தூறல் போடும் நேரம்

எல்லோரும் நன்றாகவே யூகித்து இருந்தீர்கள் பிரண்ட்ஸ். எனக்கே நிறைய தலைப்புகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள். நன்றி தோழமைகளே. இதில் தலைப்புக்கு பக்கமாய் வந்தவர்கள், ரதிதேவிதேவா அக்கா மற்றும் ஷோபனா முருகன் அவர்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சரி, விஷயத்திற்கு வருவோம். என் கதையின் தலைப்பு தூறல் போடும் நேரம், அதே போலவே நான் தலைப்பை போட வந்த நேரம், சென்னையில் தூறல் போட்டு கொண்டிருந்தது.

அதனால், அந்த மனநிலையோடு மழை தூறலின் ரீங்காரத்தோடும், மகிழ்வோடும் என்னுடைய தூறலையும் ரசிக்க வாருங்களேன் தோழமைகளே.

அடுத்து நீங்கள் எதிர்பார்ப்பது கதையின் நாயகன் மற்றும் நாயகி பற்றிய அறிமுகம். அதையும் வழக்கம் போல் கதைக்கு வந்து தெரிந்து கொள்ளுங்கள்.

நான் கதை மாந்தர்களைப் பற்றி சித்தரிப்பதைக் காட்டிலும், நீங்கள் உங்கள் கண்ணோட்டத்தில் புரிந்து என்னுடன் பகிர்வதில் எனக்கு ஆனந்தம். அது தான் அவர்களைப் பற்றிய அறிமுகமின்மைக்கு காரணம்.