நிரல் மொழி 12.2

நிகில் பார்த்ததும்… 

“வீட்டிலருந்து வரச் சொல்லலாமே? உங்களுக்கு சப்போர்ட்டா இருக்குமே? அதுவும் இந்தமாதிரி நிலையில?!” என்று முரளி கேட்டார். 

“எனக்கும் தோணாத முரளி! ஆனா, இப்போ வேண்டாம்” என்றான். 

“ஏன்? பாதுகாப்பு இல்லைன்னு நினைக்கிறீங்களா?”

“என்ன பாதுகாப்பு? இதோ இப்போ இந்த ஃபோன்-க்கு, என் அண்ணி கால் பண்ணாங்க. அந்த நம்பர், அவனுக்கு தெரிஞ்சிருக்கும். அப்புறம் என்ன பாதுகாப்பு??”

இருவரிடமும் ஓர் அமைதி நிலவியது. 

“முரளி, ஷில்பாவோட ப்ரீலிமினரி அட்டாப்ஸி ரிப்போர்ட் எப்போ வரும்?” என்று நிகில் கேட்டான். 

“ஈவினிங் ஆகும் நிகில்” என்றார். 

“ம்ம்ம்” என்றவன், “ஏன் ஷில்பாவைக் கொல்லணும்?” என்று கேள்வி கேட்டான். 

“அவங்கதான இந்த ப்ராஜெக்ட்-ல இன்வால்வ் ஆகியிருக்காங்க”

“அப்படின்னா, மத்த இடத்திலேயும் இதே மாதிரி பண்ணியிருக்கணுமே?”

“இங்கதான், அவனை நீங்க நெருங்கிட்டீங்க”

“அப்போ நான்தானே டார்கெட். ஏன் ஷில்பாவைக் கொன்னான்? 

அப்படியே ஷில்பாவைக் கொல்லனும்னா…  அதுக்கு முந்தின நாள்கூட, அவ தனியாத்தான் போனா… ஆனா, அப்போ எதுவும் நடக்கலையே?

அவ்வளவு ஏன்? நேத்து என்னைய அடிக்கும் போதுகூட… யாருமே, ஷில்பா பக்கம் போகலை. அப்புறம் ஏன் இப்படி?” என்று கேள்விகள் கேட்டுக் குழம்பினான். 

யோசித்து யோசித்துப் பார்த்தான். 

எதுவுமே தோன்றவில்லை! 

காரணம்? 

குழப்பம் எந்த அளவிற்கு இருந்தோ, அதே அளவில் கவலை, சோர்வு, வலி இருந்தது. 

எண்ணங்கள் முழுதும்… ஷில்பாவின் மரணம்!

மிலா, ஜெர்ரி நிலைமை என்ன?! 

அம்மாவின் உடல்நிலை!

டெல்லியிலிருந்து இங்கே வந்தால், எப்படிச் சமாளிப்பது? _இதையேதான் சுற்றி வந்தது. 

நிகில்! 

இப்படி இருக்காதே! 

நீ யோசிக்க வேண்டும்! 

நிறைய யோசிக்க வேண்டும்! 

இப்படிக் குழப்பத்தில் இருக்காதே! 

இது, உன் வேலைக்கு சரியல்ல! 

இப்படியெல்லாம் தனக்குள் பேசி, மனதை ஒரு நிலை படுத்தினான். 

அக்கணம், “நிகில்” என்று முரளி அழைத்தார். 

“ம்ம்ம்” என்றவன், “உங்க ஃபோன்ல அவுட்லுக் இருக்கா?” என்று கேட்டான். 

“ம்ம்ம்” 

“ஃபோன் கொடுங்க” என்றான். 

முரளி கொடுத்தார். 

மின்னல் வேகத்தில்… முரளியின் கைப்பேசியில், நிகில் வேலை பார்க்கத் தொடங்கினான். 

அவன் வேலை பார்க்கையில், முரளி பேச ஆரம்பித்தார்… 

“நீங்க வொரி பண்ணாதீங்க நிகில். 

உங்களை அடிச்ச இடத்தில… உங்க ஃப்ரண்ட் மர்டர் பண்ண இடத்தில… பிங்கர் பிரிண்ட் இருக்கான்னு செக் பண்ணியிருப்பாங்க. 

அன்ட் அந்த ரோடுல இருக்கிற எல்லா சிசிடிவி புட்டேஜும் செக் பண்ணுவாங்க. 

ஈவன், டயர் மார்க்ஸ் செக் பண்ணா… எந்த வெகிக்கிள் அப்படின்னு ஐடென்டிஃபை பண்ணிடலாம்.

இதெல்லாம் வச்சி, உங்களை அடிச்சவங்களைத் தேடுவாங்க… 

நீங்களும் ஃபோலிஸ்கிட்ட, அந்த அடியாட்களோட அடையாளம் பத்திச் சொல்லுங்க. 

ஃபோலிஸ் தேடிக் கண்டுபிடிக்க, ஈஸியா இருக்கும். 

அதுல ஒருத்தன் கிடைச்சா கூடப் போதும். 

அவனை விசாரிக்கிற விதத்தில விசாரிச்சா… அந்த ‘நல் கேர்’ எங்க இருக்கான்னு தெரிய வரும். 

அட்லீஸ்ட் அவனைப் பத்தி ஏதாவது ஒரு விஷயம் தெரியும். 

அதைவச்சி, உங்க வொய்ஃப் பையனைக் கண்டுபிடிச்சிடலாம்” என, அவனுக்கு நம்பிக்கை வரும்படி, பேசிக் கொண்டே இருந்தார். 

“இதெல்லாம் பண்ணி முடிக்க எத்தனை நாளாகும்?” என்று நிமிர்ந்து பார்த்துக் கேட்டான். 

“ஒரு… பைவ் டூ செவன் டேய்ஸ்”

விரக்தி மிகு‌ந்து, நிகில் புன்னகை செய்தான். 

“என்னாச்சு நிகில்?”

“மிலா, ஜெர்ரி… ரெண்டு பேருமே நான் இல்லாம ஒரு நாள் கூட இருந்துக்க மாட்டாங்க. ஏழு நாள்னா?? அவ்வளவுதான்” என்று சொன்னவன், அவர் கைப்பேசியைத் தூக்கிக் காட்டினான்.

“என்ன நிகில் இது?”

“இது ஷில்பா ஆஃபீஸ் மெயில்” என்றான்.

முரளி, அவனை ஒரு மாதிரி பார்த்தார். 

“கம்ப்ளைன்ட் ரெய்ஸ் பண்ணி,  ப்ராப்பரா இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்ற வரைக்கும் வெயிட் பண்ண முடியாது முரளி. 

ஏற்கனவே, அவன்கிட்ட தோக்கிற மாதிரி இருக்கு. 

ஸோ, கிடைக்கிற க்ளுவ… அவன் அழிக்கிறதுக்கு முன்னாடி, நாம அவனைக் கண்டுபிடிக்கப் பார்க்கணும்”

“புரியுது நிகில். நீங்க சொல்லுங்க” என்றார். 

“தேங்க்ஸ் முரளி” என்றவன், “ஷில்பா அன்னைக்கே சொன்னா! கஸ்டமர்-கிட்ட ஆப்ரேட்டரோட மெசேஜ் கேட்டிருக்கேன்-ன்னு”

“அனுப்பியிருக்காங்களா?”

“ம்ம்ம், இதுதான் கஸ்டமர் சைடு-லருந்து வந்த மெயில்” என்று, மின்னஞ்சல் ஒன்றைக் காட்டினான்.

“ஓகே! இப்போ இதை வச்சி என்ன செய்ய?”

“எப்பவும் கேப் மெசேஜ்-ல ஒரு ஓடிபி… கேப் நம்பர்… கேப் டிரைவர் நம்பர் இருக்கும்”

“ம்ம்ம், திஸ் இஸ் காமன்”

“கேப் டிரைவர் ஃபோன் கால் ஹிஸ்டரியைச் செக் பண்ணுங்க. அதுல, அந்த ‘நல் கேர்’ நம்பர் இருக்கும்” என்று கைப்பேசியை முரளியிடம் கொடுத்தான். 

“யூ மீன்… அந்தக் கேப் டிரைவரும், நல் கேரும்… சேர்ந்து…” என்று சந்தேகத்துடன் நிறுத்தினார். 

“ச்சே… ஐ டிடின்ட் மீன் இட் முரளி”

“தென்?”

“முரளி! ஆப்ரேட்டர் போற ரூட்ல நல் கேரும் கேப் புக் பண்ணியிருக்கான். 

நம்ம கேப் புக் பண்ணும் போது, ஃபோன் நம்பர் கொடுப்போம்.

அது, ஆப்-ல புக் பண்றதா இருந்தாலும்… டேரைக்டா புக் பண்ணாலும்… சரி! 

இந்த இடத்தில, அவனும்… அவன் ஃபோன் நம்பர் கொடுத்திருப்பான். 

என்கிட்ட பண்ண மாதிரி, அங்க அவனோட ஃபோன் நம்பரை மறைக்க முடியாது”

“சப்போஸ் தப்பான நம்பர் கொடுத்திருந்தா?”

“சான்ஸேயில்லை! 

கேப் சர்வீஸ் ரெக்வஸ்ட் பண்ணா… கேப் கம்பெனி, ஒரு ஓடிபி மெசேஜ் சென்ட் பண்ணுவாங்க. 

அதுக்கு வேலிட் ஃபோன் நம்பர் கொடுக்கணும். 

சரியான ஓடிபி இல்லைன்னா, இங்க கேப் ட்ராவல் பாசிபிள் இல்லை. 

ஸோ, அங்க அவன் யூஸ் பண்ற ஃபோன் நம்பர்… அவனோட உண்மையான நம்பர்தான்”

“ஓ! கேப் கம்பெனி-ல கேட்டாலே, அவனோட நம்பர் கிடைக்குமே?”

“அது வேண்டாம்!” 

“ஏன்?”

“அவன் ஆப்ரேட்டரை பாலோவ் பண்ணறதுக்காக, பிளான்ட் வெளியே நின்னான்… 

அதேமாதிரி, கேப் டிரைவரை பாலோவ் பண்ண, கேப் கம்பெனி வெளியே நின்னா?? 

இல்லை, கேப் டிரைவரையே பாலோவ் பண்ணா?? 

இனிமே அவங்களை விசாரிச்சா… நாம என்ன பண்றோம்னு, அவனுக்குத் தெரிய வரும். 

அப்படித் தெரியவே கூடாது”

“ஓ, ஓகே!”

“ஆப்ரேட்டர் மெசேஜ்-ல கேப் டிரைவர் ஃபோன் நம்பர் இருக்கு. 

அதை சர்வீஸ் புரோவைடர்-கிட்ட கொடுத்து… கேப் டிரைவர் கால் ஹிஸ்டரி செக் பண்ணா, அவனுக்குச் சந்தேகமே இல்லாம வேலை முடிஞ்சிடும்”

“ஆப் வழியா புக் பண்றப்போ.. கேப் டிரைவர் கால் ஹிஸ்டரில, அவனோட ஃபோன் நம்பர் இருக்குமா??”

“என்னதான் ஆப்ல புக் பண்ணாலும்,  எங்க நிக்கிறீங்க? லேண்ட் மார்க் என்ன? இந்த மாதிரி டிடெயில்ஸ், கேப் டிரைவர் ஃபோன் பண்ணிக் கேட்பாங்க! 

ஸோ, என்னோட கெஸ்… 

ஒன்னு, அவன் கேப் டிரைவர்-க்கு கால் பண்ணியிருக்கணும். 

இல்லை… கேப் டிரைவர், அவனுக்கு கால் பண்ணியிருக்கலாம்”

“ஓகே ஓகே! ஸோ, இந்த ஆப்ரேட்டர் மெசேஜ்-ல இருக்கிற… டேட் அன்ட் டைம் வச்சி… கேப் டிரைவர் கால் ஹிஸ்டரியைச் செக் பண்ணனும்”

“யெஸ்!” என்றவன், “சப்போஸ் அந்தக் கேப் டிரைவர் கால் ஹிஸ்டரில நம்பர் இல்லைன்னா?  நெக்ஸ்ட் ஆஃப்சனா, கேப் கம்பெனி சிஸ்டம்-ல செக் பண்ணுங்க” என்றான். 

“ஓகே நிகில்”

“முரளி! இண்டஸ்ட்ரிலிருந்து சைபர் கம்ப்ளைன்ட் ரெய்ஸ் பண்ணதும், உங்க கம்ப்யூட்டர் போரன்சிக் ஆளுங்கள வச்சி  சாப்ட்வேர் அன்ட் ஹார்ட்வர்… ஃபுல்லா மால்வேர் டெஸ்ட் பண்ண, ஸ்டார்ட் பண்ணுங்க”

“ஓகே நிகில்”

“அன்ட், அவன் நம்பர் கிடைச்சதும் … அவனைக் கண்டுபிடிக்க இருக்கிற எல்லா பாசிபிலிட்டிஸூம், உங்க இன்வெஸ்டிகேஷன் ஆஃபீசர் வச்சி செக் பண்ணச் சொல்லுங்க”

“ஓகே நிகில்”

“ஆனா, அந்த நம்பருக்கு யாரும் கால் பண்ண வேண்டாம்”

“ம்ம்ம்… ஓகே!” என்றவர், “ஃபோன் நம்பர் வச்சி, அவன் இருக்கிற இடம் தெரிஞ்சிடும்ல?” என்று கேட்டார். 

“அவ்ளோ ஈஸியா, அவனைக் கண்டுபிடிக்க முடியும்னு… எனக்குத் தோணலை. பார்க்கலாம்” என்றான். 

“ஓகே நிகில்! வேற ஏதாவது?”

“வேற?” என்றவன், “சைபர் கிரைம் ஸ்டேட் கோ-ஆர்டினேட்டருக்கு இன்பாஃர்ம் பண்ணிடுங்க” என்றான். 

“ஓ! நாலு ஸ்டேட் இன்வால்வ் ஆகியிருக்கிறதால சொல்றீங்களா?”

“யெஸ்! எப்ப வேணாலும்… இந்த இஸ்யூ-ல சம்பந்தப்பட்ட ஸ்டேட்டோட சைபர் கிரைம் செல் ஹெல்ப் தேவைப்படலாம். அதுக்குத்தான்”

“ஓகே நிகில். நான் பார்த்துப் பேசுறேன். எனிதிங் எல்ஸ்?”

“ம்ம்ம், போலீஸ் அவங்க டுயூட்டியைப் பார்க்கட்டும், முரளி. பட், அவனைப் பத்தி… இப்ப போலீஸ்கிட்ட சொல்ல வேண்டாம்”

“ஓகே நிகில்”

“நாளைக்கு, அவன் ஃபோன் நம்பர் அன்ட் அந்த நம்பரோட கம்ப்ளீட் டீடெயில்ஸ் வேணும்”

“ஓகே நிகில்”

“முரளி” என்றவன், “எனக்கு ஒரு ஃபோன் வேணும். வீட்டுக்கு கால் பண்ண வேண்டியது இருக்கும்” என்றான். 

சட்டென, “இது டூயல் சிம் ஃபோன்! செகன்ட் சிம் போட்டு, இப்போதைக்கு என் ஃபோன் யூஸ் பண்ணிக்கோங்க” என்று சொன்னவர், 

தன் கைப்பேசியில், தான் உபயோகிக்கும் சிம் மற்றும் மெமரி கார்டு எடுத்துவிட்டு… கைப்பேசியை அவனிடம் கொடுத்தார். 

வாங்கிக் கொண்டான். 

“பட், உங்க ஃபோன இப்படியே யூஸ் பண்ணாம வச்சிருந்தா ஓகேவா? அவன் டவுட் பண்ண மாட்டானா??” என்று முரளி கேட்டார். 

“அதான் போலீஸ் ஸ்டேஷன்-ல இருந்து, இந்த நம்பருக்குத்தான கால் பண்றாங்க. ஸோ, நோ ப்ராபளம்”

“அப்போ…”

“நீங்க நினைக்கிறது கரெக்ட்தான்! நான் போலிஸ்கிட்ட பேசறதை, அவன் கேட்பான்” 

“ஓகே நிகில். நான் கிளம்புறேன்” என்றவர், “இப்படியே இருக்காதீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்றார். 

“ம்ம்ம்” என்றவன், “முரளி… அடுத்து நீங்க வர்றது, ஒன் ஆர் டூ டைம்ஸ் மட்டும்தான் இருக்கணும். 

அதுக்கு மேல நம்ம பேசினா, எல்லாரும் டவுட் பண்ணுவாங்க” என்றான். 

“ஓகே” என்றவர், “டேக் கேர் நிகில்” என்று சொல்லிக் கிளம்பிவிட்டார். 

ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தான். 

அதன் பின் அவன் வேலை பார்க்கும் ‘நிரல் மொழி’ இதழின் அலுவலக ஆட்கள் வந்தனர். 

காவல்நிலையத்திலிருந்து, அலுவலகத்தில் விசாரித்ததில்… அவர்களுக்கு, நிகில் பற்றித் தெரிய வந்திருந்தது. 

ஆதலால், இவர்களின் வருகை! 

சற்று நேரம், பேசிவிட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்றபின், சில நிமிட நேரங்கள் கழித்து… மருத்துவர் வந்து பரிசோதித்து விட்டுச் சென்றார்.

அதன்பின் தனிமைதான்… 

படுத்துக் கொண்டான். அதற்கு மேல், அமர்ந்திருக்கத் தெம்பு இல்லை! 

ஷில்பாவின் நினைவு வந்தது. 

முதல் முறையாக, கல்லூரியில் சந்தித்ததில் இருந்து… நேற்றைய ஹோலி கொண்டாட்டம் வரை… கண் முன் வந்தது. 

மீண்டும் கண்கலங்கினான்!

அம்மாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆனால், ‘அண்ணி பார்த்துப்பாங்க’ என்ற நம்பிக்கை, பெரிய ஆறுதலைத் தந்தது. 

இருந்தும், நாளை அனைவரும் வந்தால்… தன் நிலை பற்றி, மிலாவின் நிலை பற்றித் தெரிய வரும். 

எப்படி அவர்களைச் சமாளிப்பது? என்று தெரியவில்லை! 

மேலும், வந்தபின் அவர்களைச் சமாளித்தாலும்… தன் வேலையைப் பார்ப்பது எப்படி? 

பதிலில்லா கேள்விகள்!! 

மிலா… ஜெர்ரி… 

எப்படி இருக்கிறார்கள்?? அவர்களின் நிலை என்ன? 

எதுவும் தெரியவில்லை! 

‘மிலா ரொம்பப் பயப்படுவாளே’ என்று நினைக்கும் போது… கண்களின் பக்கவாட்டிலிருந்து, கண்ணீர் வழிந்தது. 

மிலா! 

அவனின் உயிரானவள்!! 

‘அம்மாவை விட்டு வரமாட்டேன்’ எனச் சொன்னவள்… தன்னுடனான வாழ்க்கைக்கு, எப்படிப் பழகினாள்? என்று நினைத்துப் பார்க்க ஆரம்பித்தான். 

Out of story 

PASS REVELATOR software : இது, MSN, Hotmail, outlook… இதோட Password யை break பண்ண உதவும். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!