சில்லென்ற தீப்பொறி – 15

நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே

உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே

எத்திறத் தானும் இயைவ கரவாத

பற்றினின் பாங்கினியது இல்.

விளக்கம்

ஒரு பொருளை விரும்பித் தன்னை அடைந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல் இனிது. மதிப்பு இல்லாதவிடத்து வாழாதவனின் மனவெழுச்சி இனிது. எப்படியானாலும் பிறருக்குக் கொடுக்கும் பொருளை மறைக்காதவனின் அன்பு மிகப்பெரியது.

சில்லென்ற தீப்பொறி – 15

‘பூமி சுற்றுகிறதா, நான் சுழல்கிறேனா?’ எனத் தெரியாத உணர்வில் கண்களை தேய்த்துக் கொண்டு மெல்ல விழித்தாள் லக்கீஸ்வரி. இரவா பகலா, குளிரா வெயிலா, எங்கே இருக்கிறோம் என்று புரியவே இரண்டு நிமிடம் ஆனது அவளுக்கு.

கட்டிலில் புரண்டவளின் அருகே கணவன் இல்லை. ‘வழக்கம் போல எழுந்து அலுவலகம் சென்று விட்டானா… என்னை எழுப்பி விட்டிருந்தால் என்ன?’ சோர்வுடன் யோசித்தவளின் செவிகளில் குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.

‘ஒஹ்… இங்குதான் இருக்கிறானா! அவனுடன் சேர்ந்து என்னையும் எழுப்பி இருக்கலாமே?’ இதற்கும் முரண்டு பிடித்தது மனைவியின் மனது.

“வரவர ரொம்ப சோம்பேறி ஆகிட்டேன்! ஏன் லேட்டா எந்திரிச்சேன்?” யோசித்தபடியே போர்வையை விலக்க., அவள் அணிந்திருந்த ஆடை வாய்பிளக்க வைத்தது. மேல் கீழ், இடம் வலம் என தன்னைத்தானே அதிர்ச்சியுடன் சுற்றிப் பார்த்துக் கொண்டாள் லக்கி.

அவள் குளித்து விட்டு வரும்போது அணியும் பாத்-ரோப், அவள் மேனியைத் தழுவி இருந்தது, “இதெப்படி என் மேலே… என் நைட்வேர் எங்கே?” முணுமுணுப்புடன் கண்களால் துழாவும் போது, கட்டிலின் அடியில் அவள் நேற்று அணிந்திருந்த ஜீன்சும் லாங் சர்ட்டும் அனாதையாய் கிடந்தன.  

‘ஒஹ், காட்! என்ன ஆச்சு எனக்கு?’ சிந்தித்தவளின் எண்ணத்தில், நேற்றைய தினத்தின் திரைக்கதை வசனம் எல்லாம் வந்து நிறைந்தது.

முன்தின சம்பவங்களை நினைத்ததும், அதுவரை அவளது கோப ஊற்றை அடைத்துக் கொண்டிருந்த சிறிய கல், உடைப்பெடுத்து தெறித்து விழுவது போல், லக்கீஸ்வரியின் உள்ளத்தில் குற்றாலப் பேரருவியின் பேய் வீழ்ச்சி.

கீழே கிடந்த உடையை அவசரத்திற்கு உடுத்திக் கொண்டவளின் ஆங்காரம் எல்லாம், தன் கொண்டவனின் மீது மட்டுமே குடிகொண்டது.

“கதவைத் திறடா, டெவில் ராஸ்கல்!” ஆக்ரோசத்துடன் திட்டிப் படபடவென்று குளியலறைக் கதவினை தட்டினாள் லக்கி.  

“யாஹ்… ஸ்வீட் ஹார்ட்!” உல்லாசம் குறையாத குரலுடன் தலையை மட்டும் வெளியில் நீட்டி எட்டிப் பார்த்த அமிர்தசாகர்,

“ஸ்வீட்னூன், மை பப்பி கேர்ள்! சேர்ந்து குளிக்கலாம் வர்றியா?” உற்சாகமாய் கேட்டபடி அவளையும் குளியலறைக்குள் இழுக்க, முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டாள் லக்கி.

“ஹேய்! மப்பு இன்னும் குறையலையா?” மூக்கினைத் தேய்த்துச் சிரித்தவனின் முகத்தில், அறை ஃபிளாக்சில் இருந்த வெதுவெதுப்பான நீரின் அபிஷேகமும் அவசரகதியில் நடந்தது.

“ஹூப்… ஹாட் வாட்டர்ல இப்பதான்டி குளிச்சேன். ஹாட்டா வந்து உன் கையாலயும் எனக்கு ஹாட்பாத் குடுக்க ஆசைபடுறியா நீ?” நக்கலடித்து அவளை உள்ளே இழுக்க, அவளோ பின்னடைந்தாள்.  

“இருடி… குளியலை முடிச்சிட்டு வந்துடுறேன்.” என்றபடி உள்ளே சென்றவன், சில நொடிகளில் அவனது பாத்-ரோப்பினை அணிந்து கொண்டு வெளியில் வந்தான்.

“நைட் நல்லா தூங்குனியா மின்னிபேபி? ரொம்ப குளிருதுன்னு சொன்னதெல்லாம் மாயமா மறைஞ்சு போச்சா… இப்ப எப்படி ஃபீல் பண்றே? ஹாங் ஓவர் இன்னும் இருக்கா?”

உக்கிரமாய் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் கன்னங்களை, அமிர், தன் கரங்களில் ஏந்திக்கொண்டு அக்கறையுடன் கேட்க, வெடுக்கென்று தட்டி விட்டு முழுபலத்துடன் அவனை கட்டிலில் தள்ளி விட்டாள் லக்கி.

“திரும்பவுமா? நீ தாங்க மாட்ட செல்லம்.” சீண்டலில் இறங்கியவனின் மேலேயே விழுந்து அவனை அடித்து துவம்சம் செய்தாள்.

“என்னை என்னான்னு டா நினைச்சே… இந்த காலத்து படிச்ச பொண்ணுன்னா எல்லாத்துக்கும் சரின்னு மண்டையாட்டி இளிப்பான்னு கனவு கண்டியா? உன் இஷ்டத்துக்கு என்னை வளைச்சுப் போடுறடா! பிராடு… பிளடி மான்ஸ்டர்! ஏன்டா… ஏன்டா இப்படி அநியாயம் பண்ணித் தொலைக்கிற?” ஆங்காரத்துடன் அர்ச்சனைகளும் அடிகளும் சம அளவில் மனைவி கொடுக்க, சுகமாய் வாங்கிக் கொண்டான் கணவன்.

மூச்சு முட்ட, முழுபலம் கொண்டு அவள் அடித்த அடிகளை எல்லாம் பூச்செண்டு தாக்குவதைப் போலவே பெருமிதமாய் தாங்கிக் கொண்டான் அமிர்.

“ரொம்ப திட்டுற நீ… கன்ட்ரோல் பண்ணிக்கோ மின்னி!” சிரிப்பின் இடையில் கண்டிக்கவும் அமிர் தவறவில்லை.

முன்தின ஆட்டத்தின் சோர்வு அவளுக்குள் மிச்சம் மீதி இருக்க, ஓரளவிற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் தனது தாக்குதலை நிறுத்தினாள் லக்கி

தொடர்ந்து அடித்து ஒய்ந்தவள், ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி அரற்ற ஆரம்பிக்க, “அழறியா… இந்த சின்ன விசயத்துக்கா? சில்லி கேர்ள்!” அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு, முதுகைத் தட்டிக் கொடுத்தான் அமிர்.

அந்த ஆறுதலும் அரவணைப்பும் தந்த ஈர்ப்பில், கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டு மேலும் அழத் தொடங்கினாள் லக்கி. 

“இந்த ரியாக்சன் உனக்கு செட் ஆகலடா மின்னி! மை ஸ்மைலிங் டால், இப்ப சிரிப்பியாம்!” கொஞ்சிப் பேசி அவளை சகஜநிலைக்கு மாற்றி விடமுயன்றான்.

அது வெற்றிகரமான தோல்வியைத் தழுவ, “இன்னும் கொஞ்சம் க்ளோசா ஹக் பண்ணினா செம்மையா இருக்கும்.” புருவங்கள் நர்த்தனம் ஆடி அவன் குறும்பாய் காதல் மொழி பேச ஆரம்பிக்க, சட்டென்று சுதாரித்தாள் லக்கி.

“இன்னைக்கு ஃபுல்லா அமிர் அட் யுவர் சர்வீஸ், மை லவ்லி க்வீன்! உன் டம்மிய ஃபுல் பண்ணிட்டு, உன் ஆசைய நிறைவேத்துறேன்.” கண்சிமிட்டியவனின் விரல்கள் அவளின் தேகமெங்கும் உரச, உணர்வுகள் தாளம் தப்பிப் போனது.

“போடா… பன்னாடை, புறம்போக்கு! நீ என்ன சொன்னாலும் உன்னை மன்னிக்கவே மாட்டேன்டா!” லக்கியின் வார்த்தைகள் தந்தி அடிக்க, அவன் உல்லாசமாய் சிரித்தான்

“உனக்கு பாவம் பார்த்து, பாத்-ரோப் போட்டு விட்டது தாப்பா போச்சுடி மை ஸ்வீட் ஹார்ட்!” கிசுகிசுப்பாய் காதிற்குள் ரகசியம் பேசி, அவளை விட்டு விலகி டீசர்ட், ஷார்ட்ஸ்க்கு மாறினான் அமிர்.

கண்ணாடி முன் நின்று ஹேர் பிரஷ்ஷைக் கையிலெடுத்த நேரம், தலையணை பறந்து வந்து அவன் முதுகில் விழ அவனது சுயம் விழித்துக் கொண்டது.

தனது காரியத்தை கிடப்பில் போட்டு விட்டு, அவள் முன்னே வந்து நின்றவன், ”இப்ப என்ன குடி முழுகிப் போச்சுன்னு கொரில்லா டான்ஸ் ஆடுறே? கடவுளே! உன்னை எல்லாம் கட்டிக்கிட்டு…” என பல்லைக் கடித்தவன், “என்ன பிரச்சனைன்னு சொல்லித் தொலைடி?” தனது வழக்கத்தில் கடுகடுத்தான்

“என்ன பிரச்சனையா? தெரியாதா உங்களுக்கு… பண்ற தப்பை எல்லாம் பண்ணிட்டு, கடவுளை துணைக்கு கூப்பிட வேணாம். உங்கள மாதிரி அகம்பாவம் பிடிச்ச ஆசாமிக்கெல்லாம் அவர் ஹெல்ப் பண்ண மாட்டார்.” கண்ணும் மூக்கும் சிவக்க கோபத்தில் வெடித்தாள் லக்கி.

“யம்மாடி… ரொம்பப் பெரிய சாபம்தான்டி குடுக்குற! பலிச்சு கிழிச்சு தொலைச்சிடப் போகுது.” என்றவனின் கண்கள், கசங்கிய அவளது தேகத்தில் மீண்டும் வலம் வந்தது.

தனது ரசனைப் பார்வையை மாற்றாமல், அவள் அருகில் அமர்ந்து நெற்றியில் முத்தமிடப் போக, கிடைத்தது வாய்ப்பென்று தனது கைகளை கொண்டு அவனது மார்பில் படபடவென்று ஓங்கி அடித்தாள்.

“உன் பேட்டரி ஃபுல்லா டவுன் ஆகியிருக்கு பேபி! கொஞ்சம் சார்ஜ் ஏத்திட்டு அடி!” கேலி பேசியவனை விட்டு விலகவும் முடியாமல்,

தன் கைகளைத் தளர்த்தியபடியே, “அடங்கவே மாட்டிங்களா சாச்சு?” விசும்பலுடன் கணவனின் தோளில் சாய்ந்தாள் லக்கி.

“இந்த வெள்ளை பன்னி, இப்படியே என்மேல சாய்ஞ்சிட்டு இருந்தா, நான் எப்படி அடங்குறது?” உல்லாசத்துடன் அவளை ஊடுருவிப் பார்க்க, லக்கிக்கு உறங்கிக் கிடந்த சீற்றமெல்லாம் ஊற்றெடுத்துக் கொண்டது.

“என்னை புரிஞ்சுக்க முயற்சி கூட பண்ணாதவர் கிட்ட இனி பேச்சு இல்ல.” விருட்டென்று எழுந்தவள், தனது அன்றாடங்களை கவனிக்கச் சென்று விட்டாள்.

அவளது பார்வையும் பேச்சும் அப்போதில் இருந்து கடினப்பட்டுப் போனது. அதனை கண்டு கொள்ளத்தான் ஆளில்லை.

தொடரந்த பொழுதுகள் அமைதியாகக் கழிய, தனக்கு மட்டுமான இன்ஸ்டண்ட் உணவினை தாயரித்து உண்ணத் தொடங்கினாள் லக்கி.

“ஏய், இங்கே ஒருத்தன் இருக்கேங்கிறதையே மறந்துட்டு, நீ மட்டும் மொக்கிட்டு இருக்க?” அமிர் கேட்க, காது கேட்காதவள் போல் உண்ணும் வேலையை தொடர்ந்தாள்.

“கோபம் இன்னும் தீரலையா? தண்ணி அடிக்கிறதுல கூட உன் புருஷன், உனக்கு ஈகுவல் பார்ட்னர்ஷிப் குடுத்துருக்கான்னு பெருமைப்படுறதை விட்டுட்டு ரொம்பவும் சிலிர்த்துக்கிற… விட்டுத் தொலைடி!” சமாதானம் கூறியபடி அவளது உணவுத் தட்டை, தன்பக்கம் நகர்த்திக் கொண்டான் அமிர்.

அவளுக்கான உணவும் அவளைக் கேட்காமலேயே பறிபோனதில் லக்கிக்கு கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது.

“இதுக்கு முன்னாடி இங்கே தான் சாப்பிட்டீங்களா நீங்க?” இவள் காட்டத்துடன் கேட்க,

“என் வீட்டுல, என் பொண்டாட்டி கையால நான் சாப்பிடக் கூடாதா?” அமிர் உரிமைக்கொடி பிடிக்க, ‘ச்சை!’ என்றாகிப் போனது அவளுக்கு.

“கையில இருக்கிறதை பிடுங்கி சாப்பிடறதுக்கு பேருதான் உங்க டிக்ஸ்னரியில ஈக்குவல் பார்ட்னர்ஷிப்பா? இந்த நல்ல பாலிசி எல்லா விஷயத்துலயும் நீங்க எனக்கு கொடுக்கிறீங்களா? உண்மையை சொல்லுங்க… நேத்து வேணும்னு தானே அப்படி செஞ்சீங்க?” கண்களும் குரலும் கோபத்தில் கொதிக்க, மூச்சு விடாமல் கேட்டாள் லக்கி.

“அடடா! விடமாட்டியா நீ? குடிகாரன் கூட நீ குடும்பம் நடத்த மாட்டேன்னு சொன்னல்ல… அதான், உனக்கும் ஊத்தி குடுத்து, எனக்கு ஈக்குவல் ஆக்கிட்டேன்!” அமிர் அலட்டிக் கொள்ளாமல் கூற, பாய்ந்து அவனது சட்டையைப் பிடித்தாள் லக்கி.

“என்னதான் பிரச்சனை உங்களுக்கு? உங்க மூச்சுலதான் நான் சுவாசிக்கணுமா? என் விசயத்துல எல்லை மீறிப் போறீங்க சாகர்!” உரத்த குரலில் இவள் நியாயம் பேச, அலட்சியமாய் முகம் சுளித்தான் அமிர்.  

“போதும் நிறுத்துடி! உன் ஆக்சன் சீன் தாங்க முடியல. நீ ஒன்னும் நேத்துதான் மொத மொதல்ல குடிக்கல… அன்னைக்கு நீ பாத்ரூம்ல மயங்கி விழுந்தப்பவும் உனக்கு ஜன்னி வராம இருக்க, வீட்டுல நான் அடிக்கிற சரக்கைதான் உனக்கு மருந்தா குடுத்தேன்.

நேத்து திரும்பவும் வீட்டுக்கு வந்து குளிருதுன்னு சொல்லிட்டே நீ குளிக்கப் போகவும்தான், அந்த சரக்கை திரும்பவும் குடுத்து உன்னை மட்டையாக்குனேன்.” தன்போக்கில் விலாவரியாக விளக்க, இவளுக்கு கேட்கவும் கூசிப் போனது.

தனது சிறகை முறித்து, வெளியே செல்ல தடை விதித்ததும் இல்லாமல், வீட்டிற்குள்ளேயே தனக்கு சுயநினைவு இல்லாத பொழுதிலும் தன் உணர்வுகளோடு கணவன் விளையாடி இருக்கிறான் என்பதை அறிந்து வெகுவாக உடைந்து போனாள் லக்கி.

இவனது அக்கிரமத்தை எல்லாம் பொறுத்துக் கொண்டு இவனோடு கொஞ்சிக் குலாவியதற்கு அளித்த வெகுமதியாக, ‘குடிகாரி.’ என்ற பட்டத்தை எளிதாக தூக்கி கொடுத்து விட்டான்.

தனது ஒவ்வொரு அணுவும் இவனுக்கு அடிமைப்பட்டு, இவனோடு சலாம் போட்டு வாழத்தான் வேண்டுமா என்று மனதோடு குமைந்து போனாள்.

ஏனோ அந்த நேரம் கணவனுடன் இவள் கூடிக் கழித்ததை  நினைத்தே உடலும் மனமும் கூசிப் போனது. துப்பவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல், தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட முள்ளாய் கணவனின் வார்த்தைகள் அவளை உயிரோடு எரிக்கத் தொடங்கின.

‘போதும் புலம்பியது! இனியும் அழுது தொலைத்து கோழையாகி விடாதே!’ என மனம் வெகுண்டு எழத் தொடங்கியது.

அழுகை பெண்களின் பலகீனம், நம்மை ஒன்றுக்கும் உதவாதவள் என்ற தாழ்வு மனப்பான்மையை நமக்கே கொடுக்கக் கூடியது. சுயபச்சாதாபம் கொள்ள வைக்க கூடியது. இது இரண்டும் இப்போது வேலைக்கு ஆகாது.

லக்கீஸ்வரியின் மனதின் அடியில் எங்கேயோ உருவான குறைந்த காற்றழுத்தம், மிதமான வேகத்தில் மேலே வந்து கொண்டிருந்தது. அது கண்ணீர் மழையாக பொழியும் முன்னரே கண்களில் தூறலாக கசிந்த நீரை மிகுந்த பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

‘வேண்டாம், அழுது விடக்கூடாது. அவன் தவறு செய்திருக்க, அதற்கு மன்னிப்பு கேட்பதற்கு மாறாக, நம்மை அவனிடம் கெஞ்ச வைத்து விடும். ஊஹூம் கூடாது!’ உள்ளுக்குள் முடிவெடுத்து வந்த கண்ணீரை மென்று முழுங்கினாள் லக்கி.

அவளது மனநிலை என்னவென்பதையே அறியாதவனாய் தன் இஷ்டத்திற்கு, “குடிகாரனுக்கு குடிகாரி சரியாய் போச்சு! இனி ஏதாவது சொல்லி என்னை, நீ அவாய்ட் பண்ண பார்த்த… அவ்வளவுதான்!” வழமையான தனது ஆதிக்க குரலில் மனைவியை மிரட்ட, அவளோ அவனை நேர்கொண்டு பார்த்தாள்.

“அவாய்ட் பண்ணப் பார்த்தா… என்ன பண்ணுவீங்க? மொத்தமா ஊத்திக் கொடுத்து பரலோகம் அனுப்புவீங்களா? அப்படியென்ன மூர்க்கத்தனமான வெறி என்மேல உங்களுக்கு…

உங்ககிட்ட வீட்டோட மாப்பிள்ளை விஷயத்தை சொல்லாம மறைச்சு கல்யாணம் பண்ணது தப்புதான். அந்த ஒரு காரணத்துக்காக இன்னும் என்னவெல்லாம் சொல்லி என்னை அவமானப்படுத்துவீங்க?

நீங்கதான் வேணும்ன்னு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கேனே… இன்னுமா உங்களுக்கு அந்த கோபம் அடங்கல?

எங்கப்பாவை பழிவாங்க நினைச்சு, என் தன்மானத்தை கால்ல போட்டு நசுக்குறீங்க! அது உங்களுக்குதான் கெட்டபேரை வாங்கித் தரும்.” தீர்க்கமான குரலில் அழுத்தமாகக் கூற, அந்த நேரத்தில் கங்கில் வெடித்த தீப்பொறி இருவரின் கண்களிலும் பறந்தது

“என்னடி… வெறி, பழிவாங்கிறியான்னு என்னை நிக்க வைச்சு கேள்வி கேட்டுட்டு இருக்க? என்னைப் பத்தி தெரிஞ்சுக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பில்ல… ஆனா, தெரிஞ்ச பிறகும் என்னை புரிஞ்சுக்காம, உங்க இஷ்டத்துக்கு என்னை இழுக்க நினைக்கிறவங்களுக்கு, நான் பதிலடி குடுக்க வேணாமா?” தன் சுபாவத்தில் நிமிர்ந்து கனலைக் கொட்டினான் அமிர்.

“அப்போ, உங்களை தவிர்த்து வேற யாரையும் நீங்க யோசிக்கவே மாட்டீங்களா?” ஆதங்கமாய் லக்கி கேட்க,

“ஏன் யோசிக்காம… உன் மேல கோபம் இருந்தாலும் உன்னை நான் தாங்கலையா? அதிகப்பிரசங்கியா கேள்வி கேக்காம ஒழுங்கா வாயை மூடு! இப்படியெல்லாம் எதிர்த்து பேசினா, எனக்கு கொஞ்சமும் பிடிக்காது.” குரலை உயர்த்தி மிரட்ட, அவனுக்கு இணையான குரலில் இவளும் குரலை உயர்த்தினாள்.

“என் எல்லா விசயத்துலயும் நீங்க மூக்கை நுழைக்கிறது, ஹவுஸ் அரஸ்ட்ல என்னை கன்ட்ரோல் பண்ணி வைக்கிறது எனக்கும் பிடிக்கல. மொத்தத்துல உங்களை எனக்குப் பிடிக்கல!” காரமான குரலில் இவள் பல்லைக் கடிக்க, அமிர் வாய் விட்டுச் சிரித்தான்.

“இதை நேத்து நீ உளரும் போது சொல்லியிருந்தா, உண்மைன்னு நம்பி இருப்பேன் டி! உடம்பும் மனசும் ரொம்ப அசதியா இருந்தா, இப்படித்தான் உளறிக் கொட்ட வைக்கும். சாப்பிட்டு போயி நிம்மதியா ரெஸ்ட் எடு!” எனக் கூறியவன், தன் வயிற்றை நிறைத்துக் கொண்டு வெளியில் கிளம்பி விட்டான்.

 

இது பனித்திரை மூடிய பார்வை

அந்த பார்வையில் மாறுதல் தேவை

நல்ல மாறுதல் நாம் பெறும் போது

அந்த திரையும் விலகலாம்

அன்பு பயணமும் தொடரலாம். (பாடல்)