சமர்ப்பணம் 9

சமர்ப்பணம் 9

(2017 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவின் தேசிய குற்ற பதிவுப் பணியகம்(NCRB) பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள், அந்த ஆண்டில் மட்டும் 3,59,849 பதிவாகி என்று சொல்கிறது இதில் 32,559 கற்பழிப்புகுற்றங்கள் அடங்கும். இந்தியாவின் கற்பழிப்பு வழக்குகளின் சராசரி விகிதம் மக்கள் தொகையில் 100,000 க்கு 6.3 ஆகும். லைவ்மின்ட்டின்/LIVEMINT சமீபத்திய அறிக்கையின்படி, பாலியல் வன்முறை வழக்குகளில் 99% பதிவு செய்யப்படுவதில்லை.)

(பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களுக்கும் தண்டனை விகிதம் இந்தியா முழுவதும் 19% ஆக உள்ளது, Legal Services Authorities Act, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி அல்லது சட்ட சேவைகள் ஆணையத்திடம் உதவி பெறலாம் அவருக்காக ஒரு வழக்கறிஞரை இலவசமாக வாதாட நியமிக்க படுவார்..வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண் வழக்கு விசாரணைக்கு வரும் போது அல்லது ஒரு பெண் போலீஸ் அதிகாரி முன்னிலையில் மாவட்ட நீதிபதியின் முன் தனியாக தனது அறிக்கையை பதிவு செய்யலாம்.)

ஊசி விழுந்தால், அந்த ஒலி காதில் கேட்கும் வண்ணம் அங்கே கனத்த அமைதி நிலவியது.

ருத்ரமூர்த்தி, கற்பகம், உஷா, ராகேஷ் அவரவர்கள் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தார்கள்  தான் சொல்ல வேண்டும்.

சற்று  கழித்து தன் யோசனையிலிருந்து மீண்ட ருத்ரமூர்த்தி,

“நீ சொல்வது சரி தான் ராகா… ஆனால் அவசர பட்டு விட்டாயோ என்று தோன்றுகிறது. அஞ்சலி போன்ற, ‘ஜெம் ஆப் எ வுமன்’ கெளதம் மாதிரி ஒரு ‘உன்னதமான மனிதனை’ வேண்டாம் என்று சொல்லிட்டு, வீட்டை விட்டு இத்தனை வருடமாய் வெளியேறி இருக்கிறாள் என்றால் சம்திங் நாட் ரைட்.

கெளதம் உன்னை அழைத்தவுடனே நீ இதை அஞ்சலியிடம் சொல்லி இருக்க வேண்டும். இப்படி அவன் இஷ்டத்திற்கு ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல், அவளே அறியாமல் சிறை வைப்பது எல்லாம் சரியேயில்லை.

அவன் காதல் அதி உன்னமானதாவே இருக்கட்டும். காதல் என்று வரும்போது அதில் ஆணின் விருப்பம் மட்டும் முக்கியமில்லை. காதலிக்கப்படும் பெண்ணின் சம்மதமும் முக்கியம்.

பணம் இருக்கிறது என்று இன்று இவன் செக்யூரிட்டி ஏற்பாடு செய்திருக்கிறான். பணம் இல்லாதவன் ஆசிட் பாட்டில் தூக்குகிறான். அவ்வளவு தானே வித்தியாசம்?

ஒரு முறை காயு விஷயத்தில் பட்டுக் கூட உனக்கு அறிவு வரவேயில்லையா ராக்கி? இதுவும் ஒரு வகை ஸ்டாக்கிங் தான். அந்தப் பெண்ணைக் கார்னெர் செய்தது போலிருக்கு.”  என்றார் மூர்த்தி கோபத்துடன்.

அவரும் ஒரு பெண்ணைப் பெற்றவர் தானே!

“அப்பா சொல்வது தான் சரி ராக்கி. நம்ம உஷாவை ஒருத்தன் இப்படி கார்னெர் செய்கிறான் என்றால் நமக்கு எப்படி இருக்கும்? ரெண்டு பேரும் நல்லவங்க தான். ஆனால் நீங்கச் செய்திருக்கும் வேலையால்  பாதிப்பு ஒரு ஆணைவிடப் பெண்ணாய் அஞ்சலிக்குத் தான் அதிகம்.

சிந்திக்கவோ, அடுத்து என்ன செய்வது என்றோ சிந்திக்கும் அவகாசம் அஞ்சலிக்கு இல்லை. அஞ்சலிக்கு இல்லாத மிகப் பெரிய அட்வான்டேஜ் நீ கௌதமிற்கு கொடுத்து இருக்கே. ஹி ஹாட் 2 டேஸ் டு பிளான் ஹிஸ் ஸ்ட்ராட்டஜி.” என்றார் கற்பகம்.

“சரி இந்த விஷயத்தை அஞ்சலியிடம் தான் சொல்லவில்லை. அட்லீஸ்ட் காயு வீட்டு பெரியவர்களிடம் சொன்னாயா? எதற்குக் கேட்கிறேன் என்றால் ஊரே சேர்ந்து உன்னையும், கௌதமையும் பின்னி எடுக்கும்போது உங்களை இவங்களாவது அடிக்காமா இருக்கணும் இல்லை அதற்குத் தான்.” என்றார் மூர்த்தி நக்கலாக.

“டாட்!… யு டு ப்ருடஸ்? பையன் அடிவாங்குவதை காண ரொம்ப ஆவலாய் இருக்கிறீர்களா? விட்டா கையால் அடித்தால் உங்களுக்கு வலிக்கும் என்று கட்டையைச் சப்ளை செய்வீங்க போலிருக்கே?” என்றான் ராகேஷ் திகைப்புடன்.

“நியாமாய் அதைத் தான் நான் செய்யணும். இல்லை உன்னையும் அவனையும் நீங்கச் செய்து வைத்திருக்கும் வேலைக்கு, IPC செக்ஷன் 363,373 என்று பத்துக்கும் மேற்பட்ட குற்றத்தில் உங்கள் இருவரையும் உள்ளே தூக்கி போடணும்.

உங்களைப் போல் சிலர் தூக்கி உள்ளே போட்டு, ‘தப்பிக்க முயன்றார்கள் என்று என்கவுண்டர் போட்டுத் தள்ளினால்  தான் சின்னக் குழந்தைகளை கூடப் போதை பொருளாய் பார்க்கும், சில சதை வெறி பிடித்துச் சுற்றும் சில நாய்ங்க திருந்தும்.” என்றார் ருத்ரமூர்த்தி  பிரளயகால ருத்திரனாய் கண்கள் சிவந்து.

“டாட்!” என்றான் ராகேஷ் தந்தையின் கோபத்தை தாங்க முடியாதவனாய்.

“என்னங்க கொஞ்சம் சும்மா இருங்க. கெளதம் செய்வதற்கு, இவன் என்ன செய்வான்?” என்றார் கற்பகம்.

“முதலில் தப்பு செய்றவனுக்கு பரிஞ்சி பேசிட்டு வரும் உன்னைப் போன்ற பெற்றோர்களைத் தூக்கி உள்ளே போடணுமடீ…

கெளதம் செய்வதற்கு துணை நிற்கும் இவனும் தான் குற்றவாளி. மவளே,  ‘இவன் என்ன செய்வான், என் பிள்ளை அப்படி பட்டவன் இல்லை’ என்று டயலாக் பேசினே, நான் என்ன செய்வேன் என்றே தெரியாது. ஒரு பெண்ணைப் பலி கொடுத்து இருப்போமே! அதன் பிறகு கூட இவனுக்குச் சப்போர்ட் எப்படிடீ உன்னால் செய்ய முடியுது? ஓஹ் பிள்ளை பாசமோ?” என்றார் ருத்ரமூர்த்தி.

“அப்பா!… ப்ளீஸ்… இனி என்ன செய்யணும் என்று பேசுங்க. நடந்து விட்டதை மாற்ற முடியாது.” என்றாள் உஷா.

“காயு வீட்டு பெரியவங்க கிட்டே முதலில் விஷயத்தைச் சொல்லச் சொல்லு உன் அண்ணனை.” என்றார் மூர்த்தி.

கோயிலில் படையல் முடித்து வீடு திரும்பி இருந்தனர் காயத்திரி  குடும்பத்தினர்.

வரும் வழி எல்லாம் ராகேஷ் அழைத்துக் கொண்டே இருக்க, வேன் நிறைய இருந்த உறவுகளின் மத்தியில் அவளால் அவன் அழைப்பை ஏற்க முடியவில்லை.

ராகேஷ் வீட்டிற்கு, கார், வேலைக்கு ஆள் என்று அனுப்பியதே சுற்றுவட்டார கிராமங்களின் ஹாட் நியூஸ்சாகப் பேச பட்டுக் கொண்டிருந்து. 30 லட்சம் காரை அதுவும் மூன்று கார் வீட்டு வாயிலில் நிற்பதை காணவே கூட்டம் சேர்ந்து கொண்டிருந்தது.

இதில் காயத்ரி சதாசர்வ காலமும் போனில் பேசிக் கொண்டே இருந்தால் அதைப் பற்றியும் பேசுவார்கள் என்று அவள் போனை எடுக்கவில்லை.

வீட்டிற்குள் நுழைந்த அவளுக்குப் பழுத்த சுமங்கலிகள் ஐந்து பேர் ஆலம் சுற்றி வரவேற்க, ‘உடை மாற்ற போகிறேன்’ என்று தன் அறைக்கு ஓடினாள் காயத்ரி.

இவள் கதவைச் சாத்தி முடிக்கவும், ராகேஷ் வீடியோ காலில் மீண்டும் அழைக்கவும் சரியாய் இருந்தது.

“என்னங்க…” என்று குழைந்து வந்தது காயத்ரியின் குரல்.

“ஏண்டீ!….எத்தனை தடவை தான் ஒரு மனுஷன் கூப்பிடுவது?” என்றான் ராகேஷ் கடுப்புடன்.

“உங்களுக்கு என்னங்க…நீங்க ஆண்…உங்களுக்கு யாரை பற்றியும் கவலை இருக்காது. நேரம், காலம் பார்க்காமா கூப்பிடுவீங்க. சுற்றி ஆளுங்க இருக்கும்போது எப்படிங்க முடியும்?” என்று வெட்கத்துடன் குழைந்து வந்தது அவள் குரல்.

‘இவ கூடப் பேசத் தானே கூப்பிட்டேன்? இவ என்னவோ பெட் ரூமிற்கு கூப்பிட்டா மாதிரி இந்த ஸீன் போடுறா? கேக்கிறவங்க வேற விதமாய் இல்ல அர்த்தம் புரிஞ்சுப்பாங்க… இவளை.’ என்று மேலும் கடுப்பானான் ராகேஷ்.

“உன்னைப் பேசத் தான் கூப்பிட்டேன். இவ ஒருத்தி நேரம் காலம் பார்க்காம ரொமான்ஸ் செய்துட்டு இருக்கா.” என்று எரிச்சலுடன் வந்தது ராகேஷ் குரல்.

“என்ன…என்னங்க ஆச்சு? ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றாள் காயத்ரி.

“சுத்தம் அண்ணி!… இப்போ தான் இவன் பேயறைந்தது போல் இருப்பதையே கவனிக்கறீங்களா? ப்ளீஸ், ட்ரீம் லாண்டில் பிறகு அண்ணனோடு டூயட் பாடுங்க. இப்போ பூமிக்கு லேண்ட் ஆகுங்க.” என்ற உஷா ராகேஷ்க்கு பின்னால் நின்று.

“நடுவுல புகுந்து காமெடி பண்ணாதேடீ… போய்த் தொலை. லுக் காயு இப்போ  அழைப்பைத் துண்டிக்கிறேன். பத்து நிமிடத்தில் மீண்டும் கால் செய்யறேன். போய்க் கதிர், ரகு, கமலா அண்ணியை கூட்டிட்டு வா. இது யாருக்கும் தெரிய கூடாது. முக்கியமாய் அஞ்சலிக்கு.” என்றவன் அவள் பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தான்.

ஒரு கணம் அதிர்ந்து நின்ற காயத்திரி, அடுத்த நொடி தன் அண்ணன்களை, அண்ணியை அழைத்து வந்தாள். அவர்கள் உள்ளே வந்ததும் அறைக்கதவை மூடி தாள் இட்டாள்.

“என்னமா காயு!…என்ன?” என்று அவர்கள் பதற இவள் பதில் சொல்லும் முன்பே மீண்டும் வீடியோ அழைப்பு வந்தது ராகேஷ்ஷிடம் இருந்து.

“ஹாய் மாப்பிள்ளை! என்ன மாலை நிச்சயம் வச்சிட்டு இப்போ வீடியோ காலில் வேறு கடலை போடணுமா?” என்றான் கதிர் நக்கலாக.

“மாப்பிள்ளை சான்ஸே இல்லை… நீங்க கொடுத்த கார் கிப்ட் தான் இப்போ 20 கிராமங்களில் ஹாட் விவாதம். லோக்கல் சேனல்லிலிருத்து கூட இதை கவர் செய்ய அய்யா கிட்டே கேட்டாங்க.

‘நிச்சயம் அன்றே மணமகளுக்கு மூன்று விலையுர்ந்த கார் பரிசளித்தார் மணமகன்’ என்று பிளாஷ் நியூஸ் ஓடினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அசத்திட்டே மாப்பிள்ளை.

பாட்டி அம்மா எல்லாம் பிளாட். ’திருமணம் என்றால் பெண்களுக்கு எத்தனை வேலை பெண்டு நிமிரும். அந்த கஷ்டத்தை புரிந்து கொண்டு எங்க மாப்பிள்ளை உதவிக்கு ஆள் அனுப்பி இருக்கார். ஒரு வேலையும் செய்ய இல்லை.’ என்று ரெண்டு பேரும் வருவோர் போவரிடம் எல்லாம் சொல்லிட்டு இருக்காங்க.” என்றான் ரகு பெருமையுடன்.

தலையை குலுக்கிய ராகேஷ், “மாப்பிள்ளை நான் தான். ஆனால் நான் போட்டு இருக்கும் சட்டை என்னுடையது இல்லை” என்றான்

“என்னது?” என்று ஒன்றும் புரியாமல் நால்வரும் அதிர்ந்தனர்.

மீண்டும் அவன் அதே டயலாக் விட அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

“காரை, உதவியாளர்களை நான் அனுப்பலை, ஆனா என் பெயரில் தான் அனுப்பட்டு இருக்கிறது. காயத்ரிக்கு என்று அனுப்பவில்லை, காயத்ரி பெயரில் தான் அனுப்பப்பட்டு இருக்கிறது.” என்றான் ராகேஷ்.

“நீங்க எனக்கு அனுப்பவில்லை என்றால் வேறு யார் இதை எல்லாம் செய்தது? எனக்கு அனுப்பவில்லை என்றால் இங்கு வேறு யாருக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது?” என்றாள் காயத்ரி அவன் சொல்வது புரிந்தவளாய்.

“அனுப்பியது தி கிரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் கெளதம் பிரபாகர்.” என்றான் ராகேஷ்.

“கெளதம் அண்ணாவா! அன்னைக்கு காலெஜ்க்கு கூட உங்க கூட வந்தாரோ அந்த அண்ணன்னா! அவர் திருமணத்திற்கு வரமாட்டார் என்று ரொம்ப வருத்தபட்டுட்டு இருந்தீங்களே… அதற்காக இதை எல்லாம் செய்தாரா என்ன?” என்றாள் காயத்ரி.

“முதல் பாதி சரி. ரெண்டாம் பாதி தவறு காயு. அவன் நமக்காக அனுப்பவில்லை” என்றான் ராகேஷ் .

“நமக்கு இல்லையென்றால்?” என்றாள் காயத்திரி.

“அவன் மனைவிக்கு அனுப்பியிருக்கிறான்.” என்றான் ராகேஷ் பெருமூச்சுடன்.

“மனைவியா!… அந்த அண்ணாவுக்கு திருமணம் ஆகவில்லை, ஏன் இப்படி சாமியாரா சுத்திட்டு இருக்கான்னு தெரியலை என்று சொன்னீங்க தானே. அப்போ மேரேஜ் முடிஞ்சுடுச்சா?” என்றாள் காயத்ரி.

“கெளதம் பிரபாகர் என்றால் இந்தியா டுடேவில் கவர் ஸ்டோரியாக, ‘தி யங் சார்மிங் டைனமைட்’ என்று பேட்டி எடுத்து போட்டு இருந்தாங்களே! அவரையா சொல்றீங்க?” என்றான் கதிர் பிரமிப்பு நீங்காதவனாய்.

“ஆமா நீ கூட அந்த பேட்டி என்னிடம் காட்டினாய் இல்லை. மும்பை மாடல் டயானாவை காதலிப்பதாக கூட கிசுகிசு வந்துச்சு இல்லை. திருமணமே முடிச்சுட்டாரா! செம்ம ஜோடி தான்.” என்றான் ரகு .

“அதே கெளதம் தான். ஆனால் அவன் திருமணம் முடித்ததாக சொன்னது அந்த மாடல் டயானாவோடு இல்லை. இவன் மனைவி என்று உரிமை கொண்டாடுவது, ‘காவ்யாஞ்சலி’ என்கிற நம்ம அஞ்சலியை.” என்றான்  ராகேஷ்.

“என்னது?” திகைத்தவர்களாய் சேரில் அமர்ந்திருந்த நால்வரும் எழுந்தே நின்று விட்டார்கள்.

“லிசன்.” என்ற ராகேஷ் நிரஞ்சன் இடம் தான் அஞ்சலி போட்டோ கொடுத்ததில் ஆரம்பித்து, அன்று காலை தன் தந்தை கொல்லும் வெறியோடு இருப்பது வரை சொல்லி முடித்தான்.

“கெளதம் வந்துட்டே இருக்கான். அவன் குடும்பம், அஞ்சலி குடும்பம் கூட வந்துட்டே இருக்காங்க என்று நியூஸ் வந்திருக்கு. இவர்கள் இருவரில் யார் பக்கம் நியாயம் இருக்குன்னு தெரியலை. யார் பக்கம் துணை நிற்பது என்றும் எனக்கு தெரியவில்லை.

கெளதம் அஞ்சலியை மனைவி என்கிறான். அஞ்சலியோ தனக்கு திருமணமே ஆகவில்லை என்கிறாள். காட் ப்ரோமிஸ் நான் அவளுக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்ள தான் முயன்றேன். அவளுக்கு ஏதாவது ஹெல்ப் செய்ய முடியுமா என்று தான் நிரஞ்சன் கிட்டே போட்டோ கொடுத்தேன்.

அஞ்சலியின் இந்த தலைமறைவான வாழ்கைக்கு பின்னால் கெளதம் இருப்பது சத்தியமாய் எனக்கு தெரியாது. அவன் காதலே எனக்கு புது நியூஸ் தான்.

அப்பா உங்களிடம் கெளதம் வரும் விஷயத்தை சொல்ல சொல்கிறார். அவனை நேர சந்திப்பதோ, மறுப்பதோ அஞ்சலி எடுக்க வேண்டிய முடிவு, இப்படி ஆள் போட்டு அவளே அறியாமல் அவளை கண்காணிப்பது ஸ்டாக்கிங் என்கிறார்” என்றான் ராகேஷ் தன்னையே நொந்தவனாய்.

ராகேஷ் குடும்பம் குழம்பி போய் இருப்பதை போல் இப்போ காயத்ரி குடும்பம் குழம்பி போனது. பிரச்சனை என்னவென்றே தெரியாமல், வெளிவட்டத்தில் நிற்கும் அவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.

“கெளதம் வருவதை அஞ்சலிக்கு சொல்வதா வேண்டாமா?” என்றான் ராகேஷ்.

“சொல்லி தானே ஆக வேண்டும்.கௌதமிற்கு தன்னை நிலைப்படுத்தி கொள்ள, யோசிக்க, அஞ்சலியை சுற்றி காவல் போட மூன்று நாள் இருந்தது. இதில் என்னவெல்லாம் செய்து அவளை கார்னெர் செய்ய முடியுமோ அது எல்லாவற்றையும் செய்து விட்டான்.

இப்போ அஞ்சலி தும்மினால் கூட எத்தனை முறை என்று கணக்கு சொல்ல அவனுக்கு ஆட்கள் உண்டு. ஹி காட் ஆல் தி அட்வான்டேஜ். அஞ்சலி பக்கம் இருந்து அவன் கொஞ்சம் கூட யோசிக்கவேயில்லை. இவனுங்க இஷ்டப்படி விளையாட ஒரு பெண் மனம் என்ன விளையாட்டு பொருளா?” என்றார் ருத்ரமூர்த்தி.

“ஆனால் அவன் வருவது தெரிந்தால் அஞ்சலி ஓடுவது என்னவோ 100% உறுதி. அது தான் நடக்கும்” என்றான் ராகேஷ்.

“விஷயம் கேள்விப்பட்டால் ராகேஷ் சொல்வதை தான் அஞ்சலி செய்வா. தைரியமாய் நின்று கௌதமிடம் பேசுவா என்று எனக்கு தோன்றவில்லை. பேசுவதாக இருந்தால் இப்படி ஆறு வருடம் ஓட வேண்டிய அவசியமே இல்லையே” என்றான் கதிர்.

“ஆனா எவ்வளவு காலத்திற்கு தான ஓடிட்டே இருப்பா? இதற்கு ஒரு முடிவூ வேண்டாமா! சிறை கைதி போல், வேலைக்காரி போல் தானே இருக்கிறாள். சரியான சாப்பாடில்லை, தன்னை கவனித்து கொள்வதில்லை. அவள் கண்களில் ஒரு தேடலை பார்த்திருக்கேன். அது கௌதமிற்காக தான் என்று இப்போ புரியுது. அவளும் திருமணம், குழந்தை என்று வாழ வேண்டாமா?” என்றாள் காயத்ரி.

“காயு!… இது ஒன்றும் லவர்ரஸ் டிப், அதான் ஊடல் என்று சொல்வார்களே அது இல்லை என்று உனக்கு தோன்றவில்லையா?” என்றார் மூர்த்தி.

“மாமா!… எதுவாய் இருந்தாலும் ‘வெட்டு ஒன்று துண்டு ரெண்டு’ என்று உடைத்து, ‘யெஸ், நோன்னு’ சொல்லியிருந்தா அந்த அண்ணன் எதுக்கு இத்தனை வருஷம் இவளை தேடிட்டு ஊர் ஊரா அலைஞ்சிட்டு இருக்க போறார்?

அவரே தவறு செய்ததாய் இருக்கட்டும், ஆறு வருட தண்டனை போதாதா! மனம் இருந்தால் மன்னிக்கட்டும், இல்லையென்றால் அதையாவது அந்த அண்ணாவிடம் சொல்லிவிட்டு போகலாம் இல்லையா! அவராவது வேறு வாழ்க்கை ஏற்படுத்தி கொள்வார் இல்லை.

அஞ்சலி பிடிவாதத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பது அவளும், கௌதமும் மட்டும் இல்லை, ரெண்டு குடும்பமும் தான் மாமா. ஒரு பெண்ணை காணோம் என்றால் பெத்த வயிறு எப்படி துடிக்கும் என்று தெரியாதா?” என்றாள் காயத்ரி.

“எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது. ஒரு பெண் காணாமல் போனால் அந்த வீடு நிலைகுலைந்து விடும் மாமா. அதை பல சமயம் கண்கூடாகவே பார்த்திருக்கேன். சும்மா ஓடிட்டே இருந்தாலும் இதற்கு முடிவு தான் என்ன?

வயசு பெண்ணை எத்தனை காலத்திற்கு தான் இங்கே வைத்திருக்க முடியும்! நாளைக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு நடந்து போச்சுன்னா அவ குடும்பத்திற்கு பதில் சொல்லும் கடமை இந்த வீட்டு ஆட்கள் மேல் தான் விழும்.

ஒன்று கெளதம் உடன் வாழட்டும். இல்லை அந்த தம்பி வேண்டாம் என்றால் அதை அவர் முகம் பார்த்து சொல்லிட்டு அவள் குடும்பத்தோடு போய் இருக்கட்டும். ஊருக்கு வண்டி வண்டியாய் உபதேசம் செய்வாள். ஆனால் தனக்கு என்று வரும் போது ஓட தான் பார்ப்பாள்.

இந்த ஆறு வருட ஓட்டத்திற்கு முடிவு வரட்டும். இதில் நாம் யாரும் தலையிட வேண்டாம். கெளதம் வரட்டும். அவனாச்சு, அவளாச்சு. எந்த முடிவாய் இருந்தாலும் அதை கௌதமை நேராய் பேஸ் செய்து இருக்கட்டும்.” என்றாள் கமலா.

கமலா பேசி முடிக்கவும் ராகேஷ் பின்னால் இருந்து பலத்த கைதட்டல் கேட்கவும் சரியாய் இருந்தது.

வாயிற்படியில் கால்களை அகல விரித்து, கைகளை தட்டி கொண்டு மெல்லிய புன்னகையுடன் நின்றிருந்தான் கெளதம் பிரபாகர்.

அப்பப்ப!… என்ன அழகாய் இருக்கிறான்!
ரொம்ப அழகு,
ஆண் அழகு….இவன் மட்டும் தானே!
வானத்தையே தொட்டுடுவான் தன் உயரத்தாலே,
அல்லாவுதீன் தீபத்திலிருந்து வெளி வந்தவன் இவனோ!
என்னை ஆட்டுவிக்கும் அற்புதம் இவன் தானோ!
இவனின் கன்னம் சிம்லா ஆப்பிள்
போல் மின்னுகிறது…
அவன் கிடைத்தால் கடித்து சாப்பிட
ஆசை என்னை தூண்டுகிறது.
அவன் பார்வையில் என்னவோ இருக்கிறது ,
அது என் மனதை உருக வைக்கிறது
he is so cute
he is so sweet
he is so handsome
he is so cool
he is so hot
he is just awesome
பருந்துகள் கோழிகளைத் தூக்கி செல்லும்,
நாரைகள் மீன்களைத் தூக்கி செல்லும்,
திருடர்கள் செல்வத்தை தூக்கி செல்வார்கள்,
அதே போல் இவனைக் கடத்தி, எந்தப் பெண்ணின் கண்ணிலும்
படாமல் மறைத்து வைக்க வேண்டி உள்ளதே!
இவன் பக்கத்தில் நான் இருக்கும்போது
பெண் வர்க்கம் கண்களில் புல் ஜெலசி

ஆட்டம் பாம் பவர் உள்ளது இவன் பேச்சில்,
என் இதயம் ஆட்டம் கண்டு விட்டது இவனால்.
ஹே! பெண்ணே உன் புருஷன் யாரு ?
ஆப்பிள் மாதிரிக் கன்னம் வைத்திருக்கும் இவன் தானே!
ஆடை, நகை எதுவும் வேண்டாம்
இவனே கணவனாய் வந்தால் போதும்.
இவன் அழகை பற்றிப் புகழ்ந்து பாட
பாடல்களே இல்லை,
இவன் முன்னால் அழகுக்கே அழகு
இல்லை!
இவன் அழகுக்கு நிகர் எதுவும் இல்லை.

https://www.youtube.com/watch?v=ObnlL8nAghc

என்று பல பெண்களைப் பாட வைத்துக் கொண்டிருந்தான் கெளதம் பிரபாகர்.

கண்கள் சிவந்து ரெண்டு நாளாய் அவன் சரியாகத் தூங்கவில்லை என்பதை சொல்ல, பயணக்களைப்பில் முகம் வாடித் தெரிந்தாலும் கெளதம் பிரபாகரின் கம்பீரம் அது துளி கூடக் குறையவில்லை.

ஒரு நாட்டினை ஆளும் சக்ரவர்த்தியின் தோரணை, நிமிர்வு, தன்னை பற்றிய நம்பிக்கை அவன் நின்ற விதத்திலேயே வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது.    

“டேய் மச்சான்!…வாடா…வாடா…எப்போ வந்தே?” என்று ஓடி போய் தன் நண்பனை அணைத்து கொண்டான் ராகேஷ்.

“நீ தலையை பிடித்து கொண்டு டைனிங் டேபிளுக்கு வரும் போதே வந்துட்டேன். அப்பா வேறு உன்னை வறுத்துட்டு இருந்தாரா உள்ளே வந்தால் நம்மளையும் ஒரு வழி செஞ்சுடுவார், கொஞ்சம் கூல் ஆகட்டும் என்று உஷாராய் வெளியவே நின்னுட்டேன்.” என்றான் அவன் புன்னகையுடன்.

“படவா!…செய்யறதை எல்லாம் செஞ்சிச்சுட்டு ஒண்ணும் தெரியாதவன் மாறி நிக்கறே…உன்னை.” என்ற மூர்த்தியை அணைத்து கொண்டான் கெளதம்.

“அப்புச்சி!… பேருக்கு ஏற்றார் போல் ருத்ரமாய் இருக்க வேண்டாம். கொஞ்சம் சாந்தமூர்த்தியாய் இருங்க.” என்றவன் நேர லாப் டாப் முன் வந்த அமர்ந்து கை கூப்பினான்.

“வணக்கம் நான் கெளதம் பிரபாகர். என் அஞ்சலியோட கணவன்.” என்றான் காயத்ரி குடும்பத்திடம்.

வாய் விட்டு நகைத்தனர் அனைவரும்.

“மச்சான் சான்ஸே இல்லை… சத்தியமாய் சொல்றேன் இப்படி ஒரு இன்ட்ரோ எவனுமே கொடுத்திருக்க  மாட்டான். என்னே உனது சகி பக்தி. முதல் பாலில்லேயே சிக்சர்…நடத்து நடத்து.” என்றான் ராகேஷ் நண்பனை முதுகில் அறைந்து.

“நீங்க எல்லோரும் பேசியதை கேட்டேன். என் அஞ்சலி மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கீங்க என்று புரியுது. ஷி இஸ் ரியலி லக்கி டு ஹாவ் ஆல் ஆப் யு. நான் நிம்மதியாய் தூங்கி எத்தனையோ வருடமாச்சு, எங்கே எப்படி இருக்கா என்று தெரியாம, ஆபத்தில் ஏதாவது சிக்கியிருக்களா என்பதை அறியமுடியாமல் தெரு, தெருவாய் சுற்றி இருக்கேன்.

‘அனாதை பிணம்’ என்று நிரஞ்சன் ஒவ்வொரு முறை அழைத்து செல்லும் போதும், நான் உயிரோடு பலமுறை செத்திருக்கேன். தினமும் நியூஸில் கேள்வி படுகிற பெண்ணிற்கு எப்படி எல்லாம் பாலியல் தொந்தரவு கொடுக்கிறாங்க, விபாரசத்திற்கு விக்கறாங்க, உடல் உறுப்புக்காக கொல்றாங்க…அப்படி எதிலாவது மாட்டி இருக்கிறாளா என்று கூட தெரியாமல்…ஆறு வருட நரகம்.

உங்க கூட அவ பாதுகாப்பாய் இருப்பது தெரிந்த பிறகு தான், என்னால் இயல்பாய் மூச்சு கூட விட முடிகிறது. என் அஞ்சலியை இத்தனை வருடம் பத்திரமாய் பார்த்து கொண்டதற்கு என் உயிரையே கொடுத்தால் கூட ஈடு ஆகாது தான்.” என்றவன் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க, உடன் இருந்த அனைவர் கண்ணும் கலங்கியது.

‘இவ்வளவு அன்பா?’ என்று திகைத்து போனார்கள் அனைவரும். நண்பனை அணைத்து ஆறுதல் படுத்தினான் ராகேஷ். அவன் பருக நீர் கொடுத்து அவன் தேற்ற, கெளதம் ஒருவாறு தன்னை சமாளித்து கொண்டான்.

“எனக்கு நம்பிக்கை இருந்தது எங்க காதல் மேல். என் கடைசி மூச்சு பிரியும் அந்த நொடியிலாவது அவளை பார்த்து விடுவேன் என்று. எங்க காதலே எங்களை சேர்த்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

ஏறாத கோயிலில்லை, வணங்காத தெய்வம் இல்லை. எந்த நிலையில் எப்படி அஞ்சலி திரும்ப கிடைத்து இருந்தாலும் அவளை உயிரோடு கொடுத்து விடு என்று தான ஒவ்வொரு கணமும் வேண்டிடு இருந்தேன்.தேங்க் காட்…” என்று மீண்டும் உணர்ச்சி வசப்பட்டான் கெளதம்.

“கெளதம்!… ரிலாக்ஸ்…. நீ கலங்கி நான் பார்த்ததேயில்லை… மனசு ரொம்ப வலிக்குதுடா உன்னை இப்படி பார்க்கா. அதான் சிஸ்டர் கிடைச்சுட்டாங்க இல்லை… ரிலாக்ஸ்..” என்றான் ராகேஷ்.

‘இவ்வளவு அன்பு, காதல், இன்னும் சொல்லப்போனால் உயிரையே வைத்திருக்கும் இப்படி பட்ட ஒருவனை பிரிய அஞ்சலிக்கு எப்படி மனம் வந்தது? லூசா அவ!’ என்ற கேள்வி அனைவரின் மனதில் கேள்வியாய் எழ, அதை வாய் விட்டே கேட்டு விட்டாள் காயத்ரி.

“இல்லை சிஸ்டர் …அஞ்சலி மேல் எந்த தவறும் இல்லை. எல்லா தப்பும் செய்தது இந்த பாவி தான். என் அஞ்சலி ஏன்ஜெல். மத்தவங்களுக்கு நல்லதை மட்டுமே நினைப்பவள். என்னை வெறுத்து அவள் போய் இருந்தால் நானும் விலகி இருப்பேன்.

ஆனால் என் மேல் அவளுக்கு எந்த அளவிற்கு காதல் இருக்கோ, அதே அளவிற்கு அவ அண்ணன் அவளுக்கு பாசமும் இருக்கு. அது தான் இது அத்தனைக்கும் மூல காரணம் அவளை இப்போ செய்வது போல் முன்னரும் கார்னெர் செய்தேன். அது எனக்கே ஆப்பாய் மாறி இத்தனை வருடம் இவளை இழந்துட்டு நரகத்தில் இருந்தேன்.” என்றான் கெளதம்.

“அப்போ அஞ்சலி குடும்பத்தை உனக்கு தெரியுமா கெளதம்?” என்றார் மூர்த்தி .

“என் குடும்பத்தை எனக்கு தெரியாமல் இருக்குமா அப்பா?” என்றான் கெளதம் கசந்த முறுவலுடன்.

“உங்க வீட்டினரா? அஞ்சலி உங்க சொந்தமா? அத்தை மகள், மாமன் மகள் மாதிரியா?” என்றாள் காயத்திரி.

“இல்லைம்மா… எனக்கு ஒரு சிஸ்டர், தனுஸ்ரீ. அவளை திருமணம் செய்து கொடுத்திருப்பது அஞ்சலியின் மூத்த அண்ணன் விஷ்ணுவுக்கு தான். அஞ்சலி குடும்ப  தத்து பிள்ளை விஷ்ணு சந்தர்.

வீட்டோட மாப்பிள்ளை கேள்வி பட்டு இருப்பீங்க. ‘வீட்டோடு சம்மந்தி குடும்பம்’ கேள்வி பட்டு இருக்கீங்களா? அது நாங்க தான். தனு எங்க வீட்டு இளவரசி. அவளை திருமணம் செய்து கொடுத்த கையோடு அஞ்சலி வீட்டில் குடியேறிட்டோம்.

தனுவை வளர்த்ததே நான் தான். என் முதல் குழந்தை தனு தான். அவளை பிரிந்திருக்க முடியவில்லை.” என்றான் கெளதம்.

“ஓஹ் தங்கையை பிரிய முடியவில்லை என்று வீட்டோடு செட்டில் ஆனாயா, இல்லை அஞ்சலியை தேடி ஓடினாயா! எனக்கு இது மாதிரி எல்லாம் அமையவில்லையே!…நாலு மாசமாய் தொங்கலில் இல்ல விட்டாங்க?” என்ற ராகேஷ்சை கெளதம் மொத்தி எடுக்க, அனைவரும் சிரித்தனர்.

“தனு, விஷ்ணு திருமணத்திற்கு முன்பே மோதலில் தொடங்கியது தான் எங்கள் காதல். முதல் பார்வையிலேயே நான் கிளீன் போல்ட். ரெண்டு குடும்ப பெரியவங்களுக்கு முன்பே பழக்கம் உண்டு.

சோ எனக்கு சுலபமாய் க்ரீன் சிக்னல் கிடைச்சுடுச்சு. எங்கள் இருவருக்கும் ஊரே மெச்ச திருமண ஏற்பாடு எல்லாம் செய்தாங்க. மண்டபம் ரெடி, மாப்பிள்ளை நான் ரெடி. மணமகள் தான் எஸ்கேப்.” என்றான் கெளதம்.

“எனக்கு நீ இதை பற்றி ஒன்றுமே சொல்லலையே கெளதம்.பத்திரிகை கூட அனுப்பவேயில்லையே டா.உன் உயிர் நண்பன் என்று தான் பெயர். உன் காதல் விஷயம் கூட எனக்கு தெரியவில்லை.”என்றான் ராகேஷ் கோபத்துடன்.

“எதையுமே சொல்லும் நிலைமையில் அப்போ எங்க குடும்பமே இல்லை ராக்கி.அது தான் உண்மை. எனக்கும் அஞ்சுவுக்கும் கூட திருமண ஏற்பாடு அவசர கோலமாய் நான் ஏற்பாடு செய்தது தான்.வீட்டு பெரியவங்க அப்பவே சொன்னாங்க…எதுக்கு இப்படி அர்ஜென்ட்டா எல்லாத்தையும் செய்யணும் என்று பதறுகிறே என்று…யார் பேச்சையும் கேட்கவில்லை அப்போ நான்.கேக்கும் நிலையிலும் நான் இல்லை என்பது தான் உண்மை.””என்றான் கெளதம்.

“அண்ணா!…கேட்கிறேன் என்று தப்பாய் நினைக்காதீங்க. அஞ்சலி வேறு யாரையாவது காதலிச்சுட்டு இருந்தாளா? நீங்க…” என்று மேலும் கேட்க வந்ததை கேட்க முடியாமல் நிறுத்தினாள் காயத்ரி.

“அவங்க வீட்டு ஆட்களின் மூலம், இப்போ செய்வது மாதிரி கார்னெர் செய்து அவளை மணக்க முயன்றேனா என்று தானே கேக்கறீங்க சிஸ்டர்.  அப்படியெல்லாம் எதுவும் இல்லை. என் அஞ்சலியோட மனதில் இருப்பது நான் மட்டும் தான்.

என் ஒருவனை தவிர வேறு யாரையும் அவ நிழலை தொட கூட அனுமதிக்க மாட்டா. அப்படியே அவ வேறு ஒருத்தனை மணப்பதாய் இருந்தால் அவளை யாரும் என்னை திருமணம் செய்து தான் ஆக வேண்டும் என்று கட்டாயம் செய்யும் டைப் இல்லை.

இத்தனை வருடத்தில் அப்படி ஒரு காதலன் இருந்திருந்தால், அவனை மணந்து கொண்டு ராணி மாதிரி வாழ்வதை விட்டு உங்க வீட்டில் ஏன் வேலைக்காரியாக இருந்தாள் அவள்? அவ மனதில் இருப்பது நான் மட்டும் தான். ஆனால் அதை ஒத்துக்க மாட்டா. என்னை மறந்து வேறு ஒருவனை மணக்கவும் மாட்டா. அதே சமயம் என்னையும் ஏற்க மாட்டா.” என்றான் கெளதம் வேதனையுடன்.

“கெளதம்! சாரி இப்படி கேட்கிறேன் என்று தப்பாய் நினைக்காதீங்க. அஞ்சலி தான் நீங்க வேண்டாம் என்று பிரிந்து வந்துட்டா இல்லை, அப்படியே விட்டுடுங்களேன், எதுக்கு இந்த துரத்தல், கடத்தல் எல்லாம்! ஒரு பெண்ணிற்கு அது எவ்வளவு பெரிய மன உளைச்சலை தரும் தெரியுமா? எங்க காயுவை அந்த நிலையில் பார்த்திருக்கேன்.” என்றான் ரகு.

“ரகு! உங்களுக்கும் கமலா அண்ணிக்கும் சண்டை என்று பிரிந்து போனார்கள் என்றால் அவர்களுக்கு உங்கள் மீது காதல் இல்லையென்று அர்த்தமா, இல்லை அவங்களை பின் தொடர்ந்து தொடர்ந்து தான் நீங்க போகாமல் விட்டு விடுவீர்களா? என் மனைவியை மட்டும் நான் எப்படி விட முடியும்?அஞ்சலிக்கு மனதளவில் நான் கணவனாகி ரொம்ப வருசமாச்சு.எனக்கும் அஞ்சலி ஒருத்தி தான் மனைவி என்று தான் வாழ்ந்துட்டு இருக்கிறேன்.

சரி நான் விலகி கொள்கிறேன் ரகு, அடுத்த முகுர்த்ததில் அவளுக்கு நீங்களே என்னை விட, அவளை ராணி மாதிரி பார்த்து கொள்ளும் ஒருவனை கணவனாய் கொண்டு வந்து அவ திருமணத்தை நடத்துங்க. ஆனால் உங்களால் அதை செய்ய முடியாது. என் அஞ்சலி செய்யவும் விட மாட்டா.

அவள் கழுத்தில் ஏறும் திருமாங்கல்யம் என்னுடையதாக மட்டுமே இருக்கும். அவள் சுமக்கும் குழந்தைக்கு அப்பா நானாக மட்டுமே இருக்க முடியும்.” என்றவனின் உறுதி, அவனுக்கு அவன் காதல் மேல் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அனைவரையும் வாயடைக்க வைத்தது.

“என்ன பிரச்சனை!…என்ன ஆச்சு கெளதம்.?” என்றார் மூர்த்தி.

“காதல்  தான் பிரச்னை அப்பா. எங்க காதல் இல்லை தனுவின் காதல். இன்னொரு பக்கம் நான் என் தங்கை மேல் வைத்த பாசம் தான் காரணம்.

அஞ்சலிக்கு ரெண்டு அண்ணா. மூத்தவன் விஷ்ணு. அஞ்சலி குடும்பத்தை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றிவிட்டு விஷ்ணு அப்பா இறந்து போனார். அப்பவே அவனை லீகல்லா தத்து எடுத்து, விஷ்ணு அம்மாவிற்கு இன்னொரு திருமணம் செய்து வைத்தார் அஞ்சலி அப்பா பாண்டியன்.” என்றான் கெளதம்.

“ரொம்ப நல்ல காரியம் செய்து இருக்கார் இல்லை… நம்ம உறவில், சுற்றத்தில், அக்கம் பக்கத்தில் எத்தனையோ கைம்பெண்களை பார்த்து கொண்டு இருக்கிறோம். ஆணோ, பெண்ணோ ஒரு துணை இல்லாமல் இருப்பது சாத்தியம் இல்லை என்று புரிந்து அந்த பெண்ணிடம் பேசி, அவளுக்கு இன்னொரு திருமணத்தை நடத்தி வைக்க யாருமே முன் வருவதில்லை.

கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு பணம் கொடுப்பது நல்லது தான். அது அந்த நேரத்திற்க்கு மட்டுமே பயன்படும். வாழ்க்கை முழுக்க துணை வராது.  ‘ஆட்டோகிராப்’ படத்தில் வரும் பாடல் வரிகளும், ஜப்பான் தத்துவங்களும் இதை தான் சொல்கின்றன.

தாகம் என்று சொல்கிறேன்

மரக் கன்று ஒன்றை தருகிறாய்

பசிக்குது என்று சொல்கிறேன்

நெல்மனி ஒன்றை தருகிறாய்.

‘ஒரு மனிதனுக்கு உதவ நினைத்தால் அவன் பிரச்சனைகளின் அடிப்படையே களைந்து விடு’ என்று.

பாண்டியன் உண்மையில் ரொம்ப கிரேட். பணத்தை தூக்கி கொடுக்காமல் மீண்டும் இன்னொரு வாழ்வை அமைத்து கொடுத்திருக்கிறார்.” என்றார் ருத்ரமூர்த்தி.

“மாமா, விசு சாரோட பரம விசிறி. ‘சகலகலா சம்மந்தி’ என்ற படத்தை மட்டும் 200 முறையாவது பார்த்து இருப்பர். ‘கைம்பெண் மறுமணத்தை’ பற்றி பாடமே எடுத்திருப்பார் விசு சார். டயலாக் மாஸ்ஸா இருக்கும்.

’உடற்கூறு படி பலமான ஆணிற்க்கே பெண் துணை தேவை என்னும் போது, பெண்களை கணவன் இறந்து விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக இன்னும் பலவீனமாய் ஆக்குவீங்களா?’ என்று கேட்டு இருப்பார்.

வருஷா வருஷம் கணவனை இழந்த பெண்கள் எத்தனை பேர் மறுமணம் செய்ய விரும்புகிறார்களோ சொந்த செலவில் மாமா செய்து வைப்பார்.” என்று அஞ்சலியின் அப்பாவை பற்றி பேசிய கெளதம் முகத்தில் அப்படி ஒரு பெருமை.

“கதைகளில் படிச்சோம், படம் பார்த்தோம், சமூக வலைத்தளத்தில் லைக் போட்டோம் என்று செல்லும் உலகம். நமக்கே நேரம் கிடைக்காமல் ஓடிட்டு இருக்கும். அடுத்த வீட்டில் யார் எப்படி போனால் என்ன என்று  நினைக்காமல், அஞ்சலி அப்பா செய்வது மிக உன்னத காரியம்.

ஆயிரம் யாகங்கள் செய்தாலும் கிடைக்காத புண்ணியம் ஒரு பெண்ணின் வாழ்வில் தீபம் ஏற்றி வைக்கும் போது நமது சந்ததிக்கே வந்து விடும். அவர் நல்லா இருக்கட்டும்.” என்றார் கற்பகம் மனம் நிறைந்து.

“பிறகு என்ன நடந்தது கெளதம்?” என்றார் மூர்த்தி

“விஷ்ணுவை தத்து எடுத்த பிறகு, பிறந்தவன் தான் ராம்சந்தர். அவன் பிறக்காமலே இருந்து இருந்தால் இத்தனை பேரின் வாழ்வு கேள்விக் குறியாகி இருக்காது.

விஷ்ணுவிற்கு அப்படியே எதிர் பதம் அவன். ஒரு நிலையில்லாதவன். இதுவா, அதுவா, அதுவா இதுவான்னு எதிலும் முடிவு எடுக்க முடியாத ஒரு ‘வெவரிங் மைண்ட்’ கொண்டவன். ட்ரக் அடிக்ட் வேற.

கேர்ள்ஸ், பார்ட்டி, பப், போதை என்று சுற்றும் உத்தமன். இதற்கும் அவன் ஒரு டாக்டர். எங்கே எப்படி இவர்கள் இருவரும் சந்தித்தார்கள், எப்படி இப்படி ஒருத்தன் மேல் என் தங்கை காதலில் விழுந்தால் என்று இப்பொழுது நினைத்தாலும் அதிர்ச்சியாய் தான் இருக்கு. அவன் ஒரு பக்கா வுமனைசர்.

தனுவிற்கு எங்க சாய்ஸ் விஷ்ணுதான். ஆனா அவளுக்கு காதல் வந்தது ராம் மீது. எவ்வளவோ சொல்லி பார்த்தும் தனு தன் மனதை மாற்றி கொள்ளவேயில்லை. திருமணமும் பிக்ஸ் செய்தோம். ஆனால் மணமேடைக்கு ராம் வரவேயில்லை.

எங்கே போனான் என்று யாருக்கும் தெரியவில்லை. சரி ‘தலைக்கு வந்தது தலைப்பாகை’ உடன் போய்டுச்சே என்று சந்தோஷப்பட்டால், தனு வயற்றில் அவன் குழந்தை வளர்வது ஏழு மாதம் வரை எங்களுக்கு தெரியவேயில்லை

குழந்தை இறந்தே பிறந்தது. ஏமாற்ற பட்டோம் என்பதை தாங்க முடியாமல் தனுவிற்கும், ‘மெண்டல் ஸ்ட்ரெஸ்’ அதிகமாகி சூசைட் வரை போய், காப்பாத்த முடியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டோம்.

கொஞ்சம் கொஞ்சமாய் அவளை தேற்றி, கவுன்சிலிங் கொண்டு போய் மீண்டும் அவளை எங்களுக்கு திருப்பி கொடுத்தது எங்க விஷ்ணு தான்.

எப்படியோ அவனை மணந்து கொண்டாள் தனு. இப்போ அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு.” என்றான் கெளதம்.

“அந்த நாயை அப்படியேவா விட்டே கெளதம்?” என்றார் ருத்ரமூர்த்தி.

“கொல்லனும் என்ற வெறியில் ஆட்களை கூட அனுப்பி வைத்தேன். என் தங்கையை காதலிப்பதாக ஏமாற்றி விட்டு ஒருவன் உயிரோடு இருக்க முடியுமா? ஆனால் அவனை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அஞ்சலியை தவிர வேறு யாருக்கும் அவன் எங்கே இருக்கிறான் என்ற விவரம் தெரியவில்லை.

இன்று வரை எவ கூட, எங்கே கூத்து அடிச்சிட்டு இருக்கான் என்று தெரிந்த ஒரே ஆள் அஞ்சலி தான். நான் தப்பு செய்தேன் அப்பா. தனு இருந்த நிலை அவள் கதறிய கதறல் என்னை மிருகமாக்கி விட்டது.

நல்லது கெட்டது எதையும் யோசிக்கும் நிலையில் அப்பொழுது நான் இல்லை. எனக்கு தேவை அந்த பொம்பிளை பொறுக்கி ராம். அவனை கண்டம் துண்டமாய் வெட்டி போடவில்லை என்றால் நான் எல்லாம் என்ன அண்ணன்? எனக்கெல்லாம் எதுக்கு மீசை?

அப்போ தான் எனக்கும் அஞ்சலிக்கும் திருமணம் ஏற்பாடு செய்தேன். பேடி பயல் வயத்தில் குழந்தையை கொடுத்துட்டு ஓடிட்டான் பிளடி ப்ளாக்கர்ட்.

அவன் இருக்கும் இடம் தெரியணும். முகுர்த்தத்திற்கு முன்பு அஞ்சலியை அழைத்து அல்டிமேட்டம் கொடுத்தேன். ஊரே கூடி இருக்கும் போது, ‘ராம் இருக்கும் இடத்தை சொன்னால் உன் கழுத்தில் தாலி கட்டறேன். இல்லையென்றால் நீ வேறு எவனையாவது திருமணம் செய்து கொள்’ என்று இரக்கம் என்பது துளி கூட இல்லாமல் என் அஞ்சலியை பார்த்து சொன்னேன். அப்பவே அவ உயிர் பாதி போய்டுச்சு.

ஆனால் அந்த சமயம் நான் அண்ணனாக இருக்க வேண்டிய கட்டாயம். தனு அங்கே துடிக்கும் ஒவ்வொரு கணமும் என் உயிர் போய்டுச்சு.

திருமணம் என்றால் அங்கே காதல், அன்பு, பாசம், அக்கறை, விட்டு கொடுத்து போகும் தன்மை இருக்க வேண்டும். ஆனால் என் திருமண ஏற்பாட்டில் எனக்கு இருந்தது வெறி, கோபம், பகை, வஞ்சம் மட்டும் தான்.

அந்த ராம் சந்தர் எங்கே இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ளும் வெறி மட்டும் தான்.

அவன் இருக்கும் இடம் தெரிந்தால் அவனை நடு ரோட்டில் தர தரவென்று இழுத்து வந்து, கண்டம் துண்டமாய் வெட்டி அதை எல்லா சமூக வலைத்தளத்தில் ஏற்ற வேண்டும். காதல் என்ற பெயரால் பெண்களை படுக்கை அறைக்கு அழைக்க இனி ஒருத்தன் துணிய கூடாது.

‘அண்ணா!…நான் மோசம் போய்ட்டேன் அண்ணா!’ என்று என் தங்கை கதறி துடித்து, தவித்ததை போல் இனி எந்த பெண்ணும் கதற கூடாது.

காதல் உன்னதம். அதை வைத்து தான் இவங்களுக்கு இச்சை தீரும் என்றால் இவனுங்களை எல்லாம் அங்கேயே மிதித்து கொள்வதில் தப்பில்லை.

ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதும் ஒவ்வொரு தாய்க்கும் அது மரணத்தின் வாசல் வரை சென்று வரும் நரக வலி. அறுவை சிகிச்சை என்றால் அந்த வலி ஆயுள் முழுக்க துணை வரும். அப்படி பெத்து வளர்த்து, ஆளாக்கி சீராக்கி ஒரு பெண்ணை கண்ணுக்குள் வைத்து தான் ஒவ்வொரு குடும்பமும் வளர்க்கிறது.

படிக்கவும், குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்கும் அனுப்பிகிறார்கள். மார்கழி மாதத்து தெருநாய் போல் இவனுங்க படுக்கை அறைக்கு வரவழைக்க, ‘காதல் என்பதை பயன்படுத்தி’ சின்னங்சிறு குயில் கூட்டை களைத்து விடுவானுங்க. அதை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க மீசை வைத்த அண்ணன்கள், அப்பாக்கள் எல்லாம் என்ன பொட்டையா?

சட்டம் தன் கடமையை செய்யும் என்று கையை கட்டி உட்கார்ந்து இருந்தால், இவனுங்க இன்னும் இன்னும் இன்னும் என்று பெண்களை சீர் அழிப்பதையே வேலையாக செய்வானுங்க.அதான் அந்த கருமத்தை எல்லாம், சொல்லி கொடுக்க ஆயிரம் சினிமா, லட்சம் கதைகள், கோடி வீடியோ வருதே!

இந்த பெண்களும் இதை எல்லாம் பார்த்துட்டு, ‘ஓஹ்! ஸ்திரி லோலனாய் இருப்பவன் தான் ஹீரோ’ என்று அவன் எவ்வளவு கேடு கெட்டவனாய் இருந்தாலும் அவன் கிட்டேயே தான் போய் விழுதுங்க.

தனு காலில் கூட நானும் என் அப்பாவும் விழுந்தோம். ராமச்சந்தர் வேண்டாம். அவன் பொம்பளை பொறுக்கி என்று படிச்சி படிச்சி சொன்னோம். கேட்கவேயில்லையே. தெய்வீக காதலாம்….

பத்து நிமிடத்தில் சொல்லவில்லை என்றால் நான் வெளியே போய்டுவேன். என்று சொல்லிட்டு திரும்ப வந்து பார்த்தால் அஞ்சலி அங்கே இருந்து போய்ட்டு இருக்கா.

அஞ்சலியை கார்னெர் செய்ய நினைத்தது நான் செய்த மிக பெரிய தவறு. எங்கள் காதலை ஒரு xxx காக பணயம் வைத்தது நான் செய்த தவறு. இதோ ஆறு வருடமாய் நான் செய்த தவறுக்கு தண்டனை கொடுத்துட்டு இருக்கா.

நான் செய்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம், மன்னிக்கவே முடியாத குற்றம் என்பது எனக்கு உடனே தெரிஞ்சு போச்சு. அவ இல்லாத வாழ்க்கை நரகம் என்பதும் தான்.” என்றான் கெளதம் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிய

அவன் ஏதோ சொல்லப்போன சமயம், காயத்ரி அரை கதவு தட்டப்பட்டது.

“யாரது?” என்று காயத்திரி கேட்க, “அஞ்சு!” என்ற பதில் கெளதம் சத்தமாய் சொல்ல, இவர்கள் திகைத்து தான் போனார்கள்.

“ஏய்! எருமை!…நான் தாண்டீ அஞ்சலி. கதவை திற…ரொம்ப நேரமாய் அறைக்குள் என்ன செஞ்சிட்டு இருக்கே?” என்றாள் வெளியிலிருந்து அஞ்சலி.

கதவையும், வீடியோ காலில் இருந்த கௌதமையும் மாறி மாறி பார்த்தார்கள் மற்றவர்கள். கெளதம் கண்களில் நீர் வழிய, ‘அபிராமி’ குரல் கேட்ட ‘குணா கமல்’ ரியாக்ஷன் கொடுத்து கொண்டிருந்தான் கெளதம். அப்படியொரு ஆவல், பரவசம் அவன் முகத்தில்.

அழைப்பை துண்டிக்க வந்த கதிரை, ”ப்ளீஸ்யா!… கதிர், அவளை பார்த்து ஆறு வருஷம் ஆச்சு. ப்ளீஸ் அப்படியே வீடியோவை மறைத்து வையென். அவளை பார்க்கணும் போலிருக்கு.” என்று கெளதம் கெஞ்ச அவர்களுக்கே என்னவோ போல் ஆகி விட்டது.

 கெளதம் கேட்ட படியே வாயிலை பார்த்தார் போல அந்த லாப்  டாப்பை வைத்தான் கதிர். காயத்ரி சென்று கதவை திறக்க உள்ளே வந்தாள் அஞ்சலி.

“அடியேய்! கதவை மூடிட்டு அப்படி என்….அட நீங்க எல்லோரு இவ கூட தான் இருக்கீங்களா? ரொம்ப நேரமாய் இவளை காணோமோ என்றதும் பதறி அடித்து வந்தேன்.” என்றாள் அஞ்சலி.

“அதுவா அஞ்சலி, இந்த மேடமுக்கு நான் தான் மெஹந்தி போட்டு விடணுமாம். பாரு புக்கை எடுத்து வந்து ஒரு மணி நேரமாய் என்னை கடுப்பு ஏத்திட்டு இருக்கா.” என்றாள் கமலா சட்டென்று.

காயத்ரி தலையில் குட்டிய அஞ்சலி, “அதான் பியூட்டிசின் ஒருத்தங்களை ராகேஷ் அனுப்பி இருக்கார் இல்லை. அண்ணியை ஏண்டீ தொந்தரவு செய்துட்டு இருக்கே? ஈஸ்வர் குட்டி இவங்களை பார்க்கணும் என்று ஒரே அழுகை. குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்து, தூங்க வச்சிட்டு வந்தேன்.” என்றாள் அஞ்சலி.

“அய்யோ!…பாரு உன்னையே எல்லா வேலையும் செய்யா வச்சிட்டு இருக்கோம்.” என்றாள் கமலா.

“அண்ணி! காமெடி செய்யாதீங்க. ராகேஷ் அனுப்பிய ஹெல்ப்பால் எனக்கே வேலை எதுவும் இல்லாமல் வெட்டியா தான் இருக்கேன். எப்படி தான் ராகேஷுக்கு இப்படி செய்யணும் என்று ஐடியா வந்ததோ? இப்பவே உன்னை கையில் வைத்து தாங்கோ தாங்குனு தாங்கறார் லக்கி டீ காயு நீ.” என்றாள் அஞ்சலி.

வந்த சிரிப்பை அடக்கி பெரும் பாடுபட்டனர் அங்கிருந்தவர்கள்.

‘வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்’ பெற்ற விசுவாமித்திரர் ரேஞ்சுக்கு முகத்தை வைத்து கொண்டிருந்தான் கெளதம்.

“என்னம்மா செய்யறது, நெல்லுக்கு பாயும் தண்ணீர் எங்களை போன்ற புற்களுக்கும் கொஞ்சம் யூஸ் ஆகுது.” என்றார் கமலா.

அங்கே, ‘தண்ணீர் பாயும் நெல்லே தான்’ என்பதை அஞ்சலி அறியவில்லை.

அந்த ஆட்கள் ஒரு விதத்தில் அஞ்சலிக்கு பாதுக்காப்பு வளையம் தான் என்றாலும், அவர்களின் உதவி திருமண நேரத்தில் காயத்திரி வீட்டினருக்கு பெரிதும் உதவியது என்பதை மறுக்கவும் முடியாது தான்.

அஞ்சலி என்ற நெல் நீர் கெளதம் அனுப்ப, அந்த நீரானது புல்லான காயத்திரி குடும்பத்திற்கும் பெரிதும் உதவுகிறது என்பதை கமலா மறைமுகமாக சொல்கிறார் என்பது அஞ்சலியை தவிர மற்றவர்களுக்கு வெகு நன்றாகவே புரிய, நமுட்டு சிரிப்புடன் அங்கே நடக்கும் கூத்தை கவனித்து கொண்டு இருந்தனர்.

திருட்டுத்தனமாய், அஞ்சலி அறியாமல் கெளதம் முகத்தில் வந்து போன உணர்ச்சிகளைக் காண கண் கோடி வேண்டும் என்று தான் தோன்றியது அவர்களுக்கு.

கடவுளை நேரில் கண்ட ஒரு பக்தனின் நிலையில், தாயை கண்ட குழந்தையின் மனநிறைவில் நெருக்குறுகி சர்வமும் அஞ்சலி என்று அமர்ந்திருந்தான் கெளதம்.

“அண்ணி! அப்போப்போ விவசாயி மனைவி என்பதை என்னமாய் நிரூபிக்கறீங்க? ஆமா அவங்க தான் மெஹந்தி போடறாங்க…நீங்க ரெண்டு பேரும் என்ன மெஹந்தி கோனை பிடிச்சுட்டு நிக்கறீங்களா என்ன?” என்ற அஞ்சலியில் கேள்விக்கு சட்டென்று அந்த அறையில் சிரிப்பொலி ஒன்று கேட்க, சட்டென்று திரும்பினாள் அஞ்சலி.

“ஏய்! என்னம்மா என் சிரிப்பு அப்படி என்ன காஞ்சனா எபெக்ட் கொடுக்குதா என்ன? இப்படி ரியாக்ஷன் காட்டுறே?” என்று நிலைமையை சமாளித்தார் கமலா.

“அண்ணி!…அண்ணி! இப்போ நீங்களா சிரிச்சீங்க?” என்றாள் நம்ப முடியாதவளாய்.

அவள் கண்கள் அந்த அறை முழுவதும் தேடி சுற்றியது, தேடியது கிடைக்காமல் போக அந்த பூமுகம் கூம்பி போனது.

“ஏம்மா சிரிப்பதற்கு எல்லாம் சப்சிடியூட்டா நான் வைக்க முடியும்? நீ கேட்டியே, ‘இங்கே என்ன செய்யறீங்க?’ என்று அதே கேள்வியை உங்க அண்ணன்க ரெண்டு பேர் கிட்டேயும் நூறுமுறை கேட்டுட்டேன். உங்க பெரியண்ணாவுக்கு சாதாரணமாவே உடல் வளையாது. அதான் ஏசியில் வந்து ஹாயா உட்கார்ந்துட்டார்” என்றார் கமலா.

“சின்னவனே! உனக்கு என்னடா வந்துச்சு?” என்றாள் அஞ்சலி.

“வீடு முழுக்க வயசு பொண்ணுங்க அஞ்சலி…அதான்” என்றான் கதிர்.

“அடப்பாவி! எப்போ இருந்துடா இத்தனை நல்லவன் ஆனே நீயி? இது எல்லாம் பச்சை பொய்டா… அந்த கடவுளுக்கே நீ செய்வது அடுக்காது. புதுசா நடுவீட்டில் உனக்கு மட்டும்போதி மரம் முளைச்சுதா என்ன! ஒரே நாளில் எல்லாம் திருந்திடாதீங்கடா உலகம் தாங்காது. சரி வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” என்றாள் அஞ்சலி.

“பசியில்லை அஞ்சலி.நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு.” என்றார் கமலா.

“சரி அண்ணி என்று கிளம்பிய அஞ்சலி பிரேக் அடித்தது போல் உறைந்து நின்றாள்.

https://www.youtube.com/watch?v=1RmDri1Brc4

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி

பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி

கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி

கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.

அழகியே உனை போலவே

அதிசயம் இல்லையே

அஞ்சலி பேரைச் சொன்னேன்

அவிழ்ந்தது முல்லையே

நீயென்ன நிலவோடு

பிறந்தவளா…?

பூவுக்குள் கருவாகி

வளர்ந்தவளா…?

அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி

என்ற பாடல் காயத்ரியின் டாப்லாப் பில் இருந்து வந்தது. கெளதம் மொபைல் ரிங் டோன் அது.

சைலன்ட் மோடில் போட கெளதம் மறந்திருந்தான்.

அந்த பாடலை கேட்ட உடன் அஞ்சலி முகத்தில் தோன்றிய மாற்றத்தை கண்டு இரு குடும்பமும் வாயை பிளந்தது.

முகம் பிரகாசமாகி விட, கண்கள் பம்பரமாய் சுழல, அந்த கண்களில், முகத்தில் தெரிந்த ஏக்கம், மகிழ்ச்சி,தேடல், தவிப்பு, தேடியதை காண முடியாத நிராசை, அதிர்ச்சி, திகைப்பி அழுகை என்று நவரசம் வந்து போனது அஞ்சலி முகத்தில்.

“அடியேய்!…அந்த மொபைலை கொஞ்சம் அணைத்து வைடி காயு. ராகேஷ் கிட்டே இருந்து இதுவரை இருபது கால் வந்துடுச்சு.” என்றார் கமலா.

அவர் சொல்ல வருவது புரிந்து விட, பாம் டாப்பை எடுத்த காயத்திரி, “ராகேஷ்! இங்கே எல்லாரும் என்னை கிண்டல் செய்யறாங்க. ப்ளீஸ் ஈவ்னிங் பேசிக்கலாம்.” என்று ராகேஷ் உடன் பேசுவது போல் பாவ்லா செய்ய, கண்ணீருடன் அங்கிருந்து பேய் துரத்துவதை போல் ஓடினாள் அஞ்சலி.

அஞ்சலி சென்றதும் மீண்டும் பாம் டாப்பை ஓபன் செய்தவர்கள், “இங்கே ஒரு படம் ஓடியதே, அது என் கற்பனை இல்லை தானே?” என்றார்கள் பலர் ஒரே சமயத்தில்.

“என்ன தான் இப்போ இங்கே நடந்தது?” என்றான் ராகேஷ்.

“அது அவளை பார்த்து நான் அடிக்கடி பாடும் பாடல். அதான் தேவியார் என்னை தேட ஆரம்பிச்சுட்டாங்க. இந்தளவிற்கு லவ் செய்வா…நான் பார்க்கலைன்னு தெரிஞ்சா அந்த திராட்சை கண்ணால் ஆளை விழுங்குவதை போல் பார்த்து வைபா.

கொஞ்ச நேரம் அவ பார்வையை விட்டு நான் காணாமல் போனா போதும் தேடி தவிச்சு போய்டுவா… ஆனா காதல் இல்லவே இல்லை என்று ஸீன் போடுவா. இடியட்… லவ்லி இடியட்” என்றான் கெளதம் முகம் முழுக்க புன்னகையுடன்.

“கெளதம்! நான் கூட ஹெசிட்டேட் செய்தேன். இப்போ சொல்றேன் உனக்கு நான் சப்போர்ட் செய்யறேன். தூள் கிளப்பு.” என்றார் மூர்த்தி.

அதுவரை குதித்து கொண்டிருந்த மூர்த்தியே பச்சை கொடி காட்டியதும், கெளதம் தன் திட்டத்தை சொன்னான்.

இதயம் சமர்ப்பிக்கப்படும்.

 

 

 

 

 

 

 

error: Content is protected !!