நினைவு தூங்கிடாது teaser

ஐந்து நட்சத்திர விடுதியின் டான்ஸிங் ஃபிலோர்

மங்கிய ஒளியிலும் காதை கிழிக்கும் ஓசையிலும், பல இளம்பெண்கள் மற்றும் ஆண்கள், தங்களை மறந்து ஆடிக்கொண்டிருந்தனர் இல்லை இல்லை  அப்படிச் சொல்லக் கூடாது வரம்பு மீறி கொண்டிருந்தனர்.

அந்த அறையின் மங்கிய ஒளியை மேலும் மங்கலாக்க,  பளிச்சென்ற நிலா முகத்துடன்,  ஒரு அழகிய இளம் பெண் நுழைந்தாள்.

அவள்! வானில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு போட்டியாக, இன்றைய மண்ணுலக நட்சத்திரம்,  திரையுலகின் முடி சூடா அரசி, பல காளையர்களின் கனவுக் கன்னி மித்ராலினி.

அவளது விழிகள் யாரையோ தேடிக் கண்டுகொண்டது. அந்த விழிகளில் அத்தனை பளபளப்பு,  தன் இரையை வேட்டையாடக் காத்திருக்கும் புலியின் பளபளப்பு.

அவள் விழி வட்டத்தில் சிக்கியது,  வளர்ந்து வரும் இன்றைய இளம் தொழிலதிபர் சூரஜ் உதயகுமார். இதழ்களில் தவழ்ந்த இகழ்ச்சி புன்னகையுடன் அவனை நெருங்கினாள்.

*******************

தலைப்புச்செய்தி

“வளர்ந்து வரும் இன்றைய இளம் தொழிலதிபர் சூரஜ் உதயகுமார் மாயம். இரண்டு நாட்களாகத் தேடுதல் நடந்துகொண்டிருப்பதாக  நம்பிக்கை வட்டத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.”

அதை குரூரமாக, உதட்டில் உறைந்த புன்னகையுடன், வெறித்திருந்தது ஒரு  உருவம்.

*******************

“பிந்து எங்க? இப்ப சொல்ல போறியா? இல்லையா?” என்றான் கர்ஜனை குரலில்.  சிங்கமே நடுங்கிவிடும் அந்த கர்ஜனையில்.

ஆனால் எதிரே இருப்பவளோ,’நீ பேசினாயா? என்னிடமா?’ என்ற பார்வை மட்டுமே அவளிடம். பார்வையில் ஒரு துளி பயமில்லை, ஏன் எந்த உணர்வுமே இல்லாத வெற்று பார்வை. உணர்ச்சிகளைத் தொலைத்த முகம்.

அவளின் பயமில்லா பார்வையைப் பார்த்து,  இவன்தான் பல்லைக் கடிக்க வேண்டியதாக இருந்தது.

“இப்படி கையும் காலும் கட்டி இருக்கும் போதே, உன்னுடைய பழைய திமிர் கொஞ்சமும் குறையல என் அருமை நீலாம்பரி.”

“ஓ தங்க யு, தங்க யு கூடவே பிறந்தது, எப்பவும் போகாது ருத்ரா.” படையப்பா ஸ்டைலில்