மெல்ல சனாவின் இடது கன்னத்தை தன் வலக் கரத்தால் தாங்கி அடுத்தகணம் அவளிதழை தன் வன்மையான இதழால் சிறைப்பிடித்திருந்தான் ரிஷி.
இதுவரை அனுபவித்திராத புது உணர்வு. அதிலிருந்து அவளால் விடுபடவும் முடியவில்லை. அவனை தள்ளிவிட கூட உடலில் ஏனோ தெம்பில்லாத உணர்வு.
அவள் அவனுக்கு இசைந்தும் கொடுக்காமல் அவனை விட்டு விலகாமல் அப்படியே உறைந்துபோய் அவன் விழிகளுக்குள்ளும் இதழுக்குள்ளும் சிறைப்பட்டவாறு அப்படியே அமர்ந்திருக்க, இருக்கும் சிறு இடைவெளியை கூட விலக்கி அவளிடையை பிடித்து தன்னோடு நெருக்கி அவளுள் மேலும் மூழ்கிச் சென்றுக்கொண்டிருந்தான் ரிஷி.
நிமிடங்கள் கடக்க, தங்களை மறந்த நிலையில் இருவரும் இருக்க, திடீரென ஒலித்த அலைப்பேசி ஒலியில் முதலில் சுதாகரித்தது சனாதான்.
தானிருக்கும் நிலை புரிந்து அதிர்ந்து விழிகளை விரித்தவள், அடுத்தகணம் ரிஷியை தள்ளிவிட்டு அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தவன், அவளின் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தான்.
அவள் முகத்திற்கும் அவன் முகத்திற்கும் நூலிடைவெளியே இருக்க, அவள் விழிகளை ஊடுறுவும் பார்வைப் பார்த்தவாறு, “ஐ லவ் யூ!” என்றான் ரிஷி சட்டென்று. இதை கொஞ்சமும் எதிர்ப்பாராதவளாக மேலும் திகைத்துப் போய் அமர்ந்திருந்தவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியவீல்லை.
“என்ன, விளையாடுறியா? தெரிஞ்சுதான் பேசிட்டு இருக்கியா?” பற்களைக் கடித்துக்கொண்டு அவள் பேச, “ஐ லவ் யூ தட்ஸ் இட். எனக்கு நீ வேணும். இதை நான் உன்கிட்ட சொல்றதுக்கென்ன?” என்று அவனும் பதிலுக்கு அவளை ஆழ்ந்துப் பார்த்தவாறுச் சொல்ல, “துரோகி!” என்று அவனின் கரத்தை உதறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சனா.
ஆனால், அவளை அவ்வளவு இலகுவாக விட்டால் அது ரிஷி அல்லவே!
வேகமாகச் சென்று அவள் முழங்கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், “துரோகியா?” என்று முகம் சிவக்கக் கேட்க, “பின்ன? ஃப்ரென்டா இருந்துட்டு லவ்வ சொல்றவங்க எல்லாம் தூரோகிதான்.” என்று அவள் சொல்லவும், ஏளனமாக இதழை வளைத்தவன், “காதல சொல்லாம மனசுல வச்சிக்கிட்டு இருக்குறவன் பைத்தீயக்காரன்டீ.” என்றான் பதிலுக்கு அழுத்தமாக.
அதற்கு பதில் பேச முடியாமல், “ச்சே!” என்று சலித்துவிட்டு சனா செல்லப்போக, அவனும் அவளை விட்டபாடில்லை.
வேகமாக அவளை நெருங்கி அங்கிருந்த சுவற்றில் சாய்த்து அவள்மேல் மொத்தமாக ரிஷி சாய்ந்து நின்றுக்கொள்ள, “விடு என்னை!” என்று திமிற ஆரம்பித்துவிட்டாள் அவள்.
அந்தநேரம் ரிஷிக்கு ஒரு அழைப்பு வர, திரையைக் கூட பார்க்காது அழைப்பைத் துண்டித்தவன், அவளை கூர்ந்துப் பார்த்து, “ஏன்டீ, ஏன் வேணாம்னு சொல்ற, என்கிட்ட… என்கிட்ட என்னடீ குறை? நான் உன்னை நல்லா பார்த்துக்க மாட்டேனா, ராணி மாதிரி பார்த்துப்பேன். அவ்வளவு லவ் பண்றேன் சனா உன்னை. இதை நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கணும். உன் பக்கத்துல என்னால என்னையே கன்ட்ரோல் பண்ண முடியல. என் ஃபீலிங்க்ஸ்ஸ ஹைட் பண்ண முடியல. ரொம்ப பிடிச்சிருக்குடீ உன்னை. ஐ லவ்…” என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவன் மார்பில் கை வைத்து கோபமாக தள்ளிவிட்டாள்.
“அடிங்க! காதல் கருமாந்திரம்னு என்கிட்ட பேசிட்டு வந்த அம்புட்டுதான். இந்த கருமத்துமேல எனக்கு நம்பிக்கையே இல்லை. அதுவும் நீ யாருன்னு தெரிஞ்சும் உன்னை காதலிப்பேன்னு நீ எப்படி நினைச்ச?” என்று எரிச்சலாகக் கேட்டவள், “இங்க பாரு! நான் உனக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத. தேவையில்லாத ஆசைய வளர்த்து என் உசுற வாங்காம வேலைய பாரு!” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேற, போகும் தன்னவளை கோபமாகப் பார்த்தவாறு, “நீ என்னடீ சொல்றது, ஐ லவ் யூ அவ்வளவுதான். நீ எனக்கு வேணும். லவ் யூ அரக்கி!” என்று கத்தினான் மூச்சு வாங்கியவாறு.
அவளோ அதையெல்லாம் காதிலே வாங்கிக்கொள்ளவில்லை. அவனின் கத்தல்களையெல்லாம் கண்டுக்கொள்ளாதது போல் சனா செல்ல, ‘என்னை இம்சை பண்ண வந்த அரக்கிடீ நீ!’ என்று பற்களைக் கடித்து கோபத்தில் தரையை காலால் உதைத்தான் ரிஷி.
அதேநேரம், ரிஷியின் வீட்டிலிருந்து சனா வெளியேறுவதை தன் காரிலிருந்து பார்த்தவாறு அமர்ந்திருந்த மேக்னாவுக்கு ஆத்திரம் பெருகியது. ஆரம்பத்திலிருந்தே ரிஷியின் நடவடிக்கைகளை கவனித்திருந்தவள், இன்று ரிஷிக்கு தெரியாமல் அவனை தொடர்ந்து வந்திருந்தாள்.
ஆனால், ரிஷியோடு சனா உள்ளே செல்வதைப் பார்த்ததும் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை அவளால். அங்கேயே காத்திருந்தவள், ஒருகட்டத்திற்குமேல் முடியாமல் ரிஷிக்கு அழைத்திருந்தாள்.
ஆனால், அவனோ சனாவுடனான கலவரத்தில் துண்டிப்பதற்கு பதிலாக அழைப்பை ஏற்றிருக்க, ரிஷி பேசியது அத்தனையையும் கேட்டவளுக்கு அழுகையுடன் கூடிய கோபம்.
‘நீ என்னோட ரிஷி. உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன். என்மேல இருந்த காதல் எங்கடா போச்சு? முடியாது. நீ எனக்கு சொந்தமானவன். அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுட மாட்டேன்’ விழிகளிலிருந்து தன்னை மீறி வெளியேறிய கண்ணீரை துடைத்தெறிந்தவள், போகும் சனாவை பற்களைக் கடித்தவாறு பார்த்திருந்தாள்.
அன்றிரவே, வீட்டுக்குள் வேகமாக நுழைந்தவன், சோஃபாவில் அவனுக்காகவே காத்திருந்தவர் போல் அமர்ந்திருந்த ராகவனிடம் ஓடி, “சார், ஐ லவ் சனா.” என்று அவர் தலையில் ஒரு குண்டை போட, தூக்கிவாரிப் போட்டவராக அதிர்ந்துப்போய் எழுந்து நின்றுவிட்டார் அவர்.
“வாட்?” அவர் கத்த, “யெஸ் சார், ஐ லவ் ஹெர். ஐ மேட்லி லவ் ஹெர்.” என்றுவிட்டு ரிஷி தனதறைக்குள் சிரித்தவாறுச் செல்ல, சரியாக அவர் கையிலிருந்த அலைப்பேசி பெரிய சத்தத்தில் ஒலித்தது.
திரையைப் பார்த்தவருக்கு திரையில் தெரிந்த ‘மேகா’ என்ற பெயரில் எச்சரிக்கை மணி ஒலித்தாலும், அழைப்பு துண்டிக்கப்படுவதற்கு முன் அழைப்பை ஏற்று காதில் வைத்தார்.
மறுமுனையில், “அவனுக்கு வந்தது வெறும் ஈர்ப்பு. கண்டிப்பா ரிஷிக்கு அவமேல காதல் இல்லை. அவனோட காதலுக்கு சொந்தமானவ நான் மட்டும்தான். இதை என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும். அவ்வளவு சீக்கிரம் அவன என்னை விட்டு போக விட மாட்டேன்.” என்றுவிட்டு மேக்னா அழைப்பைத் துண்டித்திருக்க, ‘முருகா! ஏன் என்னை சோதிக்கிற? இப்போ என்ன நடக்கப் போகுதோ?’ என்று தலையிலடித்து புலம்பித் தள்ளிவிட்டார் ராகவன்.
அன்றிரவு ரிஷி, சனா, மேக்னா மூவருமே வெவ்வேறு மனநிலையில் தத்தளித்துக்கொண்டிருந்தனர். இப்படியே அன்றிரவு கழிந்து அடுத்தநாளும் விடிந்தது.
காலையிலேயே நேற்று கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை தனக்கு கடன்கொடுத்தவருக்கு கொடுத்துவிட்டு வந்து அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த சனா, தரையில் அமர கூட இல்லை அதற்குள் ஒரு அழைப்பு.
திரையில் தெரிந்த ரிஷியின் எண்ணில் பற்களைக் கடித்தவள், அதையேற்காது துண்டித்துவிட, மீண்டும் அழைப்பு வந்தது. அதில் ‘ச்சே!’ என்று சலித்துக்கொண்டு மீண்டும் அவள் துண்டிக்க, அவன் விட்டுவிடுவானா என்ன?
விடாது அவனும் தொடர்ந்து அழைக்க, ஓயாது அழைப்பைத் துண்டித்துக்கொண்டே இருந்தவள், ஒருகட்டத்தில் அவனின் எண்ணை அலைப்பேசியில் தடை செய்திருக்க, அடுத்த சில நிமிடங்கள் மழை பெய்து ஓய்ந்தது போன்று இருந்தது அவளுக்கு.
“கடல்நீரும் உப்புதான். கண்ணீரும் உப்புதான். உன்னை முன்னாடியே ப்ளோக் பண்ணாம விட்டது என் தப்புதான்.” என்று கடுகடுத்தவாறு அலைப்பேசியையே அவள் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, இப்போது ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதை புருவத்தைச் சுருக்கிப் பார்த்தவள், ‘யாரா இருக்கும்?’ உள்ளுக்குள் யோசித்தவாறே அழைப்பையேற்று காதில் வைத்து, “ஹெலோ…” என்று மெல்லிய குரலில் சொல்ல, அடுத்தகணம் மறுமுனையில் கேட்ட குரலில் அய்யோ என்றாகிவிட்டது அவளுக்கு.
“ஐ லவ் யூ!” என்று ரிஷி அவளின் குரலைக் கேட்டதுமே சொல்ல, கோபத்தில் அழைப்பைத் துண்டிக்கப் போனவள், “நான் வெளியிலதான் இருக்கேன். இன்னும் டூ மினிட்ஸ்ல என் கார்ல நீ இருக்கணும். இல்லைன்னு வை… அப்றம் ரிஷி வேதாந்த் உன் வீட்டுல இருப்பான்.” என்ற அவனின் வார்த்தைகளில் அதிர்ந்துப் போய்விட்டாள்.
இருந்தாலும், கோபம் உச்சத்தைத் தொட தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது, “என்னை வேணா பண்ணிக்க! என்னால வர முடியாது. முடியாதுன்னா முடியாது.” என்று கறாராகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், ‘அவன் கூப்பிட்டா போயிரணுமா? நான் சாணக்கியா. அவ்வளவு சீக்கிரம் அவன் பாஷா என்கிட்ட பலிக்காது.’ என்று சினிமா வசனங்களாக தனக்குள்ளேயே கெத்தாகப் பேசிக்கொண்டிருந்தாள்.
அதெல்லாம் சில கணங்கள்தான். சட்டென்று ரிஷியின் பிடிவாதம் ஞாபகத்திற்கு வர, ‘அடி ஆத்தீ!’ என்று நெஞ்சிலேயே கையை வைத்து அலறியவள், அடித்துப் பிடித்து வீதியை நோக்கி ஓட, அப்போதுதான் அவள் நினைத்தது போல சனாவின் வீட்டிற்கு செல்லவென கார்கதவை திறக்கப்போன ரிஷி, ஓடி வந்துக்கொண்டிருந்தவளை கண்ணாடி வழியாகப் பார்த்தான்.
அடுத்தகணம் விழிகளோடுச் சேர்த்து அவனிதழ்களும் வெற்றிப் புன்னகை புரிந்தன.
அவளுக்கோ அத்தனை கோபம். கோபமாக காரை அவள் நெருங்குவதற்குள் கதவை அவன் திறந்துவிட்டிருக்க, உள்ளே ஏறி “நீ எப்படி என்…” என்று அவள் பேசி முடிக்கவில்லை, சனாவின் முழங்கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தான் ரிஷி.
“எவ்வளவு தைரியம்டீ உனக்கு, என் நம்பரையே ப்ளோக் பண்ணியிருப்ப. என்ன, என்னை அவோய்ட் பண்றியா ம்ம்? இப்படி பண்ணா உன்னை விட்டு விலகிடுவேன்னு நீ எப்படி நினைக்கலாம்? என்னை விட்டு விலக ட்ரை பண்ணாத சாணக்கியா! அது உனக்குதான் ஆபத்து.” என்று ரிஷியின் வார்த்தைகள் மிரட்டலாக ஒலிக்க, அவளின் முழங்கையில் அவன் கொடுத்த அழுத்தத்தில் அவளுக்கு வலியே எடுத்துவிட்டது.
“ஸ்ஸ்ஸ் ஆஆ… விடு என்னை!” என்று வலியில் முணங்கியவாறு அவள் கையை இழுக்கப் போக, அவள் விழிகளில் தெரிந்த வலியில் பிடியை மெல்ல தளர்த்தியவன், “சோரிம்மா… என்ட், ஐ லவ் யூ!” என்று ஹஸ்கி குரலில் சொல்ல, அவனிடமிருந்து வெடக்கென்று விலகியமர்ந்தவள், “மண்ணாங்கட்டி! இதையெல்லாம் என்கிட்ட வச்சிக்காத. அதான் நேத்தே சொல்லிட்டேன்ல, இந்த கருமத்துமேல நம்பிக்கையில்லை, உன்னை எனக்கு பிடிக்கலன்னு. அப்போவும் எதுக்கு என்னை தொல்லை பண்ற? ச்சே! எனக்கு வர்ற கோபத்துக்கு…” என்று பற்களைக் கடித்துக்கொண்டு சனா சொல்லி முடிப்பதற்குள், “ஒன்னும் புடுங்க முடியாது.” என்றான் அவன் பட்டென்று.
அதில் அவனை முறைத்தவள், அலட்சியமாக ஏளனப் புன்னகையோடு ரிஷி தோளைக் குலுக்கியதும் எரிச்சலாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அதில் முகம் இறுகி, அவள் தாடையைப் பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்தியவன், “இதுக்கப்றம் இந்த மாதிரி சில்லித்தனமா பண்ண ட்ரை பண்ணாத! நீ என்ன பண்ணாலும் உன்னை விட்டு நான் விலக மாட்டேன். எனக்கு நீ வேணும் அவ்வளவுதான். யூஹேவ் நோ ஆப்ஷன்ஸ். நான் மட்டும்தான் உனக்கு ஒரே ஆப்ஷன். சோ… கெட் ரெடி ஃபோர் ஃபோலிங் இன் லவ்.” என்றுவிட்டு அவளிதழில் முத்தத்தைப் பதிக்க, சனாவோ அதில் அதிர்ந்து விழிகளை சாரசர் போல் விரித்துவிட்டாள்.
ஆனால், மறுகணமே சுதாகரித்து அவனிடமிருந்து திமிறியவாறு அவள் விலகி அவனை முறைக்க, இதழை நாவால் ஈரமாக்கி, “இப்போ போ!” என்று குறும்புச் சிரிப்போடு ரிஷி சொல்ல, “கண்டிப்பா இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உனக்கு இருக்குடா!” என்று கத்திக்கொண்டு மறுபடியும் எங்கு முத்தம் கொடுத்துவிடுவானோ என்ற பயத்தில் வேகமாகக் காரை விட்டு இறங்கினாள் சனா.
அவனும் சிரித்தவாறு அவளிதழை சுவைத்ததை ரசித்துக்கொண்டு அடுத்து சென்றது என்னவோ இயக்குனர் பிரபாகரனின் அலுவலகத்திற்குதான். ரிஷியின் கார் அலுவலகத்தின் முன் நிற்க, சரியாக அவனெதிர் இன்னொரு கார்.
அந்த கார் எண்ணைப் பார்த்ததுமே அது யாரென்று ரிஷிக்கு புரிந்துவிட, கூலிங் க்ளாஸை அணிந்தவாறு திரும்பியும் பார்க்காது அவன் உள்ளே நுழைய, அவன் தவிர்ப்பத்தை உணர்ந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாது அவனை ரசித்தவாறு பின்னால் சென்றவள், “ரிஷ்…” என்றுக்கொண்டே அவனை நெருங்கினாள்.
ஆனால் மற்றவர்களின் முன் காட்சிப்பொருளாக விருப்பமில்லாமல், “ஸ்டே அவேய் ஃப்ரொம் மீ!” என்று மெல்லிய குரலில் அதே சமயம் பற்களைக் கடித்தவாறு கோபமாகச் சொல்லி விலகிச் சென்றான் அவன்.
ஆனால், அவனிடம் பதிலுக்கு கோபப்பட முடியவில்லை அவளால். மேலும் மேலும் ரசிக்கத்தான் வைத்தது.
பின், இருவருமே பிராபகரனின் அலுவலகத்திற்குள் நுழைய, அங்கு அவரின் புதிய படத்திற்கான வேலைகள்தான் நடந்துக்கொண்டிருந்தன. பரபரப்பாக பலபேர் அவரின் கனவு திரைப்படத்திற்காக வேலைப் பார்ப்பதை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டே இருவரும் அவர் முன் சோஃபாவில் அமர்ந்திருக்க, அவரும் இவர்கள் இயக்க வேண்டிய பாடல்கள் தொடர்பில் தன் கற்பனையை சொல்லிக்கொண்டிருந்தார்.
“ரிஷி, மேகா உங்க இரண்டு பேரோட திறமைய பத்தி எனக்கு தெரியும். இது என்னோட ட்ரீம் மூவி. இதுல அத்தனை எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற சிங்கர்ஸ்ஸ செலக்ட் பண்ணாம உங்கள இதுக்காக தேர்ந்தெடுத்திருக்கேன்னா அதுக்கும் காரணம் இருக்கு. ஐ பிலீவ் யூ போத். கதையோட கான்செப்ட்டுக்கு ஏத்த மாதிரி உங்க வரிகளும் இசையும் இருக்கணும். என்ட்…” என்று பிரபாகரன் பேசிக்கொண்டே போக, ரிஷி அவர் சொல்வதை தீவிரமாகக் கவனித்துக்கொண்டிருந்தான் என்றால், மேகாவோ அவனின் அருகாமையில் அந்த தருணத்தை ரசித்தவாறு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“சீ யூ…” என்றுவிட்டு அவர் அடுத்த வேலைகளை கவனிக்கச் செல்ல, அலைப்பேசியை நோண்டியவாறு எழுந்து நகரப் போனவன், “லவ் யூ ரிஷ்!” என்று மேக்னா சட்டென்று முன்னால் வந்து சொன்னதும், எரிச்சலாக விழிகளை உருட்டினான்.
“ஷட் அப்!” என்று கடுகடுத்துவிட்டு அவன் நகர, “சோரி ஃபோர் எவ்ரிதிங். நாம வேணா மொதல்லயிருந்து ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டு அவன் முகத்தை ஆர்வமாகப் பார்த்தாள்.
அவனோ, “எது வேலையா?” என்று சலிப்பாகக் கேட்டு திரும்பப் போக, “நோ, நம்ம லைஃப் ரிஷ். நீ என்னை அளவுகதிகமா காதலிச்ச அந்த லைஃப் எனக்கு வேணும். அதை விட அதிகமா மறுபடியும் என்னை காதலிக்கணும். பண்ண தப்புக்கு பிரயாசித்தமா உன்னை உன்னை விட அதிகமா நான் காதலிக்கணும்.” என்று காதலாக வந்தன அவளின் வார்த்தைகள்.
அதில் ஒருகணம் அதிர்ந்து விழித்து, பின் வந்த கோபத்தை முயன்று அடக்கி, அவள் முகத்துக்கு நேரே மூச்சுக்காற்று படும் தூரத்திற்கு நெருங்கியவன், “ஜஸ்ட் ஸ்டோப் யூவர் ட்ரீமிங். ஐ அம் டன். என்ட்… ஐ லவ் சனா, கண்டிப்பா உனக்கு தெரிஞ்சிருக்கும்.” என்றுவிட்டு ஏளனமாகப் புன்னகைக்க, மேக்னாவின் விழிகள் திகைத்து விரிந்தன.
அது அவன் சனாவை காதலிப்பதை தெரிந்து அல்ல, அவளுக்கு ஏற்கனவே தெரிந்திருப்பதை அவன் அறிந்து வைத்திருந்ததிலே அவளுக்கு அதிர்ச்சி.
‘ஒருவேள இவனுக்கு தெரியுமோ?’ என்று அவள் உள்ளுக்குள் ஒன்றை நினைத்து அதிர்ந்து நின்றாலும் சட்டென சுதாகரித்து, “உன்னையே ஃபோலோவ் பண்ற எனக்கு ஏற்கனவே இது தெரிஞ்சிருக்குறதுல ஆச்சரியமில்லை. சோ… வெறும் அட்ராக்ஷன லவ்னு நினைச்சிக்கிட்டு டைம் வேஸ்ட் பண்ணாத பேபி!” என்றுவிட்டு அவனிதழை நெருங்க, அவளை விட்டு விலகி நின்று, “நான் ஒன்னும் பதினெட்டு வயசு ஸ்கூல் பையன் கிடையாது. எது அட்ராக்ஷன் எது லவ்னு தெரியாம வாழ்க்கைய தொலைக்க. என்ட் யூ இடியட், மைன்ட் யூவர் ஓன் பிஸ்னஸ்!” என்று பற்களைக் கடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
ஆனால், போகும் அவனையே பார்த்திருந்த மேக்னாவின் இதழில் சிரிப்பு மறைந்து முகம் இறுக, அவளுக்குள் பல குழப்பங்கள் சூடிக்கொண்டன.