சுமப்பேன் உனை தாயாக 3

PicsArt_01-12-07.39.48-2c29f8f1

சுமப்பேன் உனை தாயாக 

 

 

ஒரு வாரம் சென்ற நிலையில், மும்பை மாநகரம் எப்பொழுதும் போல் பரபரப்பாக விடிந்து யாருக்கும் நிற்காமல் நேரம் சென்று கொண்டு இருக்க, மாட்டுங்க (matunga) ஏரியாவே கலகலப்பாக இருக்க அதற்கு மாறாக இருந்தது ஒரு வீடு.

 

கமலம் “நீ என்ன தான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணலாம் நான் எடுத்த முடிவை உன்னால் மாற்றவே முடியாது. யாரை நம்பி உன் அப்பன் உன்னை என் கிட்ட விட்டு போனான். போனது தான் போனான் எதாவது செய்து வெச்சி இருக்கானா அதுவும் இல்ல நான் எப்படி வாழறதாம். என்னால இதுக்கு மேல உழைக்க முடியாது இப்ப கிடைச்சு இருக்கிற வாய்ப்பு என்னால நினைச்சு கூட பார்க்க முடியாத பணம் எனக்கு கிடைக்க போது” என்று வாயில் புகையிலையை மென்று கொண்டே கூற,

 

“சீ…. நீ எல்லாம் ஒரு பொண்ணா எப்படி உன்னால இப்படி எல்லாம் செய்ய முடியும் நான் உனக்கு பொண்ணு மாதிரி தானே என்னை போய் பணத்துக்கு விக்க பார்க்கிற நீ எல்லாம் என்ன தாய்” என்று முகத்தில் வேதனையும் கடுப்பும் சேர்ந்து கேட்க,

 

“யாருக்கு யாருக்கு அம்மா நீ அந்த மனிசனோட பொண்ணு எதோ காரணத்துக்காக உன் அப்பாவை நான் இரண்டாவது கட்டிகிட்டேன். மத்த படி உன்னை ஆசையா எல்லாம் நான் என்றைக்குமே பார்த்துக்கிட்டது இல்ல. இன்னும் ஒரு வாரம், உனக்கு யாரு அதிகமான பணம் தரங்களோ அவங்க கிட்ட உன்னை வித்துட்டு நான் என்னோட வாழ்கையை சந்தோசமா வாழ போறேன்” என 

 

அதை கேட்டு கலங்கும் கண்களை துடைத்து கொண்டு ‘நான் இருந்தா தானே என்னை விக்க நினைப்ப நான் இல்லாமல் போய்ட்டா எப்படி நீ நினைச்சதை நடத்துறானு நான் பார்க்கிறேன்’ என்று மனதில் அவளை சபித்து கொண்டே “உன்னை நான் இது வரைக்கும் சித்தி அப்படினு பார்த்ததே இல்ல என்னோட அம்மா முகத்தை மறந்து உன்னை என் அம்மா சாணத்தில் வைத்து என்னோட பெரிய தப்பு. நீ எல்லாம் பொண்ணா இருக்க தகுதியே இல்ல சீ….” என்று அவள் அறைக்கு சென்றாள் அந்த பாவப்பட்ட பேதை.     

 

திருவனந்தபுரம், நட்சத்திரா “உனக்கே இது அநியாயமா தெரியல உன்னை டாக்டர் பெட் ரெஸ்ட் எடுக்க தானே சொன்னார் நீ காலேஜ் வந்ததும் இல்லாமல் இப்படி ஓடிக்கிட்டு இருக்க” என 

 

“நான் என்ன நோயாளியா அட போடி இது சின்ன காயம் தான் டி அந்த டாக்டர் தான் ஓவரா சொல்ராங்க வீட்டுல இருந்தால் அச்சா என்னை நடக்க கூட விட மாட்டேன்றாங்க டி அதான் இன்றைக்கு முக்கியமான டெஸ்ட் இருக்குனு சொல்லி வந்துட்டேன் வா டி பேக்கரி போகலாம் எதாவது சாப்பிடணும் போல இருக்கு” என 

 

“உனக்கு எப்ப டி அப்படி தோணாமல் இருந்து இருக்கு நீ எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் ஏறவே மாட்ட ஆனால் நான் நீ சாப்பிடறதை பார்த்தே வெயிட் போடுறேன்” என்று சலித்து கொண்டவளை இழுத்து கொண்டு சென்றால் அவளது விருப்பமான இடமான குட்டன்’ஸ் பேக்கரி. 

 

தனக்கு பிடித்த கேக், சண்டுவிச் என்று பலதை உள்ளே தள்ளி விட்டு வெளியே வர அவள் முன்னாள் ஒரு கார் அதிவேகத்தில் வந்து அவளை உரசுவது போல் நின்றது.

 

“எவன் டா இது” என்று கோபமாக பார்க்க, அங்கே காரில் இருந்து புன்னகை முகமாக  கார்த்திக்கும் ராகவும் இறங்கினார்.

 

“ஓ… நீங்க தானா நான் கூட இதோட பிரான்தன் கார் ஓட்ட தெரியாமல் வந்துட்டான் போல னு தப்பா நினைச்சிட்டேன்” என்று சிரிக்காமல் கல்பனா சொல்ல,

 

“உனக்கு ரொம்ப தான் கொழுப்பு வைட் ரோஸ்” என்று ராகவ் அவளின் தலையில் குட்டி சொல்ல,

 

கார்த்திக் “சும்மா இரு ராகவ்… உங்களை டாக்டர் பெட் ரெஸ்ட் எடுக்க தானே சொன்னாங்க நீங்க இப்படி ரோட்டில் சுத்திட்டு இருக்கீங்க” என்று அழுத்தமாக கேட்க,

 

‘கால கொடுமை இவர் வேற ஸ்கூல் ப்ரின்சிபிள் மாதிரி கொஸ்டின் கேட்டு இருக்கார் இப்ப உண்மையை சொன்ன அச்சா கிட்ட சொல்லிடுவாங்க பொய் சொன்ன முதல என்ன பொய் சொல்றது’ என்று மூளையை பலவாறாக பிழிய,

 

ராகவ் “என்ன வைட் ரோஸ் என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்கிறியா” என்றதும் ஆமா என்று தலையை ஆட்டி பின் இல்லை என்று எல்லா பக்கமும் ஆட்ட, இருவர் மட்டும் இல்லை கூட வந்த நட்சத்ராவும் சிரிக்க,

 

  கார்த்திக் “சரி வா நான் உங்க வீடு பக்கமாக தான் போக போறோம் உன்னை விட்டுட்டு போறோம் மேடம் யாரு வந்ததில் இருந்து அமைதியா இருக்காங்க உனக்கு இப்படி கூட ப்ரெண்ட்ஸ் இருக்காங்களா” என 

 

அவனை முறைத்து விட்டு “இவ என்னோட கிளோஸ் பிரெண்டு நட்சத்திரா” என்று இருவருக்கும் அவளை அறிமுகம் படுத்தி வைத்தாள். பின் அவர்களுடன் காரில் கிளம்ப,

 

கல்பனா ராகவை  பார்த்து ‘இவங்களுக்கு சேச்சியை பிடிச்சி இருக்கானு தெரியலையே பேசாம நம்மளே கேட்டுடலாமா வேண்டாம் வேண்டாம் அம்மாக்கு மட்டும் தெரிஞ்சுது நான் காலி’ என்று மனதிலே பேசி கொள்ள,

 

கார்த்திக் கண்ணாடி வழியாக பின்னாடி இருந்த கல்பனாவை பார்த்து ‘என்னோட கொள்கையை ஒரே நொடியில் முறியடிச்சிட்டியே பாதகத்தி! உன்னை பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கே டி இப்படியே உன்னை என் வீட்டுக்கு அழைச்சிட்டு போய்டணும்னு மனசு சொல்லுது’ என்று ரசனையாக அவளை பார்த்து கொண்டே சாலையில் பாதி கவனத்துடன் வண்டியை ஓட்ட,

 

கல்பனா “என்ன திடிர்னு இந்த பக்கம்” என்ற கேள்விக்கு ராகவ் “அது வந்து இவன் இங்க புதுசா பிரென்ச் ஓபன் பண்றது பற்றி பேச லேண்ட் புரோக்கர் பார்க்க வந்தான் எனக்கு வீட்டில் போர் அடிச்சுது அதான் கூட கம்பனிக்கு வந்தேன் ஆமா இது என்ன இயர் உங்களுக்கு” என்ற கேள்விக்கு,

 

“இது கூட தெரியாத இரண்டாம் வருஷம்” என கார்த்திக் வேகமாக சென்று கொண்டு இருந்த வண்டியை அதிர்ச்சியில் நிறுத்தி விட்டான்.

 

“என்ன இரண்டாம் வருசமா அப்ப உனக்கு இப்ப தான் பத்தொன்பது   வயசு ஆகுதா’ என்று அதே அதிர்ச்சி மறையாமல் கேட்க,

 

“ஏன் எவ்வளவு அதிர்ச்சியா கேட்கிறீங்க உங்க வீட்டில் யாருமே சொல்லலையா” என்று அவளும் அவனின் அதிர்ச்சியில் மிரண்டு சொல்ல,

 

அவனோ அமைதியாக ‘அய்யோ வயசு வித்தியாசம் இவ்வளவு இருக்கே எனக்கு இருபத்தி எட்டு முடிய போகுதே’ என்று நொந்து கொள்ள,

 

அதை எதுமே உணராத கல்பனா ராகவ்விடம் பேசி கொண்டு வந்தாள். அவளை அவள் வீடு இருக்கும் பக்கமாக விட்டு இருவரும் செல்ல, ‘நல்ல வேலை வீட்டுக்கு வரலை இல்லனா நான் பேக்கரி போனதை அச்சா கிட்ட சொல்லி இருப்பாங்க” என்று எண்ணிக்கொண்டாள்.

 

வீட்டுக்கு வந்ததும் ராகவ் விற்கு போன் வர அதை பார்த்ததும் தனியாக தோட்டம் வந்து “ஹலோ நான் சொன்ன வேலை முடிஞ்சிதா என்ன எனக்கு தெரியாது உங்களுக்கு இன்னும் ஒரு வாரம் டைம் அதுக்குள்ள சொன்ன வேலையை முடிக்கிற வேலையை பாருங்க. நான் உள்ள வந்த உங்களுக்கு தான் சேதாரம் பலமா இருக்கும்’ என்று யாரையோ எச்சரித்து விடு உள்ளே சென்றான்.

 

ஏகாந்த இரவு இன்னும் அதே அதிர்ச்சியுடன் நிலவை வெறித்து கொண்டு இருக்க அந்த நேரத்தில் வந்த போன் காலா சலிப்புடன் ஏற்க, அதில் சொன்ன செய்தியில் அது வரை இருந்த மன நிலை மாறி சந்தோஷமான நிலைக்கு மாறினான்.

 

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் தன் தோழியுடன் பேசி கொண்டும் பல திட்டங்களை வகுத்து கொண்டும் இருந்தால் கல்பனா.

மும்பை, அந்தேரி நகரின் காவல் நிலையத்தில் காவலாளி ஒருவர் “சார் ட்ரான்ஸ்வெர்  அகிடுச்சே இப்ப என்ன பண்றது அந்த ஆளு சொன்ன மாதிரியே பண்ணியிருக்கலாம்” என்று கவலையாக சொல்ல, 

 

“இதுக்கு பயந்து அவங்க பண்ற தப்புக்கு துணை போக முடியாது அங்கிள் ஒரு தப்பை தடுத்த நிம்மதி போதும் என்னுடைய ஊருக்கு போக போறேன் அதனால நான் ஹாப்பி தான்” என்றான் அந்த நகரின் ஏசிபி ஆன கண்ணா. 

 

அவர் “உங்க அப்பா பிரதாப் கண்ணா மாதிரியே இருக்க தம்பி நீயும்… நேர்மையில் உங்க அப்பா மாதிரி நான் வேற யாரையும் பார்த்ததே இல்ல நல்ல மனுசன்…. இதே மாதிரி தான் அரசியல்வாதி ஒருத்தன் சொன்னதை செய்யாமல் நேர்மையா இருந்தார் அதான் மொழி தெரியாத ஊருக்கு அனுப்பிட்டாங்க அப்ப உங்க அம்மா நிறைமாத கர்ப்பிணி நீ அங்க தான் பிறந்த வளர்ந்த இப்ப உங்க அப்பா மாதிரியே நேர்மையா இருக்க.. எப்படி தம்பி கிளம்ப போற” என்று அவன் மேல் உள்ள அக்கறையில் கேட்க,

 

“அங்கிள் நான் நெஸ்ட் வீக் அங்க ஜாயின் பண்ணனும் நாளைக்கு கிளம்பினால் தான் அங்க போய் செட்டில் ஆகிட்டு அடுத்த திங்கள் வேலையில் சேரனும் நாளைக்கு நைட் ட்ரெயின்” என “பார்த்து கண்ணா தம்பி பத்திரமா இருங்க” என்று அவரும் வேலை பார்க்க கிளம்பிவிட்டார்.

 

‘நம்ம அங்க வருவதை யாருக்கும் சொல்ல வேண்டாம்  எல்லாருக்கும் சப்ரைஸ் பண்ணலாம்’ என்று நினைத்தவனுக்கு தெரியவில்லை அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று நினைத்தவன் தான் அதிர போகிறான் என்று.

 

  

 

திருநெல்வேலி நகரின் மைய பகுதி அந்த கட்டிடமே மக்களால் நிறைந்து இருந்தது. பிரபல ஜாதி கட்சியின் தலைமையகம். ஜாதி கட்சி தலைவரும் திருநெல்வேலி நகரின் சட்டமன்ற உறுப்பினருமான கதிரேசன் தீவிரமாக தொண்டர்களிடம் விவாதித்து கொன்டு இருக்க, ஒரு தொண்டரோ “தலைவரே இந்த முறையும் நீங்க தான் எம்.எல்.ஏ. கவலை படாதீங்க நாங்க பார்த்துகிறோம்” என்று வர போகும் சட்டமன்ற தேர்தலை பற்றி காரசாரமாக பேசி முடித்து பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு சென்றார்.

 

ருக்மணி “ஏங்க வர வர உன் பையன் போக்கே சரி இல்லங்க எப்ப பார்த்தாலும் போனையே வெச்சிட்டு சுத்திட்டு இருக்கான் முகத்தில் வேற சந்தோசத்தையே காணோம் நீங்க என்னனு கேளுங்க” என்று வந்ததும் வராததுமாக கணவனிடம் சொல்ல,

 

“இந்த வயசு அப்படி தான் கண்டதையும் யோசிக்க வைக்கும் அவனை என் கூட கட்சியில் சேர்ந்து வேலையை பார்க்க சொன்ன இப்ப வரேன் அப்ப வரேன் னு இழுத்துட்டு இருக்கான் நான் என்னனு பார்க்கிறேன் நீ கவலை படாதே” என்று மகனை தேடி அவன் அறைக்கு செல்ல,

 

அங்கே இதையோ யோசித்து கொண்டு இருந்த மகனை பார்த்து “டேய் என்னடா ஒரு மாதிரி இருக்கனு அம்மா கவலை படுறாங்க என்ன விஷயம்” என

 

“அதெல்லாம் ஒன்றும் இல்லையே நான் நல்லாத்தான் இருக்கேன் எனக்கு என்ன” என்று தந்தையை சமாளிக்க,

 

“அப்புறம் எதுக்கு இப்படி ரூமில் அடஞ்சி கிடக்கிற வெளிய வந்து பாரு எலேச்சன் வேற நெருங்குது அந்த வேலையா வந்து பார்க்கலாம்ல” என “வரேன் அப்பா உங்க கிட்ட ஒன்று கேட்பேன் உண்மையை சொல்லுங்க ஒரு வேல எதிர் காலத்தில் நானா இல்ல ஜாதியானு ஒரு  நிலைமை வந்த நீங்க என்ன பண்ணுவீங்க” என்ற மகனை புரியாமல் பார்த்த கதிரேசன்,

 

“கெளதம் என்ன சொல்ற நீ, எனக்கு நீ ரொம்ப முக்கியம் ஆனால் அதே மாதிரி எனக்கு ஜாதியும் ரொம்ப முக்கியம். நம்ம ஜாதி தான் எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்துச்சு. ஒழுங்கா நீயும் கட்சி ஆபீஸ் பக்கம் வா அப்ப தான் நீ என்னோட வாரிசுனு எல்லாருக்கும் தெரியும்” என்று அவர் கிளம்ப,

 

கிளம்பும் அவரை பார்த்து ‘நான் அரசியலுக்கு எல்லாம் வர மாட்டேன் அப்பா அது ஏன் உங்களுக்கு புரியலை நான் தனியா ஒரு  கம்பெனி ஸ்டார்ட் பண்ணனும் அந்த ப்ரொசீஜர் உங்களுக்கு தெரியாமல் பார்க்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்று மனதில் இருப்பதை சொல்ல முடியாமல் மருக்கினான்.

 

   

 

 இங்கு குளச்சலில், விஸ்வா “ராகவ் இந்தா இது பொண்ணு போட்டோ கார்த்திக் வரும் போது தான் அங்க ப்ரியங்கா இல்லையே அவன் பார்த்து இருக்க மாட்டான் நம்ம கிட்ட கேட்கவும் மாட்டான் போட்டோ பின்னாடியே அவள் போன் நம்பர் இருக்கு அவன் கிட்ட பேச சொல்லு” என்று அவர் தன் நண்பர்களை சந்திக்க கிளம்பினார்.

 

சங்கமித்ரா மற்றும் வான்மதி ஹாலில் அமர்ந்து ஜோசியரை பார்ப்பது பற்றி பேசி கொண்டு இருக்கும் சமயம் அங்கே ஒரு உறவுக்கார பெண் வந்தார்.

 

“அட இரண்டு பெரும் இங்க தான் இருக்கீங்களா உங்களை பார்க்க தான் வந்தேன். என் வீட்டுக்காரர் சொன்னார் நம்ம கார்த்திக்கு கேரளா ல பொண்ணு பார்த்து இருக்கீங்கன்னு என்ன விஷயம்” என்று விஜயா விஸ்வாமித்ரனின் ஒன்று விட்ட தங்கை கேட்க,

 

“அவங்க அங்க தான் இருக்காங்க ஆனால் தமிழ் குடும்பம் தான் சொல்ல போன அவங்க சொந்த ஊர் திருநெல்வேலி தான் ஆனா எப்பவோ கிளிமானூர் ல செட்டில் ஆகிட்டாங்க” என்று பட்டும் பாடாமலும் பதில் அளித்தார் சங்கமித்ரா.

 

“ஓ.. அப்படியா என்ன மதினி நான் கூட என் பொண்ணை நம்ம கார்த்திக்கு கேட்கலாம்னு இருந்தேன் சின்னவனுக்கு தான் ரோஷினி இருக்க பெரியவனுக்கு ஆவது என் பொண்ணை கொடுக்கலாம் னு நினைச்சேன் என்னை இப்படி ஏமாத்தி புடிங்களே மதினி” என்று விளையாட்டு போல் தன் மனது ஆசையை சொல்ல,

 

வான்மதி “யாருக்கு யாருனு கடவுள் தான் விஜயா எழுதி வைத்து இருப்பர். உன் பொண்ணுக்கு என்ன குறை பெரிய இடமா பார்த்து கட்டி கொடுத்துடலாம்” என அவர்களிடம் தன் வேலை பலிக்காது என்று உணர்ந்த விஜயா “சரிங்க மதினி பொண்ணு பெயர் என்ன இப்படி இருப்பா என்ன பொண்ணு மாதிரி அடக்கமா இருப்பாளா இல்ல எப்படி” என்று தன் மகளின் வாழ்க்கையை பறிப்பது போல் கேட்க,

 

வான்மதி பொண்ணை பற்றி சொல்ல வருவதற்குள் சங்கமித்ரா “அக்கா இப்பவே சொல்லிட உங்களுக்கு ஆர்வம் போகிடுமே நீ கல்யாணம் வரை பொறுமையா இருங்க” என்று பெண்ணின் பெயரை சொல்ல மறுத்து விட்டார்.

 

கிளிமனூர், ப்ரியங்கா “அம்மா எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்பறேன்” என அந்த இடத்தை வேகமாக வந்த கல்பனா “சேச்சி உங்க கிட்ட நான் ஒன்னு கேட்கவா” என 

 

என்னோ தெரியவில்லை இதுவரை அவள் பக்கம் திரும்பாத ப்ரியங்கா அவளிடம் எப்பொழுதும் போல் முகத்தை திருப்ப முடியவில்லை. “என்ன” என்று மட்டும் கேட்க,

 

அவள் பேசுவதை ஆச்சிரியமாக பார்த்து கொண்டே செல்வி உள்ளே செல்ல, கல்பனா “சேச்சி உனக்கு உண்மையாவே மாப்பிள்ளையை பிடிச்சி இருக்கா உண்மையை மட்டும் பர சேச்சி உன்னை நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் மாப்பிள்ளை பார்க்க வந்தா நாளில் இருந்து நீ நீயாவே இல்ல எதோ மாதிரி இருக்க உனக்கு பிடிக்கலைனா இட்ஸ் ஒகே சேச்சி நான் அச்சா கிட்ட சொல்றேன் உனக்கு பிடிக்காததை பண்ணாத சேச்சி” என 

 

தன் மனதை தன் தாய் கூட புரிந்து கொள்ளாமல் இருக்க தான் வெறுத்த தன் குட்டி தங்கை தன் மனதை புரிந்து கேட்பது ப்ரியங்காவிற்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது. அவளை கஷ்ட படுத்த கூடாது என்று நினைத்தாலும் உடனே பேச முடியாமல் அவள் தலையை தடவி விட்டு வெளியேறினாள்.

 

முதல் முறை அக்காவின் பாசத்தை கண்ட கல்பனாவிற்கு கண்கள் கலங்க மனதில் ‘லவ் யூ சேச்சி சீக்கிரமே நீங்க என் கிட்ட பேசிடுவீங்க’ என்ற சந்தோஷத்தில் கல்லூரி சென்றாள்.  அவர்களை தூரத்தில் இருந்து பார்த்த செல்வி “கடவுளே என் இரண்டு பொண்ணுங்களையும் ஒண்ணா ஆகிடு சீக்கிரமா என்னோட பல வருடா வேண்டுதலை நிறைவேது” என்று எப்பொழுதும் போல் செல்லும்சின்ன மகளை தூரத்தில் இருந்தே பார்த்து கொண்டார்.

 

வெளியே வந்தா ப்ரியங்கா ‘இனி கல்பனாவை கஷ்ட படுத்த கூடாது நான் எவ்வளவு பண்ணியும் என் முகத்தை பார்த்தே என் மனசை கண்டு பிடிச்சி இருக்கா ச்சை… அவளை போய் நான் தப்பா நினைச்சிட்டேன்’ என்று நினைத்தவளுக்கு தெரியவில்லை தன் செல்ல தங்கைக்கு தான் தான் பெரிய கஷ்டத்தை கொடுக்க போறோம் என்று.

 

 

இரவு, ராகவ் தன் அண்ணனை தேடி அவனது அறைக்கு வந்தான். “அண்ணா நீ இன்னும் பொண்ணை பார்க்கவே இல்லை தானே அதான் அப்பா உன் கிட்ட அவங்க போட்டோ கொடுக்க சொன்னாங்க அதுக்கு பின்னாலே அவங்க நம்பர் கூட இருக்கு பேசிக்கோ” என்று வந்த வேலை முடிந்த உடன் கிளம்ப,

 

போட்டோவை பார்த்த கார்த்திக் உலகமே நழுவி சென்றது போல் தடுமாறி பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.

 

‘இவங்களா பொண்ணு ஆனால் நான் அவளை தானே விரும்பினேன். என்னை விட ஒன்பது வருடம் சிறியவள் அப்படி இருக்கும் போதே என் மனசு அவ தான் வேண்டும்னு கேட்டுச்சே. மூளை வேண்டாம் என்றாலும் மனசு அவ தான் எனக்குன்னு அடிச்சு சொல்லுச்சே முடியாது என்னால அவளை தவிர யாரையும் கட்டிக்க முடியாது. எனக்கு கல்பனா தான் வேண்டும் நாளைக்கே இதை பத்தி அம்மா கிட்ட பேசணும்’ என்று கல்பனாவை சந்தித்த இரு சந்திப்புகளை நினைத்து கொண்டே தூங்கினான். மறுநாள் தன் தாய் கொடுக்கும் அதிர்ச்சியில் அவன் அவர் செல்வரை தான் கல்யாணம் செய்ய போகும் விஷயம் அறியாமல்.    

 

 

சுமைகள் தொடரும்…..

லஷ்மி