தீங்கனியோ தீஞ்சுவையோ – 6

தீங்கனியோ தீஞ்சுவையோ – 6

“அம்மு எனக்கு இப்பவே ஒரு selfie எடுத்து அனுப்பேன்.. “

“ஏன்டா இப்போ தானே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல என் படத்தை வைச்சேன்.. அதையே பார்த்துக்கோ..  இல்லைனா whatsapp dp ல கூட நான் தான் இருப்பேன்.. அந்த போட்டாவைப் பார்த்துக்கோ… “

“அதெல்லாம் மத்தவங்களுக்காக நீ சிரிச்சு எடுத்துக்கிட்ட போட்டோ… ஆனால்  எனக்கே எனக்காக நீ சிரிச்சு அனுப்புற போட்டா தான்  வேணும்.. அது எனக்கே எனக்கானது.. ” என சொல்ல அடுத்த நிமிடம் கண்களை உருட்டி ரத்தக்காட்டேறி போல் உதடுகளை வளைத்து அவனுக்கு ஒரு போட்டா எடுத்து அனுப்பினாள்.

இணைப்பு தகவலாய்
” இதோ உனக்கே உனக்கான உன் போட்டோ..  பார்த்து நல்லா ரசி” என்ற குறுஞ்செய்தியோடு…

அவனுக்கு அவனுக்கான யாரிடமும் பங்கிட்டு கொள்ளப்படாத  அவளது ப்ரத்யேகமான சிரிப்பு வேண்டும்… அந்த சிரிப்பை கண்டதும் உள்ளம் மகிழ்ந்துப் போயிற்று…

அந்த புகைப்படம் எவ்வளவு பயங்கரமாக இருந்தாலும் சரி  ரத்தக்காட்டேறி போலவே இருந்தாலும் சரி அது அவனது செல்லக்காட்டேறியின் புகைப்படம்.

ஆதலால் கண்கள் இடைவெளியே இல்லாமல் அந்த புகைப்படத்தை அப்படி ரசித்தது.. இவள் தான் அழகியல்புகளை மாற்றி அமைத்தவள்… இவள் ஒப்பனை செய்தாலும் அழகு.. செய்யாவிட்டாலும் அழகு… கண்களை மைத்தீட்டி அழகாக பார்த்தாலும் அழகு.. அந்த குண்டு கண்களை விரித்துக் காட்டி பயமுறுத்தினாலும் அழகு.. எனக்கே எனக்கானவள் இவள்.. இவளுடைய ஒவ்வொரு அசைவும் அழகு…. கவிதை…

“ஓய் நாளைக்கு பீச்ல மீட் பண்ணலாமா டி..”

“டன் டா.. “

“சரி நான் அங்கே வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன் டி…”

“ஓகே டா.. “

“அம்மு… “

“சொல்லு டா.. “

“இல்லை நம்ம அம்மா கிட்டேயும் அத்தை கிட்டேயும் நம்ம விஷயத்தை பத்தி பேசலாமா நாளைக்கு??.. அவங்களுக்கு தெரியாம லவ் பண்றது ஒரு மாதிரி இருக்கு.. நான் என் மீனு அத்தை கிட்டே இது வரைக்கும் எதையும் மறைச்சதே இல்லை.. “

“பார்ரா அத்தைப் புள்ளையை.. சரி நாளைக்கு பீச்க்கு போயிட்டு வந்ததும் அம்மா கிட்டே சொல்லலாம்… “

“சரி டி.. “

“சரி டா.. நான் ஆபிஸ்க்கு கிளம்புறேன்..  ஈவினிங் பேசுறேன்.. டாடா” என்று சொல்லிவிட்டு பேருந்தில் ஏறினாள்.

அவளுக்கு பிடித்த கடைசி சீட்டின் ஜன்னலோர இருக்கையில் வந்து அமர அருகே அவளுக்குப் பக்கத்தில் இன்னோரு உருவம் வந்து அமர்ந்தது.
யாரென்று திரும்பி பார்த்தவளின் முகத்தில் கண்களில் இப்போது  சிநேக பார்வை மலர்ந்து இருந்தது.

“ஹாய் வினய்… என்ன பஸ்ல வந்து இருக்க…  பைக் என்னாச்சு??.. “

” உன் கூட பேசனும்னு தான் உத்ரா நீ ஏறுன பஸ்ல நானும் ஏறுனேன்… ” என்றவனைக்  கேள்வியாக நோக்கினாள்…

“ஏன் வினய் ஆபிஸ்லயே பேசி இருக்கலாம்ல.. ஏன் பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணிட்டு இருந்த… ஏன் இவ்வளவு அலைச்சல் படணும்… “

“இல்லை உத்ரா உன் கிட்டே தனியா பேசனும் அதனாலே தான்… தனியா பேசலாமா??.. காப்பி ஷாப்க்கு போகலமா” என கேட்க

“என்ன வினய் எதுவும் important விஷயாமா??” என பதிலுக்குக் கேட்டாள்.. அவன் ஆமாம் என்று தலையசைக்க அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி காப்பி ஷாப்பிற்குள் சென்றார்கள்.

அவன் காப்பி கோப்பையையும் அவளது முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது முகத்தில் ஏகத்துக்கும் தயக்கம் பதற்றம் வழிந்தோடியது.  தொண்டை வரை வந்த வார்த்தைகளை வெளிக் கொணர முடியாமல்  தவித்து கொண்டு இருந்தான்.

நான் சொல்லிய பிறகு அவள் பிணக்கம் கொண்டு இதற்காக தான் என்னுடன் பழகினாயா என்று என் நட்பை கேள்விக்குள்ளாக்கிவிட்டாள் என்றால்??..
இல்லை தோழன் என்று நம்பி பழகியவன் காதல் என்றுவிட்டானே என்று மனம் வருந்திவிட்டாள் என்றால்??.. சிந்தனையின் பிடியில் அவனது நெற்றியில் பல கோடுகள்…

“வினய் என்ன ஆச்சு?.. பேசணும்னு கூப்பிட்ட ஆனால் எதுவும் பேசாம உட்கார்ந்துட்டு இருக்க.. நமக்கு ஆபிஸ்க்கு வேற டைம் ஆகுது வினய்… ”
என்றவளது குரலில் சிந்தனை கலைந்தவன் அவள் கண்களை பார்த்தான்.

காதல் வந்த பிறகு இந்த நட்பு என்னும் கனத்த போர்வையை அணிந்து கொள்வது அவ்வளவு கடினமாக இருந்தது.. இதற்கு மேலும் இரட்டை வேஷம் போட முடியாது. உடைத்து சொல்ல வேண்டியது தான். முடிவு வந்தவனாக அவளைப் பார்த்தான்.

“உத்ரா உன் கூட இப்போ எல்லாம் என்னாலே இயல்பா பேச முடியல, பார்க்க முடியல.
நீ எப்போவோ என் உயிர்ல வேர் பிடிச்சு என் மனசுக்குள்ள வந்துட்ட.
நீ என் உலகத்தை அழகாக்குனவ உத்ரா.. இப்போ உன்னையே என் உலகமா மாத்திக்க ஆசைப்படுறேன்.. என் உலகமா இருக்க உனக்கு சம்மதமா??” என அவன் கேட்க தொண்டையில் இறங்கிய காப்பி இறங்காமல் அப்படியே நின்றது. குரலில் பொங்கிய நடுக்கத்தோடு கேட்டாள்,

“You mean??.. you are talking about love??”  என்று திக்கித் திணறிக் கேட்டாள்.

“ஆமாம் உத்ரா… i am in deeply love with u”

இத்தனை நாள் நட்பாய் பழகியவன் தீடிரென்று காதல் என்று சொல்லியதும் திகைத்துப் போனாள். யாருக்கு யார் மீது வேண்டுமானாலும் காதல் வரலாம். ஆதலால் இவனை தவறான கண்ணோடு பார்க்கவும் ஏன் என்னை காதலித்தாய் என்று கோபப்படவும் மனம் ஒப்பவில்லை.

இவன் என் நண்பன். இவனை நான் திட்டி வருத்தப்படவைக்கக்கூடாது.
ஆனால் நான் காதலிக்கவில்லை என்ற உண்மையை சொன்னவுடன் அவன் மனம் சுணங்குமே.என் நண்பனின் மனதை நானே கொன்று போடப் போகிறேனே.. தவிப்புடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..

“ஐ யம் ரியலி சாரி வினய்.. i am already in love with another person .. உன்னை ஹர்ட் பண்றதுக்கு சாரி… ” என்று அவளது குரல் ஒலிக்க மின்சார வேலியில் சிக்கிய கோழிக் குஞ்சாய் நடுங்கிப் போனது அவன் மனம்.

அடுத்து பேச நா எழவில்லை. தன் காதல் அவளால் கொண்டாடப்படாமலேயே போனதை குறித்து அவனுக்கு வருத்தம் தான்.  ஆனால் என்னைக் காதலிக்க முடியாததற்காக அவள் வருந்துகிறாளே.. அந்த வருத்தம் எனக்கே எனக்கானது தானே… நிமிர்ந்து அவளது முகத்தைப் பார்த்தான்…

” It’s okay உத்ரா.  don’t feel bad… ” என்றான்.

அவளோ தயக்கமாக
” நாம ப்ரெண்ட்ஸா இருக்கலாமா?” என்றாள்..

” நீ என்னை காதலிக்க வேண்டாம் உத்ரா.. ஆனால் நான்  உன்னை காதலிக்கிறதை நிறுத்த மாட்டேன்… என்னாலே ப்ரெண்ட்னு சொல்லி ரெட்டை வேஷம் போட முடியாது. ஆனால் நீ எப்பவும் போல என் கிட்டே தயங்காமா பேசலாம். நான் உன் கிட்டே எல்லை மீற மாட்டேன்.. நீ என்னை நம்பலாம்” என சொல்லியவனை வருத்தமாக பார்த்தாள்.

“ப்ளீஸ் உத்ரா என்னை இப்படி வருத்தமா பார்க்காதே.. நீ என்னை நிராகரிச்சதும் தப்பு இல்லை.. நான் உன்னை காதலிச்சதும் தப்பு இல்லை… என் காதல் உன்னை உன் காதலை மட்டும் அணைக்காது உன் வெறுப்பையும் நிராகரிப்பையும் சேர்த்தே அணைக்கும் ” என்று சொல்ல அவனுடைய
இத்தனை காதலுக்கு அன்புக்கு தான் என்ன பதிலாக செய்ய முடியும் என்று தோன்ற கண்ணீரை பதிலாக தந்தாள். இப்போது இந்த நொடி அவளது வருத்தம்,  அவளது ஒரு சொட்டுக் கண்ணீர் எல்லாம் அவனுக்கே அவனுக்காதாய் மாறி இருந்தது.

அவளது கண்ணீரை கண்டவன்
“அச்சோ அழாதே உத்ரா.. நான் உண்மையா ஃபீல் பண்ணல.. முதலிலே கண்ணைத் துடை.. ஆமாம் உன் மனசை கொள்ளை அடிச்ச அந்த lucky person யாரு ” என்று கேட்க இப்போது அவளது கன்னங்களில் வெட்கத்தின் ரேகை படர்ந்து இருந்தது. இப்போது இந்த வெட்கம் அவள் காதலித்த அவளுக்கே அவளுக்கான அந்த காதலனுடையது.

“என் அத்தைப் பையன் ப்ரணவ்.. itm technologies ல tl ஆ இருக்காங்க… ” என்று அவளை மீறியே ப்ரணவ்வை இருக்கான் என்று சொல்லாமல் இருக்காங்க என்றாள்..

என்ன தான் தனிமையில்  அவனே இவனே குரங்கே எருமைமாடே என்று அவனை அழைத்தாலும் மற்றவர்களிடம் அவனைப் பற்றி  சொல்லும் போது தன்னையறியாமல் மரியாதை வந்ததை எண்ணி வியந்தாள்.

“ஓ சூப்பர் சூப்பர் உத்ரா… சரி வா போகலாம்.. ஆபிஸ்க்கு டைம் ஆச்சு என்றபடி எழுந்தான் வினய்.. அவளும் அவனுடன் எழுந்தாள்.. அவன் பேருந்தில் ஏறியப் பிறகும் சரி அலுவலகத்திற்கு வந்த பிறகும் சரி எப்போதும் போல இயல்பாகவே பேசினான். அவளிடம் இருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு. அவளது நண்பன் காதல் சொல்லிய பிறகும் நண்பனாகவே இருக்கிறான்..

💐💐💐💐💐💐💐💐💐

அந்த ஆள் அரவமற்ற கடற்கரையின் குளிர் காற்று இவர்களை வருடியபடி வீசிக்  கொண்டு இருந்தது.

ஓடி ஓடி வந்து அலையைத் தழுவிய கரையையும்… பெரிதாய் ஓங்கி எழுந்து பின்பு  ஒன்றோடொன்று  முட்டி மோதி சிறிது சிறுதாய் சிதறிப் போன அலையையும் ஆசிர்வதிக்கவே அவளின் பாதங்களை அந்த கடற்கரையில் பதித்தபடி நின்று இருந்தாள்.

நண்டு மணற்பரப்பில் ஊறிக் கொண்டு இருக்க, கடற்கன்னியாக நின்று கொண்டு  இருந்தவளை கண்டதும் இவனது உள்ளத்தில் ஏதோ ஒரு நண்டு ஊறியது.

கால்களின் அருகில் சிப்பி மிதிபட அந்த அலையின் நடுவே சிற்பமாக நின்று கொண்டு இருந்தவளையே கண்கள் எடுக்காமல் பருகிக் கொண்டு இருந்தான்.

” என் உத்ரா” என்று உதடுகள் தன்னை மீறி மிக மெல்லியதாய் உச்சரித்தது.

அவனது மௌன அழைப்பு அவளது செவிக்கு எட்டி இருக்கும் போல அதுவரை அலையில் விளையாடிக் கொண்டு இருந்தவள் திரும்பி இவனைப் பார்த்து தன்னோடு கால் நனைக்க வருமாறு கண்களால் அழைத்தாள்.  அவன் வேண்டாமென்று மறுத்தான்.

இவள் அலைகளில் விளையாடுவதை விடுத்து ஈரக்கால் மணலில் பதிய இவனை நோக்கி வந்தவள் அவனது தோள் உரசியபடி அருகில் அமர்ந்தாள்.

அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அவளது மணல் ஒட்டிய கால்களை தன் மடியில் வைத்து  தனக்கு சொந்தமான இடத்தில் ஒட்டி இருக்கும் மணலை தட்ட துவங்கி  இருந்தான்..  அவளை மீறி அவளது கண்களில் காதல் வழிந்தோடியது… அவனையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

நிமிர்ந்து அவன் நோக்க அந்த கண்கள் காந்தமாய் அவளை நோக்கி இழுத்தது. மெது மெதுவாக அவனது கன்னம் அவள் முகத்தருகே அவனையறியாமலே நெருங்கி வந்தது. இன்னும் ஒரு சென்டி மீட்டர் இடைவெளி தான். அவளது கன்னத்துக்கும் அவனது உதட்டுக்கும். அவன் நெருங்கிய தருணம் அவனது அலைபேசி அடித்தது. இருவரும் பட்டென விலகி அமர்ந்தார்கள்.

திட்டிக் கொண்டே போனை எடுத்தவன் பேசி முடித்துவிட்டு அவள் முகத்தைப் பார்க்க முன்பு இருந்த மோன நிலை அவளது முகத்தில் இல்லை. தெளிவாக இருந்தாள்.  அடுத்த முயற்சியை அவன் எடுக்க முனையவில்லை. ஏதோவென்று தடுத்தது.. சோகமாய் திரும்பி அலையை வெறித்தான்.

அவனது முகமாற்றங்களையே கவனித்தவள், அவன் திரும்பிய நேரம் எதிர்பாராத அந்த  தருணத்தில் தன் உதடுகளை கன்னத்தில் அழுத்திவிட்டு சிட்டாக பறந்துவிட்டாள். ஆனந்த அதிர்ச்சியில் திகைத்துப் போனவன் தன் கன்னத்தில் படர்ந்து இருந்த ஈரத்தில் அது நிஜமென உணர்ந்து திரும்பி

“அம்மு” என்று அவளை அழைக்க அது அவனுக்கே கேட்கவில்லை.   அவள் எப்போதோ தன் வெட்கச் சிவப்பை மறைக்க பறந்தோடி சென்று இருந்தாள்.

இந்த பறவை
எந்த வானத்தை அழகு
செய்ய பிறந்து இருக்கிறதோ??.. 

💐💐💐💐💐💐💐💐💐

” ஹே அம்மு என்ன இவ்வளவு சைலண்ட்டா இருக்க… நான் தான் பத்து நிமிஷமா பேசிக்கிட்டு இருக்கேன்… நீ பேசவே மாட்டேங்குற.. என்ன டி உடம்பு சரியில்லையா” என்று ப்ரணவ் கேட்டான்.

ஆனால் அவளோ அவன் கேட்ட கேள்விக்கு வார்த்தையால் பதில் சொல்லாமல் இல்லை என்று தலையாட்டினாள்.

“ஹே என்ன டி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன்… நீ எதுவும் பேச மாட்டேங்கிற?”

“அதான் இல்லைனு தலையாட்டினேன்ல..”

“ஏன்டி போன்ல பேசிக்கிட்டு இருக்க எனக்கு எப்படி நீ அங்கே மண்டையை ஆட்டுனது தெரியும்?? பைத்தியம் பைத்தியம்… “

“என்னது பைத்தியமா??”

“ஆமாம் என் செல்ல பைத்தியம்… “

“போதும் போதும் சமாளிக்காதே…
டேய் ப்ரணவ் என் கிட்டே உனக்கு பிடிச்ச விஷயம் என்னது டா?”

“பிடிச்ச விஷயமா? தெரியலயே டி…தனித்தனியா உன் குணத்தை பிரிச்சு இது பிடிக்கும் அது பிடிக்கும்னு எனக்கு சொல்ல தெரியல.. என் உத்ராவோட எல்லா குணமும் எனக்கு மொத்தமா பிடிக்கும்… “

“பார்ரா.. எப்போத்துல இருந்து உனக்கு என் மேலே இவ்வளவு காதல் வந்துச்சு.. “

” தெரியல டி.. என் உடம்புல நீ எப்போவ கலந்துட்ட.. கடவுளே வந்து பிரிச்சு எடுக்க சொன்னா கூட பிரிச்சு எடுக்க முடியாத அளவுக்கு… எது நீ எது நானுனு தெரியாத அளவுக்கு என் எலும்பு, திசு, அணு, நாடியில ஒன்னா  கலந்து போய் இருக்கோம்னு  உணர்ந்த அன்னைக்கு காதல் வந்துச்சு..”

மலைத்துப் போனாள் அவன் பதிலில்.. இந்த அளவிற்கு என்னை காதலிக்கிறானா??…

” என்னடி மறுபடியும் பேசவே மாட்டேங்குற.. ஆமாம் நீ இந்த அளவுக்குலாம் அமைதியா இருக்க மாட்டியே.. ஒழுங்கா பேசு டி.. ” என அவளை பேச ஊக்கினான்.

அவனுக்கு தெரியும் அவள் இப்போது பெரும் தயக்கத்தில் இருக்கிறாள் என்று. அந்த கடற்கரையில் நடந்த சம்பவம் அவள் இயல்பை முடக்கிப் போட்டு இருக்கிறது. பெரும் தயக்கத்தில் இருக்கிறாள். தனக்கு தானே தாழ் போட்டுக் கொண்டு பேச தயங்கி அப்படி பேசினாலும் வார்த்தைகளில் வேலிப் போட்டுக் கொண்டு தடுமாறி நிற்பவளை இயல்புக்கு கொண்டு வர எத்தனித்தான்.

அன்று அப்படி ஒன்று நடந்ததை அவன் வார்த்தைகளில் அவளுக்கு நியாபகப்படுத்தவில்லை. நானும் நியாபகத்தில் வைத்து கொண்டு இருக்கிறேன் என்பதையும் அவளுக்கு உணர்த்தவில்லை. இயல்பாக எப்போதும் போல இருப்பதாக காட்டிக் கொண்டான். அவனும் எவ்வளவோ பேசிப் பார்த்தான். ஆனால் அவளிடம் ” ம்”  ” ஹ்ஹ்ம்” என்ற வார்த்தைகள் மட்டுமே பதிலாக வந்தது.

சலித்துப் போனவன்
” சரி டி.. என் மீனுக்குட்டி கிட்டே போனை கொடு.. அன்னைக்கே லவ்வைப் பத்தி அத்தை கிட்டே சொல்லணும்னு நினைச்சேன்… மீனு கிட்டே சொல்லாம மறைச்சு வைக்கிறது மனசு எல்லாம் ஏதோ பண்ணுது டி… இப்பவே அத்தைக் கிட்டே சொல்லணும் போல இருக்கு”

“பார்ரா அத்தைப் பொண்ணை விட அத்தை மேலே தான் பாசம் பொங்கி வழியுது… இரு இரு உன் மீனுக்குட்டி கிட்டே தரேன்.. ” என்று சொல்லியவள் தன் அன்னையிடம் கொடுத்துவிட்டு அவரது  முகபாவனையையும் பேசுவதையும் கவனித்தாள்.

“டேய் ப்ரணவ்.. என்ன டா சொல்ற… பார்த்தீயா இந்த அத்தைக் கிட்டேயே மறைச்சிட்ட பார்த்தீயா??.. ஆமாம் உனக்கு நல்ல டேஸ்ட்டே இல்லையா டா.. போயும் போயும் என் பொண்ணை லவ் பண்ணி இருக்கே… அத்தையே உனக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சு இருப்பேன் இல்லை… நீயே உன் தலையிலே மண்ணை வாரி கொட்டிக்கிட்டியே டா… ” என்று சொன்ன தன் தாயை முறைத்துப் பார்த்தவள்

“அம்மா போனை கொடு.. போதும் அவன் கிட்டே பேசுனது” என்று கோபமாக பிடுங்கினாள்.

“ஏன்டி என் மருமகன் கிட்டே பேச விடாம போனை பிடுங்கிற.. “

“உன் மருமகன் கிட்டே கொஞ்சி குலாவுனது போதும்னு தான் போனை பிடுங்கினேன்.. “

“பொறாமைப்பிடுச்சவ டி நீ.. ஐயோ என் ப்ரணவ்வை உடனே என் வீட்டுக்கு மருமகனா கூட்டிட்டு வரணும் போல இருக்கே… இரு இப்பவே  ஜாதகத்தை கொண்டு போய் பொருத்தம் பார்த்துட்டு வரேன்”  என்று குதூகலத்துடன் ஜாதகத்தை எடுத்து கொண்டு வெளியில் சென்றவரை சிரிப்புடன் பார்த்து இருந்தவளின் காதுகளில் ஹலோ ஹலோ என்று ப்ரணவ்வின் குரல் ஒலித்தது. காதில் வைத்தவள் ” சொல்லுடா” என்றாள்.

“ஏன்டி என் அத்தைக் கிட்டே பேச விடாம தடுத்த?” என் அத்தை கிட்டே கொடு.. “

“உன் அத்தை ஜாதகத்தை எடுத்துட்டு கிளம்பி போய் ரொம்ப நேரம் ஆச்சு… “

“பார்ரா என் அத்தை ஜெட் வேகத்துல இருக்காங்க.. சரிடி நான் அப்புறமா பேசுறேன்.. போனை வைக்கிறேன்…”

“டேய் ஏன்டா இன்னைக்கு சன்டே தானே.. அப்படி என்ன பெரிய வேலை உனக்கு??.. என் கிட்டே பேசுறதை விட்டுட்டு…
காலை கட் பண்ணாம ஒழுங்கா பேசுடா”

“ஹேய் உன் கூட பேசுறது மட்டும் தான் எனக்கு வேலையா??.. எனக்கு வேற வேலையே இல்லையா.. போனை வை டி”  என்று சட்டென்று அழைப்பை துண்டித்துவிட்டான்.

அவளால் அந்த புறக்கணிக்கப்பை ஜீரணிக்கவே முடியவில்லே. அப்படியே விக்கித்துப் போய் நின்றுவிட்டாள். என்னிடம் பேசுவது அவனுக்கு சலித்துப் போயிற்றா? நான் அதற்குள் அவனுக்கு சலித்துப் போய்விட்டானே. காதல் சொல்லிய பின்பு நான் முக்கியமற்றவளாக போய்விட்டேனோ??.. என்னை மதிக்காத உன்னை  நான் நினைக்கவே போவதில்லை.

இதோ உன் நிராகரிப்பிற்காக விழிகளின் ஓரம் ஒரு துளி நீர் வழிகிறதே அதை உனக்காக இனி நான் எப்போதும் சிந்த போவதில்லை  இனி நீயே அழைத்தாலும் நான் உன்னிடம் பேசப் போவதில்லை…  முடிவெடுத்த மறு கணமே அலைபேசியின் தொடுதிரை ஒளிர்ந்தது. எடுத்த முடிவு சட்டென்று மறந்து போனவளாய் வேகமாய் அலைபேசியை எடுத்து காதில் வைத்தாள்.

“ப்ரணவ்” என்று அழைத்தவளின் குரல்களில் கண்ணீர்த்தடம்.

“ஹேய் உத்ரா அழறீயா” என்று ப்ரணவ்வின் குரலிற்கு பதிலாய் வினய்யின் குரல் ஒலித்தது.

இப்போது கூட அவளது ப்ரணவ் அழைக்கவில்லை. வினய் தான் அழைத்து இருக்கிறான். ப்ரணவ்விற்கு நான் முக்கியமே இல்லையா?அந்த ஏமாற்றம் கண்ணீரை கேவலாய் மாற்றி இருந்தது.

“ஹே உத்ரா ப்ளீஸ் அழாதே டா.. என்ன ஆச்சு.. ஏன் இப்படி அழற.. என்ன நடந்தது.. ப்ளீஸ் காரணம் சொல்லிட்டு அழு மா… எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. நான் உன் கிட்டே காதலை சொன்னதாலே தான் அழறீயா??” என வினய் கேட்க இவளுக்கோ ப்ரணவ்விடம் காதல் சொல்லியது நினைவிற்கு வந்தது… அந்த காதல் தானே தன்னை அழ வைத்தது..

” ஆமாம் இந்த காதலலாலே தான் அழறேன்.. ” என்றவளின்  கேவல் பெருங்கேவலாய் மாறி வெடித்தது..

அவள் ப்ரணவ்வை நினைத்து சொன்னதை தன்னை தான் நினைத்து  சொல்கிறாள் என்று வினய் மாற்றி புரிந்து கொண்டான். அவன் மனம்  சஞ்சலப்பட்டது.

காதலை சொல்லி அவளை கலங்க. விட்டுவிட்டேனே. நான் பாவி என்று அவனது மனது  அவனையே கடிந்துக் கொண்டது.

அடுத்து பேச நா எழவில்லை… தன் காதலியை கலங்கடித்த வருத்தம் அவனை பேச விடாமல் தடுத்து இருந்தது.

இவளோ ப்ரணவ்வின் புறக்கணப்பில் அழுதுக் கொண்டு இருந்தாள்.
அந்த நேரம் பார்த்து காலிங்பெல் அடிக்க சலிப்புடன் கதவை திறந்தவளின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்து இருந்தது.

“ப்ரணவ்” என்ற கூக்குரலோடு கையில் வைத்து இருந்து அலைபேசியை அணைத்து சோபாவில் வீசியவள் அவனை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.

“ஹே என்னடி கண் எல்லாம் கலங்கி இருக்கு.. அழுதியா?.. ஏன் அழுத” என அவன் கேட்க அப்போது தான் அவனிடம் பேசக்கூடாது என்று தான் எடுத்த முடிவு நினைவிற்கு வந்தது. சட்டென்று அணைப்பை விலக்கினாள். கோபத்தை முகத்தில் வரவழைத்துக் கொண்டாள். உடல் விரைத்து நின்றாள்.

“மேடம்க்கு ஏன் முக்கு நுனி இப்படி சிவந்து இருக்கு??.”

“நான் கோவமா இருக்கேன்.. “

“அதை நீ தனியா வேற சொல்லணுமா.. அதான் உன்னை பார்க்கும் போதே தெரியுதே.. “

“தெரியுதுல என் கிட்டே பேசாதே.. நானும் உன் கிட்டே பேச மாட்டேன்… “

“ஆனால் இப்போ மேடம் என் கிட்டே பேசிக்கிட்டு தானே இருக்கீங்க” என்று நக்கலாய் அவன் கேட்க அவள் இரண்டு உதடுகளையும் ஒன்றாய் சேர்த்து அனுமாரைப் போல் வைத்துக் கொண்டு தலையை இடதும் வலமுமாக ஆட்டி பேச மாட்டேன் என்று சமிங்ஜை செய்தாள்…

” ஹே உத்ரா நீ இப்படி க்யூட்டா பண்ணும் போது தான் டி உன் மேலே இன்னும் லவ் வருது. உன் கிட்டே சொல்லாம கொள்ளாம நேர்ல வந்து சப்ரைஸ் பண்ணலாம்னு பார்த்தா இப்படி சின்னக்குழந்தை மாதிரி அழுது வடிஞ்சுக்கிட்டு இருக்க. என் சின்ன பாப்பா. ” என்று அவன் சொல்ல கோபம் குறைந்தாலும் குரலில் இல்லாத கோபத்தை வரவழைத்துக் கொண்டு

“எதுக்கு இந்த சப்ரைசாம்..” என்றாள் எரிச்சலான குரலில்

“இல்லை மேடம் என் கிட்டே இப்போ எல்லாம் சரியாவே பேச மாட்டேங்குறாங்களே.. அதான் சரியா பேச வெச்சுட்டு போகலாம்னு வந்தேன்.. ஏன் டி இப்போலாம் ஒழுங்கா என் கிட்டே பேச மாட்டேங்குற.. “

“இல்லையே நான் நல்லா தானே பேசுறேன்.. ” என  தயங்கியபடியே சொல்லியவளை  மெது மெதுவாக நெருங்கினான்.

அவனது ஒவ்வொரு அடியும்  முன்னேற இவளது ஒவ்வொரு அடியும் பின்னேறியது. இதற்கு மேல் பின்னேற வழிகள் இல்லை சுவர் வந்துவிட்டது. தடுமாறியபடி அவனைப் பார்த்தாள்.

“சொல்லு டி.. ஏன் பேச மாட்டேங்குற” அவனது மூச்சக்காற்று அவளது கன்னத்தை தொட வார்த்தைகள் உள்நாக்கில் சிக்கிக் கொண்டது.

முயற்சித்து வரவழைத்த குரலில் ” இல்லை அன்னைக்கு அங்கே உன்னை கிஸ் பண்ண அப்புறம் என்னாலே இயல்பா பேச முடியல”

“அது முதல் தடவை வர தயக்கம்.. அதான் ரெண்டாவது முறை நடத்திட்டா அந்த தயக்கம் வராதேனு மாமா ஓடி வந்தேன்.. “

“புரியல என்ன சொல்ற ப்ரணவ்” என்றவளது வார்த்தைகள் தந்தியடித்தது.. ஆனால் அவன் பதில் பேசவில்லை..

தன் கன்னத்தை அவள் கன்னத்தோடு இழைத்தான்.. கண்களை மூடிக் கொண்டாள் அவள்.. மூக்குநுனியை அவள் மூக்கோடு உரசினான்… சிலிர்த்து போனாள்.. உதடுகள் குவித்து அவள் முகத்தில் இருந்த முடிக்கற்றைகளை ஒதுக்கினான்… தவித்து போனவள் பட்டென்று  கண்களை திறந்தாள்.. அவள் கண்களைத் திறந்த நேரம் இவன் அவளது இதழ்களை மூடினான். அவனை தடுக்க இயலாமல் அவன் கரத்தில் வழிந்தாள். அவன் முத்தமிட்டு விலக இவள் சப்த நாடியும் அடங்கிப் போய் அவனையே விழி விரித்துப் பார்த்தாள்.

“இனி பேசாம இருந்த.. இது தான் உனக்கு பனிஷ்மென்ட்டா கிடைக்கும்… இனி பேசாம தயங்குவ?” என அவன் செல்லமாய் மிரட்ட இவள் சட்டென்று வேகமாய் இல்லை இல்லை என்று தலையாட்டினாள்.

முதல் முத்தத்தின் திகைப்பில் இருந்து விலகாத அவள் விழிகளை பார்த்தவன் மெல்லியதாய் அணைத்து கொண்டு ” என் உத்ரா” என்றான்.

அவனது அணைப்பில் வாகாய் பொருந்தியபடி ” என் ப்ரணவ்” என்றாள்.

இப்போது திகைப்பு பயம் எல்லாம் விலகி இருந்தது. அவனது ப்ரணவ்வையே விழிகளால் விழுங்கிக் கொண்டு இருந்த நேரம் அழைப்புமணி ஒலித்தது. சிரிப்புடன் ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். மீனாட்சி தான் நின்று கொண்டு இருந்தார்.

“அத்தை மா.. என்ன சொன்னாங்க நம்ம ஜோசியக்காரர் எங்களுக்குள்ளே பத்து பொருத்தமும் பக்காவா இருக்குனு சொன்னாரா??.. நாங்கள் ஏழேழு ஜென்மமும் நல்லா happy ஆ வாழ்வோம்னு சொன்னாரா?” என்று மகிழ்ச்சியுடன் கேட்ட ப்ரணவ்வையே வருத்தத்துடன் பார்த்தார்.

இவனது இந்த சந்தோஷத்தை ஜோசியர் சொன்ன உண்மையைக் கொண்டு சிதைக்க வேண்டுமா? இதோ என் பெண்ணின் முகத்தில் தெரியும் இந்த  காதலின் ஜொலிப்பை உண்மையை சொல்லி சோகமாக மாற்ற வேண்டுமா? மாட்டேன் மாட்டேன்..

” இவர்கள் இருவரும் இணைந்து வாழவே மாட்டார்கள்..” என்று அவர் சொன்னது பலிக்கட்டும்..  இல்லை பலிக்காமல் போகட்டும்…

எப்போதோ நடக்க போகும் என்று அவர்  சொன்ன இந்த வார்த்தைகளை இப்போதே சொல்லி என் பிள்ளைகளின் இன்றைய சந்தோஷத்தை கலைக்க மாட்டேன் என்று அந்த தாயின் மனம் எண்ணியது.

“நீங்க இரண்டு பேரும் நூறு வருஷம் ஒன்னா சேர்ந்து வாழ்வீங்கனு சொன்னார்… ” என்று அவர் சொன்ன அந்த செய்தியைக் கேட்டு உத்ராவும் ப்ரணவ்வும் அப்போதைக்கு மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர்.

ஆனால் அவர்களுக்கு தெரியாது அது பொய்யென்றும். அவர் அன்னை சொன்ன அந்த வார்த்தைகள் நிஜத்தில் பலிக்கவே பலிக்காதென்றும்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

ஒரு நொடியில் எப்படி ஓராயிரம் எண்ணங்களை இந்த இதயசித்திரத்தில் காட்டுகின்றது இந்த மாய மனம்..

அவனுடனான தன் காதல் பயணம் எப்படி அத்தனை அழகாக துவங்கியது. ஆனால் ஏன் இப்படி முடிந்து போனது.. ஏன் என் வாழ்க்கை தடம் மாறியது. என்னால் அவன் நினைவுகளின் பிடியில் இருந்து மீளவே முடியவில்லையே.

இப்போது கூட குறுஞ்செய்தியில் என்னிடம் பேசிக் கொண்டு இருக்கும் ப்ரணவ்வை என்னால் தடுக்கவே முடியவில்லையே… அவன் பேசியவுடன் பழைய நியாபகங்கள் எல்லாம் விழிகளில் நிறைகிறதே… எல்லாம் இப்போது தான் நடந்து முடிந்தது போல் இந்த வாழ்க்கை மாயாஜாலம் காட்டுகிறதே.

இது நிஜம் அல்ல இது நடக்காது என்பதை அவனுக்கு எப்படி உணர வைப்பேன். நாம் இருவரும் சேரவே முடியாதென்று எப்படி அவனுக்கு உணர்த்துவேன்?

“ப்ளீஸ் ப்ரணவ்.  தயவு செய்து என்னிடம் பேசி என் பழைய உணர்வுகளை என் பழைய காதலை பழைய ஏக்கத்தை வர வைக்காதே… நம்மால் இணைய முடியாது… எப்படி சொல்லி உனக்கு நான் புரிய வைப்பேன்.. ” என்று அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவன் பதிலாக்காக காத்திருந்த நேரம் பின்னிருந்து ஒரு குரல் அழைத்தது…  ” அம்மா ” என்று..

திடுக்கிட்டு திரும்பி உத்ரா பதற்றத்துடன் என்னவென்று கேட்க

“சாரி அம்மா.. பின்னாடி இருந்து கூப்பிட்டா நீங்க பயப்பிடுவீங்கனு மறந்து போய் கூப்டுட்டேன்.. பயந்துட்டீங்களா?” என்று ஆதரவாக கேட்ட மகனை நோக்கி  இல்லை என்று தலையசைத்தாள்…

தன் மகனின் தலையை ஆதூரமாய் வருடியபடி
“சாப்பிட்டிங்களா விமல் கண்ணா?” என அவள் கேட்க இல்லை என்று தலையசைத்தான்..

“வினய் வீட்டுக்கு வந்துட்டாரா?”

” இல்லை அம்மா”

“சரி அவர் வந்ததும் ஒன்னா சேர்ந்து சாப்பிடலாம் விமல் ” என உத்ரா சொல்ல சரியென்று தலையாட்டிவிட்டு உள்ளே சென்ற தன் மகனையே  விழியகலாது பார்த்தாள்..

அவளது கவனத்தை கலைத்தது அலைபேசியின் தொடுதிரையில் ஒளிர்ந்த வினய்யின் அலைப்பேசி எண். அந்த அழைப்பை எடுக்க மனம் தயங்கியது.

வினய்யிற்கு தெரியாமல் ப்ரணவ்விடம் பேசியதை பேசுவதை வினய் தவறாக நினைப்பானா???…

வினய் வீட்டிற்கு வந்ததும் முதல் வேளையாக ப்ரணவ் என்னிடம் பேசியதை பற்றி சொல்ல வேண்டும்… வினய் என்னை தவறாக நினைத்தால் கூட பரவாயில்லை இந்த ப்ரணவ் என்னிடம் மறுபடியும் பேசுகிறான் என்பதை சொல்லியே தீருவேன்..

காதலில் முதல் சில நாட்கள் நன்றாக தான் இருக்கும். ஆனால் போக போக தானே இந்த காதலின் சுயரூபம் தெரியும். எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோஷம் தருகிறதோ. அதற்கு பத்து மடங்காய் வலியைத் தெரியும். அந்த வலியில் நான் எடுத்த அந்த  பைத்தியக்காரத்தனமான முடிவு  தானே என்னையும் ப்ரணவ்வையும் வினய்யையும் வருத்தியது. மனதை கொன்று போட்டது.

பாவம் வினய். என்னை காதலிப்பதை தவிர்த்து அவன் வேறு எந்த பாவமும் செய்யவில்லை.

அவனை அப்போதும் காயப்படுத்தினேன். இப்போதும் காயப்படுத்துகிறேன்.. வினய்யை ஏமாற்றுகிறேன். எல்லாம் இந்த ப்ரணவ்வால் தான். இவ்வளவு நடந்த பிறகும் ஏன் ப்ரணவ்வின் பின்னேயே என் மனம் இப்படி ஓடுகிறது. ப்ரணவ் என்னிடம் இப்போது பேசிக் கொண்டு இருப்பது தெரிய வந்ததும் வினய் என்ன நினைப்பான்??… என்னை தவறாக நினைத்துவிட்டால்??…நினைத்த மாத்திரத்தில் உடல் நடுங்கியது.

அவன் வீட்டிற்கு வந்ததும் ப்ரணவ் மீண்டும் பேசுகிறான் என்று  சொல்லியே தீர வேண்டும் என நினைத்தவள் மீண்டும் தன் கடந்த கால வாழ்க்கைக்கு சென்று அதன் நினைவுகளை அசைப்போட ஆரம்பித்தாள்… 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!