நினைவு தூங்கிடாது 8.1

நிஜம் 8

வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றி ஜெயிக்க கூடாது, ஆனால் நம்மை ஏமாற்றியவரை ஜெயிக்காமல் இருக்கக்கூடாது.

ருத்ராவின் வருகையை சற்றும் எதிர்பார்க்காத பெண்ணின் மனதில் சில நொடி ஸ்தம்பிப்பு. அவளது கரங்கள் உணவுடன் அந்தரத்தில் தேங்கியது. ரிஷி அவளது கைப்பற்றவும், சுயநினைவு அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினாள். 

ரிஷி தனதருகில் இருக்கிறான் என்பதில், மித்ராவின் முகத்தில் ஒரு தெளிவு. அவளது வெறுப்பான பார்வை, ருத்ரனின் பார்வையுடன் மோதியது. 

தன்னவளின் கரம் பற்றிய ரிஷியின் கரத்தை எரித்து சாம்பலாக்கியது ருத்ராவின் பார்வை. சிறிது நேரத்திலேயே தலையை குலுக்கி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மித்ராவின் வெறுப்பான பார்வையை, ரசனையான பார்வையோடு சந்தித்தான்.

அங்கே செய்தியாளர்கள் இல்லை,  படகருவிகள் இல்லை, கிசுகிசுக்கள் இல்லை, எனவே அவளது பொய் முகமூடியை அணிய வேண்டிய அவசியமும் இல்லை. அவளது கண்களில் இருந்த வெறுப்பு முகம் முழுதும் பரவியது. 

“கதவைத் தட்டிட்டு வீட்டுக்குள்ள வரணும்னு பேசிக் மேனர்ஸ் கூட இல்லையா?” காட்டமாக கேள்வி பிறந்தது மித்ராவிடம்.

“வீட்டுக்கு வந்தவங்கல உள்ள வாங்கன்னு கூப்பிடுற அளவுக்கு கூட உனக்கு பேசி மேனர்ஸ் இல்லையா?” அலட்சியமாக திருப்பி அடித்தான் ருத்ரா.

அவன் நிற்கும் இடத்திலிருந்து வாசலிற்க்கு தன் பார்வையை செலுத்திய மித்ரா, எல்லலான சிரிப்போடு அவனுக்கு குறிப்பாக உணர்த்தினால் ‘நான் கூப்பிட்டு தான் இவ்வளவு தூரம் நீ வந்தயா?’ என்று. அவளது குறிப்பை கண்டுகொள்ளவில்லை ருத்ரா.

“என்ன பொம்மு? வீட்டுக்கு வந்தவங்களை உட்கார கூட சொல்ல முடியாதா? பூவர் மேனர்ஸ்.” என நக்கலாக கூறி உதடு பிதுக்கினான் ருத்ரா. 

அவள் ஏதோ சூடாக பதிலளிக்க வாயை திறக்க, அவளை முந்திக்கொண்ட ரிஷி,”வாங்க ருத்ரா சார். உட்காருங்க.” என வீட்டு மனிதனாக வரவேற்று, தன் எதிரே இருந்த சோபாவை கைக்காட்டினான்.”ஹாட் ஆர் கோல்ட் என்ன குடிக்கிறீங்க சார்?” எனக் கேள்வி எழுப்பியவன், ருத்ரா பதில் அளிப்பதற்கு முன் ரிஷியே ஒரு முடிவெடுத்து,”நீங்க இப்ப ரொம்ப ஹாட்டா இருக்கீங்க. அதனால ஜில்லுனு ஜூஸ் குடிங்க” என கூறி மித்ராவிடம் திரும்பி,”மிரு சாருக்கு ஜில்லுனு ஜூஸ் கொண்டு வா.” என கட்டளையிட்டான். ரிஷியின் பேச்சில் உபசரிப்பை விட அலட்சியமே தெரிந்தது.

மித்ராவும் ரிஷியின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல், ருத்ராவை முறைத்துக்கொண்டே சமையல் அறை சென்றாள். இதை பார்த்திருந்த ருத்ராவின் காதில் புகை வராத குறை. ‘தன்னிடம் முகம்கொடுத்து பேசாத பெண், ரிஷியின் ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டதை’ கண்டு ருத்ராவின் மனம் கொதித்தது. 

“அவள் என்ன உன் வீட்டு வேலைக்காரியா? அவளை வேலை சொல்லுற” என ரிஷியிடம் பொங்கினான். 

“நம்ம வீட்டு வேலையை செய்ய, வேலைக்காரியா இருக்கணும்னு அவசியம் இல்லை. அந்த வீட்டு உரிமையுள்ளவலா இருந்தா போதும்.” திருப்பி கொடுத்தான் ரிஷி. 

“இது உன் வீடு ரிஷி. இது அவளுக்கு உரிமை இல்லாத இடம்.” 

“இப்ப வேணா அவளுக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம். நாளைக்கு அவ இந்த வீட்டுக்கு உரிமையுள்ள சொந்தமாக மாற வாய்ப்பு உண்டு” அதே அலட்சியப் பதில். 

“என் இதயத்தில் வீற்றிருக்கும் மகாராணியை உன்னிடம் கொடுப்பேன் என்று கனவில் கூட நினைக்காதே” கோபம் தலைக்கு ஏறியது.

“நீங்க என்ன கொடுக்கறது? மிரு ஒரு வார்த்தை சொன்னா அடுத்த நிமிஷம் அவள் கழுத்தில் தாலி ஏறும்” 

“யாரோட கழுத்துல யார் தாலி கட்டுவது? அவள் என்னோட மனைவி.” ஆத்திரத்தில் ரிஷியின் கழுத்தை பற்றி அழுத்தினான்.

சரியாக அந்த நேரம் ஆப்பிள் ஜூஸுடன் வந்த மித்ரா கண்டது ரிஷியின் கழுத்தை நெரித்த ருத்ராவை. கையிலிருந்த கோப்பைகளை கீழே தவற விட்ட பெண், ஓடிச்சென்று ருத்ராவை ரிஷியிடமிருந்து பிரிக்க போராடினாள். ரிஷி, ருத்ராவை தடுக்க எந்தவித முயற்சியும் எடுக்காமல், அவன் விழிகளை நேர்கொண்டு சந்தித்திருந்தான்.

சிறிது நேரத்திற்குப் பின் ரிஷியை விட்ட ருத்ரா, தன் தலையைப் பற்றி கோபத்தை குறைக்க முயற்சி செய்து, அது முடியாமல் மித்ராவின் புறம் திரும்ப, அவளோ இவனை கண்டுகொள்ளாமல் ரிஷியிடம் நெருங்கி அமர்ந்து, அவன் நெஞ்சில் தன் கரம் கொண்டு நீவி, ருத்ரா அழுத்தியதில் ரிஷிக்கு ஏற்பட்ட இருமலை குறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். 

இந்தக் காட்சியை கண்ட ருத்ராவின் சூடு, கொதி நிலையை அடைந்தது.”பொம்மு” என அவனிட்ட சத்தத்தில் அந்த கான்கிரீட் கட்டிடமே அதிர்ந்தது.

“உனக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி மிருகம் மாதிரி நடந்துக்கிற?” கோபத்தில் வார்த்தைகளை விட்டாள்.

“ஆமாம்டீ நான் மிருகம் தான். மிருகம் என்ன பண்ணும்னு கூடிய சீக்கிரம் உனக்கு காட்டுறேன்.” என்றவன் ரிஷியின் புறம் திரும்பி,”இவளை அடைய கனவில் கூட நினைச்சுராத. அவள் என்னவள். எனக்கு மட்டுமே சொந்தமானவள்” என உறுமினான்.  ரிஷியோ அவன் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றாமல் ஒரு புன்னகையுடன் வேடிக்கை பார்த்தான். அந்தப் புன்னகை சொன்னது என்ன? ‘முடிந்தால் அவளின் கழுத்தில் தாலியை கட்டு’ என்று சவால்விட்டது.

“உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க ருத்ரா? என்னைப் பார்த்தால் பொம்மை மாதிரி தெரியுதா? என் வாழ்க்கையை டிசைட் பண்ண நீ யார்?” என்றாள் மித்ரா உறுதியாக.

“உன் வாழ்க்கையில் என் இடம் என்னவென்று, இந்தப் படம் முடியறதுக்குள்ள உன்னை உணர வைக்கிறேன்.” என்றவன், மித்ராவின் தோள்களைப் பற்றி தன் புறம் திரும்பி,”இதயும் மனசுல  நல்லா பதிய வச்சுக்க, என்னோட தாலி மட்டும் தான் உன் கழுத்தில் தங்கும். வேற யாராவது கட்டுனா” என நிருத்தி “ச்ச” என தலையை இடம் வளம் ஆட்டி,”இல்லை இல்லை கட்டனும்ன்னு நினைச்சா கூட, அவங்க உயிரோடு இருக்க மாட்டாங்க.” 

ஒரு பத்திரிக்கையை எடுத்து அவளிடம் நீட்டி,”இன்னும் நாலு நாளில், வர வெள்ளிக்கிழமை நம்ம நடிக்கப் போற படத்தோட பூஜை. கார் அனுப்பறேன். வந்து சேர்.” ஒரு எரிக்கும் பார்வையை ரிஷியை நோக்கி வீசிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வாசலை அடைந்தான். 

அன்றொரு நாள் செய்தித்தாளில் வெளியான, ருத்ராவும் மித்ராவும் சற்று நெருக்கமாக இணைந்த புகைப்படம், ருத்ராவால் மார்பிங் செய்யப்பட்டது, இப்போது மித்ராவின் கரத்திலிருந்த பத்திரிக்கையில், அவளை பார்த்து பல்லைக் காட்டியது.

†††‡†††

வெள்ளிக்கிழமை காலை, ஈஸ்வர் புரொடக்ஷன்ஸ், பட பூஜைக்கான அனைத்து வேலைகளிலும் மும்முரமாக இருந்தது. நம்பர் ஒன் புரொடக்‌ஷன்ஸின் படத் துவக்கம் சும்மாவா? மேலும் அந்தத் தயாரிப்பின் ஒரே வாரிசு திரையுலகில் காலடி வைக்க இருக்கும் நிகழ்வு கேட்கவும் வேண்டுமா?

பெரிய பெரிய நடிகர்களும் டைரக்டர்களும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள வருகை  புரிந்தனர். நிற்க நேரமில்லாமல் அனைவரும் ஓடி கொண்டிருந்தனர். ஆனால் வர வேண்டிய முக்கிய நபர் இன்னும் வந்து சேரவில்லை. ருத்ரா பொறுமையின்றி அலைந்து கொண்டிருந்தான்.

அவளுக்காக அனுப்பப்பட்ட அவனது கார், வாசலில் வந்து நின்றது, ருத்ராவின் முகம் பிரகாசமானது. அவளின் வருகையை எதிர்பார்த்து, வாசலை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்த ருத்ராவின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. 

ஆம் அவனுடைய தேவதை அந்த காரில் வரவில்லை. வெளிறிப்போன முகத்துடன் டிரைவர் மட்டும் பயந்துகொண்டு காரில் இருந்து இறங்கினார். ருத்ரா உச்சகட்ட கோபத்தோடு அவரை நெருங்கினான்.

அவனது பார்வையிலேயே கொலை நடுங்கிப்போன டிரைவர் நடுங்கிக்கொண்டே,”சார் அவங்க அவங்க கார்ல வரேன்னு சொல்லிட்டாங்க.”

ருத்ராவின் முகத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது. ‘அவள் வருவாளா? மாட்டாளா?’ என்ற குழப்பம். அவளை மிரட்டி பணிய வைத்தவன், இப்போது அவள் வராமல் இருந்தால் என்ன செய்வது? என முழி பிதுங்கி நின்றான். திரையுலகில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் தங்கள் நிறுவனத்தின் பெயர், அவள் வராமல் போனால் கெட்டுப் போகும் என உணர்ந்து, நொடிக்கு நொடி அவனது டென்ஷன் ஏறிக்கொண்டே சென்றது. 

அவனது இரத்த கொதிப்பை ஏற்றிவிட்டு பொறுமையாகவே மித்ரா அந்த விழா நடக்கும் மண்டபத்தை அடைந்தாள். மித்ரா அந்த மண்டபத்தினுள் நுழையவும் இருண்டிருந்த ருத்ராவின் முகம் மீண்டும் பிரகாசமானது. 

மித்ரா அவனை நெருங்கி ஒரு பிரெண்ட்லி ஹக் கொடுப்பதுபோல் அவன் செவியோரமாக, யாருக்கும் கேட்காத குரலில், “என்ன ருத்ரா? ரொம்ப பயந்துட்டியா? வருவேனா மாட்டேனான்னு? என்னை மிரட்டி இந்த படம் நடிக்க வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும். இட்ஸ் டூ லேட். இதுமாதிரி டென்ஷன் இனி டெய்லி பார்ப்ப.” என கூலாக கூறிவிட்டு ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தாள். 

‘இது என்னடி பெரிய டென்ஷன்? உண்மையான டென்ஷன்  என்னன்னு உனக்கு நான் காட்டுறேன். வெயிட் செல்லம்’ என மனதில் நினைத்துக்கொண்டு அவளைப் பார்த்து மர்மமாக சிரித்து வைத்தான்.

அவனின் மர்ம புன்னகையை பார்த்து,’இவன் ஏன் இப்படி சிரித்து வைக்கிறான்?’ என மித்ரா மனதில் நினைத்தாலும்,’எது வந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்’ என்ற அலட்சியமும் வந்தது.

அவள் மண்டபத்தில் நுழைந்ததிலிருந்து அவளை பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஜோடியின் விழிகளில் குழப்பம். ‘இந்த பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறேன்?’ என்று.

†††‡†††

ருத்ரேஸ்வரனின் தாயார் அம்பிகா குத்துவிளக்கேற்றி, நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதன் அடுத்த திரியை ஏற்ற வேண்டிய, (அந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகி) மித்ராவின் பின் ருத்ரா நின்றான்.

அம்பிகாவின் கைகளில் இருந்த மெழுகுவர்த்தி மித்ராவின் கரங்களை அடைந்தது. மென் புன்னகையுடன் அந்த மெழுகுவர்த்தியை வாங்கி, குத்துவிளக்கின் திரியை ஏற்ற சென்ற நேரம், திடீரென அவள் பின்னின்ற ருத்ரா அவள் கரத்தோடு தன் கரம் இணைத்து குத்துவிளக்கை ஏற்றினான். அடுத்தடுத்து இரண்டு திரிகளை ஏற்றிய பிறகு, அந்த மெழுகுவர்த்தியை இயக்குனரின் கைகளில் கொடுத்தான்.

அவன் தன் கரத்தை பிடித்ததும் திடுக்கிட்ட மித்ரா, திகைப்போட அவன் முகம் பார்க்க, வசீகர புன்னகையுடன் ருத்ரா விளக்கேற்றினான். அவன் செய்கைகள் அனைத்தையும் அங்கிருந்த செய்தியாளர்களின் படக்கருவி உள் வாங்கிக்கொண்டது. அவனுக்கு தெரியும் நாளைய தலைப்புச் செய்தியே இதுவாகத்தான் இருக்கும்.

அந்த இடத்தில் வைத்து கோபத்தைக் காட்ட முடியாத பெண், புன்னகை எனும் பொய் முகமூடியை அணிந்துகொண்டு, நெஞ்சத்தில் வெறுப்பை வளர்த்துக்கொண்டாள். 

ருத்ரேஸ்வரன், மித்ராவின் கைப்பற்றியதை கண்ட அம்பிகா மற்றும் ஈஸ்வர மூர்த்தியின் மனதில் குழப்பம் சூழ்ந்தது. திடீரென மகன் படத்தில் நடிப்பதாக எடுத்த முடிவு, எதனால் என்பது இப்போது புரிந்தது. திருமணத்துக்கு பிடி கொடுக்காமல் இருந்த ருத்ராவின் மனது, மித்ராவின் பக்கம் சாய்ந்ததை உணரமுடிந்தது. புரிந்த, உணர்ந்த விஷயம் உவப்பானதாக இல்லை.

ரிஷியும் மித்ராவும் சினிமா துறையில் அதிகம் கிசுகிசுக்கும் ஜோடி. அவர்களுக்கு நடுவில் இருக்கும் உறவைப்பற்றி இன்னமும் தெளிவாக தெரியாத நிலையில், தன் மகன் ருத்ராவின் ஆசை நிறைவேறுமா என்பது கேள்விக்குறியே?

‘தன் மகன் நெருப்பில் விளையாட ஆசைப்படுகிறான்’ என்பதை எப்படி சொல்லி புரிய வைப்பது, என்பது தெரியாமல் குழம்பி நின்றனர் அந்த அப்பாவி பெற்றோர்கள்.

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் தோழன் என்பார்கள். இந்த வளர்ந்த ஆண்மகனிடம் பேச பயந்து நின்றார்கள்.

ருத்ரேஸ்வரனோ தொழில் வட்டாரத்தில் சிம்ம சொப்பனமாக திகழ்பவன்.  துரோகியை கூண்டோடு அளிப்பவன். அப்படிப்பட்டவன் தன் மனம் கவர்ந்தவளை அடைய எந்த எல்லைக்கு செல்வான் என புரியாமல் போனார்கள்.

மித்ரா தனியே இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ருத்ரா, அவளை நெருங்கி,”ஹாய் செல்லம், வரும்போது என்னை டென்ஷனாக்கினதற்கான தண்டனை இதுதான். என்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு.” அவள் கன்னத்தை தட்டி, ஒரு பறக்கும் முத்தத்தை பரிசாக கொடுத்து விலகிச் சென்றான்.

†††‡†††

பட பூஜை முடிந்து இரண்டு நாட்கள் சென்றபின் மித்ராவை அழைத்த ருத்ரா,”அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குது. அவுட்டோர் ஷூட்டிங். நானே வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்‌ ரெடியா இரு. எதுவும் வாலை ஆட்டலாம் நினைத்திராத” எனக்கூறி தொலைபேசி இணைப்பை துண்டிக்க சென்றவன்,”ஹான் முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். நம்ம போகப் போறது….” என கிராமத்தின் பெயரை கூறி இணைப்பைத் துண்டித்தான். அந்தப் பெயரை கேட்கவும் மனதில் சுரக்கென்ற ஒரு வழி.

எதற்காக நான்கு ஆண்டுகள் பாடுபட்டாலோ, அது இப்போது நிறைவேற உள்ளது. அதை நினைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும், ஆனால் அவளது மனமோ ரணமாக எரிந்தது.

கண்ணீர் கூட வர மறுத்தது நான்கு வருடங்களுக்கு முன்பே அவளது தண்ணீர் அனைத்தும் வற்றிவிட்டது போல.

அந்த ஊரின் பெயரைக் கேட்டாலே கால்கள் பலமிழந்து தோய்ந்தது. அங்கே அவளுக்கு பல பல சந்தோஷ நினைவுகள் இருந்தாலும், சில விரும்பத்தகாத மரண வழியும் கொடுத்த இடம்.

அங்கு சென்றாள் தன் விதி மாற்றி அமைக்கப்படும். தன் உயிரோடு உணர்வோடு கழந்த ஒன்றை, இழக்க நேரிடும். தெரிந்தே விஷப் பரீட்சையில் இறங்கினாள்.

அந்த விஷப் பரீட்சையில் வெற்றி பெறுவாளா? தோல்வி அடைவாளா? வெற்றியோ தோல்வியோ நிச்சயம் அவளுக்கு மரணவலி