சமர்ப்பணம் 8

சமர்ப்பணம் 8

(பாதிக்கப்பட்ட எரியும் பகுதியை ஏராளமான குளிர்ந்த நீரில் சுத்தப்படுத்திக் கொண்ட இருக்க வேண்டும் நோயாளியின் எரியும் உணர்வு மங்கத் தொடங்கும் வரை. இது 30-45 நிமிடங்கள் ஆகலாம். அமிலத்துடன் தொடர்பு கொண்டிருந்த அனைத்து நகைகள் அல்லது ஆடைகளையும் அகற்றவும்.பாதிக்கப்பட்ட பகுதியில் எந்தவிதமான கிரீம், களிம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இது மருத்துவர்களின் சிகிச்சை முறையை மெதுவாக்கும்.முடிந்தால், பாதிக்கப்பட்ட பகுதியைத் தளர்வாக மடிக்க, கிருமி நீக்கம் செய்யப்பட்ட நெய்யைப் பயன்படுத்தவும். நெய்யானது சருமத்தை காற்று, குப்பைகள், அழுக்கு மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கிறது.)

 (தேசிய குற்ற பதிவு பணியகத்தின் கூற்றுப்படி, 2015 ஆம் ஆண்டில் 222 அமிலத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. 2013 ஆம் ஆண்டு வரை, இந்திய தண்டனைச் சட்டம் ஆசிட் தாக்குதலை ஒரு தனி குற்றமாக அங்கீகரிக்கவில்லை. குற்றவியல் சட்டம் (திருத்தச் சட்டம்) 2013 இன் பிரிவு 326 ஏ மற்றும் 326 பி ஆகியவை இந்திய தண்டனைச் சட்டத்தில் அமிலத் தாக்குதலுக்கு,குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை. இது அபராதத்துடன் ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம்.)

(அமிலத் தாக்குதல் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 320, 322, 325, 326 மற்றும் 307 ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப் படும். லக்ஷ்மி அகர்வால்  vs UOI வழக்கில் கடைகளில் ஆசிட் விற்பனைக்கு தடை விதிக்க, ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. அமிலத் தாக்குதல்களைத் தடுப்பது மற்றும் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் மறுவாழ்வு மசோதா, 2017 வில் அமிலம் விற்பனை செய்தல், வழங்கல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அமிலத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நபர்களின் மறுவாழ்வு போன்ற அம்சங்கள் உள்ளன.

இந்த மசோதாவின் படி, எந்தவொரு நபருக்கும் அவரது அடையாளம், அமிலத்தின் அளவு மற்றும் எந்த நோக்கத்திற்காக அமிலம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான பதிவுகளை வைத்திருக்காமல் எந்தவொரு நபருக்கும் அமிலத்தை விற்கவோ அல்லது வழங்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது.ஸ்டாப் ஆசிட், MEER FOUNDATION, Love Not Scars, Atijeevan Foundation, Make Love Not Scars (MLNS) போன்ற அமைப்புகள் அமிலத் தாக்குதலில் இருந்து தப்பியவர்களுக்கு நீண்டகால மறுவாழ்வு மற்றும் உதவியை வழங்குகிறது)

 

ராகேஷ் சிந்தித்த கோணத்தில் காயத்திரி வீட்டினர் யோசித்திருக்கவில்லை.

அன்பு என்ற ஒன்றின் முன் கட்டுப்பட்டு, அஞ்சலி என்ற பெண்ணின் குணத்தால் கவரப்பட்டு,  பின்புலத்தை அவர்கள் ஆராயாமல் தான் விட்டு இருந்தார்கள். தங்களுடன் இருக்கும் அஞ்சலி இருப்பதே அவர்களுக்குப் போதுமானதாய் இருந்தது.

அவளின் கடந்த காலத்தைக் கடந்த காலமாகவே விட்டு விட்டார்கள். அஞ்சலியின் கடந்த காலத்தில் எது நடந்து இருந்தாலும் அது அவர்களுக்குத் தேவையில்லாத ஒன்று.

ஆனால் ராகேஷ், ‘பிரச்சனை அஞ்சலி யார் என்பது மட்டும் இல்லை, அவள் எதற்காக இப்படி மறைந்து வாழ்கிறாள், மறைந்து வாழும் அளவிற்கு அப்படி என்ன ஆபத்து என்று தெரிந்தால் தானே அஞ்சலியை அதிலிருந்து காக்க முடியும்’ என்ற கேள்வி எழுப்பக் காயத்திரியும் அவள் அண்ணன்களும் திகைத்து நின்றனர்.

‘காலம் முழுக்க ஒரு பெண்ணை வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக வைத்துக் கொள்வது தான் உத்தேசமா!’ என்ற ராகேஷ் கேள்வி அவர்கள் மனதை சாட்டை கொண்டு விளாசியது என்று தான் சொல்ல வேண்டும். 

வெகுநேரம் அந்த அறையில் மௌனமே நிலவியது.

“ஒகே ராகேஷ்!…  ‘ஏதாவது வாங்கி தரணும் போல் இருக்கு. என்ன வேணும் சொல்லு என்று அடிக்கடி என்னிடம் கேட்டுட்டே இருப்பீங்க தானே!….

இப்போ சொல்றேன். என் அஞ்சுவின் வாழ்வு நேராக வேண்டும். அவள் பிரச்சனை என்ற என்று கண்டு பிடித்துத் தீர்த்து வையுங்க. தீர்த்து வைக்க முடியவில்லை என்றால் எவ்வளவு ஆபத்து வந்தாலும் அவளுக்குத் தூணாய் நின்று காப்பாற்றுவோம். செய்வீர்களா ராகேஷ்?”என்றாள் காயத்திரி.

“நிச்சயம் செய்வோம் பேபி. இந்த முடிவு எடுத்ததற்க்காக என்றுமே நீ கஷ்ட பட வேண்டி வராது. கண்ணைத் துடை. கிளம்பு வீட்டுக்குப் போவோம். அந்த அஞ்சலிக்குக் கொஞ்சம் வேப்பிலை அடிக்க வேண்டியிருக்கு.”என்றான் ராகேஷ்.

“எவ்வளவு தைரியம் இருந்தால் என் அஞ்சுவை நீ பேய் என்பே?” என்றாள் காயத்திரி

“ஆமா நீ மோகினி, அவ பிடிச்சதையே பற்றிக் கொண்டு தொங்கும் வேதாளம். என் விதி ‘ஆடம்ஸ் பேமிலியில்/adams family’ வந்து மாட்டிட்டேன்.”என்றவனை மொத்தி எடுத்தாள் காயத்திரி.

addams familyக்கான பட முடிவுகள்

“அடேய்!… மச்சானுங்க என்று பனை மரத்தில் பாதி இருக்கீங்க. அடி வாங்கறதை வேடிக்கையாடா பார்க்கறீங்க?”என்ற ராகேஷ் அலறல் அங்குப் புன்னைகையை மலர வைத்தது.

அடுத்த அரைமணி நேரத்தில் காயத்திரியின் வீட்டில் இருந்தார்கள் அவர்கள். மாப்பிள்ளை வந்திருக்கார் என்றதும் வீடே அல்லோலகல்லோல பட்டது.

ஏற்கனவே நிச்சய, திருமண ஏற்பாட்டால் கலை கட்டி இருந்த வீடு.

பூத்தோரணங்களும், கோலங்களும், வண்ண விளக்குகளும், உற்றம், சுற்றம், எல்லாம் குழுமி இருக்க கலகலப்பாய் இருந்தது அந்த இடம்.

No photo description available.

வரவேற்ப்பு எல்லாம் முடிந்து, “அப்பா, அம்மா வரலியா?”என்றார் ரத்தினம்.

“இல்லை அய்யா. வழியில் தான் கதிரைப் பார்த்தேன். மத்திய சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று முழிச்சுட்டு இருந்தேன். கதிர், ரகு ரெண்டு பேரும் எங்க வீட்டில் வந்து சாப்பிடுங்க என்றார்களா, இன்னைக்கு இவங்களை வச்சி சாப்பாட்டிற்கு வழி தேடிக்கலாம் என்று வந்துட்டேன்.” என்று ராகேஷ் சொல்லி முடிக்கவும் அங்குச் சிரிப்பலை எழுந்தது.

மாபெரும் கோடீஸ்வரன் அடுத்த வேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாதவன் போல் புலம்பியது அவர்களை வாய் விட்டுச் சிரிக்க வைத்திருந்தது.

“எங்கே அஞ்சலி ஆளையே காணோம்!” என்றான் ராகேஷ்.

“நீங்க வரீங்க என்று தெரிந்ததும் சமையல் கட்டிற்குள் சென்றவள் தான் இன்னும் வெளி வர வில்லை.”என்றார் கமலா.

“தாத்தா! கதிர், ரகு கிட்டே எல்லாம் சொல்லி இருக்கேன். கேட்டுக்கோங்கோ.” என்றவன் அவர்கள் குழம்பி இருக்கும் போதே அஞ்சலியைத் தேடி சென்று விட்டான்.

சமையல் அறையில் பம்பரமாய் சுழன்று, பத்து ஆள் வேலையை ஒற்றை ஆளாய் செய்துகொண்டிருந்தாள் அஞ்சலி.

‘இதைக் காயத்ரி வீட்டினரோ, இல்லை காயத்திரியோ செய்து இருந்தால் கூட அர்த்தம் இருக்கும். உறவே இல்லாத இவள் எனக்காக நெருப்பில் வெந்து கொண்டிருக்கிறாள்.

என் தங்கை உஷா கூட என் வயிறு நிறைய இப்படி கஷ்டப்பட்டு எதையும் செய்தது இல்லையே!… காயுவின் கண்ணீருக்காக வாக்கு கொடுத்தேன். இன்று உன் அன்பை கண்டு உறுதி மொழி எடுக்கிறேன் என் தங்கையே!… உன் வாழ்வை மலரச் செய்வேன்’.என்று மனதிற்குள் சபதமே எடுத்தான், மனதால் வந்த அந்த அண்ணன்.

“ஹாய் சிஸ்டர்!” என்ற குரல் கேட்டு அஞ்சலி பயத்தில் ஒரு அடி துள்ளி குதிக்க அவள் கண்ணில் ஒரு நொடி வந்து போன திகைப்பு, பயம், கலக்கம், அது ராகேஷ் என்று அறிந்ததும் வந்த நிம்மதி என்று அஞ்சலி முகத்தில் வந்து போன அனைத்து உணர்ச்சிகளையும் ராகேஷ் கவனித்தான்.

“ஹலோ! அண்ணா, வாங்க வாங்க. எப்படி இருக்கீங்க?”என்றாள் அஞ்சலி.

“உன் புண்ணியத்தில் என் காதலியுடன் நான் நலம். கடவுள் அருளால் வீட்டினர் யாவரும் நலம்.”என்றான் ராகேஷ்.

அதை கேட்டுக் கிண்கிணியாய் அஞ்சலி சிரிக்க திகைத்தான் ராகேஷ்.

‘ராக்கி அவ சிரிக்கவே மாட்டா. ஆனா சிரிச்சா எவ்வளவு அழகாய் இருப்பா தெரியுமா! முகமே அப்படியே ஜொலிக்கும். பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.” என்று முன்பு காயு சொன்னது ராகேஷ் நினைவிற்கு வந்தது.

“உன்னிடம் பேச வேண்டும் அஞ்சலி…. மேலே வாங்க.”என்றவன் மாடியேறி விட்டான்.

‘என்னிடம் என்ன பேச வேண்டும். மீண்டும் காயு ஏதாவது பிரச்சனையா?’என்று எண்ணியவாறே மேலே சென்றாள் அஞ்சலி.

மிக நீண்ட வராண்டாவில் சோபா போடப்பட்டிருந்தது. எல்லா பக்கமும் மர தூண்கள் இருக்க, கண்ணாடி எதுவும் வைக்கப்படாமல் காற்றோட்டமாய், குளிர்ச்சியாய் இருந்தது அந்த இடம்.

சட்டத்தில் மர பொந்துகள் இருக்க, அங்குச் சிட்டு குருவிகளும், கிளிகளும், புறாக்களும் கூடு கட்டியிருந்தன. அவைகளுக்கு உணவாக நெற்கதிர்கள் உத்தரித்ததில் தொங்க விடப்பட்டிருந்தது. அந்த அழகை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை ராகேஷ்.

“என்ன பிரச்சனை அண்ணா?”என்றாள் அஞ்சலி.

“பெரிய பிரச்சனை தான் அஞ்சலி. காயு புலம்பிட்டே இருக்கா. என்னோடு மனம் ஒத்து வாழ்வாளா என்று சந்தேகமாய் இருக்கு. என் காயு சந்தோசமாய், நிம்மதியாய் வாழத் தடையாய் நிக்கிறாங்க.”என்றான் ராகேஷ்.

“யார் ராகேஷ் அது…சொல்லுங்க.”என்றாள் அஞ்சலி பதட்டத்துடன்.

சற்று நேரம் எதையும் பேசாது மௌனமாய் அவளையே உற்று பார்த்த ராகேஷ்,”அது நீ தான் அஞ்சலி. நீயே தான்.”என்றான்.

“வாட்!…” என்று திகைத்தவளாய் எழுந்தே நின்று விட்டாள் அஞ்சலி.

” சிட் டவுன் அஞ்சலி. லெட்ஸ் பி பிராங்க். உன்னைப் பற்றிக் காயு எல்லாம் சொன்னா. எங்க மேரேஜ் கலந்து கொண்டால் வீட்டை விட்டுப் போய்டுவேன் என்று நீ சொன்னதை கேட்டு யாருமே இங்கே நிம்மதியாய் இல்லை அஞ்சலி.

உன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்க இந்த வீடே தயாராய் இருக்கு. விலகிப் போவது நீ தான். உன்னைக் கடவுளுக்குச் சமமாய் பார்க்கும் இவர்கள் தானா உனக்குக் கெடுதல் நினைக்கப் போகிறார்கள்?” என்றான் ராகேஷ்.

“காயத்ரி தேவியார் கைங்கரியம் போல் இருக்கே…அவளுக்கு வாயில் ஓட்டை இல்லை.ஓட்டைக்குள் தான் வாயே இருக்கிறது. உங்களையும் நிம்மதியா விடாமல் புலம்பித் தள்ளிட்டாளா.?”என்றாள் அஞ்சலி தவிப்புடன்.

“காயத்திரி இப்படி என்னிடம் புலம்பும் அளவுக்கு நீங்கள் ஏன் அஞ்சலி அப்படி நடந்துக்கறீங்க?”என்ற ராகேஷ் குரலில் நிச்சயம் இருந்தது கிண்டல் தான்.

“எனக்காக என் தங்கை உஷா கூட இப்படி அடுப்படியில் வெந்தததில்லை. ஆனா நீ அதைச் செய்யரே. ஆனால் படியேறி வந்தவனை வந்து வாங்க என்று சொல்லவில்லை. அந்தப் பக்கம் முகத்தில் கரியை பூசிட்டு இந்தப் பக்கம் விருந்து என்றால் மனம் ஏற்குமா சொல்லு?”என்றான் ராகேஷ்.

“சாரி ராகேஷ்!…யாரையும் நம்பாமலோ, ஹர்ட் செய்ய வேண்டும் என்பதோ என் இன்டென்ஸன் கிடையாது. ஐ ஹாவ் மை ஓன் ரீசன்ஸ்.” என்றாள் அஞ்சலி.

“கைம்பெண் திருமணம், விவாகரத்து ஆனவர்கள் மறுமணம் ஏன் பாலியல் தொந்தரவுக்கு ஆளானவர்கள் திருமணம் செய்வது எல்லாம் இப்போ சர்வ சாதாரணம். மக்களிடம் இதைப் பற்றிய தெளிவு எல்லாம் வந்துட்டு இருக்கு. இன்றைய ஜெனரேஷன் ரொம்ப ஓபன் மைண்டெட்.” என்றான் ராகேஷ்.

இதை எல்லாம் எதற்குத் தன்னிடம் சொல்கிறான் என்று குழம்பி போய் ஒரு கணம் அவனையே பார்த்து கொண்டிருந்த அஞ்சலிக்கு அவன் சொல்ல வருவது புரிய,

“ராகேஷ்!… நான் கணவனை இழந்த கைம்பெண்ணும் கிடையாது. கத்தியை எடுத்து கொண்டு என்னை தேடும், ‘எந்த சைக்கோ எக்ஸ் கணவனும் இல்லை’, என்னை யாரும் எந்த பாலியல் வன்முறைக்கும் ஆளாக்கவில்லை. ஐ ஆம் நாட் எட் மாரிட்.”என்றவள் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது ஒரு குரல்

“நீ என் மனைவி… யு ஆர் மைன்… இது நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடக்கும். என் கையால் தான் உன் கழுத்தில் திருமாங்கல்யம் ஏறும்… எனக்கு பிள்ளைகள் என்று பிறந்தால் அது உன் மூலமாக தான்…. இந்த ஐந்தடி ஆறு அங்குல உருவம் எனக்கு மட்டுமே சொந்தம். யு ஆர் மைன்.”என்று ஒரு குரல் காதில் ஒலிக்க, அந்த குரலுக்கு சொந்தமான முகம் ஒன்று மனக்கண்ணில் எழ சட்டென்று மூச்சடைத்தது அஞ்சலிக்கு.

“தென் எங்க பெட்ரத்தால், மேரேஜ்க்கு வரலாமே?”என்றான் ராகேஷ்.

“சாரி ராகேஷ். ஐ காண்ட்… ஐ ஆம் ஹாப்பி ஆஸ் ஐ வாஸ்.”என்றாள் அஞ்சலி.

“சரி அட்லீஸ்ட் லெட் அஸ் ஹெல்ப் யு. மூன்று மாதம் முன்பு பார்த்ததற்கும் இப்போ பார்ப்பதற்கும் எப்படி இருக்கிறாய் தெரியுமா? எலும்பும் தோலுமாய் இருக்கே. என்ன பிரச்சனை?”என்றான் ராகேஷ்.

‘பிரச்சனை தான், ஆபத்து தான். அதற்கு உருவம் உண்டு, ஆறடிக்கும் மேல் உயரம் உண்டு, பெயர் உண்டு, பிடிவாதம், மூர்க்கக்குணம், ஆணவம், திமிர்,  பழிவாங்கும் குணம், நினைத்ததை எந்த வ்ழியிலாவது சாதிக்கும் வெறி உண்டு.

ஒன்றை நினைத்து விட்டால் அதை அடையும் வரை பசி, தூக்கம் பாரதா தன்மை உண்டு. வாயை திறந்து சொல்வதாய் இருந்தால் நான் ஏன் இப்படி ஒளிய போகிறேன்! நான் வாய் திறந்தால் சில வாழ்வுகள் வீணாகுமே!’ என்று தனக்குள்ளேயே அவள் பேசி கொண்டிருப்பதை கண்ட ராகேஷ்சுக்கு அவள் மேல் இரக்கம் அதிகமானது.

ராகேஷ் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு அஞ்சலி முகம் வேதனையைத் தத்து எடுத்தது.

“சில பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை ராகேஷ்.”என்றாள் அஞ்சலி.

“தீர்க்க முடியாத பிரச்சனை என்று ஒன்று இல்லவே இல்லை. ஒருவேளை உனக்கு அது தெரியாமல் இருக்கலாம்.”என்றான் ராகேஷ்.

“வெளியே இருந்து ஆயிரம் அட்வைஸ் செய்ய முடியும். உள்ளே மாட்டி இருப்பவர்களுக்கு தான் அந்த வலியும், வேதனையும் தெரியும்.”என்றாள் அஞ்சலி.

“அந்த வலியையும் வேதனையும் பகிர்ந்து கொள்ள தான் நாங்கள் இருக்கிறோம் என்று என்கிறேன்.”என்றான் ராகேஷ்.

“வாய் திறந்து சொல்வதாய் இருந்தால் என் குடும்பத்திடமே சொல்லியிருப்பேனே! …நீங்கள் எல்லாம் எதற்கு?”என்றாள் அஞ்சலி.

“எக்ஸாக்ட்லி அஞ்சலி… அது உன் குடும்பம் நீ சொல்லும் விஷயம் அவங்களை பாதிப்பதாய் இருக்கும். நாங்க வெளியாள். எங்களை எப்படி உன் பிரச்சனை பாதிக்க முடியும் சொல்லு!

காயுவையும் இன்னொரு குடும்பம் என்று எடுத்து கொண்டாலும், நான் நேத்து வந்தவன். உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே அஞ்சலி.”என்றான் ராகேஷ்.

“இதற்க்கு முடிவில்லை ராகேஷ்….விட்டுடுங்க.”என்றாள் அஞ்சலி.

“சோ, முடிவே இல்லாமல் காலம் முழுக்க இப்படியே ஓடி கொண்டிருக்க போகிறாய் என்று சொல்லு. பயந்து, ஒளிந்து இன்னொருத்தர் வீட்டில் வேலைக்காரியாக இருந்து விட்டால் எல்லாம் மாறி விடுமா என்ன சொல்லு? நீ இப்படி தோற்று உன்னை துரத்தும் நபரை ஜெயிக்க வைக்க போகிறாயா என்ன?

காயுவிற்கு செய்த அட்வைஸ் எல்லாம் உனக்கும் பொருந்தும் என்பது மறந்து விட்டதா! எதையும் எதிர்த்து நிற்க வேண்டும் என்று என்று அவளை மீட்டு வந்த நீ சிறுக சிறுக உன்னையே அழித்து கொண்டிருக்கிறாயே, இதுவும் ஒரு வித தற்கொலை தான் என்று ஏன் உனக்கு புரியவில்லை?”என்றான் ராகேஷ் கோபத்துடன்.

“நான் பயப்படுகிறேனா?”என்று அஞ்சலி தன்னை தானே கேட்டு கொண்டாள் சத்தமாக.

அவளின் மனசாட்சி உயிர்த்து எழ ,அஞ்சலி மௌனமாகி விட்டாள்.

‘இல்லையே! நான் பயப்படவில்லையே’ என்றது மூளை.

‘பிறகு ஏன் இன்னொருத்தர் வீட்டில் ஒளிந்து இருக்கிறாய்? பயம் இல்லை என்றால் உன் வீட்டிற்கே திரும்பி இருக்கலாமே? இத்தனை வருடத்தில் ஏன் அதை செய்யவில்லை?

எதிர்த்து நின்று நோ சொல்லி இருந்தால் யாரால் என்ன செய்து இருக்க முடியும்! எதிர்த்து நிற்க உன்னால் முடியவில்லை. ஏனென்றால் நீ எதிர்ப்பது உன் உயிரினும் மேலானவனை இல்லையா?

எங்கே ஏதாவது ஒரு நொடியில் உண்மையை உளறி விடுவோமோ என்ற பயம். உன் வாழ்வை பகடை காயாக்கி அவன் விளையாடினான் என்றால், அதுவே தானே அவனுக்கும்.

திருப்பி அடித்திருக்க முடிந்தும் கோழை போல் ஓடி கொண்டிருக்கிறாய். மற்றவர்களை நீ ஏமாற்றலாம். ஆனால் நான் நீ… என்னிடம் உன் அந்தரங்கத்தை எப்படி மறைப்பாய் சொல்லு. தினமும் உன் கண்கள் சிந்தும் கண்ணீர் அவனுக்காக தானே!’ என்றது மனசாட்சி.

‘எல்லாவற்றிக்கும் சாட்சியாய்’ இருப்பதால் தான் அதற்கு மனசாட்சி என்ற பெயர் வந்திருக்கிறது.தெய்வத்திடம் எதையும் மறைக்க முடியாது என்பது போல், கூடவே சாட்சியாய் இருக்கும் இந்த மனசாட்சியை வைத்து கொண்டு அஞ்சலியால் நடிக்க கூட முடியவில்லை.

“ரொம்ப சந்தோசம்…இப்போவாது செய்ய தோன்றியதே.”என்றான் ராகேஷ்.

“எதை அண்ணா?’என்றாள் அஞ்சலி.

“அதான் மா யோசிப்பது… அதெல்லாம் மூளை என்ற பொருள் வைத்து இருப்பவர்கள் செய்வது தான். ஆனால் இந்த மேல் மாடி போல் எல்லாம் காலியாய் இருக்கும் உன் மண்டையை வைத்து கொண்டு அதெல்லாம் ரொம்ப கஷ்டம் தான் இல்லையா! இருந்தாலும் ட்ரை செய் அஞ்சலி.” என்றான் ராகேஷ்.

‘திருநெல்வேலிக்கே ஹல்வாவா?’ என்று நினைத்து கொண்ட அஞ்சலி,

“அது என்னவோ உண்மை தான் ராகேஷ் அண்ணா. அனுபவம் உள்ளவங்க சொன்னால் ஏற்று கொள்ள தானே வேண்டும். அங்கேயும் எதுவும் இல்லாமல் போனதால் தானே ரோட் சைடு ரோமியோ வேலை எல்லாம் செய்ய முடிந்தது.” என்றாள் அஞ்சலி அவன் பிட்டை அவனுக்கே திருப்பி போட்டு.

“என்னை நக்கல் அடிப்பது இருக்கட்டும் அஞ்சலி…சொல்லு எதற்காக, யாரை பார்த்து பயப்படறே! எங்களை எல்லாம் மீறி அவன் என்ன செய்து விட முடியும் என்று நினைக்கிறாய்?”என்றான் ராகேஷ்.

“பயமில்லை ராகேஷ்… பட் இதை என்ன பெயர் வைத்து சொல்வது என்று எனக்கே தெரியலை. ‘துஷ்டனை கண்டால் தூர விலகு’ பாலிசி தான்.

எங்கேயோ இருக்கும் தேளை சீண்டுவானேன், அப்புறம் குத்துதே குடையுதே என்று அழுவானேன்!

காட்டில் மானை துரத்தும் சிங்கத்திற்கும், சிங்கத்திடம் இருந்து தப்பி ஓடும் மானுக்கும், அதனதன் காரணம் இருப்பதை போல் தான் இது. கண்னதாசன் பாடல் ஒன்று கேட்டு இருக்கீங்களா ராகேஷ், ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே, கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது’ என்று அன்றே சொல்லி வைத்து விட்டார்.” என்றாள் அஞ்சலி.

பெரிய பாறை கிடைக்குமா அதில் மோதி கொள்ளலாமா என்ற நிலையில் இருந்தான் ராகேஷ்.

“முடிவாய் என்ன சொல்கிறாய் அஞ்சலி?”என்றான்

“முடியாது என்று சொல்கிறேன்… என்னை இப்படியே விட்டுவிடுங்க, கம்பெல் செய்யாதீங்க என்கிறேன். அந்த லக்ஷ்மணன் போட்ட கோட்டை தாண்டியதால் அந்த சீதை வாழ்வு மாறியது. இது எனக்கு நானே போட்டு கொண்ட லக்ஷ்மண கவசம்.

இதுவரை என்னை எந்த துன்பமும் நெருங்காமல் காப்பாற்றியது இது தான்.இது குளோபல் வில்லேஜ். ஆண்டிபட்டியில் இருப்பவனுக்கும், நாசாவில் இருப்பவனுக்கு கூட லிங்க் இருக்கும்.லெட் மீ பி மைஸெல்ப். உங்க அன்புக்கு நன்றி.” என்ற அஞ்சலி கீழ் இறங்கி விட்டாள்.

தொழிலில் பல வெற்றிகளை பெற்று, சிறந்த தொழிலதிபன் என்ற பட்டம் எல்லாம் வாங்கியிருந்த ராகேஷ், அடுத்து என்ன என்று புரியாமல் தலையை பிடித்து கொள்ள செய்த பெருமை அஞ்சலியையே சேரும்.

vishnu vishalக்கான பட முடிவுகள்

ராகேஷ் எந்த விதமாக பால் அடித்தாலும் அதையெல்லாம் சிக்ஸர் அடித்து, அவனை திகைக்க வைத்து விட்டாள் அந்த ராட்சசி.

ராகேஷ் போன் ஆனில் இருக்க மேல் நடந்த இந்த பேச்சுக்கள் அனைத்தையும் அந்த குடும்பம் முழுவதும் கேட்டு கொண்டிருந்தது. அதன் பிறகு பலர் பலமுறை பல விதங்களில் பேசி பார்த்தும் அஞ்சலி தன் முடிவை மாற்றி கொள்ளவேயில்லை என்று கடந்த காலத்தை வேனில் நினைத்து பார்த்த காயத்திரியின்  கண்கள் கலங்கியது.

இதோ இன்று குல தெய்வம் கோயிலில் பொங்கல் வைத்துப் படையல் இட, எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்த அதே அஞ்சலி தான் அன்று மாலை நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும்  வரப் போவதில்லை.

கதிருக்குச் சொந்தமான  ஷாப்பிங் மால்லில் உள்ள அவன் அலுவலகத்தில் திருமணம் முடியும் வரை தங்க போகிறாளாம்.

காயத்திரியின் கண்களில் கண்ணீர் வழிய, நேரே இருந்த சன்னிதானதில் தஞ்சம் அடைந்தது அவள் மனம்.

எல்லாம் நல்லதே நடக்கும் என்று தெய்வமே சொல்வது போல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது அந்த ஆலய மணி.

 காயத்திரி வேனில் வீடு திரும்பி கொண்டிருக்க, கோயம்பத்தூரில் தன் வீட்டில் தன்னையே நொந்து கொண்டிருந்தான் ராகேஷ்.

அஞ்சலியிடம் பேசி விட்டு வந்திருந்த அந்த மூன்று நாட்களில் கோடி முறையாவது, தான் செய்தது சரி தானா?’ என்ற கேள்வி அவனை மிரள வைத்தது.

‘கிணறு வெட்ட பூதம்’ கிளம்பிய கதையாய் அல்லவா ஆகி போனது மீண்டும் அவன் செய்த செயல்.

முழு விவரம் தெரியவில்லை என்றாலும் அஞ்சலியின் அந்த அக்நாதவாசத்திற்கு சூத்திரதாரி யார் என்று, அஞ்சலியிடம் பேசி விட்டு வந்த அன்றே தெரிந்து விட, மூன்று நாட்களாய் பசி, தூக்கம் எல்லாம் விடை பெற்றது ராகேஷிற்கு.

‘கடவுளே!’என்று தலையை பிடித்து கொண்டவன், அஞ்சலிக்கு அழைத்து வார்னிங் கொடுத்து விடலாமா என்று யோசித்து பலமுறை மொபைல் எடுத்து, டயல் செய்யாமல் கீழே வைத்தான்.

போன் செய்யும் ஐடியாவே ‘அவனை’ பற்றி நினைத்து பார்த்த உடன், நாலுகால் பாய்ச்சலில் ஓடி ஒளிந்தது.

அவன் வரும் போது மட்டும் அஞ்சலி இங்கே இல்லையென்றால், ‘என்னை கொல்லவும் தயங்க மாட்டானே!’ என்று நொந்து கொண்டான் ராகேஷ்.

மூன்று நாட்களுக்கு முன்…

ராகேஷ் அஞ்சலியிடம் பேசி விட்டு திரும்பியிருந்தான் கோயம்புத்தூருக்கு.

அஞ்சலியிடம் பேசிய பின் அவளை பற்றிய உண்மை அறியும் எண்ணம் அதிகமானதே ஒழிய குறையவில்லை.

வழக்கமாய் அவர்கள் தொழில்களுக்கு செக்யூரிட்டியும், டிடெக்ட்டிவ் வேலையும் பார்க்கும் நிரஞ்சனை அழைத்தான்.

“நிரஞ்சன்!… உன் மொபைலுக்கு ஒரு பெண்ணின் போட்டோ அனுப்பி வைத்திருக்கேன். அவங்களை பற்றிய முழு டீடைல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேண்டும். பட் ரகசியமாய் தேடணும்.

இந்த மேட்டர் வேற யாருக்கும் தெரிய கூடாது.பெண் பெயர் அஞ்சலி.ஒகே” என்றவன் அஞ்சலி அறியாமல் காயத்திரி எடுத்திருந்த போட்டோ ஒன்றினை நிரஞ்சனுக்கு அனுப்பி வைத்து விட்டு, அலுப்பு தீர குளித்து விட்டு, குட்டி தூக்கம் போட்டு விட்டு எழுந்தவன் இண்டர்காம் எடுத்து அன்னையிடம் காபி எடுத்துவர சொல்லி விட்டு தன்னை தூய்மை செய்து கொண்டு வெளியே வந்தவன் திகைத்தான்.

வெளியே வந்த ராகேஷை, ‘ஏதோ ஏலியன் ரேஞ்சுக்கு’ லுக் விட்டு கொண்டு இருந்தது அவன் குடும்பம்.

அவர்கள் பார்த்த பார்வையில் தனக்கு கொம்பு எதுவும் முளைத்து இருக்கிறதா என்ன என்று யோசிக்கும் அளவுக்கு சென்று விட்டான் ராகேஷ்.

“என்ன மாம்….காபி எடுத்து வர சொன்னால், வெறும் கையோடு நின்று லூக்ஸோ பீலியா விட்டுட்டு இருக்கீங்க.?”என்றான் குழப்பத்துடன்.

“நீ இவ்வளவு நேரம் வீட்டில் தூங்கிட்டா இருந்தே ராக்கி…?”என்றார் ருத்ர மூர்த்தி குழப்பத்துடன்.

“நீ வெளியே போனதா பொன்னம்மா சொன்னாங்களே”என்றார் கற்பகம்.

“யெஸ் டாட்… காயு வீட்டில் செம்ம விருந்து. உண்ட மயக்கம்.வெளியே போகலாம் என்று தான் நினைத்தேன்.தூக்கம் கண்ணை சொக்குச்சு. ஈவினிங் போலாம் என்று வந்து தூங்கிட்டேன்.நான் வரும் போது நீங்க யாரும் இங்கே இல்லை.”என்றான் ராகேஷ்.

“உன் போன் என்ன ஆச்சு.”என்றார் ருத்ரா.

“சார்ஜ் போய்டுச்சு.சார்ஜெரில் போட்டு இருந்தேன்.”என்றவன் போன் எடுத்து பார்க்க, அது அணைந்து போய் இருந்தது.

“பேட்டரி முழுசும் காலி அப்பா. ஆன் செய்யாமலே சர்ஜெரில் போட்டுட்டு தூங்கிட்டேன் போல் இருக்கு.”என்றவன் அதை உயிர் பித்து கொண்டே பேசினான்.

“நீ எங்கே என்று கேட்டு கிட்டத்தட்ட என் மொபைல், அம்மா, உஷா, லேண்ட்லைன்னுக்கு ஐநூறு கால் வந்துடுச்சு. போன் வந்த வேகத்தை பார்த்து உனக்கு தான் என்னவோ ஏதோ என்று பதறி காயத்ரி வீடு வரை போய் விசாரித்து வந்திருக்கோம்….என்ன தாண்டா பிரச்சனை….எதுக்கு…?”என்று ருத்ர மூர்த்தி மேலும் பேசும் முன்பு, ராகேஷ் மொபைல் அலற ஆரம்பித்தது.

“பேசு….என்ன அவசரமோ தெரிலை…”என்ற ருத்ரமூர்த்தியுடன் கற்பகம், உஷா வெளியேற, ராகேஷ் குழம்பி போனான்.

ராகேஷ் எடுப்பதற்குள் அந்த அழைப்பு நின்று விட, கால் ஹிஸ்டரி அவனுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான மிஸ்சனா அழைப்புகள், குறுந்தகவல்கள், வாட்ஸாப்ப் பதிவுகள், ஆதில் இருந்த வாய்ஸ், வீடியோ கால், mms எலிஸ்ட் காட்டா ராகேஷ்க்கு தலை சுற்றி போனது.

அத்தனை அழைப்பை அனுப்பிய நம்பருக்கு இவன் ஒரு வீடியோ அழைப்பு விடுக்க, ஒரே ரிங்கில் மறுமுனையில் எடுத்த அவன் கோலம் கண்டு ராகேஷே ஒரு நொடி மிரண்டு போனான்.

அவன் முதல் கேள்வியே, “எங்கேடா அவ!”  என்று கர்ஜனையாய் தான் ஒலித்தது.

“யாரு!….யாரை கேக்கிறே?” என்றான் ராகேஷ் ஒன்றும் புரியாதவனாய்.

“என் கவி எங்கேடா?” என்ற அவன் கேள்வியே உறுமலாய் தான் இருந்தது.

“யார் அது கவி?”என்றான் ராகேஷ்.

“நிரஞ்சன் கிட்டே ஒரு பெண்ணின் போட்டோ கொடுத்து விவரம் கேட்டு இருந்தாய் தானே!” என்றான் அவன் இழுத்து பிடித்த பொறுமையுடன்.

“யெஸ்… ஆனா அவ பெயர் கவி இல்லையே… அஞ்சலி ஆச்சே!” என்றான் ராகேஷ்.

“அவ முழு பெயர் காவ்யாஞ்சலி.”என்றான் அவன்.

“என்னது அஞ்சலியை உனக்கு தெரியுமா?” என்றான் ராகேஷ் உட்சபட்ச திகைப்புடன்.

கசந்த புன்முறுவல் அவன் உதடுகளில் எட்டி பார்த்தது, “என் மனைவியை எனக்கு தெரியாதா?” என்றான் விரக்தியுடன்.

“கெளதம்!” என்று அலறிய ராகேஷ், திகைப்பில் எழுந்தே நின்று விட்டான்.

கடைசியில் ‘அஞ்சலியின் வில்லன்’ தன் உயிர் நண்பன் ‘கெளதம் பிரபாகர்’ தான் என்பதை ராகேஷால் நம்பவே முடியவில்லை.

“ராகா!… என் பொறுமையை சோதிக்காதே! எனக்காக கவியை தேடி கொண்டிருப்பதும் நிரஞ்சன் தான், அதுவும் ஏறக்குறைய ஆறு வருடமாய்….வேர் இஸ் மை கவி? ஸ்பீக் அவுட் மேன்….” என்று உச்சஸ்தாயில் கெளதம் கத்த, இங்கு ராகேஷுக்கு காது ‘கொய்ங்’ என்றது.

“என் உட்பி காயத்திரி வீட்டில், இங்கே பொள்ளாச்சியில் மூன்று வருடமாய் இருக்காங்க.” என்றான் ராகேஷ்.

“ஸ்மார்ட் மூவ்… பிளைட், ட்ரெயின், பஸ், கப்பல், ட்ராவல் ஏஜென்சி என்று இந்தியாவின் அனைத்து மாநிலத்திற்கும், வேறு நாடுகளுக்கும் போவது போல் டிக்கெட் எடுத்துட்டு, எங்களை எல்லா பக்கமும் சுத்தலில் விட்டு, ஏதோ ஒரு குக் கிராமத்தில் போய் செட்டில் ஆகிட்டாளா என் ராட்சசி?

ஆறு வருடமாய் என்னோடு சேர்ந்து கிட்டத்தட்ட நாற்பது பேர் அவளையும் அவன் அண்ணனையும் உலகம் முழுக்க தேடிட்டு இருக்கோம். ஸ்வீட்டி …பக்கா பிளான்டீ .” என்று வாய்விட்டு நகைத்தான் கெளதம்.

சட்டென்று எழுந்த கெளதம் அவன் அறையில் சுவற்றில் மாட்டியிருந்த ஆள் உயர ப்ளோ அப் மேல் தலை சாய்த்து நின்றான். ஒற்றை கண்ணை மூடி, தலை சாய்த்து, இடுப்பில் கை வைத்து அந்த போட்டோவில் சிரித்து கொண்டிருந்தது காவ்யாஞ்சலியே தான்.

போட்டோவிற்கு வலிக்கும் என்று மிக மென்மையாய் தடவி கொடுத்த கெளதம் கண்களில் இருந்து கண்ணீர், “என் தவம் வீண் போகலைடீ… உன்னிடம் சொன்னேன் தானே!

நீ எந்த மூலைக்கு சென்றாலும் உன்னை தேடி வருவேன் என்று சொன்னேன் தானே! என் காதல் உண்மை என்றால் உன்னை என்னிடம் சேர்த்து விடும் என்று சொன்னேன் தானே!

பார் பேபி…பார் …என் காதல் உண்மைடீ… என்னிடமா உன் வேலையை காட்றே என் ராட்சசி. நான் கெளதம்டீ உன் கெளதம்.எதிலும் தோற்காதவன். வரேன் கண்ணம்மா… மாமன் வந்துட்டே இருக்கேன்… பார்க்கலாம் என் காதலா இல்லை, உன் வீரப்பா என்று ஒரு கை பார்க்கலாம். கேம் இஸ் ஆன் மை டார்லிங் ….செக் மேட்” என்றான் கெளதம்.

கெளதம் பேச்சை கேட்டு வாய் பிளந்து அமர்ந்திருந்தான் ராகேஷ்.

“உன் திருமணத்திற்கு நான் வர போவதில்லை என்று தெரிந்து பீல் செய்தாய் இல்லை ராகா… இப்போ பார் ஒருவாரம் முன்பே வந்துடறேன்.” என்றான் அவன் புன்னைகையுடன்.

‘தன் நண்பன் தானா இது?’ என்று ராகேஷ்க்கு சந்தேகமே வந்து விட்டது.

ஒரு வித அழுத்தத்துடன் இருப்பவன் கெளதம். இன்று சிறு பிள்ளை போல் ஏதோ சங்கிலி உடை பட்டத்தை போல் இருந்தது அவன் புன்னகை.

“ஹ்ம்ம்! நீ உன் கவியை பார்க்க வரே… அதுக்கு எதுக்கு இத்தனை பில்ட் அப் நண்பா?” என்றான் ராகேஷ்.

“பார்க்கா இல்லைடா என் பேபியை சிறை எடுக்க வரேன்… என் இதய ராணியை கிட்நாப் செய்ய போறேன்.” என்றவன், “லாரன்ஸ்!” என்று தன் பர்சனல் அசிஸ்டென்ட் அண்ட் பாதுகாவலனான லாரன்ஸை அழைத்து,

“ஐ ஆம் கோயிங் டு இந்தியா நௌ. புக் சார்ட்டர் பிளேன். பினிஷ் தி டீல் வித் பிரெஞ்சு கம்பெனி. அவங்க கேட்கும் ரேட்டை விட ரெண்டு மடங்கு ஒகேன்னு சொல்லிடு. டீல் சைன் செய்து பாக்சில் அனுப்ப சொல்லு.

அதை விமானத்தில் சைன் செய்கிறேன். நம்ம ஒர்க்கேர்ஸ் அனைவர்க்கும் ஒரு மந்த் சலாரி போனசாக கொடுத்துடு.

இன்னைக்கு தான் என் உயிர் எங்கே இருக்கிறது என்ற நியூஸ் கிடைச்சி இருக்கு. இந்த சந்தோஷத்திற்கு உலகத்தையே விலை கொடுத்தாலும் ஈடு ஆகாது தான். ஏதோ என்னால் முடிந்தது. எல்லோருக்கும் போனஸ் கொடுத்துவிடு.” என்று அவனை விரட்டியவன்,

“ராகா! …ஐ வில் பி தேர் இன் டூ டேஸ்… மேக்ஸ் த்ரீ… ஐ டோன்ட் வாண்ட் ஹேர் எஸ்கிப்பிங் அகைன்… பெங்களுருவில் நடந்தது, பொள்ளாச்சியில் நடக்க கூடாது. 24*7 ஐ வாண்ட் ஹேர் ப்ரொடெக்டாட். அரேஞ் செக்யூரிட்டி.” என்றான் கெளதம்.

அவன் அதிரடி பார்த்து வாய் பிளந்து நின்றான் ராகேஷ்.

“அய்யா!… சாமி!…. கொஞ்சம் ஸ்லோ செய்… உன் ஸ்கிரிப்ட் புரிவதற்கு, நாங்க பார்முக்கு வர கொஞ்சம் டைம் கொடு.

அவ இருப்பது கிராமம். செக்யூரிட்டி, பாடி கார்ட் எல்லாம் சினிமாவில் மட்டுமே பார்த்தா மனிதர்கள். உன், ‘ஆக்ஷன் கிங் வேலை’ எல்லாம் அங்கே செல்லாது.

அஞ்சலியை குல தெய்வம் ரேஞ்சுக்கு வணங்கிட்டு இருக்காங்க காயு வீட்டில். புதுசாய் யார் சென்றாலும் சந்தேகம் வந்தது ஒட்டுமொத்த கிராமமும் வீச்சரிவா, வேல்கம்புடன் நிப்பாங்க. அர்மியே வந்தாலும் வேலைக்கு ஆகாது.

எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பிளான் போட்டே எல்லாம் சொதப்பிடும். சுத்தி உள்ள 20-30 கிராமத்தில் காயு சொந்தம் தான்.” என்றான் ராகேஷ்.

இது தான் கிராமத்தின் சக்தி. ஒருவருக்கு ஒன்று என்றால் ஒட்டுமொத்த கிராமமும் ஒன்றாய் குரல் கொடுக்கும் தன்மை. இன்னும் பழமையை, நாட்டின் பண்பாட்டினை, கலாச்சாரத்தினை, குடும்ப வாழ்வின் பெருமைகளை கட்டி காக்கும் நாட்டின் முதுகெலும்பு இந்திய கிராமங்கள்.

சூது வாது தெரியாத மண்ணின் மைந்தர்கள். வீரத்தின் விளைநிலங்கள் இந்த மனிதர்கள். பெண்ணிற்கு ஒன்று என்றால் கம்பூன்றி நடக்கும் பாட்டி, தாத்தாக்கள் கூட தலையை சீவ தயங்காதவர்களாய் தான் இருப்பார்கள்.

இப்படி ஒரு ஊருக்குள் சென்று ஒரு பெண்ணை தூக்குவது எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். நிஜத்தில் கட்டி வைத்து உதைப்பார்கள். உதைக்கும் உதையில் உயிரே போய்டும்.

இதை எல்லாம் எண்ணி பார்த்த கெளதம், இதை வேறு வழியில் தான் அணுக வேண்டும் என்று புரிந்து கொண்டான்.

“ராகா!… உன் உட்பி வீட்டுக்கு புது கார் ட்ரைவரோடு அனுப்பு. நிரஞ்சன் ஆட்கள் ட்ரைவர்களாய் வருவார்கள். உன் திருமணம் முடியும் வரை வீட்டு வேலை, சமையல் வேலை என்று உதவியாளர்களை அனுப்பு.

அதில் செக்யூரிட்டி ஆட்களும் இருக்கட்டும். இது சந்தேகம் வராது. பட் என் அம்முக்குட்டி ரொம்ப ஷார்ப்… லேசுப்பட்ட ஆள் இல்லை. முகத்தை பாரு எப்படி வச்சிட்டு இருக்கு என் செல்லம்.

விஷயம் தெரிஞ்சுது சிட்டு குருவியாய் பறந்திடுவா… பொள்ளாச்சி சுத்தி எல்லா இடங்களிலும் நிரஞ்சனிடம் சொல்லி ஆட்களை போட வேண்டும். ஒகே ஐ ஆம் ஸ்டார்டிங்.” என்றவன் பிரான்சில் இருந்து கிளம்பினான்.

இது எல்லாம் நடந்தது மூன்று நாட்களுக்கு முன்பு.

ராகேஷ், காயத்திரி நிச்சயம் நடக்கும் அன்று காலை கௌதமை சுமந்த சார்ட்டர் விமானம் கோயம்பத்தூர் சர்வதேச விமான தளத்தில் காலை ஏழு மணிக்கு வந்து தரையிறங்கியது.

விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த கெளதம் அவனுக்காக காத்திருந்த காரில் ஏற, அது ராகேஷ் வீட்டை நோக்கி சென்றது.

கெளதம் பிரபாகர், ஆறடி மூன்று அங்குல உயரம், இருபத்தி எட்டு வயது ஆணழகன். படித்தது மாஸ்டர் ஆப் பிசினெஸ் அட்மினிஸ்டரேஷன். பல்தொழில் வல்லுனன்.

45-34-15 என்ற உடல் அமைப்பில் சட்டென்று பார்க்க நடிகர், ‘வருண் தேஜ்’ போல் இருந்தான். குணத்திலும், பண்பிலும் ஸ்ரீராமன். ஒருவித ஆகர்ஷணம் கௌதமிடன் உண்டு.

இப்படி எல்லா பிளஸ் இருப்பவனை மணக்க நான், நீ என்று போட்டி இருந்தது என்னவோ உண்மை. ஆனால் அவன் கவனம் குடும்பம், தொழில் தாண்டியதில்லை.

அவன் அப்பா ராகவேந்திரன், அம்மா ரேணுகா, தங்கை தனுஸ்ரீ, தாத்தா வைரவேல். இவர்கள் தான் அவன் உலகம். கம்ப்ளீட் டீடோட்லர்.

‘கௌதமை நம்பி முழு இரவு கூட எந்த பெண்ணையும் விடலாம்’ என்று ராகேஷ் காது படவே பலர் பேசியது உண்டு.

பெண்கள் பின்னால் சுற்றாமல்

பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ

கண்ணே இல்லா கண்னியரும்

கடிதம் எழுத செய்கிறவன்

காதல் மறுத்த பெண் மனத்தில்

கல்லை எறிந்து போகிறவன் எவனோ

அவனே காதல் மன்னன்- என்ற பாடல் இவனுக்காக எழுதி இருப்பார்களோ, என்று ராகேஷே பலமுறை யோசித்தது உண்டு.

அப்படிப்பட்ட முழுமையான ஆண்மகன்.

‘ஆல்பா மேல்’ என்று அழைக்கப்படும் எல்லா தலைமை பண்பும் கொண்டவன் கெளதம். அப்படிப்பட்டவனை எப்படி காதலில் விழ வைத்தாள் அஞ்சலி!

இவர்கள் பாதை எங்கு எப்படி கிராஸ் ஆனது! எதற்காக இவனை விட்டு, ஏறக்குறைய ஆறு வருடமாய் ஓடி கொண்டிருக்கிறாள் அஞ்சலி ?

சாப்பிட்டு மேஜைக்கு வந்த பிறகும் கூட பேய் அறைந்தவன் போல் இருந்தான் ராகேஷ். உணவை கைகளால் அலைந்தானே ஒழிய அவன் கவனம் அங்கு இல்லை என்பதை அவன் குடும்பம் கண்டு விட்டது.

“அடேய்!…. மூன்று நாளாய் இஞ்சி தின்ன மங்கி மாதிரி ஏண்டா முகத்தை வச்சிட்டு இருக்கே?”என்றாள் உஷா.

“யெஸ் ராக்கி!… உன் முகமே சரியில்லை… எதாவது பிரச்சனையா?” என்றார் கற்பகம்.

“நீ வேறடீ…விவரம் புரியாதவளாய் இருக்கே!.. சார் மறுபடியும் தன் வேலையை காட்டிட்டார். மூன்று புது பென்ஸ் காரை டிரைவரோடு உன் மருமகளுக்கு பரிசாய் அனுப்பி இருக்கான்.

மேரேஜ் முடியும் வரை ஹெல்ப்புக்கு பத்து பேரை வேற நியமித்து இருக்கான். இதை எல்லாம் செய்தது போதாது என்று இன்னும் என்ன எல்லாம் செய்யலாம் என்று பிளான் போட்டுட்டு இருக்கார் சார். அதான் மண்டைக்குள் நண்டு ஓடிட்டு இருக்கு.” என்றார் ருத்ரமூர்த்தி.

“அடப்பாவி! டேய்!… உன் அம்மா நானும் தாண்டா இங்கே உன் திருமணத்திற்காக கஷ்டபட்டுட்டு இருக்கேன். ஒருத்தரை கூட இங்கே நீ நியமிக்கவேயில்லையேடா!” என்றார் கற்பகம் நெஞ்சின் மேல் கை வைத்து கொண்டு.

“மூன்று பென்ஸ் கார் வாங்கி கிபிட் செய்யும் அளவுக்கு நீ பெரிய அப்பாடக்கராடா! உன் தங்கச்சி நானு, எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்து இருக்கியா தடிமாடு!” என்றாள் உஷா திகைப்புடன்.

“கொஞ்சம் நிறுத்தறீங்களா உங்க புலம்பலை, ஏன்பா நீங்க வேற சிண்டு முடிஞ்சி விடறீங்க அவனவன் இருக்கும் நிலை தெரியாம! மூன்று காரும், டிரைவர்களும், உதவிக்கு ஆட்களும் காயத்ரி வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருப்பது உண்மை தான். ஆனால் அனுப்பியது நான் இல்லை. அனுப்பப்பட்டது காயத்ரிக்கும் இல்லை” என்றான் ராகேஷ்.

“டேய்! என்னடா சொல்றே!  ‘மாப்பிள்ளை இவர் தான் இவர் போட்டு இருக்கும் சட்டை எனதில்லை’ என்று ரஜினி செய்யும் அக்கப்போரை விட இது ரொம்ப ஓவரா இருக்குடா.

நீ அனுப்பவில்லை என்றால் யார் அனுப்பியது? அனுப்பப்பட்டது காயத்ரிக்கு இல்லையென்றால் வேறு யாருக்காக, யாரால் அனுப்பப்பட்டது?” என்றார் ருத்ரமூர்த்தி.

“கெளதம் பிரபாகர் தன் மனைவிக்கு அனுப்பியது.” என்றான் ராகேஷ் ரெண்டு கையால் தலையை பிடித்து கொண்டு.

“வாட்?’என்று அலறிய மற்ற மூவரும், ஷாக் தாங்க முடியாமல் எழுந்தே நின்று விட்டார்கள்.

“விளையாடுறியா ராகா! கௌதமிற்கு எப்போடா திருமணம் ஆனது? அங்கே யாருடா அவன் மனைவி?” என்றார் மூர்த்தி திகைப்புடன்.

“அஞ்சலி என்கிற காவ்யாஞ்சலி.”என்றான் ராகேஷ்

“வாட் நம்ம காயு அக்கா அஞ்சலியா? என்ன விளையாட்டு இது ராகா?” என்றார் கற்பகம்.

“விளையாடலைமா சொன்னதே கெளதம் தான் அஞ்சலி தான் அவன் மனைவி என்று. பிரான்சில் இருந்து கிளம்பியவன் இந்நேரம் லேண்ட் ஆகி இருப்பான். ஹி இஸ் ஆன் ஹிஸ் வே டு அவர் ஹோம்  அப்பா. அஞ்சலி தப்பி போகாமல் இருக்க ஏற்பாடு செய்ய பட்டு இருக்கும் மறைமுக பாதுகாப்பு வளையம் தான் டிரைவர்,   ஹெல்பர் எல்லாம்.” என்றான் ராகேஷ்.

“என்னடா இது! எல்லோரும் அந்த பொண்ணுக்கு திருமணம் ஆகலை என்று தானேடா சொன்னாங்க!”  என்றார் மூர்த்தி.

“அஞ்சலியும் அதே தான் சொன்னா அப்பா. கெளதம் அவளை மனைவி என்கிறான். நானே மூணு நாளாய் மண்டை காய்ந்து போய் இருக்கேன்.” என்ற ராகேஷ் அஞ்சலி பற்றிய அனைத்தையும் சொல்லி முடித்தான்.

“இவங்களுக்கு என்ன பிரச்சனை என்றே தெரியலை டாட். ஒண்ணும் இல்லாத விசயத்திற்கு எல்லாம் ஓடும் டைப் அஞ்சலி இல்லை. கெளதம் எப்படிப்பட்டவன் என்பதும் நமக்கு தெரியும். யார் மேல் தப்பு இருக்கிறது என்று தெரியாமல், யார் பக்கம் நிற்பது என்று புரியாமல் திணறிட்டு இருக்கேன்.” என்றான் ராகேஷ்.

இதயம் சமர்ப்பிக்கப்படும்

 

  

error: Content is protected !!