சமர்ப்பணம் 3

stalkingக்கான பட முடிவுகள்

(stalking-பின்தொடர்தல் என்பது heinous/கொடூர குற்றங்களில் ஒன்று. சட்டத்திற்கு புறம்பாக ஒரு ஆணையோ, பெண்ணையோ பின் தொடர்வது, கண்காணிப்பது, அவர்கள் போகும் இடங்களுக்குப் பின்தொடர்வது, தொடர் அழைப்புகள், டெஸ்ட் மெசேஜ் விடுப்பது,சமூக வலைத்தளத்தில் தொடர்வது, போலி id மூலம் நட்பாய் பேசுவது, பரிசுகள், கிப்ட்டுகள் அனுப்புவது, சைகை, ஜாடை போன்றவை ஒரு ஆணிற்கோ, பெண்ணிற்கோ அச்சம்(fear) துன்பம்(distress), கட்டுப்பாட்டை இழத்தல்(loss of control), ஏற்பட்டால் அது stalking எனப்படும். Stalking is not love.)

stalkingக்கான பட முடிவுகள்

அன்று –2017 ஆம் ஆண்டு             

  இடம் பெங்களூரு.       

ரோஜாமணி தான் தூக்கி வளர்த்த இரு பிள்ளைகளின் வாழ்வை நினைத்துப் புலம்பியவாறே தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்க, அது எல்லாம் சந்தோஷ் காதில் விழுந்தாலும் அவனால் மட்டும் என்ன செய்ய முடியும்? அவனும் நடந்து கொண்டிருக்கும் பொம்மலாட்டத்தில் ஒரு பார்வையாளன் மட்டுமே!

யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்தால் தான் அங்குப் பல வாழ்க்கை மலரும். ஆனால் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பக்க நியாயம், மிக நியாயமாய் இருக்கும்போது இவனால் மட்டும் என்ன செய்து விட முடியும்? அங்கு நடக்கும் அந்தப் பொம்மலாட்டத்தில் அனைவரும் நல்லவர்களே என்னும்போது அவன் யாரை என்று குறை சொல்வது!

அவர்கள் வாழ்க்கை நூலில் ஆடும் பொம்மைகள்போல மாறக் காரணம் ஒரு அரக்கன் என்ற உண்மை, பொம்மைகளாய் ஆடிக் கொண்டு இருக்கும் யாருக்குமே அந்த நொடிவரை தெரியவில்லை.

இனிமேல் தான் பல சூறாவளிகளை அவர்கள் சந்திக்க நேரும் என்ற உண்மை அறியாத சந்தோஷ், எதைப் பற்றியும் கவலைபடாதவனாய், மாடி படி ஏறி முதல் தளத்தில் இருந்த தன் அறைக்குள் நுழைந்தான்.

முதல் தளம் முழுவதும் அவனுடையது. இரண்டாம்  தளம் சுமியினுடையது. இந்த இரு தளத்திற்கும் அனுமதி இல்லாமல் யாரும் வரக் கூடாது. இந்தக் கட்டளை ரோஜாமணிக்கும் பொருந்தும் என்னும்போது மற்ற வேலையாட்கள் மாடி பக்கம் கண்ணைக் கூடச் செலுத்துவதில்லை.

உள்ளே நுழைந்தவனை வரவேற்றது ஆள் உயர புகைப்படடம். அவன்,  குழந்தை நிலா, காவ்யா மூவரும் ஒருவரை ஒருவர் அணைத்த படி இருந்தனர் அதை எப்போதும் காணும்போது தோன்றும் ஒரு மன நிறைவு  அன்றும் வரப் புன்னகையுடன் படுக்கையை நோக்கித் திரும்பினான்.

பேபி பிங்க் வண்ண சுவர் கொண்ட அந்த அறையில் இருந்த ரெட்டை கட்டிலில் அமர்ந்து புத்தகம் பிடித்து, பொம்மை பார்த்துக் கொண்டு இருந்தாள் நான்கு வயது நிலா.

அவள் வயதிற்கு உண்டான போதிய வளர்ச்சி இல்லாமல் பார்ப்பதற்கு ரெண்டு அல்லது மூன்று வயது என்று சொல்லும் அளவிற்கு தான்  இருந்தாள். அதனால் தான் ரோஜாமணி கூட மூணு வயசு பிள்ளையைத் தூக்கி கொண்டு சுத்திட்டு இருக்காங்க என்று புலம்பியது.

பாதி நாள் சுமியும், காவ்யாவும் வெளியே தங்க நேர்வது அந்த வீட்டின் செல்ல இளவரசி நிலாவுக்காகத் தான். நிலா என்ற பிஞ்சு உயிரைக் காப்பாற்ற அவர்கள் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.

‘எதைத் தின்னால் பித்தம் தெளியும்’ என்ற நிலை அவர்களுடையது என்பதை அந்தப் பெண்மணி அறிய வாய்ப்பு இல்லை தான்.

பிறக்கும் போதே பல்வேறு கோளாறுகளுடன் பிறந்த குழந்தை நிலா. தாய் வயிற்றில் இருந்தபோது சரியாகக் கவனிக்க படாமல், சரியாக வளராமல், இறந்து விட்டது என்று தூக்கி போடபட்ட குழந்தை அவள். அவளை எமனிடமிருந்து போராடி மீட்டது  காவ்யா.

mesrin pirzada with babyக்கான பட முடிவுகள்

‘பழி ஓர் இடம், பாவம் ஓர் இடம்’ என்பது போல் யாரின் மேலோ இருந்த கோபத்தை, நிலா வயித்தில் இருந்தபோது காட்டிய குற்றம், அவர்கள் மூவரையும் போடு பிடித்து ஆட்டிக் கொண்டு இருக்கிறது’ என்று நினைத்துப் பார்த்துப் பெருமூச்சை வெளியிட்டான் சந்தோஷ்.

உள்ளே வந்த அவனைக் கண்டதும், “ப்பா!” என்றாள் நிலா அவனை வரவேற்கும் விதமாகத் தன் கைகளைத் தூக்கி.

நிலா அருகே மற்றொரு குழந்தையென உறங்கிக் கொண்டு இருந்தாள் காவ்யா.

“ஹாய் டா angel!… டாடி மிஸ்ட் யு சோ மச்…. குட்டிமாவை பார்க்காம அப்பா ரொம்பவே அழுதுட்டேன்….” என்றான் சந்தோஷ் அந்தச் சின்னத் தேவதையின் புன்னகையை கண்டதும்.

“அய்ய… பிக் டாடி  அழலா?…. குட்டி பாப்பா நீ?” என்று இழுத்து இழுத்து பேசினாள் நிலா.

“ஓஹ் பிக் டாடி எல்லாம் அழமாட்டாங்களா செல்லம்? டாடியும் இனி அழமாட்டேன் கண்ணா. நீங்கப் போய்ப் பிரஷ் செய்துட்டு வாங்க. நான் உங்களுக்குக் காம்பிளான் கொண்டு வந்து இருக்கேன். குடிச்சுட்டு டாடி கூட ரன்னிங் வரீங்களா?” என்றான் சந்தோஷ்.

“டாடி!… நிலா பிக் கேர்ள். பிரஷ் செய்துட்டா… மம்மி  தூங்கறா” என்று அருகில் உறங்கிக் கொண்டு இருக்கு தாயை பற்றி அவனிடம் புகார் வாசித்தாள்.

“ஓஹ் lazy கேர்ள் மம்மி. இந்தாங்க இந்தக் காம்பிளான் குடிச்சுட்டு வாங்க angel. உங்க மம்மியை கும்மி எடுத்திடலாம்.” என்றவன் சத்துமா கஞ்சியை, ‘காம்பிளான்’ என்று சொல்லிக் கொடுக்க, ஒரு சொட்டு கூட மீதம் வைக்காமல் குடித்து முடித்த நிலா, தலையணை எடுத்துசன் சேர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த தாயை துவைத்து எடுத்தாள்.

“அம்மா!… யாராவது காப்பாத்துங்க…” என்ற அலறலுடன் எழுந்து அமர்ந்தாள் காவ்யா.

இவளே பார்ப்பதற்கு சிறு பிள்ளைபோல் தோன்ற இவளுக்கு நான்கு வயது மகள் என்றாள் நம்புவதற்கு கடினமே. சந்தூர் சோப்பு விளம்பரம் இவளைப் பார்த்துத் தான் எடுத்திருக்க வேண்டும். மாசு மருவற்ற சருமம்.

மீன், மான் கலவையாய் கண்கள். வில்லாய் வளைந்த புருவம், முகத்தில் எப்பொழுதும் குடி இருக்கும் புன்னகை அந்த முகத்திற்கு தனி தேஜஸை கொடுத்துக் கொண்டு இருந்தது. மஞ்சள் நிறம் பொற்சித்திரம், தபு சங்கரின் கவிதைகளுக்கு உயிர் வந்ததது போன்ற பெண்மை. மொத்தத்தில் ப்ரம்மாவின் அதி ஸ்பெஷல் படைப்பு.

Image may contain: one or more people, people sitting, people sleeping and indoor

வெகுநேரம் நடந்த pillow fight நிலாவிற்கு போர் அடித்து விட, “அப்பா… நிலா சுமிமா போற” என்று மேல்தளத்திற்கு  சிட்டாக ஓடினாள்.

நிலாவிற்கு எல்லாவற்றிக்கும் சுமி தான் வேண்டும். அம்மா கோண்டு நிலா. சந்தோஷ், காவ்யா, சேகர் இல்லையென்றாலும் கூட நிலா இருந்து விடுவாள். ஆனால் சுமி இல்லை என்றால் வீட்டையே ஒருவழி ஆக்கி விடுவாள்.

“பார்த்துப் போ நிலா.” என்று காவ்யாவும், சந்தோசும் ஒன்றாகச் சொன்னார்களே ஒழிய, நிலாவை பின் தொடர்ந்து செல்லவில்லை.

உடல் நலம் இல்லாத பிள்ளை என்றாலும் அவள் வேலைகளை அவளே செய்யப் பழக்கப் படுத்தி இருந்தனர்.

அவள் சென்றதும், “என்னடா…ரொம்ப சோர்வா தெரியரே! ரொம்ப வேலையா?” என்றான் சந்தோஷ் அவளுக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்தவாறு.

“அதெல்லாம் இல்லை சாண்டி. நிலா ஹெல்த் பயம் தான் அதிகம். ஒவ்வொரு முறை செக் செல்லும் போது எல்லாம் உயிர் போய் உயிர் வருது. நல்லவேளை இந்தத் தடவை இதயம் ரொம்பவே பலம் பெற்று இருப்பதாய் டாக்டர் சொன்னார்.

இப்படியே இவளைப் பார்த்துக் கொண்டால் போதுமாம். மறுபடியும் ஆபரேஷன் எல்லாம் தேவைப்படாது என்று சொன்னார். ரொம்பவே நோயாளி மாதிரி ட்ரீட் செய்ய வேண்டாம். மத்த குழந்தைபோல் நம்ம நிலாவும் நார்மல் தான் என்று சொன்னார்.” என்றாள் காவ்யா பெருமூச்சை விட்டு.

“அதைத் தான் நானும் சொல்லிட்டு இருந்தேன்… கேட்டா தானே? ஓடாதே, நடக்காதே, நிற்காதே என்று ஓவர்ரா போய்ட்டு இருக்கு. நானும் தாண்டீ pediatrician. மத்த குழந்தைகளுக்கே அப்படி பார்ப்பவன் நான். நம்ம குழந்தை என்று வரும்போது என்னை நம்பவே மாட்டிங்களே நீயும் சுமியும்.” என்றான் சந்தோஷ் கோபத்துடன்.

இது அவன் வழக்கமாய் சொல்லும் டயலாக் என்பதால் காவ்யா புன்னகை மட்டுமே புரிந்தாள். இப்படி வீர வசனம் பேசும் இவன் தான் நிலவிற்கோ, வீட்டில் யாருக்காவது ஒன்று என்றால் தான் டாக்டர் என்பதையே மறந்து, ‘அபியும் நானும் பிரகாஷ்ராஜ்’ போல் பதறி அடித்து ஓடுவான். நின்று யாருக்கு என்ன ஏது என்று கேட்க வேண்டும் என்ற எண்ணம் கூட இருக்காது.

“டேய்!… நீயே லூசுடா!… உன் பேச்சை எல்லாம் எவன் கேட்பான்?  ஐஸ்வர்யா கையில் சூடு தண்ணீர் கொட்டியதற்கு, குழந்தையைத் தூக்கி கொண்டு டாக்டர் வீட்டுக்கு ஓடும் பிரகாஷ்ராஜ்டா நீ.

எனக்கு ரொம்ப நாளாய் சந்தேகம். டாக்டர், டாக்டர் என்று சொல்றியே, உனக்குப் பட்டத்தை மெடிக்கல் கவுன்சில் கொடுத்ததா? இல்லை நீயே திருடிட்டு வந்துட்டியா?” என்றவள் சந்தோஷ் பற்களை நறநறவெனக் கடிக்க, அடுத்த நொடி பாத்ரூமிற்குள் நுழைந்து கதவை அடைத்து இருந்தாள்.

“ஏய்! எருமை!… குரங்கே!… வாடி வெளியே… இன்னைக்கு எனக்கு ரெண்டில் ஒன்று தெரிந்தாகணும். ஒரு கோல்ட் மெடலிஸ்ட் நானு… என்னைப் பார்த்து எப்படி இப்படியொரு கேள்வி கேட்பே நீ?” என்றான் சந்தோஷ் பாத்ரூம் கதவை உடைக்க முயன்றவாறு.

“எப்படி கேள்வி கேட்பாங்க! எல்லாரையும் போல் வாயால் தான் டாக்டர் சார். இது கூடத் தெரிலை நீ எல்லாம் என்ன டாக்டர்? ’16 வயதினிலே படத்தில் வரும் கோழி டாக்டர்’ தானேடா நீ?” என்று உள்ளுக்குள் இருந்து சந்தோஷ் கடுப்பை கிளறி கொண்டிருந்தாள் காவ்யா.

“உங்களுக்கு எல்லாம் என் அருமை தெரியலைடி…” என்றான் சந்தோஷ்.

“என்னை ஏன் குறை சொல்றே! சுமிக்கா தான் இந்த வேலை எல்லாம் செய்வது பாவம் அவங்களும் என்ன செய்வாங்க! தவறு செய்யும்போது இருக்கும் தெளிவு அதற்கான பலனை அனுபவிக்கும்போது தான் சுழற்றி அடிக்கிறது.

சாதாரணமாய் பிறக்கும் குழந்தைக்கே ஆயிரம் நோய் வருகிறது. இதில் கோபத்தில் அழிக்க நினைத்தால்! இப்படி தானே நடக்கும்?” என்றாள் காவ்யா.

பாத்ரூம் விட்டு வெளி வந்தவளின் கண்களில் கண்ணீர்.

5

(தேசிய அளவில், ஒவ்வொரு ஆண்டும் 7.5 மில்லியன் மக்கள் STALKING என்ற கொடிய அரக்கனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏறக்குறைய 6 பெண்களில் 1 பேரும், 17 ஆண்களில் 1 பேரும் தங்கள் வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் இந்த stalking கால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.  (சி.டி.சி, 2015)

காவ்யாவை தன் தோள் வளைவில் அணைத்து கொண்ட சந்தோஷ், “ஷ்ஷ்!…. விடுடீ. தெரிந்தா எல்லோரும் தவறு செய்யறாங்க! அந்த நொடி அப்படி தோன்றி விடுகிறது. அதற்கு நீ என்ன செய்ய முடியும் சொல்லு?

சொல்லிக் கொள்ளும் நிலையிலா நீ இருந்தே!… அந்தச் சமயம் ஒரே நேரத்தில் மூன்று பேருக்கு நீ பார்க்க வேண்டியதாய் தானே இருந்தது. இப்போ நினைத்துப் பார்த்தாலும் அதை எல்லாம் எப்படி செய்தே என்று இன்றும் மலைப்பாய் தான் எனக்கு இருக்கு. யோசித்து பாரு.

ஏதோ கெட்ட நேரம் நிலாவை அழிக்கத் துணிந்து எல்லாம் செய்தாகி விட்டது. கடவுள் இந்தக் குழந்தைக்கு ஆயுசு கெட்டி என்று எழுதி விட்டார்.” என்றான் சந்தோஷ்.

அழுதவளின் முதுகை நீவி கொடுத்து, அவள் பருக தண்ணீர் கொண்டு வந்து வர சென்றவன், ‘என்றும் இல்லாமல் இன்று என்ன வந்தது இவளுக்கு?’ என்ற எண்ணம் அலைமோத, சந்தோஷின் கண்களில் அன்றைய தேதி பட, அவனையும் அறியாமல் பெருமூச்சு ஒன்று வெளி வந்தது.

திடமாய் இருக்கும் காவ்யா உடைந்து அழுது கொண்டிருக்கும் காரணமும் புரிய தலையை குலுக்கி கொண்டான்.

நாள்காட்டி சொல்லாமல் சொல்லி கொண்டிருந்தது அன்றைய தினம் ஒட்டுமொத்தமாய் அவர்கள் வாழ்க்கை திசை மாறிய நாள் என்று. ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்பு அதே நாளில் தான் பலரின் வாழ்வு சிதைக்கப்பட்டது. அந்த நாளின் தாக்கம் தான் காவ்யாவிடம் அன்று எதிரொலிக்கிறது என்பது புரிய கண் மூடி நின்றான் சந்தோஷ்.

இவளை அப்படியே விட்டால் வாரம் முழுக்க கூட அழுது கரைவாள் என்பது அவனுக்கு தெளிவாக புரிய, “சரி, சரி பழசை நினைத்து மீண்டும் உன் உடம்பை கெடுத்துக்காதே. நீ நல்லா இருந்தா தான் நம்ம குழந்தை நல்லா இருப்பா. சரி ஸ்கூலில் என்ன பிரச்சனை?” என்றான் அவன் பேச்சை திசை திருப்ப, இல்லையென்றால் அவள் கடந்த காலத்தையே போட்டு குழப்பி கொண்டு இருப்பாளே!

சந்தோஷ் முயற்சி புரிய, தன்னை தானே சமாதானம் செய்து கொண்ட காவ்யா, முயன்று முறுவலித்தாள்.

அந்த முயற்சி முறுவல் சந்தோஷ் மனதில் பெரும் புயலை கிளப்பியது. ‘இவளை மீட்கவே முடியாதா! என் காதல் மலர்ந்து வாசம் வீசாமல் காகித பூவாய் போகுமோ!இவள் என் காதலை புரிந்து கொள்ளவே மாட்டாளா?’ என்று சந்தோஷின் காதல் கொண்ட மனம் ஊமையாய் அழுதது.

“எப்படிடா இப்படி அரக்கத்தனமாய் நடக்க மனசு வந்தது? அழுக்கு துணியில் சுற்றி குப்பை தொட்டியில் போட்டு இருந்தாங்களேடா!… தொப்புள் கொடி கூட முழுதாய் அகற்றாமல், உயிர் இருக்கா என்று கூட பார்க்காமல், சொறி நாய்கள் சுற்றி கொண்டு இருந்த இடம்டா அது.

நாங்க மட்டும் கொஞ்சம் தாமதமாய் போய் இருந்தால் அந்த நாய்கள்… அந்த கோரை பற்களை நினைத்தால்… இன்னும் நம்பவே முடியலையேடா!… அவனா அப்படி செய்ய துணிந்தான்? நினைக்கவே முடியலையே!” என்று குமுறி அழுதாள் காவ்யா.

அழுதவளை தாயாய் தாங்கி கொண்டான் அவன்.

சந்தோஷ் காவ்யாவின் கணவனா, நண்பனா, தோழனா, காதலனா. விடை!

https://www.youtube.com/watch?v=peY6w5n1n08

ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா

மௌனமே கேள்வியா!

அடி கண்ணில் ஈரமென்ன!

விதி என்ன? விடை என்ன?

இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல.

ஆம் அவர்கள் உறவு என்னவென்று வெளியில் சொல்லி விட முடியாது.

தன்னால் அங்கு ஒருவன், துடித்து கொண்டு இருப்பதை உணராத பேதையவள், தன்னை தேற்றி கொண்டு, “இன்னைக்கு ஸ்கூல் annual டே… வரவேண்டிய chief கெஸ்ட் உடம்பு சரி இல்லையாம். லாஸ்ட் minute. அதான் சுமி டென்ஷன் ஆகி என்னையும் ஆக்கிட்டாங்க. லைப் கேர் இல்லத்தை வேற பார்த்துட்டு வர லேட் ஆகிடுச்சு.” என்றாள் காவ்யா .

லைப் கேர் பள்ளியின் துணை முதல்வர் அவள் .

“உனக்கு தான் சுமி அக்காவை பத்தி தெரியும் தானே!… ரிலாக்ஸ். யார் தான் வராங்க இப்போ?” என்றான் .

“மானிட்டர் சுப்ரியா மேடம் யாரையோ கூட்டி வரேன் என்று சொன்னாங்க. நீ வரே தானே? அப்புறம் கடைசி நிமிடம் ஆபரேஷன், urgency என்று வழக்கம் போல் கதை சொன்னே மவனே கைமா தான்.” என்றாள் காவ்யா அவன் காதை திருகிய படி.

“என்னடா புஜ்ஜி, நம்ம ஸ்கூல், ‘பெஸ்ட் ஸ்கூல்லா’ தேர்வூ ஆகி இருக்கு. வராம இருப்பேனா? உங்க கூடவே தான் இன்னைக்கு முழுக்க இருக்க போறேன். நைட் வெளியே தான் சாப்பிடறோம். நிலாக்குட்டிக்கு தேவையான எல்லாம் ரெடி” என்றவாறு  வாசலை பார்த்தவன் புன்னகைத்தான் .

நிலாவை தூக்கிய படி நின்று இருந்தாள் அவன் அக்கா மிஸஸ். சுமித்ரா சேகர். “லைப் கேர்” என்ற பெயரில் இயங்கும் பல பள்ளிகள், கல்லுரிகள், அனாதை இல்லங்கள், தொழிற்கூடங்கள், விதவை மறுவாழ்வூ மையங்களை நடத்தும் ஆல் ரௌண்டர். சுமித்ராவுடன் சேர்ந்து அனைத்தையும் நிர்வகிப்பது காவ்யா.

nagma in saree pinkக்கான பட முடிவுகள்

சுமி எதற்கும் நிலாவை பிரிய மாட்டாள் என்னும் போது அந்த பள்ளியின் முழு நிர்வாகத்தினை செய்வது காவ்யா. அவளுக்கு தான் இந்த பரிசு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அவள் எங்கும் தன்னை வெளிப்படுத்தி கொள்ளவே மாட்டாள். சுமி, சந்தோஷ் என்ற திரையின் பின் நிற்பதே அவளுக்கு போதுமானதாய் இருந்தது.

“கவி! வாட் இஸ் திஸ்! இன்னுமா ரெடி ஆகலை! நாம தான் முன்னாடி போய் மேற்பார்வை பார்க்கணும். மினிஸ்டர் எல்லாம் வராங்க இல்லை. கமான் ஹர்ரி up டியர்…” என்றவள் சந்தோஷிடம்,

“இன்னும் அவ வாயை ஏன் பார்த்துட்டு நிக்கறே! கெட் ரெடி….” என்றவள் ஏற்கனவே தயார் ஆகி இருந்தாள்.

பிங்க்-கோல்ட் கலந்த பட்டு புடவையில் தேவதை மாதிரி இருந்தாள் சுமித்ரா .

“சிஸ்டர் செமையா இருக்கே!… மாமா உன்னை இப்படி பார்த்தார், ஆள் பத்து நாளைக்கு எழுந்துக்க மாட்டார்.” என்றான் சந்தோஷ் புன்னகையுடன் .

அதை கேட்டு ஒரு நொடி சுமித்ரா புன்னகை ஒரு நொடி உறைந்து போனது.

தாங்க முடியாத பாரத்தை தாங்குபவள் போல் தள்ளாடினாள் சுமித்ரா. கசந்த புன்முறுவல் அவள் உதட்டில் எழுந்தது. கண்கள் தானாய் கலங்க, ஒரு சிலையாய் நின்றவள் சட்டென்று வெகு வேகமாய் கீழே இறங்கி விட்டாள்.

“எருமை!… எருமை!… வயசாகுதே தவிர… மூளை உனக்கு வளரவே வளராது. அவங்களே டென்ஷனா இருக்காங்க. இதுல உன் மாமாவை ஞாபக படுத்தியே ஆகணும். அப்படியே அவர் இவங்களை பார்த்து பிளாட் ஆகிட்டு தான் மறுவேலை பார்ப்பாரு.

கண்ணு இருந்தும் லூசுத்தனம் செய்யும் பைத்தியம். சுமி அழகை பார்த்துட்டு ‘அழகே, அழகே தேவதை’ என்று பாட போறான்… வரும் ஆத்திரத்திற்கு அவன் கழுத்தை…. ச்சே குழந்தையை வச்சிட்டு… போய் வேலை இருந்தா பாரு. நிலா குட்டி! கம் லெட்ஸ் கெட் ரெடி.” என்றவள் அவன் தலையில் நங்கு என்று குட்டி சென்றாள் .

சுமித்ரா அழகி, அறிவாளி, திறமைசாலி.

‘எத்தனை அறிவாளிதனம், அழகு இருந்தென்ன காதல் என்ற ஒன்று வந்துவிட்டால் அனைவரும் முட்டாள்கள் தானே! இது எல்லாவற்றிக்கும் மேல் அவளாய் தேடி கொண்ட வாழ்க்கை.

ஒருவேளை நரகம், இல்லை இல்லை முடிவே இல்லாத சூழல் என்று சொல்ல வேண்டுமோ! என்று தான் போலியாய் அணிந்து இருக்கும் முகமூடியை கழற்றி விட்டு உண்மையாய் புன்னகைக்க போகிறாளோ! கடவுளுக்கு தான் வெளிச்சம்’ என்று நினைத்து கொண்டான் சந்தோஷ்.

அவனின் மனசாட்சி சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகி, ‘சார்வாள்  மட்டும் ரொம்ப ஒழுங்கோ? உன் அக்கா செய்யும் வேலையை தானேடா மடையா நீயும் செய்துட்டு இருக்கே!…. உன் அக்கா இன்னொருத்தியை மனதில் நினைத்து கொண்டு இருப்பவன் தான் கணவன், எல்லாம் அவன் மட்டும் தான் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறாள். கேட்டால் தெய்வீக காதலாம்.

அதே பேய் தானேடா உன்னையும் பிடிச்சு ஆட்டுது. ரெண்டு பேரும் கடைசி வரை இலவு காத்த கிளிகளாய் வாழ போறீங்க… அதானே! இதுல நீ சுமியை சொல்றே!’ என்று வறுத்து எடுக்க, கசந்த முறுவல் ஒன்று சந்தோஷ் இதழில் தவழ்ந்தது.

தன் எண்ணங்களில் உழன்று கொண்டு இருந்தவன் எவ்வளவு நேரம் அப்படியே நின்று இருந்தானோ, காவ்யாவின் கொலுசு ஒலி அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

கருநீல பட்டு சுடிதாரில் தேவதையாய் கிளம்பி இருந்தவள் சந்தோஷ் மூச்சினை நிறுத்தி இருந்தாள்.

‘இரு கண்களை மட்டும் ஏன் இறைவன் படைத்தான்! உடல் எல்லாம் கண்ணாய் இருந்திருந்தாலும் இவள் அழகை பார்க்க போதாது தான்… அழகி! பேரழகி!… கொல்லுரேடீ ராட்சசி’. என்று மனதிற்குள் முனகினான்.

வாய் திறந்து அவனால் சொல்லி விட முடியாது. சொல்லவும் மாட்டான்.

டைனிங் ஹால்லில் இருந்து சுமி குரல் கொடுக்க, மூவரும் கீழ் இறங்கி வந்தனர். நிலா நடுவே வர, காவ்யாவும், சந்தோஷ்சும் நிலாவின் இரு பக்கமும் அவள் கையை பிடித்து கொண்டு புன்னகையோடு படி இறங்கிய காட்சி அத்தனை பாந்தமாய் இருந்தது சுமியின் கண்களுக்கு. அவளையும் மீறி அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய,

“ரவைக்கு சுத்தி போடணும் பாப்பா… என் கண்ணே பட்டுடும் போலிருக்கே!… ஆத்தா!  மகமாயி! இந்த புள்ளங்களை நல்லா வச்சிக்கோமா.” என்ற ரோஜாமணியின் குரல் சுமியின் அருகில் இருந்து ஒலித்தது.

‘இது நிலைக்குமா! தம்பியின் வாழ்வூ இவளோடு இனியாவது நன்றாக அமையுமா!பொய்  முகமூடி அணிந்து வளம் வருபவன். என்று மனதார சிரிக்க போகிறான்! கானல் நீர் கவிதை அவர்கள் வாழ்வூ.

இந்த காதல் வராமலே இருந்திருக்கலாமோ! புயல் வரும் முன் எச்சரிக்கை அளிப்பது போல், இந்த காதல் வருவதற்கு முன்னறிவிப்பு ஏதாவது இருந்தால் நன்றாய் இருந்திருக்குமோ!

காதலை சுமக்க வேண்டிய மனசு சிலுவையை அல்லவா சுமந்து கொண்டிருக்கிறது. என் வாழ்க்கை தான் கேள்விக்குறியாகி ஆகி விட்டது என்றால், இதிலும் இவன் என் தம்பி என்று நிரூபிக்க வேண்டுமா!

ஒவ்வொரு நாளும் இன்றா, நாளையா, என்று எந்த பூகம்பம் வெடிக்க போகிறது என்று பயந்து வாழ்கிறோம். கடவுளே காப்பாற்று’ என்று மனதிற்குள் ஊமையாய் அழுதாள் சுமி .

அவளுக்கு தெரியவில்லை, அந்த சின்ன சிறு கூட்டினை கலைத்து, பிய்த்து எரிய போகும் சூறாவளி, அடித்து துவம்சம் செய்யும் ஆழிக்கால பேரலை, பொசுக்கி விடும் ஆயிரம் எரிமலைகள் சீற்றம் கொண்ட ஒருவன், மீண்டும் அவர்கள் வாழ்வில் திரும்ப வர அன்று அச்சாரம் இட பட போகிறது cheif கெஸ்ட் என்று வருபவர்கள் மூலம் என்பது மட்டும் முன்பே தெரிந்து இருக்குமானால் அந்த விழாவையே நிறுத்தி இருப்பாள் சுமி .

விதி என்று ஒன்று இருக்கிறதே! அந்த குயில் கூட்டினை கண்டு தன் கோர பல்லினை காட்டி இளிக்க ஆரம்பித்து இருந்தது .

மனிதன் நினைப்பதுண்டு!… வாழ்வு நிலைக்குமென்று!…

இறைவன் நினைப்பதுண்டு!… பாவம் மனிதனென்று.

6

(2016 Ministry of Home Affairs அறிக்கை படி இந்தியாவில் 7200 stalking வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 7073 சார்ஜ் சீட் பதிக்க பட்டு, 480 பேருக்கு மட்டுமே தண்டனை கிடைத்து உள்ளது.) 

இன்று –2019 ஆம் ஆண்டு.           

இடம் – சமத்தூர். 

ஊர் முழுவதும் மாலை நடக்கப்போகும் காயத்திரியின் நிச்சய விழாவுக்காக ஓடியாடி வேலை செய்து கொண்டு இருக்க, மகிழ்ச்சியில் வானில் பறந்து கொண்டிருக்க வேண்டிய காயத்ரியோ அழுது கொண்டிருந்தாள். அவள் அழுகைக்கு காரணமானவளோ முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாதவளாய் சிலையாய் நின்று கொண்டிருந்தாள்.

“காயு!… தேவை இல்லாமல் இப்படி எதற்கு எடுத்தாலும் அழுவதை நிறுத்து. நீ நாள் முழுக்க அழுது கொண்டு இருந்தாலும், லட்சம், கோடி தடவை கேட்டாலும் என் முடிவு மாறாது. இந்த வீட்டிற்கு உங்களோடு வரும் போது என்ன சொன்னேன், அதில் எந்த மாறுபட்ட கருத்துக்கும் இடம் இல்லை. என் முடிவு மாறாது.

சினிமாவில் சொல்வது போல், ‘நான் வரவில்லை என்றால், மண மேடையே ஏற மாட்டேன்’ என்று மறுபடியும் உளறினாய் என்றால், ‘வெல் இது உன் வாழ்வு, உன் திருமணம், உன் இஷ்டம்.’

இதற்கு மேல் இதில் எனக்கு ஒன்றும் இல்லை. டைம் ஆகுது பாரு… போய் ரெடியாகு.” என்ற அஞ்சலி அதற்கு மேல் நில்லாமல் வெளியே சென்று விட்டாள்.

பேசியவள் தன் வார்த்தைகளின் வீரியத்தை உணராமல் சொன்னாளோ, இல்லை உணர்ந்தே  வேண்டும் என்று சொன்னாளோ, ரெண்டில் எதுவாய் இருந்தாலும் காயத்ரி திகைத்து நின்றது என்னவோ உண்மை.

‘இதை வேறு மாதிரி தான் அணுக வேண்டும்’ என்று முடிவு செய்த பிறகே காயத்ரியால் கொஞ்சமாவது நிம்மதியாய் இருக்க முடிந்தது.

முயன்று தருவித்து புன்னகையுடன் காலை கடன்களை முடித்து, நீராடி வெளியே வந்த காயத்திரி கோயிலுக்கு செல்லும் போது கட்ட வேண்டிய பட்டு புடவை, அணிந்து கொள்ள வேண்டிய நகை, வைத்து கொள்ள வேண்டிய பூ, ஸ்லைடு, புடவை கிளிப் வரை எடுத்து வைக்க பட்டு இருந்தது அஞ்சலியால்.

அப்படி பேசி விட்டு போன அதே அஞ்சலி தான், இதோ இது அனைத்தையும் இவள் வசதிக்காக அடுக்கி வைத்து இருப்பவள். இதை என்ன நினைப்பது என்றே தெரியாமல் பொத்தென்று சேரில் அமர்ந்தாள் காயத்ரி.

அவள் மேலும் தன்னையே வருத்தி கொள்ளாமல் இருக்கவோ என்னவோ, இல்லை அஞ்சலி என்ற பெண்ணை பற்றிய நினைவே வர கூடாது என்பதற்காகவோ, இல்லை திருமண வீடு என்பதால் வந்து குவிந்து இருந்த உறவுகள், சொந்த,பந்தம் காயத்ரியை பார்க்க என்று அவள் அறைக்குள் படை எடுத்தனர்.

“இங்கே பாருங்கடீ கூத்தை… கண்ணை விழிச்சிட்டு கனவு கண்டுட்டு இருக்கா.ஏ! ஆத்தா! …காயத்திரி!… கோயிலுக்கு போகணும் நேரம் ஓடுதுன்னு அங்கே பெரியாத்தா எல்லோரையும் கம்பு எடுக்கா குறையாய் விரட்டிட்டு இருக்கு… நீ இன்னும் தயார் ஆகாம என்ன செய்துட்டு இருக்கே?” என்று நாளா பக்கம் இருந்தும் குரல் எழும்ப காயத்ரி ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

ஒரு மினி கிராமமே உள்ளே வந்து அவளை கோயிலுக்கு அழைத்து செல்ல தயார் செய்து கொண்டு இருக்க, சுற்றி நின்றவர்களை கண்டே மலைத்து நின்ற காயத்திரி, அஞ்சலி என்ற பெண்ணை மறந்தாள்.

ஜன்னல் அருகே இருந்து அறையின் உள்ளே நடக்கும் அத்தனை கூத்தினையும் கண்ட அஞ்சலி முகத்தில் மர்ம முறுவல்.

அத்தனை உறவு பெண்களை, காயத்ரியை ரெடி செய்ய உள்ளே அனுப்பியவளே அவள் தானே. இதற்கு மேல் அவர்கள் நிமிர்த்தும் பெண்டில் காயத்ரிக்கு தன் நினைவே வராது என்பது தெரிந்து விட, மெல்ல அந்த வீட்டின் பரபரப்பை விட்டு மெல்ல விலகி, பின்னால் பரந்து விரிந்து இருந்த தோட்டத்தில் தஞ்சம் புகுந்தாள் அஞ்சலி.

காயத்திரிக்கு மட்டும் இல்லை அந்த வீட்டினர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முக்கிய வேலையை கொடுத்து அவர்கள் கவனத்தை கோயிலுக்கு கிளம்பும் போது தன் மேல் விழாமல் பார்த்து கொண்டாள் அஞ்சலி. அவர்களும் வேலையில் மூழ்கி அஞ்சலியை மறந்து தான் இருந்தனர் திருமண வீட்டின் பரபரப்பால், வேலைகளால்.

தோட்டத்தில் இருந்த மரம்,அதை சுற்றி கட்டபட்டு இருந்த கல் மேடை அஞ்சலியை தாயென தன் மடியில் ஏந்தி கொண்டது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவள் அங்கே அமர்ந்து இருப்பதே தெரியாத வண்ணம் தோட்டத்தின் அமைப்பு இருந்தது.

village garden indiaக்கான பட முடிவுகள்

கண்ணை மூடி அமர்ந்திருந்தவளின் முகத்தில் அத்தனை நிம்மதி. அத்தனை சந்தோசம். இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று அஞ்சலி வேண்டாத தெய்வம் இல்லை என்று கூட சொல்லலாம். அத்தனை பிரச்சனைகளை இழுத்து வந்திருந்தது மாப்பிள்ளை ராகேஷ், காயத்திரியின் மீது வைத்திருந்த காதல்.

அந்த தடைகளை எல்லாம் காயத்ரி தாண்ட காரணம் அஞ்சலி.

‘இதோ இன்னும் சிறிது நேரத்தில் கோயிலுக்கு படையல் வைக்க கிளம்பி விடுவார்கள். மாலை மூன்று மணிக்கு இவர்களை விட்டுக் கிளம்பி சென்றால் நன்றாக இருக்கும். நடுவே ரெண்டு மணி நேரம் நிச்சயத்திற்கு இருக்கு.உற்றம், சுற்றம் எலாம் எப்படியும் ரெண்டு, மூன்று நாளுக்கு இங்கே தங்குவார்கள்.

அவர்கள் கிளம்பும் வரை கதிர் நடத்தும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் மாடி ரூம் தான் வீடு…. இந்த வீடும், மக்களும் கூட இன்னும் எத்தனை நாளைக்கோ!… இப்படி ஓடி கொண்டே இருப்பது தான் வாழ்க்கை என்று எனக்கு விதிக்கப்பட்டு இருக்கிறதா!’ என்று தனக்குள் பேசி கொண்டிருந்த அஞ்சலி, யாரோ தன்னை தொடுவதை உணர்ந்து கண்ணை திறந்தாள்.

அவள் எதிரே அந்த வீட்டின் தலைவிகளான சௌபாக்கியம், ராகினி நின்றிருக்க, அருகே சர்வாலங்கார பூஷிதையாய் நின்று இருந்தாள் காயத்ரி.

“பாட்டி!…இங்கே என்ன செய்யறீங்க! கோயிலில் படையல் வைக்க டைம் ஆகுது பாருங்க. கிளம்புங்கோ.” என்றும் அவர்களை விரட்டுவதிலேயே குறியாய் இருந்தாள் அஞ்சலி.

“எங்க குலசாமி!…எங்க வீடு காவல் தெய்வம் இங்கே தானேம்மா இருக்கு. காயத்ரி! காலில் விழு.” என்றார் சௌபாக்கியம்.

அஞ்சலி காலில் காயத்ரி விழ போக பதறி விலகினாள் அஞ்சலி.

“பாட்டி! என்னதிது… என்ன காரியம் செய்யறீங்க…காயு! எழுந்திரு” என்று பதறியவள் மண் தரையில் தனக்கு முன்னே, விழுந்து வணங்கி கொண்டிருந்த காயத்திரியை பதறி தூக்கினாள்.

“நீ ஆசீர்வாதம் செய் அஞ்சலி. கோடானகோடி தெய்வங்கள் ஆசீர்வாதத்திற்கு கூட உன் வாழ்த்தை ஈடு சொல்ல முடியாது. நாங்க நல்லா இருக்கணும் என்று நினைக்கும் பெண் தெய்வம் நீ!

இன்று இந்த குடும்பம் தலை நிமிர்ந்து நிற்பதற்கும், ஏன் மூன்று தலைமுறை உயிரோடு இருப்பதற்கும் காரணம் நீ தாண்டீ!…. உன்னை விடவா வேறு தெய்வம் இவளை வாழ்த்தி விட முடியும்? இவள் வாழ்வு கூட நீ போட்ட பிச்சை தானேடீ!… நீ தான்டீ இவளை வாழ்த்த வேண்டிய தெய்வம்.” என்றார் சௌபாக்கியம் கண்கள் கலங்கியவராய்.

அவர் மட்டும் அல்ல அங்கிருந்த அந்த நான்கு பெண்களும் கை கூப்பி அஞ்சலியை தான் வணங்கி கொண்டு இருந்தனர்.

“பாட்டி!… ப்ளீஸ் பாட்டி!… அம்மா! என்னம்மா… அண்ணி!… கையை கீழே இறக்குங்க… இப்படி எல்லாம் சொல்லி என்னை சங்கடப்பட வைக்காதீர்கள் பாட்டி. காயத்ரி மனசுக்கு அவ நல்லாவே இருப்பா. நேரம் ஆகுது பாருங்க பாட்டி கிளம்புங்கோ. எல்லோரும் காத்திருக்காங்க பாருங்க…” என்று அவர்களை காத்து இருந்த வேன்களின் பக்கம் தள்ளி விட்டாள்.

“எங்க கூட வாயேன் தாயீ…” என்றார் சௌபாக்கியம்.

“பாட்டி ப்ளீஸ்…. உங்களுக்கே தெரியும்… நான் எந்த கோயிலுக்கும், சுபகாரியங்களுக்கும், ஏன் வீட்டை விட்டே வெளியே செல்வதில்லை என்பது. என்னை இப்படியே விட்டுடுங்க ப்ளீஸ்.

கிளம்புங்க பாட்டி. நல்ல நேரம் முடிவதற்குள் பொங்கல் வைக்கணும் இல்லை.” என்றவளின் மனதை மாற்ற முடியாதவர்களாய் அந்த நான்கு பெண்களும் கலங்கிய கண்களுடன் கோயிலுக்கு செல்ல வேனில் ஏறினார்கள்.

வேனில் இருந்த அந்த வீட்டு ஆண்கள் ஆவலுடன் வாயிலை பார்த்து விட்டு சௌபாக்யத்தின் முகத்தை எதிர்பார்ப்புடன் பார்க்க, அவர் இல்லை என்பது போல் தலையாட்ட அவர்கள் முகம் வாடி போனது.

கோயிலுக்கு மன நிம்மதியுடன் செல்ல வேண்டியவர்கள், மன பாரத்துடன் சென்றார்கள் இந்த துன்பத்திற்கு வழி பிறக்க வேண்டுமே என்ற வேண்டுதலுடன். அஞ்சலி வழக்கம் போல் தான் இருந்தாள்.

ஆனால் கோயிலுக்கு சென்றவர்களுக்கு தான் மன நிம்மதியை இல்லாமல் ஆக்கி விட்டிருந்தாள்.

https://www.youtube.com/watch?v=IPC3yKW44Fs

எங்கிருந்தோ வந்தான்

இடைச்சாதி நான் என்றான்

இங்கிவனை யான் பெறவே

என்ன தவம் செய்து விட்டேன்?

சொன்னபடி கேட்பான்

துணிமணிகள் காத்திடுவான்.

சின்ன குழந்தைக்கு

சிங்காரப் பாட்டிசைப்பான்.

கண்ணை இமையிரண்டும்

காப்பது போல்

என் குடும்பம்

வண்ணமுறக் காக்கின்றான்.

வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

கண்ணனால்

பெற்று வரும் நன்மையெல்லாம்

பேசி முடியாது

நண்பனாய்,

மந்திரியாய்,

நல்லாசிரியனுமாய்,

(யதா யதா ஹி தர்மஸ்ய

க்லானிர்பவதி பாரத

அப்யுத்தானமதர்மஸ்ய

ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்)

பண்பிலே தெய்வமாய்,

பார்வையிலே சேவகனாய்

எங்கிருந்தோ வந்தான்

இங்கிவனை யான் பெறவே

என்ன தவம் செய்து விட்டேன்?

‘படிக்காத மேதை’ படத்தில் வரும் பாடல் வரிகளுக்கு சிறந்த உதாரணம் அஞ்சலி தான் என்றே தோன்றியது காயத்ரிக்கு.

எங்கிருந்தோ வந்து அவர்கள் உயிரை, உயிரினும் மேலான மானத்தை அல்லவா காப்பாற்றி இருக்கிறாள். வேன் கோயிலை நோக்கி ஓடி கொண்டிருக்க, காயத்ரியின் நினைவுகள் பின்னோக்கி செல்ல தொடங்கியது.

 

இதயம் சமர்ப்பிக்கப்படும்.

 

 

 

 

 

error: Content is protected !!