சீமை சீயான்

IMG-20200114-WA0014

சீமை சீயான் – 7

 

இன்று சீயான் மாமாவிடம்  சென்று அனைத்தையும் கேட்டுவிட வேண்டும் என்று மனம் ஆளாய்ப் பறந்தது. தனது பெற்றவர்களுக்குக் கூடத் தெரியாத விடயம் அவன் காதுக்கு எட்டியது எப்படி? ஐயோ! அப்படி என்றால் தனது மாமனுக்கு அனைத்தும் தெரியுமா கலக்கம் பிறந்தது பெண்ணுக்கு.

 

தயக்கத்தைத் தள்ளி வைத்தவள் கிளம்பிவிட்டாள் சீயானை பார்க்க.வெளியில் செல்ல அவள் சுடிதார் அணிந்து வேற்று நெற்றியாக கிளம்பிவர பெற்றவர்களுக்குத் தொண்டை அடைத்தது.

 

எப்படி வாழவேண்டிய பெண் இவள். எல்லாம் எனது தவறால் அன்று நாவடக்கி தணிந்து இருந்தால் தனது பெண்ணுக்கு இந்நிலை வந்து இருக்கமா? இனி வருந்தி என்ன பயன் என்று தன்னையே நொந்து கொண்டவர்.

 

“எங்க கண்ணு கிளம்பிட்ட நானும் வரவாத் தாயி”

 

“வேணாம் ப்பா பிச்சி வருது அது கூடத் தான் அங்காயி அத்தை வீட்டுக்கு போறேன்” தனது தங்கை வீடு என்றதும் நிம்மதி பரவ “சுதானமா போய்ட்டு வாங்க” என்றவர் மனைவியை அர்த்தமாகப் பார்த்துக் கொண்டே வெளிப்புறம் சென்றார்.

 

மகள் சொன்னது போல் பிச்சி அவருக்கு எதிரே வந்து கொண்டு இருந்தால் உறவில் பெரியப்பா முறை என்றாலும். அன்று நடந்த கலவரத்தில் சீயானை பேசியதில் கோபம் கொண்டவள், அவர் இருக்கும் திசை பக்கம் கூட வந்ததில்லை.

 

அன்று தாய் தந்தை கூடக் கையறு நிலையில் நிற்க சீயானுக்காக அத்தனை பேர் முன்னிலும் சண்டை கட்டியவள் ஆயிற்றே. கசப்பை விழுங்கி கொண்டார் பொன்னுரங்கம் (இதற்கே மனிதன் துவண்டு போனால் எப்படி இன்னும் தனது பெணின் கடந்து போன வாழ்க்கை தெரிந்தால்?…..)

 

 “வா தாயி அப்பாரு,அம்மா எல்லாம் சௌக்கியமா” என்றவரை சிறு அதிர்ச்சியோடு பார்த்தவள்.‘பேசியது பொன்னுரங்கம் தான’ குழம்பி பின்பு தெளிந்து “எல்லாரும் நல்ல இருக்காங்க பெரியப்பா வேம்பு கூப்டுச்சு அதான் வந்தேன்”

 

“போ தாயி பாப்பா கிளம்பி தான் இருக்கு” என்றவர் சந்தோசமாக சென்றார். உறவுகளின் அன்பை இப்போதுதான் உணர்கிறார்  அதற்கு அவர் கொடுத்த வேலை சற்று அதிகம் தான் (கடவுளின் கொடூர கணக்கு).

வேம்புவும் பிச்சியும் சீயானை பார்க்க சென்றனர் இருவரும். வழி நெடுக யோசனையில் வந்த வேம்புவை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே வந்தாள் பிச்சி.

 

சீயான் இப்போது தென்னத் தோப்பில் இருப்பான் அவனுடன் தந்தையான தனது தாய் மாமனும் இருப்பாரே எப்படி பேசுவது  என்று யோசித்து கொண்டு வந்தவளை உலுக்கினாள் பிச்சி.

 

“என்னடி கானா கண்டு கிட்டு வர நானும் பேசுவனு மூஞ்சிய மூஞ்சிய பாக்குறேன் ஹ்ம்ம்…… என்னவோ கடிவாளம் கட்டுன குதிரை மாதிரி நேர பார்த்துட்டு போற. பிறகு எதுக்கு என்ன வர சொன்ன, என்னால பேசாம வர முடியாது பார்த்துக்கோ” பத்து நிமிட நடையில் பிச்சி பொங்கி விட்டால் பேசிய வாய் சும்மா நிற்குமா அவளும் என்னதான் செய்வாள் பாவம்.

 

“ப்ச் ….நான் வேற யோசனைல இருக்கேண்டி சீயான் மாமா கூட பேசணும்”

 

“என்ன புள்ள அதிசயமா இருக்கு இப்போதான் என் மாமன கண்ணுக்கு தெரியுதோ?”

 

“ஆமா என்னங்குற இப்போ”

 “அடிங்க அம்புட்டு ஏத்தமா போச்சா உனக்கு இருடி சொல்லிவைக்குறேன்” பிச்சியின் பேச்சு எரிச்சலை கிளப்ப “நானும் சொல்லுவேன் முத்து  மாமாகிட்ட”

 

“பார்ரா சொல்லு சொல்லு உங்க மாமே என்ன பெரிய ஆளா”

 

“சீயான் மட்டும் பெரிய ஆளா”

 

தூரத்தில் இருந்தே இவர்களைப் பார்த்த சீயான் நெருங்கி வரும் வேளையில் இருவரும் தன்னைக் கொண்டு சண்டை கட்ட வேம்புவின் கேள்விக்குப் பதில் சொல்லுவது போல் “அங்கன என்னடி சத்தம் என்கிட்ட வந்து கேளுடி நான் சொல்லுறேன்” என்றவாறே வந்தான்.பிச்சி ஓடி போய் அவனது தோளில் சாய்ந்து செல்லம் கொஞ்ச முகத்தை திருப்பி கொண்டாள் வேம்பு.

 

“என்னவாம் முகம் திருபுறவ”

 

“அவ அப்புடிதான் மாமா”

 

 “ஏய் வேறசா  பேசிப்புட்டு வா.அம்மாக்கு மேலுக்கு முடியல நாந்தேன் சமைக்கனும்”.

 

“நீ போ பிச்சி நான் வர நேரமாகும்” என்றவள் சீயானை பார்க்க இருவரையும் மாறி மாறி பார்த்த பிச்சி கிளம்பிவிட்டாள்.

 

“வா அங்கன போய் பேசுவோம், ஐயா கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன் அங்கன யாரும் வர மாட்டாங்க” என்ற தகவலை கொடுத்தவன் முன்னேறி செல்ல அவனை பின் தொடர்ந்தால் வேம்பு.

 

தென்னை மரத்தடியில் எதிர் எதிர்புறம் இருவரும் அமர்ந்து இருக்க “என்ன  கேக்கணும்” என்றான் சீயான் பேச்சை தொடங்கும் நோக்கத்தோடு. அவன் கேட்கவே சடாரென நிமிர்ந்தவள் கண்ணீர் பெருக “எல்லாம் தெரிஞ்சும் என்ன அங்கன விட எப்புடி மனசு வந்துச்சு பழிக்கு பழியா”

 

“அறைஞ்சேனா பல்லு பேந்துடும் அப்பன் புத்தி அப்புடியே இருக்குடி உனக்கு.எனக்கு முன்னயே  தெரிஞ்சு இருந்தா உன்ன தூக்கிட்டு வந்துருப்பேன், இதோ இப்ப நிக்கிறியே இந்த கோலம் இதுக்கு அவசியமே இருந்து இருக்காது” அவளது வேற்று நேற்றியை சுட்டி கட்டியவன் வேதனையாக கண்களை மூடி கொண்டான்.

அவளுக்கும் அந்த கனத்தை தாங்க முடியவில்லை ஓடி சென்று அவனை இறுக்க கட்டி கொண்டாள்.இருவரது நினைவும் பின்னோக்கி சென்றது.கசிப்புகளும் இனிப்புகளும் கலந்த நாட்கள் அவை.

 

அப்போதுதான் சீயான் படிப்பை முடித்து இருந்த காலம் சீயான் அடிக்காத கூத்தே இல்லை. அனைத்தும் வீட்டுக்கு வெளியில் தான் வீட்டினுள் நல்ல பிள்ளையாக வளம் வருவான்.வயதிற்கே உண்டான குறும்புகள் இருக்க யாருக்கும் அடங்காத காளையாகவே வளம் வந்தான்.முனியாண்டிக்குத் தெரிந்தாலும் அவர் காட்டி கொள்ள மாட்டார்.

 

சண்டை வம்பு வழக்கு என்று இருப்பவன் படிப்பையும் நல்ல படியாக முடித்தான்.அனைத்திலும் தன்னைச் சரியாக வைத்துக் கொண்டு நாட்டாமை செய்தவனை அவனது நண்பர்கள் செல்லமாகச் சீமை சீயான் என்று தான் அழைப்பார்கள்.நாளடைவில் அதுவே அவன் அடையாளமாக மாறிவிட்டது.

 

வழமை போல் முத்துவும் அவனும் ஊர் சுற்றி கொண்டு வீடிற்கு வர.அங்கே அங்கயி ஆவேசமாக பொன்னுரங்கனிடம் பேசி கொண்டு இருந்தார்.அவரது கத்தல் பத்தடி தூரத்தில் இருந்தே கேட்க ஆரம்பித்து விட்டது.

 

“என்ன சீயான் ஒரே சத்தமா இருக்கு”

 

“என்னனு தெரியல முத்து வா பார்க்கலாம் என்றவன் முன்னேறி செல்ல அங்கே பொன்னுரங்கமும் அவரது மனைவியும் இருக்க அவர்களுக்கு நேர் எதிரே தாயும் தந்தையும் நின்று இருந்தனர்.அங்காயி முகத்தில் அத்தனை கோபம்.

 

“என்ன அண்ணே விளையாடுறியா நீ எங்களைக் கேக்காம எப்புடி கண்ணாலம் பேசுவ நான் என்ன செத்தா போயிட்டேன்”

 

“என்ன மதனி இப்புடியெல்லாம் பேசுறீங்க”

 

“என்னத்த பேசுறாங்க அண்ணே பேசுறது சரியா முறைக்கு என் மவன் இருக்கும் பொது அசலூரு எதுக்குப் பணம் பாக்கிறிங்களோ?”வார்த்தையில் அத்தனை தணல்.

 

“அங்கயி பொறுத்து பேசு” என்ற முண்டியாண்டி நீங்க சொல்லுங்க மச்சான் என்றார்.

 

“மாப்புள என் பொண்ணுக்கு  நல்ல வாழ்க்கை கிடைச்சு  இருக்கு குறுக்க நிக்காம கூட இருந்து முடுச்சு கொடுங்க மாப்புள.தங்கச்சிக்கு புரியல பையன் பட்டணத்துல பெரிய வேல மாப்புள பார்க்க ஜம்முனு ராசாவாட்டம் இருக்கான்”

 

‘அண்ணே’ என்று பொங்கிய அங்கயியை அடக்கிய முண்டியாண்டி “நீங்க பாருங்க மச்சான் நம்ம பொண்ணுக்கு ஜாம் ஜாம்முனு கண்ணாலம் பண்ணலாம்” என்றவரை பார்த்து இதழ் விரித்துச் சிரித்த பொன்னுரங்கம்

 

அப்போ நான் வரேன் மச்சான் வரேன் தங்கச்சி என்றவர் அங்காயி முகத்தைப் பார்க்காமல் வெளி ஏறினார்.

 

அவர் முன்னே எதிர் பட்ட சீயானிடம் கூடப் பேசவில்லை . எங்கே பேசினால் வேம்புவை கட்டிக்க ஆசை என்று சொல்லிவிடுவானோ என்ற பயம் தான்.போகும் அவரைப் பார்த்த சீயான் மற்றும் முத்து இருவரும் புரியாத பார்வையைப் பரிமாறி கொண்டனர்.

 

என்ன பெரியம்மா வாச வரைக்கும் கேக்குது உன் கூப்பாடு என்ற முத்து அவர் பக்கத்தில் அமர

 

என்னத்த சொல்ல என்றவர் வேம்புவிற்கு வந்த வரனை பற்றிச் சொல்ல பொறுமையாக கேட்ட சீயான் “அம்மா என்னத்துக்கு நீ வெசன படுற நல்ல மாப்பிள்ள னா முடிக்கட்டுமே எனக்கு ஒண்ணுமில்லை” என்றவன் தனது தந்தையைப் பார்த்து.

 

“ஐயா என்ன நான் சொல்லுறது எனக்கு எந்த எண்ணமும் இல்லங்க”

“ சாமி பார்த்துக்கலாம்” என்றவர் மனைவியை நோக்கி “அங்காயி இந்தப் பேச்ச விடு பொம்பள புள்ள வாழ்க்கை மனசு நிறைஞ்சு போய் நல்ல வாக்கு சொல்லுவோம்” என்றவரை பார்த்து அரைகுறை மனதுடன் சரியென்று தலை அசைத்தார்.

 

அவருக்குத் தனது அண்ணன் மகளான வேம்புவை சீயானுக்கு மனம் முடிக்க ஆசை.ஆனால் அந்த ஆசை வேம்பு மற்றும் சீயானிடம் இல்லையே இருவரும் உறவு என்ற நிலையில் சீண்டி கொள்வார்கள் அவ்வளவே. அதனால் தான் தனது தந்தை மாப்பிள்ளை என்று அந்த வாலிபனை காட்டும் பொதுச் சரியென்றால்.

 

சீயானும் அந்த வரனை வரவேற்றான் ஆனால் விதி விதி என்ற ஒன்று இங்குச் சற்றுக் கொடூரமாக விளையாட எண்ணியதோ.அழகாகச் சென்ற உறவுகள் சிதற ஒரு பெண்ணின் வாழ்க்கையே அஸ்தமனம் ஆகியது .

 

அன்று வேம்புக்கும் அந்த வாலிபனுக்கும் நிச்சயம் பொன்னுரங்கம் சற்று தடபுடலாகச் செய்தார் என்றே சொல்ல வேண்டும்.ஒரே பெண் அல்லவா அழகாக இருந்த வேம்புவை பார்க்க பார்க்க அங்காயிக்கு மனம் ஆறவில்லை.

 

விதி அவருக்கு ஆருடம் சொன்னதோ என்னவோ மனம் ஒரு நிலையில் இல்லை வந்தவர்கள் தெரிந்தவர்களாக இருந்தாலும்.மனம் சற்று உறுத்தவே செய்தது.அதனை வலு கட்டாயமாக ஒதுக்கி அண்ணன் வீட்டு விழாவில் வேலை செய்து கொண்டு இருந்தார் அத்தை என்ற கடமைக்காக.

அவர் கலக்கம் கொண்டது போல் தான் நடந்தது விழா இனிதே முடிந்த மகிழ்ச்சியில் பிச்சியும் வேம்புவும் சற்று கலகலத்துத் தோட்டத்தில் சுற்றி திரிய அங்குச் சீயான் வேலை செய்து கொண்டு இருந்தான் அவனைப் பார்த்ததும் பிச்சி துள்ளி ஓடி வர அதனைப் பார்த்தவன்.

 

“பாப்பா பார்த்து வா விழுந்து வைக்காத” என்று கடிந்தவன் வேம்புவை நோக்கி “நீ எதுக்குடி வெளில வர உள்ளர போ” புதுப் பெண் அல்லவா அதனால் அவன் அவளைக் கண்டிக்க.

 

“போ மாமா எம்புட்டு நேரம் அங்கன உக்காந்து வேடிக்கை பார்க்க அலுப்பா இருக்கு செத்த நேரம் நடந்துட்டு போறோம்”

 

“சரி பார்த்து இருங்க இங்கன யாருமில்லை ரொம்ப நேரம் தனுச்சு இருக்காதிங்க” என்றவன் சென்று விட்டான்.சிறிது நேரம் அங்கே சுற்றியவர்கள் வீட்டை நோக்கி செல்ல.விதி ஒரு மூதாட்டியின் மூலம் விளையாட அழைத்தது.

 

“ஏண்டி பிச்சி”

 

“என்ன ஆத்தா”

 

“அந்த மோட்டாரை செத்த தட்டிட்டு போ புள்ள தண்ணி பாச்சனும்”

 

சரி என்றவள் மோட்டார் அறையை நோக்கி செல்ல அவளைத் தடுத்த வேம்பு “நீ இருடி நான் போறேன்” என்றவள் பிச்சியின் பதிலை எதிர் பார்க்காமல் சென்றால் சென்று அரை நொடி கூட இருக்காது வீறிட்டு கத்தினாள் வேம்பு.

 

பிச்சி பதறிக் கொண்டு ஓடி போய் பார்க்க அங்கே வேம்பு பேச்சு மூச்சில்லாமல் இருந்தால். நொடியும் தாமதிக்காமல் ஆட்களை அழைக்கச் செல்ல அவள் கண்ணில் சிக்கியது சீயான் தான்.

 

அங்கு வேலையாக வந்தவனைப் பிச்சி வேம்புவின் நிலை சொல்லி அழைக்க.பதரி கொண்டு ஓடினான் சீயான்.

 

“இதுக்குத் தான் வெளில வராதிங்கனு சொன்னேன் ஏண்டி உசுர வாங்குறீங்க”

 

“நான் என்னத்த மாமா கண்டேன் நான் போறேண்டினு ஓடிட்டா”

 

“நீ போட்டா மட்டும் ஷாக் அடிக்காதா பாப்பா” அந்நிலையிலும் தனது அன்பை கடிந்து சொன்னவன் வேம்புவை நெருங்கி மடியில் வைத்துக் கொண்டான்.

 

பிச்சி ஓடி போய் எங்க ஐயாவ கூட்டிட்டு வா என்றவன் அவள் கன்னம் தட்டி எழுப்ப முயற்சி செய்து கொண்டு இருந்தான்.பிச்சி ஓடி போய்ச் செய்தி சொல்லி முனியாண்டியை அழைத்து வருவதற்குள். அங்கு வந்த பொன்னுரங்கம் இருவரையும் பார்த்து விட்டார்.

 

“டேய்!……………. கொட்டி பயலே என்ன காரியம் பண்றடா நீ” என்றவாறே பின்னிருந்து சீயான் முதுகில் ஓங்கி மிதித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!