நினைவு – 14

eiE6SA598903(1)

ஒரு கணத்தில் அங்கே என்ன நடந்தது என்று கூட புரியாமல் விக்கித்துப் போய் நின்ற வருண் தன் நண்பனைப் பார்த்ததுமே அவனருகில் அவசரமாக ஓடிச் செல்ல எண்ணி ஒரு அடியெடுத்து வைத்து விட்டு தன் காலடியில் இரத்தத்தில் உறைந்து கிடந்த பிரியாவைப் பார்த்ததும் உடனே அவளை அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் அவளது தோழிகளுடன் அனுப்பி வைத்து விட்டு வேகமாக அர்ஜுன் அருகில் வந்து நின்றான்.

“டேய் அர்ஜுன்! அர்ஜுன்! ஏதாவது பேசுடா” வருணின் எந்தவொரு அழைப்புக்கும் அர்ஜுனிடமிருந்து பதில் வரவில்லை மாறாக அவன் பார்வை சற்று நேரத்திற்கு முன்பு பிரியா விழுந்து கிடந்த இடத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தது.

“டேய் அர்ஜுன்! என்னைக் கொஞ்சம் பாரேன்டா!” இம்முறை அதட்டலாக ஒலித்த வருணின் குரலில் மெல்ல அவனை திரும்பிப் பார்த்தவன்

“பிரி..பிரியா… பிரியா!” பெருங்குரலெடுத்து அழுதபடியே அவன் கால்களின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொள்ள பதட்டத்துடன் அவனைத் தூக்கி நிறுத்தி தன் தோளோடு அணைத்துக் கொண்டவன் அங்கிருந்து வேகமாக அவனை அழைத்து கொண்டு பிரியாவை ஏற்றி சென்ற ஆட்டோவைப் பின் தொடர்ந்து புறப்பட்டு சென்றான்.

அவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்குள் பிரியா சென்ற வாகனம் அவர்கள் பார்வை வட்டத்தை விட்டு மறைந்திருக்க அருகில் இருக்கும் வைத்தியசாலை ஒன்றின் பெயரை பார்த்து விட்டு அங்கே போய் பார்க்கலாம் என்று நினைத்தவாறே தன் நண்பனின் புறம் திரும்பி பார்க்க அவனோ பேச்சு மூச்சின்றி மயங்கி அவன் முதுகில் சரிந்து கிடந்தான்.

“ஐயோ! அர்ஜுன்! டேய் அர்ஜுன்! என்னைக் கொஞ்சம் பாருடா! ஐயோ அர்ஜுன்! உனக்கு என்னடா ஆச்சு?” கண்கள் கலங்க அர்ஜுனை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் வேகமாக அந்த வைத்தியசாலையை வந்து சேர்ந்து அவனுக்கு சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு சோர்ந்து போனவனாக அந்த இடத்திலேயே மண்டியிட்டு அமர்ந்து கொண்டான்.

ஒரு சில நிமிடங்களுக்குள் என்னன்னவோ நடந்து முடிந்திருக்க தன் பெற்றோருக்கு தகவல் சொல்லி அவர்களை அங்கே வர சொன்னவன் அந்த வைத்தியசாலை ரிஷப்சனில் சென்று பிரியா என்ற பெயரில் ஏதாவது விபத்து நடந்த பெண் அனுமதிக்கப்பட்டாளா என்று விசாரித்து பார்க்க அப்படி எந்த விபத்து நடந்தவர்களும் அன்றைய நாளில் அங்கே அனுமதிக்கப்படவில்லை என்ற பதிலே அங்கே அவனுக்கு கிடைத்தது.

‘இங்கே இல்லைன்னா அப்போ பிரியா எங்கே?’ வருண் தன் மனதிற்குள் எழுந்த கேள்வியோடு சிந்தனை வயப்பட்டவனாக நிற்க அதே நேரம் ராமநாதனும், சாவித்திரியும் அங்கே வந்து சேர்ந்திருந்தனர்.

“வருண் என்னப்பா ஆச்சு? அர்ஜுன் எங்கே? அவனுக்கு என்ன ஆச்சு?” சாவித்திரி பதட்டத்துடன் அவன் முன்னால் வந்து நின்று கேட்க அத்தனை நேரம் வெளியே தன்னை தைரியமாக காட்டிக் கொண்டிருந்தவன் அவரைப் பார்த்ததுமே கண்கள் கலங்க அர்ஜுனுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி தன் கையை காட்ட அவரோ பதட்டத்துடன் அந்த பக்கமாக ஓட்டமும் நடையுமாக சென்று அர்ஜுன் வைக்கப்பட்டிருந்த அறைக் கதவின் அருகில் சென்று நின்று கொண்டு தன் பார்வையாலேயே அவனைத் தேடத் தொடங்கினார்.

“வருண் திடீர்னு அர்ஜுனுக்கு என்ன ஆச்சு? இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தானே அவன் வீட்டுக்கு வந்து விட்டு போனான்! அதற்கிடையில் அவனுக்கு என்ன ஆச்சு?” ராமநாதன் அதட்டலாக வருணைப் பார்த்து கேட்க

“அ..ப்..பா!” சிறு கேவலுடன் அவரை அணைத்துக் கொண்டவன் எதுவுமே பேசாமல் கண்ணீர் வடிக்க பெரியவர்கள் இருவருமே அவனைப் பதட்டத்துடன் பார்த்து கொண்டு நின்றனர்.

மூவருக்கும் இடையே கனத்த அமைதி நிலவ சிறிது நேரம் கழித்து அர்ஜுனுக்கு சிகிச்சை அளித்து விட்டு வெளியேறி வந்த வைத்தியர்
“நத்திங் டூ வொர்ரி ராமநாதன்! அவருக்கு எந்த அடியோ, காயமோ இல்லை ஒரு சின்ன ஷாக் அவ்வளவு தான்! கொஞ்ச நேரம் தூங்கி எழும்பினாலே அவர் சரியாகி விடுவாரு” சிறு புன்னகையுடன் அவர்களைப் பார்த்து கூறி விட்டு சென்று விட அப்போது தான் அங்கிருந்த அனைவருமே நிம்மதியாக மூச்சே வெளிவந்தது.

‘ஹப்பாடா!’ கண்களை மூடி தன்னை சிறிது நிதானப்படுத்திக் கொண்ட வருண்

‘பிரியாவுக்கு என்ன ஆச்சோ தெரியலையே!’ மறுபடியும் பிரியாவைப் பற்றி நினைவு வந்தவனாக

“அப்பா கொஞ்சம் இருங்க வந்துடுறேன்” என்று விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறி சற்று நேரத்திற்கு முன்பு விபத்து நடந்த அந்த பேருந்து தரிப்பிடத்தை நோக்கி விரைந்து சென்றான்.

அவன் அங்கே வந்து சேருவதற்குள் அந்த இடமே மொத்தமாக வெறிச்சோடி போய் இருக்க அவனுக்கு தான் அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.

யாரிடம் சென்று தகவல் கேட்பது என்று வருண் யோசித்து கொண்டிருக்கையில்
“போலீஸ் கேஸ் ஆகி விடும்னு பயத்தில் இந்த ஆக்சிடெண்டைப் பற்றி சொல்லாமலேயே இந்த காலேஜ் ஆளுங்க மூடி மறைச்சுட்டாங்க பார்த்தியா? இதுதான் நம்ம ஜனங்க நிலைமை! யாரு உயிர் போனாலும் பரவாயில்லை ஆனா அவங்க காலேஜ் பேரு கெட்டு போகக்கூடாதாம் நல்ல நியாயம்!” அவனைக் கடந்து சென்ற இரு நபர்கள் பேசிக் கொண்டு செல்ல அதைக் கேட்டு அவன் மனதிற்குள் இருந்த ஒரு சிறு துளி நம்பிக்கையும் அவனை விட்டு வெகு தூரம் தள்ளி போய் இருந்தது.

பிரியாவைப் பற்றி அர்ஜுனுக்கு மாத்திரமே முழுமையாக தெரியும் தனக்கு அந்த விடயங்கள் எதுவும் தெரிந்திருக்க அவசியமில்லை என்று அவன் நினைத்திருந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது இப்போது தான் அவனுக்கு பிடிபட ஆரம்பித்தது.

அர்ஜுன் கண் விழித்ததும் அவனிடம் பிரியாவைப் பற்றி தகவல்களை கேட்டறிந்து அவள் என்ன நிலைமையில் இருக்கிறாள் என்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருண் அங்கிருந்து நகர்ந்து சென்று விட இன்னும் அவனை அதிர்ச்சியாக்கக்கூடிய விடயங்கள் எல்லாம் அவனை நோக்கி வர அணிவகுத்து காத்திருந்தது.

ஒரு சில மணி நேரங்களில் அர்ஜுன் கண் விழித்து விடுவான் என்று வைத்தியர் கூறி விட்டு சென்றிருக்க அவர் சொன்னது போல அவன் ஒன்றிரண்டு மணித்தியாலங்களில் தன் கண்களை திறந்து கொள்ளவில்லை.

கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரங்கள் கடந்து இருந்த நிலையிலும் அர்ஜுனிடமிருந்து எந்தவொரு அசைவும் வராது இருக்கவே சிறிது அச்சம் கொண்ட வருண் வைத்தியரை சந்தித்து அதைப் பற்றி தெரிவித்து இருக்க அவரும் உடனடியாக அர்ஜுனுக்கு சிகிச்சைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.

அவர்கள் எவ்வளவு தூரம் முயன்றும் அவர்களால் அவனை அந்த மயக்கத்தில் இருந்து வெளியேற்றிக் கொண்டு வரமுடியாது போகவே அர்ஜுனாக கண் விழிக்கும் வரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.

ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு அதிர்ச்சிகளை தாங்கவும் முடியாமல், ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் வருண் மொத்தமாக உடைந்து போய் இருக்க அவர்களது காத்திருப்பின் பலனாக மூன்று நாட்கள் கழித்து அர்ஜுன் தன் கண் திறந்திருந்தான்.

அர்ஜுன் மயக்கத்தில் இருந்து எழுந்ததுமே எல்லோரும் ஆவலோடு அவனை சூழ்ந்து கொள்ள சிறு புன்னகையுடன் அவர்களை எல்லாம் பார்த்து கொண்டிருந்தவன் அவனருகில் நின்று கொண்டிருந்த நர்ஸைப் பார்த்ததுமே
“பிரியா!” என்றவாறே அவர் முன்னால் எழுந்து வந்து நின்று அங்கே மேஜை மீது வைக்கப்பட்டிருந்த ஒரு பூங்கொத்தை அவர் முன்னால் நீட்டி

“ஹாய் பிரியா! ஐ யம் அர்ஜுன்! நான் இந்த விடயத்தை சொல்ல ரொம்ப நாளாக ட்ரை பண்ணேன் பட் முடியல ஆனா இன்னைக்கு சொல்லிடுவேன்! ஐ லவ் யூ பிரியா!” என்று கூற அங்கிருந்த அனைவருமே அவனை விசித்திரமாக பார்த்துக் கொண்டு நின்றனர்.

எல்லோரும் அவனது நடவடிக்கைகளை குழப்பமாக பார்த்து கொண்டிருக்க முதலில் தன்னை சுதாரித்துக் கொண்டு அவனருகில் வந்து நின்ற வருண்
“டேய் அர்ஜுன் நீ என்னடா பண்ணுற? இது உன் பிரியா இல்லை!” என்று கூறவும்

கோபமாக அவனைத் திரும்பிப் பார்த்தவன் தன் கையிலிருந்த பூங்கொத்தை விட்டெறிந்து விட்டு
“யாருடா பிரியா இல்லை இது என் பிரியா தான்!இது என் பிரியா தான்!” தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு சத்தமிட்டு கத்த சாவித்திரி பதட்டத்துடன் ராமநாதனின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நின்றார்.

இதற்கிடையில் அங்கிருந்த நர்ஸ் ஒருவர் வைத்தியருக்கு தகவல் தெரிவித்திருக்க அர்ஜுனின் கோபம் எல்லை தாண்டுவதற்கு இடையில் அங்கே வந்தவர்கள் அவனை பெரும் பிரயத்தனப்பட்டே மயக்கநிலைக்கு கொண்டு சென்றனர்.

அர்ஜுனின் இந்த விசித்திரமான நடவடிக்கைகளைப் பற்றி வருண் மற்றும் ராமநாதன் அவரிடம் கேள்வி எழுப்ப அவனை அந்த மயக்கநிலையிலேயே சில டெஸ்ட்களை எடுக்க வைத்தவர்கள் அவர்கள் முற்றிலும் எதிர்பாராத ஒரு செய்தியை அவர்களிடம் முன் வைத்தனர்.

இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து சிகிச்சைகளும், பரிசோதனைகளுமாக அர்ஜுனுக்கு மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த வேளை அர்ஜுனின் இந்த நிலைக்கான காரணத்தை பற்றி வருணிடம் எல்லோரும் கேள்வி கேட்க இந்த ஒரு வருட இடைவெளியில் அவனது வாழ்க்கையில் பிரியாவினது வருகை மற்றும் அவளுடனான காதலைப் பற்றி எல்லாம் கூறியவன் அவளை அதன் பிறகு காணவே இல்லை என்பதையும் அவர்களிடம் கூற மறக்கவில்லை.

அந்தளவிற்கு இரத்தத்தில் உறைந்து போகும் அளவிற்கு நடந்த விபத்தில் பிரியா இறந்து விட்டாள் போலும் என்று தான் முதலில் வருண் கூட நினைத்து இருந்தான்.

அர்ஜுனுக்கு வழமை போன்று சில பொதுவான சிகிச்சைகளை மேற்கொண்டு விட்டு வந்த வைத்தியர் இளங்கோ அவனது நிலையைப் பற்றி பேச முதலில் ராமநாதனை மாத்திரம் தனியாக அழைத்துக் கொண்டு செல்ல தன் நண்பனைப் பற்றி தனக்கும் தெரிந்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதமான எண்ணத்தோடு வருணும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான்.

“மிஸ்டர் ராமநாதன் அர்ஜுன் உங்க பையனா?”

“ஆமா என் பையன் தான் எங்களுக்கு குழந்தையாக அவன் பிறக்காவிட்டாலும் அவன் எங்க பையன் தான்!”

“ஓஹ்! அர்ஜுன் பற்றி இப்போ நான் சொல்லப் போகும் விடயம் கொஞ்சம் உங்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும் ஆனால் வேறு வழியில்லை அதை சொல்லித் தான் ஆகணும்”

“என்னாச்சு டாக்டர்? அர்ஜுனுக்கு ஏதாவது பிரச்சினையா?”

“ம்ம்ம்ம்ம்ம் கிட்டத்தட்ட! அர்ஜுன் இப்போ சாதாரண மனிதனாக இல்லை ஹீ இஸ் மென்டலி அப்செட் அதாவது அவருக்கு சித்த பிரமை!”

“டாக்டர்!” ராமநாதன் தான் கேட்ட வார்த்தைகளை நம்ப முடியாமல் அதிர்ச்சியாக இளங்கோவைத் திரும்பி பார்க்க

அவரது தோளில் தன் கையை ஆதரவாக அழுத்திக் கொடுத்தவர்
“அவருக்கு ஏதாவது அடிபட்டு இல்லை வேறு ஏதாவது உடல் ரீதியான தாக்கத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டு இருந்தால் எங்களால் ஏதாவது ட்ரீட்மெண்ட் பண்ண முடியும் ஆனால் அர்ஜுனுக்கு அப்படி எதுவும் நடக்கல ஒரு ஆக்சிடென்ட் அதில் அவங்க காதலித்த பொண்ணுக்கு அடிபட்டுடுச்சு அதைப் பார்த்து அதிர்ச்சியில் இப்படி ஆகிட்டாங்க இதற்கு எந்த மருந்தாலும் ட்ரீட்மெண்ட் பண்ண முடியுமான்னு தெரியாது ஆனா அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் அன்ட் சைக்காட்ரிக் ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்”

“அப்படி எல்லாம் பண்ணால் அர்ஜுன் குணமாகி விடுவானா டாக்டர்?” வருண் ஆவலுடன் அவர் முகத்தை பார்த்து வினவ

நீண்ட பெருமூச்சு விட்டபடியே அவனைத் திரும்பி பார்த்தவர்
“அது சொல்ல முடியாது! அர்ஜுனுக்கு எப்போ குணமாகும் என்று எங்களால் சொல்ல முடியாது ஒரு வாரம் ஆகலாம் ஏன் இரண்டு, மூன்று வருஷம் கூட ஆகலாம் அது அர்ஜுனோட மனநிலை மாற்றத்தில் தங்கியிருக்கிறது இனி எதுவானாலும் அர்ஜுனை ரொம்ப கவனமாக பார்த்துக் கொள்ளுங்க! அதோடு மறக்காமல் ஒவ்வொரு வாரமும் செக்கப்பிற்கும் அழைச்சுட்டு வாங்க!” என்று விட்டு அங்கிருந்து சென்றுவிட ஆண்கள் இருவருமோ இந்த விடயத்தை சாவித்திரியிடம் எப்படி சொல்லுவது என்று தெரியாமல் தவிப்போடு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர்.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் கண் மூடி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் தன் நண்பனைப் பார்த்து கண்கள் கலங்க அவனருகில் வந்து அமர்ந்து கொண்ட வருண் அவனையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த தன் அன்னையை பார்த்து விட்டு தன் தந்தையின் புறம் திரும்பி பார்க்க அவரோ அவனைப் பார்த்து வேண்டாம் என்பது போல தலையசைத்து விட்டு
“சாவித்திரி கொஞ்சம் என்கூட வாம்மா!” என்றவாறே அவரது கையை பிடித்து எழுப்ப போக

“என்னங்க நீங்க? அர்ஜுன் தூங்கி எழுந்தால் என்னைத் தானே தேடுவான் அவனை விட்டுட்டு நான் எங்கேயும் வரமாட்டேன் என்ன விஷயமாக இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க” என்று விட்டு தன் கையை விலக்கி கொள்ள அவருக்கோ தன் மனைவியின் மனநிலையை எண்ணி கண்களின் ஓரம் கண்ணீர் நிரம்பி வழிந்தது.

“என்னங்க எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கீங்க?” சாவித்திரி அவரை நிமிர்ந்து பார்த்துக் கேட்க

அவசரமாக தன் கண்களை துடைத்துக் கொண்டவர்
“டாக்டர் வந்து பேசிட்டு போனாங்க!” என்று விட்டு மீண்டும் தன் மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.

“என்னங்க சொன்னாங்க அர்ஜுனுக்கு எதுவும் இல்லை தானே?” கண்களில் ஆர்வம் மின்ன கேட்ட தன் மனைவியை பார்த்து அதற்கு மேலும் தாங்க முடியாமல் ராமநாதன் தன் கைகள் இரண்டிலும் முகத்தை புதைத்து கொண்டு அழ ஆரம்பிக்க

பதட்டத்துடன் அவரின் முன்னால் வந்து நின்ற சாவித்திரி
“என்னங்க ஆச்சு? நம்ம அர்ஜுனுக்கு ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்க அவரது அருகில் வந்து நின்று அவரைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்ட வருண் சற்று நேரத்திற்கு முன்பு வைத்தியர் கூறிவிட்டு சென்ற விடயங்களை எல்லாம் கூற அதைக் கேட்டவரது முகம் இருளடர்ந்து போனது.

கால்கள் தள்ளாட அர்ஜுன் அருகில் வந்து நின்றவர் அவன் தலையை கோதி விட்டபடியே தன் வாயை இறுக மூடி கொண்டு கண்ணீர் வடிக்க அன்றைய நாள் அவர்கள் வாழ்வின் ஒரு கறுப்பு தினமாகவே மாறிப் போனது.

அதன் பிறகு அர்ஜுனுக்கு எத்தனையோ விதமான சிகிச்சைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவனது நிலையில் தான் எந்தவொரு மாற்றமும் இருக்கவில்லை.

பிரியாவைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று அவன் கல்லூரிக்கு சென்று இருக்க அங்கேயும் அவளைப் பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

பல பேருக்கு பணம் கொடுத்து கெஞ்சி கேட்டதன் பலனாக அவளது உடமைகளை எல்லாம் யாரோ எடுத்து சென்று விட்டார்கள் என்ற ஒரு விடயம் மாத்திரமே அவனுக்கு கிடைக்கப் பெற்றது.

இறுதியாக விபத்து நடந்த அன்று அவளுடன் இருந்த அவளது தோழிகளை சந்தித்து பேசலாம் என்று சென்றவனுக்கும் கிடைத்த பதில் அவர்கள் இந்த ஊரை விட்டு சென்று விட்டார்கள் என்ற செய்தியே.

அர்ஜுனுக்கு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த ஒரு சில தினங்களுக்குள் பிரியாவைப் பற்றி அறிந்து கொள்ளக்கூடிய எல்லா பக்கக் கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டது போலவே வருணுக்கு தென்பட்டது.

ஒவ்வொரு நாளும் அர்ஜுன் குணமாகி விடுவான் என்ற எதிர்பார்ப்போடும், பிரியா பற்றி தகவல்கள் கிடைத்து விடும் என்ற ஆசையோடும் வருணின் நாட்கள் நகர்ந்து செல்ல கண்களை மூடி திறப்பதற்குள் ஏழு வருடங்கள் முடிந்து இருந்தது.

அர்ஜுனின் கண்காணிப்பின் கீழ் இருந்த அவனது கம்பெனி பொறுப்பும் இப்போது வருணின் கீழ் வந்திருக்க அர்ஜுனின் நிழவாகவே வருண் மாறிப் போய் இருந்தான்.

அர்ஜுன் பழைய விடயங்களை மறந்து சித்த பிரமை பிடித்தாற் போல இருந்தாலும் அவன் அவனது பிரியாவை நினைக்காத நாளில்லை இன்னும் சொல்லப்போனால் பிரியாவைப் பற்றிய பெரும்பாலான விடயங்களை அர்ஜுன் மறந்திருந்தாலும் அவளை அவன் நினையாதில்லை .

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்
மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்
இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய்
பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு

தன் நண்பனினதும், தங்கள் குடும்பத்தினதும் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப் போட்ட அந்த நாட்களைப் பற்றி கூறி விட்டு வருண் ஹரிணிப்பிரியாவை நிமிர்ந்து பார்க்க அவளோ தன் அருகில் அமர்ந்திருந்த அர்ஜுனின் கைகளைப் பிடித்து கொண்டு அவனையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்………