தோளொன்று தேளானது 2(P)

TT copy-8ca648a9

தோளொன்று தேளானது! 2(Precap)

ஷ்யாமிற்காக வாங்கி வந்ததை எல்லாம் அவனது அலுவலக பேகில் இருந்து எடுத்து வெளியில் வைத்தான் ப்ருத்வி.

ஆவலின்றி பார்வையை அதில் செலுத்திய ஷ்யாம், “எனக்கு இதுப்போல லேப்தாப்தான் வேணும்” என ப்ருத்வியின் லேப்டாப் இருந்த பேகைத் தொட்டுக் காட்டினான்.

…………………

 “ஒதே போது. ஷாகூட என்ன பேச.  என்னால முதியல.  இனி நீ சாத்தர்டே லீவு போட்டுரு பித்துவீப்பா” என ப்ருத்வியிடம் கூறினான் ஷ்யாம்.

………………………..

சில இடங்களில் ஒரே ஊருக்குள் பணி கிடைத்தாலும், சிலரைக் கட்டாயமாகத் தவிர்க்க எண்ணியே கோவையைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.

***

……………………………………….

“நீங்க பழகுறதுக்கு ரொம்ப ஸ்வீட்டா இருக்கீங்க ஜேப்பி.  உங்களை இன்னைக்கு இங்க இருந்து ஊருக்கு அனுப்பவே மனசு வரமாட்டிங்குது” ஆங்கிலத்தில், ஜேப்பியிடம் தனது மனதில் உள்ளதை ஷிவானி பகிற

…………………………….

…………………………

சிரிப்பு மாறாமலேயே, “என் வயிஃப்கிட்ட உன்னைப் பத்திச் சொல்லி, ஒரு சான்ஸ் கேட்டுப் பாக்கறேன்.  அவ சரினு சொன்னா, கண்டிப்பா நீ சொன்னதை கட்டாயம் கன்சிடர் பண்ணலாம்” கண் சிமிட்டியவாறு ஷிவானியிடம் கூறினான் ஜேப்பி.

………………………………..

***

          ………………………..

“ஜேப்பி, நீங்க சொன்ன வர்க்கை உங்க டெட்லைன்கு ட்டூ டேஸ் முன்னாடியே முடிச்சிட்டேன்.  அதனால, அடுத்த வேலையக் கொண்டு வந்து, நீ ஆகா ஓகோன்னு சொல்லி, இதையும் நீதான் செய்யணும்னு ஐஸ் வச்சி ஏமாத்தி நான் அசந்தே நேரமாப் பாத்து எங்கிட்ட நீட்டக் கூடாது” சிரிப்போடு, கண்டிப்பாய் ஜேப்பியிடம் கூறுவாள்.

          “எப்டி சுமீ, நீ மட்டும் இவ்ளோ தெளிவா இருக்க?” ஜேப்பி

          ……………………………….

……………………..

 “அது” என நீண்ட நேரம் தயங்கியவன், “ஏன்னு தெரியலை.  சுமீய மனசு ஒரேடியாத் தொறத்துது.  நான் எவ்ளோ கன்ட்ரோல் பண்ணிப் பாத்தாலும், நோ யூஸ்” என்ற ஜேப்பியின் முதுகில் தட்டிக் குடுத்த கார்த்திக்,

“நம்ம வீட்டைப்பத்தித் தெரிஞ்சும் ரிஸ்க் எதுக்குடா” என்றதோடு, “வேணுனா..” எனத் துவங்கியவனை, அவன் என்ன கூற வருகிறான் என்பது புரிந்திட, அவன் கூறுமுன் முறைத்தே அடக்கினான் ஜேப்பி.

………………………..

பங்களூரில் வந்து இறங்கியவனை, சிவப்பிரகாசம் வரவேற்க, அவரை அங்கு எதிர்பார்த்திருந்தவன், அதிர்வைக் காட்டாது, “ஹாய் சிவா” என தாத்தாவை ஆரத்தழுவிக் கொண்டவனுக்குள் தாத்தாவின் வருகைக்கான காரணம் தெரிந்திருக்க, ‘இப்ப என்ன சொல்லித் தட்டிக் கழிக்கலாம்’ என மனம் பந்தயக் குதிரையாய் விரைந்தது.

***