(அமிலத் தாக்குதலை தடுப்பதற்கும், சட்ட விரோத அமில விற்பனையை தடுப்பதற்கும் பொதுமக்களில் 27,000 பேரிடம் கையெழுத்தினைப் பெற்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் லட்சுமி அகர்வால். இவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அமில விற்பனையை கண்காணிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்திரவிட்டது. அமிலத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சான்வ் என்ற நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். உலகத்தின் தைரியமான பெண்களுக்கு வழங்கப்படும் விருதினை 2014 இல் அமெரிக்க அதிபரின் மனைவி மிசெல் ஒபாமாவிடமிருந்து பெற்றுள்ளார். என்டிடிவி என்ற தொலைக்காட்சி இவரை ‘சிறந்த இந்தியராக’ தேர்வு செய்தது.)
தனு திருமணம் நின்ற மூன்று வருடம் கழித்து …
காலைக் கெளதம் வீட்டுக்கு வழக்கம்போல் வந்து விட்டான் விஷ்ணு.
கடந்த மூன்று வருடமாய் தன் தொழிலைக் கூட விட்டு, கெளதம் வீடே கதியென்று இருந்தான் -அந்த வீட்டுக்கு மகனாய், தனுவின் ரட்சகனாய், சிறந்த நண்பனாய், பாதுகாவலனாய்.
விஷ்ணு வழக்கம் தனுவை வெளியே அழைத்துக் கொண்டு இருந்தான். வழக்கம்போல் தனுவும் மறுத்துக் கொண்டு இருந்தாள்.
அறையை விட்டு அவள் வெளியே வருதே விஷ்ணு வரும்போது தான்.
தனுவின் இயல்பான துள்ளல், பேச்சு, சிரிப்பு எல்லாம் நின்று இருந்தது.
உயிர்ப்பு என்பதே இல்லாத நடைபிணமாய் தான் பெயருக்கு உயிரோடு இருந்தாள்.
தவறு செய்யும்போது இருந்த துணிச்சல், அதன் விளைவைச் சந்திக்கும்போது மனிதர்க்கு இருப்பதில்லை.
தன் அறை என்ற சிறையில் அடைந்து, மற்றவர்கள் முகத்தைக் காண கூடக் கூசியவளாய் தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்டு இருந்தாள்.
இந்தச் சிறையிலிருந்து ஓரளவிற்கு விஷ்ணு தனுவை மீட்டு இருந்தான்.
“கிளம்பு தனு…” என்றான் கெளதம்.
“அண்ணா வேண்டாம் அண்ணா. அந்தத் தனு செத்துட்டா… விட்டுடு.” என்றாள் முகத்தை நிமிர்த்து பார்க்க முடியாதவளாய்.
“இங்கே பார் நாம் போகும் இடத்தில் உன்னைப் பற்றி எல்லாம் கவலை படும் நிலையில் ஆட்கள் இருக்கமாட்டார்கள். கிளம்பு. நீ கிளம்பவில்லை என்றால் இந்த இடத்திலிருந்து நான் போகமாட்டேன்.” என்று விஷ்ணு அவளை மிரட்ட, மெல்லிய புன்னகையுடன் எழுந்து தன் கூட்டிற்குள் புகுந்து கொண்டாள்.
மறுநாள் காலைச் சாப்பிட கீழே வந்தவள் அப்படியே திகைத்து நின்றாள்.
எந்தச் சோபாவில் அமர்ந்து இருந்தானோ அதே சோபாவில், நேற்று போட்ட அதே உடையில் உறங்கிக் கொண்டிருந்தான் விஷ்ணு.
அவன் முன் உணவுகள் வரிசை கட்டி அடுக்கப் பட்டு இருக்க அதில் ஒன்றை கூட அவன் தொட்டே பார்த்திருக்கவில்லை. நீர் கூடப் பருகவில்லை என்பதை கண்ட தனுவின் கண்கள் கலங்கியது.
“அண்ணா என்ன இது! நேற்றிலிருந்து இங்கேயேவா இருக்கார்?” என்றாள் தனு திகைப்புடன்.
சாப்பிட்டு கொண்டிருந்த கெளதம், நிமிர்ந்து தோளைக் குலுக்கினான் .
“அந்த இடத்தை விட்டு அங்குலம் கூட அவன் நகரவில்லை, தண்ணீர் கூடக் குடிக்கவில்லை.” என்று சொல்லிவிட்டு அவன் சாப்பிடுவதை தொடர்ந்தான்.
‘விஷ்ணு தம்பி வரங்க…. அவங்க பசி தாங்கமாட்டாங்க. நேரத்துக்குச் சாப்பிடலை என்றால் அவங்களுக்கு வயித்து வலி வந்துடும் என்று ஹேமா சொல்லிருக்கா… சீக்கிரம் விஷ்ணு சாப்பிடாம வரார்.’ என்று தன் அன்னை, வேலையாட்களை ஏவி கொண்டு இருந்ததை கேட்டு இருக்கிறாள்.
“அண்ணா, அவரைச் சாப்பிட சொல்ல வேண்டியது தானே!” என்றாள் தனு.
“சாப்பிடுன்னு சொல்லியாச்சு. மனசு கேக்காம எல்லாத்தையும் அவன் முன் அதோ கடை பரப்பியாச்சு. இன்னும் என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?” என்றான் கெளதம் சாப்பிடுவதை மீண்டும் தொடர்ந்தவனாய்
“அவர் பசி தாங்கமாட்டார் அண்ணா. வயிற்று வலி வந்துடும்.” என்றாள் தனு.
தோளைக் குலுக்கி விட்டு அண்ணன், அப்பா, அம்மா எழுந்து சென்று விட, கையைப் பிசைந்து நின்றாள் தனு
“விஷ்ணு!…” என்று முதல் முறையாக அவன் தோளைத் தொட்டு அவனை உலுக்கி எழுப்பியவள்,
“விஷ்ணு, உங்க கூட நான் வரேன். எழுந்து போய் ரெப்பிரேஷ் செய்துட்டு வாங்க.சாப்பிட்டு கிளம்பலாம்.” என்றாள்
எதையும் பேசாத விஷ்ணு சுற்றும், முற்றும் பார்க்க, “என்ன விஷ்ணு?” என்றாள்.
“இல்லை திடீர் என்று வீட்டிற்குள் போதி மரம் முளைச்சுடுச்சா என்ன என்று தேடி கொண்டு இருக்கிறேன் தனு.” என்றான் அவன் சிரியாமல்.
அவனை முறைக்க முயன்று, அது முடியாமல் மெல்லிய புன்னகை தனு முகத்தில் வந்தது.
விஷ்ணு ரெப்பிரேஷ் ஆகி வர, அவனுக்கு தனுவே பரிமாற, பேச்சு சுவாரஸ்யத்தில் தனுவும் மிக நன்றாகவே அன்று தான் உண்டாள்.
‘இவர்கள் என் நலத்திற்கு தான் சொல்வார்கள். இவர்கள் பேச்சை மீறியதால் வந்த நரகம் போதும். என் கெடுதலுக்கு எதுவும் சொல்ல மாட்டார்கள்’ என்று காலம் கடந்த ஞானோதயம் தனுவிற்கு வந்தாலும், நாம் எடுக்கும் சில முடிவுகள் மிகவும் தாமதமாகி இருந்தாலும் நல்லதை கொண்டு வரும்.
கெளதம், தனு, விஷ்ணு மூவரையும் சுமந்த கார் திருவேற்காடு தாண்டி சென்று ஒரு கிராமத்தில் நுழைந்தது.
சென்னைக்குள் இப்படி ஒரு இடமா என்று வியக்கும் வண்ணம் அங்கு எங்கும் பசுமை.
பச்சை போர்வை போத்தியது போல் எங்கும் கண்ணுக்கும், மனதிற்கும் குளிர்ச்சி தந்தது .
“என்ன இடம் இது அண்ணா?” என்றாள் தனு.
” இது லைப் கேர் என்ற தொண்டு நிறுவனம் தனு.” என்றான் கெளதம்.
“உனக்கு இந்த இடம் எப்படி தெரியும்? முன்னாடி வந்து இருக்கியா?” என்றாள் தனு.
“ஹ்ம்ம் நிறைய தடவை வந்திருக்கேன். விஷ்ணு தான் கூட்டிட்டு வந்தார். ” என்றான் கெளதம்.
“உங்களுக்கு எப்படி தெரியும்.?”என்றாள் தனு.
“சிவசாமி அய்யா அறிமுகம் செய்து வைத்தார்.” என்றவனின் குரலில் என்ன இருந்தது என்று மற்ற இருவருக்கும் தெரியவில்லை.
“இங்கே உள்ள பெண்களுக்கு மருத்துவம் செய்ய முடியுமா?’ என்று இதன் உரிமையாளர் சிவசாமி அய்யா கேட்டார்.மூன்று வருடமாய் வருகிறேன் தனு. அப்படி பழக்கம்.” என்றான் விஷ்ணு.
பேசியவாறு அவர்கள் காரை அந்தக் காம்பௌண்ட் கேட் அருகே நிறுத்தி விட்டுக் காலாற நடந்து உள்ளே சென்றார்கள்.
வழி நெடுகிலும் தோப்புகளும், வயல் வெளிகளும், வாய்கால்களும், மரத்தில் குடியிருந்த பலவித பறவைகளின் சங்கீத கச்சேரியும் மனதை மயங்க வைத்துக் கொண்டிருந்தது.
நிறைய பெண்கள் அங்குப் பழம் பறிப்பது, காய்களைத் தரம் பிரிப்பது, பூப்பறிப்பது என்று வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள்.
நிறைய குடில்கள் மாதிரி இருந்தன.
ஒரு பக்கம் மக்களைப் பசியிலிருந்து காக்கும் விவசாயம் கன ஜோராய் நடந்து கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் அறிவை பெருக்க பள்ளி நடந்து கொண்டு இருந்தது.
இன்னொரு பக்கம் தற்காப்பு கலை, அரசாங்க, போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி நடந்து கொண்டு இருந்தது.
இன்னொரு பக்கம் வரைகலை, ஆடை தயாரிப்பு என்று திறமைகளை வெளிக்கொணரவும் அதன் மூலம் அங்கிருப்பவர்கள் வருமானம் ஈட்டவும் வழி செய்யப் பட்டு இருந்தது.
விஷ்ணு அங்கே அடிக்கடி வருபவன் என்பதால், “அண்ணா, அங்கிள், தம்பி,” என்ற வரவேற்ப்புகளும், கை அசைவுகளும் அதிகமாய் இருந்தது.
அவற்றை எல்லாம் புன்னகையுடன் எதிர்கொண்டு, பேச வந்தவர்களிடம் மிகப் பொறுமையாய் பேசி, அவர்களுடன் சேர்ந்து சிரித்தவாறு நின்ற விஷ்ணுவின் அந்தப் பரிமாணம் தனுவை வெகுவாகத் தாக்கியது என்று தான் சொல்ல வேண்டும்.
அன்புக் கொள்ள ஆளும் உண்டு,
நெஞ்சுக்குள்ளே ஈரம் உண்டு… சம்சாரம்…
பந்தம் உண்டு, பாசம் உண்டு
சொந்தத்துக்கு உள்ளம் உண்டு… சம்சாரம்
சூட்சுமத்தை தெரிஞ்சிகிட்டா ஒளி கொடுக்கிற மின்சாரம்…..
வயசு வந்த புள்ள ஒண்ணு பாடம் படிக்குது,
அன்பு ஒன்றே வாழ்க்கை என்ற அர்த்தம் வெளங்குது.
கட்டிலுக்கு ஆசப்பட்டு புத்தி அலைஞ்சுது,
கணவர் இங்கே பிள்ளை என்றே கண்டு கொண்டது.
தன்னடக்கம் வேணுமம்மா பெண்ணுகது நல்லதம்மா
காமத்துக்கும் மோகத்துக்கும் காலநேரம் உள்ளதம்மா
இல்லறத்தில் இன்ப துன்பம் இரண்டும் உள்ளது பொன்னம்மா
சம்சாரம் அது மின்சாரம்..…
வாழ்க்கை பாடத்தைக் கற்று கொடுக்கும்போது அதன் தாக்கம் மிக அதிகமாய் தான் இருக்கும்.வாழ்க்கை தனுவிற்கும் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து இருந்தது.
ஒரு பெரிய பூஞ்சோலை கடந்த பிறகு பெரிய வெள்ளை நிற கட்டிடம் அவர்கள் முன்னே எழுந்தது.
“வாங்க அண்ணா… வாங்க அக்கா.” என்று அவர்களை வரவேற்ற பெண்ணைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்து நின்றாள் தனு.
“விஷ்ணு!” என்று பயந்தவளாய் அவன் விஷ்ணுவின் கையைப் பிடித்துக் கொண்டு அவள்பின் நகர, தனுவை நகர விடாமல் பிடித்தான்.
எதிரே வந்து அவர்களை வரவேற்ற பெண்ணுக்கு முகம் என்ற ஒன்றே இல்லை, கண்கள், மூக்கு, வாய் சிதைந்திருந்தது.
இல்லை சிதைக்க பட்டு இருந்தது.Acid attack.
“வாங்க அண்ணா…இது தான் தனு அக்காவா? பார்க்க ரொம்ப அழகாய் இருக்காங்க.
ஏன் அண்ணா நேற்றே வரேன் என்று சொன்னீர்களே…அய்யா சாப்பிடமா காத்துட்டு இருந்தாங்க. இப்பவும் உங்க கூடச் சாப்பிட தான் காத்துட்டு இருக்காங்க…. வாங்க” என்று கெளதம், விஷ்ணு கையைப் பிடித்து இழுத்து கொண்டு சென்றாள் அவள்.
“என்ன அண்ணா இது. என்ன ஆச்சு அவங்களுக்கு?” என்று தனு கேட்க,
“ஆசிட் அட்டாக் தனு….பெண்களின் மறுவாழ்வு மையம். உள்ளே வந்து பாரு.” என்றான் விஷ்ணு.
உணவு கூடம்போல் இருந்த இடத்தில் பப்பே முறையில் நின்று அங்கிருந்தவர்கள் தங்களுக்கு தேவையான உணவினை எடுத்துச் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
குழந்தைகளுக்குப் பெரியவர்கள் ஊட்டி விட்டு இருந்தார்கள்.
யாரும் இல்லாதவர்களுக்கு, எல்லோரும் இருந்தும் இல்லாமல் போனவர்களாய் ஆக்கப் பட்டவர்கள் துணையாய், உறவாய் இருந்தார்கள்.
முதியோர் இல்லமும், அனாதைகள் இல்லமும், மறுவாழ்வு மையமும் ஒன்றாய் அங்கே செயல் பட்டு, யாருமே இல்லாதவர்கள் என்று யாரும் இல்லை.
இங்கே உங்களை யாரும் நீதிபதியாய் இருந்து உங்கள் குற்றம், குறைகளைச் சுட்டி காட்ட போவதில்லை.
நீங்கள் நீங்களாகவே இருக்க ஒரு இடம் என்று செயலால் சொல்லிக் கொண்டு இருந்தது.
நிறைய பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் இருந்தார்கள். சிலர் உணர்வில்லாமல், சிலர் படுத்தவாறே இருந்தனர்.
அவர்களை அங்கிருந்தவர்கள் தூக்கி அமர வைத்து உணவை ஊட்டினார்கள்.
இவர்களை அழைத்துச் சென்ற பெண் சக்ரநற்காலியில் அமர்ந்த பெரியவரிடம் இவர்களைப் பற்றிச் சொல்ல, இவர்களை நோக்கி விரைந்து வந்தார் அவர்.
தனு அவரைக் கண்டு பின் நகர அவள் பயத்தை உணர்ந்த அவர் சற்று தொலைவில் நின்று விட்டார்.
அவர் முகமும் சிதைந்து, கோராமையாகத் தான் இருந்தது.
எப்படியும் வயது ஐம்பத்திற்கு மேல் தான் இருக்கும்.கை, கால் எல்லாம் சிதைந்து, முடி எல்லாம் பொசுங்கி பாவம் அந்த வயதில் அத்தனை துன்பம் அனுபவித்து கொண்டு இருந்தார்.
“அண்ணா…என்ன அண்ணா…”என்றாள் தனு அவர் இருந்த நிலையைக் கண் கொண்டு பார்க்க முடியாதவளாய்.
“இவர் சிவசாமி அய்யா. நெருப்பில் பள்ளி குழந்தைகளைக் காக்க சென்றவர் இப்படி ஆகிட்டார். ரொம்ப நல்ல மனுஷன் இவரும் இவர் அப்பா சிவகுரு நாதன் சார் என்று வெளியே பேசிட்டு இருக்காங்க. இவரை இந்த நிலையில் பார்த்துட்டு இவங்க மனைவி குழந்தையுடன் விட்டுட்டு போய்ட்டாங்களாம்.
கோடி கோடியாய் சொத்து இருக்கு…அது எல்லாவற்றையும் தர்ம காரியத்திற்கு தான் செல்வழிச்சுட்டு இருக்கார்.லைப் கேர் ஹாஸ்பிடல், பள்ளி நிறைய ஊரில் இருக்குலே அது எல்லாம் இவருடையது தான்.ரொம்ப நல்ல மனுஷர்.”என்றான் கெளதம் கண்கள் கலங்க.
“வாம்மா… நல்லா இருக்கியா? இப்போ உடம்பு பரவாயில்லையா?” என்ற அவர் கேள்விக்குத் தனு தலை ஆட்ட, கண்ணை மூடிக் கரத்தை உயர்த்தி இறைவனை வணங்கினார்.
“அய்யா, எல்லாம் ரெடி.” என்று முதலில் வந்த பெண் சொல்ல, இவர்களை பின் தொடரும் மாறு சைகை காட்டி விட்டு உள்ளே இன்னொரு அறைக்கு சென்றார்.
அங்கே நிறைய நாற்காலிகள் போடப்பட்டு இருக்க, அதில் சிலர் அமர்ந்து இருந்தார்கள்.
பெரியவர் தலை அசைக்க ஒரு வீடியோ ஓட ஆரம்பித்தது.
அதில் முகம் சிதைந்த நிலையில் இருந்த இருந்த ‘லக்ஷ்மி அகர்வால்’ என்ற பெண் தனக்கு நேர்ந்த அனுபவத்தை சொல்லி கொண்டிருந்தார்.
“எனது 15வயதில், 2005 ஆம் ஆண்டு , ‘கான் மார்க்கெட் பகுதியில்’ என் அண்ணனின் நண்பனை திருமணம் செய்ய மறுத்தேன் என்பதற்காக என் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது.
அமிலம் வீசியவன் குற்றவாளி இல்லையாம். என்னை தான் அவதூறு பேசினார்கள், என்னை இழி பெயர்களை வைத்து அழைத்தார்கள்.
என் குடும்பத்தைப் பற்றியும், என் வளர்ப்பை பற்றியும், என் நடத்தையை பற்றியும் மோசமாகப் பேசுவார்கள்.
ஆசிட் தாக்குதலும், சமூகத்தின் பேச்சுகளும் மன மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தியது. பல வருடங்கள் ஆடையே அணிய முடியாமல் ஒரு அறைக்குள் முடங்கி போனது என் வாழ்க்கை.
முகம், உடல் சிதைந்த வலியுடன் மாதவலிகளும், ரத்த இழப்புகளும் சேர்ந்து நான்கு சுவற்றுக்குள் கதறி துடித்து இருக்கிறேன்.
20 லட்சம் செலவு செய்து பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகே இந்த அளவிற்காவது நான் இருக்கிறேன்.
ஒரு நாள் முடிவு எடுத்தேன். எதற்கு நான் என் முகத்தை மூடி கொண்டு இருக்கிறேன்? நான் செய்த தவறு என்ன? எதற்கு நான் ஓடி ஒளிய வேண்டும்? அன்று எடுத்து எறிந்தேன் என் முகத்தை மூடும் துணிகளை. நான் ஏன் எனக்கு நடந்ததற்கு அவமான பட வேண்டும்?
என்னை இந்த கதிக்கு ஆளாக்கியவன் முகத்தை மூடி ஓடி ஒளிய வேண்டும். நான் இல்லை. ஒவ்வொரு பெண்ணையும் தவறான காணோட்டத்தில் பார்ப்பவன் ஓடி ஒளியட்டும். பெண்களில் ஆத்ம சக்தியை பார்த்து.
சிதைத்தாலோ, அழித்தாலோ, களங்கப்படுத்தினாலோ கலங்காமல் மீண்டும் உயிர்த்து எழும் பீனிக்ஸ் பறவைகள் பெண் இனம். எரிமலையாய் எழுவோம்.” என்று முழங்கியது முகம் சிதைக்கப்பட்டாலும் தன்னம்பிக்கை, திடம், மனதைரியம் நசுக்கபட முடியாத அந்த பெண் சிங்கம்.
‘மனித மிருகங்களின் வக்கிரங்களால் பாதிக்கப்படும் அதில் இருந்து மீண்டவர்கள் ஒவ்வொரு முறையும் புன்னகைக்கும்போது அவர்களின் தனிப்பட்ட ஆத்ம வலிமையை காட்டுகிறார்கள்.‘ என்ற Jeanne McAlvaney கூற்று படி அடுத்த வீடியோ, “நான் நீலு”, “நான் டாஷ்மினா” என்று ஆரம்பமானது.
பத்து வயது சிறுமி ஒன்று, “சாமி பாப்பாவை என் வயித்துக்குள் வச்சிருக்காரே.’ என்று புன்னகையுடன் சொல்ல தனு உடைந்து கதறி அழுதாள்.
அவளை தாங்கி கொண்டார்கள் அங்கிருந்த அக்னி தீபங்கள்.
தன்னை தேற்றி கொண்ட தனுவிற்கு இந்த முறை அவர்களின் கோராமையான முகம் தெரியவில்லை.
அதற்கு பதில் அவள் கண்களுக்கு தெரிந்தது பெண்ணின் இனத்தின் உயர்வு.
‘வீழ்வோம் என்று நினைத்தீர்களா?’ என்று அறைகூவல் விட்டு கொண்டிருந்தனர் பல சமூக அவலத்தால், பாலியல் வன்கொடுமைகளால் அங்கே பாதிக்க பட்டு இருந்த பெண்கள்.
பாரதி சொன்ன, “விசையுறும் பந்தின்” ஆற்றல், அக்னி சிறகுகள் அங்கே சிறகடித்து, அநீதிகளுக்கு சாட்டை அடி கொடுத்து கொண்டிருந்தன.
தூரத்தில் இருந்து தனுவை பார்த்து கொண்டிருந்த சாமி அய்யாவை நெருங்கிய தனு, அவர் காலிலேயே விழ, அவர் பதறி போனார்.
“கடவுள் காலில் விழலாம் தப்பில்லை.” என்றான் கெளதம் கண்களில் நீருடன்.
“நீ வா மா.” என்று தனுவை அழைத்து கொண்டு ஒரு மரத்தடிக்கு சென்றவர்,
“சொல்லு… உன் மனதில் உள்ளதை எல்லாம் சொல்லு. இதோடு உன் கண்கள் கண்ணீரை சிந்த கூடாது.” என்றார் தனு தலையில் கையை வைத்து.
தனு எல்லாத்தையும் சொல்லி முடித்து கதற, “கேட்கிறேன் என்று தப்பாய் நினைக்காதே தனுமா… நீ அவனுடன் வெறும் காமத்திற்காக பழகினாயா….ஜஸ்ட் டு பி இன் பெட் வித் ஹிம்…” என்றார் சிவசாமி.
“அய்யா!… அப்டி எல்லாம் இல்லங்க.ராம் தான் என் வாழ்க்கை, அவர் தான் என் உயிர். அவரை என் கணவனாக நினைத்து தான்…” என்று மேலும் சொல்ல முடியாமல் தனு நிறுத்த,
“அப்போ நடந்ததிற்கு அவனிடம் பணம் வாங்கினாயா?”என்ற சிவசாமி பேச்சை கேட்டு, “அய்யா!.”என்ற அலறலுடன் எழுந்து நின்றாள் தனு.
‘என்ன வார்த்தை எல்லாம் கேட்க வைத்து விட்டான்.’ என்று முகம் மூடி தனு கதறி அழுக, என்னவோ ஏதோ என்று ஓடி வந்த கெளதம், விஷ்ணுவை வர வேண்டாம் என்று சைகை செய்தார்.
“தனு இங்கே பார் மா… நீ ராம்மை கணவனாய் நினைத்து நெருங்க அனுமதித்து இருக்கே. அவன் உன்னை மனைவியாக நினைத்தானா என்பது எல்லாம் எனக்கு தெரியாது.ஆனால் நீ அவனை கணவனாய் நினைத்து தானேம்மா உன் அருகே அனுமதித்தே….
நீங்கள் செய்த செய்கை எப்படி சொன்னாலும் நியாய படுத்த முடியாத ஒன்று தான் என்றாலும், இதை எல்லாம் சொல்லி கொடுத்து தான் வளர்க்கிறார்கள் என்றாலும், நம்மையும் மீறி உணர்ச்சி பெருக்கில் இது போல் தவறுகள் நடந்து தான் விடுகிறது.
ஊர்,உலகம் எது வேண்டும் என்றாலும் சொல்லி கொள்ளட்டும்.அவர்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்காதே தனுமா…அவனவன் முதுகுக்கு பின் ஆயிரம் அழுக்கு இருக்கும்.உன் குடும்பம் உன்னை ஜட்ஜ் செய்யவில்லை.உனக்கு உறுதுணையாக தான் நிற்கிறார்கள்.
உன் கணவன் உன்னை நெருங்கினான் என்று மட்டும் நினைத்து கொள். நடந்து விட்ட தவறை யாராலும் மாற்ற முடியாது.ஆனால் இனி நடக்க போவது உன் கையில் தான் இருக்கிறது தனு.
உன் காதல் உண்மை தானே! பிறகு என்ன… உன் நம்பிக்கையை உடைத்து விட்டு சென்ற ராம் தலை குனியவில்லை. அந்த கணவன் உயிரோடு இல்லை ஸ்ரீ.” என்றார் சிவசாமி மீண்டும் அழுத்தமாய்.
“அய்யா!.” என்று தனு கதற,
“என்று உன் காதலை, நம்பிக்கையை ஒருவன் உடைக்கிறானோ அந்த நொடி அவன் அழுகி போன பிணத்திற்கு சமம். செத்து போன பிணத்தை நினைத்தா இவ்வளவு காலம் நீ அழுது கொண்டு இருக்கிறாய்?
காதல் என்பது ஒரு நம்பிக்கை.
எப்படி அம்மா, ‘இவர் தான் அப்பா’ என்று சொல்வதை கண்ணை மூடி ஏற்றுக் கொள்கிறோமோ, அந்த நம்பிக்கைக்கு சமம் காதல்.
அந்த நம்பிக்கையை உடைத்து விட்டு சென்றவனுக்காக, உன்னை நீயே அழித்து கொள்வது முட்டாள் தனம்.
வீழ்வது பாவம் இல்லை. வீழ்ந்தே கிடப்பது தான் குற்றம்.
உன்னை விட வாழ்க்கையில் நரகத்தை அனுபவித்த பெண்கள் இங்கே ஏராளம் தனு.
உன்னை விட்டுச் சென்றதை விட வேறு என்ன கொடூரம் இருக்கிறது என்று கேட்காதே தனு. காதலன் என்ற போர்வையில் இருந்த மிருகங்கள் அந்தரங்கத்தை எல்லாம் வீடியோவாகக் எடுத்து ப்ளாக்மெயில் செய்த அவலம் எல்லாம் இருக்கிறது.
சிகப்பு விளக்கு பகுதியில் விற்ற கோராமை எல்லாம் நடந்து இருக்கிறது.நண்பர்களுடன் சேர்ந்து என்று…..
எத்தனையோ தூக்கு கயிறுகளின் ஆட்டத்தின் பின் வயிறு வலி எல்லாம் இருந்தது இல்லை.
பல வருடம் ஆடை அணிய கூட முடியாமல் நான்கு சுவற்றுக்குள் கதறி தீர்த்த லக்ஷ்மி அகர்வால் இன்று திருமணம் ஆகி, அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. சொந்த காலில் நிற்பது மட்டுமில்லாமல் தன்னை போல் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்காக்க போராடுகிறார்.
உனக்கு தோள் கொடுக்க நாங்கள் உண்டு தனு. இதில் நீ குற்றமற்றவள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், ‘தவறு செய்யாத மனிதன்’ என்று ஒருவரை இங்கு சுட்டி காட்டு பார்க்கலாம்.
அதையே தானே இயேசு கிறிஸ்துவும் சொல்லி இருக்கார். ‘யார் பாவி இல்லையோ, அவர்கள் முதலில் கல் எறியுங்கள்’ என்றார்.
இதில் நீ கறக்க வேண்டியது பாடம் மட்டுமே.
இங்கு யாரும் உன்னை பாரமாகவோ, அவமானமாகவோ பார்க்கவில்லை. உன்னை யாரும் இங்கே ஜட்ஜ் செய்யவில்லை. நிமிர்ந்து எழுந்து நின்று ஜெயித்து காட்டு.
அதுவே உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனுக்கு நீ கொடுக்கும் மிக பெரிய தண்டனை. மற்றதை இறைவனிடம் விட்டுவிடு.” என்று அவர் பேச்சில் மனம் தெளிய ஆரம்பித்தாள்.
பாவம் தீர்க்க ஒரு கேள்வி கேட்க
இங்கு தெய்வம் நேரில் வர வில்லை
பாவம் நேரம் அதற்கில்லை
குற்றவாளிகளின் கொட்டம் தீர
ஒரு சட்டம் ஒத்து வர வில்லை
தர்மம் செத்துவிட வில்லை
கட்டில் வேறு ஒரு தொட்டில் வேறு எனில் என்னவாகும் உலகம்
சொந்தமில்லை ஒரு பந்தமில்லை இது நாகரீக நரகம்
தந்தை யாரோ, கானல் நீரோ!
தாய்ப் பால் கூட கண்ணீரோ!
பெண்கள் யாரும் ,இங்கு பெண்கள் இல்லை
அவர் எச்சில் துப்பும் ஒரு கிண்ணம்
என்று தானே உனதென்னம்!
காலம் மாறியது காட்சி மாறியது
பெண்மை ஆளுவது திண்ணம்
சீதை சாகவில்லை இன்னும்
போன ஜென்ம வினை
நாளை கொள்ளும்
அது அந்த நாளில் வழக்கம்
இந்த ஜென்ம வினை
இன்று கொள்ளும்
இது இந்த நாளில் பழக்கம்
கருவில் தானே வெளிச்சம் இல்லை
மண்ணில் வந்தும் ஒளி இல்லை’
என்று தனுவை போல் சிதைந்த பல பெண்களின் குமுறல் அங்கு எதிரொலிப்பதற்கு பதில், சிதைந்தாலும், சிதைக்கப்பட்டாலும் வீழ்ந்தே கிடக்க மாட்டோம் என்ற உறுதி தான் அங்கு தெரிந்தது.
பல மாதம் தொடர்ந்து வந்து, அங்கு இருந்தவர்களின் தன்னம்பிக்கையால் தானும் ராம்சந்தர் என்பவன் உருவாக்கி சென்ற நரகத்தில் இருந்து வெளியேறி, மன துணிவுடன் விஷ்ணுவை கரம் பிடித்து வாழ்க்கையில் ஜெயித்து காட்டி விட்டாள் தனு .
ராம் செய்த பாவத்திற்கு விஷ்ணு பிராயச்சித்தம் செய்து விட்டான் என்றாலும், தங்கையின் வாழ்க்கை சீராகி விட்டது என்றாலும், அதன் பிறகு தகவல்கள் கெளதம் ரௌத்திரத்தை கிளறவே செய்தது.
அஞ்சலி, விஷ்ணு சகோதரன் என்ற ஒரே காரணத்திற்காக கெளதம் அமைதியாக இருக்க, அவனை அப்படி இருக்க விடுவதில்லை என்று, ராம் தன் லீலைகளை தொடர்ந்து கொண்டே தான் இருந்தான்.
ராம் போன்ற ஈன பிறவிகள் எல்லாம் என்றுமே திருந்த போவதில்லை.
இங்கே கெளதம் தங்கை தனு போல் ஆயிரம், லட்சம்,கோடி தனுக்களை காதல் என்ற பெயரால் தங்கள் காமத்திற்கு பலி கொடுக்கும் நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
‘இன்னும் பல தனுக்களை உருவாக்கியே தீருவது என்று ராம்’ லீலைகளை தொடர, கெளதம் அவனை தேடாத இடமே இல்லை.
அப்பொழுது தான் ராம் இருக்கும் இடம் தெரிந்த ஒரே ஆள் அஞ்சலி மட்டும் தான் என்ற தகவல் சேர, அஞ்சலியை கோர்னெர் செய்ய கௌதமிடம் இருந்த ஒரே ஆயுதம் தன் காதல் மட்டும் தான்.
சில தவறுகள் நடக்காமல் தடுக்க என்றால் நம் பக்கம் சேதாரம், தியாகம் எல்லாம் அவசியமாகிறது.
கெளதம் அல்டிமேட்டம் கொடுக்க பதினைந்தே நிமிடம் மட்டும் முகுர்த்தம் முடிய கால அவகாசம் இருக்கும் போது அஞ்சலி நிலை குலைந்து நின்றாள்.
ராம் இருக்கும் இடம் சொல்லிவிட்டு, ராணி போன்ற மனம் நிறைந்த வாழ்க்கை கௌதமுடன் வாழலாம்.
ஆனால் ஏதோ ஒரு காரணம் தடுக்க, கெளதம் திரும்பி வந்து பார்க்கும் போது அஞ்சலி அங்கு இல்லவே இல்லை.
தனு, ராம் காதல் இவர்கள் காதலை நிறைவேறாமல் செய்து விட்டது.
கிட்டத்தட்ட ஐந்தாறு வருடமாய் அஞ்சலியை தொலைத்து விட்டு அவன் பைத்தியக்காரன் மாதிரி தெரு தெருவாய் அலைந்தது தான் மிச்சம்.
கரையில் ஒரு குயில் பாட்டு
உயிரை பெறும் வரம் கேட்டு
அலைகளே கொஞ்சம் நில்லுங்கள்
அவளிடம் கொண்டு செல்லுங்கள்
மார்கழி மாதத்து வெண்பனி மூட்டம்
தொலைந்து போனது செண்பக தோட்டம்
கண்மணி வருவாளா
கடலின் நடுவே கிழிபட்ட தோணி
என்று கரை வருமோ!
உயிரின் நடுவே அறையப்பட்ட ஆணி
என்றென்றும் நிரந்தரமோ!
இதோ இதோ நம்
காதல் கல்வெட்டு…
அதோ அதோ அவள்
போனால் கை விட்டு …
இருப்பது கடல் நீரா!
இல்லை காதலன் கண்ணீரா!
இங்கே இருப்பது கடல் நீரா
இல்லை காதலன் கண்ணீரா
என்று கெளதம் உருகி கொண்டு இருக்க,அவனை விட்டு ஓடி கொண்டு இருந்த அஞ்சலி நிலைமையும் அதே தானே!
‘சிறையில் ஒரு குயில் பாட்டு
சிறகை பெறும் வரம் கேட்டு
அலைகளே கொஞ்சம் நில்லுங்கள்
அவனிடம் கொண்டு செல்லுங்கள்
மன்னவன் வருவானா?’
என்று அஞ்சலியும் உருகி கொண்டு இருந்தாள்.
இது தான் கண்ணுக்கு தெரியாத பொம்மலாட்டம்.
நான்கு பேரின் நடுவில் ஆடப்பட்டு இருக்க, இதை எல்லாம் நடத்தி கொண்டு இருந்தான் திரைமறைவில் இருந்து ஒருவன்.
“அல்லும் பகலும் அண்ணன் வாழ்ந்தான்
தங்கச்சிக்காக,
அந்த உள்ளம் இப்போ கல்லாய் போனது
தன் கட்சிக்காக.”என்று ராம் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்வதாக கெளதம் பிரளயகால ருத்திரனாய் நிற்க,
அஞ்சலி,
“மாலை ஒன்று தொடுத்து
வைத்தாள் மன்னனுக்காக
அதை வீதியிலே
விட்டெறிந்தால் அண்ணனுக்காக”என்று நிலை எடுக்க,
தனு,சுமித்ரா
“ இலவு காத்த கிள்ளை போல
இத்தனை காலம்
இந்த வஞ்சி மகள் வரைந்தது எல்லாம்
தண்ணீர் கோலம்.”
கெளதம்
“காதல் என்னும் பாத்திரத்தில்
தேன் எடுத்தானே…
வெறும்
கௌரவத்தின் ஆத்திரத்தால்
போட்டுடைத்தானே”
அஞ்சலி, கெளதம்,தனு, ராம் நால்வரும்,
“நான்கு கிளிகள் காதல் வலையில்
விழுந்தது ஏனோ..
இதில்
ஒருவர் பாவம்
மற்றவர் தலையில்
விடிந்தது ஏனோ..
ஆக மொத்தம் விதி வரைந்த
நாடகம் தானே…
இதில் ஆளுக்கொரு பாத்திரத்தில்
நடித்திட தானே
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது
நாலு பேரு நடுவிலே
நூலு ஒருத்தன் கையிலே
நாலு பேரு நடுவிலே
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது’ என்று விதி அவர்கள் வாழ்க்கையில் விளையாடி கொண்டு இருந்தது.
கடந்த காலத்தை விட்டு வெளியே வந்த கெளதம், அஞ்சலி இருவரின் கண்களும் கண்ணீரை பொழிந்து கொண்டு இருந்தது.
“கெளதம்!… நேரம் ஆகுது… கிளம்பணும். நீ சொன்னபடி அனைத்தும் அங்கே தாத்தா ரெடி செய்து விட்டார். வா எல்லாம் நல்லதே நடக்கும்.” என்று நண்பனை அழைத்து கொண்டு ராகேஷ் வர சமத்தூர் நோக்கி கிளம்பினார்கள்.
மூன்று மணி நேரம் கழித்து சமத்தூரில் இருந்து பஸ் ஒன்று சோழிஸ்வரர் கோயிலை நோக்கி சென்றது.
‘கடவுள் விட்ட வழியென்று’ அங்கு காயத்திரி வீட்டினர் கிளம்பி, கோயிலுக்கு சென்றார்கள்.
இப்படி பலர் கோயிலை நோக்கி கிளம்பியிருக்க, அங்கே கோயிலில் காயத்ரி திருமணத்தில் மீண்டும் புயல் வீச ஆரம்பித்து இருந்தது.
ஒரு புயல் வீசியத்திற்கே கெளதம், அஞ்சலி குடும்பம் சிதைந்து இருந்தது.
அதே போல் ஒரு புயலை காயத்திரி குடும்பம் தாங்குமா?
இதயம் சமர்ப்பிக்கப்படும்.