நாணின்றி நாம் – 1

IMG_20220508_215725-a7b31e5a

நாணின்றி நாம்   

“யாரோ சொன்னதா ஞாபகம்.. ஹோப் ஃபார் லவ்!! ஃபீல் ஃபார் லவ்!! ட்ரீம் ஃபார் லவ்!! பட் நெவர் புட் யுவர் லைஃப் டூ ஹோல்ட் ஃபார் லவ்!! இந்த டிக்ஷனரி தியரி எந்த அளவுக்கு பாஸிபிள்?? லைக் கனவோ பேஷனோ இருக்குறவங்க அதுல இன்வால்வ்மென்ட் இல்லாம இருந்தா அச்சீவ் பண்ண முடியாது.. இன்வால்வ்மென்ட்ன்ற விஷயம் எந்த எக்ஸ்ட்ரீம்க்கும் போக சொல்லும் தானே.. இந்த கான்செப்ட் காதலுக்கு கிடையாதா??”                                                                                          

வாசலில் ஆளரவம் தெரிந்ததும் வாய்ஸ் ரெக்கார்டரை சட்டென பாஸ் செய்தான் அவன்..  

“பாஸ்..” என்று ஹரி கூவிக்கொண்டு வராமலிருந்திருந்தால் முழுதாய் பேசி முடித்திருக்கலாம்.. அதுதான் வந்துவிட்டானே.. வேறு வழி.. நேரம் கிடைக்கும் பொழுது ரிசியூம் செய்து கொள்ள வேண்டியதுதான்..  

‘லவ் தியரி’ பற்றி மூச்சு முட்ட பேசுவதற்கு அவன் லவ்குருவோ ஆர்ஜேவோ இல்லை.. ஐ ட்ரின்க் (I Drink) கஃபேயின் ஒரே ஒனர்.. ப்ருத்வி ராஜ்..

தனக்கு தானே வாய்ஸ் ரெக்கார்ட் செய்து, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் செவிட்டு மிஷினில் திரும்ப திரும்ப கேட்கும் பழக்கம் கொண்ட பாஸை தொந்தரவு செய்ததோடு “கொஞ்சம் அர்ஜென்ட்..” என்று கண்களை சுருக்கினான் ஹரி..

“சொல்லு..” என்பது போல ப்ருத்வியும் போனை பாக்கெட்டில் பத்திரப்படுத்திவிட்டு திரும்ப, “காலையிலேயே சொல்லியிருந்தேனே.. சந்தியாவுக்கு பர்த்டே.. இன்னைக்கு ஈவ்னிங் பார்ட்டி அரேஞ் பண்ணியிருக்குறாங்களாம்.. அந்த சந்தோசத்தோட எங்க விஷயத்தையும் வீட்ல சொல்லிடலாம்னு இருக்குறோம்.. பாஸ் பெர்மிஷன் கொடுத்தா இப்படிக்கா போயிட்டு அப்படிக்கா வந்துடுவேன்..” முன்வரிசை பல்லை காட்டினான் ஹரி..

“நல்ல விஷயம் தான்.. ஆனா நைன் தேர்ட்டிக்கு மேல பெர்மிஷனா?? டியூட்டி டைம் முடியிறதுக்கு வேற இன்னும் ஹாஃப் அன் ஹார் இருக்குது..” என மோவாயை தேய்த்தபடியே கடிகாரத்தை நோக்கியவனை,

“ரொம்ப யோசிக்காதீங்க பாஸ்.. அப்புறம் நோன்னு தான் சொல்லுவீங்க.. எல்லா ஆர்டரும் அல்மோஸ்ட் முடிஞ்சிருச்சு.. லாஸ்ட் ஆர்டர் ப்ளாக் காபி வித் சீஸி பால்ஸ்.. இப்ப தான் எடுத்துட்டு போனேன்.. ஏழேழு தலைமுறைக்கு வேணாலும் உங்ககிட்டயே வேலைக்கு சேர்ந்துடுறோம்.. ஒரு ஹாஃப் அன் ஹார்.. ப்ளீஸ் பாஸ்.. லவ் பாஸ்.. ஃபியூச்சர் பாஸ்..” முடியாதென சொல்வதற்கு இடங்கொடாமல் இழுத்து இழுத்து பேசினான் ஹரி..

“இட்ஸ் ஓகே.. நீ கிளம்பு.. நான் பார்த்துக்குறேன்..” அதிசயத்திலும் அதிசயமாய் ஒத்துக்கொண்ட ப்ருத்வியை ஆச்சரியமாய் நோக்க நேரமின்றி ஏப்ரானை கழற்றி மடித்தும் மடிக்காமலும் கபோர்டில் திணித்து விட்டு உடையை மாற்றினான்..

முன் நெற்றியில் படர்ந்த நாலு முடியை நாலாயிரம் தடவைக்கு மேல் கோதிக்கொண்டு, “பாஸ், ஓகே வா??” என கேட்டவனை “டேய், ஃபர்ஸ்ட் பர்த்டே பார்ட்டிக்கு உருப்படியா போய் சேரு..” என மிரட்டாத குறையாய் விரட்டினான் ப்ருத்வி..

வாசல் வரைக்கு சென்று, “பர்த்டே பார்ட்டின்னு சொல்றேன்.. அடுத்த வாரம் ரெடி பண்ணி வச்சிருக்குற கப்பிள் கூப்பனை என் சார்பா பர்த்டேக்கு ப்ரெசென்ட் பண்ணுன்னு சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்.. ப்ச்.. எனக்காக இல்லைன்னாலும் உங்க தங்கச்சிக்காகவாவது செஞ்சிருக்கலாம்..  சரியான கஞ்சம் பாஸ் நீங்க..” சிலிர்த்து கொண்டான் ஹரி..

“கிஃப்ட்டெல்லாம் தானா தரணும்.. வழிப்பறி பண்ண கூடாது.. நீ காதல் பண்ணி கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்த என் கஃபே தான் கிடைச்சிதா?? இல்ல என்கிட்ட கேட்டுட்டு தான் காதலிச்சியா.. வரவு செலவை என் தலையில எழுதிக்குறதுக்கு..” என்றிடவும்,

“ன்னா பாஸ்??” என பாவமாய் பார்த்தான் ஹரி..

”போடா போ.. நாளைக்கே உன் மாமனார் குடும்ப பிஸ்னஸ எடுத்து நடத்துன்னு சொன்னா பூம்பூம் மாடு மாதிரி மண்டையாட்டாம இரு.. அது போதும்..”

“அதுனால தான் உங்க லவ் புட்டுக்கிச்சா பாஸ்..”

“மருந்து ஒன்னு இருக்குது… குடிக்கிறியா??”

“வேணாம் பாஸே.. நீங்க போடுற டீயே பத்து நிமிஷத்துல பாய்சன் தான்.. என் தலையை அடகு வச்சா கூட பத்து காசுக்கு பெறாது.. கல்யாணத்துக்கு பொண்ணையும் வேலைக்கு கம்பெனியையும் தந்தா வேணாம்னு எந்த பைத்தியக்காரன் தான் சொல்லுவான்…”

“ஏய், வரவர உனக்கு வாய் கூடிட்டே போகுது..”

“சம்பளத்தை தான் கூட்ட மாட்றீங்க.. என் வாயாவது கூடிட்டு போகட்டும்.. உங்க சொந்த கதை சோக கதையில இருக்குற சூனியத்தை எடுத்து என் லவ்வுக்கு செய்வினை வைக்குறதுக்குள்ள நான் கிளம்புறேன்ப்பா..” பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடியே விட்டான்..  

ஹரியை நினைத்து சிரித்தபடியே, ‘மைல்ட் பிஜிஎம்..’ ஒன்றினை ஆன் செய்து ஏப்ரானை மாட்டிக்கொண்டவன், சிம்னியில் ஒட்டப்பட்டிருந்த ஆர்டர்களை கசக்கி டஸ்ட் பின்னில் சேர்த்து விட்டு, சுத்தம் செய்ய துவங்கினான்..

“லவ் இஸ் அ கைன்ட் ஆஃப் டிஸ்ட்ராக்ஷன்.. அந்த டிஸ்ட்ராக்ஷன் கரியரையும் பேஷனையும் மட்டும் தான் அஃபெக்ட் பண்ணுமா?? சப்போஸ் ஒவ்வொரு நாளும் வர்ற கவலை கஷ்டம் கண்ணீரோட வலியை டிஸ்ட்ராக்ட் பண்றதுக்காக இருக்கலாமில்லையா?? காதல்ன்ற சரியான ஒரு ஃபீலிங்க்ஸ நாம தப்பா புரிஞ்சிகிட்ட ஒரு காரணத்துக்காக அவாயிட் பண்றதுல நியாயமே இல்லை..” முன்னர் பாஸ் செய்திருந்த ரெக்கார்டை தொடர்ந்தான்..

தொளதொள ப்ளோரல் டாப்பும் ஸ்கின்னி ஜீன்ஸில் செதுக்கப்பட்ட சிலையாய் வந்திறங்கிய அக்ஷராவின் அடையாளமாய் சிணுங்கி அடங்கியது வாடிக்கையாளர்களுக்காக வாசலில் கட்டப்பட்டிருந்த மணி..

ஏர்டலின் திடீர் சிக்னல் கிடைத்த போனாக நிமிர்ந்த ப்ருத்வி, அவனுக்கான சிணுங்கல்களின் ஆயுட்காலம் அழிந்து காலங்கள் பல கடந்துவிட்டன என்ற உண்மை ஒரு நிமிடம் எட்டிப்பார்க்கவும் தன்னை அடக்கினான்..

கவுண்டரில் போடப்பட்டிருந்த நீளச்சேரில் ஏறி அமர்ந்தவளின் முகத்தில் இரண்டு இன்ச் பொலிவு கூடியிருந்தது..

ஹேர்ஸ்டைலில் ஆரம்பித்து ஹைஹீல்ஸ் வரை அப்டேட் செய்திருந்தாலும், புன்னகையை வம்படியாக இன்ஸ்டால் செய்யாமல் விட்டிருந்தாள்.. இவனை பார்ப்பதற்கு இது ஒன்று தான் கேடென நினைத்திருக்கலாம்..

“ரெண்டு குடும்பம் சேருது.. நாலு மனசு ஒத்துபோகுதுன்றதுக்காக எல்லாம் என்னால என்னை இழக்க முடியாது.. வாழ்க்கைக்கு எல்லாமே தேவை தான்.. அதை அனுபவிக்குறதுக்கு நாம இருக்கணுமே.. எல்லாரும் ஆசைப்படுற மெட்டீரியலா என்னால இருக்க முடியாது.. அப்படி ஒரு மாப்பிள்ளை மெட்டீரியல் கிடைச்சா.. நல்லா இருப்ப.. கல்யாணத்த பண்ணிக்கோ.. என்னை ஆளை விடு..” கடைசியாய் அவளை நோகடித்த வார்த்தைகள் அனிச்சையாய் நினைவில் கிளம்பியது..

“ம்க்கும்..” செருமி கவனத்தை ஈர்த்தவள், “ப்ருத்வி..” என்றதில் அழுத்தம் கொடுக்கவும், “சொல்லு அக்ஷு.. ஸாரி.. அக்ஷரா..” பழகிப்போன நாவை திருத்தினான்..

“நெக்ஸ்ட் வீக் என்னோட மேரேஜ்..”

“கங்கிராட்..” அவன் முடிக்கவில்லை..

“தேவையில்லை.. நீ விஷ் பண்ணினாலும் பண்ணலைன்னாலும் நான் நல்லா இருக்க போறது உறுதி.. ஏன்னா நான் உன்கூட வாழப்போறதில்லையே.. சோ சந்தோசமா தான் இருப்பேன்..” என்றாள் சற்றே கர்வமாக..

“இப்போவாவது புரிஞ்சிதே..” அவளின் நல்ல மனநிலையை உரசி பார்ப்பதற்காகவே மெலிதாய் சலித்திட,

“உண்மை தான்.. வாழவே தெரியாத ஒரு செல்பிஷ் கூட வாழறதுக்கு வாய்ப்பேயில்லை.. தான் வாழவும் மாட்டான்.. அடுத்தவனை வாழவும் விடமாட்டான்.. லேட்டா புரிஞ்சிக்கிட்டாலும் சரியான நேரத்துல  ஒரு டெசிஷன் எடுத்து தப்பிச்சிட்டேன்..” சந்தோஷ பெருமூச்சிட்டு கொண்டாள்..

மேலும் “மேரேஜ்க்கு வந்துடுன்னு சொல்லமாட்டேன்.. உன் இஷ்டம்.. ஆனா வந்தாலும் சரி வரலைன்னாலும் சரி.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. இன்வைட் பண்ணியிருக்கிற ஒரு பாதி, ஆயிரம் பேர்ல நீயும் ஒருத்தன் அவ்ளோ தான்.. என்னை பொறுத்தவரை நீ அந்த இடத்துல தான் இருக்குற.. உனக்கு மட்டும் தான் நீ பெரிய அப்பாட்டக்கர்.. மத்தபடி ஒன்னுமேயில்லை” அவனின் தன்மானத்தை சீண்டி அவன் கொதிக்கும் அழகை காண்பதற்காகவே காத்திருந்தது போல தெரிந்தது..

அவனோ நேர்மாறாய் அமைதியாக அவளின் முகத்தில் தெறிக்கும் மாற்றங்களை அவதானித்து கடைசி வார்த்தையில் மட்டும் புருவத்தை ஏற்றி இறக்கி, “லெட்ஸ் ப்ரேக்அப் அக்ஷரா..” என்றதும், எதிரில் நின்றவளுக்கு சப்தநாடியும் குழறியது.. ச்சே.. குழம்பியது..

“நீயென்ன லூசா?? கல்யாணம் பண்ணிக்க போறவ கிட்ட ப்ரேக்அப்னு சொல்ற..” எரிச்சலாய் முகத்தை சுருக்கிட, “இவ்ளோ நேரம் நீ பேசுனதை எல்லாம் அமைதியா தான கேட்டுட்டு இருந்தேன்.. சினிமா டயலாக் மாதிரி க்ரிஞ்ச் க்ரிஞ்சா பேசுறியேன்னு கேவலமா கமென்ட் பண்ணினேனா?? இல்லைல.. அப்ப இதையும் கேளு..” ஸ்டைலாக டேபிளில் துள்ளி அமர்ந்தான்..

“அன்னைக்கு உங்க மம்மி போட்டு தந்த மசாலா காபியை குடிக்க முடியாம குடிச்சுட்டு நம்மளோட மூணு வருஷ லவ்வை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம உங்க அப்பாக்கிட்ட வேணாம்னும் உனக்கு பெரிய கும்பிடும் போட்டுட்டு வந்துட்டேனே.. ஞாபகமிருக்குதா?? ஆனா அதுக்கு அப்புறம் லைட்டா உண்மைகள் புரிஞ்சிது.. நான் தப்பு பண்ணிட்டேன்..” ஒரு நிமிடகேப் விட்டு பின் தொடர்ந்தான்..

“ஸ்டார்டிங்ல ப்ரொபோஸ் பண்ணி நம்ம லவ்வை கன்பார்ம் பண்றோம்.. அதேமாதிரி பிரியுறதுக்கு ப்ரேக்அப் சொல்லணும் தானே.. இங்க ரெண்டு பேரும் சொல்லிக்கல… அப்ப என்ன அர்த்தம்?? இவ்ளோ நாள் நம்ம பேசிக்காம பிரிஞ்சு இருந்தாலும் லவ்வர்ஸ் தான்.. ரிலேஷன்ஷிப்ல இருக்கும் போதே என்னை மதிக்காம இன்னொருத்தனோட கமிட் ஆனது நீ.. கூகிள் பேவ கூட விட்டு வைக்காம எல்லா சோஷியல் மீடியாவுலயும் ப்ளாக் பண்ணினது நீ.. கிப்ட்ஸ திரும்ப அனுப்ச்சதும் நீ.. இப்ப நீ தான் என்னை சீட் பண்ணிருக்குற.. சோ இந்த ப்ருத்வி ராஜ்.. இந்த நிமிஷத்துல இருந்து அந்த அக்ஷராவை ப்ரேக்அப் பண்றான்..”

ப்ருத்வி பேசிய பேச்சில் அவள் தலைசுற்றி கீழே விழாமல் இருந்ததே ஆச்சரியம் தான்.. தோசையை திருப்பி போட்டு பேசலாம்.. இவன் மொத்த தோசை கல்லையே திருப்பி விட்டான்..

படிப்பை முடித்ததும் தன்னுடைய பிஸ்னஸயே எடுத்துக்கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக வந்துவிடலாமே என்று அக்ஷராவின் தந்தை ஆஃபர் கொடுக்கும் பொழுது கஃபே பஃபே என ஐடியாக்களை கூறியதும் இவனே..

இருவரின் ஐடியாக்களும் இடியாப்பமாய் சுற்றிக்கொண்டு அக்ஷராவின் கழுத்தை நெரிக்க, அசால்ட்டாக ‘நீயும் வேண்டாம்.. உன் காதலும் வேண்டாம்..’ என்று தூக்கி போட்டு சென்றவனும் இவனே..

இப்பொழுது உருகி உருகி காதலித்து கொண்டிருந்தவனை சட்டை செய்யாமல் சென்றது போலவும் இவளுக்காக காத்திருந்தவனை ஏமாற்றி விட்டு இன்னொருவனுடன் பறந்து சென்றது போலவும் கதையையே திருப்பி விட்டான்..

பதில் பேச வழியின்றி நறநறவென பற்களை கடித்துக்கொண்டு, “கெட் லாஸ்ட்..” என்று திருப்பிக்கொண்டு போனவளை “ஹே, அக்ஷு..” சொடுக்கிட்டு அழைத்தான்..

“மேரேஜ்கெல்லாம் வர முடியாது.. அந்த மாப்பிள்ளை மெட்டீரியல் என்னை பத்தி விசாரிச்சா ஏமாந்து போன இடத்துல வந்துட்டு ஏக்கமா பார்த்துட்டு நிக்குறதுக்கு விருப்பமில்லையாம்.. மேரேஜ் கிப்டா ஐட்ரின்க்கோட கப்பிள் ஆஃபர் குடுக்குறானாம்னு சொல்லிடு..” அவளின் கொஞ்சநஞ்ச ஈகோவையும் கிளறிவிட்டான்..

முகம் சிறுத்து தலைகவிழ்த்தி சென்றவளையே பார்த்து நின்றவன், விரிவாய் இதழ் விரித்தான்..  

அடுத்த நொடியே கடிகார முட்களை காலில் கட்டிக்கொண்டு மறுநாளுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைப்பதும் ஸ்டாக் கணக்கையும் சரிபார்ப்பதுமாக இருந்தவனுக்கு ஹரியின் வேலையும் சேர்ந்து கொண்டது..

கடைசி டேபிளில் சென்று, “எக்ஸ்கியூஸ் மீ.. கஃபே க்ளோசிங் டைம்.. உங்க ப்ளாக் டீயை குடிச்சு முடிஞ்சிட்டீங்கன்னா.. அப்படியே கிளம்பிட்டீங்கன்னா லைட் ஆப் பண்ணிட்டு லாக் பண்ணிடுவேன்.. நானும் சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம்.. ப்ளீஸ்..” கஃபேக்குரிய கனிவான குரலில் கேட்டுக்கொண்டு, வெளிகேட்டை பூட்டும் பொழுது மணி பத்தை தொட்டது..

பழைய யமாகா பைக்கை ஸ்டார்ட் செய்த போது பக்கத்து பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த நபரை ஹெட்லைட்டின் வெளிச்சத்தில் கண்டுகொண்டவன் சாவியை எடுத்துவிட்டு சைட் ஸ்டாண்டிட்டு சாய்ந்து நின்றான்..

கிட்டத்தட்ட கால்மணி நேரம் இருக்கலாம்.. ஆட்டோவோ டாக்சியோ வருவது போல தெரியவில்லை..

மெல்ல நடந்து சென்று “என்னோட கஃபே பக்கத்துல தான்  இருக்குது.. ரொம்ப நேரமாவே கவனிச்சுட்டு இருந்தேன்.. யாருக்கோ வெயிட் பண்ற மாதிரி தெரியுது.. அன்டைம்ல இந்த மாதிரி இடத்துல தனியா நிக்குறது ஷேப்டி இல்லை.. எனக்கும் பைக் பஞ்சர்.. மெக்கானிக் வர்ற வரைக்கும் இங்கயே இருக்குறேன்..” என்றபடியே சற்று தள்ளி அமர்ந்தான்..

“தெரியும்.. ஓலா புக் பண்ணியிருக்குறேன்.. டென் மினிட்ஸ்ல வந்துடும்.. தேங்கியு ஃபார் யுவர் கன்செர்ன்..” அளவாய் ஒரு புன்னகை அவளிடத்தில்..

அழகு எங்கிருப்பினும் ஆராதிக்க வேண்டுமென்பவன் அருகிலிருப்பவளை அளக்க தொடங்கினான்..

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!