சூரியநிலவு 24 2

“வர்ஷு இவன் எங்க இங்க? ஏற்கனவே நிலாக்கு அவனை தெரியுமா?”

“இல்லையே காலேஜ்லதான இவனை முதல் தடவை பார்த்தா” என குழம்பினாள். 

“அப்பறம் எப்படி இங்க வந்தான்?” சந்தேகமாக வினவினான்.

அவனை முறைத்தவள்,”நானும் உன் கூடத்தான இருக்கேன். எனக்கு எப்படி தெரியும்.” 

அசட்டு சிரிப்புடன்,”ஆமால. நான் அதை மறந்துட்டேன்”

அடுத்து ஓவியா வெற்றி அங்கே வர சுமி அவர்களை அறிமுகப்படுத்தினார்.

இப்போது புரிந்தது அவன் ஏன் வந்தானென. புரிந்த செய்தி அத்தனை உவப்பானதாக இல்லை. ‘பிரது ஒரு சத்தியத்திலிருந்தே இன்னும் வெளிவரலை. அடுத்ததா? இப்பவே கண்ணக்கட்டுதே” ஆகாஷும் மேகாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

ஓவியாவிற்கு பிரதாப்பின் காதலைப் பற்றி தெரியாததால், இன்முகத்துடனே அவர்களை வரவேற்று சென்றுவிட்டாள். ஆனால் பிரதாப்பின் காதலை அறிந்த வெற்றியால் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை. அங்கயே ஆகாஷ் மேகா உடன் இணைந்துகொண்டான்.

இப்போது பிரதாப், கை முஸ்டீகள் இறுக அவர்களை வெறித்து நின்றான். 

பிரதாப்பை பார்த்த ஆகாஷ் மேகாவின் காதுகளில் ரகசியமாக,”ஐயையோ வந்துட்டானே. எப்ப சாமி ஆட போறான் தெரியலையே?”

மேகா அவனை முறைக்க ஆகாஷ் கப்சிப்பென வாயை மூடிக்கொண்டான்.

இவர்கள் அனைவரின் நடவடிக்கைகளையும் காணாமல் கண்டிருந்த மணமகனின் மனதில் குதூகலம்.

அடுத்ததாக அங்கே வந்த நிலா அவர்களைக் கண்டு,’இவர் எப்படி இங்க வந்தார்?’ என சிந்தித்தாலும், இன்முகத்துடனே அந்த மணமகனையும் அவன் பெற்றோர்களையும் வரவேற்றாள்.

மணமகன் அவனது பெற்றோர்களுக்கு இவளையும், இவளுக்கு தன் பெற்றோர்களையும் முறையாக அறிமுகப்படுத்தினான். இவளும் அவர்கள் பாதம் பணிந்து, இயல்பாக சென்று அந்த மணமகனின் அருகே அமர்ந்து கொண்டாள். அவளறியாமலே பிரதாப்பின் கோபத்திற்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தாள்.

வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் மீண்டும் ஆகாஷ்,”சும்மாவே இவன் சாமி ஆடுவான். இவன் காலில் சலங்கை வேற கட்டி விடறாளே! என்ன நடக்கப் போகுதோ ஆண்டவா.” என ஆண்டவனை துணைக்கு அழைத்தான்.

மேகா கடுப்பாகி, அருகிலிருந்த கத்தியை எடுத்து அவனிடம் காட்டி,”இனி நீ வாய திறந்த, அப்புறம் பேச நாக்கு இருக்காது. கம்முனு இரு” என மிரட்ட,

ஆகாஷ் பாவமாக வெற்றியை நோக்கினான். அவனும்,’நம்ம நிலை தேவலை’ என நமட்டு சிரிப்போடு ஆகாஷை பார்த்து கண்ணடித்தான். ஆகாஷ் உஸ்ன மூச்சுடன் அவனை முறைத்தான். 

இப்போது தேனீருடன் சென்ற ஓவியா அந்த மணமகனிடம்,”டீ எடுத்துக்கோங்க மாம்ஸ்” என வெற்றியின் பொறாமையை தூண்டினாள். 

‘அன்னைக்கு ஆசையா மாமு சொன்னா எரிஞ்சா விழுந்த, இப்ப உன் வயிறு எரியும் பார்’ என மனதில் சிரித்துக்கொண்டே, ஆகாஷ், பிரதாப்பையும் அவ்வாறே அழைத்து வெற்றியை வெறுப்பேற்றினாள்.

‘நீ தனியா என் கையில் மாட்டு அப்ப இருக்கு உனக்கு’ என கருவினான். 

ஓவியாவின் அழைப்பில் குழம்பிய மது, கேள்வியாக மணமகனை பார்க்க அவன் கண்ணடித்து விஷயத்தை உறுதிப் படுத்தினான். அதில் ஷாக்கான பெண்ணினது பார்வை தானாக பிரதாப்பை நோக்கி சென்றது. 

அங்கே அவனோ கண்களில் கொலைவெறி தாண்டவமாட, கைகளில் நரம்பு வெடித்து விடும் அளவு இறுகிப் போய் நின்றிருந்தான். திருதிருவென முழித்த பெண் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் குழம்பி தவித்தாள். அனைவரின் தவிப்பையும் பார்த்த அந்த மணமகன், மனதில் சிரித்துக் கொண்டான்.

அதற்குள் உணவு தயாராகி விட “சாப்பிட்டு விட்டு பிறகு பேசலாம்” என சுமியின் வேண்டுகோளுக்கிணங்க அனைவரும் உணவு மேசைக்கு சென்றனர். 

***********

இறுகிப் போய் நின்றிருந்த பிரதாப்பின் கரத்தை, பிடித்திழுத்து சென்று உணவு மேஜை நாற்காலியில் அமரவைத்து, அவனருகில் மதுநிலா அமர்ந்துகொண்டாள். அதில் பிரதாப்பின் கோபம் சற்று தணிந்தது. 

அவளின் மறுபுறம் ஆகாஷும் அடுத்து மேகாவும் அமர்ந்துகொண்டனர். எதிரே அந்த மணமகனும் அவன் பெற்றோர்களுடன் அமர்ந்துகொண்டான். அவர்களுடன் வெற்றியும் சுந்தரும் இணைந்து கொண்டனர். 

சுமியும் ஓவியாவும் விருந்தினர்களுக்கு உணவு பரிமாற, மதுநிலா வீட்டுப் பெண்ணாக இல்லாமல், விருந்தினரைப் போல் ஒதுங்கியது மணமகன் கண்களில் விழுந்தது. அதுமட்டுமல்லாமல் பிரதாப்பும் ஆகாஷும், பரிமாறுவதில் நிலாவிற்கு இது பிடிக்கும்? அது பிடிக்காது? என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து கொடுத்தனர்.

அங்கு நடக்கும் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு அவன் ஒரு முடிவுடன் உணவினை முடித்தான்.

அவனே மதுநிலாவிடம் சென்று,”நாங்க ஏன் இங்கு வந்து இருக்கிறோமென்று உனக்கு தெரியுமா?” 

“இல்லை சீனியர்” அவன்  முறைப்பில்,”எனக்கு தெரியாது தேவ்”

ஆம்! அங்கு மணமகனாக வந்திருப்பது சூரியதேவ். கோவை சூர்யாஷின் ஏகபோக வாரிசு. அங்கே அவன் பெற்றோர்களுடன்.

“இட்ஸ் ஓகே! நானே சொல்றேன் உனக்கும் எனக்கும் திருமணம் பேசி வந்திருக்காங்க.” திகைத்துப்போய் அவனைப் பார்த்தாள் மதுநிலா. அதிலிருந்தே அவளின் பதிலை அறிந்துகொண்டான் சூர்யா. 

“எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க பரிபூரண சம்மதம். ஆனா ஒரு கண்டிஷன், கல்யாணத்துக்கு அப்பறம் உனக்கும் உன்னோட குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது.”

அவன் கூற்றில் அனைவரும் ஷாக்காக. அப்போதுதான் அங்கே நுழைந்து கொண்டிருந்த ராஜா மற்றும் கற்பகத்தின் செவிகளில் இவ்வாக்கியம் விழுந்தது. கொதித்துப் போன ராஜா,”என்ன தம்பி  நீங்க புரிஞ்சு தான் பேசுறீங்களா?”

“புரிஞ்சு தான் பேசுறேன் சார். நீங்க கொஞ்ச நேரம் அமைதியா நடக்கறதை வேடிக்கை பாருங்கள்” அவன் கண்களில் என்ன கண்டாரோ ராஜாவும் நிதானித்து, சூர்யாவின் பெற்றோர்களுடன் இணைந்து அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்.

இன்னமும் திகைப்பிலிருந்து மீளாத பெண்ணை பார்த்து,”இந்தக் கல்யாணம் எதுக்கு பேசியிருக்காங்கன்னு  உனக்கு தெரியுமா?” 

வார்த்தை வராமல்,’இல்லை’ என தலையசைத்தாள்.

“உன்னோட அம்மாவும் அப்பாவும், என்னோட அப்பாவுக்கு செஞ்ச துரோகத்துக்கு பிராயச்சித்தமா, உன்னை எங்க வீட்டுக்கு மருமகளா அனுப்ப போறாங்க?” என்றான்.

“என்னது பிராயச்சித்தத்திற்காகக் கல்யாணமா?  என் நிலாவை பொம்மைன்னு நினைச்சியா? அவ சம்மதிக்க மாட்டாள்” பிரதாப் கொதித்தான்.

“என்ன பாஸ்! நீங்க உங்க அம்மாக்கு பண்ண சத்தியத்துக்காக, காதலிச்ச பெண்ணை விட்டுட்டு வேற பெண்ணை கல்யாணம் பண்ண போறீங்க. அதுவே உங்க நிலாவின் அம்மா பண்ண சத்தியத்திற்காக, அவ என்னை கல்யாணம் பண்ண கூடாதா?” கேள்வியோடு அவன் முகம் பார்த்து “நீங்க வேணா உங்க கைக்கு கிடைத்த சொர்க்கத்தை இழப்பீங்க, தானாக வந்த வரத்தை இழக்க நான் என்ன முட்டாளா?” இப்போது பிரதாப்புக்கு அவனின் தவறு புரிந்தது.

நேரே சுமித்ராவிடம் சென்று,”உங்கள் பெண் மதுநிலாவை தானே எனக்கு கல்யாணம் பண்ணி தரேன் சொன்னிங்க. ஆனா இங்கே இருக்கிறது உங்க பொண்ணு மாதிரி தெரியலையே, ஏதோ விருந்தாளி போல தான் இருக்கா. நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் இரண்டாவது பெண்தான், டீ தரத்திலிருந்து உணவு பரிமாறுவது வரை எல்லாமே, இந்த வீட்டு பெண் போல செய்யறா. மது ஒதுங்கியே தான் இருக்கா நீங்களும் அவ கூட பேசின மாதிரி தெரியல.

சின்ன வயசிலிருந்து அவ கூட பேசாம; அவளுக்காக நேரம் செலவு பண்ணாம; அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியாம, நீங்க கல்யாணம் வரை போயிட்டீங்க. நான் இந்த கல்யாணத்தை மட்டும் சொல்ல, வெற்றி கூட முடிவு பண்ண கல்யாணத்தையும் சொல்லுறேன்.

உங்க பெண்ணுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என அதோ அங்க நிக்கிறாங்களே” என ஆகாஷ், பிரதாப், மேகாவை காட்டி,”அவங்களுக்கு தெரிஞ்ச அளவு கூட உங்களுக்குத் தெரியாது. அவள் ஏன் லண்டனுக்கு  படிக்கப் போறேன்னு போனான்னு தெரியுமா? லண்டன்ல அவளுக்கு என்ன நடந்தது தெரியுமா?

சரி அது கூட வெளிநாடு உங்களுக்கு தெரியாமல் போச்சு, அவ பத்தாவது மார்க் ஏன் கம்மியா வாங்கினாள்ன்னு ஒருநாளாவது யோசிச்சு இருக்கீங்களா?”

இல்லை என்ற தலை அசைவில் மதுநிலாவை அழைத்து அன்று நடந்ததை சொல்ல சொன்னான்.

“வெற்றியோடு கிளாஸ்மேட் ஒரு பையன் வரம்பு மீறி தொல்லை கொடுத்தான்.” என்றாள் பெண்.

“நீ ஏன் வீட்டில சொல்லல?”

“சொன்னாலும் நீ பெரிய பொண்ணு ஆகிட்ட, நீ தான் இந்த மாதிரி பசங்களை சமாளிச்சுக்கனும்னு பதில் சொல்லி இருபாங்க அதனால சொல்லல.”

“வெற்றி?”

“வெற்றியோடு பிரெண்ட்ஸ் யாராவது என்னை வர்ணித்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டார். அவரிடம் சொல்லி என்ன யூஸ்.”

வெற்றியை பார்த்து,”கல்யாணம் பண்ணப் போறேன்னு சொன்னா மட்டும் பத்தாது? அந்தப் பெண்ணுக்கு எல்லாவிதத்திலும் துணையாய் இருக்கணும். நீங்க யாருக்கு துணையாய் இருந்தீங்கன்னு யோசிங்க வெற்றி.” வெட்கி தலை குனிந்தான்.

“அந்தப் பையன் என்ன ஆனான்னு உனக்கு தெரியுமா?” 

“அவனுக்கு என்ன ஆச்சு?” திகைத்தாள்.

“ஹே கூழ் அவனுக்கு ஒன்னும் இல்லை. அதோ அந்த சார்தான் அவங்க ரிசார்ட்டில் முக்கிய பொறுப்பிலிருந்த அந்தப் பையனை உண்டு இல்லை என்றாக்கி, வேலையை விட்டு தூக்கிடார்.” என பிரதாப்பை கைகாட்டினான்.

அவளுக்குத்தான் அவனைப் பற்றி தெரியுமே, சூர்யாவிடம் ரகசியமாக,”ஆமா உங்களை மட்டும் எப்படி விட்டான்?” 

“இப்ப இது ரொம்ப முக்கியம்? சீரியஸா பேசும்போது காமெடி பண்ணிக்கிட்டு” பல்லைக்கடித்தான். 

“இல்லையா பின்ன?” அப்பாவியாக

“உன்கிட்ட அப்பரம் பேசிக்கிறேன்”

மீண்டும் சுமி சுந்தரத்திடம் சென்று,”அவளுக்கு யாரை பிடிக்கும் தெரியுமா? பிரதாப் யாரென்று தெரியுமா? தெரியாது பின்னே எந்த உரிமையில் அவளுக்கு மாப்பிள்ளை பாக்குறீங்க? இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்ன்னு தெரியுமா?” 

“இல்லை” என்ற பதிலில் மேகாவை தன்னருகில் அழைத்து,”என்னை யாரென்றும். மதுவைப் பற்றி உனக்கு தெரிஞ்சதையும் சொல்லு.”

“இவர் சூரியதேவ். எங்க சீனியர். நாங்க காலேஜ் சேர்ந்ததிலிருந்து மதுவை விரும்பினார். மது அதை ஏத்துக்கல. காலேஜ் கடைசி நாள் மதுகிட்ட ‘உன்ன நான் தான் கல்யாணம் பண்ணிக்குவேன், வேற யாரையாவது கல்யாணம் பண்ண போறேன்னு சொன்னா, அந்த மண்டபத்திலிருந்து உன்னை தூக்கிட்டு போய்டுவேன்’ மிரட்டினார். நீங்களும் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றதை பற்றி பேசவும், பயந்து போன அவள் லண்டன் படிக்கிறேன்னு போயிட்டா.

அவள் லண்டன் போனது இரண்டு காரணத்திற்காக. ஒன்னு சூர்யாவிடம் இருந்து தப்பிக்க, அடுத்து விருப்பமில்லாத வெற்றியுடனான திருமணத்திலிருந்து தப்பிக்க.” என முடித்தாள்.

அவர்களின் கேள்வி பார்வையைப் பார்த்து,”திருமணம் ஏன் வேண்டாம் என்று பார்க்கிறீங்களா? சின்ன வயசுல இருந்து அவளுக்கு பெற்றோர் பாசம் தான் கிடைக்கல்ல, அட்லீஸ்ட் கல்யாணம் பண்ணப் போற பையனோட பாசமாவது வேண்டுமா? மதுவை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லிட்டு ஓவியா பின்னாடியே சுற்றின நல்லவர் அவர்” என வெற்றியை சுட்டிக்காட்டினான் சூர்யா.

“அவ எதையுமே யார்கிட்டயும் பகிர்ந்து கொண்டதில்லை. என்கிட்டயும் அவ இதுவரை சொன்னதில்லை. ஒருநாள் நீங்க காலேஜ் வந்தபோது உங்களைப் பார்த்தபோது நான் புரிஞ்சுகிட்டேன். அதேமாதிரிதான் சூரியதேவ்வும். அதைவிட பிரதாப் அவளைப் பார்த்த அடுத்த நிமிடம் அவளை உணர்ந்துகொண்டார்” என மேகா இணைந்தாள்.

ராஜாவிடம் சென்ற சூர்யா,”இப்ப சொல்லுங்க சார். அவங்களுக்கு மதுநிலான்னு பொண்ணு வெறும் பெயரளவில் இருக்கும்போது, அந்தப் பெயரும் வேண்டாமென்று நான் சொன்னேன் அதுல என்ன தப்பிருக்கு?” என மதுவிற்கான நியாயம் பேசினான்.

அதை புரிந்திருந்த ராஜாவும் கற்பகமும் மௌனமாகினர்.

இப்போது ஆகாஷ் தன் தோளில் முகம் சாய்த்து அமர்ந்திருந்த பெண்ணிடம்,”நிலா இனி நீதான் முடிவு பண்ணனும். உனக்கு யாரின் மேல் விருப்பம் என்று நீ தான் சொல்லணும்.”

மேகா அவளின் அருகில் வந்து அமர்ந்து அவளின் தலையை கோதிக்கொண்டே,”உன் விருப்பத்தை சொல்லு மது. உனக்குத் துணையாக நாங்க இருக்கோம்.”

நிலாப்பெண்ணிடம் மௌவுனம் மட்டுமே.

ஆகாஷ் அவளின் முகம் நிமிர்த்தி கண்ணோடு கண் பார்த்து,”உனக்கு சூரியதேவ கல்யாணம் பண்ணிக்க விருப்பமா?”

இல்லையென்ற மருப்பின் தலையசைப்பு.

“அப்பறம் யாரை பிடிக்கும்?” 

அவள் கரம் நீண்டு, அவளின் சூரியாவை காட்டிய அதே நேரம், அவள் உதடுகள் அழுத்தமாக உச்சரித்தது “சூரியா! சூரியபிரதாப் மட்டுமே என் கணவன்.”

இப்போது பிரதாப் என்றும், கல்லூரியில் செல்லமாக எஸ்.பி. என்றும், அனைவராலும் அழைக்கப்பெற்ற சூரியபிரதாப், நிலாவிற்கு மட்டும் சூரியன் ஆவான்.

NO உருட்டுக்கட்டை. Me பாவம்