நான் பிழை… நீ மழலை..!
நான் பிழை… நீ மழலை..!
நான்… நீ…23
மசக்கையின் அயர்வும் கணவனின் கோபத்தை கண்ட கலக்கமும் சேர்ந்து தேஜஸ்வினியை மயக்கத்தில் தள்ள, வழக்கம் போல அவளைத் தாங்கிக் கொள்ளும் தூணாகி நின்றான் ஆதித்யரூபன்.
அவளை தூக்கிக் கொண்டு அவளறையில் படுக்க வைத்து மயக்கம் தெளிவித்த பிறகே நிமிர்ந்தான். காயமும் அவனே… காப்பானும் அவனே!
கண்களால் அனைவரையும் கடிந்து கொண்டாலும் மனைவியின் அப்போதைய தேவையை கவனிப்பதில் முகம் சுணங்கவில்லை.
“அக்காவுக்கு ஜூஸ் ஏதாவது குடு மனு!” எனக் கூறியவனுக்கே அந்த அறையில் நிற்க முடியவில்லை.
வெயிலின் தாக்கத்தால் மின்விசிறியில் காற்றும் உஷ்ணத்துடன் வந்து அனலைக் கக்கியது. எந்நேரமும் ஏசியில் இருப்பவனுக்கு இதுவே பெரும் அவஸ்தையாகிப் போக, அதே பார்வையில் மனைவியைப் பார்த்தான். அவளுக்கு அத்தனை கஷ்டமில்லை. ஆனால் சற்றே அசௌகரியம் உணர்ந்தாள்.
“இந்த வெக்கையில கெடந்து வேகுறதுக்கு தான் வீம்பு பிடிச்சு இங்கே வந்தியா?” ஆதி கடுப்புடன் கேட்க, முகம் சுழித்த தேஜு, அசதியில் கண்களை மூடிக் கொண்டாள்.
“அக்கா, ஜுஸ் குடிச்சிட்டு படு!” மனு அவளுக்கு பழச்சாறை கொடுக்க, விருப்பம் இல்லாமல் குடித்து, அதையும் வெளியில் எடுத்துவிட்டே வந்து தலையைச் சாய்த்தாள்.
இந்த இடைவெளியில் நகுலும் ராஜசேகரும், மகளின் அறையில் ஆதி சௌகரியமாய் இருப்பதற்கென நாற்காலியும், டேபிள் ஃபேனும் கொண்டு வந்து வைக்க, ‘ரொம்ப தேவைதான்’ என்ற பாவனையில் பலமான முறைப்பையே பரிசாக வழங்கினான்.
“மாமாக்கு ஏலக்காய் டீ போட்டு குடு மனு!” தங்கையிடம் சொன்ன தேஜு, தம்பியிடம், “அமுதசுரபில மஸ்ரூம் பிரியாணியும், வெஜ் மீல்ஸும் ஆர்டர் போடு டா!” என சோர்வுடன் கூறினாள்.
அத்தனை சோர்விலும் கணவனை கவனிப்பதில் அவனுக்கு விருப்ப உணவை வரவழைத்து உபசரிப்பதில் தயக்கம் கொள்ளவில்லை.
“அதை நான் பார்த்துக்கறேன் தங்கம்… நீ நிம்மதியா ரெஸ்ட் எடு!” ராஜசேகர் கூறவும்,
மனுவும் உடன் சேர்ந்து, “வீணா அலட்டிக்காதே க்கா… நீ தூங்கு… நான் பார்த்துக்கறேன்!” என்றவள் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு தம்பி, தந்தையை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அனைவரும் வெளியில் சென்றுவிட, தேஜுவின் தலையை ஆதுரமாக தடவிக் கொடுத்தான் ஆதி.
“என் மேலே உள்ள கோபத்தை இங்கே வந்து கஷ்டபட்டு இருந்துதான் காமிக்கணுமா?” ஆதங்கத்துடன் கேட்க, சலிப்பாக பார்த்தாள் தேஜு.
“இது நான் பிறந்து வளர்ந்த வீடு. எனக்கு இங்கே கஷ்டம் எதுவும் இல்லை.” கடுப்புடன் அவள் பதிலளிக்க,
“ஆனா உன்னால சமாளிக்க முடியல… அது நிஜம் தானே?” ஆதி சட்டென்று கேட்க, திணறிப் போனவளாக தடுமாறியவள்,
“நீங்களா எதையும் கற்பனை பண்ணிக்க வேணாம். இரண்டுமாச புகுந்த வீட்டு சொகுசு, இருபத்திரண்டு வருஷ பிறந்த வீட்டு பழக்கத்தை மறக்க வைச்சிடாது!” முறுக்கிகொண்டு பதில் கூறினாள்.
அவளின் வார்த்தையில் முறுவலித்தவனாக, “நம்ம பேபிக்கு இந்த இடம் புதுசு டி… அதான், உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தி வைக்குது. நம்ம வீட்டுல இருக்கறதை விட இங்கே அன்கம்ஃபர்டபிளா ஃபீல் பண்றியா இல்லையா?” விடாமல் கேட்க, பெருமூச்சுடன் தளர்ந்து போனாள் தேஜு.
“உங்க ஹிட்லர் ரூல்சை ஃபாலோ பண்ணி அங்கே இருக்கிறதை விட இங்கே ஹாப்பியா, ஃப்ரீயா இருக்கேன்! எங்க வீட்டை குறை சொல்றதை இதோட நிறுத்திக்கோங்க…” படபடப்புடன் கடுத்து பேசவும்தான் அமைதியானான்.
“குறை சொல்லணும்னு சொல்லல தேஜுமா… நம்ம வீட்டுக்கு வந்துடுடா… நீ இல்லாம எனக்கு மூச்சு முட்டிப் போகுது. ப்ளீஸ் எனக்காக… நம்ம பேபிக்காக!” என்றவனின் வார்த்தைக்கு அசதியான பார்வையே பதிலாக இருந்தது.
“நீ தூங்கி ரெஸ்ட் எடு… அப்புறம் பேசலாம்.” என்றவன் தனக்காக வைத்த டேபிள் ஃபேனை அவள் பக்கம் திருப்பி விட்டு, அவள் நன்றாக உறங்க ஆரம்பித்த பிறகே அறையை விட்டு வெளியே வந்தான்.
ஹாலில் அமர்ந்திருந்த ராஜசேகர், “மனு, மாமாக்கு டீ கொண்டு வந்து கொடுடா!” சொன்ன மறுகணமே, தேநீரை கொண்டு வந்து கொடுத்த மனு,
“அக்காவுக்கு உங்கமேல ரொம்ப கேரிங் மாமா!” கேலியை ஆரம்பிக்க, புரியாது முழித்தான் ஆதி.
“அவ்வளவு அசதியிலேயும் உங்களுக்கு பிடிச்ச டீ போடச் சொல்லி, உங்க டேஸ்டுக்கு ஏத்த மாதிரி சாப்பாடும் ஆர்டர் போட சொன்னால்ல… அதை சொல்றா மாமா!” நகுலும் சேர்ந்து கொள்ள,
“அதுல உங்களுக்கு பொறாமை கூடிப்போச்சா?” ஆதியும் அவர்களின் கிண்டலில் சேர்ந்து கொண்டான்.
“இருக்காதா பின்னே! எங்கக்கா அவ்வளவு ஈசியா யாரையும் அக்செப்ட் பண்ணிக்க மாட்டா… அப்படி அவ ஒட்டிகிட்டா அல்வாத்துண்டு மாதிரி தானா போயி வழுக்கி விழுந்துடுவா! சம்திங் யூ ஆர் கிரேட் மாமா… அப்பப்போ எங்களையும் கவனிக்கச் சொல்லுங்க!” வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு மனு பெருமை பீற்றிக் கொள்ள, சிரிப்புடன் அவர்களுடன் பேச்சில் கலந்தவனாக, வீட்டை கண்களால் அளக்கத் தொடங்கினான் ஆதி.
சற்றே பெரிதான ராஜசேகரின் வீடு முழுவதும் பற்றாக்குறையின் சாயல் ஒட்டிக் கிடந்தது. நேர்த்தியாக இருந்தாலும் நிறம் வெளுத்துப் போன திரைச்சீலைகள், அங்கிருந்த நான்கு அறைகளிலும் பழுதாகி கிடந்த ஏசி மிஷின்கள், ஓடாத பிரிட்ஜ் இன்னும் எத்தனை எத்தனையோ… அந்த வீடு முழுவதும் நிறைந்திருந்தது.
அத்தியாவசியத் தேவைகள் எதுவோ அவற்றை மட்டும் இழுத்துக் கட்டி உபயோகப்படுத்தி வருகின்றனர் என்பதை பார்வையாலேயே புரிந்து கொண்டான் ஆதி.
திருமணம் முடிந்து ஒரே ஒருமுறை, அதுவும் இரண்டு மணிநேரம் மட்டுமே மாமனார் வீட்டுக்கு வந்து சென்றவன் அப்போது இந்த ஆராய்ச்சியை எல்லாம் மேற்கொள்ளவில்லை.
மனைவியை தேனிலவிற்கு அழைத்து செல்லும் அவசரத்தில் இருந்தவன், ஒருவேளை விருந்தினை மட்டும் அரைகுறையாக முடித்துக்கொண்டு அவளோடு கிளம்பி விட்டான்.
அதன் பிறகும் மனைவியிடம் பிறந்த வீடும், அங்குள்ள உறவுகளும் எப்படி என்றெல்லாம் விசாரிக்க நேரமில்லை என்று சொல்வதை விட, அவனுக்கு கேட்டுத் தெரிந்து கொள்ளத் தோன்றவில்லை என்பதே உண்மை என்ற தனது நிலையே ஆதிக்கு வெட்கம் கொள்ள வைக்க, முதன்முதலாக தனது சுயநலத்தை வெறுத்தான்.
இதுநாள் வரையில் மனைவிக்கு பிடித்த உணவு, உடை, குறைந்தபட்சம் அவளுக்கு பிடித்த நிறத்தை கூட கேட்டு அறிந்து கொள்ளாதவன் இவன்.
“இந்த ஜீன்ஸ் எடு தேஜூ… உனக்கு நல்லா இருக்கும்.”
“அந்த சல்வார் கலர் உனக்கு சூட் ஆகும்!”
“இந்த ஆரி வொர்க் பிளவுஸ் போடு தேஜுமா… உன் ஸ்ட்ரெக்சருக்கு ஃபிட் ஆகும்!”
இப்படியாக ஒவ்வொன்றையும் தனது விருப்பம் போலவே வாங்கிக் கொடுப்பான். அவளும் பதில் பேசாமல் வாங்கிக் கொள்வாள்.
அதை எல்லாம் தன் மீதுள்ள காதலின் மிகுதியால் தட்டிக் கழிக்காமல் வாங்கிக் கொள்கிறாள் என இவன் பூரித்து போயிருக்க, அது பொய்யாக இருக்கும் போலவே என முதன்முறையாக அவளிடத்தில் இருந்து சிந்தித்துப் பார்த்தான்.
‘இவன் வசதியில் பிறந்த வீட்டின் தேவைகளை சரி செய்துகொள்ள வந்தவள், இவனது சொல் பேச்சை தட்டாமல் கேட்டே ஆகவேண்டுமென்ற நிர்பந்தத்தில் தான் இத்தனை நாள் தன்னோடு வாழ்ந்தாளா?’ என்ற வேண்டாத சந்தேகம் ஆதியின் மனதை புரட்டிப்போட, தலையை உலுக்கிக் கொண்டு வீட்டை சுற்றிப் பார்ப்பவனாக அங்குமிங்கும் நடக்கத் தொடங்கினான்.
அந்த வீட்டு உடன்பிறப்புகளின் சிறுவயது வளர்ச்சி முதல் வளர் இளம் பருவத்தின் குறும்பு வரை புகைப்படங்களாக அந்த வீட்டின் சுவரை அலங்கரித்திருந்தன. அவற்றை எல்லாம் வெகுவாக ரசித்தான்.
“சோ லவ்லி… கோல்டன் மெமரீஸ் இல்ல…” தன்னருகே இருந்த நகுலிடம் கேட்க,
“ஆமா மாமா… தேஜு அக்காவுக்கு ஃபோட்டோகிராபில நல்ல இன்ட்ரெஸ்ட். வீட்டுல சும்மா இருக்கிற நேரம் கூட, எங்களை நிக்க வச்சு ஃபோட்டோ எடுத்து தள்ளிடுவா…” உற்சாகத்துடன் சொல்ல, அதைக் கேட்ட ஆதியின் மனம் பெரும் அவஸ்தைக்கு உள்ளானது.
தனது முகத்தில் படிந்துள்ள கோரத் தழும்புகளை மனதில் கொண்டே புகைப்படம் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்த்து விடுவான் ஆதி.
திருமணத்தின் போதும் புகைப்படம் வேண்டாமென மனைவியோடு தனியே ஒதுங்கி நின்றவன், தேனிலவிற்கு சென்ற போதும் அவளிடம் சுயமி(செல்ஃபி) எடுக்கவும் தடை போட்டான்.
கணவன் சொன்னபடியே அதன் பிறகு புகைப்படம் எடுப்பதையே முற்றிலும் மறந்தவளாக தேஜு, இவனோடு மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்தது மனக்கண்ணில் வந்து நின்றது.
‘இவளின் விருப்பத்தை கருத்தில் கொள்ளாமல் எனக்கு பிடித்ததை மட்டுமே அவளுக்கும் திணித்திருக்கின்றேனா?’ என நினைக்கையில் உள்ளம் சோர்ந்து போனான்.
இன்றைக்கு இங்கே வந்த சேர்ந்த பொழுதில் இவன் அடைந்த கோபத்தை, இவனது சந்தேகத்தை எல்லாம் சுத்தமாக மறந்தே போயிருந்தான் ஆதி.
அவனது சிந்தை முழுவதும் மனைவியே நிறைந்திருக்க, காரணமே இல்லாமல் ஆனந்தன் சொன்னதும் நினைவிற்கு வந்தது.
‘உன் மனைவியைப் பற்றி, அவளின் குடும்பத்தை பற்றி நீ அறிந்து கொள்ளவில்லை.’ அவன் குற்றம் சாட்டியதே மனதில் வந்து நிற்க, மாமனார் வீட்டில் உள்ள தற்போதைய நிலைமையை அறிய ஆதியின் உள்ளம் பரபரத்தது.
அதோடு இங்கே உள்ள பற்றாகுறைகளை நிவர்த்தி செய்து அனைத்தையும் நேர் செய்யும் அக்கறையும் வீட்டு மாப்பிள்ளையாக அவனுக்குள் கூடிப்போனது.
அப்படி யோசித்தவாறே மிச்சம் மீதி இடங்களையும் சுற்றிப் பார்க்க, தேஜூவின் சாயலில் சற்றே நிறம் குறைந்த தோற்றத்தில் இருந்த பெண்மணியின் புகைப்படம் மாட்டப்பட்டு, அதற்கு அருகில் அணையாவிளக்கும் ஏற்றப் பட்டிருக்க, அந்த படத்தையே ஆழ்ந்து பார்த்தான் ஆதித்யன்.
“இவங்க…” கேள்வியாக நகுலேஷை பார்க்க,
“இவங்கதான் என் பெரியம்மா!” நகுல் கூற,
அதைக் கேட்டு அங்கு வந்த ராஜசேகரும், “என்னோட முதல் மனைவி… தேஜு, மனுவோட அம்மா நந்தினி.” என கூறிவிட்டு அந்த புகைப்படத்தையே ஆழ்ந்து பார்த்தார்.
“எனக்கு இந்த விஷயம் தெரியாது!” ஆதி சொன்னதும் ராஜசேகர் அதிர்ந்தார்.
“உங்க வீட்டுல எல்லா விவரத்தையும் சொல்லித்தான் கல்யாணம் பேசினதா சுலோச்சனா சொன்னாளே மாப்ளே!”
“பெரியவர்கிட்ட சொல்லியிருக்கலாம். அவரும் கல்யாணம் முடிஞ்சதும் மெதுவா எங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சு, அப்படியே மறந்து போயிருக்கலாம்!” சமாதானமாக பேசினான் ஆதி.
உண்மையில் திருமணம் பேசிய பொழுதில் பெண்ணைப் பற்றியோ பெண் வீட்டாரைப் பற்றியோ எந்தவொரு விவரத்தையும் அறிந்து கொள்ளும் ஆர்வமில்லாமல் இருந்தான் ஆதித்யன்.
‘நம் வீட்டுக்கு தானே வரப்போகிறாள். வந்த பிறகு மெதுவாக பேசிப் பழகி, அவளைப் பற்றி அவளிடமே நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.’ என்ற மனநிலையில்தான் அப்போது அவன் தவிர்த்தது.
அப்பொழுதே அவன் கேட்டிருந்தால் மனைவியைப் பற்றி சிறிதளவேனும் இவனுக்கும் தெரிந்திருக்கும். நடந்ததை நினைத்து இப்போது நோவானேன்!
“இவங்களுக்கு என்ன ஆச்சு? உங்க ரெண்டாவது மனைவி எப்படி?” அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆவலில் ஆதி கேட்க, ராஜசேகர் சொல்லத் தொடங்கினார்.
***
கோவையில் ஓரளவிற்கு வசதி வாய்ப்புள்ள குடும்பம் ராஜசேகருடையது. அங்கு புகழ்பெற்ற ஜவுளிக் கடையை குடும்பத் தொழிலாக நடந்தி வந்தார் ராஜசேகரின் தந்தை.
கல்லூரி படிக்கும் காலத்தில் ராஜசேகர், தன்னுடன் படித்த நந்தினியிடம் காதலில் விழ, அது இரு வீட்டாருக்கும் தெரிந்து ஏக பிரச்சனையாகிப் போனது.
மூன்றாண்டு இளங்கலை படிப்பை முடிக்கும் முன்பே வீட்டை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொள்ள, இரு வீட்டுப் பெற்றோரும் ராஜசேகர் நந்தினியை ஒருமனதாக தள்ளி வைத்தனர்.
சிறிய துணிக்கடையில் மாதச் சம்பளத்தில் ராஜசேகருக்கு வேலை கிடைக்க, கஷ்டஜீவனத்துடன் குடும்ப வாழ்க்கையை தொடங்கினர் இளஞ்ஜோடிகள்.
மகனின் அவசர முடிவில் கலங்கிய ராஜசேகரின் தந்தைக்கு உடல் சுகவீனமடைய, திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்குள் மேலுலகம் பயணப்பட்டு விட்டார். தொழில் ஏற்று நடத்த மகன் அருகில் இருந்தே ஆகவேண்டிய அவசியம் ஏற்பட, மகன் மருமகளை தன்னோடு சேர்த்துக் கொண்டார் ராஜசேகரின் தாய் அருந்ததி.
வழக்கமான மாமியார் சாடல்களில் மருமகளை கரித்துக் கொட்டினாலும் இரண்டாம் வருடமே அழகிய மலர்ச் செண்டாய் தேஜஸ்வினியை, நந்தினி பெற்றெடுக்க, அருந்ததியின் மனம் நிறைந்து போனது.
அழகுப் பெட்டகமாய் பொக்கைவாய் சிரிப்பில் கண் மறந்து பார்க்கும் பேத்தியை எப்போதும் தனது கைகளிலேயே அருந்ததி வைத்துக் கொள்ள, வாழ்க்கை எவ்வித குறையுமின்றி நகரத் தொடங்கியது.
ராஜசேகர் நந்தினியின் காதலுக்கு அடுத்த சாட்சியாக இடைவெளியின்றி மனுவும் வந்து சேர, பதினோருமாத குழந்தையான தேஜு அக்காவாகிப் போனாள்.
சிறுவயது, அடுத்ததடுத்த பிரசவம், சரியான ஓய்வின்மை என அனைத்தும் சேர்ந்து நந்தினி நோய்வாய்பட்டு படுக்கையில் விழ, இரத்த சோகையும் உடல் பலவீனமும் சேர்ந்து அவரை பரலோகவாசி ஆக்கியது.
அந்த சமயத்தில் மனு ஆறுமாத குழந்தையாக இருக்க, ஒன்றரை வயது தேஜுவையும் கையில் வைத்துக் கொண்டு அருந்ததியும் ராஜசேகரும் அல்லாடிப் போயினர்.
தொழிலை கவனிக்க வேண்டிய அழுத்தம் ஒருபுறம், பிள்ளைகளை கண்ணுக்குள் வைத்துக் காக்க வேண்டிய அவசியமும் கூடிப்போக ராஜசேகர் பெரிதும் திண்டாடிப் போனார்.
காதல் மனைவியை மறக்க முடியவில்லை. குழந்தைகளின் வளர்ப்பில் அன்னைக்கும் உதவியாக இருக்க முடியாத நிலையில், இரண்டாம் திருமணத்திற்கு மனமின்றியே சம்மதித்தார்.
“இந்த காலத்துல ரெண்டு கைக்குழந்தைகளை ஒண்ணா சேர்ந்து பார்த்துக்க அத்தனை நம்பிக்கையானவங்க யாரும் வாய்க்க மாட்டாங்க ராஜா! உனக்கும் வயசிருக்கு… நம்ம தகுதிக்கு இல்லன்னாலும் பிள்ளைகளை கவனிக்கனும்னு சொல்லியே பொண்ணு தேடுவோம்!” எதார்த்தத்தை எடுத்துச் சொன்ன அருந்ததியின் வற்புறுத்தலும் சரியென்றே பட பெண் பார்க்கும் விசயத்தை தாயிடமே விட்டு விட்டார் ராஜசேகர்.
தாயில்லாமல், நோய் வாய்ப்பட்ட தகப்பன் கொண்ட ஏழைக் குடும்பம், அண்ணன் கூலிக்கு மாரடிக்க, மூன்று வேளையும் கஞ்சியை மட்டுமே குடித்து வாழும், வசதி வாய்ப்புகளற்ற வீட்டுப் பெண்ணான சுலோச்சனாவை இரண்டாம் தாரமாக பேசி முடித்தார் அருந்ததி.
திருமணத்தின் போதே, ‘குழந்தைகளை பெற்றவளாக கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும், ஆகாத வேலைகளைச் செய்து குழந்தைகளை இம்சித்தால் யோசிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றப் படுவாய்!’ என்ற அறிவுறுத்தலுடன் தான் திருமணமே நடந்தது.
கஞ்சியை மட்டுமே குடித்து வளர்ந்த சுலோச்சனாவிற்கு மூன்றுவேளையும் சுகமாக உண்ண உணவுக் கிடைப்பதே பெரும்பேறாக இருக்க, அருந்ததி கூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் சரியென்று தலையாட்டியே ராஜசேகரின் மனைவியாக அவர் வீட்டில் காலடி வைத்தாள்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் இரண்டு வயது குழந்தையான தேஜு, “அம்மா!” என்று அழைக்க, அவளைப் பின்பற்றி ஒரு வயது மனுவும் வந்து அவரின் புடவைத் தலைப்பை பற்றிக்கொள்ள, அந்த நிமிடமே மனம் கசந்து போனார்.
பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மழலைகள், சுலோச்சனாவின் இருபுறமும் காலைக் கட்டிக்கொண்டு நிற்க, அந்த பிஞ்சுகளின் அருகாமையை அறவே வெறுத்தாள்.
இரண்டு பிள்ளைகளின் பொறுப்பு தன்னிடம் வந்து சேர்ந்த பாரத்தையும், ஒன்றுமறியாத வயதில் அன்னை என்ற உறவு தந்த முதிர்ச்சியையும் சற்றும் யோசிக்காமல் வெறுக்கத் தொடங்கினாள் சுலோச்சனா.
அதே சமயத்தில் ராஜசேகரும் தனது கவனத்தை மகள்களின் மீது மட்டுமே வைத்து, புதுமனைவியை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தார்.
வயதின் தேவையையும் மணவாழ்வின் முழுமையையும் வேண்டி நின்ற பெண்ணிற்கு கணவரின் நிலைப்பாடு பெரும் வருத்தத்தை கொடுத்தது.
‘பிள்ளைகளுக்காக மட்டுமே நீ இங்கு இருக்கிறாய்!’ என தனது ஒவ்வொரு செயலிலும் ராஜசேகர் நிரூபிக்க, குழந்தைகளோடு கணவரையும் சேர்த்தே வெறுக்கத் தொடங்கினாள் சுலோச்சனா.
‘இந்த குட்டி குரங்குகளுக்கு ஆயா வேலை பார்த்து மட்டுமே என் காலத்தை கழிக்க வேண்டுமா? இவர்களாக என்னை வெறுத்து ஒதுக்கும்படி செய்து என் வாழ்க்கையை நான் முழுமையாக வாழப் போகிறேன்.’ உள்ளுக்குள் முடிவு செய்தவளாக அன்றிலிருந்தே அதற்கான காரியங்களில் இறங்கினாள்.
முதற்காரியமாக, ‘அம்மா’ என்றழைத்த மழலைகளை ‘சித்தி’ என்று அழைக்க பழக்கப்படுத்தினாள்.
“ஏன் இப்படி?” என்று கேட்ட மாமியாரிடம்,
“குழந்தைங்க அம்மான்னு கூப்பிடுறது நல்லாத்தான் இருக்கு. ஆனா அது எனக்கு ரொம்ப பெரிய பொம்பளையா மாறின நினைப்பு வருது. எனக்கென்ன அவ்வளவு வயசா ஆச்சு? எனக்கு புள்ள பொறந்து அது அம்மான்னு கூப்பிடும் போது உங்க பேத்திகளும் என்னை அம்மான்னு கூப்பிடட்டும்!” பொதுவாக கூறி வாயடைத்தார்.
‘என்னை நீ மனைவியாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே உன் மகள்களுக்கு தாய் கிடைப்பாள்!’ என்கிற மறைமுக மிரட்டலாகவே ராஜசேகருக்கும் மனைவியின் பேச்சு தோன்றியது.
குடும்ப வாழ்க்கையில் பற்றிழந்து நின்றவருக்கு இதுவே பெரும் அதிர்ச்சியாகப் பட, பட்டும் படாமல் சுலோச்சனாவுடன் வாழத் தொடங்கினார். பாட்டியின் அரவணைப்பில் தந்தையின் பாசத்தில் பெண் பிள்ளைகள் வளர ஆரம்பித்தனர்.
சித்தியாக தள்ளி நிற்கத் தொடங்கிய சுலோச்சனா குழந்தைகள் பாரமரிப்பில் இருந்தும் தன்னை ஒதுக்கிக் கொள்ள ஆரம்பித்தாள். திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் இவளுக்கும் பிள்ளை உண்டாகி இருக்க, யாராலும் அவளை தட்டிக் கேட்க முடியவில்லை.
ராஜசேகர் சுலோச்சனாவின் மகனாக, அந்த வீட்டின் செல்லப்பிள்ளையாக நகுலேஷ் பிறந்தான். மூன்று மழலைச் செல்வங்கள் அந்த வீட்டின் சந்தோசத்தை மீட்டுக் கொண்டு வந்தனர்.
தேஜு, மனுவின் விளையாட்டில் எப்போதும் தன்னை மறந்து சிரிப்பான் குழந்தை நகுலேஷ். அவனது அழுகையை கட்டுப்படுத்த, தாயின் அரவணைப்பு தேவையில்லை. தமக்கைகளின், ‘நண்டுப்பையா!’ அழைப்பு ஒன்றே போதும்! தன்னையும் மறந்து தாவிக் குதித்து சிரித்து விடுவான்..
அழகாய் அவர்களுடன் வளர்ந்து வந்த பொடியன், தனது ஒரு வயதில் பேசத் தொடங்கியதும் அம்மாவை, ‘சித்தி’ என்று அழைத்தே சுலோச்சனாவை அதிர வைத்தான் நகுலேஷ்!
நான் பிழை… நீ மழலை..!
23
மசக்கையின் அயர்வும் கணவனின் கோபத்தை கண்ட கலக்கமும் சேர்ந்து தேஜஸ்வினியை மயக்கத்தில் தள்ள, வழக்கம் போல அவளைத் தாங்கிக் கொள்ளும் தூணாகி நின்றான் ஆதித்யரூபன்.
அவளை தூக்கிக் கொண்டு அவளறையில் படுக்க வைத்து மயக்கம் தெளிவித்த பிறகே நிமிர்ந்தான். காயமும் அவனே… காப்பானும் அவனே!
கண்களால் அனைவரையும் கடிந்து கொண்டாலும் மனைவியின் அப்போதைய தேவையை கவனிப்பதில் முகம் சுணங்கவில்லை.
“அக்காவுக்கு ஜூஸ் ஏதாவது குடு மனு!” எனக் கூறியவனுக்கே அந்த அறையில் நிற்க முடியவில்லை.
வெயிலின் தாக்கத்தால் மின்விசிறியில் காற்றும் உஷ்ணத்துடன் வந்து அனலைக் கக்கியது. எந்நேரமும் ஏசியில் இருப்பவனுக்கு இதுவே பெரும் அவஸ்தையாகிப் போக, அதே பார்வையில் மனைவியைப் பார்த்தான். அவளுக்கு அத்தனை கஷ்டமில்லை. ஆனால் சற்றே அசௌகரியம் உணர்ந்தாள்.
“இந்த வெக்கையில கெடந்து வேகுறதுக்கு தான் வீம்பு பிடிச்சு இங்கே வந்தியா?” ஆதி கடுப்புடன் கேட்க, முகம் சுழித்த தேஜு, அசதியில் கண்களை மூடிக் கொண்டாள்.
“அக்கா, ஜுஸ் குடிச்சிட்டு படு!” மனு அவளுக்கு பழச்சாறை கொடுக்க, விருப்பம் இல்லாமல் குடித்து, அதையும் வெளியில் எடுத்துவிட்டே வந்து தலையைச் சாய்த்தாள்.
இந்த இடைவெளியில் நகுலும் ராஜசேகரும், மகளின் அறையில் ஆதி சௌகரியமாய் இருப்பதற்கென நாற்காலியும், டேபிள் ஃபேனும் கொண்டு வந்து வைக்க, ‘ரொம்ப தேவைதான்’ என்ற பாவனையில் பலமான முறைப்பையே பரிசாக வழங்கினான்.
“மாமாக்கு ஏலக்காய் டீ போட்டு குடு மனு!” தங்கையிடம் சொன்ன தேஜு, தம்பியிடம், “அமுதசுரபில மஸ்ரூம் பிரியாணியும், வெஜ் மீல்ஸும் ஆர்டர் போடு டா!” என சோர்வுடன் கூற,
“அதை நான் பார்த்துக்கறேன் தங்கம்… நீ நிம்மதியா ரெஸ்ட் எடு!” ராஜசேகர் கூறவும்,
மனுவும் உடன் சேர்ந்து, “வீணா அலட்டிக்காதே க்கா… நீ தூங்கு… நான் பார்த்துக்கறேன்!” என்றவள் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு தம்பி, தந்தையை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அனைவரும் வெளியில் சென்றுவிட, தேஜுவின் தலையை ஆதுரமாக தடவிக் கொடுத்தான் ஆதி.
“என் மேலே உள்ள கோபத்தை இங்கே வந்து கஷ்டபட்டு இருந்துதான் காமிக்கணுமா?” ஆதங்கத்துடன் கேட்க, சலிப்பாக பார்த்தாள் தேஜு.
“இது நான் பிறந்து வளர்ந்த வீடு. எனக்கு இங்கே கஷ்டம் எதுவும் இல்லை.” கடுப்புடன் அவள் பதிலளிக்க,
“ஆனா உன்னால சமாளிக்க முடியல… அது நிஜம் தானே?” ஆதி சட்டென்று கேட்க, திணறிப் போனவளாக தடுமாறியவள்,
“நீங்களா எதையும் கற்பனை பண்ணிக்க வேணாம். இரண்டுமாச புகுந்த வீட்டு சொகுசு, இருபத்திரண்டு வருஷ பிறந்த வீட்டு பழக்கத்தை மறக்க வைச்சிடாது.” முறுக்கிகொண்டு பதில் கூறினாள்.
அவளின் வார்த்தையில் முறுவலித்தவனாக, “நம்ம பேபிக்கு இந்த இடம் புதுசு டி… அதான், உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தி வைக்குது. நம்ம வீட்டுல இருக்கறதை விட இங்கே அன்கம்ஃபர்டபிளா ஃபீல் பண்றியா இல்லையா?” விடாமல் கேட்க, பெருமூச்சுடன் தளர்ந்து போனாள் தேஜு.
“உங்க ஹிட்லர் ரூல்சை ஃபாலோ பண்ணி அங்கே இருக்கிறதை விட இங்கே ஹாப்பியா, ஃப்ரீயா இருக்கேன். எங்க வீட்டை குறை சொல்றதை இதோட நிறுத்திக்கோங்க…” படபடப்புடன் கடுத்து பேசவும் தான் அமைதியானான்.
“குறை சொல்லணும்னு சொல்லல தேஜுமா… நம்ம வீட்டுக்கு வந்துடுடா… நீ இல்லாம எனக்கு மூச்சு முட்டிப் போகுது. ப்ளீஸ் எனக்காக, நம்ம பேபிக்காக…” என்றவனின் வார்த்தைக்கு அசதியான பார்வையே பதிலாக இருந்தது.
“நீ தூங்கி ரெஸ்ட் எடு… அப்புறம் பேசலாம்.” என்றவன் தனக்காக வைத்த டேபிள் ஃபேனை அவள் பக்கம் திருப்பி விட்டு, அவள் நன்றாக உறங்க ஆரம்பித்த பிறகே அறையை விட்டு வெளியே வந்தான்.
ஹாலில் அமர்ந்திருந்த ராஜசேகர், “மனு, மாமாக்கு டீ கொண்டு வந்து கொடுடா!” சொன்ன மறுகணமே, தேநீரை கொண்டு வந்து கொடுத்த மனு,
“அக்காவுக்கு உங்கமேல ரொம்ப கேரிங் மாமா!” கேலியை ஆரம்பிக்க, புரியாது முழித்தான் ஆதி.
“அவ்வளவு அசதியிலேயும் உங்களுக்கு பிடிச்ச டீ போடச் சொல்லி, உங்க டேஸ்டுக்கு ஏத்த மாதிரி சாப்பாடும் ஆர்டர் போட சொன்னால்ல… அதை சொல்றா மாமா!” நகுலும் சேர்ந்து கொள்ள,
“அதுல உங்களுக்கு பொறாமை கூடிப்போச்சா?” ஆதியும் அவர்களின் கிண்டலில் சேர்ந்து கொண்டான்.
“இருக்காதா பின்னே! எங்கக்கா அவ்வளவு ஈசியா யாரையும் அக்செப்ட் பண்ணிக்க மாட்டா… அப்படி அவ ஒட்டிகிட்டா அல்வாத்துண்டு மாதிரி தானா போயி வழுக்கி விழுந்துடுவா! சம்திங் யூ ஆர் கிரேட் மாமா… அப்பப்போ எங்களையும் கவனிக்கச் சொல்லுங்க!” வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு மனு பெருமை பீற்றிக் கொள்ள, சிரிப்புடன் அவரகளுடன் பேச்சில் கலந்தவனாக, வீட்டை கண்களால் அளக்கத் தொடங்கினான் ஆதி.
சற்றே பெரிதான ராஜசேகரின் வீடு முழுவதும் பற்றாக்குறையின் சாயல் ஒட்டிக் கிடந்தது. நேர்த்தியாக இருந்தாலும் நிறம் வெளுத்துப் போன திரைச்சீலைகள், அங்கிருந்த நான்கு அறைகளிலும் பழுதாகி கிடந்த ஏசி மிஷின்கள், ஓடாத பிரிட்ஜ் இன்னும் எத்தனை எத்தனையோ… அந்த வீடு முழுவதும் நிறைந்திருந்தது.
அத்தியாவசிய தேவைகள் எதுவோ அவற்றை மட்டும் இழுத்துக் கட்டி உபயோகப்படுத்தி வருகின்றனர் என்பதை பார்வையாலேயே புரிந்து கொண்டான் ஆதி.
திருமணம் முடிந்து ஒரே ஒருமுறை, அதுவும் இரண்டு மணிநேரம் மட்டுமே மாமனார் வீட்டுக்கு வந்து சென்றவன் அப்போது இந்த ஆராய்ச்சியை எல்லாம் மேற்கொள்ளவில்லை. மனைவியை தேனிலவிற்கு அழைத்து செல்லும் அவசரத்தில் இருந்தவன், ஒருவேளை விருந்தினை மட்டும் அரைகுறையாக முடித்துக்கொண்டு அவளோடு கிளம்பி விட்டான்.
அதன் பிறகும் மனைவியிடம் பிறந்த வீடும், அங்குள்ள உறவுகளும் எப்படி என்றெல்லாம் விசாரிக்க நேரமில்லை என்று சொல்வதை விட, அவனுக்கு கேட்டுத் தெரிந்து கொள்ளத் தோன்றவில்லை என்பதே உண்மை என்ற தனது நிலையே ஆதிக்கு வெட்கம் கொள்ள வைக்க, முதன்முதலாக தனது சுயநலத்தை வெறுத்தான்.
இதுநாள் வரையில் மனைவிக்கு பிடித்த உணவு, உடை, குறைந்தபட்சம் அவளுக்கு பிடித்த நிறத்தை கூட கேட்டு அறிந்து கொள்ளாதவன் இவன்.
“இந்த ஜீன்ஸ் எடு தேஜூ… உனக்கு நல்லா இருக்கும்.”
“அந்த சல்வார் கலர் உனக்கு சூட் ஆகும்.”
“இந்த ஆரி வொர்க் பிளவுஸ் போடு தேஜுமா… உன் ஸ்ட்ரெக்சருக்கு ஃபிட் ஆகும்.”
இப்படியாக ஒவ்வொன்றையும் தனது விருப்பம் போலவே வாங்கிக் கொடுப்பான். அவளும் பதில் பேசாமல் வாங்கிக் கொள்வாள். அதை எல்லாம் தன் மீதுள்ள காதலின் மிகுதியால் தட்டிக் கழிக்காமல் வாங்கிக் கொள்கிறாள் என இவன் பூரித்து போயிருக்க, அது பொய்யாக இருக்கும் போலவே என முதன்முறையாக அவளிடத்தில் இருந்து சிந்தித்துப் பார்த்தான்.
‘இவன் வசதியில் பிறந்த வீட்டின் தேவைகளை சரி செய்துகொள்ள வந்தவள், இவனது சொல் பேச்சை தட்டாமல் கேட்டே ஆகவேண்டுமென்ற நிர்பந்தத்தில் தான் இத்தனை நாள் தன்னோடு வாழ்ந்தாளா?’ என்ற வேண்டாத சந்தேகம் ஆதியின் மனதை புரட்டிப்போட, தலையை உலுக்கிக் கொண்டு வீட்டை சுற்றிப் பார்ப்பவனாக அங்குமிங்கும் நடக்கத் தொடங்கினான்.
அந்த வீட்டு உடன்பிறப்புகளின் சிறுவயது வளர்ச்சி முதல் வளரிளம் பருவத்தின் குறும்பு வரை புகைப்படங்களாக அந்த வீட்டின் சுவரை அலங்கரித்திருந்தன. அவற்றை எல்லாம் வெகுவாக ரசித்தான்.
“சோ லவ்லி… கோல்டன் மெமரீஸ் இல்ல…” தன்னருகே இருந்த நகுலிடம் கேட்க,
“ஆமா மாமா… தேஜு அக்காவுக்கு ஃபோட்டோகிராபில நல்ல இன்ட்ரெஸ்ட். வீட்டுல சும்மா இருக்கிற நேரம் கூட, எங்களை நிக்க வச்சு ஃபோட்டோ எடுத்து தள்ளிடுவா…” உற்சாகத்துடன் சொல்ல, அதைக் கேட்ட ஆதியின் மனம் பெரும் அவஸ்தைக்கு உள்ளானது.
தனது முகத்தில் படிந்துள்ள கோரத் தழும்புகளை மனதில் கொண்டே புகைப்படம் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்த்து விடுவான் ஆதி. திருமணத்தின் போதும் புகைப்படம் வேண்டாமென மனைவியோடு தனியே ஒதுங்கி நின்றவன், தேனிலவிற்கு சென்ற போதும் அவளிடம் சுயமி(செல்ஃபி) எடுக்கவும் தடை போட்டான்.
கணவன் சொன்னபடியே அதன் பிறகு புகைப்படம் எடுப்பதையே முற்றிலும் மறந்தவளாக தேஜு, இவனோடு மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்தது மனக்கண்ணில் வந்து நின்றது.
‘இவளின் விருப்பத்தை கருத்தில் கொள்ளாமல் எனக்கு பிடித்ததை மட்டுமே அவளுக்கும் திணித்திருக்கின்றேனா?’ என நினைக்கையில் உள்ளம் சோர்ந்து போனான்.
இன்றைக்கு இங்கே வந்த சேர்ந்த பொழுதில் இவன் அடைந்த கோபத்தை, இவனது சந்தேகத்தை எல்லாம் சுத்தமாக மறந்தே போயிருந்தான் ஆதி.
அவனது சிந்தை முழுவதும் மனைவியே நிறைந்திருக்க, காரணமே இல்லாமல் ஆனந்தன் சொன்னதும் நினைவிற்கு வந்தது.
‘உன் மனைவியைப் பற்றி, அவளின் குடும்பத்தை பற்றி நீ அறிந்து கொள்ளவில்லை.’ அவன் குற்றம் சாட்டியதே மனதில் வந்து நிற்க, மாமனார் வீட்டில் உள்ள தற்போதைய நிலைமையை அறிய ஆதியின் உள்ளம் பரபரத்தது.
அதோடு இங்கே உள்ள பற்றாகுறைகளை நிவர்த்தி செய்து அனைத்தையும் நேர் செய்யும் அக்கறையும் வீட்டு மாப்பிள்ளையாக அவனுக்குள் கூடிப்போனது.
அப்படி யோசித்தவாறே மிச்சம் மீதி இடங்களையும் சுற்றிப் பார்க்க, தேஜூவின் சாயலில் சற்றே நிறம் குறைந்த தோற்றத்தில் இருந்த பெண்மணியின் புகைப்படம் மாட்டப்பட்டு, அதற்கு அருகில் அணையாவிளக்கும் ஏற்றப் பட்டிருக்க, அந்த படத்தையே ஆழ்ந்து பார்த்தான் ஆதித்யன்.
“இவங்க…” கேள்வியாக நகுலேஷை பார்க்க,
“இவங்கதான் என் பெரியம்மா!” நகுல் கூற, அதைக் கேட்டு அங்கு வந்த ராஜசேகரும், “என்னோட முதல் மனைவி… தேஜு, மனுவோட அம்மா நந்தினி.” என கூறிவிட்டு அந்த புகைப்படத்தையே ஆழ்ந்து பார்த்தார்.
“எனக்கு இந்த விஷயம் தெரியாது.” ஆதி சொன்னதும் ராஜசேகர் அதிர்ந்தார்.
“உங்க வீட்டுல எல்லா விவரத்தையும் சொல்லித்தான் கல்யாணம் பேசினதா சுலோச்சனா சொன்னாளே மாப்ளே!”
“பெரியவர்கிட்ட சொல்லியிருக்கலாம். அவரும் கல்யாணம் முடிஞ்சதும் மெதுவா எங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சு, அப்படியே மறந்து போயிருக்கலாம்.” சமாதானமாக பேசினான் ஆதி.
உண்மையில் திருமணம் பேசிய பொழுதில் பெண்ணைப் பற்றியோ பெண் வீட்டாரைப் பற்றியோ எந்தவொரு விவரத்தையும் அறிந்து கொள்ளும் ஆர்வமில்லாமல் இருந்தான் ஆதித்யன்.
‘நம் வீட்டுக்கு தானே வரப்போகிறாள். வந்த பிறகு மெதுவாக பேசிப் பழகி, அவளைப் பற்றி அவளிடமே நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.’ என்ற மனநிலையில் தான் அப்போது அவன் தவிர்த்தது.
அப்பொழுதே அவன் கேட்டிருந்தால் மனைவியைப் பற்றி சிறிதளவேனும் இவனுக்கும் தெரிந்திருக்கும். நடந்ததை நினைத்து இப்போது நோவானேன்!
“இவங்களுக்கு என்ன ஆச்சு? உங்க ரெண்டாவது மனைவி எப்படி?” அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆவலில் ஆதி கேட்க, ராஜசேகர் சொல்லத் தொடங்கினார்.
***
கோவையில் ஓரளவிற்கு வசதி வாய்ப்புள்ள குடும்பம் ராஜசேகருடையது. அங்கு புகழ்பெற்ற ஜவுளிக் கடையை குடும்பத் தொழிலாக நடந்தி வந்தார் ராஜசேகரின் தந்தை.
கல்லூரி படிக்கும் காலத்தில் ராஜசேகர், தன்னுடன் படித்த நந்தினியிடம் காதலில் விழ, அது இரு வீட்டாருக்கும் தெரிந்து ஏக பிரச்சனையாகிப் போனது.
மூன்றாண்டு இளங்கலை படிப்பை முடிக்கும் முன்பே வீட்டை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொள்ள, இரு வீட்டு பெற்றோரும் ராஜசேகர் நந்தினியை ஒருமனதாக தள்ளி வைத்தனர்.
சிறிய துணிக்கடையில் மாதச் சம்பளத்தில் ராஜசேகருக்கு வேலை கிடைக்க, கஷ்டஜீவனத்துடன் குடும்ப வாழ்க்கையை தொடங்கினர் இளஞ்ஜோடிகள்.
மகனின் அவசரமுடிவில் கலங்கிய ராஜசேகரின் தந்தைக்கு உடல் சுகவீனமடைய, திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்குள் மேலுலகம் பயணப்பட்டு விட்டார். தொழில் ஏற்று நடத்த மகன் அருகில் இருந்தே ஆகவேண்டிய அவசியம் ஏற்பட, மகன் மருமகளை தன்னோடு சேர்த்துக் கொண்டார் ராஜசேகரின் தாய் அருந்ததி.
வழக்கமான மாமியார் சாடல்களில் மருமகளை கரித்துக் கொட்டினாலும் இரண்டாம் வருடமே அழகிய மலர்ச் செண்டாய் தேஜஸ்வினியை, நந்தினி பெற்றெடுக்க, அருந்ததியின் மனம் நிறைந்து போனது.
அழகுப் பெட்டகமாய் பொக்கைவாய் சிரிப்பில் கண் மறந்து பார்க்கும் பேத்தியை எப்போதும் தனது கைகளிலேயே அருந்ததி வைத்துக் கொள்ள, வாழ்க்கை எவ்வித குறையுமின்றி நகரத் தொடங்கியது.
ராஜசேகர் நந்தினியின் காதலுக்கு அடுத்த சாட்சியாக இடைவெளியின்றி மனுவும் வந்து சேர, பதினோருமாத குழந்தையான தேஜு அக்காவாகிப் போனாள்.
சிறுவயது, அடுத்ததடுத்த பிரசவம், சரியான ஓய்வின்மை என அனைத்தும் சேர்ந்து நந்தினி நோய்வாய்பட்டு படுக்கையில் விழ, இரத்த சோகையும் உடல் பலவீனமும் சேர்ந்து அவரை பரலோகவாசி ஆக்கியது.
அந்த சமயத்தில் மனு ஆறுமாத குழந்தையாக இருக்க, ஒன்றரை வயது தேஜுவையும் கையில் வைத்துக் கொண்டு அருந்ததியும் ராஜசேகரும் அல்லாடிப் போயினர்.
தொழிலை கவனிக்க வேண்டிய அழுத்தம் ஒருபுறம், பிள்ளைகளை கண்ணுக்குள் வைத்துக் காக்க வேண்டிய அவசியமும் கூடிப்போக ராஜசேகர் பெரிதும் திண்டாடிப் போனார்.
காதல் மனைவியை மறக்க முடியவில்லை. குழந்தைகளின் வளர்ப்பில் தாயிக்கும் உதவியாக இருக்க முடியாத நிலையில், இரண்டாம் திருமணத்திற்கு மனமின்றியே சம்மதித்தார்.
“இந்த காலத்துல ரெண்டு கைக்குழந்தைகளை ஒண்ணா சேர்ந்து பார்த்துக்க அத்தனை நம்பிக்கையானவங்க யாரும் வாய்க்க மாட்டாங்க ராஜா! உனக்கும் வயசிருக்கு… நம்ம தகுதிக்கு இல்லன்னாலும் பிள்ளைகளை கவனிக்கனும்னு சொல்லியே பொண்ணு தேடுவோம்.” எதார்த்தத்தை எடுத்துச் சொன்ன அருந்ததியின் வற்புறுத்தலும் சரியென்றே பட பெண் பார்க்கும் விசயத்தை தாயிடமே விட்டு விட்டார் ராஜசேகர்.
தாயில்லாமல், நோய் வாய்ப்பட்ட தகப்பன் கொண்ட ஏழைக் குடும்பம், அண்ணன் கூலிக்கு மாரடிக்க, மூன்று வேளையும் கஞ்சியை மட்டுமே குடித்து வாழும், வசதி வாய்ப்புகளற்ற வீட்டுப் பெண்ணான சுலோச்சனாவை இரண்டாம் தாரமாக பேசி முடித்தார் அருந்ததி.
திருமணத்தின் போதே, ‘குழந்தைகளை பெற்றவளாக கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும், ஆகாத வேலைகளைச் செய்து குழந்தைகளை இம்சித்தால் யோசிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றப் படுவாய்!’ என்ற அறிவுறுத்தலுடன் தான் திருமணமே நடந்தது.
கஞ்சியை மட்டுமே குடித்து வளர்ந்த சுலோச்சனாவிற்கு மூன்றுவேளையும் சுகமாக உண்ண உணவு கிடைப்பதே பெரும்பேறாக இருக்க, அருந்ததி கூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் சரியென்று தலையாட்டியே ராஜசேகரின் மனைவியாக அவர் வீட்டில் காலடி வைத்தாள்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் இரண்டு வயது குழந்தையான தேஜு, “அம்மா!” என்று அழைக்க, அவளைப் பின்பற்றி ஒரு வயது மனுவும் வந்து அவரின் புடவைத் தலைப்பை பற்றிக்கொள்ள, அந்த நிமிடமே மனம் கசந்து போனார்.
பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மழலைகள், சுலோச்சனாவின் இருபுறமும் காலைக் கட்டிக்கொண்டு நிற்க, அந்த பிஞ்சுகளின் அருகாமையை அறவே வெறுத்தாள்.
இரண்டு பிள்ளைகளின் பொறுப்பு தன்னிடம் வந்து சேர்ந்த பாரத்தையும், ஒன்றுமறியாத வயதில் அன்னை என்ற உறவு தந்த முதிர்ச்சியையும் சற்றும் யோசிக்காமல் வெறுக்கத் தொடங்கினாள் சுலோச்சனா.
அதே சமயத்தில் ராஜசேகரும் தனது கவனத்தை மகள்களின் மீது மட்டுமே வைத்து, புதுமனைவியை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தார்.
வயதின் தேவையையும் மணவாழ்வின் முழுமையையும் வேண்டி நின்ற பெண்ணிற்கு கணவரின் நிலைப்பாடு பெரும் வருத்தத்தை கொடுத்தது.
‘பிள்ளைகளுக்காக மட்டுமே நீ இங்கு இருக்கிறாய்!’ என தனது ஒவ்வொரு செயலிலும் ராஜசேகர் நிரூபிக்க, குழந்தைகளோடு கணவரையும் சேர்த்தே வெறுக்கத் தொடங்கினாள் சுலோச்சனா.
‘இந்த குட்டி குரங்குகளுக்கு ஆயா வேலை பார்த்து மட்டுமே என் காலத்தை கழிக்க வேண்டுமா? இவர்களாக என்னை வெறுத்து ஒதுக்கும்படி செய்து என் வாழ்க்கையை நான் முழுமையாக வாழப் போகிறேன்.’ உள்ளுக்குள் முடிவு செய்தவளாக அன்றிலிருந்தே அதற்கான காரியங்களில் இறங்கினாள்.
முதற்காரியமாக, ‘அம்மா’ என்றழைத்த மழலைகளை ‘சித்தி’ என்று அழைக்க பழக்கபடுத்தினாள். ‘ஏன் இப்படி?’ என்று கேட்ட மாமியாரிடம்,
“குழந்தைங்க அம்மான்னு கூப்பிடுறது நல்லாத்தான் இருக்கு. ஆனா அது எனக்கு ரொம்ப பெரிய பொம்பளையா மாறின நினைப்பு வருது. எனக்கென்ன அவ்வளவு வயசா ஆச்சு? எனக்கு புள்ளை பொறந்து அது அம்மான்னு கூப்பிடும் போது உங்க பேத்திகளும் என்னை அம்மான்னு கூப்பிடட்டும்!” பொதுவாக கூறி வாயடைத்தார்.
‘என்னை நீ மனைவியாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே உன் மகள்களுக்கு தாய் கிடைப்பாள்.’ என்கிற மறைமுக மிரட்டலாகவே ராஜசேகருக்கும் மனைவியின் பேச்சு தோன்றியது.
குடும்ப வாழ்க்கையில் பற்றிழந்து நின்றவருக்கு இதுவே பெரும் அதிர்ச்சியாகப் பட பட்டும் படாமல் சுலோச்சனாவுடன் வாழத் தொடங்கினார். பாட்டியின் அரவணைப்பில் தந்தையின் பாசத்தில் பெண் பிள்ளைகள் வளர ஆரம்பித்தனர்.
சித்தியாக தள்ளி நிற்கத் தொடங்கிய சுலோச்சனா குழந்தைகள் பாரமரிப்பில் இருந்தும் தன்னை ஒதுக்கி கொள்ள ஆரம்பித்தாள். திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் இவளுக்கும் பிள்ளை உண்டாகி இருக்க, யாராலும் அவளை தட்டிக் கேட்க முடியவில்லை.
ராஜசேகர் சுலோச்சனாவின் மகனாக, அந்த வீட்டின் செல்லப்பிள்ளையாக நகுலேஷ் பிறந்தான். மூன்று மழலைச் செல்வங்கள் அந்த வீட்டின் சந்தோசத்தை மீட்டுக் கொண்டு வந்தனர்.
தேஜு, மனுவின் விளையாட்டில் எப்போதும் தன்னை மறந்து சிரிப்பான் குழந்தை நகுலேஷ். அவனது அழுகையை கட்டுப்படுத்த, தாயின் அரவணைப்பு தேவையில்லை. தமக்கைகளின், ‘நண்டுபையா!’ அழைப்பு ஒன்றே போதும்! தன்னையும் மறந்து தாவிக் குதித்து சிரித்து விடுவான்..