சூரியநிலவு 27 1

அத்தியாயம் 27

மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் இருந்த வரவேற்பு அறை, சூர்யதேவ் கேட்ட கேள்வியில் மௌனமானது.

“இவன் என்ன லூசா?” சூரியதேவை வினோதமாகப் பார்த்தனர்.

‘எனக்கு சூரியபிரதாப் மட்டும்தான் கணவர்’ என்று தெளிவாக மது தெரிவித்த பின்னரும்,’எப்ப எனக்கும் மதுவுக்கும் கல்யாணம்?’ என்று கேட்கிறானா, இவன் லூசா மட்டும் தான் இருப்பான்’ என அனைவரும் சிந்தித்து இருந்தனர்.

“நீங்க எல்லோரும் ஏன் என்னை இப்படி பார்க்கறீங்க? எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று தானே? நான் தெளிவாதான் இருக்கேன். மிஸ்டர் சூரியபிரதாப் அவங்க அம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதி அப்படியே தான் இருக்கு. அப்பறம் எப்படி மதுவை கல்யாணம் பண்ணுவாங்க?”

“என் அம்மாவுக்கு நான் கொடுத்த வாக்குறுதி உண்மைதான். இப்ப என் அம்மா உயிரோடு இருந்திருந்தால் என்னோட விருப்பத்தை தான் முன்னிறுத்தி இருப்பாங்க. அவங்க ஆன்மா என்னோட மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் மட்டும் தான் எதிர்பார்க்கும். என்னோட சந்தோஷம் எல்லாம் என்னோட நிலா கூட இருப்பது தான், என்பதை தெரிந்த என் பெற்றோரின் ஆன்மா நிச்சயம் எங்களை ஆசீர்வதிக்கும்.” என்றான்  சூரியபிரதாப் உறுதியாக.

“சரி உங்க பெற்றோர்களின் ஆன்மா உங்களை ஆசீர்வதிக்குமென்றே வச்சுக்கலாம். அப்ப உங்களைக் கல்யாணம் பண்றதுக்காக காத்திருக்க ஆராதனாவின் நிலை.”

“அந்த பொண்ணுக்கு என்மேல் காதல் இல்லை. அவர்கள் வீட்டில் மன்னிப்பு கேட்டு அவளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சுடுவேன்.”

“அது உங்க பாடு. மதுவுடைய அம்மா என்னோட அப்பாவிடம்,’உங்கள் வீட்டுக்கு என்னோட பெண்ணை மருமகளா அனுப்புறேன்னு’ வாக்கு கொடுத்திருக்காங்க. அதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?”

“தம்பி” என ஏதோ சொல்ல ஆரம்பித்த மதுவின் பெற்றோர்களை தடுத்து,”இது எங்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சினை. யாரும் தலையிட வேண்டாம். கொஞ்ச நேரம் அமைதியா நடக்கறதை வேடிக்கை பாருங்கள்.” என தேவ் அனைவரின் வாயையும் அடைத்துவிட்டான்.

“அது பெண்ணை கேட்காமல் வாக்கு கொடுத்த அவங்க பாடு. நான் என் நிலாவை யாருக்கும் கொடுக்கமாட்டேன்.”

“சாரி பிரோ எனக்கு மது வேண்டும்” 

“தர முடியாது”

“நீங்க என்ன தரது? அந்தப் பெண்ணை கட்டிக்க எனக்கு உரிமை இருக்கு”

“இல்லை” சூர்யாபிரதாப்

“முடியும்” சூரியதேவ்

“முடியாது, முடியாது, முடியாது” கோபத்தில் கத்தினான்.

“ஏன் முடியாது? மதுவோடு அம்மா கொடுத்த வாக்குப்படி மதுவை நான் கல்யாணம் பண்ணுவேன்.” என்றான் ஆணித்தரமாக.

தேவ்வின் சட்டையை பற்றிய பிரதாப் ஆங்காரமாக,”அவங்க பெண்ணை வைத்து வாக்கு கொடுக்கறதுக்கு அவங்களுக்கு உரிமை இருக்கு. ஆனால் என் மனைவிமீது சத்தியம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. மதுநிலா சட்டப்படி என்னோட மனைவி. ஷி இஸ் நாட் மிஸ் மதுநிலா, மிஸஸ் சூரியபிரதாப். எங்களுக்கு திருமணம் முடிஞ்சு நேற்றோடு ஒருவருடம் முடிந்துவிட்டது.” அவனின் கூற்றில் உண்மை தெரிந்த நான்கு பேரை தவிர அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

பிறகே கோபத்தில் தான் உதிர்த்த வார்த்தைகளை உணர்ந்து, பற்றிய அவன் சட்டையை விடுவித்து, தவறு செய்த குழந்தை தன் தாயிடம் மன்னிப்பு கேட்பது போல், அவன் நிலாவை சரணடைந்தான்.

“சாரி நிலா, உன்னை முதல்முதல் ஊட்டியில் பார்த்தபோதே ஒரு ஈர்ப்பு இருந்தது. அன்னைக்கு வாகனத்தில் அடிப்பட தெரிந்த உன்னை காப்பாற்றின எனக்கு உயிரே போன மாதிரி இருந்துச்சு.(ஊட்டியில் நடந்த நிகழ்வை விவரித்தான்) அது ஏன் என அப்போ தெரியலை.

சென்னை கல்லூரி விழாவில், உன்னை வெற்றியோடு வருங்கால மனைவியா பார்த்தபோது, எனக்கு புரிஞ்சது ‘நீ தான் என் உயிரென்று.’ அப்பத்தான் வெற்றி கிட்ட சவால் விட்டேன்.

அப்புறம் அம்மாவுக்கு செய்து தந்த சத்தியம், நீ எனக்கு இல்லைனு தெரிஞ்சபோது மனசு ரணமாய் எரிஞ்சது. மீண்டும் உன்னை லண்டனில் சந்தித்தபோது, வெற்றியை மறந்தேன், அம்மாக்கு செஞ்ச சத்தியத்தை மறந்தேன், எல்லாத்தையும் மறந்து தான் உன் கூட பழகினேன்.

வெற்றி கூட உனக்கு கல்யாணமென்று சொன்னபோதுதான் நிதர்சனம் உணர்ந்து ஆடி போயிட்டேன்.

நீ திருமணத்தை நிறுத்திட்டு வந்தபோது, உன்கிட்ட சில டாக்குமெண்ட்டில் கையெழுத்து வாங்கினேன். ஞாபகம் இருக்கா? அது நம்ம மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷன் பேப்பர். கூடவே சட்டப்படி நாம பிரியறதுக்கான டைவர்ஸ் பேப்பர்ஸ்லையும் கையெழுத்து வாங்கியிருந்தேன்.

எங்க உன்னை இழந்துடுவேனோன்னு தவித்துக்கொண்டு இருந்தபோது, ஆபரேஷன் பண்றதுக்கு உன்னோட ஃபேமிலி ஆட்கள் கையெழுத்து தேவைப்பட்டது. அதுக்காக சட்டப்படி நம்ம மேரேஜை ரெஜிஸ்டர் பண்ணேன். உன்னோட கணவனா உரிமையோடு கையெழுத்திட்டேன்.

உனக்கு துரோகம் பண்ற மாதிரி ஒரு பீல். கட்டாயத்தால் உன்னை ஒரு பந்தத்தில் பிடித்து வைக்க என்னால் முடியாது. அதனால்தான் டைவர்ஸ் பேப்பரிலயும் கையெழுத்து வாங்கினேன். உனக்கு தெரியாமலேயே விவாகரத்தும் வாங்கிடலாமென்று இருந்தேன். ஆனால் நீதிமன்றத்தில் அந்த பேப்பரை சப்மிட் பண்ண இதுவரை மனசு வரல. ஐ நீட் யூ நிலா. ஐ அம் நாட் ரெடி டு லூஸ் யூ பார் எனிதிங். என்னை வெறுத்திடாத.” என அவளிடம் யாசித்தான்.

நிலா வெற்றியின் அடையாளமாக சூர்யதேவ்விடம் கட்டை விரலை உயர்த்தினாள். அவனும் மகிழ்ச்சியுடன் கட்டை விரலை உயர்த்தினான்.

எந்த பதிலும் வராமல் இருப்பதை உணர்ந்த பிரதாப், நிலாவை கண்டபோது, அவள் சூர்யதேவிடம் சைகை செய்துகொண்டிருந்தாள். அந்த சைகை மொழியை புரிந்த பிரதாப், நிலாவைப் பார்த்து “நிலா உனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியுமா?” என்றான் சந்தேகமாக.

அடக்கப்பட்ட புன்னகையுடன், “இது என்ன சாதாரண விஷயமா? நீ மூடி மறைக்க. அதான் ஹாஸ்பிடல் முழுக்க பேசிக்கிட்டாங்கலே.”

“என்ன ஹாஸ்பிடல் முழுக்க பேசினாங்களா?” என தன் நெஞ்சில் கையை வைத்து அதிர்ச்சியானான்.

“நீ என்னை அவ்ளோ கேர் பண்ணுறதை பார்த்து, அங்க இருந்த நர்சு,’உங்க கணவனுக்கு உங்க மேல லவ்வோ லவ்’ அப்படி சொல்லுச்சா,’கணவனா?’ நான் ஷாக்காகி கேட்டா, ஹாஸ்பிடல்ல கணவன்ன்னு கையெழுத்துப் போட்டது எல்லாம் புட்டுப்புட்டு வச்சிருச்சு. நான் உன்னோட மனைவியானது எனக்கு எவளோ சந்தோசம் தெரியுமா? ஆனாலும் அதை மறைச்சுதான வச்சிருந்த. அதுதான் நாங்க எல்லாம் சேர்ந்து பிளான் பண்ணி உன் வாயிலிருந்து உண்மையை வர வச்சோம்.” 

“பிளான் பண்ணுனிங்லா யாரெல்லாம்?”

“சொல்ல மாட்டேனே” என பழிப்பு காட்டினாள்.

“நீ சொல்லலைன்னா என்ன? எல்லாம் இந்த கூட்டு களவாணிகளா தான் இருக்கும்.” என ஆகாஷ், மேகாவை கையை காட்ட, அவர்களோ திருட்டு முழியோடு நின்று கொண்டிருந்தனர். 

“வர்ஷு அவன் நம்மள அடிக்கிறதுக்குள்ள ஓடிடலாம் வா” என ரகசியம் பேசினான் ஆகாஷ்.

“நீ ஓடி மாட்டிக்காத. அண்ணாவோட கவனம் மது கிட்ட போயிடுச்சு கம்ன்னு நில்லு.” என பல்லை கடித்தாள் மேகவர்ஷினி. 

“அப்பாடி” என பெருமூச்சுடன் நின்றான் ஆகாஷ்.

“என்னை புரிந்துகொண்டதுக்கு தேங்க்ஸ் நிலா.” என நிலவிடம் சூரியன் உருக.

“ரொம்ப சந்தோஷப்பட்டுகாத உனக்கு வித விதமா நிறைய தண்டனைகள் வச்சிருக்கேன்.” சூரியனிடம் நிலவு உரைய.

“உன் தண்டனைகளுக்காகவே காத்திருக்கிறேன் ஸ்வீட்டி” என இவர்கள் உருகிக் கொண்டிருந்தார்கள்.

*******

“ஓகே கைஸ் இன்னும் முடியவில்லை, நான் பேசனும்.” என்றான் சூர்யதேவ்.

“இன்னமும் என்ன இருக்கு தேவ். எல்லாமே சொல்லியாச்சு” என சந்தேகமாக மது.

“இல்ல மது இனிதான் முக்கியமான சீன்னே இருக்கு.” குழம்பிய அனைவரின் பார்வையும் அவனிடம் செல்ல.

“உங்கள் அம்மா, எதற்கு உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேனென்று வாக்கு கொடுத்தார்கள் தெரியுமா? உன்னை இந்த பிரதாப், ஆகாஷ் கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போய், அவங்களுக்கு தண்டனை கொடுக்கணும் முடிவு பண்ணியிருந்தேன் ஏனென்று தெரியுமா? இது எல்லாத்துக்கும் மேல இவர் அவங்க அம்மாக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்த அந்த அத்தை பெண் யாரென்று தெரியுமா?”

அவன் கேட்ட எந்த கேள்விகளுக்கும் இளையவர்களுக்கு பதில் தெரியவில்லை. முதல் கேள்விக்கு மட்டும் பதில் தெரிந்த பெரியவர்கள் மௌனமாக தலையை குனிந்தனர்.

“சரி அத கூட விடு. அங்க நிற்கிறவர்கள் யாரென்று தெரியுமா?” என வாசல் பக்கம் கையை காட்ட, அனைவரின் பார்வையும் அங்கே சென்றது. அங்கு இருந்தவர்களைப் பார்த்து, அதிகமா அதிந்தவர்கள் யார்? என்று சொல்ல முடியாத அளவு அனைவரும் திகைத்தனர்.

பிரதாப் “பாட்டி, தாத்தா” என்றும், ஆகாஷ் “அப்பா” என அழைக்க, சுமித்ராவும் ‘அம்மா, அப்பா’ என திகைத்தார். 

மேகாவும் மதுவும் அங்கிருந்த ஆராதனாவையும்,  அவளின் குடும்பத்தை பார்த்தும் திகைத்தனர்.

ஆம்! அங்கே இருந்தது ஆகாஷ், பிரதாப், ஆராதனா அவர்களின் குடும்பம். பிரதாப்பின் பாட்டி, தாத்தா தான், சுமித்ராவின் பெற்றோர்கள்.

ஆம்! பிரதாப்பின் ஒரே ஒரு சொந்த அத்தையின் மகள் தான் மதுநிலா.

நல்லவர்களின் ஆசைகளும் வேண்டுதல்களும் பொய்க்காது என்பது இவர்கள் விஷயத்தில் உண்மையானது. தன் அன்னைக்கு கொடுத்த வாக்கை மீற முடியாமல் தவித்த பிரதாப், இப்போது மகிழ்ச்சியின் எல்லையில். 

அனைவரும் ஒன்றும் புரியாமல் விழிக்க, அவர்களின் உதவிக்கு விளக்கத்துடன் வந்தால் ஆராதனா.

******

பழனியின் அருகிலுள்ள சூரிய நல்லூர் என்பதே இவர்களின் கிராமம். 

சத்தியமூர்த்தி, நாராயணன், ராமலிங்கம் அருகருகே வீட்டில் சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். வசதியில் சமநிலையிலிருந்தார்கள். சத்தியமூர்த்தியின் தங்கை தான் சுமித்ரா. மற்றவர்களுக்கு உடன்பிறந்தோர் இல்லை. மூன்று வீட்டின் செல்லப் பெண்ணாக சுற்றித் திரிந்தவர்.

பெரியவர்களான பின் சத்தியமூர்த்திக்கும் நாராயணனுக்கும் அடுத்தடுத்து திருமணமானது. சத்தியமூர்த்திக்கு தன் தங்கையை தன் நண்பனாகிய ராமலிங்கத்துக்கு மணமுடித்து அருகிலேயே வைத்துக்கொள்ள ஆசை. அதை பெற்றோர்களிடம் தெரிவிக்க அவர்களும் மகிழ்ச்சியுடன் திருமணத்திற்கு நாள் குறித்தனர்.

இந்த இடத்தில் சுமித்ரா தன் காதல் விஷயத்தை தெரிவித்திருந்தால், நிச்சயமாக மறுப்பு தெரிவித்து இருக்க மாட்டார்கள். அது முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம்.

ஆனால் சுமித்ரா தன் தேவையில்லாத பயத்தினால் மணமேடை வரை ராமலிங்கத்தை ஏற்றிவிட்டு, யாருக்கும் தெரியாமல் மண்டபத்திலிருந்து சென்றுவிட்டார். சென்றது என்னவோ சுமித்ரா, ஆனால் அங்கே அவமானப்பட்டு நின்றது இரு குடும்பம். தவறாக பார்க்கப்பட்டது ராமலிங்கத்தின் ஒழுக்கமும், ஆண்மையும். 

அதில் மனம் வெறுத்த ராமலிங்கம், தன் சொந்த கிராமத்தை விட்டு வெளியே சென்று, கோவையில் தனியே தொழிலை தொடங்கினார். அது இப்போது புகழ்பெற்ற சூர்யாஸ் ஆக வளர்ந்து இருக்கிறது.

இதில் கொடுமை என்னவென்றால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ராமலிங்கத்திற்கு பெண் தர யாரும் முன்வரவில்லை. பிறகு சற்று வசதி குறைவான பெண்ணை, திருமணம் முடித்து அடுத்த வருடம் சூரியதேவ் பிறந்தான். 

சத்தியமூர்த்தியும் தன் குடும்பத்துடன் அந்த கிராமத்தை காலி செய்தார். அவரை பிரிய மனமில்லாத நாராயணனும் அவருடன் சென்னையில் குடிபுகுந்தார். 

சில மாதங்களில் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு, சத்தியமூர்த்தி ஊரின் மேல் உள்ள பற்றுதலால் சூரியபிரதாப் என பெயரிட்டார். அதை தழுவி ‘சூரியனுக்கு எப்போதும் தேவை வானம்’ என தன் குழந்தைக்கு ஆகாஷ் என பெயரிட்டார் நாராயணன். அவர்களின் ஆசைப்படி இவர்களும் இணைபிரியாமல் இன்றுவரை நட்புடன் இருக்கிறார்கள்.

சத்தியமூர்த்தியும் நாராயணனும் குடும்பத்துடன் வருடம் ஒருமுறை தன் கிராமத்திற்கு சென்று வருவார்கள். ஆனால் அவமானப்பட்ட ராமலிங்கம் அதன்பின் அந்த கிராமத்துக்கு செல்லவில்லை. 

சில வருடங்களுக்கு பிறகு தன் உறவினர்களின் மூலம், சுமித்ராவின் நலனை தெரிந்து கொண்டு, அவரின் மகளுக்கு நிலா என்று பெயரிட்டதை தெரிந்து கொண்டனர். என்னதான் தங்கையை வேண்டாம் என ஒதுக்கி வைத்திருந்தாலும், அந்த பாசம் விட்டுப் போகாமல் தாங்கள் ஆரம்பித்த ரிசார்ட்டில், தன் வாரிசு பெயர்களுடன் நிலா பெயரும் இடம்பிடித்தது.

Akash Surya Nila ASN குரூப்ஸ்.

நாட்கள் செல்ல செல்ல நிலாவை தங்களின் மருமகளாக, சூரியாவிற்கு மணமுடிக்க வேண்டும் என ஆசை பிரதாப்பின் பெற்றோர் மனதில் தோன்றியது.

சுமித்ரா என்ற அத்தையும் அவர்களுக்கு இப்படி மகளும் இருப்பதை தெரியாமலேயே வளர்ந்தனர் பிரதாப்பும், ஆகாஷும். உயிர் விடும் தருவாயில் அன்னை, அத்தை மகள் என்று கூறியது தன் தூரத்து உறவான ஆராதனா என எண்ணினார்கள்.

ஆராவின் பெற்றோர்களும் அதற்கு மறுப்பு தெரிவிக்காததால்,  பிரதாப்பின் அன்னை தேர்வு ஆரா என்றே இருவரும் நினைத்திருந்தனர். அதனால் ஆரா அவனின் அத்தை மகளாக காட்டப்பட்டால்.

இந்த விஷயம் சுமித்ராவின் பெற்றோர்களுக்கு தெரிந்தாலும், எங்கிருக்கிறாள் என்றே தெரியாத பேத்தியை எப்படி தேடிக் கண்டுபிடிப்பது? என்றும், ஒரு வேளை கண்டுபிடிக்க முடியாமலே போய்விட்டால், தன் பேரனின் எதிர்காலம்? என யோசித்து அவர்களும் நிலா என்ற பெண்ணைப் பற்றி யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர்.

அந்த விபத்தில் மனைவியை இழந்ததுபோல், தன் கால்களையும் இழந்தார் நாராயணன். மன நிம்மதி இல்லாமல் தவித்த வயதானவர்கள் நோயில் விழுந்தனர். அவர்களின் மன மாற்றத்திற்காக வால்பாறையில் இப்பொழுது வசித்து வருகிறார்கள்.

கோவையிலிருந்து சூரியதேவ், மதுநிலாவின் வீட்டுக்கு கிளம்பும் முன் அவர்களுக்கு அலைபேசி வழியே,”உங்கள் பேரன் விரும்பும், உங்கள் மகள் வழி பேத்தியை, வேற ஒருவருக்கு பேசி முடிக்க போகிறார்கள்.” எனக்கூறி அவள் வீட்டு விலாசத்தையும் கொடுத்திருந்தான். ஆராவையும் அழைத்து விஷயத்தை கூறியிருந்தான்.

என ஆரா தனக்குத் தெரிந்த அனைத்தையும் கூறி முடித்தாள்.

பெற்றோர்கள் இறப்பிற்கு முன்பே பிரதாப்புக்கு நிலாவின் மேல் ஈர்ப்பு தோன்றியது. நிலாவின் முகச்சாடை சற்று அவளது தாய் மாமாவை(பிரதாப் தந்தை) கொண்டு இருப்பதால் பிரதாப்க்கு அவளின் மேல் ஈர்ப்பு வந்திருக்கலாம். இதே காரணம் ஆகாஷுக்கும் பொருந்தும்.

 

பெற்றோர்களின் ஆசீர்வாதத்தால் அவன் நிலாவை சந்திக்க நேர்ந்தது. அவர்களுக்குள்  வந்த ஈர்ப்பு வளர்ந்து இப்போது பிரிக்க முடியாத பந்தத்தில் முடிந்திருக்கிறது. 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!