சமர்ப்பணம் 2

(ஒரு பரீட்சையின்போது மருத்துவர்கள் நோயாளிகளைத் தொடலாம். ஆனால் அந்தத் தொடுகையில் காமம் இருக்க கூடாது. மயக்க மருந்து நிபுணர்கள் நோயாளிகளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தலாம். ஆனால் மயங்கிய நிலையில் உள்ள நோயாளிகளின் ஆதரவற்ற தன்மையைப் பயன்படுத்தி கொள்ள கூடாது).

அன்று –2017 ஆம் ஆண்டு          

இடம் —பெங்களூரு.

கோபாலக பாஹிமாம் அனிஷம்

ரதமியி

கோபாலக பாஹிமாம் அனிஷம்

பாத ரதமயி

என்று, ‘குருவாயூர் கிருஷ்ணனை’ யேசுதாஸ் அவர்கள் உருகி அழைத்துக் கொண்டு இருந்தார் ‘அன்பாலயம்’ என்ற பெயர் பலகை தாங்கி நின்ற அந்த வீட்டின் பூஜை அறையிலிருந்து. அவர் குரலுக்கு அந்தக் கண்ணனே ஓடி வந்து விடுவான் என்று தான் எண்ண தோன்றியது.

ரெண்டு அடுக்கு தனி பங்களா. ‘க்ரீன் பீல்ட்’ பகுதியில் அமைந்து இருந்தது. பெரிய இரும்பு கதவிற்கு முன் வாட்ச்மென் ஒருவர் அமர்ந்து இருந்தார். அவரைத் தாண்டிச் சென்றால், உள்ளே விரிந்தது பெரிய தோட்டமும், கார் ஓடும் பாதை ஒன்றும்.

bungalow indiawith front gardenக்கான பட முடிவுகள்

அந்தத் தோட்டத்தின் நடுவே பளிங்கு கிருஷ்ணர் சிறு குளத்தின் நடுவே புல்லாங்குழல் இசைத்தவாறு நின்றிருக்க, அவருக்கு முன் இருந்த துளசி செடி ஒன்று அன்றைக்கான பூஜை முடிந்ததற்கான அறிகுறியுடன் தென்பட்டது.

தோட்டத்தைக் கடந்தால் மிகப் பெரிய தூண்கள் அடங்கிய தாழ்வாரம் ரங்கோலி கோலம், சின்னப் பெண் புன்னகையை போல், வானவில்லை தோற்கடிக்கும் வண்ணத்தில் ஜொலித்து கொண்டு இருந்தது. அந்தக் கோலத்தைப் போட்டு விட்டு, கோல பொடிக்களை அதற்கான இடத்தில் வைத்து விட்டுக் காலை உணவினை தயாரிக்க உள்ளே சென்றார் ரோஜாமணி. அந்த வீட்டின் அன்னபூரணி. சமையலுக்கு என்று நியமிக்கபட்டு இருப்பவர்.

காலை உணவினை தயாரிக்க சமையல் அறைக்குள் சென்றவரின் முன், சுட சுட பில்டர் காபி நீட்டப்பட்டது. சமையல் அறையில் காலை டிபன்னுக்கான ஏற்பாடு ஆகி கொண்டு இருக்க, கடிகாரத்தை பார்த்த படியே பம்பரமாய் சுழன்று கொண்டு இருந்தான் அவன்.

“அட…என்ன ராஜு தம்பி…எத்தனை தடவை சொல்றது?…இந்த வேலை எல்லாம் செய்யத் தான் நான் இருக்கேனே! நீ அங்கிட்டு நகரு.” என்றவாறு வந்தார் ரோஜாமணி.

” மை ரோஸ் டார்லிங். ரிலாக்ஸ். முதலில் இந்தக் காபியை குடி, குடிச்சிட்டு போய் உன் ஆத்துக்காரர் செல்வத்திற்கும், வாட்ச்மன் அண்ணாவுக்கும் இந்தக் காபியை கொடுத்துடு. காலை இட்லிக்கு சாம்பார் ரெடி, குட்டிக்குப் பிடித்த புதினா சட்னிக்கு ஆஞ்சி வெச்சுட்டேன்.

ராணிமார் இருவரும் நைட் வந்துட்டாங்க. அவங்களுக்கும் சேர்த்து டிபன் செய்துடுங்க. சாப்பாடு இன்னைக்கு வேண்டாம். ஹோட்டலில் சொல்லி இருக்கேன். உங்களுக்கும் வந்துடும்.” என்றவன், “டைம் ஆச்சு குட்டியை எழுப்பனும்.” என்றவாறு மாடி நோக்கி ஓடினான் ராஜு என்று அழைக்கப் பட்ட சந்தோஷ் ராஜ்.

பார்ப்பதற்கு ‘நவீன் பாலி’ சாயலில் இருந்தான். குழந்தைத்தனமான முகம் எப்பொழுதுமே கேலி, கிண்டல் என்று அவன் இருக்கும் இடத்தில் சிரிப்பு இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்களுக்குப் பார்த்து பார்த்து செய்வதில் அவனை மிஞ்ச ஆள் இல்லை. தொழில் முறையில் pediatrician-குழந்தை நல மருத்துவன்.

nivin paulyக்கான பட முடிவுகள்

“அட ராமா எந்த வூட்டலையும் இந்தக் கூத்து நடக்காது. ஆம்பளை புள்ள கோழி கூவும் முன்னே எழுந்து, சுத்த பத்தமாய் எல்லா வேலையும் செய்யுது. வீட்டுக்கு ரெண்டு பொம்பளைங்க இருக்காங்க தான் பேரு. முக்காவாசி நேரம் பொது சேவைன்னு வெளியவே தங்கிட வேண்டியது. இவங்க தான் போறாங்க என்று பார்த்த மூணு வயசு புள்ளையையும் தூக்கிட்டு ஊர் ஊரா அலையறாங்க என்ன கொடுமை இது?” என்று புலம்பியவாறு தன் வேலையைச் செய்தார்.

“ரோஸ்! இப்போ நீ பேசுனது மட்டும் அவங்க ரெண்டு பேருக்குக் கேட்டுச்சு, சட்னிக்கு பதில் உன்னைத் தூக்கி போட்டு அரைப்பாங்க.” என்ற குரல் காதின் அருகே ஒலிக்க ஒரு அடி துள்ளி குதித்தார் ரோஜாமணி.

“ரோஸ்! டான்ஸ் practice எல்லாம் பலமா இருக்கு. என்ன செல்வம் அண்ணா சொல்லவே இல்லை? உங்க ஆத்துகாராம்மா டான்ஸ் கத்துக்கறாங்க போலிருக்கே. சும்மா சொல்லக் கூடாது டார்லிங் இப்போவே இப்படி சூப்பர்ரா இருக்குன்னா, சின்ன வயசுல செமையா இருந்து இருப்பாங்க போல் இருக்கே? காம்பெடிஷன் ஹெவியோ?” என்றான் சந்தோஷ் உள்ளே வந்த தோட்டக்கார செல்வத்தைக் கண்டு.

“ஆமாங்க தம்பி.” என்று மனைவியை ரொமான்ஸ் பார்வை விட்ட செல்வத்தை வெட்டவா? குத்தவா? என்று முறைத்து வைத்தார் அவர்.

“என்ன வயசு திரும்புதோ? தம்பி தான் தமாசு செய்யறார்ன்னு பார்த்தா யார் கிட்டே எது பேசறது என்று புரியாத ஆக்கம் கெட்ட கூவையா நீயி. மேடம் ரெண்டு பேரும் வந்துட்டாங்க. இந்தக் காபி தண்ணிய ஊத்திட்டு போய் உம் புழைப்பை பாரு “என்று உறுமினார் ரோஜாமணி.

“மேடம் ரெண்டு பேரும் வந்துட்டாங்களா?…செத்தேன், கொண்டா அந்தக் காபியை.” என்று ஒரே மூச்சில் குடித்தார்.

“நான் போட்ட காபியை தண்ணீர் என்று கேலி செய்த உம்மை என் கேர்ள் friend லிஸ்ட்ல் இருந்து பதவி விலக்கி வைக்கிறேன் ரோஸ். ஐயோ டைம் ஆச்சு… தேவை இல்லாம பேச வேண்டாம் ரோஜாமணி அக்கா. வேலையைப் பாருங்க” என்றவனின் குரலில் சட்டென்று வந்தது கண்டிப்பு.

அவன் அந்தப் பக்கம் சென்றதும், “வாடி என் பொண்டாட்டி…உனக்கு என்னடீ இவ்வளவூ வாயி? தம்பிக்குத் தான் அவர் பொண்டாட்டியையோ, அக்காவையோ யார் எது சொன்னாலும் பிடிக்காது, சாமி ஆடிடுவார் என்று தெரியும் இல்லை. போன வாரம் சின்னம்மாவை, ஒருத்தன் கடையில் இடிச்சதற்கே அவனை அடி நொறுக்கி பின்னிட்டார்.

10 பேர் சேர்ந்து கூட அவரைச் சமாளிக்க முடியலை. சின்ன மேடம் மட்டும் வரலை அவனுக்கு அங்கேயே சங்கு தான். ஆமா தெரியாம தான் கேட்கிறேன் அவங்க ரெண்டு பேரும் டிவி பொட்டில விளம்பரம் தேடிக்கவா ராத்திரி பகல் பாராமா மத்தவங்களுக்கு ஓடி ஓடி உழைக்கிறாங்க? நம்ம  ஜனங்களுக்கு எவ்வளவூ செய்து இருக்காங்க அவங்களை போய்… மனுஷ ரூபத்துல இருக்கும் தெய்வங்க டீ ரெண்டு பேரும் அவங்களை இப்படி பேசினே நல்ல சாவே வராதுடீ. மூடிட்டு வேலை பாரு.” என்று செல்வம் ரோஜாமணிக்கு பொங்கல் வைத்து விட்டார்.

அலண்டு போய் நின்று இருந்த ரோஜாமணி தன் தவறினை உணர்ந்தார்.

‘நான் புத்தி இல்லாத சிறுக்கி. அந்தப் புள்ளைங்க ரெண்டும் என்னை ‘அம்மா’ என்று வாய் நிறைய கூப்பிடுத்துங்க. சினிமா, ட்ராமா, பீச், பார்ட்டின்னு மத்த பணக்காரங்களை போல் சுற்றி கொண்டிருக்காம, குழாய் அடி சண்டை போடாம, சொந்த அக்கா தங்கைபோல் ஒன்னுக்குள்ள ஒண்ணா இருந்து மக்களுக்கு நல்லது செய்யறாங்க. இவங்களை போய் இப்படி பேசிபுட்டேனே’. என்று தன்னையே நொந்து கொண்டார்.

சிறு வயதிலிருந்து சந்தோஷையும், அவன் அக்கா சுமித்திராவையும் தூக்கி வளர்த்தது ரோஜாமணி தான். சுமித்ரா அவரை வாய் நிறைய “அம்மா” என்று அழைத்துத் தான் கூப்பிடுவாள். சந்தோஷிற்கு அவள் எப்பவுமே  “ரோஸ் டார்லிங்” தான். கோபம் என்றால் மட்டும் “ரோஜாமணி அக்கா” என்பான். பிள்ளை இல்லாத அவருக்குத் தாய் ஸ்தானத்தை வழங்கியது சந்தோஷும் சுமியும் தான்.

சொந்த பிள்ளைகளாய் வளர்த்தவர் இல்லையா? அதான் குமுறி விட்டார். பின்னே எங்கே தேடினாலும் கிடைக்காத வைரங்கள் சந்தோசும், சுமியும். இருவரின் வாழ்வும் நன்றாக இல்லை என்றால் அந்தத் தாய் உள்ளத்தால் அதைத் தாங்கவே முடியவில்லை.

சுமித்ரா பார்க்க நடிகை ‘நக்மாவை’ போல் அச்சில் வார்த்தது போல் இருப்பாள். வெண்ணையில் பால் ரோஸ் கலந்து செய்தது போன்ற மாசு மருவற்ற சருமம். பிரவுன் நிற கண்கள். கல்லூரி நாட்களில் சுமிக்கு பாடிகார்ட் வேலை பார்த்தே சந்தோஷ் நொந்து போகும் அளவிற்கு சுமி என்றால் ஒட்டுமொத்த கல்லூரியும் பைத்தியம் பிடித்து அலைந்த காலம் ஒன்று உண்டு.

மத்திய மந்திரி மகன் முதல், வெள்ளித்திரை முன்னனி இளம் ஹீரோக்கள்வரை இவள் கரம் பிடிக்கக் காத்திருந்தனர் என்றால் மிகையல்ல. பரம்பரை கோடீஸ்வரி. இவள் அம்மா ஜானகி ராஜ வம்சம். தந்தை சிவசங்கர் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்.

பணம், புகழ், செல்வாக்கு, அரசபரம்பரை எல்லாம் சுமியை தேடி வர, இவள் காதலில் விழுந்தது என்னவோ ‘சேகர்’ மீது. காதல் திருமணம். வீட்டின் மூத்த தலைமுறையை எதிர்த்துச் செய்து கொண்ட திருமணம்.

பெற்றோரை எதிர்த்து, வீட்டை விட்டு வெளியே வந்து சேகரை மணந்து, பெங்களுருவில் வாழ்க்கை ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஓடியே விட்டது. இவள் காதலுக்கு இன்று வரை பக்கபலமாய் இருப்பது தம்பி சந்தோஷ் மட்டும் தான்.

சுமிக்கு திருமணம் ஆகி பெங்களுருவில் ஒரு குழந்தையுடன் இருக்கிறாள் என்ற தகவல் ஜானகியை வந்து சேர, மகள் தான் தாய் ஆனதை கூடத் தன்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டாளே என்பதை அந்தத் தாயுள்ளத்தால் தாங்க முடியவில்லை.

சென்னை வீட்டிலிருந்து ஜானகி அனுப்பி வேலைக்கு வந்தவர் தான் ரோஜாமணி. ஒரு விதத்தில் அங்கு நடப்பதை ஜானகிக்கு சொல்லும் உளவாளி.

சுமியின் சேகரை இத்தனை வருடத்தில் அந்த வீட்டில் யாருமே பார்த்தது இல்லை. வேலை என்று நாடு விட்டு நாடு சுற்றி கொண்டு இருக்கிறான் என்று கேள்வி. கடைசியாக எப்பொழுது இந்தியாவிற்கு வந்தான் என்பது சுமிக்கே நினைவில் இருக்குமா என்பது சந்தேகமே!

வெளிநாட்டில் இன்னொரு பெண்ணுடன் லிவ் இன்னில் இருப்பதாய் தகவல் கூட வந்தது. கட்டிய பாவத்திற்கு ஒரு குழந்தை கொடுத்ததுடன் தன் வேலை முடிந்து விட்டது அந்த வீட்டின் பக்கமே வராத உத்தமன். அந்த அழகு பதுமையின் காதலை கொச்சை படுத்தி, திருமணத்தின் புனிதத்தை எள்ளி நகையாடும் ஒரு ராட்சசன் சேகர்.

‘அந்த ஆளு மட்டும் என் கையில் கிடைக்கட்டும். குழவி கல்லை எடுத்து அவன் தலையில் போட்டுக் கொன்னுட்டு ஜெயிலுக்கு போறேன். என்ற புள்ளை சிரித்து பார்த்தே வருஷக்கணக்காலே ஆச்சுது. சுமி புள்ள இருக்கும் இடமே கலகலன்னு இருக்குமே.சோழிய சுழட்டி விட்டது போல் கண்ணு சிரிச்சுதுன்னா அன்னைக்கு முழுக்க கேட்டுகிட்டே இருக்க போல் இருக்குமே. எங்கிருந்து வந்தான் அந்த மவராசன்? புள்ளை சிரிப்பையே தொலைச்சிட்டு இப்படி பட்டமரமாய் நிக்குதே’ என்று மனதிற்குள் அவர் புலம்பாத நாள் இல்லை.

‘இந்தப் புள்ள வாழ்க்கை தான் இப்படி என்றால் என்ற அய்யா, ராஜு தம்பி வாழ்கையும் இல்லே கேள்வி குறியா நிக்குது. கட்டிட்டு வந்த மவராசிய எதையும் சொல்லவும் முடியாது.

குணத்தில் அப்படியே சுமி கண்ணு தான். ஆனா என் அய்யா, எஞ்ச்சாமி பெயரில் மட்டும் சந்தோசத்தை வச்சிட்டு உள்ளுக்குள்ளே எல்லாத்தையும் போட்டுப் புழுங்கிட்டு இல்ல சுத்துது! என்ன இதுங்களுக்கு பிரச்சனையோ!

சாமி ஏழுமலை வாசா! இந்தப் புள்ளைங்க வாழ வேண்டியதுங்க. சோதிக்காதே அய்யா. நடந்தே உன் மலைக்கு வரேன் சாமி. இவங்க வாழ்வை சரி படுத்து.’ என்று வேண்டியது அந்த அன்னை மனம்.

அந்த வீட்டில் வேலை செய்யும் இவரே இப்படி இவர்கள் வாழ்வை நினைத்து உருகி கொண்டு இருக்கிறார் என்றால் வீட்டினர் எந்த அளவிற்கு இந்த நால்வரின் வாழ்வை பற்றிக் கவலைபட்டு கொண்டு இருப்பார்கள்!

ஜானகியும், சிவசங்கரனும் பலமுறை நடையாய் நடந்து, தலையால் தண்ணீர் குடித்து கூடப் பார்த்து விட்டனர். அக்காவும் தம்பியும் கல்லு பிள்ளையார் போல் நின்றார்களே ஒழிய வாயைத் திறந்து எதையும் பேசவில்லை.

“அந்த நாயை டைவோர்ஸ் செய்துட்டு வாத்தா. ஜாம் ஜாம்னு, உன்னை ராணி போல் உள்ளங்கையில் வைத்துப் பார்த்துக் கொள்ளும் கணவனை நான் கொண்டு வரேன்.” என்று இவர்கள் பலமுறை கெஞ்சியும் யாரும் புரிந்து கொள்ளாத ஒரு பாவனையுடன், முகத்தில் சன்ன முறுவல் கொண்டு நின்றாள் சுமித்ரா.

இப்படியுமா ஒருத்தி தன்னை வேண்டாம் என்று ஒதுக்கும் ஒருவனை, இன்னொருத்தியுடன் வாழ்பவனை காதலிப்பாள்? இது என்ன மாதிரியான காதல்? சத்தியமாய் அவர்களுக்குப் புரியவில்லை.

அக்காவுக்கு ஒன்று என்றால் உலகத்தையே தனி ஆளாக எதிர்க்க கூட தயங்காத சந்தோஷ் கூட இதில் மௌனம் சாதித்தது ஏன்? அதற்கும் விடை கிடைக்கவில்லை.

இதற்கு நடுவே இவர்கள் வாழ்வில், வந்தவள் தான் காவ்யா.அவன் தோழி என்பது வரை தெரிந்தது. எப்போ எப்படி இவர்கள் திருமணம் என்ற ஒரு தகவலும் யாருக்கும் தெரியவில்லை.

அவருக்கு எங்கே தெரிய போகிறது அவர்கள் நால்வரும் வெளியே சிரித்து உள்ளே குமுறி கொண்டு இருப்பவர்கள் என்பது

காதல் வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றும் என்பதற்கு உதாரணம் அந்த நால்வரும், இவர்களோடு தொடர்புடைய பலரின் வாழ்வும்.

ஒருவன் பாசத்திற்காக விஷப்பரீட்சை செய்து, இரு வாழ்வை பணயம் வைத்து இருப்பவன்.

இன்னொருத்தி காதல் கை கூடினாலும், பாசத்திற்கு, கடமைக்கு கட்டுப்பட்டு விலகி நிற்பவள்.

ஒருத்தி இல்லாத கானல் நீர் வாழ்க்கையை, இருப்பதாய் கற்பனையில் வாழ்பவள்.

இன்னொருவன் காதலிக்காக, காதலையே துறந்து இருப்பவன்.

ஒருத்தி கையில் கிடைத்த வாழ்வின் மதிப்பு தெரியாமல், மறைய முயலும் கானலை தேடி கொண்டு இருப்பவள்.

இலவு காத்த கிளியாய் இன்னும் இருவர்.

இவர்கள் எல்லோர் வாழ்வையும் சிதைத்து,இவர்களை துடிக்க வைத்து ரசித்து கொண்டு அரக்கன் ஒருவன்.

https://www.youtube.com/watch?v=bXBgDtu5_AY

ஒரு பொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப புதுமையாக இருக்குது

நாலு பேரு நடுவிலே

நூலு ஒருத்தன் கையிலே…

அல்லும் பகலும்

அண்ணன் வாழ்ந்தான்

தங்கச்சிகாக …அந்த

உள்ளம் இப்போ கல்லாய்

போனது தன் கட்சிக்காக..

மாலை ஒன்றை தொடுத்து வைத்தாள்

மன்னனுக்காக …அதை…

வீதியிலே…விட்டெரிந்தால்

அண்ணனுக்காக…

இலவு காத்த கிள்ளை போல

இத்தனை காலம்

இந்த வஞ்சி மகள் வரைந்தது எல்லாம்

தண்ணீர் கோலம்.

காதல் என்னும் பாத்திரத்தில்

தேன் எடுத்தானே… வெறும்

கௌரவத்தின் ஆத்திரத்தால்

போட்டுடைத்தானே

நான்கு கிளிகள் காதல் வலையில்

விழுந்தது ஏனோ?.. இதில்

ஒருவர் பாவம் மற்றவர் தலையில்

விடிந்தது ஏனோ.?.

ஆக மொத்தம் விதி வரைந்த

நாடகம் தானே…?

இதில் ஆளுக்கொரு பாத்திரத்தில்

நடித்திட தானே

ஒரு பொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப புதுமையாக இருக்குது

நாலு பேரு நடுவிலே

நூலு ஒருத்தன் கையிலே 

என்று அவர்கள் வாழ்க்கையை வைத்து பொம்மலாட்டம் நடத்தி கொண்டு இருந்தது விதி.

3

 (மருத்துவர் – நோயாளி உறவின் புனிதமான எல்லைகளை மருத்துவர்கள் மீறும் போது அங்கே உடைக்கப்படுவது இவர்களை கடவுளாக பார்க்கும் மக்களின் நம்பிக்கை. தாய்க்கும், கடவுளுக்கும், ஆசிரியருக்கும் அடுத்த ஸ்தானத்தில் வைத்து மதிக்கபடும் நடமாடும் தெய்வங்கள் மருத்துவர்களே. இந்த நம்பிக்கை உடைக்க படுமானால் அதனால் ஏற்படும் அதிர்வலைகள் என்றென்றும் நீங்கா காயத்தை, வடுவை, அழிவை உண்டாகி விடும்.)     

 

இன்று – 2019 ஆம் ஆண்டு          

இடம் – சமத்தூர் பொள்ளாச்சி,தமிழ்நாடு.

‘பொருள் ஆட்சி’, ‘பொழில்வாய்ச்சி என்ற பெயர், காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி என்று அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில் இவ்வூர் ‘முடிகொண்ட சோழநல்லூர்’ என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும். ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தளங்கள் உள்ள இடம்.

மயில்சாமி அண்ணாதுரை, சி.சுப்பிரமணியம், சிற்பி பாலசுப்பிரமணியம் என்ற சாதனையாளர்கள் பிறந்த ஊர். தென் தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை, பரப்பளவு சுமார் ஒரு ஏக்கர் பொள்ளாச்சியில் உள்ளது.

இயற்கை வளம் நிறைந்த பொள்ளாச்சியில் உள்ள அழகிய பேரூராட்சி சமத்தூர். இந்த பேரூராட்சி பொள்ளாச்சி – வால்பாறை நெடுஞ்சாலையில் பொள்ளாச்சியிலிருந்து 8 கி.மீ தொலைவிவிலும், கோயம்புத்தூரிலிருந்து 53 கிமீ தொலைவிலும் உள்ளது . இது 72 பாலயகாரர் / பொலிகர் ஆட்சியில் ஒன்றாய் இருந்த இடம்.

samathur villageக்கான பட முடிவுகள்

20 சகிமீ பரப்பும், 53 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நடுவே, வான் உயர நின்று இருந்தது அந்த மச்சு வீடு. பார்க்க ‘தேவர் மகன்’ படத்தில் வரும் ‘சிங்கநல்லூர் வீடு’ போலவே இருந்தது அந்த மாளிகை. ஒரு கணம் கண் மூடினால் ‘பெரிய தேவர்’ என்ற பெயரில் சிவாஜி கணேசன், தன் மீசையை முறுக்கி விட்டு வாயிலில் நிற்கும் காட்சி மனக்கண்ணில் வந்து போகும்.

SINGANALLUR HOUSEக்கான பட முடிவுகள்

டெரகோட்டா ஓடு கூரையுடன், வீட்டில் ஏதோ விசேஷம் என்று வெள்ளை அடிக்கப்பட்டு தனக்கே உரித்தான கம்பிரத்துடன் நின்றது அந்த மாளிகை. அந்தக்கால தேக்கு, அகில் மரங்களில் அசல் மரவேலை, ஓடு கூரையின் அடியில் உள்ள ராஃப்டார்க, கனமான கதவுகள், ஜன்னல் பலகங்கள் மற்றும் முற்றத்தை சுற்றியுள்ள தூண்கள் பழமையை பறைசாற்றி கொண்டிருந்தது.

SINGANALLUR HOUSEக்கான பட முடிவுகள்

இந்த வகையான கூரை நவீன கட்டுமான த்தில் காணாமல் போனதாலும், தொழில்நுட்ப அசுர வளர்ச்சியாலும், நகரங்களில் காணாமல் போய் விட்ட சிட்டு குருவிகள் இங்கே தங்கள் இன்னிசையால் அந்த இடத்தை சொர்க்கப்புரியாக்கி  கொண்டு இருந்தது.

க்ரானைட் தரைகளும்,பித்தளை கை வேலைப்பாடுகளும், தனித்துவமான பூட்டுதல் பொறிமுறையானது, திறப்பின் மையத்தில் ஒரு பெரிய மரத்தை மூலோபாயமாக கொண்டு இருப்பதையும், வீட்டின் முற்றம், பின்கட்டு என்று தடை இல்லா ஆற்றல் செல்லும் விதமாக அந்த வீடு அமைக்கப்பட்டு ‘Age old wisdom of architecture’ பற்றி சொல்லி கொண்டிருந்தது.

அந்த வீட்டிற்குள் பூஜை நடந்து கொண்டு இருப்பதற்கான மணியொலி சப்தம் சுற்றுப்புறத்தை நிரப்பியது. கையில் சாம்பிராணி கங்கு ஏந்தியவாறு வீட்டின் ஒவ்வொரு இடத்திற்கும் காட்டியவாறு வந்தாள் அஞ்சலி.

தலை குளித்து, நீர் ஒழுகாமல் இருக்க அதில் துண்டை கட்டி, நெற்றியில் வட்ட வடிவ சாந்து பொட்டுக்கு மேல் திருநீறும்,கீழே குங்குமமும் வைத்து, வாய் அபிராமி அந்தாதியை முணுமுணுக்க, கை சாம்பிராணி புகையை எல்லா இடத்திற்கும் பரவ செய்து கொண்டிருக்க அந்த மாளிகையை அவள் வலம் வந்த அழகை பற்றி வர்ணிக்க, புது மொழி ஒன்றினை உருவாக்கினால் கூட போதாது தான்.

SINGANALLUR HOUSEக்கான பட முடிவுகள்

‘அழகு.’ என்ற சொல்லுக்கான அர்த்தம் தேடினால் அதற்கு அஞ்சலி என்று தான் இருக்கும். இது படங்களிலும், விளம்பரங்களிலும் காட்டபடும் புற அழகு அல்ல. நம் வீட்டு பெண்களிடம் இருப்பது போன்ற அன்பு, பண்பு, பாசத்தால் மிளிரும் அழகு. ஒரு உன்னதம்,தெய்விகம் அதில் நம்மால் உணர முடியும்.

அஞ்சலியிடம் 5 அடி 6 அங்குலம்.60 கிலோ பளிங்கு சிற்பம்.34-26-34 என்ற உடலின் சிகரங்கள், பள்ளத்தாக்குதல் கொண்ட கம்பன் காவியம், ரவி வர்மன் ஓவியம் அவள்.

“வேலு அண்ணே!…விருந்தாளிங்க வந்துட்டே இருப்பாங்க. பால் அதிகமாய் தேவை படும் என்று பெரியாத்தா சொல்ல சொன்னாங்க. கோயிலுக்கு வழக்கமான அளவு அனுப்பிடுங்க அண்ணே.” என்றாள் அஞ்சலி அந்த வீட்டில் பால் கறக்க வந்த வேலுவிடம்.

“தேவி அக்கா!….சொன்னதை விட பூ நிறையவே தேவைப்படும் போலிருக்கு. கட்ட முடியும்னா சொல்லுங்க. இல்லை டவுனுக்கு கதிர் போவாங்க.அவங்க கிட்டே சொல்லி வாங்கி வர சொல்லிடறேன்.” என்றாள் அஞ்சலி.

“அட என்ன கண்ணு நீ…இத்தனை பொம்பளைங்க இருக்கோம். இன்னும் எத்தனை முழம் தேவைப்பட்டாலும் சொல்லு. நம்ம வீட்டு விசேஷம்.இதுக்கு டவுனுக்கு போய் வாங்கி வருவியோ? மாப்பிளை வூட்டுக்காரங்க வரதுக்குள்ள கட்டிப்புடுவோம்.” என்றார் தேவி என்றழைக்க பட்ட அக்கா ஒருவர்.

“முத்துமாரி…வாசலில் உன் கோலம் ரொம்ப நல்லா இருக்கும்மா. உன்னையும் உன் கோலத்தையும் போட்டோ எடுத்து வச்சி இருக்கேன். கதிர் டவுனுக்கு போனா பிரிண்ட் எடுத்து வர சொல்றேன். உன் தம்பி வேலன் எங்கே? அவனையும் உதவிக்கு வச்சிக்கோ.

என்ன தான் மாப்பிள்ளை வீட்டில் இருந்து இது எல்லாத்தையும் கவனிக்க ஆள் இருந்தாலும் நாமளும் வரவங்களுக்கு எந்த குறையும் வைக்க கூடாதுன்னு பெரியாத்தா சொல்லி இருக்காங்க. வேலை செய்யறவங்களுக்கு பார்த்து காபி, டீன்னு கொடுத்துட்டே இருக்க வேண்டியது உங்க பொறுப்பு.” என்றாள் கோலம் போட்ட முத்துமாரியிடம்.

“ரங்கன் அண்ணே!…மளிகை சாமான் போதுமா? இன்னும் தேவைப்படும் என்றால் எப்ப வேண்டும் என்றாலும் சொல்லுங்க. எதற்குமே கணக்கு வழக்கு பார்க்க வேண்டாம். பத்து நாள் ஆனாலும் இந்த விருந்தை பற்றி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மட்டும் இல்லை இந்த எட்டூரு ஜில்லாவும் பேசணும். உங்களுக்கு உதவ இன்னும் பத்து பேரை பெரியய்யா ஏற்பாடு செய்திருக்கார். போதுமா?” என்றாள் விருந்து சமைத்து கொண்டு இருந்த ரங்கன் என்பவரிடம்.

பம்பரமாய் சுழன்று ஒவ்வொரு வேலைகளையும் மேற்பார்வை இட்டவாறே, மற்றவர்கள் வயிறையும் வாடாமல் பார்த்து கொண்டு, அசந்தவர்களை சுறுசுறுப்பாகி கொண்டு இருந்தாள்.

சமத்தூரின் தலைக்கட்டு குடும்பம் ரத்தின சபாபதி அய்யாவுடையது. அந்த வீட்டின் செல்ல இளவரசி காயத்திரியின் திருமண நிச்சயம் அன்று. அதற்கு தான் கடந்த சில வாரங்களாகவே அந்த மாளிகை திருவிழா கோலம் பூண்டிருந்தது. ஊருக்கே விருந்து படைத்து கொண்டிருந்தனர். ரத்தின சபாபதி பேத்தியின் திருமணம் என்றால் ஊருக்கே விழா தானே.

அந்த வீட்டின் ஆணிவேர்களான பெரியய்யா ரத்தினம், பெரியாத்தா சௌபாக்கியம் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த அஞ்சலி, “பாட்டி” என்று அவரின் கால் பிடித்து அசைத்து எழுப்பி விட்டாள்.

“முருகா சரணம்….வேலவா சரணம்…எல்லோரும் நல்லா இருக்கட்டும்.” என்று அந்த அறையில் இருந்த முருகன் படத்தை கை கூப்பி கும்பிட்டவாறே எழுந்து அமர்ந்தார் சௌபாக்கியம்.

எதிரே அம்மன் சிலைபோல், துலக்கி வைத்த காமாக்ஷி விளக்கு போல் இருந்த தன் பேத்தியை கண்ட அவர் முகம் பிரகாசனமானது.

“தாயீ!… என் கண்ணே பட்டுடும் போல் அம்புட்டு அழகாய் இருக்கே” என்றவர் அஞ்சலிக்கு கையால் திருஷ்டி கழித்து, “நூறு வருஷம் எந்த குறையும் இல்லாம நிறைவாய் வாழனும் தாயீ நீ.” என்று அஞ்சலியை வாழ்த்திவிட்டு,”எல்லோரும் சாப்பிட்டாச்சா?வீட்டு ஆளுங்கஎழுந்தரிச்சாச்சா தாயி?” என்றார்.

சௌபாக்கியம் அசப்பில் பார்க்க அந்த கால நடிகை காஞ்சனாவை நினைவு படுத்தினார். கையெடுத்து கும்பிட தூண்டும் காருண்யம், தெய்வீகம் அவரிடம். நெற்றி நிறைய விபூதி பட்டையும்,சந்தனமும்,வட்ட வடிவ சாந்து பொட்டும்,கழுத்தில் துளசி, ருத்ராட்சமாலைகள் என்று ஏதோ அம்மன் சிலை தான் உயிர் கொண்டு அங்கு வந்து விட்டதோ என்று தோன்றும் வண்ணம் இருந்தார்.

ACTRESS KANCHANAக்கான பட முடிவுகள்

“வேலை செய்யறவங்களுக்கு ரெண்டு பந்தி முடிஞ்சாச்சு பாட்டி. இன்னும் மூன்று, நான்கு பந்தி போகும் என்று நினைக்கிறன். கதிர் அங்கே தான் மேற்பார்வை பார்த்துட்டு இருக்கார். வீட்டு ஆளுங்க மற்றவர்களை இப்போ தான் எழுப்ப போறேன். தாத்தாவுக்கும் உங்களுக்கும் சத்து மாவு கஞ்சி டேபிள் மேல் வைத்து இருக்கேன் பாட்டி குடிக்க மறக்காதீங்க.” என்றவள் அவர்களின்  குமாரன் வாஞ்சிநாதனையும், அவர் மனைவி, ராகினியையும் அடுத்து எழுப்பினாள்..

வாஞ்சிநாதன், ராகினியின் மகளே இன்று நிச்சயம் நடக்க போகும் காயத்திரி. ரெண்டாவது கதிர். இவர்களுக்கு மூத்தவன் ரகுராமன்.

கதிர் முன்னமே எழுந்து அஞ்சலி சொல்லும் வேலைகளை கவனித்து கொண்டு இருந்தான்.உறக்கத்தில் இருந்தார்கள் ரகுராமனும் அவன் மனைவி கமலாவும். அவர்களுக்கு இரு வயது முடிந்த ஆண் குழந்தை ஈஸ்வர். படு சுட்டி. இரவு முழுவதும் விழித்து யாரையும் தூங்க விடாமல் செய்து, ஹாய்யாக தூங்கும் வாண்டு. இவனுடன் மல்லுக்கட்டி, போராடி அவனை தூங்க வைப்பதற்குள் பொழுதே விடிந்து விடும்.

இன்று பெற்றோர் விழிப்பதற்குள் ஈஸ்வர் எழுந்து வந்து, அஞ்சலியிடம் குளித்து உடைமாற்றி, தன் சித்தப்பா கதிருடன் உணவு பரிமாறும் இடத்தில் பெரிய மனிதன் போல் கதிர் கை பிடித்து சுற்றி கொண்டிருந்தான்.

“அண்ணி!…அண்ணே!..”என்ற அஞ்சலியின் மெல்லிய குரல் கேட்டு என்னவோ ஏதோ என்று பதறி அடித்து எழுந்து அமர்ந்தனர். கை தானாக தங்களுக்கு நடுவே மகன் படுக்கும் இடத்தை வருடியது.

அவர்கள் பதற்றத்தை பார்த்த அஞ்சலி, ‘பெற்றோர்களின் தூக்கம் கூட பிள்ளைகளை பொறுத்தே…இப்போ குழந்தை என்ன செய்திட்டு…’என்று மனம் எங்கேயோ போக அதை அடக்கியவள்,”சாரி அண்ணி…சாரி அண்ணே. காலையில் பாட்டி கோயிலுக்கு போய் பொங்க வைக்கணும் என்று சொன்னார்கள். அதான் எழுப்பிட்டேன்.” என்றாள் மன்னிப்பு வேண்டும் விதமாக.

“ஐயோ …காயத்ரி நிச்சயம் இல்லை. ஏன் அஞ்சலி எழுப்பி விட்டு இருக்கலாம் இல்லை. நீ மட்டும் மட்டும் தனியாளாக எல்லா வேலையையும் செய்துட்டு இருக்கியே?” என்றவாறு எழுந்தாள் கமலம்.

“வேலையே இல்லை அண்ணி. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான் எல்லா வேலையையும் செய்ய ஆள் அனுப்பிட்டாங்களே. கதிரும் ஹெல்ப் செய்துட்டு தான் இருக்கார்.” என்றாள் அஞ்சலி.

“என்னது! கதிர் ஹெல்ப் செய்யறானா? உலகம் அழிய போகுதா என்ன?” என்றான் ரகு, தன் தம்பியை பற்றி நன்கு அறிந்தவன் என்பதால்.

கதிருக்கு உடம்பு வணங்கவே வணங்காது. அவனாவது வேலை செய்வதாவது!

“அவருக்கு மட்டும் காயத்ரி தங்கை இல்லையா என்ன? பாசம் அவருக்கும் தானே இருக்கும். போங்க அண்ணா கதிரை கிண்டல் செய்யலைன்னா உங்களுக்கு தூக்கமே வராதே.” என்றாள் அஞ்சலி.

“யம்மா தாயி உன் நண்பனை நான் எதுவும் சொல்லவில்லை. ஈஸ்வர் எங்கே?” என்றான் ரகு.

“கதிர் தான் வச்சி இருக்காங்க. நீங்க ரெடியாகுங்க. குழந்தை ரெடி செய்துட்டேன். அவனுக்கு இட்லியும் ஊட்டிடேன்.” என்றாள் அஞ்சலி.

“இன்றைய கதாநாயகி ரெடி ஆகிட்டாளா? நைட் உன்னை தூங்க விட்டாளா? இல்லை விடிய விடிய போன் பேசியே முழிச்சிட்டு இருந்தாளா?” என்றாள் கமலம்.

“மேடம்க்கு இனிமேல் தான் திருப்பள்ளி எழுச்சி பாடணும். இழுத்து போத்திட்டு தூங்கிட்டு இருக்கா.” என்ற அஞ்சலி அடுத்து அந்த வீட்டின் இளவரசி காயத்ரி தேவியாரின் அறைக்குள் நுழைந்தாள்.

Image may contain: 1 person, smiling, closeup

மலைப்பாம்பு படுக்கையில் புரண்டால் எப்படி இருக்குமோ, hibernation செய்யும் கரடி எப்படி தூங்குமோ அப்படி தூங்கி கொண்டு இருந்தாள் காயத்ரி. தூங்கும் அவள் முகத்தில் இருந்த குழந்தைத்தனம் அஞ்சலி முகத்தில் புன்னகையை வரவைத்தது.

‘இதுவே சின்ன குழந்தை. இதுக்கு திருமணம் என்றால் நம்ப முடியுதா பாரு? ஊரே இவ நிச்சயத்திற்காக ஓடியாடி வேலை செய்துட்டு இருக்கு. உறவு நட்பு எல்லாம் வந்து குவிய தொடங்கியாச்சு. இந்த அம்மா இன்னும் கனவு உலகத்தில் டூயட் பாடிட்டு இருக்கு. மிஸ்டர் ராகேஷ் உங்க தலைவிதியை யாரால் மாற்ற முடியும்?’ என்று காயத்ரிக்கு பேசி இருக்கும் மாப்பிள்ளை நிலை இப்பொழுதே இவள் மனக்கண்ணில் படமாய் ஓடியது.

“காயு!…காயு!…எழுந்திரு.” என்று பல முறை குலுக்கி, அடித்து எழுப்பியும் அவளிடம் அசைவில்லை.

தலைக்கு மேல் செய்ய வேலை இருக்கு. எருமை எழுந்திருக்குது பாரு.’ என்று முணுமுணுத்து அஞ்சலி தலையணை கொண்டு அவளை மொத்த ஆரம்பித்தாள்.

“எருமை!…எருமை!…உனக்கு இதே பொழப்பாய் போச்சு. பனி காலத்தில் இவ்வளவு காலையில் பேய் கூட எழுந்துக்காது. தூங்கவிடுடீ. என் செல்லம்ஸ்…ப்ளீஸ்…ப்ளீஸ்.” என்றவள் குரல் தேய்ந்து போக மீண்டும் அவளை நித்திரா தேவியிடம் சரண் புகுந்து விட்டாள் என்பதை கண்ட அஞ்சலி தன்நெற்றியில் தானே அடித்து கொண்டாள்.

“காயு!…எனக்கு ஆயிரம் வேலை இருக்குடீ…இன்னைக்கு உனக்கு நிச்சயதார்த்தம். நியாபகம் இருக்கா? வீட்டில் கோயிலுக்கு போய் பொங்கல் வைத்து படையல் போட எல்லோரும் ரெடி ஆகிட்டு இருக்காங்க.நாளைக்கு சேர்த்து வச்சி தூங்கிகோடீ…புஜ்ஜிமா.

இப்போ எழுந்திரிக்க போறியா இல்லை பாட்டியை கூப்பிடவா?” என்று காயத்திரியை உலுக்கி எழுப்பிவள், “இது வேலைக்கே ஆகாது…உனக்கு பாட்டி தான் சரி. நாலு அடி போட்டாங்க என்றால் தான் நீ கண் விழிப்பே…பாட்டி பாட்டி.” என்று கூப்பிட்டவாறு அறை வாயிலுக்கு சென்றாள் அஞ்சலி.

அறை வாயிலை தாண்ட முயன்றவளை தடை செய்தது காயத்திரியின் குரல். “உன் முடிவில் மற்றம் இல்லையா அஞ்சலி? எனக்காக கூட வரமாட்டாய், இங்கு இருக்க மாட்டாய் அப்படி தானே? என் கூட பிறந்தவர்களை விட, என் பெற்றோர்களை விட நீ தாண்டீ எனக்கு முக்கியம். இந்த திருமணம் நடக்க மட்டும் இல்லை கமலா அண்ணி, குட்டி ஈஸ்வர், அப்பா, நானும் உயிரோடு இருக்க கூட காரணம் நீ தாண்டீ. எல்லோர் மீதும் உயிராய் இருக்கே. பார்த்து பார்த்து அத்தனையும் செய்யுறே…ஆனால் ஏன் அஞ்சு…?” என்ற காயத்ரியின் குரலில் அத்தனை சோகம்.

கண்கள் அருவியாய் கண்ணீரை பொழிந்து கொண்டு இருந்தது மனதில் இருக்கும் துன்பம் என்னும் தீயை இதனால் அணைக்க முடியமா என்று?

அந்த துன்ப தீயினை அந்த வீட்டினரின் நெஞ்சினில் ஏற்றி விட்டு அவர்கள் கெஞ்சல், அழுகை, கதறல் எதனாலும் பாதிக்கப்படாதவளாய் நின்றாள் அஞ்சலி.

‘எங்க வாழ்க்கையை விட்டு போ…நீ இருந்தா எதுவும் நடக்காது…நீ இங்கே இருந்தா எங்க உயிர் போய்டும். ஏற்கனவே ஒருமுறை ரெண்டு உயிர் சாவின் விளிம்பிற்கு போனது உனக்கு போதலையா? எங்க உயிர் தான் வேண்டுமா? நாங்க செத்தா தான் உனக்கு நிம்மதியா? நீயே உன் கையால் எங்களை கொன்னுடு…போ போ எங்க கண்ணில் படவே படாதே.’என்று ஒரு ஆண் குரல் அஞ்சலி காதில் கத்தி கொண்டு இருந்தது.

 

இதயம் சமர்ப்பிக்கப்படும்

 

 

 

 

error: Content is protected !!