(stalking- செக்ஷன் 354D கீழ் இந்தியாவில் 2013ஆம் ஆண்டு, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கபட்டது.)
அன்று –2017 ஆம் ஆண்டு
இடம் -பெங்களூரு.
அன்பாலயத்திலிருந்து சுமி, சந்தோஷ், காவ்யா மூவரும் நிலாவுடன் தங்களின் தலைவிதியை மீண்டும் மாற்றப் போகும், சிலரை காண அந்தப் பள்ளி வளாகத்தினுள் நுழைந்தார்கள்.
பத்து மணிக்கு ப்ரோக்ராம். அதற்கு இவர்கள் எட்டு மணிக்கே வந்து மேற்பார்வை இட ஆரம்பித்து விட்டார்கள். நகரின் மிகப் பிரபலமான, தரம் வாய்ந்த ,அதே சமயம் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத, மாணவர்களின் அனைத்து வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளி அது.
அழகிய சூழலின் பின்னணியில், அமைதியை தத்தெடுத்து, நகரின் சலசலப்பிலிருந்து விலகி ,7 ஏக்கர் நில பரப்பில் அமைந்து இருந்தது அவர்களின் ‘லைப் கேர்’ பள்ளி. உள்ளே நுழையும் போதே அந்தப் பள்ளியின் பிரம்மாண்டம் நம்மைச் சூழ்ந்து கொள்வதை போன்ற பிம்பம் நம் மனதில் எழுந்து விடும்.
சிந்தனைமிக்க வடிவமைப்பில் அந்த வளாகம், அதன் சுற்றுசூழல், பல கவனமுள்ள அம்சங்கள் அனைத்தும் குழந்தையின் பாதுகாப்பு குறித்த பெற்றோரின் அச்சங்களை நிவர்த்தி செய்யும் வண்ணம் கட்டப்பட்டு இருந்தது.
பள்ளி விழாக்கோலம் பூண்டு இருந்தது. எதிலும் ஒழுங்கு, நேர்த்தி.சந்தோஷ் நிலாவுடன் அவள் வகுப்புக்குச் சென்று விட, காவ்யாவும், சுமித்ராவும் ஏற்பாடுகளைப் பார்வை இட்டபடி வந்தனர். வாழ்த்துக்களும், பரிசுகளும் இருவருக்கும் குவிந்த வண்ணம் இருந்தது. அனைத்தையும் மெல்லிய புன்னகையுடன், கம்பீரம் குறையாமல் பெற்று கொண்டு அவரவர் வேலையே பார்க்கச் சென்றனர்.
தலைமை விருந்தினர் ஒரு மத்திய அமைச்சர். அவர் அங்கு வந்து சேர்வதற்கு நேரம் அதிகம் ஆகும் என்ற தகவல் இவர்களை வந்து சேர, பதறியவர்கள், அடுத்த தலைமை விருந்தினர் பத்தி அந்த அளவு கவனம் வைக்காமல் போனார்கள். ஒரு வேலை கவனம் வைத்து இருந்தால் சுமித்ரா, காவ்யாவை வீட்டை விட்டே வெளியே வர விட்டு இருக்க மாட்டாள்.
ரெண்டாவது தலைமை விருந்தினரையும் அவர் குடும்பத்தையும் தாங்கிய அந்தப் பொலிரோ பள்ளி வளாகத்தில் நுழைய, மானிட்டர் சுப்ரியா அவர்களைப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அந்தப் பொலிரோவிலிருந்து நால்வர் இறங்கினார்கள்.
பெரியவர் முரளி. சென்னையின் மிகப் பெரிய தொழில் அதிபர். தொடர்ந்து எட்டு முறை சிறந்த தொழிலதிபருக்கான விருதை வாங்கியவர். பல்துறை வல்லுநர். மிகத் தொன்மை வாய்ந்த தொழில் சாம்ராஜ்ய சக்ரவர்த்தி.
உடன் இறங்கிய பெண்மணி அவர் தர்மபத்தினி ரேணுகாதேவி. அவர் நடிகர், ‘ஜெயப்ரகாஷ்’ போலவும், அவர் மனைவி, ‘நடிகை பவித்ரா’ போலவும் இருந்தனர்.
டிரைவர் சீட்டிலிருந்து இறங்கினான் அவர்களின் மருமகன் விஷ்ணு. மறுபக்கத்திலிருந்து இறங்கினாள், முரளி மகள் தனுஸ்ரீ. தனுவின் தோள் வளைவில் அவளின் ரெண்டு வயது குழந்தை சாதனா உறங்கிக்கொண்டிருந்தாள்.
அவர்களிடம் சுப்ரியா பேசிக் கொண்டு இருக்க, இறங்கிய விஷ்ணு சுற்றும் முற்றும் பார்த்து, தான் வந்திருக்கும் இடம் எது, யாருடையது என்பது சில நொடிகள் புரியாமல் விழித்தவாறு நின்றான்.
எந்த நொடி புரிந்ததோ விஷ்ணுவின் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்தது.
‘கடவுளே!… கடைசியில் இன்று இங்கேயா! எங்கே என்று கேட்டு இருக்க வேண்டுமோ! பெரியவர்களை அனுப்பி விட்டு, தனுவையாவது நிறுத்தி இருக்க வேண்டும். மடத்தனம். காரை எடுக்கச் சொன்னதும் எடுத்தது என் மடத்தனம்.
திருப்பதிக்கு நடந்தே வரேன் இறைவா. இன்னைக்கு பிரியாணிக்கு ஆடு நான் ஆகாம தப்பிக்க வை.’ என்று ஊரில் உலகத்தில் உள்ள எல்லா கடவுளுக்கும் கோரிக்கை மனு அனுப்பி கொண்டு இருந்தான்.
‘சாரி தம்பி எந்தக் கடவுளும் பிரீயா இல்லை. உன் கோரிக்கை மனு நிராகரிக்கப் பட்டு இருக்கிறது’ என்று புன்னகைத்து விதி.
மற்றவர் அறியாமல் யாருக்கோ அவன் கால் செய்ய, எதிர் புறம் இருந்தவர் அவன் அழைப்பை ஏற்கவே இல்லை. ஒரு வேளை ஏற்று இருந்தால் பிற்காலத்தில் நடக்க போகும் பல விபரீதங்களை, இன்னொருவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்தி இருக்கலாமோ என்னவோ!
இவர்களைப் பிரின்சிபால் அறைக்கு அதாவது சுமியின் அறைக்குச் சுப்ரியா அழைத்துக் கொண்டு வர, ரவுண்ட்ஸில் இருந்த சுமி புன்னகையுடன் இவர்களை நோக்கிச் சென்றாள். தூரத்திலிருந்து, ‘யாரோ’ என்று புன்னகையுடன் நெருங்கியவளின் புன்னகை அருகில் சென்றதும், யார் அவர்கள் என்று இனம் கண்டு உதட்டில் உறைந்து போனது.
முகம் வெளுக்க, கைக்கால் நடுங்க, எங்கே மயக்கம் போட்டு விழுந்து விடுவோமோ என்று நடு வராண்டாவில் நின்றாள் சுமி. அடுத்து என்ன யோசிப்பது, செய்வது என்று ஒன்றும் புரியாமல். 1000 வாட்ஸ் ஷாக்.
அருகே இருந்த தூண் மட்டும் ஆதரவாய் இல்லாமல் இருந்திருந்தால் சுமித்ரா நிச்சயம் கீழேயே விழுந்து இருப்பாள்.
அவர்களுக்குத் தான் சுமி யார் என்று தெரியாது. ஆனால் சுமிக்கு வந்தவர்களின் ஜாதகமே அத்துப்படி. அன்று அவர்கள் வீட்டில் என்ன சமையல் என்பது உட்பட அவளுக்குத் தகவல் வந்து விடும் விஷ்ணு மூலம்.
அவர்களுக்கு மட்டும் சுமி யார் என்பது தெரிய வந்தால் முதல் கொலை அவளுடையதாகத் தான் இருக்கும். பின்னால் இவளைவிட அதிக பதட்டத்தில் வந்துகொண்டிருந்தான் விஷ்ணு.
அவனைக் கண்டதும் சுமியின் கண்கள் நெருப்பு ஜூவாலைகளை கக்க, திருதிருவென விழித்தான்.
சட்டென்று பார்க்க நடிகர், ‘கணேஷ் வெங்கட்ராமன்’ மாதிரி முகமைப்பு, உயரம், உடல் கட்டில் இருந்தான்.
‘எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை’ என்ற வகையில் அவன் யாரும் அறியாமல் தலை அசைத்தான்.
அவனுமே முள்ளின் மேல் நிற்பது போல் தான் துடித்துக் கொண்டு இருந்தான். அவன் பார்வை அடிக்கடி தன் மனைவி தனு மேல் படிந்து சுமித்ராவின் மேல் பாய்ந்தது. டென்ஷன் தாங்க முடியாமல் அவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும் நிலையில் இருந்தான் அவன்.
‘போன் எடுத்துத் தொலைங்க’.
நூறு முறைக்கும் மேல் அழைத்தும் எதிர் புறம் அவன் அழைப்பை ஏற்கவில்லை.
’இன்னைக்கு சங்கு நமக்கு நிச்சயம். வேதாளம் முருங்கை மரம் ஏறினால் எத்தனை மாதம் கழித்து இறங்க போகிறதோ?’ என்று மனதிற்குள் அவன் எதிர்காலம் கண் முன்னே விரிந்தது.
போன் காட்டி, ‘கால் ஏற்க படவில்லை’ என்று இவன் சைகையில் சொல்ல, சுமித்ராவின் டென்ஷன் மேலும் கூடியது.அவளும் கால் செய்ய அழைப்பு ஏற்க படவில்லை.
அங்கே இருவர் திணறி, துடித்து, தவித்துக் கொண்டு இருப்பதை அறியாத, முரளி கிருஷ்ணா குடும்பம், தனுஸ்ரீ உடன் சுமித்ராவை நோக்கி வந்தனர்
சுப்ரியா வழியில் சுமி நிற்பதை கண்டு, “சார் இவங்க தான் மிசஸ் சுமித்ரா சேகர். எங்க பள்ளியின் நிர்வாகி. தாளாளர்.” என்று அறிமுகம் செய்து வைக்க, சுமியின் கரங்கள் தானாய் கூம்பியது.
“வணக்கம்மா என் பெயர் முரளிகிருஷ்ணா. இவ என் சக தர்மினி ரேணுகா. இவர் என் மாப்பிள்ளை விஷ்ணு. இது தனுஸ்ரீ. என் மகள். அவள் கையில் உறங்கிக் கொண்டிருப்பது என் பேத்தி சாதனா.” என்று தன் குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார் முரளிகிருஷ்ணா.
“ஹேய்!… நீ!… நீ!… நீங்க சுமித்ரா தானே!… சென்னையில் மீட் செய்திருக்கோம். நியாபகம் இருக்கா?” என்ற தனுஸ்ரீயின் கேள்விக்கு மெல்லிய புன்னகை புரிந்தாள் சுமி.
“உங்களை எப்படி மறக்க முடியும் தனு?. எப்படி இருக்கீங்க? பார்த்து நான்கு வருடங்களுக்கு மேலாச்சு.” என்றாள் சுமி.
“ஹ்ம்ம்!… ஜம்முனு இருக்கேன். இவர் தான் என் கணவர் விஷ்ணு. இந்த இளவரசி என் மகள் சாதனா. மாம், டாட் சுமி என் பிரென்ட்.” என்ற தனுஸ்ரீயின் முகத்தில் அத்தனை பரவசம்.
குழந்தையை விஷ்ணுவிடம் கொடுத்து விட்டு, சுமித்ரா கைகளைப் பிடித்துக் கொண்டு கல்லுரி நாட்களைப் பற்றித் தனு பேச ஆரம்பிக்க, வெளியே புன்னைகைத்தாலும் உள்ளுக்குள் சுமித்ராவுக்கும், விஷ்ணுவிற்கும் ஆயிரம் பந்தய குதிரைகள் ஓடிக் கொண்டு இருந்தது.
‘இப்போ கையைப் பிடிக்கிறவ இங்கே இருப்பவர்கள் யார், சுமித்ரா யார் என்று தெரிந்தால் அடுத்து பிடிக்கப் போவது கழுத்தை தான்.அது மட்டும் உறுதி.’ என்ற எண்ணமே சுமித்ரா, விஷ்ணு எண்ணமாய் ஓட இருவரும் மற்றவர்கள் அறியாத வண்ணம் பார்வையை பறி மாறிக் கொண்டார்கள்.
பல வருடம் கழித்து சந்தித்த தோழி என்பதால் சிறு குழந்தையின் குதூகலத்துடன் பேசிக் கொண்டு இருந்தாள் தனு.
பேச ஆரம்பித்தால் தனுவின் வாய் மூடவே மூடாது என்பதை அறிந்த அவர்கள், வளர்ந்தாலும் இன்னும் சிறு பிள்ளையாய் இருக்கும் தனுவின் போக்கை ரசித்தவாறு நின்றார்கள் அவள் பெற்றோர்.
இப்பொழுது சிறு குழந்தையாய் ஆர்ப்பரிக்கும் இதே தனு கோபம் என்ற ஒன்று வந்தால் எந்த அளவிற்கு ராட்சசியாய் மாறுவாள் என்று தெரிந்த சுமித்ரா, விஷ்ணு அடுத்து என்ன சொல்வது, செய்வது என்று புரியாமல் நின்றார்கள்.
“தனு! அப்பா அம்மா ரொம்ப நேரமாய் இங்கேயே நிக்கறாங்க. உள்ளே சென்று பேசலாமே.”என்ற சுமித்ரா தனுவை அங்கேயே நிறுத்தி வைத்துப் பேசினால் என்ன விபரீதம் வரும் என்று அறிந்தவளாய் கொஞ்ச நேரத்திற்கு சமாளிக்க என்று அவளைத் தன் அறைக்கு அழைத்துச் செல்ல முயன்றாள் என்று தான் சொல்ல வேண்டும்.
“வாங்க உள்ளே போகலாம்.” என்று தன் அறைக்கு அழைத்து வந்தவள் அவர்களை அமர செய்து, அவர்கள் பருக சத்துமாவு கஞ்சியை கொடுத்தாள்.
“இது என்னமா புதிதாய் இருக்கு? எல்லோரும் காபி, டீ, மோர், ஜூஸ் கொடுப்பாங்க. நீங்க சத்துமா கஞ்சி தரீங்க?’ என்றார் முரளிகிருஷ்ணா.
கேள்வி வந்ததே தவிர அவர்கள் கொடுக்க பட்ட கஞ்சியினை குடிக்க மறுக்கவில்லை.
“சார் லைப் கேர் என்று பெயர் வச்சிட்டு பள்ளி மாணவர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவில்லை என்றால் எப்படி சார்?” என்ற சுமி அழகாய் புன்னகைத்தாள்.
அந்த புன்னகை அவள் கண்களை எட்டவில்லை. நொடிக்கொரு தரம் அவள் பார்வை வாயிற்பக்கம் சென்று கொண்டு இருந்தது. விஷ்ணுவின் கண்களும் அதையே தான் செய்து கொண்டிருந்தது.
“நானே கேட்கணும் என்று நினைத்தேன். அது என்ன உங்களின் எல்லா நிறுவனத்திற்கும், ‘லைப் கேர்’ என்று பெயர் வைத்து இருக்கீங்க! புதுசாய் இருக்கே” என்றாள் தனுஸ்ரீ.
“வாழ்க்கை ரொம்ப விலைமதிப்பற்றது. கண் சிமிட்டும் நொடியில் எது வேண்டும் என்றாலும் நடந்து விடலாம். வாழ்க்கையே தலைகீழாய் மாறி போவதும் உண்டு.
அப்படிபட்ட வாழ்க்கையை கேர் எடுத்து பார்த்து கொள்ள வேண்டும்,மற்ற உயிரையும் தன் உயிராக பார்த்து கொள்ள வேண்டும், நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் யோசித்து எடுக்க வேண்டும் என்று இளம் தலைமுறைக்கு சொல்லி கொடுக்க வேண்டும், என்பது இந்த பள்ளி நிறுவனரின் விருப்பம்.” என்றாள் சுமி.
அவள் வார்த்தைகளில், ‘ஆயிரம் உள் அர்த்தம் இருப்பது’ அங்கிருந்த விஷ்ணுவிற்கு மிக நன்றாய் விளங்கியது.
“அய்யோ!… நீ பார்க்க மட்டும் சூப்பர்ரா இல்லை… உன் பேச்சும் செமையா இருக்கு. வந்த உடனே சொல்லணும் என்று நினைத்தேன். நீ அப்போவே செம அழகு தான். இப்போ உன் அழகு இன்னும் கூடி போய் இருக்கு சுமி.
உன் கணவர் உன்னை லவ்ஸ் செய்துட்டே இருக்கார் போலிருக்கு. அதான் அந்த சந்தோசம் முகத்தில் அப்படியே தெரியுது. பார்க்க அவ்வளவு அழகாய் இருக்க.” என்றாள் தனுஸ்ரீ.
மெல்லிய புன்முறுவல் எட்டி பார்த்தது சுமியின் இதழில்.அது கசந்த புன்முறுவல் என்பதை விஷ்ணு கண்கள் கண்டு கொண்டது.
“நன்றி… யெஸ் என் கணவர் காதலிச்சுட்டு தான் இருக்கார்.” என்று ஒரு மாதிரி குரலில் சொன்ன சுமி
”ஆனால் உங்களைவிட நான் அழகு இல்லைங்க… உங்களுக்கு அருகே கூட இன்னும் வர முடியாமல் தான் இருக்கேன். நெருங்க தான் முடியலை. ” என்றாள்.
“போங்க சுமி கிண்டல் செய்யாதீங்க. நான் எல்லாம் அழகு என்றால் எல்லோரும் சிரிப்பாங்க.” என்ற தனுஸ்ரீ அசப்பில் நடிகை, ‘பூனம் கவுர்’ மாதிரி அழகாய் இருந்தாள்.
“உங்க கணவரின் கண்ணுக்கு என்றுமே நீங்க அழகு தானேங்க.” என்று சுமி சொல்ல, தனு விஷ்ணுவை பார்க்க, அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டு இருந்தது.
தனு தன்னை பார்ப்பதை கண்டவன் முகத்தைச் சீராக்கி கொண்டு, அவளைக் கண்டு கண் சிமிட்ட, வெட்கத்துடன் முகத்தை தனு வேறு புறம் திரும்பி கொண்டதும், அவனின் சுடு விழிகள் மீண்டும் சுமியை பொசுக்கியது.
“யெஸ் மிசஸ் சேகர். என் மனைவி தனு, ‘அவள் கணவனான என் கண்களுக்கு’ என்றுமே அழகாய் தான் தெரிவாள்.” என்றான் விஷ்ணு ‘அவள் கணவனான என்’ என்ற வார்த்தையை மட்டும் அழுத்தி கூறினான்.
சுமிக்கும் தன் தவறு புரிந்தே இருந்தது தான். என்றாலும் உண்மை, நிதர்சனம் என்ற ஒன்று இருக்கிறது தானே! அதை தினம் பார்த்து, உள்ளுக்குள் கருகி கொண்டிருப்பவள் தானே அவள்.
கசந்த புன்முறுவல் சுமி உதட்டில் இருப்பதை கண்ட விஷ்ணு முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டான்.
“சுப்ரியா மேடம்!… நீங்க இவங்க கூடவே இருந்து கவனிச்சுக்கோங்கோ… சாரி சார் எனக்கு வேலை இருக்கு. விழா ஏற்பாடு மேற்பார்வை பார்க்கணும். தவறாய் நினைக்க வேண்டாம்.” என்று எழுந்தாள் சுமி.
அதற்கு மேல் அங்கு இருந்தால் தன்னை கட்டுப்படுத்தி கொள்வது முடியாது என்று சுமித்ராவுக்கே புரிந்து விட்டது.
‘வாய் விட்டு கதறி அழாமல் காப்பாத்து ஆண்டவா.’என்று வேண்டுதலுடன் எழுந்தாள் சுமித்ரா.
“நீங்க போங்க. எங்களை பற்றி கவலை படாதீங்க. இது எங்க ஸ்கூல். நீங்க எவ்வளவூ பிஸி என்று பார்த்தாலே தெரிகிறது. நீங்க உங்க வேலையை பாருங்க. விழா முடிஞ்சு கடைசி ஆளாக தான் கிளம்புவோம்.
எல்லா வேலையும் ஒதுக்கி வைச்சுட்டு வந்து இருக்கோம். போன வருடம் உங்க ஸ்கூல் cultural யு tube பார்த்துட்டு செம்ம டிஃபரென்ட்டா இருக்குனு எங்க மக தனு சொன்னா. இந்த தடவை சுப்ரியா மேடம் கூப்பிட்டதும் எல்லா வேலைகளையும் ஒதிக்கிட சொல்லிட்டா என் மக. கேர்ரி ஆன்.” என்றவர்களின் பேச்சை கேட்டு தலை சுத்தி நின்றாள் சுமித்ரா.
தலை சுத்தி நின்றது விஷ்ணுவும் தான். வெளியே செல்லும் கடைசி நொடியில் விஷ்ணு, சுமி இருவரின் பார்வையும் ஒரு நொடி சந்தித்து மீண்டது. அந்த ஒரு நொடி பார்வையில் ஆயிரம் தகவல்களை தாங்கி நின்றது.
அவர்கள் சொன்னதை கேட்டு சிரிப்பதா, அழுவதா என்று புரியாமல் எல்லா பக்கமும் தலை அசைத்து விட்டு சுப்ரியாவிடம் ஜாடை காட்டி விட்டு ஓட்டமும் நடையுமாக சந்தோஷ், காவ்யாவை நோக்கி விரைந்தாள். அவள் நேரம் அந்த நேரம் பார்த்து மத்திய அமைச்சரின் கார் உள்ளே நுழைந்தது .
“கடவுளே!… என்ன சோதனை இது?” என்றவள் வரவேற்பு கமிட்டி உடன் சென்று அவரை வரவேற்று மீண்டும் தன் அறைக்கே அழைத்து சென்றாள்.
பரஸ்பரம் இரு விழா கெஸ்ட் ரிலாக்ஸ் செய்து கொள்ள, விழா ஆரம்பிக்கும் கட்டாயத்திற்கு ஆளாக்க பட்ட சுமித்ரா வேறு வழி இன்றி விருந்தினர்களுடன் மேடை ஏறினாள்.
சுமியால் அங்கும் இங்கும் நகரவோ, சந்தோஷ், காவ்யாவிற்கு எச்சரிக்கை செய்யவோ முடியவில்லை. நேரம் ஆக ஆக அவள் பதட்டம் கூடி போனது.
சுமியின் பதட்டத்தை, அவள் அருகில் அமர்ந்து இருந்த தனு பார்த்து கொண்டு தான் இருந்தாள்.
“அய்யோ சுமித்ரா! ரிலாக்ஸ்… எதுக்கு இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க? லேட் ஆனா எங்களுக்கு பரவாய் இல்லைங்க. நீங்க உங்க வேலைய பாருங்க.” என்று தனு சுமிக்கு சமாதானம் சொல்ல, தன் பதட்டத்தின் அதி முக்கிய காரணமே, ‘அவள் மட்டும் தான்’ என்பதை அவளிடமே எப்படி சொல்வது என்று புரியாமல் விழித்தாள் சுமி.
இன்று நடக்க போவது எதுவும் நல்லதாய் நடக்க போவதில்லை என்பது சுமிக்கும், விஷ்ணுவிற்கும் தெள்ள தெளிவாக விளங்கி விட்டது. அதே சமயம் அந்த பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து இறங்கி கொண்டிருந்தாள் காவ்யா.
சந்தோஷ் நிலா உடன் மேடையின் கீழ் போடப்பட்டிருந்த முன் இருக்கையில் வந்து அமர்ந்தான். முரளி கிருஷ்ணா, ரேணுகா அதி முக்கியமாய் தனு பார்வையில் படும் படி.
சந்தோஷிற்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை என்பது ஒருபுறம், நிலாவின் மேல் கவனமாய் இருந்தவன் சுமி,விஷ்ணுவின் பதட்டமான செய்கைகளையோ, ஜாடைகளையோ, கை அசைப்புகளையோ கவனிக்கவே இல்லை.
விதி தன் விளையாட்டை மீண்டும் ஆரம்பித்து இருந்தது.
(stalking என்ற பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி,வக்கிர மிருங்கங்களால் வேட்டையாடப்படும் பெண்கள் தேசிய மகளிர் ஆணையத்திடம் (NCW ) 0111-23219750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு. புகார் செய்யலாம். ஆணையம் இந்த விஷயத்தை போலீசாரிடம் எடுத்து செல்லும். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் உள்ள எந்தப் பெண்ணும் இந்த புகாரை பதிவு செய்யலாம். கடுமையான வழக்குகளில், கமிஷன் ஒரு விசாரணைக் குழுவை அமைக்கிறது.சாட்சிகளை ஆராய்கிறது, சாட்சியங்களை சேகரிக்கிறது. விசாரணைக்கு வசதியாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள் மற்றும் போலீஸ் பதிவுகளை வரவழைப்பதற்கும் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.)
இன்று –2019 ஆம் ஆண்டு .
இடம் – சமத்தூர் ,பொள்ளாச்சி.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழிஸ்வரர் ஆலயத்தை நோக்கி வேன் சென்று கொண்டிருக்க, காயத்ரியின் மனம் அதை விட வெகு வேகமாய் கடந்த கால நிகழ்வுகளை அசை போட்டு கொண்டிருந்தது.
அஞ்சலிக்கும், காயத்ரி வீட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவளை பற்றிய எந்த விவரமும் இது வரை காயத்ரி குடும்பத்திற்கு தெரியாது.
ரெண்டு வருடங்களுக்கு முன் அஞ்சலி, நிறைமாத கர்ப்பிணியான கமலாவின் உயிரை காப்பாற்றி அவர்கள் வாழ்வில் இன்னொரு அங்கமாய் இணைந்தாள்.
கமலா தலை பிரசவம் என்பதால் கோயம்புத்தூரில் இருந்த தாய் வீட்டுக்கு சென்றிருந்த சமயம். இன்னும் மூன்று வாரங்களில் சுகப்பிரசவம் ஆகி விடும் என்று டாக்டர் சொன்னதை கேட்டு மருத்துவமனையிலிருந்து காரில் திரும்பி கொண்டிருந்தனர்.
பிரேக் பிடிக்காமல், அசுர வேகத்தில் வந்த லாரியை கண்டு கமலா அப்பா கடைசி நேரத்தில் வண்டியை அதன் பாதையிலிருந்து திருப்பி, நேர் மோதலை தவிர்த்து விட்டார் என்றாலும், கார் அருகில் இருந்த மரத்தில் சென்று மோதி நின்றது.
அந்த வழியாக ஆட்டோவில் எங்கேயோ சென்று கொண்டிருந்த அஞ்சலி இவர்களை பார்த்து காப்பாற்றியது. கமலாவின் வயிறு முன்னிருக்கையில் மோதி இருக்க, அவளுக்கு பிரசவவலி வந்து விட்டது.
கமலாவின் பெற்றோர் மயக்க நிலையில் இருக்க அவர்களை அங்கு கூடி இருந்த மக்களிடம் பார்த்து கொள்ள சொல்லி விட்டு கமலாவை தான் வந்த ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தாள்.
கமலா உடனே ஆபரேஷன் அறைக்கு கொண்டு செல்ல பட, அங்கிருந்து ஆம்புலன்ஸ் அனுப்பி, மயங்கி கிடந்த மற்றவர்களையும் அங்கே அனுமதித்து, அவர்களுக்கு தேவைப்படும் ரத்தம், மருந்து எல்லாம் ஏற்பாடு செய்து, ரகுவிற்கு தகவல் சொல்லி, பொள்ளாச்சியில் இருந்து அவர்கள் வந்து சேரும் வரை உடன் இருந்தது அஞ்சலி தான்.
கமலாவிற்கும், குழந்தைக்கும் உயிர்க்கு ஆபத்து இல்லை என்றாலும் பதறி அடித்து வந்த காயத்ரி குடும்பம் மேலும் பதறி கொண்டு இருந்தார்களே ஒழிய, அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை என்பதை கண்ட அஞ்சலி, கமலா டிஸ்சார்ஜ் ஆக பிடித்த ரெண்டு வாரமும் அங்கேயே தான் இருந்தாள்.
ஒரு தாயாய், தாதியாய், நண்பனாய் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவள் அஞ்சலி.
கமலா மாலை டிஸ்சார்ஜ் செய்ய போகும் தினத்தில் சொல்லாமல் கொள்ளாமல் மறைய பார்த்த அஞ்சலியை கையும் களவுமாய் பிடித்ததே காயத்ரி தான்.
“அப்பா!… பாட்டி! பாருங்க… இந்த அஞ்சலி நம்ம கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லாமல் பாக் தூக்கிட்டு கிளம்பிட்டா.” என்றாள் காயத்ரி.
“தாயீ!… என்னமா இது? எங்க குல தெய்வமே உன் ரூபத்தில் வந்து எங்க குலத்தை காத்து இருக்குன்னு நினைச்சிட்டு இருக்கோம். என்ன காரியம் செய்ய இருந்தே ஆத்தா! என்றார் சௌபாக்கியம்.
“வீட்டில் தேடுவாங்க இல்ல பாட்டி. அதான். வரேன் பாட்டி” என்றார் அஞ்சலி.
“இரும்மா… நாங்களும் உன் கூட வந்து உன் வீட்டினரிடம் ஒரு வார்த்தை நன்றி சொல்லிட்டு உன்னையும் விட்டுட்டு வருகிறோம்.” என்ற வாஞ்சிநாதன் பேச்சை கேட்டு, ‘ஆடு திருடிய கள்ளன்’ போல் திருதிருவென விழித்தாள் அஞ்சலி.
“அது என் வீடு… டெல்லியில் இருக்கு.” என்றாள் அஞ்சலி.
“அப்படியாமா! நாங்களும் டெல்லி எல்லாம் பார்த்ததே இல்லை. ரகு எல்லோருக்கும் பிளைட் டிக்கெட் போடுப்பா. அஞ்சலி வீட்டில் தங்கி எல்லா இடத்தையும் சுத்திட்டு பார்க்கலாம். அஞ்சலியே சுத்தி காட்டுவா.” என்ற ரத்தினம் பேச்சை கேட்ட அஞ்சலி, ‘ஆடு திருடி பிடிபட்ட கள்ளனை’ போல் இப்பொழுதும் விழித்தாள்.
“ஏன் தாயீ!… என்னை பாட்டி என்று வாய் நிறைய கூப்பிடுறே. என் மகனை அப்பா என்று அழைக்கிறே. அது எல்லாம் வெறும் வாய் வார்த்தை தானா? என்ன பிரச்சனை உனக்கு?
நானும் கவனித்து கொண்டு தான் இருக்கிறேன் உன்னை. எங்களிடம் சொல்லுமா. தேவதை மாதிரி இருக்கே. உன் பாதுகாப்பையாவது நாங்கள் பார்க்க வேண்டும் தானே தாயீ. தனியே போய் ஏதாவது ஆபத்தில் நீ சிக்கி கொண்டால்?” என்றார் சௌபாக்கியம் அஞ்சலி தலையை வருடியபடி.
அந்த பாசத்தின் முன் அதற்கு மேல் அஞ்சலியால் நடிக்க முடியாமல் உடைந்து கதற அவளை தாங்கி கொண்டார் சௌபாக்கியம். காயத்திற்கு கண்ணீர் தானே மருந்து. அவளை அழ விட்டு எந்த உறவுமே இல்லையென்றாலும் அவர்களும் துடித்து கொண்டிருந்தனர்.
‘சுலபமாய் கேட்டு விட்டார். ஆனால் அதற்கான விடை தான் என்னிடம் இல்லையே!இனி மேல் தான் ஆபத்து வரணுமா என்ன? அதான் வந்து விட்டதே. ஒரே நாளில் என் வாழ்வை தலைகீழாக புரட்டி, வீட்டை விட்டே என்னை துரத்தி விட்டதே.’ என்று மனதிற்குள் மருகினாள் அஞ்சலி.
“வேணாம் ஆத்தா. அழாதே. நீ எதையும் சொல்ல வேண்டாம். எங்க கூடவே வந்துடு. உன்னை எங்க வீடு பெண்ணாய் பார்த்து கொள்கிறோம்.” என்றார் ராகினி.
எந்த அழுகையும், கண்ணீரும் நிற்க தானே வேண்டும்.
தன்னை கட்டுப்படுத்தி கொண்ட அஞ்சலி “உங்களுடன் வரேன். ஆனா எனக்கு சில கண்டிஷன் இருக்கு. நான் யார் என்று அறிய முயல கூடாது. என்னை எங்கேயும் வர சொல்ல கூடாது. அது கோயில், திருமணம், ஹோட்டல், சினிமா எதுவாய் இருந்தாலும் என்னை அழைக்க கூடாது.
வீட்டு வேலைகைளை நானும் செய்வேன். உங்க வீட்டில் நானும் ஒரு வேலைக்காரியாக மட்டுமே இருப்பேன். இதில் எதை மீறினாலும் சொல்லாமல் கிளம்பி விடுவேன்.” என்ற அஞ்சலியின் அன்றைய சொல்லை, இதோ இன்று வரை அவர்களால் மீற முடியவில்லை.
அந்த மூன்று வருடங்களில் அவள் தன்னை மாற்றி கொள்ளவேயில்லை. ஒரு வேலைக்காரியாக தான் நடந்து கொண்டாள். ஆனால் எல்லோருக்கும் ஒரு மகளாய், பேத்தியாய், சகோதரியாய், தோழியாய் அவர்களின் காவல் தெய்வமாய் இருந்தாள் அஞ்சலி.
வாஞ்சிநாதனையும், அஞ்சலியையும் தவிர மற்றவர்கள் உறவினர் திருமணத்திற்கு சென்றிருக்க, ‘மாசிவ் ஹார்ட் அட்டாக்’ வந்து உயிருக்கு போராடிய அவருக்கு தேவையான முதலுதவியை அளித்து, சற்று தேறிய அவரை ஹாஸ்பிடலில் சேர்த்ததும் அஞ்சலி தான்.
தனக்கு காலில் சுளுக்கு என்று ஹாஸ்பிடலில் சேர்த்து இருப்பதாய் சொல்லி, திருமணத்தில் இருந்து அவர்களை எந்த பதட்டமும் இல்லாமல் வரவழைத்து, அவர்கள் வரும் போது அவர்களின் குடும்ப டாக்ட, நர்ஸ் துணையாய் வைத்து கொண்டு வாஞ்சிநாதன் நிலைமையை சொல்லி அவர்களின் பயத்தை குறைத்தாள்.
ராகினி அஞ்சலி காலிலேயே விழுந்து விட்டார். “தாயீ என் மாங்கல்யத்தை காக்க வந்த தெய்வம் நீ கண்ணு.” என்று அவர் கையெடுத்து கும்பிட்டார்.
“உங்க பொண்ணு கிட்டே போய் நன்றி சொல்வீர்களா அம்மா? இப்படி எல்லாம் பேசி என்னை வேற்றாள் ஆகாதீங்க அம்மா.” என்றாள் அஞ்சலி அவர் கண்ணீரை துடைத்தபடி.
வாஞ்சிநாதன் வீடு திரும்ப எடுத்து கொண்ட ஒரு மாதம் அவர்களின் மில், பண்ணை, டிபார்ட்மென்டல் ஸ்டோர், துணிக்கடை, வயல்வெளி, வீடு எல்லாம் அஞ்சலி கண்ணசைவில் எந்த தடையும் இல்லாமல் நடந்தது. அனைத்தையும் பொறுமையாக, எதற்கும் பதறாமல் அவள் கையாண்ட விதம் ஒரு இளவரசியின் தோரணையுடன் இருந்தது.
பலதலைமுறை தலைக்கட்டு குடும்பத்தை ரெண்டு முறை காப்பாற்றிய அஞ்சலியை அந்த கிராமமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடி கொண்டிருந்தது என்றால் மிகையல்ல.
அதற்குள் கோயில் வர அபிஷேகம் முடிந்து, பட்டு புடவை சாற்றி, பொங்கல் வைத்து, படையல் இட்டு, ஆராதனை காட்டபட கண் மூடி அவர்கள் குலதெய்வத்தை வணங்கிய காயத்ரியின் கண்கள் தானாய் கலங்கியது.
“அம்மா! தாயே!… இன்று ஈஸ்வர், கமலா அண்ணி, அப்பா, நான் உயிரோடு இருப்பதற்கு மட்டும் இல்லை, இந்த குடும்பத்தின் மானம் போகாமல் காப்பாற்றியதும், இந்த திருமணம் நடக்கவும் காரணமே எங்க அஞ்சலி தான்.
இந்த கடனை எப்படி அடைக்க போகிறேன் அம்மா? நீ சக்தி உள்ள தெய்வம். இந்த படையலை ஏற்று கொண்டு என் அஞ்சலியின் வாழ்வை சீராக்கு அவளுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் அதை தீர்த்து வை.
என்னை போல் அவளும் மனம் நிறைந்து, அவளை உள்ளங்கையில் தாங்கும் கணவன் கிடைத்து சந்தோசமாய் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும். அருள் புரி தாயே.” என்று மனமுருக வேண்டியவளின் வேண்டுதலை நிறைவேற்றுவது போல் கோயம்புத்தூரை நெருங்கி கொண்டிருந்தது அந்த அசுர வேக கார்.
(The Indian Penal Code, 1860 STALKINGக்கு தண்டனை Section 354 for sexual harassment என்றே பார்க்கப்பட்டது. Rupan Deol Bajaj v. Kanwar Pal Singh Gill (1995) வழக்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு வரை stalking நடவடிக்கைகள் குற்றமாகவே பார்க்கபடவில்லை.)
அன்று –2017 ஆம் ஆண்டு
இடம் —பெங்களூரு.
கடவுள் வாழ்த்துடன் தொடங்கிய எந்த நிகழ்ச்சியிலும் சுமியால் முழுமையாக இடு பட முடியவில்லை .
யோகா, பாட்டு, நடனம், gymnastics, மாஜிக் ஷோ என்று அந்த பள்ளியின் திறமை கண்டு வியக்காதவர்கள் இல்லை. சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நாடகங்கள், மணல் ஆர்ட், தலை கீழ் ஓவியம், நிழல் நடனம் என்று புகுந்து விளையாடினார்கள்.
இவை எல்லாம் முடிந்ததும் லைட் மியூசிக் ஆரம்பமாக, சந்தோஷ் கை பிடித்து மேடை ஏறினாள் நிலா .
இன்னொரு குழந்தையுடன் நிலா சேர்ந்து பாட ஆரம்பித்தாள். திக்கி, திணறி நிலா பாடினாலும் நிலாவின் குரலும், சந்தோஷ், காவ்யா ட்ரைனிங் எல்லாம் சேர்ந்து அந்தப் பாட்டில் யாராலும் குறை கண்டுபிடிக்க முடியவில்லை.
https://www.youtube.com/watch?v=hyzgm6oaIvg
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம் நல்லவர்க்கு ஒரு குணம்.
ஏற்றி விட்ட ஏணி ஒன்று நின்றபடி நிற்கிறது
ஏறி விட்ட ஒரு மனமோ வேறு வழி நடக்கிறது.
ஏற்றியதும் குற்றமில்லை ஏணியிலும் பாவமில்லை
ஏற்றியதும் குற்றமில்லை, ஏணியிலும் பாவமில்லை
மாற்றியது கடவுள் என்னும் மாயக்காரன் லீலையம்மா.
தேவனவன் கோயிலிலே, கோடை வெய்யில் சுடுகிறது
தேவி அவள் வாசலிலோ, செல்வ மழை பொழிகிறது
என்று அவள் பாடி முடிக்க கை தட்டல் அடங்க வெகு நேரம் ஆனது.
முழு பாடலையும் தன் பிஞ்சு குரலில் நிலா பாடி முடிக்க, அதை கேட்டு கொண்டிருந்த பல விழிகள் அந்த பாடலுக்கும் அவர்கள் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை நினைத்து கலங்கியது.
காவ்யா கண்கள் மேல் அறையை நோக்க அங்கு, ‘ஒருவன்’ ஜன்னல் அருகே மறைந்து நின்று, நிலாவின் பாட்டை கேட்டு கண்களில் கண்ணீர் வழிய நின்ற கோலம் காவ்யாவின் மனதில் சூறாவளியை ஏற்படுத்தியது.
அடுத்து பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் இரண்டு மூன்று பரிசுக்களை நிலாவே வாங்க, அந்த குழந்தையைக் கண்டதும் ரேணுகாவுக்கும், தனுவிற்கும் மிகவும் பிடித்து போனது. அவளை அருகே அழைத்து நிற்க வைத்து பேச விஷ்ணுவும், சுமித்ராவும் மென்று விழுங்கினார்கள் .
‘யார் குழந்தை’ என்று மட்டும் தெரிந்தது இவர்கள் இப்படியா கொஞ்சுவார்கள்? குழந்தை என்று கூட பார்க்காமல் கொன்று விடவும் தயங்க மாட்டார்கள் ஏற்கனவே ஒரு முறை கொல்ல முயன்றவர்கள் தானே!
கடைசி நிகழ்ச்சியாக மேடைக்கு வர இருப்பது காவ்யா என்பது தெரிந்த சுமித்ரா, அருகே இருந்த ஆசிரியரை அழைத்து, காவ்யாவை வர வேண்டாம் என்று சொல்ல சொன்னார்.
அதை சொல்ல சென்ற ஆசிரியர் வழியில் ஒரு மாணவிக்கு அடிபட்டு ரத்தம் வருவதை கண்டு முதல் உதவி செய்ய அழைத்து சென்றவர், சுமித்ரா சொன்னதை சொல்ல மறந்து போனார். விளைவு காவ்யா மேடை ஏறி பாட ஆரம்பித்தாள்.
https://www.youtube.com/watch?v=UlocUamrLqQ
கங்கை கரைதோட்டம் , கன்னி பெண்கள்கூட்டம்
கண்ணன் நடுவினிலே
காலை இளம்காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
கண்ணன் முகதோற்றம் கண்டேன்,
கண்டவுடன் மாற்றம்கொண்டேன்.
கண் மயங்கி ஏங்கி நின்றேன்!
கன்னிசிலையாக நின்றேன்!
கண்ணன் என்னை கண்டுகொண்டான்.
கை இரண்டில் அள்ளிகொண்டான்.
பொன்னழகுமேனி என்றான்
பூசரங்கள் சூடி தந்தான்.
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே
கண்ணன் முகம் கண்ட கண்கள்,
மன்னர் முகம் காண்பதில்லை.
கண்ணனுக்கு தந்த உள்ளம்,
இன்னொருவர் கொள்வதில்லை.
கண்ணன் வரும்நாளில் கன்னி இருப்பேனோ!
காற்றில் மறைவேனோ ?ஓ ஹோ காற்றில் மறைவேனோ?”
இவள் பாடி முடித்து “கண்ணா! “என்று மனம் உருகி பாட்டில் அழைத்த விதம் கண்ணனை எட்டியதோ இல்லையோ, அமெரிக்காவில் தன் அபார்ட்மெண்டில் நன்றாக உறங்கி கொண்டு இருந்த ஒருவன் அலறி அடித்து எழுந்து அமர்ந்தான்.
நெஞ்சு வெகு வேகமாக துடிக்க, மூச்சு விடவே சிரம பட்ட அவனின் காதுகளில் “கண்ணா! “என்ற அழைப்பு மீண்டும் கேட்க தலையை பிடித்து கொண்டான்.
ஒரு ஜக் நிறைய தண்ணீர் குடித்தும் அவனின் இந்த பதட்டம் தணியவில்லை .
அந்த குரல் அவனை என்றுமே நிம்மதியாக இருக்க விட்டது இல்லை.
அந்த கண்கள் அவனை தினமும் கொல்லாமல் கொன்று, வென்று கொண்டு இருக்கும்.
நைட் ஸ்டாண்ட் மேல் லேமினேட்டட் போட்டோவில் சிரித்து, அவனை சிதைப்பதையே வேலையாக கொண்ட அவளின் நிழல் படத்தை நெஞ்சோடு அணைத்து கொண்டான் காவ்யா என்னும் ராதையின் கண்ணனா அவன்.
இவளிடம் இருந்து உணர்ச்சிகளை காட்டாமல் இருப்பதற்கே அவன் பிராமபிராயர்த்தனம் செய்ய வேண்டி இருக்கும்.
அவளோ உணர்ச்சி அற்ற ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்து விடுவாள். அந்த கண்களில் இருந்து விடுபட முடியாமல், விடுபட விரும்பாமல் இவன் தான் அமிந்து போவான் .
அவனை கண்டு அஞ்சுபவர்களுக்கு நடுவே அவனை, ‘நீ யாராய் இருந்தால் எனக்கென்ன’ என்று பார்வை பார்த்தவள் அவள் ஒருத்தி தான்.
அவன் பெற்றோரே அவன் அடைந்த உயரத்தை கண்டு மரியாதையுடன் நடக்கும் போது கண்களால் அவனுக்கு அடிமை சாசனம் கொடுத்தவள் அவள்.
அவனை கண்டு மயங்கி நிற்கும் பெண்களுக்கு இடையில், இவனிடம் மயங்காமல் இவனை ஒற்றை பார்வையில் மயங்க வைத்தவள் அவள் .
“ராட்சட்சி!… நாலு வருஷம் ஆச்சுடீ… என் நிம்மதி போய்… உன்னை பார்த்து இருக்கவே கூடாது. உன்னை காதலித்து இருக்கவே கூடாது. உன்னை அப்படி ஒரு இக்கட்டில் நிற்க வைத்து இருக்கவே கூடாது.
சமுத்திரத்தை கண்ணாடி குடுவையில் அடைக்க நினைத்ததது என் முட்டாள்தனம் தான். உன்னை தவிர வேறு யாராவது என்றால் இந்நேரம் என் காலில் விழுந்து கதறி இருப்பார்கள்.
ஆனால் நீ பாவி, கல்லுக்கு கூட உயிர் வந்து விடும். ஆனால் உன்னை அசைப்பது…” என்று எதிலும் தோற்காத, எல்லாவற்றிலும் வெற்றி மட்டுமே பெற்ற அவனை, மண்ணை கவ்வ வைத்த பெருமை, அவனின் ராட்சசிக்கே உரியது .
ஒரு பார்வை மட்டும் வீசினால் அதற்காக உலகத்தையே விலை பேச அவன் தயார்… ஆனால் செய்யமாட்டாள் .
ஒரு வார்த்தை வாய் திறந்து சொல்லி விட்டால் காலம் முழுக்க உள்ளங்கையில் அவளை வைத்து தாங்க அவன் தயார்… ஆனால் சொல்ல மாட்டாள்.
யுத்த களத்தில் நிற்கும் அவனுக்கு பழி வாங்கும் வெறி மட்டுமே. அதற்காக யார், என்ன, எப்படி என்று பார்க்காதவனையே மௌனத்தால் ஒரே இடத்தில் நிற்க வைத்தவள் அவள்.
‘வென்றே ஆக வேண்டும்’.
ஆனால் தடையாய் இருப்பது அவள் மட்டுமே.
‘நீ எது வேண்டும் என்றாலும் செய்து கொள், எப்படி வேண்டும் என்றாலும் முட்டி மோதி கொள். ஆனால் நீ வெல்லவே முடியாது’ என்று எதையுமே செய்யாமல் நான்கு வருடமாய் ஜெயிப்பவள்.
அவனுக்கு தேவை ஒரு வார்த்தை. ஒரே ஒரு வார்த்தை. ஒருவனை பற்றி அவன் மட்டும் கிடைக்க இவள் காலில் விழ கூட இவன் தயார் தான்.
இவளிடம் அவனுக்கு என்ன ஈகோ? ஆனால் ஐயோ என்று பதறி அவனுக்கு தேவையானதை செய்யும் சராசரி பெண் ரகம் அவள் இல்லை.
டிக்ஷனரியில், ‘அழுத்தம், வைராக்கியம், நிமிர்வு’ என்று பார்த்தால் அதற்கு எக்ஸாம்பிள் இவள் பெயர் தான் இருக்கும்.
’நீ காலில் விழுந்தால் என்ன, கழுத்தை தான் பிடித்தால் என்ன’ என்று கற்பாறை போல் நின்று, அவனை தலையால் தண்ணீர் குடிக்க வைப்பவள்.
அவன் அங்கே அவள் புகைப்படத்தை கண்டு பைத்தியமாய் ஆகி கொண்டு இருக்க, அவன் போன் அந்த நள்ளிரவில் ஒலிக்க ஆரம்பித்தது.
‘இந்த நேரத்தில் என்ன?’ என்று அவன் பதறி போய் அழைப்பை எடுக்க, அவன் காதில் கேட்டது, “கண்ணா!…”என்ற அவளின் குரல் பாடும் பாடல்.
இதயம் ஒருமுறை துடிப்பதையே நிறுத்தி விட, அவனையும் அறியாமல் அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
கடவுளை நேரில் கண்ட பக்தன், ஒருவனின் மனநிலையில் இருந்தான் அவன்.
“அண்ணா! அந்த நாய் இங்கே தான் அண்ணா இருக்கா… வா அண்ணா…. சீக்கிரம் வா அண்ணா… காவ்யா இங்கே தான் அண்ணா இருக்கா. வா அண்ணா. வந்து அவளைக் கொல்லு.” என்று அவன் தங்கை தனுவின் கதறல் கேட்க,அவன் விழிகள் சிவந்தது.
இதயம் சமர்ப்பிக்கப்படும்.