நான் உன்னை ப்ரேமிஸ்துன்னானு 1 டீசர்

IMG-20211003-WA0016-7211aec1

நிஹாரி-1

ஹைதராபாத்!

இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக்கூடங்களையும் பெரும்
வளர்ச்சியையும் உள்ளடக்கிய மாநகரம்.

உலகின் மிகப்பெரிய திரைப்படப் படிப்பகமான ராமோஜி திரைப்பட நகரமும், உலகின் மூன்றாவது இடத்தில் வசிக்கும் பெரிய தொழிற்சாலையான, ‘டோலிவுட்’ என்று பெயர்பெற்ற ஆந்திரத் திரைப்படத்துறை அமைந்துள்ளது.

தெலுங்கர்களுக்கு திரைப்படங்கள் என்றால் அவ்வளவு பிடித்தம் என்பதை இங்கு யாருக்கும் சொல்லத் தேவையில்லை. அவர்களின் திரைப்படங்களும் அள்ளித்தெளித்த கரம் மசாலாவாக இருக்க, அங்கிருக்கும் நடிகர்களுக்கு ரசிகர்கள் பஞ்சமில்லை.

ஹீரோவின் மாஸ் என்ட்ரியும், இரண்டு ஹீரோயின்களைக் கொண்ட கதையும், படத்தின் தொடக்கத்தில் ஹீரோவின் அசத்தலான சில சமயம், ‘என்னடா இது?’ என்ற சண்டைகளும், தவிக்க வைக்கும் குடும்ப சென்ட்டிமென்ட் காட்சிகளும், இடையிடையே வரும் நகைச்சுவைகளும், ஆடத்தூண்டும் பாடல்களும் என்று அறுசுவை போல அத்தனை கலவைகளும் தெலுங்கு படங்களில் உண்டு என்பதை மறக்க இயலாத கூற்று.

அவர்களது ஹீரோவின் டான்ஸிற்கும், கண் அசைவிற்கும், பன்ச் டயலாக்ஸிற்கும் வரும் விசில்களும், கைத்தட்டல்களும் வார்த்தைகளால் சொல்ல இயலாத ஒன்று. முதல் நாள் முதல் காட்சி உள்ளே சென்றவர்களுக்கு வெளியே வரும்போது காது கேட்குமா என்று கேட்டால் சந்தேகம் தான். அப்படியொரு சினிமா பிரியர்கள்.

இன்றும் அதேபோல திரையரங்குகளில் ஒரு முன்னணி ஹீரோ, ஹீரோயினின் படம் வெளிவந்திருக்க திரையரங்கே கலைகட்டிக் கொண்டிருந்தது. அதுவும் காலை நான்கு மணிக்கே ரசிகர்கள் காட்சி வைத்திருக்க, சொல்லவா வேண்டும்!

இரவே திரையரங்கு சென்று கொட்டம் அடித்துக்கொண்டிருந்தனர் நம் நாட்டை வல்லரசாக்க வேண்டிய இளைஞர்கள்.

நான்கு மணிக் காட்சியை முடித்துக்கொண்டு ஏழு மணிக்கு வெளியே வந்த ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய கருத்தைக் கேட்க, அந்த முன்னணி நாயகனின் ரசிகர்கள் அனைவரும் சூப்பர் டூப்பர் கருத்துக்களைத் தெரிவிக்க, படம் மெகாஹிட் என்பதை அங்கு நின்றிருந்த நந்தினி அறிந்துகொண்டு தன் அலைபேசியை எடுத்து ப்ரொடியூசருக்கு அழைத்தாள்.

ப்ரொடியூசர் என்றால் பெரிய கண்ணாடியை மாட்டிக்கொண்டு வெளியே வந்த தொப்பையும், தலையில் வழுக்கையும் விழுந்த நாற்பத்தைந்து வயதுடைய ஒருவர் அல்ல.

To be continued…