிளற, மறுநாள் முகுர்த்தம் இருப்பதால் அஞ்சலி வீட்டில் பெண் கேட்க நாளையே போகலாம் என்று முடிவாகி அதற்க்கு முதலில் வடபழனி முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று அந்த காரில் தீர்மானம் ஆனது.
அதே சமயம் அன்று மாலை நடந்ததை நினைத்து பார்த்து துடித்து கொண்டிருந்தாள் அஞ்சலி.
தான் எடுத்த முடிவு எப்படி விஷ்ணு, தனு வாழ்க்கையை புரட்டிபோட்டு இருக்கிறது என்று தன்னையே நொந்து கொண்டாள்.
ஆம் விஷ்ணு, தனுவை ஐந்து வருடங்களுக்கு மேலாக காதலிக்கிறான். ஒரு இன்டெர் காலேஜ் மீட்டில் தனுவை கண்டு காதலிக்க ஆரம்பித்து இருந்தான்.
அது அஞ்சலிக்கு தெரிய வர, உடனே திருமணம் என்று குதித்தாள்.
“இல்லைம்மா… உன்னை போல் அவளும் இப்போ தான் ஸ்கூல் முடிச்சி இருக்கா. மனதளவில், உடல் அளவில் அவ இன்னும் வளரணும்.
நான் ஒரு டாக்டர்… இப்படி உடல் அளவில் வளராத நிறைய சின்ன குழந்தைகளுக்கு சிறு வயதில் திருமணம் செய்து அவங்க பிள்ளை பெரும் போது நிறைய காம்ப்ளிகேஷன் ஆவதை பார்த்து இருக்கேன்.
தன் காலில் சுயமாய் அவள் நின்றால் தான் ஒரு மனதைரியம் வரும். என் காதல் அவளுக்கு பக்கபலமாய் இருக்கணுமே தவிர, அவள் சிறகுகளை உடைப்பதாய் இருக்க கூடாது இல்லையா! அவ படிக்கட்டும்.
நானும் இன்னும் டாக்டர் பட்டம் வாங்கவில்லை. ஒரு வேலையில் செட்டில் ஆகணும். அப்பா, அம்மா கையை நான் ஒரு வயதிற்கு மேல் எதிர்ப்பது என்பதே தப்பு.
இதில் என் மனைவி வாங்கும் பொட்டை அவ பெற்றோரோ, என் பெற்றோரோ வாங்கி கொடுத்தார்கள் என்றால் கூட நான் கணவனாய் இருக்க தகுதி உடையவன் தானா சொல்லு. படிக்கும் வயதில் காதல் வர கூடாது தான்….ஆனால் வந்து விட்டது அஞ்சலி. “என்றான் விஷ்ணு வருத்தத்துடன்.
“அட!… நீ என்ன அண்ணா இத்தனை நல்லவனாய் இருக்கே… அதது ஸ்கூல்லில் லவ் லெட்டர் எல்லாம் கொடுக்க ஆரம்பித்து விட்டாங்க…இன்னும் இப்படி அம்மாஞ்சியா இருக்கே!..”என்றாள் அஞ்சலி கிண்டலாக.
“அஞ்சுமா… நான் அம்மாஞ்சியா இருக்கேன்னா என்று எனக்கு தெரியாது… ஆனால் பெண்மையை மதித்து கொண்டு இருக்கிறேன் கண்ணம்மா… நானும் ஒரு பெண்ணோடு வளர்ந்தவன் தான்.
பள்ளி செல்லும் பிள்ளையிடம் காதல் வந்தால் அது எல்லாமே என்ன உயர்வு என்ற எண்ணமா உனக்கு… அதை விட மகா கேவலம் வேறு எதுவும் இல்லை.
நீ சொல்வது மிகவும் வருந்த கூடிய விஷயம் என்று உனக்கு புரியவில்லையா கண்ணா… ஸ்கூல் வயசு எல்லாம் காதலிக்கும் வயசா!…
தேவையான பாலியல் கல்வி பற்றி விழிப்புணர்வு, ஏற்கனவே ஹார்மோன் கொதித்து கொண்டு இருக்கும் பிள்ளைகளுக்கு கொடுக்காத பெற்றோர்களும், பள்ளிகளும் தான் பள்ளி ரெஸ்ட் ரூமில் குழந்தை பிறக்க எல்லாம் காரணம்.
காதலுக்கும் காமத்திற்கும் கூட வித்தியாசம் தெரியாத வயசு அஞ்சலி இது. உன்னத காதல் என்று நினைத்து கொண்டு பள்ளி படிக்கும் சில பெண்கள் எவனையோ ஒரு தருதலையை நம்பி எல்லாம் ட்ரெயின் ஏறி விடுகிறார்கள்.
தான் செய்வது மட்டும் தான் சரி என்று ஓவர் maturity உடன் பிள்ளைகள் இருக்கும் வயது.
மார்க் குறைகிறது, பிள்ளைகளின் கவனம் சிதறுகிறது என்று தெரிந்தாலே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தோழர்களாய் மாறி விட வேண்டிய நேரம் இது. தேவை என்றால் கொன்செல்லிங் கூட எதுவும் ஆபத்தாய் நடப்பதற்கு முன்பே கூட்டி சென்று விட வேண்டியது முக்கியம்.
இதை எல்லாம் என் தங்கையாய் இருந்து கொண்டு ஆதரிக்காதே அஞ்சுமா.
காதல் ஒன்றும் ஒரு நாள் கூத்து இல்லைம்மா… ஆயிரம் காலத்து பயிர். நாம் எடுக்கும் முடிவு ரெண்டு குடும்பத்தை மட்டும் அல்ல வருங்கால சந்ததியையும் பாதிக்கும். இந்த தெளிவு இந்த கால சந்ததியிடம் வெகு குறைவு.
தெளிவான முடிவு எடுக்க எல்லோரும் தவறும் போது தான், ‘விக்கிரமாதித்யன் வேதாளம் கதையில் வரும் பதில் சொல்ல முடியாத கடைசி கதை போல், அம்மாவை மகனும், மகளை அப்பாவும் என்று வந்து நிற்கும்.’
இன்னும் காலம் இருக்கு. நான் என் தனுவிற்காக வெயிட் செய்யறேன் அஞ்சலி… அவ படிச்சி முடிச்சி, வேலைக்கு போய் நாலு பேருடன் பழகட்டும்….
வேலைக்கு என்று சென்று நாலு காசு சம்பாதிக்கும் போது தான் ஒரு நிறைவு வரும். படிச்ச படிப்புக்கும் அர்த்தம் இருக்கும். ” என்று விஷ்ணு தனுகாக முடிவு எடுக்க, அதை பெற்றோரின் கவனத்திற்காவது கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று காலம் கடந்து யோசித்து என்ன பயன்!
‘அன்றே சொல்லியிருந்தால், இந்த குழப்பம் எல்லாம் நடந்து இருக்காது தான்.’ என்று காயத்திரி வீட்டில் யோசித்து கொண்டிருந்த அஞ்சலியின் மனம் கடந்த காலத்திற்குள் மீண்டும் சென்றது.
தர்சினி திருமணம் முடிந்து அவளை மாப்பிள்ளை வீட்டில் இரவு சடங்கிற்கு விட்டு வர பாண்டியன், ஹேமா கிளம்பி கொண்டு இருந்தனர்.
அஞ்சலியையும், விஷ்ணுவையும் அவர்கள் வீட்டில் விட்டு, பிள்ளைகளுக்கு தேவையானதை செய்து விட்டு தயாராகி கொண்டிருந்தனர்.
நாலு தெரு தாண்டி செல்வதற்கு அத்தனை அலம்பல் செய்து கொண்டிருந்தனர் அவர்கள்.
ஹேமா தயாராகி வர காத்திருந்தார் பாண்டியன். ஹால் சோபாவில் அமர்ந்திருந்த அவரை நெருங்கினாள் அஞ்சலி.
“அப்பா!… இன்னைக்கு மீட் செய்தோமே முரளி அங்கிள் அவங்க உங்களுக்கு பெஸ்ட் ப்ரெண்டாபா?” என்று அவள் அவரருகில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி.
அவர் ஒரு அரை மணி நேரத்திற்கு, ‘முழுகாத ஷிப் எங்க பிரெண்ட்ஷிப்’ என்று கதை கதையாய் அளந்தார்.
“ஒகே பா… அப்போ பிரெண்டா இருக்கும் நீங்க இன்னும் க்ளோஸாக மாறலாமே! அவங்க பெண் தனுவை நம்ம விஷ்ணுவுக்கு கேட்டு பாருங்களேன்.” என்றாள் அஞ்சலி.
பாண்டியனுக்கும் ஹேமாவுக்கும் இது பிடித்து இருந்தாலும், முரளி குடும்ப வளம் அவர்களை யோசிக்க வைத்தது.
“இல்லை மா… அவங்க கோடீஸ்வரங்க. கோடீஸ்வர சம்மந்தம் தான் எதிர்பார்ப்பாங்க.” என்று இழுத்தார் பாண்டியன்.
“அப்பா கேட்டு பார்ப்போம் அப்பா. கேட்பதால் என்ன குறைந்து விட போகிறது சொல்லுங்க…. பொண்ணுன்னு இருந்தா நாலு பேர் கேட்பாங்க தானே!
இப்போ என்னையே எத்தனை கேட்டு வருவதாய் சொல்லியிருக்கீங்க, வரும் எல்லோருக்கும் என்னை தூக்கி கொடுக்க முடியுமா என்ன?
அதே போல் தான் கேட்டு பார்ப்போம்…. பிடித்து இருந்தால் கொடுக்கட்டும்.” என்று அஞ்சலி சொல்வதும் சரியாய் பட்டது.
“என் மகளுக்கு எவ்வளவு அறிவு பார்த்தியா ஹேமா? இந்த யோசனை நமக்கு ஏன் வராமல் போனது?” என்று பாண்டியன் மகிழ, ஹேமாவும் அதை ஒத்து கொண்டார்.
அவர்களுக்கு எங்கே தெரிய போகிறது மகள், ‘பக்கத்து இலைக்கு பாயசம் போடுங்கபா’ என்று தன் இலைக்கு வழி செய்து கொண்டிருக்கிறாள் என்பது.
“சரி மா போனில் எல்லாம் கேட்க வேண்டாம். பிரீயா இருக்காங்களா என்று கேட்டுட்டு காலை கிளம்புவோம். நேரா பார்த்து பேசி விடுவோம். நாளை காலை நீங்க ரெண்டு பேரும் தயாராய் இருங்க.
நாங்க தர்சி வீட்டில் இருந்து வந்திடறோம்.நேரா வடபழனி முருகன் கோயிலுக்கு போய்ட்டு அங்கியிருந்து முரளி வீட்டுக்கு போகலாம்.” என்றார் பாண்டியன்.
அழகாய் கனவில் மிதந்தது அங்கு மூன்று உள்ளம்.
கெளதம், அஞ்சலி, விஷ்ணு ஒரு பரபரப்புடன் மறுநாளை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தார்கள்.
பாண்டியன், முரளியிடம் பேச அவர்கள் வடபழனியில் இருப்பது தெரிந்து அவர்களும் அங்கே தான் இருக்க, கோயிலுக்குள் இரு குடும்பமும் சந்தித்து கொண்டது.
மஞ்சள் நிற அனார்கலி சுடிதாரில், ‘மஞ்சக்காட்டு மைனாவாய்’ இருந்தவளை, ‘கொஞ்ச முடியலையே!’ என்ற பெருமூச்சு கிளம்பியது கௌதமிடம் இருந்து.
மீண்டும் ரகசிய விழி தேடல்கள், பார்வை பரிமாறல்கள், கண்களால் பேசி கொள்வது, சீண்டி கொள்வது என்று காதலர்களுக்கு உரித்தான அழகான விளையாட்டு அங்கு அரங்கேறியது.
“உங்களை பார்க்க தான் கிளம்பிட்டு இருந்தோம். இங்கே வந்துட்டு உங்க வீட்டுக்கு வரலாம் என்று.” என்றார் முரளி.
“நாங்களும் இங்கே தரிசனம் செய்துட்டு உங்க வீட்டுக்கு தான் வருவதாய் இருந்தோம்.” என்றார் பாண்டியன்.
“என்ன விஷயம் சொல்லு.” என்றார் முரளி.
“நீ சொல்லு பா…” என்றார் பாண்டியன்.
இப்படியே நண்பர்கள் விளையாடி கொண்டிருக்க,
“அங்கிள் நான் சொல்றேன்” என்று உள்ளே புகுந்தாள் அஞ்சலி.
இப்படியே விட்டால் வேலைக்கே ஆகாது என்று.
‘அட! நம்ம தான் பாஸ்ட் என்று பார்த்தா, நம்ம பேபி இன்னும் பாஸ்ட்டா இல்லை இருக்கா’ என்று அதற்கும் லிட்டர் கணக்கில் ஜொள் விட்டது கெளதம் மனம்.
“தாத்தா, அங்கிள், ஆன்ட்டி உங்க மக தனுவை எங்க அண்ணன் விஷ்ணுசந்தருக்கு பெண் கேட்டு வந்திருக்கோம். டாக்டர்ராக இருக்கார். நல்லவர், வல்லவர்.
உங்க பெண்ணை வெங்காயம் கூட உரிக்க விடாமல் அதையும் அவனே உரித்து, சமையலும் செய்து, ஊட்டியும் விட்டுடுவான்.” என்று அஞ்சலி பெண் கேட்க, கெளதம் குடும்பம் திகைத்தனர்.
அவர்கள் இவளை பெண் கேட்க வந்திருக்க, அஞ்சலி அவர்கள் மகள் தனுவை பெண் கேட்டு இருந்தாள்.
கெளதம், ‘எனக்கு இந்த எண்ணம் தோன்றவேயில்லையே! தங்கைக்கு முடிக்காமல் எப்படி இவ்வளவு சுயநலத்துடன் என்னை பற்றி மட்டும் நினைத்தேன்?’ என்று தன்னை தானே சாடி கொண்டான்.
அஞ்சலிக்கு அவள் குடும்பத்தின் மீது, அவள் அண்ணன்களின் மீது இருந்த பாசத்தை கண்டு பெருமையாக கூட இருந்தது.
‘இதற்கு தான் வீட்டில் ஒரு பெண்பிள்ளை வேண்டும் என்பது. அவர்களின் பாசத்தை மிஞ்ச யாரால் முடியும்?’ என்று கெளதம் குடும்பம் அஞ்சலியை மெச்சி கொண்டது.
அவர்கள் அறிய வாய்ப்பில்லை, பிற்காலத்தில் இதே பாசத்திற்காக தான், அவர்கள் மகனை இதே அஞ்சலி துறந்து செல்ல போகிறாள் என்பது.
“சாரி முரளி…எதோ தனு எங்க வீட்டுக்கு மகளாய் வந்தால் நல்லா இருக்குமேன்னு கேட்டுட்டோம். மன்னிச்சுடுப்பா” என்றார் பாண்டியன் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை என்றதும் .
“அங்கிள்!… உங்க மகனுக்கு எங்க தனுவை கொடுக்க நாங்க தான் கொடுத்து வைத்திருக்கணும் இல்லையா தாத்தா?” என்றான் கெளதம் .
அவன் குடும்பத்தினருக்கும் விஷ்ணுவை ஏற்கனவே பிடித்து இருக்க, தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர்.
இவர்கள் பேச்சை கேட்டு கொண்டிருந்த கெளதம் குடும்பத்திற்கு தெரிந்த ஐயர் ஒருவர், “ரொம்ப சந்தோசம். இன்று முருக பெருமானுக்கு திருமணம். இப்போ நல்ல முஹுர்த்தம். தட்டை மாத்திக்கோங்கோ.” என்றார்.
தெய்வ சன்னிதானத்தை விடவா ஒரு திருமணம் நிச்சயம் செய்ய சிறந்த இடம் இருந்து விட போகிறது?
அங்கேயே நிச்சயம் முடிக்கப்பட்டது.
“இந்த பந்தம் ஏழேழு ஜென்மத்திற்கும் இணை பிரியாமல் இருக்க அந்த இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.” என்று ஐயர் எந்த நேரத்தில் சொன்னாரோ, விஷ்ணுவே தான் தனுவின் கரம் பிடித்தான்.
ஆனால் அதற்குள் தான் எத்தனை விதமான அதிர்ச்சி, துக்கம், துயரம், மனவேதனை இவர்கள் அனுபவித்து விட்டார்கள்.
இன்னும் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.
தனுவிடம் சம்மதம் கேட்க வேண்டும் என்று ஏனோ கெளதம் குடும்பத்திற்கு மறந்து தான் போனது.
‘என் மகள் எங்கள் பேச்சை மீற மாட்டாள்’ என்று பெண் பிள்ளைகள் மேல் நம்பிக்கை வைக்கும் பெற்றோரின் எண்ணமா, ஏதோ ஒன்று அங்கு தனு இல்லாமல் நிச்சயம் நடந்து முடிந்தது.
நிச்சயம் முடிந்து அருகில் இருந்த சரவண பவன் ஹோட்டலில் சிறு ட்ரீட் வைத்து அந்த சந்தோசத்தை பகிர்ந்து கொண்டார்கள் அவர்கள். மற்றவர்கள் வேறு டேபிளில் அமர்ந்திருக்க, விஷ்ணுவுக்காக காத்திருந்த அஞ்சலி அருகே வந்தமர்ந்தான் கெளதம்.
அஞ்சலியை நெருங்கி அமர்ந்து, டேபிளுக்கு அடியில் மற்றவர் அறியா வண்ணம் அவள் கையை தன் கையோடு இணைத்து கொண்டான்.
“என்ன மாப்பிள்ளை வீட்டம்மா… எங்களை கொஞ்சம் கவனிக்கிறது.” என்ற படி அஞ்சலி அருகில் அமர்ந்தான் கெளதம்.
“நாங்க மாப்பிள்ளை வீடு சார்… எங்களை தான் நீங்க கவனிக்கணும்.” என்றாள் அஞ்சலி கெத்தோடு
“கவனிக்க மாட்டேன் என்று நான் எங்கேடீ சொன்னேன்? கவனித்து கொண்டே தானே இருக்கிறேன். இதே கேள்வியை தனியா இருக்கும் போது கேளு. உன் மாமன் கவனிப்பே வேறு மாதிரி இருக்கும்.” என்று கெளதம் அவளை விழுங்குவதை போல் பார்த்து வைத்தான்
அஞ்சலி அழகாய் சிவந்து தலை குனிந்தாள்.
இவர்களை பார்த்தும், பார்க்காமல் சாப்பிட்டு கொண்டிருந்த குடும்பத்தாருக்கு மனநிறைவே.
பெண் எடுத்து, பெண் கொடுத்து என்று அங்கே அவர்கள் நட்பு இன்னும் பலப்படும் என்று மகிழ்ந்தார்கள்.
மகளுக்கும் ஒரு இடம் உடனே அமைந்ததில் பாண்டியனுக்கும், ஹேமாவுக்கும் ரெட்டிப்பு மகிழ்ச்சி.
மனநிறைவோடு, புன்னகையுடன் அவர்கள் இருந்தது அது தான் கடைசி.
இதயம் சமர்ப்பிக்கப்படும்.