நினைவு தூங்கிடாது 17.2

நிஜம் 17

ஈஸ்வர் என்ற பெயர், பிந்துவிடம் மாற்றத்தை வரவைத்தது. அதுவரை வெற்று சுவரையே வெறித்து கொண்டிருந்தவள் சுற்றமும் உணர ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளது நினைவுகள் திரும்பிக் கொண்டிருந்தது.

இதற்கிடையில் ருத்ராவும், மித்ராவும் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருந்தது. ஈஸ்வரன் அம்முவின் உறவு தாமரை இலைத் தண்ணீர் போல் ஒட்டாமல், முறைத்துக் கொண்டே சென்றது. 

தற்போது நடிக்கும் படம் இவர்களது வாழ்க்கையை மையமாக கொண்ட கதைக்களம், என்பதால் அம்மு உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்தாள். ருத்ரனும் அவளுள் தூங்காமல் இருக்கும் பசுமையான நினைவலைகளை தட்டி எழுப்பி, அவளை தன்னிடம் நெருங்க  வைக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

ஈஸ்வரன் எதிர்பார்த்ததுபோல் ‘தங்கள் இருவருக்குள்ளும் நிகழ்ந்த நெருக்கமான தருணங்களை நினைவு கூர்ந்தவள், ‘தன்னைப் பெண்ணாக உணர வைத்த’ தன் கட்டவண்டியின் கை சிறையில் அடங்கிடவே ஆவல் கொண்டாள். ஆனால் அது ‘தன் அன்னை, சகோதரி, ஏன் தன் கட்டவண்டிக்கும் செய்யும் துரோகம்’ என கருதி அவனிடமிருந்து விலகினாள். 

ஆம் அவள் மனதில் ‘தான் ஈஸ்வருடன் இணைவது’ அவர்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதினாள் பெண். அதனாலேயே அவன் மீது மழையளவு ஆசையிருந்தும் அதை மனதினுல்லே புதைத்தாள்.

தன் அன்னையின் ஆசை ‘பிந்து ஈஸ்வர்  திருமணம்’. அதற்கு தகுந்தது போல் மீண்டும் ஈஸ்வரின் பெயரை கேட்டவுடன் தன் சுயத்தை அடைந்து கொண்டிருக்கிறாள் பிந்து. கெட்டுப்போன தான் ஈஸ்வருக்கு பொருத்தம் இல்லை எந்த களங்கமும் இல்லாத பிந்துவே அவனுக்கு பொருத்தம் என நம்பினாள். 

†††

பிந்துவின் சிகிச்சை நடந்து கொண்டிருப்பது பசுஞ்சோலை அருகிலிருக்கும் ஒரு நகரில். அவளுக்கு நடக்கும் சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தும் ரிஷி ஏற்றுக் கொண்டான். 

அம்முவிற்கு அந்தக் கயவர்களை பழிவாங்கும் எண்ணம் மனதில் பதிந்திருந்ததால், பிந்துவை அங்கயே ஒரு மருத்துவமனையில் அனுமதித்து, ரேகாவின் பொறுப்பில் அவளை விட்டாள். 

ரேகாவை திருமணம் செய்ய கார்த்திக்கின் வீட்டில் சம்மதம் வேண்டி நிற்க,’எப்படியும் அம்மு தனக்கு கிடைக்க மாட்டாள். ஈஸ்வர் அதற்கு அனுமதிக்க மாட்டான்’ என்பதை தெரிந்து, ரேகாவை மனதார தன் சரி பாதியாக ஏற்றுக்கொண்டான்.

விருது வழங்கும் விழா அன்று, கார்த்திக்கிடம் ருத்ராவை  பற்றி தெரிவித்தபோது, அவன் இருந்தது பிந்துவின் அருகில் ரேகாவுடன். ஈஸ்வர் என்ற பெயர் பிந்துவின் செவியை தீண்ட, அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது‌. 

ஈஸ்வர் என்ற பெயர் பிந்துவிடம் மாற்றத்தை ஏற்படுத்தியதால், அவன் அங்கு வந்தால் பிந்து குணமாவால் என நம்பி, அவன் பொறாமையை தூண்டி அவனை பசுஞ்சோலை கிராமத்திற்கு இழுத்து வந்திருந்தால் மித்ராவாகிய அம்மு.

அங்கு வந்தால் ‘அவள் உயிராக விரும்பும் ருத்ராவை இழக்க வேண்டும்’ என்பதை தெரிந்தே விஷப் பரீட்சையில் இறங்கினாள்.

அவள் நினைத்த மாதிரியே அனைத்தும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ருத்ரா அவள் உணர்வுகளோடு சதிராடி கொண்டிருக்கிறான்.

நினைவுகளில் சிக்குண்ட பெண், அவனின் எண்ணத்திற்கு எதிர்மறையாக அவனிடமிருந்து விலகினாள்.

ருத்ராவிடமிருந்து எந்த அளவு விலகினாலோ, அந்த அளவு ரிஷியிடம் நெருங்கினாள். இதை கண்ட ருத்ராவிற்கு காதில் புகை வராத குறை. ‘விட்டால் இருவரையும் எரித்து சாம்பலாக்கி இருப்பான்’ அந்தளவு கோபத்துடன் வலம் வந்தான். 

இப்போது பிந்து தன் நினைவு திரும்பி, தெளிவாக அனைவரையும் அடையாளம் கண்டு பேச தொடங்கியிருந்தாள். அவளிடம் பழைய விஷயங்களை பேசி அவளை வருத்த வேண்டாமென, சந்தோஷ நிகழ்வுகள் மட்டுமே பகிர்ந்து கொண்டனர். ருத்ரேஸ்வரனும் அவ்வப்போது வந்து அவளை பார்த்து சென்றான்.

†††

ஒருநாள் கார்த்திக் ருத்ரனிடம், “நாளைக்கு பிரஸ் மீட். அதில் ரிஷி மித்ரா திருமணத்தை அறிவிக்க போறோம்.” என ஒரு வெடியை கொளுத்தி போட்டுவிட்டு சென்றான். திரியும் நன்றாகவே பற்றிக் கொண்டது.

மறுநாள் உண்மையில் பிரஸ் மீட் இருக்கவும், ருத்ரா சுதாரித்துக் கொண்டான். ரிஷி, மித்ரா இருக்குமிடம் நெருங்கினான். 

சரியாக அந்த நேரம்,”உங்கள் திருமணம் எப்போது என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? ரிஷி சாரோட கால் தான் சரியாகிவிட்டதே?” என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, அவர்கள் பதிலளிக்கும் முன் முந்திக்கொண்ட ருத்ரா, மித்ராவின் தோளில் கையிட்டு தன் அருகில் நிற்க வைத்துக்கொண்டு.

“மித்துவுக்கும் எனக்கும் திருமணம் முடிந்து நாலு வருஷம் ஆயிடுச்சு. ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல பிரிந்துவிட்டோம்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தான்.

அம்மு அவன் கூறியதில் முதலில் திகைத்துப்போய், பிறகு அவனை முறைத்தாள். அதை கண்டுகொள்ளாத ருத்ரா நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தான். 

“என்ன மித்ரா மேடமுக்கு திருமணம் முடிந்ததா?” என மொத்த செய்தியாளர்களும் அதிர்ந்தனர்.

“எஸ் மித்ரா இஸ் மை வைஃப் (மித்ரா என் மனைவி)” என்றான் கூலாக.

“நீங்கள் சொல்வது உண்மையா?”

“அஃப்கோர்ஸ்! இன்னமும் எங்களுக்குள் சரியாக வில்லை. பாருங்கள் என்னை இன்னும் முறைத்துக் கொண்டே இருக்கா” என்றான் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு. 

“நீங்க எல்லாம் பேசி என்னோட மித்துவை என்கூட சேர்த்து வையுங்கள்” என்றான் அதே அப்பாவி முகத்துடன்.

கூட்டம் மொத்தமும் கொல்லென்று சிரித்து விட்டது ஒரு விஷமக்கார நிருபர்,”சார் பொண்டாட்டியை சமாதானப்படுத்துவது என்றால் சும்மாவா? இதுக்கு மீடியேட்டர் எல்லாம் வைக்க கூடாது. டைரக்டா லவ்வ ப்ரொபோஸ் பண்ணுங்க.” 

“நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்” என்றவன் அனைவரும் சுதாரிக்கும் முன், அருகில் இருந்த ஒரு ரோஜாவை எடுத்து மித்ராவின் முன் மண்டியிட்டு, அதை அவளிடம் நீட்டி,

“நான் இதுவரை செய்த எல்லா பிழைகளையும், இனி செய்யவிருக்கும் தவறுகளையும், என் மண்டையில் நாலு கொட்டு கொட்டி சரி செய்ய, காலம் முழுவதும் என்னுடன் பயணம் செய்வாயா அம்மு?” என்றான் உயிர் உருகும் குரலில்.

உயிர் உருகும் குரலில் மயங்கிய பெண்ணின் கரங்கள், தானாக நீண்டு அந்த ரோஜாவை வாங்கி இருந்தது. அவளது வலது கரத்தை பற்றிய ருத்ரேஸ்வர், அவளுக்காக ஆசை ஆசையாக நான்கு வருடங்களுக்கு முன், தன் காதலை உணர்ந்த தினம் பார்த்து பார்த்து வாங்கிய மோதிரத்தை அணிவித்து, அந்த விரலில் பூவினும் மென்மையாக முத்தமிட்டான். 

அதில் பெண்மை உருகி நின்றது.

ரிஷியின் விழிகள் கார்த்திகை கண்டுகொண்டு,’சக்சஸ்’ என கட்டை விரலை உயர்த்தி காட்டியது. 

“சூப்பர் சார்; கலக்கிட்டீங்க; வாழ்த்துக்கள்; மேடம் சாரோட லவ்வை அக்சப்ட் பண்ணிக்கோங்க; நாலு வருஷம் உங்களுக்காக காத்திருந்து வந்திருக்கார். ஹிஸ் லவ் இஸ் கிரேட்.” என நிருபர்கள் அவர்களை வாழ்த்திவிட்டும், அறிவுரை கூறியும் கலைந்து சென்றனர்.

கூட்டம் கலைய தொடங்கியதுமே ருத்ராவும் மாயமாகி இருந்தான். ‘அங்கிருந்து அம்முவிடம், யார் வாங்கிக் கட்டிக்கொள்வது?’ என்ற நல்ல எண்ணம்தான்.

கூட்டம் கலைந்த பிறகுதான், தான் செய்திருக்கும் காரியம் மண்டையில் உரைக்க, அம்மு ஸ்தம்பித்துப் போனாள்.’என்ன காரியம் செய்து வச்சிருக்க அம்மு? தப்பு பண்ணிட்டியே’ என மனம் வருந்திய பெண், அடைக்கலம் ஆகியது சகோதரியின் மடியில்.

என்னவென்று தெரியாமலேயே பிந்துவும்,”அம்மு என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என கேள்வி எழுப்பினாள். அம்முவிடம் பதில் இல்லை. 

“தப்பு பண்ணிட்டேன் பிந்து. உனக்கு துரோகம் பண்ணிட்டேன்” என கதறி துடித்தாள் அம்மு. 

புரியாமல் விழித்த பிந்துவிடம் அனைத்தையும் விலக்கிய அம்மு,”ஈஸ்வர் பெயரை கேட்டவுடன் நீ சரியான. உனக்கு அவர் மேல எவ்வளவு பிரியம் என்பது இதிலிருந்தே தெரிகிறது. நான் உனக்குத் துரோகம் பண்ணிட்டேன்” என கதறினாள். 

அவளின் உணர்வுகளை புரிந்துக்கொண்ட பிந்து,”அடியே பைத்தியம்! நான் அவரை விரும்புகிறேன் உனக்கு யார் சொன்னா?”

“உனக்கு தான் அவர் பெயரை சொல்லவும் குணமானதே?” 

“இது விருப்பமில்லை அம்மு குற்ற உணர்வு.”

புரியாமல் விழித்த அம்முவிடம்,”ஈஸ்வருக்கும் எனக்கும் நிச்சயம் நடந்தது உண்மைதான். அம்மா சொன்ன பையனை திருமணம் செய்ய சம்மதித்தேன் அவ்வளவுதான். நான் ஈஸ்வரை விரும்பல. அவர் உனது கணவர் அதை மட்டும் மனதில் பதிய வைத்துக்கொள்.”

இதைக் கேட்ட பெண் தீ சுட்டது போல அவளிடம் இருந்து விலகினாள். “நீ என்ன சொல்லுற?” என தடுமாற்றமாக வந்தது அம்முவின் குரல்.

“அவர் உனக்கு தாலி கட்டியதை நான் பார்த்தேன். உடனே அம்மாவிடம் சொல்லி உனக்கும் ஈஸ்வரனுக்கும் திருமணத்தைப் பேசி முடிக்க முடிவு செய்திருந்தோம். அப்போதுதான் உன்னை காணாமல் தேடி வந்த நான் அந்த கயவர்களிடம் மாட்டிக்கொண்டேன். அதற்குப் பிறகு நடந்தது உனக்குத் தெரியும்” இந்த மௌவுனத்திற்கு பின்.

“உன் வாழ்வை கெடுத்து விட்டேன் என்ற குற்ற உணர்வில் தவித்த நான், மீண்டும் அவர் பெயரைக் கேட்ட பின் உன் வாழ்வு மலரும் என்ற நம்பிக்கையோடு குணமானேன்.” 

“அப்ப அம்மாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமா?” கேட்க முடியாமல் தடுமாறினாள் அம்மு.

“அவங்களுக்கும் பரிபூரண சம்மதம். அவங்க ஆத்மா நிச்சயம் உன்னை ஆசீர்வதிக்கும்” என பெண்ணின் வயிற்றில் பாலை வார்த்தாள் பிந்து.

அம்முவை பின்பற்றி வந்த ரிஷி மற்றும் ருத்ரா, அவள் வார்த்தைகள் கேட்டு ஆனந்த அதிர்ச்சியோடு நின்றனர்.

ரிஷி பிந்துவை புதிய கண்ணோட்டத்தோடு கண்டான். இனி ரிஷியுடன் பிந்துவின் வாழ்வு தொடரும்.

பிந்து கூறிய அனைத்தையும் கேட்ட அம்மு, மன மகிழ்ச்சியோடு ருத்ரேஸ்வரனின் மார்பில் சரணடைந்தாள்.

தன்னில் சரணடைந்த மித்ராவாகிய அம்முவை, தன் உயிருக்குள் வைத்து பாதுகாப்பான் ருத்ரேஸ்வரன். 

பிருந்தா ரிஷி, அமிர்தா ருத்ரேஸ்வரன் வாழ்வின் இனி மகிழ்ச்சி மட்டுமே.

சுபம்