நினைவு தூங்கிடாது 16

நிஜம் 16

அரசன் அன்று கொள்வான்…

தெய்வம் நின்று கொல்லும்…

தெய்வம் வகுத்த கணக்கை

 என்னவென்று நான் சொல்ல…

உதய் பேரடைஸ்

ஆடம்பரமான ஐந்து நட்சத்திர விடுதி. நட்சத்திர விடுதி என்றாலே ஆடம்பரமாக தான் இருக்கும். அதிலும் இந்த விடுதி, தமிழ்நாட்டில்! விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவரான, உதயகுமாரின் ஒரே வாரிசான சூரஜுக்கு சொந்தமானது. ஆடம்பரத்துக்கு கேட்கவா வேண்டும்? பணத்தை கொட்டி இதை வடிவமைத்திருக்கிறார்கள்.

மேல்மட்ட நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களால் கூட, இந்த விடுதியில் கால் பதிக்க முடியாது. நிறைய பணத்தை மூட்டை மூட்டையாக கட்டி வைத்து, அதை ‘எப்படி செலவு செய்வது?’ என தெரியாமல், மது, மாதுவிற்கு அடிமையாகி, கெட்டு குட்டிச் சுவராகி போன, பணக்கார வீட்டு வாரிசுகளுக்கு என்றே நிறுவப்படுகிறது. இங்கு வருபவர்களுக்கு எல்லைகள் என்பதே கிடையாது. 

அந்த விடுதியின் டான்ஸிங் ஃப்லோர்:

மங்கிய ஒளியிலும், காதை கிழிக்கும் ஓசையிலும், பல இளம்பெண்களும் ஆண்களும், தங்களை மறந்து ஆடிக்கொண்டிருந்தனர். இல்லை, இல்லை அப்படிச் சொல்லக் கூடாது, போதையின் பிடியில் தங்களை மறந்து, வரம்பு மீறி கொண்டிருந்தனர்.

கணவன் மட்டும் கானும் அழகை, தடைகளின்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

அந்த அறையின் மங்கிய ஒளியை, மேலும் மங்கலாக்க,  பளிச்சென்ற நிலா முகத்துடன்,  ஒரு அழகிய இளம் பெண் நுழைந்தாள்.

அவள்! வானில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு போட்டியாக, இன்றைய மண்ணுலக நட்சத்திரம், திரையுலகின் முடி சூடா அரசி, பல காளையர்களின் கனவுக் கன்னி மித்ராலினி.

அவள் அணிந்திருப்பது தமிழ் கலாச்சார உடையான சேலை. ஆனால் அந்த ‘சேலையை கூட, இவ்வளவு கவர்ச்சியாக கட்ட முடியும்’ என்பதை நிரூபித்திருந்தாள். மனதை மயக்கும் செயற்கை ஒப்பனையில் ஜொலித்தாள்.

அவளது விழிகள் யாரையோ தேடிக் கண்டுகொண்டது. அடடா! அந்த விழிகளில் தான் எத்தனை பளபளப்பு, கண் முன் இருக்கும், தன் இரையை வேட்டையாடக் காத்திருக்கும் புலியின் பளபளப்பு.

அவள் விழி வட்டத்தில் சிக்கியது,  வளர்ந்து வரும் இன்றைய இளம் தொழிலதிபர் சூரஜ் உதயகுமார். இந்த ஆடம்பர விடுதியின் சொந்தக்காரன். இதழ்களில் தவழ்ந்த இகழ்ச்சி புன்னகையுடன் அவனை நெருங்கினாள் அந்த பெண்மான்.

அவளின் அசரடிக்கும் அழகில் மயங்கியவன் ‘தேனை உன்ன காத்திருக்கும் வண்டின்’ நிலையிலிருந்தான். “வெல்கம் கார்ஜியஸ்.” அவள் கரத்தை பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.

எதிர்பார்த்த இழுப்பில், அவனின் மேல் மெத்தென்று விழுந்தாள் பெண்மான். அவளின் அண்மையில் அவனுக்கு மோகம் தலைக்கேறியது.

தாபத்தோடு,”எவ்வளவு நேரம் உனக்காக வெயிட் பண்றது? கம் டார்லிங், லெட்ஸ் டான்ஸ்” என்றவன் இடது கரத்தை, முதுகோடு கொண்டு சென்று, சேலை மறைக்காத அவளின் வெற்றிடையில் படர விட்டு, தன் வலது கையுடன் அவளது இடது கரத்தை கோர்த்து, தன் கையணைப்பில் கொண்டு வந்தவன், அவள் தோள் வலைவில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.

இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த, ருத்ரேஸ்வரனின் மனதில் எரிமலையின் சீற்றம். சூரஜை அடித்து, வெளுக்கும் வெறியோடு, தன் இருக்கையை விட்டு எழுந்தே விட்டான்.

அவனது கோபத்தை கண்டு பதறிய கார்த்திக், அவனை பிடித்து அமர வைத்து,”பொறுமை ஈஸ்வர்‌. காரியத்தை கெடுத்துடாத” என அமைதி படுத்த முயன்றான். 

“அவன் என் அம்முவை கட்டிபிடிப்பான். அதை பார்த்துட்டு எப்படிடா பொறுமையா இருக்க முடியும்?” சீறினான்.

அவனை ஒரு மார்க்கமாக பார்த்த கார்த்திக்,”ஏன் நான் பொறுமையா இருக்கலயா?” என்றான் கூலாக.

“நீயும் நானும் ஒன்னாடா?” ஈஸ்வர் முறைத்தான்.

“இன்னைய தேதிக்கு உனக்கும், எனக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.” என நக்கலாக கூறினான் கார்த்திக்.

ஈஸ்வருக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. “கூடிய சீக்கிரம் புரியும்” என்ற கார்த்திக், அம்முவை கண்காணிக்கும் வேலையை தொடர்ந்தான்.

சூரஜ் தொட்ட இடங்களெல்லாம் கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணர்ந்த பெண், ‘காரியம் முக்கியம்’ என பல்லை கடித்து சகித்துக் கொண்டாள். 

அவன் உட்கொண்ட போதை மருந்தின் தாக்கம் உடலெங்கும் பரவ, உடனிருக்கும் பெண்ணுடலும் கிளர்ச்சியுட்ட, சிறிது நேரத்தில் ஆண்மை விழித்து கொண்டது. அதற்கு மேல் கட்டுபடுத்த முடியாத ஆடவன்,

“டான்ஸ் போதும் டார்லிங். ஐ காண்ட் கண்ட்ரோல் எனி மோர். லேட்ஸ் கோ டு ரூம்(இதற்கு மேல் என்னால் கட்டுப்படுத்த முடியாது. அறைக்கு செல்லலாம்)” என, அவள் காது மடல்களில், உதடு உரச ரகசியம் பேசியவன், அவளை அழைத்து கொண்டு, தனது அறைக்கு சென்றான்.

ஈஸ்வரும், கார்த்திக்கும் அவர்களை பின்தொடர்ந்து, பாதி வழியில் அவனை மடக்கி, போதையில் மிதந்தவனை, விடுதியின் பின் வாசலில் நிறுத்தியிருந்த வாகனத்தில் அள்ளிக்கிட்டு, அம்முவையும் ஏற்றிக்கொண்டு பறந்தனர்.

அவனுக்கு சொந்தமான இந்த ஐந்து நட்சத்திர விடுதியில் தான், அவனது லீலைகள் அனைத்தும் (அதாவது பெண்களின் விருப்பத்துடன்) நடக்கும். ‘அவனின் மன்மத லீலைகள், எதுவும் ஊடகங்களில் கசிந்து, அவனின் பெயர் கெட்டு விடக்கூடாது. அப்படியே கசிந்தாலும் எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது’ என அவன் இருக்கும் நேரங்களில், கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் செயல்படாது. இதை அறிந்தே அவர்கள் செயல்பட்டார்கள்.

†††††

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அனைத்து தொலைக்காட்சிகளிலும் தலைப்புச்செய்தி:

“வளர்ந்து வரும், இன்றைய இளம் தொழிலதிபர் சூரஜ் உதயகுமார் மாயம். இரண்டு நாட்களாக காணவில்லை. கடந்த இருபத்தி நான்கு மணி நேரமாக, தீவிர தேடுதல் நடந்து கொண்டிருக்கிறது, என நம்பிக்கை வட்டத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.” என ஒளிபரப்பாகியது.

அதை குரூரமாக, உதட்டில் உறைந்த புன்னகையுடன், வெறித்திருந்தது ஒரு  உருவம். அந்த உருவம், இவனால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு, இப்போது மனநல காப்பகத்தில் இருக்கும் பிந்து என்கிற பிருந்தா.

அதே நேரம் அந்த செய்தியை, காட்டு பங்களாவில், ரிஷியின் தோளில் சாய்ந்து பார்த்திருந்தாள் அம்மு. எப்போதும் அவளது துக்கத்தை தாங்கி ஆதரவளித்த தோள், இப்போது நிம்மதியை தாங்கி நின்றது. அவளது பார்வை சூரஜை அடைத்து வைத்திருந்த அறையை நோக்கி திரும்பியது.

அந்த அறை! எங்கு அவளது சிறகுகள் பிடுங்கப்பட்டதோ? எங்கு அவளது ஆசைகளும், கனவுகளும் நசுக்கப்பட்டதோ? எங்கு அவளது எதிர்காலம் கருகியதோ? எங்கு அவளது உணர்வுகள் மரத்துப் போனதோ? எங்கு அவளது வாழ்வு வெறுத்ததோ? மொத்தத்தில் அவளை நடைபிணமாக மாற்றிய அதே அறை. 

“ஏய் மித்ரா! எங்க இருக்க? எதுக்கு என்னை கட்டி வச்சிருக்க? என் முன்னாடி வாடி.” என உறுமிக் கொண்டிருந்தான், கட்டப்பட்ட நிலையிலிருந்த சூரஜ்.

அதீத போதை மயக்கத்தில் இருந்தவன், தெளிந்ததிலிருந்து கத்திக்கொண்டே இருக்கிறான். இரண்டு நாட்களாக வெறும் தண்ணீர் மட்டும்தான் அவனது உணவு.

அவன் குரலைக் கேட்ட அம்மு, பெண் வேங்கையாக அந்த அறைக்குள் நுழைந்தாள். “என்னடா வேணும் உனக்கு? நான் தான் உன்னை கடத்தினேன். இப்போ அதுக்கு என்னங்கற? உனக்கு முன்னாடி தான நிக்கறேன், என்ன பண்ண முடியும் உன்னால்?” என்றாள் திமிராக.

“யாருடி நீ? எதுக்கு என்னை கடத்தின? எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?” சரமாரியாக கேள்வி எழுப்பினான்.

“இன்னுமாடா நான் யாருன்னு உனக்கு தெரியல? சோ சேட்.” நக்கல் வழிந்தது.

“சொல்லுடி யார் நீ?”

“ஒருத்தர், ரெண்டு பேர் வாழ்க்கையை கெடுத்திருந்தால், ஞாபகம் இருக்கும். நீ தான் பாக்குற  அத்தனை பொண்ணுங்க கிட்டையும், உன்னோட லீலைகளை காட்டி இருக்கயே? அப்புறம் எப்படி என்னை தெரியும்?”

“?”

“நாலு வருஷத்துக்கு முன்னாடி, அழகான குருவி கூடா இருந்த எங்க குடும்பத்தை கலைச்சது நீ. என்னை கடத்தி, இதோ இதே இடத்தில் வச்சு சிதைச்சது நீ. என்னோட ஆசை, கனவு, காதல் என அனைத்தையும் குழி தோண்டி புதைச்சது நீ” பேச பேச உக்கிரம் அதிகமானது. சில நொடி மௌனத்தில் தன் உக்கரத்தை குறைத்துக் கொண்டாள்.

“இன்னுமா ஞாபகம் வரல? சரி இன்னொன்னு சொல்றேன், அப்பவாது தெரியுதா பாரு? உன்னோட ஆருயிர் நண்பன், கிரைம் பார்ட்னரை இதே இடத்தில வைச்சு, என் கையால் அவன் கழுத்தை நெரித்து கொன்னேன்” அவனது முகம் திகைப்பைக் காட்டியது.

†††††

திகைப்பு மாறாமல்,”அப்ப நீ… நீ… அந்த பட்டிக்கா… பொண்ணுனா? ருத்ர… கயிற… கட்டி.. நீ இன்னு… உயிரோ… இருக்..?” வார்த்தைகள் சிக்கி கொண்டது.

“அடடா ஞாபகம் வந்திருச்சுபோல! உனக்கு புரிய வைக்க ரொம்ப கஷ்டப்படணும்னு நினைச்சேன். பரவாயில்லை நீ அவ்ளோ தத்தி இல்லை. என்ன கேட்ட ‘நான் இன்னமுமா உயிரோடு இருக்கேனாவா?’ உன்ன மாதிரி கேடுகெட்ட பொறுக்கி நாய்கள், எல்லாம் உயிரோடு இருக்கும்போது, நான் இருக்க மாட்டேனா?” பல்லை கடித்து கர்ஜித்தாள்.

“சரி அதுக்கு பழிக்கு பழி வாங்க வந்திருக்கியா? அது உன்னால முடியுமா? நான் யாருன்னு தெரியாம என்கிட்ட மோதுற.” முதல் கட்ட அதிர்ச்சி விலகி கொஞ்சம் தெளிந்திருந்தான்.

“உன்ன பத்தின அத்தனை விஷயமும், எவிடன்ஸோட என் கையில் இருக்கு. நீ கடைசியா போன பப் வரைக்கும், இதுல இருக்கு. இந்த நிமிஷம் போலீஸ்ல சொன்னாலும், நோ பேயில் அரெஸ்ட் தான்.” என ஒரு கோப்பையை அவனிடம் காட்டினாள்.

அவள் கூறியதில் பயம் வந்தது. ஆனால் அதை மறைத்துக்கொண்டு, “போலீசா! எந்த போலீசுக்கு என் மேல் கை வைக்க தைரியம் இருக்கு? ஒழுங்கா என்னை விட்டுடு. இல்லைனா உனக்கு தான் பிரச்சனை.” அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் பெண்.

“என்னடா, போனா போகுதுன்னு கொஞ்சம் விட்டா, ரொம்ப பேசிக்கிட்டே போற. என்ன மிரட்டி பார்க்கிறாயா? உன்னால் ஒரு ம… புடுங்க முடியாது. உனக்கு ஒரு ஹாட் நியூஸ் சொல்லவா? எல்லா செய்தி சேனல்களிலும் நீதான் தலைப்புச் செய்தி. என்னேன்னு தெரியுமா? “தொழிலதிபர் சூரஜ் உதயகுமார் மாயம். இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டை.” என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு. கைகள் கட்டப்பட்டு இருப்பதால், அவள் அடித்த கன்னத்தை பிடிக்க கூட முடியாமல், அவளையே வெறித்திருந்தான்.

“பாவம் உன் பேரன்ட்ஸ். உன்னை மாதிரி கேடு கெட்ட ஒரு பொருக்கியை பிள்ளையாய் பெத்து, ஊர் மேய விட்டதுக்கு, அவங்களுக்கும் தண்டனை வேண்டாம்? எவ்வளவு தேடினாலும் யாராலும் உன்னை கண்டுபிடிக்க முடியாது. உனக்கு சொந்தமான இந்த இடத்தை பத்தி உன் பேரன்ட்ஸ்க்கு கூட தெரியாது. இங்க அவ்வளவு அயோக்கியத்தனம் பண்ணியிருக்க.” என நிறுத்தி அவன் கண்களுக்குள் ஊடுருவி,

“பாத்தியா உன்னோட நேரம், நீ அயோக்கியத்தனம் பண்றதுக்காக கட்டிவச்ச வசந்த மாளிகை, இப்ப உன்னோட கல்லறையாக போகுது. இங்க வச்சு எத்தனை பெண்களோட வாழ்க்கையை அழிச்சிருக்க, இப்ப அவங்களோட கண்ணீருக்கு பதில் சொல்லும் நேரம்” என்றாள் கடின குரலில். 

ஆம்! இந்த மாளிகையில் பல பெண்களின் கண்ணீர் கரைகள் கலந்திருக்கிறது. இந்த மனித மிருகமும், அன்று அம்முவால் கொல்லப்பட்ட மனித மிருகமும், எந்த பெண்ணையாவது ஆசைப்பட்டு, இவர்களது இச்சைக்கு அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால், தயவு தாட்சனம் இல்லாமல் அந்தப் பெண்ணை கடத்தி, மிரட்டி இங்கு வைத்து நாசம் செய்திருக்கிறார்கள். 

வினை விதைத்தவன் வினை அறுக்க காத்திருக்கிறான்:

†††††

ஈஸ்வரை பொறுத்த வரை துரோகம் செய்பவர்களுக்கு எமன். இந்த மாதிரி கேடு கெட்ட வேலைகள் அவனுக்கு பிடிக்காது. அதனால் அவனிடம் மறைத்தே இவர்களின் லீலைகள் தொடர்ந்தது.

இவர்களின் இந்த கருப்பு பக்கத்தை தெரியாத ஈஸ்வர், ‘தன்னை போலவே, விருப்பத்துடன் வரும் பெண்களிடம் மட்டுமே, உடல் தேவையை தீர்த்துக் கொள்கிறார்கள்’ என தப்பு கணக்கு போட்டிருந்தான். அதனால் தான் கார்த்திக் இவர்களை பற்றி சொன்னபோது ஈஸ்வர் நம்பவில்லை, தன்னவளின் நிலை தெரியும் வரை.

பல பிரபலமான நடிகைகள் பணத்துக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு, இவர்களுக்கு அடிபணிந்து போயினர். அவர்களின் ஆசைக்கு அடிபணியாத பெண்களை மிரட்டி பணிய வைத்தனர். மிரட்டியும் பணியாத பெண்களை இந்த மாளிகைக்கு கடத்தி வந்து நாசம் செய்திருக்கின்றனர்.

அவர்களது இலக்கு எப்பொழுதும் மேல்மட்ட பெண்களாக மட்டுமே இருந்தது. அவர்களை எதிர்த்த அம்மு மட்டுமே இதிலிருந்து விதி விலக்கு. அவர்களது இலக்கு எப்பொழுது மாறியதோ? அப்போழுதே அவர்களின் விதியும் மாறியது.

அவர்களது இந்த குணத்தை அறிந்த பெண்,’தன் அந்தஸ்து உயர வேண்டும். அப்போதுதான் அவனை நெருங்க முடியும். அதற்கு ஒரே வழி தான் உள்ளது. திரையுலகில் நுழைய வேண்டும்.’ என்பதை உணர்ந்து, திரையுலகில் கால் பதிக்க ரிஷியின் உதவியை நாடினாள்.

திரையுலகில் இருக்கும் சிக்கல்களை எடுத்து கூறி, அவள் நடிப்பதற்கு ரிஷி சம்மதிக்காத போது, படுக்கையை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருந்தாள் பாவை. ‘ஏற்கனவே ஒருவனால் கலங்கப்பட்டவள், புதிதாக கெடுவதற்கு ஒன்றுமில்லை’ என்பதே அவளது அப்போதைய எண்ணம்.

அவளது எண்ணத்தை உணர்ந்த ரிஷியும், அவளின் மானத்துக்கு பங்கம் வராத அளவு, சில கண்டிஷன்களை போட்டு தன்னுடனே பாதுகாப்பாக வைத்துக் கொண்டான். அவளுக்கு அனைத்து விதத்திலும் உதவியாகவும், பக்க பலமாகவும், முக்கியமாக காவலனாகவும் இருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக கடந்த கால பாதிப்பிலிருந்து, அவளை  மீட்டு கொண்டு வந்தான். அவள் தன் இலக்கை அடைந்தது விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது. 

ஆம், ருத்ரா! மித்ராவாகிய அம்முவை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த, அதே விருது வழங்கும் நிகழ்ச்சியில்தான், சூரஜும் அவளைக் கண்டான்.

ருத்ரா! தன் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கும், தன்னவளின் முகத்தை உடனே அடையாளம் கண்டு கொண்டான். ஆனால் சூரஜ் அப்படி இல்லை. அவன் நாசம் செய்த பல பெண்களில் அம்முவும் ஒருத்தி. அதனால் அவனுக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. 

அன்று கலை அரங்கத்தில் விஐபியாக, பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த சூரஜ், அவள் அழகில் மயங்கினான். மேடையிலிருந்த மித்ராவின் பார்வை அனைத்தும், விஐபியாக இருந்த தன் இரையின் மீதே இருந்தது. ‘தன்னவள் தன்னை பார்க்கவில்லை’ என்ற கோபத்தில், திரையுலகத்தை வெறுக்கும் ருத்ரா, அவளுடன் நடிக்க சம்மதித்தான்.

விழாவில் அம்முவை கண்ட சூரஜுக்கு, அவளின் மேல் மோகம் தலைவிரித்தாடியது. ‘அவள் வேண்டும்’ என, அவன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் சத்தமிட, அம்முவை கைபேசியில் அழைத்துவிட்டான். “ஹே கார்ஜியஸ்! நான் சூரஜ். ‘உதய் பேரடைஸின்’ ஓனர். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு நாள் நம்ம டேட்டிங் போலாமா?” என்றான் போதை ஏறிய குரலில்.

அவனின் அந்த அழைப்பிற்காகவே காத்திருந்த பெண்ணும், உடனே தன் சம்மதத்தை தெரிவித்திருந்தாள். ‘எப்படி உடனடியாக சம்மதித்தால்?’ என கொஞ்சம் கூட சந்தேகம் வராத சூரஜ், அவளை அடையும் நாளுக்காக காத்திருந்தான்.

அப்படி ஒரு நாள், சூரஜ் அவளை அழைத்து சென்ற போது, ரிஷியின் உதவியுடன் அவனை மயங்க வைத்தாள். அவனின் கைரேகையை பதித்து, அவனின் கைபேசி மற்றும் மடிகணினியை இயக்கி, அதில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துக் கொண்டாள்.

அவனின் லீலைகள் அனைத்தும் அதில் வீடியோக்களாக பதியப்பட்டிருந்தது. 

தற்போது அம்முவிடம் மாட்டி முழி பிதுங்கி நிற்கிறான்,”நான் அன்னைக்கே உன்னை எச்சரித்தேன், என்கிட்ட வச்சுக்காத அப்பறம் நீ உயிரோடவே இருக்க மாட்டேன்னு. கேட்டியா?” என்றவள் அவனை நெருங்கி, அவன் கன்னத்தில் மாறி மாறி, தன் கை ஓயும்வரை அறைந்தாள்.

தன் கடந்த கால நினைவுகளால் சோர்ந்து போயிருந்தாள் பெண். மெல்லிய மனம் படைத்த பெண்ணால், அதற்குமேல் செல்ல முடியவில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ரிஷியின் மார்பில் தஞ்சம் அடைந்தாள். அவனும் அவளை சமாதானப்படுத்தி, கார்த்திக், கிரியுடன் வெளியேறி, அங்கிருந்த காரில் காத்திருந்தான். 

†††††

இந்த நொடியிலிருந்து சூரஜ், ருத்ரேஸ்வரனின் கட்டுப்பாட்டிற்கு வந்தான். ருத்ரா ஆடப் போகும், ருத்ர தாண்டவத்தின் உச்சகட்டம் இப்போது.

காட்டின் அரசன், சிங்கத்தின் தோரணையில் அறைக்குள் நுழைந்தான் ருத்ரேஸ்வரன். அவனை கண்ட சூரஜ்,”டேய் ருத்ரா! வந்துட்டயா? பாருடா என் நிலையை? அந்த சினிமாகாரி மித்ராலினி என்னை கடத்தி, கட்டி போட்டுட்டா?” என்றான். இந்த கடத்தலின் சூத்திர காரனே இவன் தான் என தெரியாமல், இவனிடமே புகார் வாசித்தான், அந்த அறிவாளி சூரஜ் உதயகுமார்.

ருத்ரா இறுகிய முகத்துடன் சூரஜை பார்த்திருந்தான். அந்த பார்வையே தவறு  செய்தவர்களை குலை நடுங்க வைக்கும். ருத்ராவின் இந்த பார்வைக்குண்டான அர்த்தம், இத்தனை காலம் உடனிருந்த சூரஜுக்கு தெரியாமல் இருக்குமா? தன் அழிவு அவன் கண்முன் தெரிந்தது.

“என்னடா இன்னும் முழுசா இருக்க? உன் பல்லையாவது உடச்சிருப்பான்னு பார்த்தேன். பாவம் அம்மு. அவ்வளவு மென்மையானவ. பரவாயில்லை விடு, உனக்கான தண்டனையை நானே குடுக்கறேன்” என்றதும், சூரஜின் பார்வை அச்சத்துடன் ருத்ராவை நோக்கியது.

“‘என் எதிரியை கூட மன்னிப்பேன். துரோகியை மன்னிக்க மாட்டேன்’ என தெரிஞ்சே, எவ்வளவு பெரிய துரோகத்தை எனக்கு செஞ்சிருக்க? உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் அதை மறைச்சிட்டு, இத்தனை வருஷமா என் கூட பழகி இருப்ப?” என கர்ஜித்தவன் அவனை நெருங்கி,

“இந்த கை தானே என் பொண்டாட்டியை தொட்டது. இனி உனக்கு இது தேவையில்லை” என அவன் கையை உடைத்தான். ‘என்னது பொண்டாட்டியா?’ என உடனிருந்த ருத்ராவின் பிஏ மனோகர் வாயை பிளந்தான்.

“இந்த கண்கள் தானே என் அம்முவை ரசித்தது.” என்று கண்ணை குருடாக்கினான். உதய் பேரடைஸில் வைத்து அவனை ஒன்றும் செய்ய முடியாத, ஆத்திரம் இப்போதுதான் தீர்ந்தது. 

“இது இருப்பதால் தானே என் அம்முவுடன் சேர்ந்து, பல பெண்களை நாசம் செய்த” எனக் கூறியவன், சூரஜின் ஆணுறுப்பில் ஆசிடை ஊற்றினான். 

ருத்ராவின் ஒவ்வொரு தண்டனைக்கும் சூரஜ் கதறியது, காரிலிருந்த அனைவரின் செவியையும் தீண்டியது. அதை தாங்க முடியாத அம்மு, மேலும் ரிஷியுடன் ஒன்றினாள். அவளின் நிலையை உணர்ந்தவன் அவளை இறுக்கி அனைத்து கொண்டான்.

அந்த பங்களாவின் தோட்டத்தில் குழி தோண்டி, சூரஜை உயிருடன் புதைக்கும் பொறுப்பை, மனோகரிடம் ஒப்படைத்துவிட்டு, தன்னவளிடம் விரைந்தான் ருத்ரா.

காரில்! அம்முவை நெருங்கிய ருத்ரா, ரிஷியிடமிருந்து அவளை பிரித்து, தன் மார்பில் புதைத்துக் கொண்டான். இதை உணரும் நிலையில் இல்லாதவள், மேலும் அவனுடன் ஒன்றினாள். ருத்ராவிற்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ‘தன்னவள் தன்னிடம் வந்து விட்டால்’ என நினைத்து. பாவம் அவன் அறியவில்லை, அவள் சுயநினைவிற்கு வந்ததும் அவனுக்கு வைக்கப் போகும் ஆப்பை.

ருத்ராவின் உரிமை உணர்வை கண்ட ரிஷியின் முகத்தில் அழகான புன்னகை உதயமானது. கார்த்திக்கும் ரிஷியும் கண்களால் பேசிக்கொண்டதை, அம்முவுடன் கனவுலகத்தில் மிதந்த ருத்ரேஸ்வரன் கவனிக்கவில்லை.

இவ்வாறு சூரஜை பழிவாங்க, மித்ரா நான்கு வருடங்களாக எடுத்த ஒவ்வொரு முயற்சிக்கும், பக்கபலமாக நின்றனர் ரிஷி, கிரிதரன், கார்த்திக் இவர்களுடன் இப்போது ருத்ரேஸ்வரன்.

அம்மு வைக்க போகும் ஆப்பு என்ன?