நினைவு தூங்கிடாது 13.2

நினைவு தூங்கிடாது 13.2

நினைவு தூங்கிடாது 13.2

தாய்மை அன்பை

என்னிடம் தேடும்…

 நின் அன்பை…

என்னவென்று நான் சொல்ல…

தன் குட்டி நண்பர்களை கொஞ்சிவிட்டு நிமிர்ந்த பெண்ணின் கன்னத்தை பதம் பார்த்தது ஒரு பூங்கரம்.

பொறாமையில் பொங்கி கொண்டிருந்த உள்ளத்திற்கு, இந்தக் காட்சியைக் கண்டு  மனதில் எரிமலை வெடித்து சிதறியது. கோபத்தோடு காரிலிருந்து இறங்க அங்கே காட்சிகள் மடமடவென மாறியது. இல்லையெனில் பெயருக்கு ஏற்றவாறு நெற்றிக்கண்ணை திறந்து, எதிரே இருப்பவரை எரித்து சாம்பலாக்கி இருக்கும் அபாயாம் இருந்தது.

பெண்ணை அடித்த கரங்களுக்கு சொந்தக்காரி, அவளை அடித்த அடுத்த நிமிடம் அவளை இறுக அணைத்துக் கொண்டாள். இதைக்கண்ட ருத்ரேஸ்வரனின் கோபம் கொஞ்சம் மட்டுப் பட, அடுத்த அடியை வைக்காமல் அங்கேயே தேங்கினான். 

“ஏண்டி ஏன் இப்படி பண்ணின? இந்த ஊருக்கு வரதுக்கு உனக்கு இப்பதான் வழி தெரிஞ்சதா? நானும் உன்னை எவ்வளவு தடவை கூப்பிட்டேன். என் பேச்சை கொஞ்சமாவது கேட்டியா?”

“ரேக்ஸ் குட்டி! சாரி டி செல்லோ. எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி கேட்கலாமா?”

“ஏண்டி அதுக்குன்னு இப்படித்தான் நாலு வருஷமா வராமல் இருப்பியா?”

“நான் ஏன் வரலைன்னு தெரிஞ்சும் இப்படி பேசாத ரேக்ஸ்”

“மண்ணாங்கட்டி லட்சியம். நீயும் உன் உருப்படாத லட்சியமும். உன்னை இந்த ஊரில் யாரும் தப்பா நினைக்காத போது நீ ஏன் ஒதுங்கி போன? உன்னை பார்க்காமல் இவங்க எல்லாம் ஏங்கி போய் இருக்காங்க. அது கூட உனக்கு புரியலையா? இல்ல புரியாதமாதிரி நடிக்கிறயா?” என பசங்களை கை காட்டினாள். 

இதற்கு பதில் சொல்ல முடியாத பெண்ணின் தலை குனிந்தது. அவளின் தலைகுனிவை சகிக்கமுடியாத கார்த்திக், அவர்களை நெருங்கி அந்த பெண்ணின் தோள் அணைத்து,”ரேகா உனக்கு எத்தனை தடவை சொன்னேன். இங்கே வந்து அவ கூட சண்டை போட கூடாதுன்னு. கிளம்பு இப்பவே வீட்டுக்கு போலாம்.”

“முடியாது அத்தான். அவள ரெண்டுல ஒன்னு பார்க்காம நான் வரமாட்டேன்” என முறுக்கி கொண்டாள் ரேகா.

ஆம்! அது அமிர்தா, பிருத்தாவின் பள்ளிக்கால தோழி ரேகாவேதான். தற்போது கார்த்திக்கின் கையணைவிலிருக்கும், கார்த்திக்கின் மனைவி ரேகா. இரண்டு வருடங்களுக்கு முன் ரேகாவை தன் சரிபாதி ஆக்கிக் கொண்டான் கார்த்திக். இப்போது அவர்கள் வாரிசு ரேகாவின் மணிவயிற்றில் ஐந்து மாத கருவாக.

“ரே..” என ஆரம்பித்த கார்த்திகை தடுத்து,”நான் அவளை பார்த்துக்கறேன் கார்த்தி” என்றாள்.

ரேகாவின் முகம் பார்த்து,”ரேக்ஸ் செல்லோ! நடக்கிறது நடந்தே தீரும். நீயோ, நானோ, நினைச்சாலும் எதையும் மாற்ற முடியாது. இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் இங்கதான் இருப்பேன். அதனால பொறுமையா வந்து என்ன திட்டலாம். இப்ப நீ இருக்க நிலையில் அதிக டென்ஷனாகத” மித்ரா ரேகாவின் கன்னத்தை பிடித்து கொஞ்சி சமாதானப்படுத்தினாள்.

கார்த்திக் எப்போது ரேகாவை நெருங்கினானோ, அதே நிமிடம் ருத்ரேஸ்வரன் மித்ராவை நெருங்கி இருந்தான். ரேகாவை சமாதானப்படுத்திய மித்ராவின் விழிகள் ஈஸ்வரனை குற்றம்சாட்டியது,’இது அனைத்திற்கும் காரணம் நீதான்’ என்று.

“கார்த்திக் நான் உன்கூட கொஞ்சம் பேசணும். என்கூட வா” என கட்டளையிட்டு தன் காரை நோக்கி சென்றான் ஈஸ்வரன்.

‘ஆண்டவா நீதான் என்னை காப்பாத்தணும். ரோகாக்கு இருக்க ஒரே புருஷன் நான். எனக்கு எந்த சேதாரமும் இல்லாமல் பத்திரமா திருப்பி அனுப்பிடு’ என ஆண்டவனிடன் மனு போட்டுக்கொண்டே ஈஸ்வரை பின்தொடர்ந்தான். 

இங்கு நடந்த அனைத்தையும் சுவாரசியமாக கண்டு களித்த இரு ஜீவன்கள் ரிஷி வர்மாவும், கிரிதரனும் தான்.

†††††

பிறகு சந்திப்பதாக கூறி பிங்கியை தவிர பசங்களும், ரேகாவும் சென்றுவிட்டனர். பிங்கி அவளை மிகவும் மிஸ் செய்தால். அதனால் அவளுடன் நேரம் கழிக்கவே அவளுடன் தங்கிவிட்டாள்.

அந்த வீட்டிற்குள் மித்ராவுடன் நுழைந்தது ரிஷி, கிரி, பிங்கி மட்டுமே. இப்போதுதான் வீட்டிலிருந்த மாற்றத்தை உணர்ந்தால் பெண். இது ரிஷியின் வேலை என உணர்ந்து,’எப்படி?’ என கண்களால் கேள்வியெழுப்பினாள்.

“கார்த்திக்” என ஒரே வார்த்தையில் பதிலளித்தான். 

தீயினால் உயிரிழப்பு ஏற்பட்ட வீடு போலில்லாமல் வெள்ளையடித்து, புதிது போல் காட்சியளித்தது. அந்த வீடு ஒற்றை படுக்கையறை, வரவேற்பு அறை சமையலறை என மூன்று அறைகளைக் கொண்டது. குளியலறை வீட்டின் பின்புறம் அமைந்திருந்தது. 

படுக்கை அறையை மிருவின் தேவைக்கேற்ப மாற்றி அமைத்திருந்தான். வரவேற்பு அறையின் ஒரு மூலையில் கட்டில் போட்டு அவனுக்கு ஏற்ற வகையில் அமைத்திருந்தான். அந்த வீடு புதுப் பொலிவுடன் காட்சியளித்தது.

பிங்கி மித்ராவின் கரத்தை விடாமல் பற்றிக் கொண்டு அவளுடனே இருந்தாள். பார்வை மட்டும் அவ்வப்போது ரிஷியையும் கிரியையும் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. 

காதலில் மட்டும்தான் பொறாமை உண்டா? நட்பிலும் உண்டு என காட்டிக்கொண்டிருந்தது அந்த சிறுமலர். 

ஆண்கள் இருவருக்கும் சிறியவளின் பார்வை ஒரு ஆர்வத்தையே குடுத்தது. ‘மீறி மீறி போனா பதினஞ்சு வயசு இருக்கும். அதோட பார்வையை பார். என்னமோ கண்ணால் சுட்டுப் பொசுக்குற மாதிரி.’ என நினைத்தாலும் மனதில் ஒரு சுவாரஸ்யம் பிறந்தது. அவளை வம்பிழுக்கும் ஆசையை தூண்டியது.

ரிஷியும் கிரியும்,”உனக்கு இங்க ஒரு வாலு இருக்குன்னு சொல்லவே இல்ல மிரு” என பிங்கியை சுட்டிக்காட்ட. பிங்கி அவர்களை முறைத்து நின்றாள்.

“ஓ இதுதான் நீ சொன்ன அட்டைப்பூச்சியா, சரியாதான் சொல்லி இருக்க. உன்னை ஒட்டிகிட்டே சுத்துறா.” என யோசிப்பது போல் அவளிடம் வம்பு வளர்த்தனர். இப்போது பொறுமையை கைவிட்ட பிங்கி பொங்கி விட்டாள்.

“என்னோட அம்மு. நான் ஒட்டிக்குவேன் இல்ல கட்டிக்குவேன்‌ உங்களுக்கு என்ன வந்தது‌. போங்க போய் உங்க வேலைய பாருங்க?” எடுத்தெறிந்து பேசினாள். தனக்குத் தேவையான நேரத்தில் இவள் இல்லையே என்ற ஆதங்கம்.

ஆண்களுக்கு பிங்கி மேல் கோபம் வரவில்லை. மாாறாக அவளுக்கு மிருவின் மேலிருந்த பாசமே தெரிந்தது. 

“பிங்கி என்ன பேசுற? பெரியவங்க கிட்ட இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா?” மிரு பொறுமையாக தான் கேள்வி எழுப்பினாள். 

ஆதங்கத்தில் இருந்த  பிங்கியால் மிருவின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளமுடியாமல்,”இப்ப உனக்கு இவங்கதான முக்கியம். நாங்க எல்லாம் உனக்கு தேவை இல்லாதவங்க ஆயிட்டோம். நீ அவங்க கூடிவே போயிடு. எனக்கு நீ வேண்டாம்.” ஆதங்கத்தில் வெடித்து சிதறினாள்.

திகைத்து நின்ற மிரு சற்று சுதாரித்து,”பிங்கி என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா?” 

“ஆமா இவங்க தான் உன்னை எங்க கிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க. நீ அவங்க கூடவே போயிடு. எனக்கு நீ வேண்டாம். எனக்கு நீ வேண்டாம்” என சொன்னதையே திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்தவள், அந்த வீட்டின் சமையலறை ஒட்டியிருந்த கொல்லைப்புற கதவு நிலையில் போய் அமர்ந்து கண்ணீர் சிந்தினாள் பிங்கி. 

“அந்தப் பொண்ணு ஏதோ குழப்பத்தில் இருக்கா? போ போய் அவளை சமாதானப்படுத்து” என ரிஷி மிருவை அனுப்பினான். 

மிரு சென்று பிங்கியின் அருகில் அமர்ந்து அவள் தோளைத் தொட, பெரியவளின் மடியில் தன் முகம் புதைத்து கண்ணீர் சிந்தினால் சிறியவள். 

“என்னோட ஸ்வீட்டி அழுக மாட்டாளே. அவளுக்கு என்ன ஆச்சு?” மென்மையான குரலில்.

“நீ ஏன் எங்களை விட்டுட்டு போன? எனக்கு உன்னை எவ்வளவு தேடுச்சு தெரியுமா? ஒருநாள் நான் பாத்ரூம் போகும்போது ரத்தம், ரத்தமா போச்சு. எனக்கு ஏதோ நோய் வந்துருச்சுன்னு நான் ரொம்ப பயந்து போயிட்டேன். நீயும் இல்லை அவளும் இல்லை. நான் யார்கிட்ட சொல்றதுன்னு தெரியாம எவ்வளவு தவிச்சி போயிட்டேன் தெரியுமா? நான் பெரிய பொண்ணு ஆகிட்டேனாம். எனக்கு சடங்கு எல்லாம் சுத்துனாங்க. ஆனா எனக்கு நீங்க ரெண்டு பேரும் இல்லாம ஒண்ணுமே புடிக்கல. இனி எங்களை விட்டு போக மாட்டேன்னும், எங்க கூட பேசாம இருக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு” தன் சிறு கையை அவளின் முன் நீட்டினாள்.

ஒரு பெண், மங்கை பருவத்தை அடையும்போது, அவள் உடலில் உண்டாகும் மாற்றங்களையும் பயங்களையும் தானும் அனுபவித்த பெண்ணவளால், அந்த சிறுமலரின் ஆதங்கத்தை ஒதுக்க முடியவில்லை.

தான் ஏதோ செய்ய நினைத்து, இந்த சிறியவர்களை தண்டித்து விட்டோம் என தவித்துப் போனாள் அந்த அப்பாவி பெண். 

தன் மடியில் விழுந்து குமுறும் மலரை, எப்படி சமாதானப் படுத்துவது என புரியாமல் தவித்தது, தாய்மை மனம் கொண்ட பெண்மை. அவள் கேட்ட சத்தியத்தை தயங்காமல் செய்தாள் மித்ராலினி.

“சாரிடா ஸ்வீட்டி! இனி உங்க கூட பேசாமல் இருக்க மாட்டேன். இது என் மேல் சத்தியம்.” என அந்த சிறு கைகளில் தன் கையைப் பதித்து உறுதி கொடுத்தாள். 

அதில் முகம் மலர,”என் செல்ல அம்மு” அவள் கன்னத்தில் இதழ் பதித்தாள். மிருவின் இதழ்களும் புன்னகையை பூசிக்கொள்ள,”சரி நீ கேட்ட சத்தியத்தை நான் பண்ணிட்டேன். நீ இப்ப போய் அவங்க ரெண்டு பேத்து கிட்டயும் சாரி கேளு” என ரிஷி கிரியை கை காட்டினாள்.

அவர்களைக் கண்ட சிறியவளின் முகம் மீண்டும் கோபத்தை தத்தெடுத்தது, “அவங்கதான் உன்னை எங்ககிட்ட இருந்து பிருச்சாங்க. நான் அவங்க கிட்ட சாரி கேட்க மாட்டேன்.”

“என் செல்ல ஸ்வீட்டி நல்ல புள்ளதான? உன்னோட அம்மு சொன்னா கேட்பில? அவங்க இல்லேன்னா நான் உன் முன்னாடி இப்படி உட்கார்ந்து பேசிட்டு இருக்க முடியாது. எப்பவோ செத்துப் போயிருப்பேன். போ போய் அவங்க கிட்ட சாரி கேளு” உணர்வுகள் அற்ற குரலில்.

அவள் சொன்னது கேட்டு பயந்துபோன சிறியவள், அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.’உன்னை எமனுக்கு கூட கொடுக்க மாட்டேன்’ என்பது போல். 

பூனைக்குட்டியாக மிருவை உரசி கொண்டே வந்த பிங்கி, ஆடவர்களை கண்டு,”நீங்க தான் அம்முவை காப்பாத்தி ஹெல்ப் பண்ணீங்லாம், அதுக்கு ரொம்ப தேங்க்ஸ். நான் பேசுனது தப்பு. சாரி” 

“இங்கே வா” என அவளை அழைத்த ரிஷி, தன் அருகில் அமரவைத்து, அவள் தலையை கோதிக்கொண்டே, “உன்னை பார்த்தா யாருக்காவது கோபம் வருமா? அதுவும் நீ எனக்கு செல்ல தங்கச்சி ஆயிட்ட. உன்மேல கோபப்பட முடியுமா? சோ வி ஆர் பிரண்ட்ஸ்” என கை நீட்டினான். அந்த நட்பு கரத்தை பற்றிக் கொண்டாள் பிங்கி உடன் கிரியும்.

இந்தக் காட்சியை புன்னகை மின்ன, மனம் நெகிழ பார்த்திருந்தாள் மித்ராலினியாகிய அம்மு என்கிற அமிர்தா.

†††††

கார்த்திகை அழைத்து சென்ற ருத்ரேஸ்வரன் அவனை பிடி பிடி என பிடித்துக்கொண்டான். 

“ஏன் கார்த்தி அம்மு இறந்துட்டான்னு எங்கிட்ட பொய் சொன்ன? அப்ப அந்த பொண்ணு பிருந்தா எங்க? எதுக்காக என்னை ஏமாத்தின?” 

ஈஸ்வர் கேட்ட கேள்விகளுக்கு கார்த்திக் அளித்த பதிலால், மித்ராவாகிய அம்மு கடத்தப்பட்டாள் ருத்ரேஸ்வரனால்.

error: Content is protected !!