நினைவு தூங்கிடாது 4.2

நிழல் 

மௌனம் சில நேரங்களில் அழகு, சில நேரங்களில் சிந்தனை, சில நேரங்களில் வலி.

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத அர்த்தத்தை, சில நிமிட மௌனம் புரியவைத்திடும்.

மாலை தாமதமாக வீடு திரும்பிய, அமிர்தாவின் வீங்கிய முகமும், சிவந்த இதழ்களும் பல கதை சொன்னது.”கீழ விழுந்துட்டேன் பிந்து” என்று சொல்லி தன் அறையில் தஞ்சம் அடைந்தாள்.

சிட்டுக் குருவியைப் போல் எப்பொழுதும் கலகலவென சுற்றித்திரியும், தன் உடன்பிறப்பு அமைதியாக சென்று அறையில் தஞ்சமானது, பிருந்தாவின் மனதில் குழப்பத்தை உண்டாக்கியது.

அன்னை இன்னும் வீடு திரும்பி இருக்காத நிலையில், அமிர்தாவின் நடவடிக்கையில் பெரும் மாற்றத்தை உணர்ந்த பிருந்தாவும், எவ்வளவோ கேட்டு பார்த்துவிட்டாள். அமிர்தாவிடம் இருந்து வந்த பதில் மௌனம் மட்டுமே. 

மறுநாள் காலை,”என்ன ஆச்சு அம்மு ஏன் ஒரு மாதிரி இருக்க?” என பிருந்தாவின் கேள்விக்கு, 

“ப்ச் அதுலாம் ஒன்னும் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன்.” அம்மு 

“அப்புறம் ஏன் நேற்றிலிருந்து ஒரு மாதிரி இருக்க? அம்மாவும் உன்னையே கவனிச்சுட்டு இருக்காங்க”

அன்னை என்றவுடன் தன் மனதில் இருந்த குழப்பங்களை ஒதுக்கி வைத்த அமிர்தா, எப்போதும் போலதான் தான் இருப்பதாக மற்றவர்கள் முன் காட்டிக்கொண்டாள்.

என்னதான் அவள் மகிழ்ச்சியோடு இருப்பதாக காட்டிக்கொண்டாலும். தாய் அறியாத சூழ் உண்டா? கஸ்தூரியின் மனதில் குழப்ப மேகம் சூழ்ந்தது.

என்றுமில்லாத அமைதியோடு வலம்வந்த அமிர்தாவை, அவளின் அன்னையின் கண்கள் சந்தேகத்துடன் வட்டமிட்டது.

அமிர்தாவின் அமைதி அவரை கலவரம் அடைய வைத்தது. ஒரு பெண்ணின் உணர்வுகளோடு சதிராடும் வயது இந்த டீன்-ஏஜ் பருவம். ‘மகள் காதல் கீதல் என எதிலும் மாட்டிக் கொண்டாளோ?’ என சந்தேகம், அவர் மனதை குழப்பியது. 

நேரடியாக அவளிடம் கேட்பதற்கும் துணிவில்லை. ‘அப்படி காதல் வலையில் மாட்டி இருந்தாள், அவளை அந்த மாயவலையிலிருந்து வெளிக்கொண்டுவர வேண்டும்’ என முடிவை எடுத்தவர், அவளுக்கு சிறு சிறு வேலைகளை பகிர்ந்தளித்தார். 

அந்த வேலைகளில் தன் மனதை திசை திருப்பினாலும், மீண்டும் யார் என்றே தெரியாத அவன், தன்னிடம் நடந்து கொண்ட முறையிலும், பேசிய பேச்சிலும் அவள் மனம் உழன்றது. அவளின் சிந்தனை நேற்று நடந்த நிகழ்விற்கு அவளை இழுத்துச் சென்றது.

தெரியாமல் பந்தை காரின் மீது அடித்ததால், அவனிடம் மன்னிப்பு கேட்க முயன்ற பெண்ணை, தன் வாய்க்கு வந்தபடி பேசிய அந்த ஆடவன், கடைசியில் இதழணைப்பில் கொண்டு நிறுத்தினான். 

அவனிடமிருந்து விலக போராடிய பெண்ணை, எளிதாக அடக்கி தன் ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்தான். 

பெண் சுகம் என்பது அவனுக்கு புதியதல்ல, தொழிலில் ஏற்படும் மன இறுக்கத்தை குறைப்பதற்காக, அவன் பப்பிள் மது, மாதுவை நாடி இருக்கிறான். தானாக எந்தப் பெண்ணையும் நெருங்கியதில்லை. அதேநேரம் தன்னை நெருங்கிய பெண்களை ருசிக்காமல் விட்டதுமில்லை. யாரையும் கட்டாயப்படுத்தியதில்லை. 

ஆனால் அவனின் கட்டுப்பாடுகள் அனைத்தும் இந்த சிறு பெண்ணிடம் தோல்வியடைகிறது. ஏனென்று சிந்திக்கவில்லை.

சிறிது நேரம் அவளின் இதழ்களை வன்மையாக சிறைபிடித்து இருந்தவன், எப்பொழுது அதை மென்மையாக மாற்றினான் என்பது அவனே அறியாதது. அவனது உணர்வுகள் தூண்டப்பட்ட நிலையில், அவன் மூளை விழித்துக் கொண்டது.’ஒரு சிறு பெண்ணிடம் என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய் ஈஸ்வரா?’ என அவன் மனம் இடித்துரைத்து.

அவளிடமிருந்து விலகி எழுந்தவன் அவளைப் பார்க்க தலையெல்லாம் களைந்து, முழங்காலிலிருந்த பாவாடை தொடை வரை ஏறி, அவள் மேல் சட்டையும் அவள் அங்கங்களை அவன் கண்களுக்கு விருந்தாக்க, தன் இதழ் செய்த மாயம் அவள் முகம் வீங்கி, உதடு தடித்து, இயலாமையில் கண்ணீர் வழிய அரை மயக்க நிலையில், கலைந்த ஓவியம் போலிருந்த பெண்ணை ரசித்தாலும், அவள் ஒரு ஆடவனுடன் பேசிக் கொண்டிருந்த காட்சியே அவன் கண்முன்னால் வந்து அவன் கோபத்தை தூண்டியது.

அவள் வேற்று ஆடவனுடன் பேசினால், தனக்கு என்ன? என்பதை சிந்திக்க மறந்தான்: அவளைப் பார்த்த நொடியே தன் மனதை வசீகரித்து விட்டாள் என்பதை உணரத் தவரினான்: தன் இளமை தேடலுக்கு பல பெண்கள் கிடைப்பார்கள், ஆனால் தன் மன தேடல் இவள் மட்டுமே என்பதை சிந்திக்க மறுத்தான்:

இது எதுவுமே அறியாமல், அவன் சிந்த போகும் வார்த்தைகளும், அவன் செய்யப் போகும் செயல்களும், அவளை முழுதாக இவனை வெறுக்க வைக்கும். என்பதையும் அறியாமல் போனது இவனின் குற்றமா? இல்லை இதை அனைத்தையும் நிகழ்த்தும் விதியின் குற்றமா?

இவள் மட்டுமே தன் உலகம் என உணரும் வேலையில், அம்மு என்ற அப்பாவி பெண் மரித்து இருப்பாள். என்பதை யார் இவனுக்கு சொல்வது. இங்கே விதியாடும் பொம்மலாட்டத்தில் யாவரும் பொம்மைகளே!

††††††

கலைந்த ஓவியமாக கிடைக்கும் அந்தப் பெண்ணின் கன்னத்தை தட்டி அவளின் மயக்கத்தை தெளிய வைத்தான். அந்தக் கன்னத்தின் மென்மையில் சிறிது தடுமாறினாலும், அவளை எழுப்பி தன் காரில் இருந்த நீரை புகட்டி சற்று ஆசுவாசப் படுத்தினான்.

தனக்கு என்ன நடந்தது என்பதை புரியாத பெண்ணும், அவனை அடிக்க வேண்டும் என்று கூட தோணாமல், அவன் முகத்தையே வெறுமையாக பார்த்திருந்தாள். இவ்வளவு நேரம் தன்னுடன் வாய்ச்சண்டையிட்ட பெண்ணின், இந்த அமைதி அவன் மனதை உறுத்தினாலும் அதை கண்டுகொள்ளாமல்.

“என் காரை டேமேஜ் பண்ணதும் இல்லாமல், என்னை எதிர்த்துப் பேசியதிற்க்குதான் உனக்கு இந்த தண்டனை. இனி ஜாக்கிரதையா பேசிப் பழகு.” அவள் முகத்தை ஆராய்ந்து கொண்டே,”இப்ப நான் உன்ன கிஸ் பண்ணத, வேற யார்கிட்டயாவது சொன்ன, நீ என் காரை உடைச்சதை உங்க வீட்டுல வந்து நானும் சொல்லுவேன். என்னை எதிர்த்துப் பேசி இருக்க, என் காரை டேமேஜ் பண்ணி இருக்க உனக்கு இந்த தண்டனை போதது. என்ன பண்ணலாம்?” என்ன சிந்திப்பது போல்,

“தினமும் இரண்டு மணிக்கு, அதோ அங்க தெரியுது பார்” என ஆள் நடமாட்டம் இல்லாத ஆத்தங்கரையோரத்தை கைகாட்டி,”அங்க வர. நான் என்ன சொல்லுறேனோ அதை எல்லாம் செய்யுற. வராமல் இருந்தாலோ, இல்ல நான் சொல்றதை செய்யலைனாலோ, நீ காரை உடைச்சதுக்கு லட்ச ரூபாய் உங்க வீட்டிலிருந்து கொடுக்கனும். இப்போ வீட்டுக்கு போ நீலாம்பரி.” என அவள் கன்னத்தை தட்டி காரிலிருந்து இறங்கினான்.

தட்டுத்தடுமாறி இறங்கிய பெண் அந்தக் காரை பிடித்துக்கொண்டே, சற்று நிதானத்திற்கு வந்த பிறகு அவனை திரும்பி பார்த்தாள். அவனோ எங்கோ வானத்தை வெறித்து இருந்தான்.

“என்னோட பேர் நீலாம்பரி இல்ல” மென்மையாக குரல் வந்தது.

தான் அவளிடம் நடந்து கொண்ட முறைக்கு, அவள் தன்னிடம் பேசினதை ஆச்சரியமாக பார்த்தான். அவளது வெகுளி தனத்தை பார்த்து முகத்தில் புன்னகை பரவியது. 

புன்னகையோடு, “உன் பெயர் என்னவாவேனா இருக்கட்டும். என்னை எதிர்த்துப் பேசிய உனக்கு அந்தப் பெயர்தான் மேட்ச் ஆகும். எனக்கு நீ நீலாம்பரி.”

இவ்வளவு நேரம் அவனின் கோப முகத்தை பார்த்திருந்த அவள், அவனின் புன்னகை முகத்தை கண்டு ஆச்சரியமாக விழி விரித்தாள்.

“நான் அங்க ஆத்தங்கரையோரம் வந்தால் எங்க அம்மாகிட்ட பணம் கேட்க மாட்டீங்கள?” என உறுதி படுத்திக் கொள்ளும் பொருட்டு.

ஒரு வயது பெண்ணிடம், ஆண் மகனாகிய நான், ‘சொல்வதை செய்ய வேண்டும்’ என கட்டளை இட்டும். அது என்னவாக இருக்கும் என்ற பயமில்லாமல், ‘சரி’ என்னவளின் துணிச்சலை ஆச்சரியமாக பார்த்தான் ஈஸ்வரன்.

“நீ ஒரு வயசு பொண்ணு. அங்க யாரும் இருக்க மாட்டாங்க. நான் என்ன பண்ணாலும் உன்னால் எதிர்க்க முடியாது. அப்புறம் எந்த தைரியத்துல வரேன்னு சொன்ன?” அவளிடமே வினா தொடுத்தான்.

“எங்க அம்மா ரொம்ப கஷ்டப் பட்டு எங்களை வளர்க்கிறார்கள். அவர்களால் நீங்க கேட்ட பணத்தை கொடுக்க முடியாது. அதனால் எந்த கஷ்டம் வந்தாலும் நான் தாங்கிக் கொள்வேன்” என உறுதியாக தெரிவித்து அங்கிருந்து சென்றாள்.

வெள்ளந்தி மனிதர்களை மட்டுமே அங்கு கண்டிருந்த பெண், தன் கிராமத்தை விட்டு வெளியே சென்று அறியாத அந்த கிராமத்து சிட்டு, அவன் மிரட்டலில் அரண்டு தான் போனாள். ‘இவன் வந்து தன் தாயிடம் ஒரு லட்சம் பணத்தை கேட்டால், அன்றாடம் வேலை பார்த்து பிழைப்பை நடத்தும், அவரால் எவ்வாறு அவ்வளவு பணத்தை கொடுக்க முடியும்’ என வீட்டில் இந்த விஷயத்தை மறைத்தாள்.

அவள் மறைத்த இந்த விஷயத்தால் மூன்று இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதையும், அவள் வாழ்க்கையே கேள்விக்குறியாகும், என்பதையும் அறிந்திருந்தாள் தன் அன்னையிடம் சொல்லி என்ன செய்வது என்று ஆலோசித்து இருப்பாள். அவளின் பொல்லாத நேரம். அவள் இழந்துதான் ஆகவேண்டும் என்பது அவளது விதி. 

அமிர்தாவிற்க்கு என்ன இழப்பு நேரப் போகிறது?

யாரால் நேரப்போகிறது?