சூரியநிலவு 22

அத்தியாயம் 22

திரையரங்கத்தை விட்டு நிலாவை இழுத்து வந்த பிரதாப், அவளது அறையில் அவள் உறங்கியபிறகு அடுத்து என்ன செய்வது? என சிந்தித்து முடிவெடுத்தான்.

எக்காரணம் கொண்டும் தன் நிலாவை இலக்க  அவன் விரும்பவில்லை. 

முடிவின் முதல் கட்டமாக சூர்யாவுடன் நிலா வெளியே செல்வதை தடை செய்தான். அதை மறுக்க பார்த்த பெண்ணவளை, ஒற்றைப் பார்வையிலடக்கி,’சூர்யாவை இனி சந்திக்க கூடாது’ என கட்டளையிட்டு விட்டான்.

‘பிரதாப்பின் மனம், மூளை, சிந்தனையென அனைத்தும் நிலாவை மட்டுமே மையப்படுத்தி இருக்கும்’ என்பதை தெரிந்த பெண்ணவள், பிரதாப்பின் முடிவை எப்படி மறுப்பாள்?

அதனால் சூர்யாவிடம் வேலை இருப்பதாக கூறி அவனுடன்  செல்வதை தவிர்த்தாள். 

“இட்ஸ் ஓகே நிலா. டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்” எனக்கூறி கோவையை சென்றடைந்தான் சூர்யாதேவ்.

சூர்யா கோவை சென்ற இரண்டு, மூன்று நாட்களில் ஆராவும் சென்னையை விட்டு கிளம்பியிருந்தாள்.

இப்போது மீண்டும் அவர்களது வாழ்க்கை டெக்ஸ்டைல்ஸ், ரிசார்ட், ஹோட்டல் என வேலையில் சென்றது.

நிலா சூர்யாவின் நட்பு தொலைப்பேசியில் தொடர்ந்து கொண்டிருந்தது‌. அதை அறிந்தாலும் பிரதாப்பால், அவர்களது நட்பை தடைசெய்ய முடியவில்லை.

பிரதாப்பின் மேல் கோபமாக இருந்த நிலாவும்  அவனிடம் அளவோடு பேசிக் கொண்டிருந்தாள். இவர்களது உறவு நிலை ஒட்டியும், ஒட்டாமலும் சென்று கொண்டிருந்தது. 

பிரதாப்பிடம் பேசாத நிலாவின் முகம் களையிழந்து காணப்பட்டது. அதைப்பார்த்த பிரதாப்பின் மனம் வலித்தது. இவர்களின் நிலையைப் பார்த்த அந்த வீட்டிலிருந்த அனைவரும் கவலை கொண்டனர். 

சூரியதேவ் என்பவன் அவர்கள் வாழ்வில் நுழையும் வரை இருந்த சந்தோஷம், உற்சாகம் அனைத்தும் சென்ற இடம் தெரியவில்லை.

சூரியதேவ் நினைத்தது போல், இவர்கள் வாழ்வில் பிரிவினையை ஏற்படுத்திவிட்டானோ?

அவனின் பழிவாங்கும் படலம் நிறைவேறிவிட்டதோ?

**********

இதே நிலை மேலும் இரண்டு மாதங்கள் நீடிக்க வெற்றி ஓவியாவின் திருமண நாள் நெருங்கியது. அதாவது மதுநிலா அவளது குடும்பத்தை பிரிந்த தினம். அதே தினத்தில் அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என பிரதாப் முடிவு செய்துவிட்டான்.

அதற்கு திட்டமும் தீட்டிவிட்டான்.

**********

வெற்றி ஓவியாவின் முதல் திருமண நாள்.

அன்று காலையில் ஓவியாவும் வெற்றியும், ஓவியாவின் பெற்றோர்களின் வீட்டிற்கு சென்று, அவளது பெற்றோர்களிடன் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, கற்பகம் ராஜாராமை அவர்களது வீட்டில் விட்டுவிட்டு, கோவிலுக்கு செல்வதாக திட்டமிட்டிருந்தனர்.

நேரமே எழுந்த வெற்றிச்செல்வனும், ஓவியச்செல்வியும் தயாராகிக் கொண்டிருந்தனர். 

வெற்றி, ஓவியாவை எவ்வளவு நெருங்க முயன்றாலும், அவனை விட்டு விலகியே இருக்கிறாள். ‘விவாகரத்து தருகிறேன். வேறொரு துணையை தேடிக்கொள்’  என்ற வெற்றியின் கூற்று, அவளது மனதை நெருஞ்சி முள்ளாக உறுத்திக் கொண்டேயிருந்தது.

வெற்றியின் மனதில்,’ மதுநிலா தான் இன்னும் இருக்கிறாள்’ என நினைத்த பெண்ணால், அவனது நெருக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த லூசு வெற்றியும், வழக்கம்போல் அவனது காதலை தெரிவிக்காமல், அவளுக்கு போக்கு காட்டிக் கொண்டிருக்கிறான்.

மதுநிலாவை அழைத்து வருவதாக ஆகாஷிடமிருந்து வெற்றிக்கு தகவல் வந்திருந்தது. மதுவை பார்த்தால் வீட்டில் உள்ளவர்கள், எப்படி எதிர்வினையாற்றுவார்கள்? என்பதை நினைத்து உள்ளுக்குள் பதரி கொண்டிருந்தான்.

அன்று கோவிலுக்கு செல்வதற்காக, அழகான பட்டுப் புடவையில் தயாராகி ஓவியமாக நின்ற ஓவியாவை, வெற்றியின்  கண்கள் ஆசையுடன் தழுவியது. கண்களால் தழுவியது மட்டும் போதாமல், தன் கரத்தினால் அவளைத் தழுவ ஆசை எழுந்தது. 

ஓவியா கண்ணாடி முன்னின்று தன் தலையை வாரிக்கொண்டிருக்க,  பின்னாலிருந்து மென்மையாக அவளை இடையோடு சேர்த்தணைத்தான் வெற்றிச்செல்வன். 

அதில் திடுக்கிட்ட ஓவியச்செல்வி, திரும்ப முயல, அதை தடை செய்த வெற்றியின் அணைப்பு சற்று இறுகியது. 

“ப்ளீஸ் அம்மு கொஞ்ச நேரம் அப்படியே பேசாமல் நில்லு. டென்ஷனா இருக்கு.” என்றான் இறைஞ்சும் குரலில்.

அவனது அணைப்பு ஆறுதல் தேடி அலையும் சிறுவனை போலிருக்க, ஓவியா மௌனமானாள், வெற்றியின் அணைப்பு இலகுவானது.

மதுவின் வரவினால் வெற்றிக்கு உண்டான பதற்றத்தை தணிக்க, அந்த அணைப்பு தேவையாக இருந்தது. அந்த அணைப்பு வெற்றியின் மன அழுத்தத்தை குறைப்பது போலிருந்தது.

சிறிது நேரத்தில் அவளிடமிருந்து வந்த சோப்பின் மணமும், சந்தன பவுடரின் நறுமணமும் அவனின் தாபத்தை தூண்டியது, இப்போது அவனின் அணைப்பு இறுகியது.

கொஞ்சம், கொஞ்சமாக அவனின் அணைப்பில் மாற்றத்தை கண்டு கொண்ட பெண்ணவள், அவனிடமிருந்து விலகி கீழே சென்றுவிட்டாள். வெற்றிதான் மிட்டாய் தொலைத்த குழந்தையாக முழித்து நின்றான்.

*********

சுமித்ரா, சுந்தரேசனின் இல்லம். 

வெற்றிச்செல்வன், ஓவியச்செல்வியின் வரவிற்காக நிலாவின் பெற்றோர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அப்போது அழைப்பு மணியின் ஓசை கேட்டு, ஓவியா வந்துவிட்டாலென ஆசையோடு சென்று கதவைத் திறந்தார் சுமித்ரா.

வாசலில் நின்ற இரு வாலிபர்களையும், ஒரு பெண்ணையும் பார்த்து அடையாளம் தெரியாமல்,”யார் வேண்டும் உங்களுக்கு?” என கேட்டுக்கொண்டிருந்தார்.

அதே நேரம் சரியாக ஓவியச்செல்வி, கற்பகம், ராஜாவும் வாசலில் நிற்கும் வாகனம் யாருடையது என குழப்பத்தில் நுழைந்து கொண்டிருந்தனர்.  வெற்றி உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டிருந்தான்.

வாசலை அடைந்திருந்த ஓவியச்செல்வி, அவர்களை அடையாளம் கண்டு  கொண்டாள். அவளது இதழ்கள் தானாக முணுமுணுத்தது இவர்கள் பெயரை. 

இவர்கள் பெயரைக் கேட்ட பெற்றோர்களால், இப்போது அவர்களை அடையாளம் கண்டு கொள்ளமுடிந்தது. அனைவரும் ஸ்தம்பித்து நின்று விட்டனர்.

சுந்தரேசன் ஆகாஷின் சட்டையைப் பிடித்து,”மதுவை கூட்டிச்சென்றது நீதான. மது எங்கே?” என கொதிக்க தொடங்கிவிட்டார்.

ஆகாஷை மதுநிலாவின் துணையாக நினைத்த அனைவரும் பதறிப்போய் சுந்தரேசனை தடுக்க பார்க்க, தவறு செய்யாத ஆகாஷோ நேற்கொண்டு அவரது விழிகளை சந்தித்தான். 

‘குற்றம் செய்த மனிதனால், நேர்கொண்டு ஒருவரை பார்க்க முடியாது.’ நேர்கொண்ட ஆகாஷின் பார்வை, சுந்தரேசனின் கரங்களை தானாக விலக்கியது. 

ஆம்! அங்கு வாசலில் நிற்பது நிலாவின் குழுவே, நிலாவை தவிர்த்து.

வெற்றிதான் அவரை இலகுவாக்கி,”வாங்க உள்ள போய் பேசிக்கலாம்” என அழைத்துச் சென்றான். 

உள்ளே சென்றபின் யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது? என்று ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க. அதைத் தீர்த்து வைப்பது போல் ஆகாஷ் பேச்சை ஆரம்பித்தான்.

தங்கள் பெயரை கூறி அறிமுகப்படுத்திக்கொண்டு, நிலாவை தங்களின் தோழி என்று கூறினான். 

‘ஆகாஷை விரும்பி மதுநிலா வீட்டை விட்டு சென்றதாக,’ அனைவரும் நினைத்திருக்க ஆகாஷின் தோழி என்ற விளக்கம் அவர்களிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

இப்போது ராஜா முன்னே வந்தார் “என்ன தம்பி சொல்றீங்க? மது உங்களை விரும்பியதால் வீட்டை விட்டு போனாள்ன்னு நாங்கள் நினைச்சுட்டு இருந்தோம். இப்போ வெறும் பிரிண்ட்ன்னு சொல்றீங்க. அப்ப மது எங்கே? ஏன் சொல்லாமல் மண்டபத்திலிருந்து போனாள்?” என்றார் பதற்றமாக.

அவர் கேள்வியில் ஒரு பெருமூச்சை வெளியிட்ட ஆகாஷ், பிரதாப்பை நோக்கி கண் காட்டினான். 

அதுவரை சுமித்ராவை பார்த்து,’என் நிலாவை அன்பிற்காக ஏங்க வைத்த பெண் இவர்.’ என பார்வையால் அவரை பஸ்பமாக்கிக் கொண்டு இருந்த பிரதாப், இப்பொழுது ராஜாவிடம் ஒரு கோப்பையை நீட்டினான்.

குழப்பத்துடனே அந்த கோப்பையை வாங்கினார் ராஜா. அதில் உள்ள சாராம்சத்தை பார்த்தபின் அவரது கால்கள் பலமிழந்து நடுங்கத் தொடங்கியது. அவரது கரத்திலிருந்து நழுவி கீழே விழ பார்த்த கோப்பையை, அவரின் அருகில் நின்ற சுந்தரேசன் பற்றிக்கொண்டார். 

வெற்றி ராஜாவை கைதாங்கலாகப் பற்றி அருகிலிருந்த சோபாவில் அமர வைத்தான். அவரது கலங்கிய முகத்தை பார்த்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அந்த கோப்பையை வாசித்து ஆணி அடித்தது போல் நின்றனர்.

இப்போது அனைவரின் பார்வையும் கேள்வியாக பிரதாப்பிடம் செல்ல, நிலாவின் உடல் நிலையை விளக்க ஆரம்பித்தான். 

“ஒன்றரை வருடங்களுக்கு முன் கீழே விழுந்த மதுநிலாவின் தலையில் அடிபட்டு விட்டது. அப்போது இருந்த குழப்பத்தில், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டோம்.

சிறிது நாட்களுக்குப் பின் அடிக்கடி தலைவலி, மயக்கம் போன்ற உபாதைகளால் நிலா மிகவும் கஷ்டப்பட்டாள். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்தோம். 

அவளுக்கு என்ன  பிரச்சினை என்பது தெரியறதுக்கு முன்னையே, நாங்கள் இந்தியா வரவேண்டிய நாள் நெருங்கிவிட்டது. அதனால அவளுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் முடிச்சுட்டு நாங்கள் இந்தியா திரும்பிட்டோம். 

தலையில் அடிபட்டதில் பிளட் கிளாடாகி, விரைவில் அவளிற்கு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டுமென ரிப்போர்ட் வந்தது. அந்த ஆப்பரேஷன் மிகவும் ஆபத்தானது ஐம்பது சதவீதம்தான் பிழைப்பதற்கு வாய்ப்பே இருந்தது.” என சொல்லும்போதே அவனது தொண்டை அடைத்தது. அதை சரி செய்து கொண்டு மீண்டும் தொடர்ந்தான்.

“அவள் உங்கள் வீட்டைவிட்டு கிளம்புவதற்கு நான்கு நாட்கள் முன்புதான், அந்த ரிப்போர்ட் எங்களுக்கு மெயில்ல வந்துச்சு. உங்ககிட்ட சொல்லுற சூழ்நிலை இல்லாததால் யார்கிட்டயும் சொல்லாமல் ஆகாஷுடன் கிளம்பி வந்துவிட்டாள். 

நான் சென்னையிலிருந்து லண்டன் போவதற்கான ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்ப நிலா பூரண குணமாயிட்டா. நாங்க இந்தியா திரும்பி மூணு மாசம் ஆகுது.” என அவன் பல விஷயங்களை மறைத்து கூறி முடித்தான்.

இப்போது எல்லோர் மனதிலும்,’மது ஏன் தங்களிடம் அவளின் உடல்நிலையை தெரிவிக்காமல் சென்றாள்’ என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது.

**********

கற்பகம் முன்னே வந்து,”இப்ப மது எங்க தம்பி? அவளை எங்களுக்கு உடனே பார்க்கணும்.” என்றார் தழுதழுத்த குரலில்.

அவரிடம் தலையசைத்த பிரதாப், வெளியே சென்று காரின் பின் இருக்கையில், தூக்க மாத்திரையின் உதவியோடு குழந்தைபோல் தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்த நிலாவை, தன் கரங்களில் அள்ளிக் கொண்டான்.

இரவு பயணம் முழுவதும் நிலாவை தன் மார்பில் தாங்கிய பிரதாப், இப்பொழுது அவளை தன் கரங்களில் பூமாலை என தாங்கினான். 

அவன் கரங்களில் ஒய்யாரமாக பயணம் செய்த நிலா, அவனது ஷர்ட் காலரை பற்றிக்கொண்டு, அவனின் மார்பை மஞ்சமாக்கி அவன் நெஞ்சத்தில் தஞ்சமானாள்.  

நிலாவை கைகளிலேந்தி வீட்டினுள் நுழைந்த பிரதாப்பை,’ஏன்?’ என்ற  பார்வையோடு அனைவரும் நோக்கினர்.

இப்போது மேகா முன்வந்து,”மதுவுக்கு நாங்க இங்க வருவது தெரியாது. சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நாங்க சொல்லலை.

சென்னைல காலேஜ் படிக்கும் போதே, அவள் மன உளைச்சலால் சரியா தூங்க மாட்டா, அதனால சிலசமயம் தூக்கமாத்திரை எடுப்பா. நேத்தும் தூக்கமாத்திரை எடுத்துட்டு தான் படுத்தாள். அதுதான் இன்னும் தூங்கிட்டு இருக்கா.” என விளக்கினாள்.

‘தூக்க மாத்திரை எடுத்து தூங்கும் அளவிற்கு, அப்படி என்ன பிரச்சனை அவளுக்கு இருந்தது’ என அனைவரின் மனதிலும் கேள்வி பிறந்தது.

பிரதாப் வெற்றியை பார்க்க அவன் மதுவின் அறைக்கு பிரதாப்பை அழைத்துச் சென்றான். அவனைத் தொடர்ந்து அனைவரும் அங்கே சென்றனர். 

அவளது படுக்கையில் அவளை விட்ட பிரதாப் அவளிடமிருந்து விலக பார்க்க, அவனது ஷர்டை மிகவும் இறுகப் பற்றியிருந்தாள். அதைப் பார்த்த அவனது இறுகிய முகம், இப்பொழுது இளகி புன்னகையை பூசிக்கொண்டது. 

அவளது உறக்கம் கலையாமல், அந்தக் கரத்தை தன் ஷர்டிலிருந்து பிரித்தெடுத்த பிரதாப், அவளின் வயிற்றின் மேல் அந்த கரத்தை வைத்துவிட்டு, அவள் நெற்றியில் மென்முத்தம் ஒன்றை (தாய் அன்போடு) பதித்துவிட்டு, அவள் தலையை கோதி தடைபட்ட அவளது உறக்கத்தை தொடரசெய்தான். 

அவனது செயலை அனைவரும் விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிரதாப் மதுவின் உடல்நிலையை பற்றி சொல்ல ஆரம்பித்ததிலிருந்து, சுமித்ரா சிலையாக சமைந்து போனார். என்னதான் அவர் ஓவியாவின் மீது அதிக அக்கறை காட்டி இருந்தாலும், அவரின் மூத்த மகளின் மேல் அவருக்கு பாசம் இல்லாமல் போகுமா?

அங்கு நடந்த அனைத்தையும் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவரது மூளை வேலை நிறுத்தம் செய்து ரொம்ப நேரம் ஆயிற்று.’மது தன் உடல்நிலையை சொல்லாமல், செல்லும் அளவிற்கு நான் என்ன தவறு செய்தேன்?’ என உள்ளம் மறுகினார். 

***********

மது  துயில் கலைந்து எழ அனைவரும் காத்திருந்தனர்.  எழு மணியை நெருங்கும் சமயம் மதுவின் தூக்கம் கலைந்தது.

நெடுந்தூர பயணத்தால் உண்டான உடல் அசதியோ? தூக்க மாத்திரையின் மயக்கமோ? அவள் கண்ட கனவின் காட்சிகளினால் வந்த கலக்கமோ? ஏதோ ஒன்று அவள் இருக்கும் அவளது அறையை கூட உணர விடாமல் செய்தது.

தான் ஏதோ புது இடத்திலிருப்பதாக நினைத்த பெண்,”ஏய் யார் என்னை அடைத்து வைத்தது? என்னை விடுங்க நான் போகனும் சூரியா, சூரியா” என திடீரென கத்த தொடங்கி விட்டாள்.

அவளது அலறலை கேட்ட, அவளுக்காக காத்திருந்த அனைவரும் அவளது அறையில் கூடி விட்டனர்.”மது இங்க பாரு. நீ நம்ம வீட்ல பாதுகாப்பா இருக்க.” என மாறி மாறி, அவள் குடும்பத்தார் அவளை சமாதானப்படுத்த முயன்றனர். அவர்களது வார்த்தைகள் எதுவும் மதுவின் செவியை தீண்டவில்லை.

விருந்தினர் அறையில், இரவு முழுவதும் வாகனத்தை ஓட்டிவந்த களைப்பால், சற்று ஓய்வாக படுத்திருந்த ஆகாஷின் செவிகளிலும், குளித்து முடித்து வெளிவந்து கொண்டிருந்த பிரதாப்பின் செவிகளிலும், அவளது அலறல் ஒலி கேட்டது. 

அவளது அலறலைக் கேட்ட ஆகாஷ் அடுத்த நொடி அங்கு ஓடினான் என்றால், படுக்கையிலிருந்த அவனது டிஷர்ட்டை, அவசரமாக அணிந்த பிரதாப், அடுத்த நிமிடம்  தன் நிலாவின் அறையிலிருந்தான்.

“நிலாமா இங்க பாரு, உனக்கு எதுமில்லை” என்ற ஆகாஷ் அவளது முகமேந்தி, தன் முகம் பார்க்க வைத்தான். 

அவன் வார்த்தை அவளது செவியை அடந்தாலும் மூளையை அடையவில்லை. 

“அஷ், அஷ் என்னை எங்கோ…. அடச்சு வச்சிருக்காங்க. எனக்கு…. எனக்கு ரொம்ப… பயமா இருக்கு.” என திக்கி திணறி அழுதாள். 

அவளது கண்ணீர் ஆகாஷின் விழிகளிலும் பொங்கியது. அப்போது அங்கு வந்த பிரதாப்,”பேபி இங்க பாரு.” என கூறி அவளது தலையில் கை வைத்தான்.

அவனது குரலைக் கேட்ட அடுத்த நொடி, நிலா அவனை தாவி அணைத்து, அவன் மார்பில் தன் முகம் புதைத்து,”வந்துட்டியா, என்னை விட்டுட்டு எங்க போன. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு.” என கதறினாள். 

“இங்க பாரு ஸ்வீட்டி, நம்ம இப்போ உங்க வீட்ல தான் இருக்கோம். உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நான் உன் கூடதான் இருக்கேன். உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன். நல்லா கண்ணை திறந்து பாரு.” என அவளை நிகழ்காலத்திற்கு கூட்டி வந்தான்.

அவனை அணைத்து இருந்த பெண், சற்று நேரத்திற்கு பிறகே  தானிருக்கும் நிலையை உணர்ந்து அவனிடமிருந்து விலகினாள்.

அவளை சுற்றி இருந்த குடும்பத்தினரை பார்க்க இயலாமல், குற்றவுணர்வில் பிரதாப்பின் கரம் கோர்த்து அவனை நெருங்கி, தலை குனிந்து நின்றாள்.

அவளின் தலைகுனிவை சகிக்க முடியாத ராஜா அவளை நெருங்கி,”குட்டிமா ஏன் எங்க கிட்ட உன்னோட உடல்நிலையை சொல்லாமல் போன?”

‘இவர்களுக்கு எப்படி என் உடல்நிலை தெரியும்?’ என அதிர்ச்சியான பெண், மேகா, ஆகாஷை பார்க்க அவர்கள்,’ஆம்’ என கண்ணசைத்து செய்தி அனுப்பினர்‌.

பதில் சொல்லாமல் நின்ற பெண்ணை,”குட்டிமா இப்போ உடம்பு எப்படி இருக்கு?” என கற்பகம் முன்னே வந்தார்.

சுந்தரம் மதுவை தன் தோளில் சாய்த்து,”என்னை மன்னிச்சிடு மதுமா, நீ அந்த பையனை விரும்பி போன, அப்படி தான் நினைச்சுட்டு இருந்தோம்.” என கலங்கினார்.

சுமித்ரா,”ஏன் மது, உன்னோட உடல்நிலையை என்கிட்ட சொல்லாம போன? அந்த அளவுக்கு நாங்க வேண்டாதவர்கள் ஆகிட்டோமா? அப்படி என்ன தப்பு செஞ்சேன்?” என மதுவை அனைத்து கண்ணீர் வடித்தார்.

தான் பேசியாக வேண்டிய கட்டாயத்திலிருப்பதை உணர்ந்த பெண் ஒரு பெருமூச்சுடன் அனைவரையும் பார்த்து,”நான் மண்டபத்திலிருந்து உங்ககிட்ட சொல்லாம போனதுக்கு என்னை மன்னிச்சிடுங்க.” என்ற பெண், சுமித்ராவிடம்,”என்னோட உடல்நிலை தெரிஞ்சிருந்தா ஓவியாவை விட்டுட்டு என் கூட வந்து இருந்திருப்பீர்களா?” என ஒரு மாதிரி குரலில் வினவினாள். 

அந்தக் கேள்வியில் சுமித்ரா, மதுவிடமிருந்து விலகி திகைத்து நின்றார். 

“முடியாதுல்ல அப்புறம் எதுக்கு நான் சொல்லனும்? எட்டு வயசிலிருந்து எனக்கு தேவையானதை நானேதான் செஞ்சிட்டு இருக்கேன்.” என்ற பெண் ராஜா, கற்பகத்திடம் திரும்பி,”என்னோட உடல்நிலையைப் பற்றி தெரிந்திருந்தால் உங்க பதில் என்னவாக இருந்திருக்கும்?”

“இது என்ன கேள்வி குட்டிமா? எங்களுக்கு தெரிஞ்சிருந்தால் கல்யாணம் முடிச்சுட்டு போய் ட்ரீட்மென்ட் பார்க்கலாம்னு சொல்லியிருப்போம்.” 

இப்போது மதுவின் பார்வை வெற்றியை தொட்டது.”அப்போதைய சூழ்நிலையில் என்னோட பதிலும் அதுதான். உனக்காக நான் காத்திருப்பேன்னு சொல்லி இருப்பேன்.” என்ற பதிலில் பிரதாப்பின் கரம் இருகியது.

சுமித்ராவிடம் பேசிய மதுவின் வார்த்தைகளில்,’மதுவின் நிலைக்கு நானும் ஒரு காரணமா?’ என மனதில் திகைத்த ஓவியா, வெற்றியன் ‘அப்போதைய சூழ்நிலை’ என்றதை கவனிக்காமல், பின்னர் சொன்ன வார்த்தைகளைக் கொண்டு அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள். ஓவியாவின் பார்வையை கவனித்த மது மனதில் சிரித்துக்கொண்டு, “இதனால தான் சொல்லாம போனேன்.” 

“அது நல்லதுதான குட்டிமா.” சுந்தர்.

“எதுபா நல்லது, நான் உயிரோட திரும்புவேனா என்ன தெரியாம வெற்றி வாழ்கையை பாலக்க சொல்லுறீங்கலா? விரும்பம் இல்லாத எங்களை சேர்க்கரது எந்த விததுல சரி? வெற்றியை விரும்பின ஒவியாவோட நிலை?” என சொல்லி நிறுத்தினால். 

கடைசி வரியில் அனைவரும் திடுக்கிட்டனர்.”மது நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட.” என யாரோ சொல்ல

ஓவியாவை ஒரு பார்வை பார்த்த நிலா, அன்று திருமண தினத்தன்று நடந்ததை கூற தொடங்கினாள். 

Will continue