நினைவு தூங்கிடாது 15

நிழலின் நிஜம் 15

மயக்கம் தெளிந்து எழுந்த பெண், ‘தான் எங்கோ அடைப்பட்டு இருக்கிறோம். தன் கை கால்கள் கட்டப்பட்டு இருக்கிறது’ என உணர்ந்து விழிகளை சுழற்றினாள். 

அவளுக்கு சற்று தள்ளி, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு, ருத்ரேஸ்வரன் அவளையே உறுத்து விழித்துக் கொண்டிருந்தான். அவனது கூர்ந்த பார்வையில் பெண்ணினது மனம் சற்று தடுமாறியது. 

தன் பார்வையை அவனிடமிருந்து தலைத்து கொண்ட பெண்,”உனக்கு என்ன பிரச்சனை ருத்ரா? எதுக்கு என்னை கடத்திட்டு வந்த?” பொறுமையாக கேள்வி எழுப்பினாள்.

“உன்னை தவிர வேறு என்ன பிரச்சனை எனக்கு இருக்க முடியும்? ஏன் என்கூட பேச மாட்டிங்கர?”

ஒரு கசந்த புன்னகையுடன்,”நான் எதுக்கு பேசனும்? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” 

அவள் விழிகளுக்குள் ஊடுருவி,”ஏன் உனக்கு நான் யாரேன்னு தெரியாதா?”

இப்போது நேர்கொண்ட பார்வையுடன்,”தெரியாது” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

“ஓ உனக்கு தெரியாது” என நக்கலாக கூறி, தாடையை தடவி சிந்தித்தான்,”சரி அதை விடு, நமக்கு என்ன சம்பந்தமென்று அப்பறம் உனக்கு புரியவைக்குறேன்.  அன்னைக்கு  நான் உன்னை விட்டுட்டு போனதுக்கு அப்புறம் என்ன நடந்தது?”

“அது உனக்கு தேவையில்லாதது. ஒரு பெண்ணோட கையில் மோதிரம் போட்டு ஊரறிய நிச்சயம் பண்ணிட்டு, ஊருக்கு தெரியாம அவ தங்கச்சி கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிட்டு, அம்போன்னு விட்டுப்போன மகா உத்தமன் நீ? ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையை கெடுத்திருக்க, உன்கிட்ட நான் எதுக்கு பேசனும்?”

“இப்ப சொன்ன பார் மஞ்சள் கயிறு, அதுதான் நமக்குள் இருக்கும் சம்பந்தம். உங்க அம்மா எங்க?”

மௌனம் மட்டுமே பதிலானது. 

“பிருந்தா எங்க?” தொடர்ந்து கேள்வி எழுப்பினான். 

பெண்ணிடம் பதிலில்லை. ஆண்ணின் பொருமை பரந்தது.

“பிந்து எங்க? இப்ப சொல்ல போறியா? இல்லையா?” என்றான் கர்ஜனை குரலில்.  சிங்கமே நடுங்கிவிடும் அந்த கர்ஜனையில்.

ஆனால் எதிரே இருப்பவளோ,’நீ பேசினாயா? என்னிடமா?’ என்ற பார்வை மட்டுமே அவளிடம். பார்வையில் ஒரு துளி பயமில்லை, ஏன் எந்த உணர்வுமே இல்லாத வெற்று பார்வை. உணர்வுகளை தொலைத்த முகம்.

அவளின் பயமில்லா பார்வையைப் பார்த்து,  இவன்தான் பல்லைக் கடிக்க வேண்டியதாக இருந்தது.

“இப்படி கையும் காலும் கட்டி இருக்கும் போதே, உன்னுடைய பழைய திமிர் கொஞ்சமும் குறையல என் அருமை நீலாம்பரி.”

“ஓ தங்க யு, தங்க யு கூடவே பிறந்தது, எப்பவும் போகாது ருத்ரா.” படையப்பா ஸ்டைலில்.

“டயலொக் நல்லாதான் விடுற. இதை படையப்பா படத்திலேயே பார்த்துட்டேன். இப்ப எனக்கு தேவை கேட்ட கேள்விக்கு பதில்.” விடா பிடியாக நின்றான்.

“சொல்லைனா?” புருவம் உயர்த்தினாள்.

அவளை ரசிக்க தூண்டிய மனதை அடக்கி,”இங்க இருந்து போக முடியாது” என்றான் அலட்சியமாக.

இனி தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் தெரியாமல் விட மாட்டான் என்று உணர்ந்த பெண், ஒரு பெருமூச்சுடன்,”சரி சொல்றேன். ஆனால் ஒரு கன்டிஷன்.” 

‘?’ கேள்வியுடன் நெற்றி சுருங்கியது.

“அதுக்கு அப்புறம் என்னை தொந்தரவு செய்யகூடாது.” 

சரி என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை, ‘நீ சொல்லி முடி, பிறகு பார்க்கலாம்’ என பார்வை மட்டுமே.

†††

நிழல் நான்கு வருடங்களுக்கு முன்,

அன்றைய திருவிழா தினம்.

தன்னிடம் தனியாக மாட்டிய அம்முவை சீண்டிய ருத்ரா, அவளை ஆற்றங்கரைக்கு வர சொல்லி விட்டு, அவள் பார்வையில் இருந்து மறைந்தான்.

பெண்ணோ,”அறிவு கெட்டவன் இவன் சொன்னா உடனே கேட்கனுமா? முடியாது. நான் போக மாட்டேன், என்ன பண்ணுறான்னு பார்க்கறேன்.” என வாய்விட்டு புளம்பியபடி தன் சகோதரியிடம் சென்ற பெண்ணின் கண்களில் பட்ட காட்சி இவளை கொதிப்பில் தள்ளியது.

அங்கு ஒருவன் பிந்துவை உரசிக்கொண்டிருந்தான். ‘கூட்ட நெரிசலில் உரசி கொண்டிருக்கிறான்’ என நினைத்த பிந்து அவனிடமிருந்து சற்று விலகி விலகி நின்று கொண்டிருந்தாள். அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த அம்மு,’அவன் வேண்டுமென்றே செய்கிறான்’ என உணர்ந்து கொண்டாள். அம்மு அவனை நெருங்கும் சமயம், அவன் கரங்கள் பிந்துவின் இடுப்பை தொட நெருங்கியிருந்தது.

சரியாக வந்த அம்மு அவன் கரங்களைப் பற்றி முறுக்கி இருந்தாள். அவள் கரங்களைப் பற்றியதில் கோபம் கொண்டவன், “ஏய் என் கைய விடு. என்னமோ உன்னை தொட்ட மாதிரி இந்த சிலுப்பு சலுப்பிகற?” என தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டான். 

அவன் கன்னத்தில் அறை விட்ட அம்மு,”உனக்கு அந்த நெனப்பு வேற இருக்கா? உன்னை கொன்று புதைச்சுடுவேன். ஜாக்கிரதை” என்றாள் கண்கள் சிவக்க.

“அம்மு வேண்டாம்” பிந்து அவளை தடுக்க முயல, முடியாமல் போனது.

அவன் ஆத்திரத்தோடு அம்முவை நெருங்க, சரியாக அங்கு வந்தான் கார்த்திக். “பாஸ், பாஸ் சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பண்ணிடுச்சு” என சமாதானப்படுத்தி அவனை இழுத்துச் சென்றான்.

ஈஸ்வரை பற்றியும், அவனது நண்பர்களை பற்றியும் ஓரளவு தெரிந்திருந்த கார்த்திக், அந்த ஓநாய்கள் என்று அந்த கிராமத்தில் காலடெடுத்து வைத்ததுவோ, அன்றிலிருந்து அவர்களை பின் தொடர்கிறான். கார்த்திக் அவர்களை நெருங்கும் முன், அம்மு நெருங்கி அவனை அறைந்திருந்தாள். ஓரிரு நிமிடங்களில் அனைத்தும் கைமீறயிருந்தது.

ஏற்கனவே அவர்களை தொடர்ந்து கொண்டிருந்த கார்த்திக், இப்போது அவர்களிடமிருந்து அம்முவை காப்பாற்ற அதிக கவனத்துடன் இருந்தான். இந்த சூழ்நிலையில் ஈஸ்வர், பிந்துவின் திருமணச் செய்தி கார்த்திகை சற்று அசைத்துப் பார்த்தது.

நிச்சயதார்த்த நிகழ்வில் வைத்து அம்முவை அவர்கள் பார்த்த பார்வையில் வஞ்சம் நிரம்பி வழிந்தது, இந்நிலையில் அவர்கள் கிளம்பிய செய்தியறிந்த கார்த்திக், மிகவும் மகிழ்ச்சியுடன் அம்முவை காண சென்றபோதுதான் ஈஸ்வர், அம்மன் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறை அம்முவுக்கு அணிவித்தது. 

அந்தக் காட்சியைக் கண்டு மனமுடைந்த கார்த்திக் சில மணிநேரங்கள் தன்னை மறந்தான். அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த கோவிலில் இருந்து, ஈஸ்வரை தினமும் சந்திக்கும் ஆற்றங்கரையை அடைந்திருந்தாள் அம்மு. ஏன் அங்கு சென்றால் என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

ஈஸ்வரிடம் ஊரை விட்டு கிளம்புவதாக போக்குக்கட்டி சென்ற அவன் நண்பர்கள் இருவரும், மீண்டும் அந்த கிராமத்தை அடைந்தபோது, ஈஸ்வர் அம்முவிற்கு மஞ்சள் கயிறை அணிந்திருந்தான். இந்த காட்சியை அவர்களும் கண்டு சில நொடிகள் ஸ்தம்பித்தனர். 

அவர்கள் வந்தது கார்த்திக், ஈஸ்வர் என யாருக்கும் தெரியாது.

நீண்ட நேரமாக அம்முவை காணாது, தேடிய பிந்து ஆற்றங்கரையில் சற்று தூரத்தில் தன்னிலை மறந்து அம்மு அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவளை அடைய சில அடி தூரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அந்த கயவர்களிடம் மாட்டிக் கொண்டாள். 

“உன்னை லைட்டா உரசினதுக்கே, உன் தங்கச்சி என்னை அறைந்தாள்ல, இப்ப முழுசா உன்னை தொடரேன், என்ன பண்ணுறான்னு பார்க்கிறேன்?” வன்மமாக கூறிய அந்த ஓநாய் பிந்துவின் கரத்தைப் பற்றி இழுத்தது.

அதில் அலறிய அவள் குரலை கேட்டதும், தன்னிலை அடைந்து அவர்களை நோக்கி ஓடிய அம்மு, அந்த கயவனை தள்ளிவிட்டாள். பிந்துவின் கரம் அவனிடமிருந்து விடுபட்டது. அவளை இழுத்து கொண்டு ஓடத் துவங்கிய, அம்முவின் கரத்தை அந்த இன்னொரு கயவன்  பற்றியிருந்தான்.

“பிந்து இந்த இடத்தில் நீக்காத. சீக்கிரம் போய் ஊர்ல யாரையாவது கூட்டிட்டு வா.” என பிந்துவின் கரத்தை விடுவித்தாள். அம்முவை அவர்களிடம் விட்டு விட்டு செல்ல பயந்த பிந்து தயங்கி நிற்க,”நிற்காத! ஓடு இவங்க கிட்ட மாட்டிக்காத” என பிந்துவை காப்பாற்றி இவள் மாட்டிக் கொண்டாள். 

‘எங்கே ஊரிலிருந்து ஆட்கள் வந்து விடுவார்களோ?’ என பயந்த அந்த கயவர்கள், அவர்களிடமிருந்த மயக்கமருந்தின் உதவியுடன் இவளை தூக்கி கொண்டு அந்த இடத்தை காலி செய்தார்கள். ஊரிலிருந்து வந்த யாராலும் அந்த கயவர்களை கண்டறிய முடியவில்லை. 

திருவிழாவிற்கு பலரும் அங்கு வந்து சென்று கொண்டிருந்ததால், ‘அம்முவை இழுத்துச் சென்றது யார்?’ என்பது யாருக்கும் தெரியாமலே போனது.

அம்முவை தூக்கி சென்றவர்கள், அவர்களுக்கு சொந்தமாக இருந்த ஒரு காட்டு பங்களாவிற்கு கொண்டு சென்றனர். மயக்கம் தெளிந்து எழுந்த பெண் கண்டது, முழு போதையிலிருந்த அந்த இரு நாய்களையும். 

“டேய் எதுக்குடா என்னை தூக்கிட்டு வந்தீங்க? விடுங்கடா பொருக்கிங்களா” என்றாள் அம்மு.

“இப்பதான் ஒருத்தனை பொருக்கின்னு சொல்லி கழுத்தில் மஞ்சள்கயிறு வாங்கியிருக்க. அடுத்து எங்களையா சேதாரம் உனக்குதான்.” என்றான் வஞ்சகமாக.

தன் கழுத்திலிருந்த தாலியை குனிந்து பார்த்த பெண்ணின் முகத்தில் எந்த உணர்வுமில்லை. “எங்களுக்கு எப்படி தெரியும் பாக்குறியா? நாங்க தான் அங்க இருந்தோமே.” 

அவளது அசைவில்லா பார்வையை பார்த்துக்கொண்டே,”எப்பயும் காசுக்காக வர பொண்ணுங்களை நாங்கள் ஷேர் பண்ணுவோம். உன்கிட்ட கொஞ்ச வித்தியாசம். அவன் தாலி கட்டியிருக்கான்.” என இடைவெளிவிட்டான்.

அம்முக்கு பலத்த அதிர்ச்சி,’இவன் என்ன சொல்கிறான்? ஈஸ்வரனை பெண் பித்தன் என்று சொல்கிறான்னா அப்ப பிந்துவின் வாழ்வு?’ என இப்போதும் பிந்துக்காகவே துடித்தது அவள் இதயம். 

அவன் தொடர்ந்தான்,”நாங்கள் முதலிரவை கொண்டாடப் போறோம்.” என் வன்மமாக உரைத்தது அந்த ஓநாய். பெண்ணின் காலடியில் பூமி நழுவியது. 

அவளை நெருங்கிய ஒருவன்,”என்னதான் இருந்தாலும் என்னோட ஃப்ரெண்ட் உன் கழுத்தில் மஞ்சகயிறு கட்டி இருக்கான். அதோட உன்னை தொட மனசு உறுத்துது. அதனால என்ன பண்ணலாம்?” யோசிப்பது போல செய்து பிறகு,”அதை கழட்டி விடலாம்”என ஈவு இரக்கமின்றி உரைத்தவன், அவள் கழுத்தில் இருந்த கயிறை அறுத்தெறிந்தான். 

அம்முவின் கழுத்திலேறிய மஞ்சள்கயிறு, சிறிது நேரத்திலேயே அந்த கழுத்திலிருந்து இறங்கியிருந்தது. “எனக்கு போதை இறங்கிருச்சு, இன்னும் கொஞ்சம் ஏத்திட்டு வரேன்” என அங்கிருந்து அகன்றான்.

“என் கன்னத்தில் அறைந்தாய் இல்லையா? அதுக்கு தண்டனை” என உளறிக்கொண்டே, மீதி இருந்தவன் அந்த சிறு மலரை கசக்கியிருந்தான். காதல், கணவன் மனைவி உறவு, தாம்பத்தியம் என எதைப் பற்றியும் தெரியாத அந்த சிறு மலருக்கு, வலிக்க வலிக்க காமப் பாடம் எடுத்தான் அந்த கயவன். 

அந்த சிறு பறவையின் சிறகுகள் அனைத்தையும் வெட்டி எறிந்த அந்த காமுகன், தன் தேவை முடியவும் அடுத்த அறைக்கு சென்று மீண்டும் போதை ஏற்றி மயக்கத்தில் ஆழ்ந்தான். 

தாலியை கழற்றி எறிந்த கயவன் உள்ளே நுழைந்தான். வாடி வதங்கிபோய் கிடந்த அந்த சிறு மலரை கண்டு இரக்கம் வராத அந்த காமுகன், அவளிடம் தன் தேவையைத் தீர்க்க முயற்சிக்க, எங்கிருந்துதான் அவ்வளவு பலம் வந்ததோ பெண் அவளுக்கு?

அவனைப் பிடித்துத் தள்ளியவள், அவனை அடிக்க ஏதுவாக தேட, அங்கு ஒன்றும் கிடைக்காமல் போனது. அவள் கண்களில் பட்டது அவன் கழட்டி எறிந்திருந்த அந்த மஞ்சள் கயிறு. அதை கைகளில் எடுத்த பெண் அவன் கழுத்தில் அதை வைத்து அழுத்தி, அவனை கொன்றிருந்தால்.

அம்மன் கழுத்திலிருந்து, பெண்ணின் கழுத்திற்கு மாறி, ஒரு கொடிய அரக்கனை வதம் செய்திருந்தது அந்த மஞ்சள் கயிறு. 

அவன் இறந்து போனது கூட தெரியாமல், அந்த பங்களாவிலிருந்து வெளியேறி தன்னந்தனியாக அந்த காட்டில் ஓடினாள். தூரத்தில் இருந்து வெளிச்சம் வர அதை நோக்கி ஓடினால் பெண். அவள் செல்லும் முன் அந்த கார் அவளை கடந்திருந்தது. பெண் அங்கேயே மயங்கி சரிந்தாள்.

அந்தக் காரின் பின் இருக்கையில் இருந்த ரிஷி பெண்ணை கண்டு,”அண்ணா காரை நிறுத்துங்கள்”. 

கார் நிற்கவும் தான் கழட்டி வைத்திருந்த ஓவர் கோட்டை எடுத்துக்கொண்டு, பெண்ணை நெருங்கிய ரிஷி,’அவளை இந்த கோலத்தில், தன்னுடன் வந்தவர்களும் பார்க்க கூடாது’ என அந்த ஓவர் கோர்ட்டால் அவளை மறைத்திருந்தான்.

சகோதரியின் திருமண நிச்சயத்திற்காக ஆசை, ஆசையாக அணிந்திருந்த பாவாடை தாவணி, இப்போது அலங்கோலமாக யாரும் பார்க்கக் கூடாத காட்சியில் பெண்.

ரிஷி தன் கரத்தில் அவளை தூக்கிச்சென்று, தனக்குத் தெரிந்த மருத்துவரை வைத்து அவளுக்கு வைத்தியம் பார்த்து, அவளின் நிலையை தெரிந்து கொண்டான். 

மயக்கம் தெளிந்த பின் ஆண்களைக் கண்டாலே பயந்து நடுங்கினாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தேற்றி, அவளைப் பற்றி அறிந்துகொண்டு, பெரிய வீட்டிற்கு அழைத்து அம்முவைப்பற்றி தெரிவிக்கும்போது பத்து நாட்களை கடந்திருந்தது.

அங்கு அவர்களுக்கு பேரிடியாக கிடைத்த செய்தி,’அம்முவை பற்றிய கவலையிலேயே, வேலை செய்த அவரின் அன்னை தீக்கிரையானார். அவர் உயிருக்கு போராடும் காட்சியை கண்ட பிந்து, பித்து பிடித்த நிலையில் இருக்கிறாள்’ என.

ஒருநாள் அம்முவை அழைத்துச் சென்ற ரிஷி, இரவு வேளையில் பெரிய வீட்டை அடைந்து, கார்த்திக், ரேகா, தாத்தா, பாட்டியிடம் அம்முவின் நிலையை விளக்கி, பின்பு இருவரையும் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டான். 

அதில் அதிக துடிப்பு யாருக்கு என பிரித்து அறிய முடியாது. கார்த்தி ஒரு பக்கம் ‘தான் தவறு செய்துவிட்டோம்?’ என மருகினான். பிந்து ஒரு பக்கம் ‘தன்னால் தான்’ என பித்து பிடித்திருந்தாள். 

இதற்கிடையில் அந்தக் கயவர்களை பற்றி விசாரிக்க, கிடைத்த தகவல், ஒருவன் இறந்துவிட்டான். அவனது இறப்பு செய்தி ஆக்சிடென்டாக கட்டப்பட்டது அவனது பெற்றோர்களால். 

†††

அனைத்தையும் கூறி முடித்த பெண்,”இதுதான் நடந்தது. உன் நண்பர்களால் என் அன்னையை இழந்தேன், உயிருடன் பிந்துவை தொலைத்து நிற்கிறேன், இது இரண்டிற்கும் மேலாக என் கற்பை பறிகொடுத்தேன்.”

அவள் கூறிய அனைத்தையும் கேட்ட ஈஸ்வர் பேச்சற்று போனான். கார்த்திக் தன்னிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தமும் இப்பொழுது புரிந்தது. 

“என்னை மன்னிச்சிடு அம்மு, என்னால்தான் உனக்கு இவ்வளவு கஷ்டமும்” மனதார மன்னிப்பு கோரினான்.

“நான் அம்மு இல்ல. அம்மு செத்துப்போய் நாலு வருஷமாச்சு. கால் மீ மித்து.” என்றால் சீராளாக.

“ஓகே கூல் டவுன் பேபி. உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கினவன நான் சும்மா விடமாட்டேன்” கோபத்தில் கர்ஜித்தான்.

“இட்ஸ் டூ லேட் ருத்ரா?” என்றாள் கசந்த புன்னகையுடன்.

ருத்ரேஸ்வரனின் கண்கள் இடுங்கியது கேள்வியால்.