தேடல்களோ தீராதினி

தேடல்களோ தீராதினி

தேடல்களோ தீராதினி.. டீசர்

 

அவனது வாய் மட்டுமே தன் நண்பர்களுடன்,  பேசிக் கொண்டு இருந்தது.. அவனது மனமும் மூளையும் அவளை மட்டுமே தேடிக்கொண்டு இருந்தது.

” டேய் மச்சி, என் ஆளு வருது டா” என்றவன்,  தன் கேசத்தை விரல்களால், கோதிக் கொண்டான்.

நெஞ்சோடு புத்தகத்தை அணைத்துக் கொண்டு,  அடிக்கண்ணில்,  அவனை ஒரு பார்வைப் பார்த்து விட்டு, அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் அவள்.

“கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென”

என்ற பாடல்,  பட்டித் தொட்டி எங்கும் ஒலித்து ஹிட் ஆனக்காலமது..

பெரிய ஜெய் , ஸ்வேதா ரெட்டி என்று சொல்லும் அளவுக்கு, அவர்களது மாயைக் கொண்டிருந்தார்கள் அன்றைய 90’ஸ் கிட்ஸ் காதலர்கள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே போதும்,  காதலிக்கிறார்கள் என்று கதைக் கட்டிவிட்டு, அவர்களை காதலர்களாக மாற்றி விடுவதும் இந்த 90′ ஸ் கிட்ஸ்.

பார்வை ஒன்றே போதுமானது, பல கதைகளைக் கட்டி விட,

தன் காதலியின் அடிக்கண் பார்வையைத் தனக்குள் விழுங்கியவன்… ஜெய் போலவே தலையை அசைக்க, பக்கத்தில் அமர்ந்திருந்த நம் கதாநாயகன் விவேக், கடுப்புடன் அவனை நோக்கினான்.

” பெர்ஸ்னாலிட்டி இல்லாத பர்கருக்கு எல்லாம், காதல்…” என்று தலையில் அடித்துக் கொண்டான் விவேக்.

” காதலுக்குக் கண் இல்லை  மச்சி, மனசைப் பார்த்து தான் லவ் வரும், தோற்றத்தைப் பார்த்து இல்ல. பாரு, அவளும் நானும்
வானும் அமாவாசையும்  போல் கலந்து விட்டோம் கரு வண்ணத்தில் ” காதலில் விழுந்தக் கதையை வைரமுத்துவைப் போல் கவி வடித்துக் கூறினான்.

ஏற்கெனவே, தன் வான்மதியின் முகம் காணாமல் தவித்துப் போயிருக்கும் வானவனின் ஏக்கத்தின் நிலை அறியாத நண்பன், தன் கருவண்ண காதலைக் கூறிக் கடுப்படித்தான்.

“பச்… டேய் ரொம்ப கடிக்காத டா!  ஏற்கெனவே இங்க கொசு அதிகமா இருக்கு… ” என்று தன் நண்பனைக் கொசு லிஸ்டில் சேர்த்தான்.

” உன் லவ்வர பார்க்க முடியலைன்னு கடுப்புல இருக்கியா? எனக்கு தெரிஞ்சு. நேத்ரா, இன்னக்கி டியூசனுக்கு வர்றலேன்னு  நினைக்கிறேன். டியூசனுக்கு வந்த எல்லாப் பொண்ணுங்களும் போயிட்டாங்க. இனி நாம தன் உள்ள போகணும்..” என்றான்.

ஆனால் விவேக்கிற்கு மனம் ஒத்துழைக்கவில்லை, அவள் மதி முகம் கண்டால் தான், மூளையும் மனதும் ஒன்று சேரும், அதிகாலைக் குளம்பியாய், புத்துணர்வு தருவது அந்த மாசுமறுவற்ற அம்முகம் தான்.

இன்றேனோ பார்க்க முடியாமல் போக, காற்று இறங்கிய பலூனாயானான். தான் அமர்ந்திருந்த வீட்டின், எதிரே தான் அவர்கள்  பயிலும் டியூசன் இருந்தது.  பி . ஈ முடித்து ஷர்மி அக்கா, தன் வீட்டிலே  டியூசன் செண்டரை ஆரம்பித்திருந்தார். பதினொன்று மட்டும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் டியூசன் எடுத்தார்.
 

மாணவிகளுக்குத் தனியாகவும்  மாணவர்களுக்குத் தனியாகவும் தான் எடுப்பார்.. மாணவிகள் சென்ற பின்,  மாணவர்கள் உள்ளே செல்வார்கள்.

டியூஷன் முடிந்து வெளியே வரும் பொழுது தான், அவன்  நேத்ராவைப் பார்ப்பான். அவனது வேலை அதான். அதற்காகவே அவன் டியூசன் வருவான்.

டியூசன், முடிந்து சில நேரம் பால்கனியில் நிற்பாள், அப்போதெல்லாம் அவன் வானில் அன்று பௌர்ணமி தான்..

ஏனோ, அவள் முகம் காணாது, அந்த நாள், நிலவு இல்லாத வான்னாது  அவனுக்கு.

” நான் வீட்டுக்குப் போறேன் டா..” என்று எழுந்தவனைப் போக விடாமல்  தடுத்தான் அஜய். அவனுக்கும் துணை வேண்டும் அல்லவா,

” டேய் சும்மா வாடா… எனக்கு கம்பெனிக்கு ஆள் இல்ல, ப்ளீஸ், நீ இருந்தால் தான் அந்த அக்கா, கேட்கற கேள்வில இருந்து தப்பிக்க முடியும்.. ப்ளீஸ்!!! ”  என்று அவன் கெஞ்ச மனமில்லாமல் சென்றான் விவேக்..

ஆனால், இன்று அவன் வானில் அமாவாசை இல்லை பௌர்ணமி தான் என்றது அவளது சிரிப்பின் சத்தம்.. ஷர்மியின் தங்கை, ஷாலுவிற்கு மெகந்தி போட்டுக்கொண்டு இருந்தாள் நேத்ரா!

” மச்சி, பார்த்தியா, நான், உன்னைப் போக விட்டுருந்தால்,  இந்நேரம்  உன் ஆள பார்க்க முடியாம போயிருக்கும்.. இப்ப புரியுதா என்னை மாதிரி நண்பன் உனக்கு வேணும்ன்னு…” என்று காலரைத் தூக்கிவிட்டான்.

அதை அமோதிப்பதாக அவனும், அவனுக்கு  முத்தமொன்றைக் கொடுத்து விட்டு,  வந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். (படிக்க அல்ல… பார்க்க… )

என் வானம்
சுமக்கும்
வெள்ளை
நிலவே..

உனக்கில்லையடி
வளர்பிறை
தேய்பிறை
உன்னைக்
காணாத
நாளன்று
எனக்கு
மட்டுமே
தேய்பிறையடி

உன்னைக்
கண்டபின்
தான்
என் காதலின்
வளர்பிறை
நாளடி..

வளர்வதும்
தேய்வதும்
இந்த
வானவன்(சூரியன்)
கொண்டேனடி!

இந்த
இயற்கை
மாற்றம்
நிகழ
உன்னால்
தானடி

என்
வெற்று
வானில்
முளைத்த
என்
நேத்திரயோனியே(நிலவு)..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!