தீங்கனியோ தீஞ்சுவையோ – 8

 

” இங்கே என்ன நடக்குது உத்ரா?”  என்று அவன் அழுத்தம் திருத்தமாய்க் கேட்க அப்போது தான் ப்ரணவ் தன்னை தப்பாக புரிந்து கொண்டான் என்பதையே உணர்ந்தாள்..

” நீ எப்ப இங்கே வந்த ப்ரணவ் ” என்று அவனை நோக்கி தயங்கியபடியேக் கேட்டாள்.

“நீ அவனை கட்டிப்பிடிச்சுக்கிட்டே என்னை சந்திக்கிறதுக்கு முன்னாடி அவனை சந்திச்சு இருந்தா அவனை தான் காதலிச்சு இருப்பேனு சொன்னியே அப்பவே வந்துட்டேன்.. ” என்றவனை வருத்தமாக பார்த்தாள்.

அதற்கு பின்பு தான் வினய்யின் காதுகளில் மெதுவாக சொன்ன வார்த்தையை  அவன் காதுகள் கண்டிப்பாக கேட்டு இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றிட அவனுக்கு புரிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள்.

“இல்லை ப்ரணவ்… நான் கொஞ்சம் உன் மேலே இருக்கிற மனத்தாங்கலை எல்லாம் வினய் கிட்டே ஷேர் பண்ணேன்..அதுக்கு அவன் கொடுத்த solution மனசை லேசாக்குச்சு… அவனுக்கு தேங்க்ஸ் சொல்லி கட்டிப்பிடிச்சேன்… ”

“அப்போ என் கூட இருக்கிறது உனக்கு மனத்தாங்கலா இருக்கா உத்ரா?”

“ஐயோ இல்லை இல்லை ப்ரணவ் உன் மேலே இருக்கிற குறையை எல்லாம் சொல்லி பதிலுக்கு நிறையை மட்டுமே காது குளிர கேட்கணும்னு நினைச்சேன்.. அதனாலே தான் சொன்னேன்… என் மனசுக்கு நானே ஆறுதல் சொல்லாம வேற யாராவது ஆறுதல் சொன்னா நல்லா இருக்கும்னு தோணுச்சு… ”

“அப்போ உனக்கும் மத்தவங்களை மாதிரி என் குறை எல்லாம் வெறும் குறையா தான் தெரியுதுல.. நான் உன் வாழ்க்கையோட நிறைவுனு உனக்கு தோணலல.. ” என்று கேட்டவனது கேள்விகளில் வலியின் சாயல்.

“ஐயோ ப்ரணவ் அப்படி இல்லை நான் சொல்ல வரதை கோவப்படாம புரிஞ்சுக்கோ… ”

“முடியாது டி.. நான் அப்படி தான் கோவப்படுவேன்.” 

“ப்ளீஸ் ப்ரணவ்.. என்னை புரிஞ்சுக்கோ.. ஏன் இப்படி கோவப்படுற.. நியாயப்படி பார்த்தா நான் தான் உன் மேலே கோவப்படணும்.. ”

“அப்படியா அப்படி கோவம் படுறா மாதிரி நான் என்ன பண்ணேன் உத்ரா? இப்படி வேற ஒருத்தியை கட்டிப்பிடிச்சு உன் குறையை எல்லாம் நான் சொல்லிக்கிட்டு இருந்தேனா என்ன?”

“நீயே நினைச்சாலும் உன்னாலே அதை பண்ணமுடியாது ப்ரணவ்.. ஏன்னா நான் உன் மேலே வெச்ச காதலை குறை சொல்ல உன்னாலே முடியாது… ஏன்னா நான் எந்த குறையும் வைக்கல…”

“அப்போ நான் வெச்ச காதலிலே குறை இருக்குனு சொல்றியா?”

“ஆமாம் குறையா தான் தெரிஞ்சது எனக்கு… லவ் சொன்ன கொஞ்ச நாளுக்கு மட்டும் என்னை மகாராணி மாதிரி நடத்திட்டு அப்புறம் குப்பை மாதிரி தூக்கிப் போட்டா குறையா தானே தெரியும்.. தினமும் உன் கூட பேசுன அப்புறம் தான் தூக்கம் வரா மாதிரி என்னை பழக்கப்படுத்தினது நீ..
ஆனால் திடீர்னு நீ போன் பண்ணாம என் தூக்கத்தை பறிப்போக வெச்ச அப்போ எனக்கு குறையா தான் தெரிஞ்சது… இந்த எல்லா குறையையும் நான் வினய் கிட்டே சொல்ல அவன் எனக்கு தெளிவா புரிய வைச்சான்..
அந்த சந்தோஷத்துல தான் நான் அவனை கட்டிப்பிடிச்சேன்.. ஆனால் அது கூட உனக்கு தப்பா பட்டு இப்போ என் கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்கியே.. இது கூட எனக்கு ஒரு குறையா தான் தெரியுது ப்ரணவ்” என்று சொன்னவளை கண்களில் வலியோடு பார்த்தான்.

அவன் எதுவும் பேசாது அமைதியாக இருக்க அவளுக்கு இன்னும் கோபம் பன்மடங்காய் அதிகரித்தது.

அவனை கோபப்படுத்துவதற்காகவே அந்த வார்த்தையை சொன்னாள். அவனுக்கு பொறாமையை தூண்டி விட்டி அதன் விளைவாய் அவன் காதலை வெளிப்படுத்திவிடுவான்… பழைய ப்ரணவ்வை மீட்டு விடலாம் என்பதற்காக சொன்னாள். ஆனால் அந்த வார்த்தை தான் அவனை அவளிடம் இருந்து பிரிக்க போவதை அவள் அறியவில்லை.

” சே உனக்கு ஓகே சொல்லாமா நான் வினய்க்கே ஓகே சொல்லி இருந்து இருக்கலாம் போல” என அவள் சொல்ல வினய்யும் ப்ரணவ்வும் ஒரே நேரத்தில் கத்தினர்…

“உத்ரா லூசு மாதிரி உளறாதே.. முதலிலே பொறுமையா உட்கார்ந்து பேசுங்க.. இப்படி வார்த்தையை விடாதே டாம்” என வினய் அக்கறையோடு கத்தினான். ஆனால் ப்ரண்வ்வோ

கோபத்தில் கத்தினான்.

“உனக்கு என் கூட இருக்க பிடிக்கலனா போடி..நான் உன்னை தடுக்க மாட்டேன்… ” என்று அவன் கத்த வினய் தலையில் கைவைத்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்து விட்டான்.

உத்ராவோ இன்னும் கோபத்தின் உச்சிக்கு சென்றாள்.

நான் போகிறேன் என்று சொன்னால் தடுத்தி நிறுத்தி சமாதானம் செய்வான் என்று நினைத்தவளது நினைப்பில் பெரிய அடி.

அப்படியானால் நான் போகிறேன் என்று சொன்னால் அழுது அரற்றி கெஞ்ச மாட்டானா?

சரி தான் போடி என்று அப்படியே விட்டுவிடுவானா?

கண்களின் ஓரம் நீர் வழிய தயாராய் இருந்தது. உள்ளே இழுத்து கொண்டாள்..

ஆனால் பாவம் உத்ராவிற்கு தெரியவில்லை அன்பின் குணமே அது அல்ல என்று. போகிறேன் என்று சொன்னால் அது அழுது  அரற்று கெஞ்சாது..  நீ எப்படி என்னை விட்டு இருந்துவிடுவாய் மீண்டும் திரும்பி என்னிடம் தான் வருவாய் என்ற கர்வத்தோடு செல்லுபவர்களை பார்க்கும் என்று அவள் அறியாள்.

“ப்ரணவ் நான் உண்மையா போய்டுவேன்… ”

“அதான் போடினு சொல்றேன்ல.. போ என்னை விட்டு போ”

“சத்தியமா போய்டுவேன் டா.. ”

“ஹே அதான் போனு சொல்றேன்ல திரும்ப திரும்ப கேட்டு ஏன் என்னை இப்படி டென்ஷன் பண்ற.. ”

“அப்போ நான் போனா உனக்கு வருத்தமே இல்லையாடா… “

“சத்தியமா இல்லை டி… உன் டார்ச்சர்ல இருந்து தப்பிச்சுடுவேன்.. டெய்லி உன் போனை அட்டென்ட் பண்ணனும்னு அவசியம் இல்லை.. மெசேஜ்க்கு ரிப்ளை பண்ணனும்னு அவசியம் இல்லை…

சந்தோஷமா இருப்பேன் ” என அவன் சொல்ல சொல்ல அவள் கோபம் பலமடங்கு ஏறியது.

“அப்போ நான் உன்னை விட்டு போனா ஃபீல் பண்ண மாட்ட இல்லை.. ”

“மாட்டேன் மாட்டேன் நிம்மதியா இருப்பேன்.. ”

“நான் வேற யாரையும் காதலிச்சாலும் வருத்தப்படமாட்ட இல்லை.. ”

“இல்லை இல்லை நல்லா சந்தோஷமா இருப்பேன்” என்று அவன் சொல்ல கண்ணில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு ஒரு முடிவோடு  வினய்யை நோக்கி திரும்பினாள்.

“வினய் do you love me??”

“உத்ரா வேண்டாம்.. நீ அவசரப்பட்டு முடிவு எடுக்கிற.. கொஞ்சம் பொறுமையா பேசி பாருங்க” என்று வினய் இறைஞ்சினான்.

“இனி அவன் கிட்டே பேசுறதுக்கு ஒன்னும் இல்லை வினய்…நீ சொல்லு do you love me or not???”

“இல்லை உத்ரா நீ அவசரப்படுற”

“சொல்லு வினய்.. do you love me or not”?” என்று மறுபடியும் அழுத்தமாகக் கேட்டாள்.

என் உயிர்க்கூட்டில் காதலை நிரப்பியவள். மனதினில் அமிழ்ந்து போனவள். என் ஊன் உலகம் முழுக்க தன் கண்பார்வையில் அடக்கி வைத்தவள். என்னை நோக்கி இப்போது கேட்கிறாள்..  காதலிக்கிறாயா என்று…

அவளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன் அவள் மீது நான் வைத்த காதல் தான் என்னை இப்போதும் உயிர்ப்போடே வைத்து இருக்கின்றது என்று… அவள் என்னை மறுத்த பிறகு நான் கொண்ட காதலை எரித்து சாம்பலாக்கி நட்பை மட்டும் தானே சுடர்விட செய்தேன்.. ஆனாலும் அந்த சாம்பலில் அடிக்கடி காதல் சுடர்விடுவதை என்னால் தடுக்க முடியவில்லையே.. இப்போது கூட அவள் என்னை காதலிக்கிறாயா என்று கேட்கும் போது அந்த சுடர் பற்றி எரிகிறதே.. என்னால் தடுக்க முடியவில்லையே… அணைக்க முடியவில்லையே.. தவிப்பில் கத்தினான்…

“yes I love u உத்ரா.. i love u ” என்று வினய் உரக்க கத்தினான். ப்ரணவ் ஸ்தம்பித்து போய் நின்றான்.